“மதி மேல் ஏன் உங்களுக்கு இவ்ளோ கோபம்…நான் கோபபடுவதிலோ சங்கடபடுவதிலோ ஒரு நியாயம் இருக்கு…. ஆனா நீங்க…. ப்ச் மதி அம்மா மேல் உள்ள கோபத்தை அவளிடம் காட்டுவது நியாயமே இல்லைங்க.”சேகரிடம் கத்தி கொண்டு இருந்தாள் நர்மதா
போனில் யாருக்கோ குறுஞ்செய்தியை அனுப்பி கொண்டு இருந்த சேகர் “சாப்டியா…உனக்கு ஏன் இப்பேல்லாம் இவ்ளோ கோபம் வருது” என்றார் குறுஞ்செய்தியை அனுப்பி கொண்டே
“ஆமா இது ரொம்ப முக்கியம் இப்ப” என சேகர் கையில் இருந்த போனை பிடுங்கி டேபிளில் வைத்தாள்
“ஏய் என்ன பண்றம்மா இங்கே குடு ”
“அந்த பொறுக்கி ராகேஷ் மதிய பேசின பேச்சுக்கு நீங்க ஏன் அவனை ஒன்னும் பண்ணாம விட்டீங்க…நீங்க அவனை ஓங்கி நாலு அப்பு அப்பி இருந்தா மும்பைக்கே ஓடி இருப்பான்”
“நர்மதா அவனை நான் எதாவது ஒன்னு செய்ய போய் கோபத்துல அவன் மதிய எதாவது பண்ணிட்டா என்ன பண்றது… அதுவுமில்லாம அவன் அத்தையோட ரிலேட்டிவ் வேற…நான் அவனை பற்றி பேச போய் எல்லாரும் மதிக்காக நான் பொய் சொல்வதா தப்பா பேசுவாங்க….அப்புறம் எல்லாருக்கும் சங்கடம் தான் மிஞ்சும்”நிதானமாக பேசும் கணவனை ஆச்சரியமாக பார்த்தாள் நர்மதா
“அப்படி பேசுனா பேசட்டுமே….ஆனாலும் இந்த அளவுக்காவது அவளை பற்றி யோசிக்கிறீங்களே அதுவரை சந்தோஷம் தான்”என்றால் எள்ளலாக
“மதிக்கு நாம ஒரு நல்ல பையனா வெளிநாட்ல செட்டில் ஆகுற மாதிரி மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்னா யாருக்கும் பிரச்சினை இல்லை…. அந்த ராகேஷ் தொல்லையும் அவளுக்கு இருக்காது… அதை விட்டுட்டு ராகேஷை சீண்டி விட்டு….எதுக்கு தேவை இல்லாத தலை வழியை தலையில் ஏற்றிக்க சொல்ற”சேகர் சொன்னதும் அதிர்ந்து தான் போனார் நர்மதா
“என்ன பேசுறீங்க… விஷ செடின்னு தெரிஞ்சே அந்த நாயை விட சொல்றீங்களா….அந்த விஷ செடிய வேரோட பிச்சு தூக்கி எறிய பயந்து யாராவது வீட்டை காலி பண்ணுவாங்களா… எலிக்கு பயந்து வீட்டை கொளுத்துற கதையா இருக்கு…. அதோட அவளை வெளிநாட்டுக்கு அனுப்புவது எல்லாம் வேண்டாம்ங்க அவ பாவம்” மதிகாக அவர் மனம் வருந்தியது
“அம்மாக்கு தான் அவனை பற்றி தெரியாது…. நாம தான் அவங்ககிட்ட ராகேஷ் பற்றி உண்மையை சொல்லணும்…கொலைகளுக்கு அஞ்சாத குடும்பம்…. அவன் மும்பையில் பண்ணாத அட்டூழியம் இல்லை ….போதை,பெண் சவகாசம் பிடித்தவன் நல்லா இருக்க குடும்பத்தை நாசமாக்கிடுவான்” என கவலை வட்டவளை
“நர்மதா அத்தை கிட்ட இதைப் பற்றி பேசுவோம் கவலை படாத… நீ மதியை போட்டோ எடுத்தியா” என்று பேச்சை மாற்றினார்
கணவன் பேச்சை மாற்றுவது புரிந்தது நர்மதாவிற்கு இதை பற்றி பேசி இனி பிரேயோஜனம் இல்லை ருத்ரனிடம் பேச வேண்டியது தான் என எண்ணியவள் “காலையிலேயே எடுத்துட்டேன் உங்களுக்கு அனுப்பி விட்டேன் பாருங்க” என்றாள்
மதி மீது அக்கறையும் இருக்கிறது அதே சமயம் ஏன் விலகி இருக்க வேண்டும் என்று கணவனின் செயல் அவரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை எட்டு வயதான சிறு பெண் விவரம் புரியாமல் அப்பா வேண்டாம் என சொன்னதுக்கா இவ்வளவு வீம்பு…. இப்பொழுதும் அவளை புறக்கணிப்பது என்ன நியாயம்… பாவம் அவளும் தாயை நம்பி சென்ற வெண்மதிக்கு நடந்த அக்கிரமித்தை திவ்யா மூலம் கேட்ட தனக்கே இவ்வளவு வேதனை கொடுத்தது
வயதுக்கு வந்த பெண் என்றும் பாராமல் நாள் முழுவதும் போலிஸ் ஸ்டேஷனில் இருந்த வெண்மதி ஒவ்வொரு நொடியும் எப்படி பயந்து போய் இருப்பாள் என்று இப்போது நினைத்தாலும் மேனி நடுங்கியது நர்மதாவிற்கு
காவல் நிலையத்தில் மதியை நிர்கதியாக விட்டு சென்ற ஸ்வேதாவை நினைக்கையில் இப்படியும் ஒரு தாய் இருப்பாளா ஸ்வேதாவை திட்டாமல் இருக்க முடியவில்லை திவ்யா மூலமாக மதியின் நிலையை அறிந்து கொண்ட நர்மதாவிற்கு அழுகையே வந்து விட்டது
சேகரிடம் மதியை பற்றி பேச்சை எடுத்தாளே தவிர்த்து விடுவான் மதிக்கு என்ன ஆனது என்று கேட்க கூட அவன் தயராக இல்லை… நர்மதா ராகேஷை பற்றி சொன்ன பிறகே மதி இங்கு வந்து தங்க சம்மதித்தான்….அவளின் பாதுகாப்பிற்காக மட்டுமே ஒப்புக்கொண்டான்
மதியை பற்றி யோசித்து கொண்டு இருந்த நர்மதாவிற்கு மனம் பாரமெறி போனது இனிமேலாவது அந்த கடவுள் அவளுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்கக் கூடாது என வேண்டி கொண்டால் அப்போது வெளியே கேட் திறக்கும் சத்தம் கேட்க வெளியே சென்று எட்டி பார்த்தால்
ருத்ரனுடன் வெண்மதி வருவதை கண்ட நர்மதா “வா ருத்ரா நீ வீக் எண்ட்ல ரெஸ்டாரண்ட்க்கு போக மாட்டியே இப்ப என்ன புதுசா ”
“நாளையிலிருந்து வேலைக்கு வர போறாங்க அதான் ரெஸ்டாரன்டை கிண்பித்து வேலை பற்றி பேசலாம்னு கூட்டிட்டு போனேன்” என்றபடி உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தான்
“ஓ… மதி நீ சாப்பிட வர்றியா ருத்ரா நீயும் சாப்பிட வா”
“இல்ல அத்தை வர்ற வழியிலே நாங்க சாப்பிட்டோம்… மதி வேலையில் எதாவது உதவி தேவைப்பட்டால் விஷ்ணுவை கூப்பிட்டுக்கோ”
சரி என தலையசைத்து விட்டு அறைக்கு செல்ல திரும்பிய மதி வேண்டாம் ருத்ரா என்ற தந்தை குரலில் அங்கேயே நின்று விட்டால்
“அவள் வேலைக்கு போக வேண்டாம் அவளுக்கு அலையன்ஸ் பார்க்கிறோம் எப்ப வேணும்னாலும் முடியலாம்…”என்றதும் மதியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது
திருமணமா இப்ப தானே நாம வந்தோம் அதுக்குள்ள ஏன் என யோசிக்கும் போதே விழிகள் கலங்கியது அங்கு நிற்க பிடிக்காமல் தன் அறைக்கு விறுவிறுவென சென்று விட்டால் வெண்மதி
“இப்ப உடனே என்ன அவசரம்” என்றான் ருத்ரன் தடுமாற்றத்துடன்
“ராகேஷ்க்கு பயந்து தான்”என்றால் நர்மதா ருத்ரனை ஆராய்ச்சியாக பார்த்தபடி
நர்மதா தன்னை பார்ப்பதை உணர்ந்தவன் “அதுக்கில்லை இப்பதானே வந்திருக்கா…. உடனே எதுக்கு….. வேலைக்கு கொஞ்ச நாள் வரட்டுமே…. இன்டீரியர் ஒர்க் பண்ற வேலை ஸ்டார்ட் பண்ணி ஆச்சு”
“மதி மும்பைல படித்த பெண் இந்த வோர்க்ல அவளுக்கு நல்லா டேலண்ட் இருக்கு…. சுமாரா இருந்த வீட்டையே எவ்ளே அழகா மாத்தி இருக்கா…. அவ டேலண்ட்டை நாம ஏன் வேஸ்ட் பண்ணனும் மேரேஜ் முடிவாகும் வரை வரட்டுமே” என்றதும்
“சரி ருத்ரா அவ வந்து வேலை பார்க்கட்டும் ஆனா கொஞ்சம் கேர்ஃபுல்லா பார்த்துக்க” என்று சேகர் போனை எடுத்து கொண்டு சென்று விட
“ருத்ரா உன் கிட்ட கொஞ்சம் பேசனும்”-நர்மதா
“என்ன அத்தை” என்றவன் பார்வை மதியின் அறைகதவை வட்ட மடித்து கொண்டு இருந்தது
ராகேஷை பற்றி ருத்ரனிடம் சொன்னதும் “இதை அங்கேயே சொல்லி இருக்கலாமே அத்தை ” என்றவன் முகத்தில் கோபத்தின் சாயல்
“என்னைய எங்கடா பேச விட்டாங்க….அப்படி நான் சொல்லி இருந்தா அம்மா ஷிவானி அக்கா யாரும் நம்பி இருக்க மாட்டாங்க… அவனை வீட்டுக்கு வர முடியாத மாதிரி கை கால் உடைச்சு போடனும்”
மதியை பற்றி விசாரிக்க சொல்லி மும்பையில் தன்னுடன் படித்த நண்பனிடம் சொல்ல அவனுக்கு அழைத்தபோது தெரிந்தது அவன் திருமணம் ஆகி ஹனிமூன் சென்று இருக்கும் விசயம் சரி நர்மதாவிடமே விசாரிக்கலாமா யோசித்தவன் வேண்டாமென அந்த எண்ணத்தை கைவிட்டு “சரி அத்தை நான் கிளம்புறேன்” என கூறி சென்றான்
மதிக்கு திருமணம் பற்றி எதுவும் பெரிதாக இதுவரை சிந்தித்ததில்லை திருமணம் என்ன பெயரில் ஒரு உயிரை உலகத்திற்கு வர வைத்து விட்டு அவர்களுக்கு பிடிக்காத திருமணத்தில் பிரிந்து விடுகின்றார்கள் ஆனால் அவர்களை நம்பி வந்த ஒரு ஜீவனை நினைத்து கூட பார்ப்பதில்லை நிறைய பேர் குழந்தைகளுக்காக வாழ்ந்தாலும் தன் தாயைப் போல ஒரு சிலரை பார்த்த மதிக்கு எதற்கு திருமணம் செய்து பிரிய வேண்டும் அதற்கு தன் மனதிற்கு பிடித்தவரை பொறுமையாக தேர்வு செய்து திருமணம் செய்து இருக்கலாமே
திவ்யா போன்றவர்கள் ஒருவரையோருவர் புரிந்து வாழ வில்லையா குழந்தை வராமல் இருக்க எவ்வளவு வழிமுறை இருக்கிறது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து அதன் பின் வாழ்க்கை ஆரம்பித்து இருக்கலாம் என மனம் ஏதோ நீயா நானாவில் கலந்துகொண்டு தன்னைப் போன்றவர்களுக்கு நீதி வாங்குபவளை போல் சிந்தித்துக் கொண்டிருக்க
“அக்கா” என்று அவள் கன்னத்தை தன் பக்கம் திருப்பினான் ராகுல் விழிகளில் ஆச்சர்யத்தை காட்டினாள்
“அக்கா எனக்கு இந்த ட்ராயிங் சொல்லி தரீங்களா ”
“அக்கா எனக்கு” வந்து நின்றான் வருண்
“என்னடா நடக்குது என் தம்பிகளுக்கு என்ன ஆச்சு”அவர்கள் இருவரையும் காட்டிலில் தூக்கி அமர வைத்து சிறு பிள்ளையாக மாறி கவலைகளை மறந்து தன் தம்பிகளிடம் விளையாடினாள்
******************
சந்தோஷ் மகிழினி ஷிவானியையும் வெளியே அழைத்து சென்று விட்டான் ராகேஷின் பார்வை பேச்சு எதுவும் சரியில்லை என்பது அவனுக்கு புரிந்து போனது அவன் பார்வை வட்டத்தில் இருந்து தன் வீட்டு பெண்களை காக்கவே வெளியே அழைத்து சென்றான்
ராகேஷுடன் மதியை திருமணம் செய்து மும்பைக்கே அனுப்பி விடனும்… அப்போது தான் நமக்கு நிம்மதி ஷிவானியை ருத்ரனிற்கு திருமணம் செய்து வைத்து விடனும்… ராகேஷ் அப்படி ஒன்றும் கெட்டவனாக தெரியவில்லையே எல்லாரும் என்ன பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கிறாங்க போக போக சரியாகிவிடுமென …
ராகேஷ் பற்றி முழுதாக தெரியாமல் பாக்கியம் ஒரு திட்டம் போட்டு கொண்டு இருந்தவருக்கு இதில் தன் மகள் வாழ்வு பலியாவது போவது தெரியாமல் போனது
வீட்டிற்குள் சென்ற ருத்ரன் ராகேஷை கண்டு இவன் இன்னும் இங்கே என்ன பண்றான் முகத்தை கடுமையாக வைத்து அவன் முன் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்
“என்ன மிஸ்டர் இன்னும் விருந்து முடியலையா உங்களுக்கு….இன்னும் வீட்டுக்கு போகாம இங்கேயே இருக்கீங்க” கடுமையான குரலில் கேட்டு சீக்கிரம் போய் தொலை என்பதை போல கையில் இருக்கும் காப்பை மேலேற்றி அவனை பார்த்து கொண்டே கேட்டான்
“ருத்ரா ராக்கியும் என் பேரன் தான் பாவம் அவனுக்கு இனி நாம தான்.…
“நீங்க இருங்க பாட்டி ஸார் கிட்ட பேச வேண்டியது இருக்கு என்ன மிஸ்டர் உங்களால் பேச முடியும் தானே” என்று நக்கலான புன்னகையுடன்
“ஆமா இவ்வளவு நாளா ஏன் எங்களை தேடி வரலை நீங்க மும்பையில் இத்தனை வருஷமா என்ன பண்ணிட்டு இருந்தீங்க” என்று கேள்வி கேட்க
ராகேஷ், இவனை ஏமாற்றுவது கஷ்டம் போலயே சேகரை பற்றிய தகவலை சேகரித்த போது தான் சரோஜாவின் அண்ணன்… தன் தாயின் தந்தை என அறிந்து கொண்டான்… உடனே மதி தன் பெயரில் மாற்றிய சொத்து பத்திரம் இன்னும் பதிவாகமல் இருந்ததால் மதி கையேழுத்திட்ட பத்திரத்தை தன் பேங்க் லாக்கரில் வைத்து விட்டு…. மதியை அசிங்கபடுத்தி தன் இடத்திற்கு இழுத்து சென்று அவளை தன் இச்சைகளுக்கு பழியாக்க நினைத்தான்.…
இங்கு யாருக்கும் மதியை பிடிக்க வில்லை என்பது இங்கு வந்த சில நாட்களிலே தெரிந்து கொண்டான் அதனாலே சரோஜாவிடம் ஒரு அப்பாவி போல் நடித்து அவர் மூலமாகவே தன் நாடகத்தை ஆரம்பித்த்ன்
போற இடத்திலே எல்லாம் ஆள் செட் பண்ணிக்கிறா அப்படியே என் தேவையும் கவனிச்சுட்டு போய் இருந்தா இப்படி இங்கு வந்து நடிக்க தேவை இருந்து இருக்காதே சரி வந்ததுக்கு இங்கேயும் பல சொத்து இருக்கே பத்தாதுக்கு இரண்டு பெண் குட்டி வேறு இதுவும் நல்லதுக்கு தான் தன் சிந்தனையில் இருந்தவனை
“ஹலோ பேசுவது காதுல விழல” ருத்ரனின் கர்ஜனை குரலில் தன் சிந்தனையில் வெளிவந்தவன்
“ஹான் என்ன பிரதர் கேட்டிங்க”
“நீங்க எப்ப கிளம்பறீங்கன்னு கேட்டேன்”
“ருத்ரா வீட்டுக்கு வந்த வரை இப்படி தான் பேசுவியா” சரோஜா பாட்டி
“இருக்கட்டும் பாட்டி நான் கிளம்பறேன் நாளைக்கு வர்றேன் பாட்டி” என முகத்தை பாவமாக வைத்து ருத்ரன் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் கிளம்பினான்