அத்தியாயம் 10

 

சென்னையின் பிரபலமான ஐந்து நட்சத்திர ஓட்டல் அன்று இரவு ஒளிவெள்ளத்தில் மின்னிக் கொண்டிருந்தது.

நகரின் முக்கிய தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என பலரும் அந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தனர்.

கருப்பு நிற கார் மெதுவாக ஓட்டலின் முன் வந்து நின்றது.

முதலில் காரிலிருந்து இறங்கினான் ஆதவன்.

கருப்பு நிற கோட்டில் வழக்கம்போல கம்பீரமாக இருந்தான்.

அவனுக்குப் பின்னால் இறங்கினாள் அல்லி.

அடர் மரூன் நிற பட்டுப்புடவையில்…

அளவான வைர நகைகளில்…

எளிமையான ஒப்பனையில்…

அவள் தேவதையைப் போல காட்சியளித்தாள்.

ஆனால்…

அவள் முகத்தில் இருந்தது பயமும், தயக்கமும் மட்டுமே.

“வாங்க ஆதவன் தம்பி!”

என்று புன்னகையுடன் வரவேற்றார் தொழிலதிபர் மாரியப்பன்.

ஆதவன் மரியாதையாக கைகுலுக்கினான்.

“வாழ்த்துகள், ஐயா.”

“நன்றி தம்பி. நீங்க வந்ததே ரொம்ப சந்தோஷம்.”

மாரியப்பன் அல்லியைப் பார்த்தார்.

“இவங்கதான் உங்க மனைவியா?”

“ஆமாம்.”

ஆதவன் வழக்கம்போல் ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான்.

“வணக்கம், ஐயா.”

என்று கைகூப்பினாள் அல்லி.

“நல்லா இரும்மா.”

என்று ஆசீர்வதித்தார் அவர்.

“வாங்க… என் குடும்பத்தை அறிமுகப்படுத்துறேன்.”

அவர்கள் மண்டபத்தின் நடுப்பகுதிக்குச் சென்றனர்.

“இது என் மனைவி காமாட்சி.”

“வணக்கம்.”

“இவ என் மகள் யாழினி.”

யாழினி புன்னகையுடன் ஆதவனைப் பார்த்தாள்.

“வணக்கம், ஆதவன்.”

“வணக்கம்.”

அவன் மரியாதைக்காக மட்டும் பதிலளித்தான்.

“இவர் என் மகன் வருண்.”

வருண் மெதுவாக முன்னே வந்தான்.

“வணக்கம், ஆதவன்.”

“வணக்கம்.”

ஆதவன் கைகுலுக்கினான்.

அடுத்த நொடியே…

வருணின் பார்வை அல்லியின் மீது நிலைத்தது.

ஒரு நொடி…

இரண்டு நொடி…

அவன் பார்வை விலகவில்லை.

அல்லிக்கு அந்தப் பார்வை ஏனோ சங்கடமாக இருந்தது.

அவள் மெதுவாகத் தலையைக் குனிந்தாள்.

வருண் மட்டும் மெல்ல சிரித்தான்.

“வணக்கம்.”

“வணக்கம்.”

என்று அல்லி மரியாதைக்காக பதில் சொன்னாள்.

“ஆதவன் தம்பி…”

மாரியப்பன் சில முக்கியமான தொழிலதிபர்களை அழைத்து வந்தார்.

“உங்களை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தணும்.”

“வாங்க.”

ஆதவன் அல்லியை ஒரு நொடி பார்த்தான்.

“இங்கேயே இரு.”

என்று சொல்லிவிட்டு அவர்களுடன் சென்றான்.

அல்லி அமைதியாக அங்கேயே நின்றாள்.

சுற்றிலும் புதிய முகங்கள்.

புதிய உலகம்.

யாரிடமும் பேசத் தெரியாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து…

மெதுவாக அவள் அருகில் வந்து நின்றான் வருண்.

“என்னங்க… தனியா நிக்கிறீங்க?”

அல்லி மரியாதையுடன்,

“அவர் வருவாரு.”

என்றாள்.

“அதுவரைக்கும் பேசலாமே.”

“பரவாயில்லை.”

“என்னைப் பார்த்தா பயமா இருக்கா?”

“இல்ல…”

“அப்போ ஏன் இவ்வளவு தள்ளி நிக்கிறீங்க?”

என்று சொல்லிக்கொண்டே அவளுக்கு இன்னும் நெருக்கமாக வந்தான்.

அல்லி இரண்டு அடி பின்னால் நகர்ந்தாள்.

“தயவுசெய்து… தள்ளி நில்லுங்க.”

வருண் சிரித்தான்.

“இவ்வளவு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.”

“நான் உங்களை சாப்பிடப்போறது இல்ல.”

அவள் திரும்பி நடக்க முயன்றாள்.

உடனே…

அவன் அவள் செல்லும் வழியை மறித்தான்.

“ஒரு நிமிஷம்…”

“வழி விடுங்க.”

“நான் பேசிட்டு இருக்கேன்ல.”

“எனக்கு பேச விருப்பம் இல்லை.”

அல்லியின் குரலில் பயம் தெளிவாக இருந்தது.

அதை ரசித்தபடி…

வருண் மீண்டும் ஒரு அடி நெருங்கினான்.

அல்லியின் கண்களில் கண்ணீர் தேங்கியது.

அந்த நொடியே…

ஒரு வலிமையான கை…

வருணின் மணிக்கட்டைப் பிடித்து பலமாக முறுக்கியது.

“ஆஆ…”

வலியில் அலறினான் வருண்.

அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தான்.

அவன் முன்னால்…

கோபத்தில் முகம் சிவந்தபடி நின்றிருந்தான் ஆதவன்.

அவன் கண்களில் எரிந்த கோபத்தைப் பார்த்து வருணுக்கே ஒரு நொடி பயம் வந்தது.

ஆதவன் இன்னும் இறுக்கமாக அவன் கையை முறுக்கினான்.

“ஆ… ஆதவன்… விடு…”

என்று வலியில் துடித்தான் வருண்.

ஆதவன் அவன் முகத்திற்கு நேராக நெருங்கினான்.

குளிர்ந்த குரலில்…

ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் நெருப்பைப் போல இருந்தது.

“அவ என் மனைவி.”

“இனிமேல் அவ பக்கத்துல கூட வர நினைக்காத.”

என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவன் கையை உதறி விட்டான்.

வருண் அவமானத்தில் தலைகுனிந்து நின்றான்.

அருகில் இருந்த சிலர் என்ன நடந்தது என்று திரும்பிப் பார்த்தனர்.

ஆனால்…

ஆதவன் யாரையும் பொருட்படுத்தவில்லை.

அவன் அல்லியை நோக்கித் திரும்பினான்.

பயத்தில் நடுங்கியபடி நின்றிருந்தாள் அல்லி.

கண்களில் தேங்கிய கண்ணீரை மறைக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தாள்.

ஆதவன் ஒரு நொடி அவளைப் பார்த்தான்.

அவள் கண்களில் இருந்த பயம்…

அவனுக்குள் ஏதோ ஒரு கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

ஆனால்…

அதை வெளிக்காட்டவில்லை.

“வா.”

என்று மட்டும் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்.

அல்லி அமைதியாக அவனைப் பின்தொடர்ந்தாள்.

அவள் மனதில் ஓடியது ஒரே ஒரு கேள்வி…

“என்னை வெறுக்கிற மனிதர்… இப்போ மட்டும் ஏன் என்னைக் காப்பாத்தினார்…?”

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top