அத்தியாயம் 7

காலையில் நடந்த சம்பவத்தின் தாக்கத்தில் பழைய நினைவிகளில்  இருந்தே வெளி வராத நிலையில் ராகேஷ் வந்தது அச்சத்தை கொடுத்தது மதிக்கு

என்ன தான் ராகேஷை தைரியமாக எதிர்த்து அந்த சூழ்நிலையை சமாளித்து இருந்தாலும் உள்ளூர உதறல் எடுக்க ஆரம்பித்ததில் திரும்பவும் ராகேஷ் ரைடில்  ஏறி விடுவானோ பயத்தில் ரைடில் ஏறாமல் நின்றவள் தனியே நிற்க பயந்து கூட்டத்தோடு நின்று இருந்தால் 

இவனுக்கு எப்படி நான் இங்கே இருப்பது தெரியும் அஸ்வத் இங்கே இருந்தாலாவது கொஞ்சம் தைரியமா  இருக்கலாம் அவன் கிட்ட  ராகேஷ் வந்ததை சொன்னால் பெரிய பிரச்சினை ஆகிடும் இதை யாரிடம் சொல்றது  தன்னை விரட்ட நினைக்கும் ருத்ரனிற்கு மட்டும் தெரிந்தால் அவனே கொண்டு போய் அந்த ராகேஷிடம் விட்டுவடுவான்  தீவிர யோசனையில் பயம் பதட்டம் ஒன்று சேர்ந்து தலையே சுற்றுவது போல் இருக்கவும் சிறிது தூரத்தில் அழகாக பராமரிக்கப்பட புல்வெளியில் சென்று அமர்ந்தாள்.

அங்கே ஒரு சிறுமி கையில் ட்ராயிங் நோட்டுடன் தீம் பார்க்கிற்கு வந்து வெறும் போட்டோ எடுத்து கொண்டு இருந்த தன் பெற்றோரை பார்த்து அழுது கொண்டு இருப்பதை கண்டவளுக்கு  சிறு வயது மதியாக தோன்றியது அந்த சிறுமியிடம் சென்றாள்.

ரைடில் ஏற போவதற்கு முன் மதி இருக்கும் இடத்தை பார்த்த ருத்ரனிற்கு அவளை காணாமல் அவளை தேடி அவன் கண்கள்  அலைபுற்றுதலாய் அலைபாய்ந்தது.

“ஸார் சீக்கிரமா  ஏறுங்க” என பின்னால் இருப்பவர் அவசர படுத்த எதையும் யோசிக்காமல் இறங்கி மதி இருந்த இடத்தை நோக்கி ஓடினான் ருத்ரன் இறங்கியதை ஷிவானி பார்த்து விட்டு மாமா மாமா வென கத்தினாள்  அவள் கத்தியது எதுவும் அவன் காதில் ஏறாமல் மதியை தேடி ஓடினான்.

எங்கே போனா இவ என சுற்றி தேடியவன் பார்வையில் புல்வெளியில் அமர்ந்திருந்ப்பதை பார்த்ததும் தான் இழுத்து வைத்த மூச்சை வெளியேற்றினான் அவளை காணாமல் தனக்கு ஏன் இவ்வளவு பதட்டமானோன்  கேள்விக்கு நம்மள நம்பி தான் மாமா அனுப்பி இருக்கார் அதான்  தனக்கு தானே சமாதனம் கூறி கொண்டு  அவளருகே சென்றான்.

அவளருகே ஒரு சிறுமி அமர்ந்து இருந்ததை பார்த்து என்ன செய்கிறாள் கவனிக்க ஆரம்பித்தான்

அந்த பெண்ணின் இரு பக்க கண்ணத்தை கிள்ளி முத்தமிட்டு கொஞ்சி சிரித்தவளை ஆஆங் கொஞ்சம் முன்னே பயந்து நின்னது இவ தானா 

“உன் அம்மா வரும்வரை நாம ஒரு கேம் விளையாடலாமா”

“என்ன கேம் உன்னை யாரும் தேடமாட்டாங்களா”

“தேட மாட்டாங்க”

“ஏன் என்னை மாதிரி உன்னையும் தனியா விட்டுட்டு போய்ட்டாங்களா”

“நான் பிக் கேர்ள் ஆகிட்டேன்  இல்லையா அதான் சரி உன் கைல இருக்க நோட்டை கொடு” என வாங்கி வரைய தொடங்கினாள்

“நீ வரைவியா உனக்கு வரைய தெரியுமா எனக்கு சொல்லி தர்றியா ”

“ம் அவ்ளோ தான்” என பரபரவென வரைந்தவள் அதை கிழித்து கோன் ஷேப்பில் உருட்டி அவர்கள் பேக்கில் மாட்டி விட்டாள்.

ஏதோ பேஷன் ஷோக்கு போவது போல தீவிரமாக போட்டோ எடுத்து கொண்டு இருந்த சிறுமியின் பெற்றோர்கள்  மீது ஒரு கல்லை வீசி விட்டு அந்த சிறுமியோடு ஒளிந்து கொண்டாள் 

என்ன பண்றா இவ இவளை தேடி வந்ததுக்கு நம்மள கிட்ன்ப் கேஸ்ல மாட்டி விட்ருவா போலயே புலம்பிகொண்டு திரும்பி நின்று போன் பேசுவது  போல் நின்றான்

“யார் இப்படி கல்லை மேலே போட்டது ச்சை நல்ல ஸ்பாட்ல ஒரு போட்டோ கூட உருபடியா எடுக்க முடியுதா” என அந்த சிறுமியின் பெற்றோர்கள் சலித்து கொண்டு அவர்கள் பேக் இருக்கும் இடத்தை பார்க்க அங்கே அவர்கள் பெண்ணை காணாமல்  பதறி அங்கிருந்த பேப்பரை எடுத்து பார்க்க அதில்  அவர்கள் சந்தோஷமா பீச்சில் கேமராவுடன் விளையாடுவது போலவும் தூரத்தில்   அவர்கள் பெண் குப்பை தொட்டிகுள் அழுது கொண்டு இருப்பவளை அவளை சுற்றி வெறி நாய்களும் சில ஆண்களும் இருப்பது போல அந்த படம் வரைந்து இருந்தது.

கீர்த்தி கீர்த்தி கத்தியபடி பதறி கொண்டு தேடுவதை கண்டவள் இதற்கு மேல் தவிக்க  விட வேண்டாமென எண்ணி “போ போ நான் சொன்னது போல சொல்லு அப்ப தான் இனிமேல் உன் அம்மா உன்னை விட்டு போக மாட்டாங்க”

அம்மா என கத்தி வந்த மகளை அள்ளி முத்தமிடுவதை முழு திருப்தியுடன் சந்தோஷத்துடனன் பார்த்தாள் வெண்மதி 

என்ன பொண்ணு இவ நிமிஷத்துக்கு நிமிஷம் ரியாக்ஷனை காமிக்கிறா காலையில் பயந்து அழுது சற்று நேரத்திற்கு முன் ஒருவனை பார்த்து பயந்து மிரண்டு பின் தைரியமாக எதிர்கொண்டு ரைடில் ஏற பயந்து கீழே நின்று இப்போழுது சிறுமியை அவள் அம்மாவிடம் சேர்த்தது என்று அவன் விழிகளில் சுவாரஸ்யத்துடன் மதியை பார்த்து கொண்டு இருக்க 

பாஸ் நீங்க அவளை விரட்ட ப்ளான்லாம் போட்டிங்க ஞாபகம் இருக்க கேட்ட மைன்ட் வாய்ஸிடம் அப்படியா அப்படி ஓரமா ஓடி போறியா தேவை இல்லாததை பேசிகிட்டு என்று நியாயம் கேட்ட மைன்ட் வாய்ஸை அடக்கினான்

“அம்மா நான் தனியா இருந்ததால  ஒருஅங்கிள் என்னை முறைத்து பார்த்துட்டு இருந்தார் என் பக்கத்தில் யாரும் இல்லாததால் பயந்து ஓடி போய்ட்டேன் உங்கள கூப்பிடலாம்னு பார்த்தா உங்களை டிஸ்டர்ப் பண்ணா உங்களுக்கு கோபம் வருமே அதான்”

“இதை நீயா வரைஞ்ச”

“ஆமா உங்களுக்கு கேமரா தானே ரொம்ப பிடிக்குது அதன் நான் கேமராவா பிறந்து இருக்கலாம் ” அப்படியே மதி சொன்னதை ஒப்புவித்தாள்

“ஸாரி செல்லம் இனிமேல் இப்படி நடக்காது”என கூறி கேமராவை பேக்கில் வைத்து விட்டு தன் மகளுடன் சென்றவர்களை பார்த்தவள் இதனால் அவர்கள் திருந்த போவதில்லைை ஆனால் ஒரு இரண்டு நாளாவது அந்த பெண் சந்தோஷமா இருப்பாளே அது போதும் தன் கவலையை மறந்து சிரித்தாள்

” டேய் அண்ணா நீ ரெய்டில் ஏறலையா” என்ற குரலில் திரும்பினாள்

” இங்கே என்ன பண்ற வொய்ட் மூன் நீயும் இங்க தான் இருக்கியா என்றான் சந்தோஷ் 

“அது என்ன வொய்ட் மூன் அவ பேர் மதி மிதியா ஹான் வெண்மதி ரைட்”

ருத்ரனை பாராமல் “சந்தோஷ் சித்தி எங்கே ”

*எல்லாரும் உங்களுகாக தான் வெயிட்டிங் ஷிவானிக்கு என்ன ஆச்சு தெரியலை வீட்டுக்கு போகலாம்னு ஒரே ஆட்டம் போடுறா “

“அவளுக்கு என்ன பைத்தியமா தீம் பார்க்குக்கு போயே ஆகனும்னு அவ தானே அடம் பிடிச்சா என்ன வந்ததாம் அவளுக்கு எங்கே அவ ”

“அவ எங்கே இங்க இருக்கா கார் கிட்ட நிக்கிறா பாவம் ராகுல் வருணும் ஆசையா விளையாட வந்தாங்க இவளை வச்சு கிட்டு ”

பக்கத்தில் இருக்கும் மாலுக்கு  அழைத்து சென்று இருந்தான் ருத்ரன்

நர்மதா சந்தோஷுடன் முதலில் உள்ள சென்றுவிட

மற்றவர்களோடு காரில் ருத்ரன் இறங்காமல் இருந்தான்

“மாமா வீட்டுக்கு போகலாம் ”

“ஷிவானி இருக்கிற கடுப்புல அறைஞ்சுடுவேன் பேசாம வா ”

ஏன் மாமா கோபபடுறிங்க நீங்க என்ன சொன்னீங்க இப்ப என்ன பண்றீங்க “

“அப்படி நான் என்ன பண்ணேன் நீ சொல்லு”

“அந்த மதிய விரட்டுனும்னு சொல்லிட்டு அவளுக்கு வேலை போட்டு தர்றீங்க ரைடில் ஏறாம அவ பின்னாலே போறிங்க யாரும் பாக்கலன்னு நினைக்காதிங்க நன் பார்த்துட்டேன்”

“ லூசா நீ நம்ம கூட வந்த பெண்ணை நாம தான பாதுகாக்கனும் நீ இந்த மாதிரி பேசுவது தெரிந்தா நர்மதா அத்தை சேகர் மாமா தான் வருத்தபடுவாங்க”

“இப்ப இறங்கி வர்றதுனா வா இல்ல அப்படியே வீட்டுக்கு போ வருண் ராகுலுகாக தான் இங்கே வந்து இருக்கோம்”

“நான் வரல மகிழினியும் வர மாட்டா” என்றதும் மகிழினியை பார்த்தான் 

“நானும் வரலைனா” என்றதும் எதுவும் பேச முடியாத நிலையில் கடுப்பானான் 

ஒரு நாளும் இப்படி ஆனதில்லை  எல்லாத்துக்கும்  காரணம் அந்த மதி தான் என மதி மேல் காரணமே இல்லாமல் கோபப்பட்டான்.

“நீங்க என்னம்மா வர்றீங்களா இல்லையா”

“இல்லை ருத்ரா நிஜமா எனக்கு ரைட்ல போனதுல மயக்கம் வருது”

நர்மதா கார் டிரைவரை அழைத்து வீட்டில் விட சொல்லிி விட்டு மாலிற்குள் நுழைந்தான்.

மாலில் சித்தியுடன்  சென்ற மதி அந்த மாலின் இன்டீரியர் வோர்க்கை பார்த்தபடி நடந்தாள் 

காலையில் சாப்பிட்டதால் அனைவருக்கும் பசியேடுக்க ஃபுட் கோர்ட்டுக்கு  சென்று அவரவருக்கு வேண்டியதை ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தனர் மதிகான உணவு வர நேரமானதால் 

“நான் பார்த்துகறேன் அத்தை நீங்க  போங்க” என்றான்

சந்தோஷுடன் நர்மதா மகன்களுடன் சென்றுவிட

யாரும் இல்லாமல் அவன் மட்டும் இருப்பதை பார்த்தவள் ஏதோ மொத்த இடத்தையும் அவனே ஆக்கிரமித்ததை போல் ஒரு உணர்வு அவளுக்கு

கண்ணத்து சதை வேறு குறுகுறுத்து  அவளை இம்சித்தது 

இவனை பார்த்தாள் மட்டும் ஏன் இந்த குறுகுறுப்பு காலையில் அவனை அரையும் குறையுமாக பார்த்ததால் இருக்கும்  

ஏன் இப்படி பார்கிறான் அய்யோ எப்படி இவனோடு வேலை செய்ய என அவனை பாராமல் கை நகங்களை ஆராய்ந்தாள் காதோர முடியை ஒதுக்கினாள் நகத்தை கடித்தால் அந்த இடத்தையே 10 முறை பார்வையை அலசி விட்டாள்.

“பயப்படுறியா என்னை பார்த்து பயப்படுற ரைட்” என்று அவளை ரசனையுடன் பார்த்தபடி கூறினான்

“ஹான் இ…இல்லையே ” அவனை பாராமல் எங்கோ பார்த்து கூறினாள்.

“ரியலி ”

“அப்போ ஏன் இவ்ளோ படபடப்பா இருக்க நான் ஒன்னும் உன்னை சாப்பிட போறது இல்லை ” என்றபடி ஜுஸை அருந்தினான்

“வாட் என்ன சொல்றீங்க புரியலை”

“புரியலையா அப்ப புரியற மாதிரி சொல்லிட்டா போச்சு…என்று அவளை ஆழ்ந்து பார்த்து  “ம்ம் நாட் பேட் ஆனா எனக்கு உன் மேல் எந்த இன்ட்ரஸ்டும் இல்ல” என்றான்

“ஹலோ நான்..”கோபத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்

“என் கிட்ட நீ வொர்க் பண்ண போற சோ உன் மனசுல அந்த மாதிரி எண்ணம் இருந்தா கஷ்டம் இல்லையா அதுக்கு தான் சொன்னேன்” 

“நீங்க இவ்ளோ யோசிக்க தேவையே இல்ல சித்தி பேச்சை தட்ட முடியாம தான் உங்க கிட்ட வேலை பார்க்க சரின்னு சொன்னேன் மத்தபடி எனக்க….உங்க மேல….எந்த இன்டரஸ்டும் இல்லை” அவன் வம்பு பேச்சில் இவ்வளவு நேரம் இருந்த பயம் படபடப்பு இருந்த இடம் தெரியாமல் மாயமாகியது

உணவு வரவும் அவனை கண்டு கொள்ளாமல் அவள் பாட்டுக்கு சாப்பிட ஆரம்பித்தாள்.

இதழுக்குள் அடங்கிய சிரிப்புடன் தீம் பார்கில் மதியை யாருக்கும் தெரியாமல் எடுத்த போட்டோகளை பார்த்து கொண்டு இருந்தான் ருத்ர பிரசாத்.

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top