ருத்ரன் ரெஸ்ட்ரண்டை மாற்றி அமைக்கும் டிசைன்களை வீட்டில் இருந்தபடி வெண்மதி செய்ய ஆரம்பித்து இருந்தாள்
பகலில் அஸ்வத்திடம் போனில் பேசிவிட்டு வேலையில் மூழ்கிவிடுபவள்…. மாலை தன் தம்பிகளுடன் சிறிது நேரம் விளையாடி…. நர்மதாவிற்கு உதவி செய்து தூரத்தில் இருந்தபடி தன் தந்தையை பார்ப்பவளுக்கு வாழ்கை சுவாரஸ்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது
இரவில் பயமில்லாமல் நிம்மதியாக தூங்கி எழுவது…. யாருடைய குத்தல் பேச்சுகளோ…. தன் தாயோடு தன்னை ஒப்பிட்டு பார்க்கும் மனிதர்களின் தொல்லை இல்லாமல் இருப்பதே அவள் வாழ்நாளில் நடக்காத அதிசயம்! இந்த சந்தோஷம் நிரந்தரமாக தனக்கு கிடைக்க தன் விதியை அலங்கோலமாக எழுதிய கடவுளிடமே வேண்டி கொள்ள ஆனால் அவள் விதி அவளுக்கு வைத்து இருப்பதோ அவசொல்லும் அழுகைகளும் தானே
மதி அழகாக ரெஷ்டாரண்டை வடிவமைத்த டிசைனை ஒரு முறை சரி பார்த்துவிட்டு முகத்தில் படர்ந்த திருப்தியுடன் ருத்ரன் ரெஸ்டாரண்டிற்கு வந்திருந்தாள்… ருத்ரன் இன்னும் வந்து இருக்கவில்லை அதனால் விஷ்ணு வரவேற்று ருத்ரன் அலுவலக அறைக்கு அழைத்து சென்று இருந்தான்
அந்த அறையை இருவருமே பயன்படுத்தி கொள்வார்கள் அந்த அறையில் ருத்ரன் விஷ்ணுவிற்கு தனி தனி மேஜைகள் இருக்கும்
ருத்ரன் தன் அப்பா பிஸ்னஸையும் பார்த்து கொள்வதால் மாலை நேரம் தான் ரெஸ்டாரண்டிற்கு வருவான்…. சில நேரம் அவனால் வர முடியாமல் கூட இருந்து விடும்
விஷ்ணுவிற்கு மதியை நிமிர்ந்து பார்க்கவே சங்கடமாக உணர்ந்தான்… அன்று பேசியது அவள் மனம் வருந்தி இருக்குமே என நினைத்து தயங்கியவனை பார்த்தவள்
அவன் தயக்கத்தை ஊகித்து “அன்னைக்கே ஸாரி கேட்டீங்களே இன்னுமா அதையே யோசிக்கறீங்க…டிசைன் பார்க்கிறீங்களா அண்ணா” என கேட்டாள்
“இல்லைம்மா ருத்ரன் வந்துடுவான்… அவன் வந்ததும் பார்க்கலாம்… நீ எதாவது சாப்பிடறியா ?
“இல்லைன்னா எதுவும் வேண்டாம்… இப்ப தான் வீட்ல சாப்பிட்டு வந்தேன்” என்றவளுக்கு அஷ்வத்தை போல் விஷ்ணுவிடம் இயல்பாக பேச முடிந்தது அவன் மீது ஒரு வித சகோதர பாசத்தை தோற்றுவிக்கவே யோசிக்காமல் அண்ணா என அழைத்து விட்டாள்
மதி அண்ணா என அழைத்ததும் “சாரிம்மா அன்று நான்…”
“அட அதை விடுங்க எத்தனை தடவை ஸாரி கேட்பீங்க நான் மறக்க நினைச்சாலும் நீங்க மறக்க விடமாட்டீங்க போல அதோட உண்மைய தானே சொன்னிங்க… பொய் சொல்லலியே இதுல என்ன இருக்கு விடுங்க” என்றதும்
“உனக்கு நிஜமா கோபமே வரலையா ”
“லைஃப்ல பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு…. இந்த சின்ன விசயத்துக்கு போய் ஃபீல் பண்ணா அப்புறம் நான் லைஃப் ஃபுல்லா ஃபீல் பண்ணி அழுதுட்டே இருக்க வேண்டியது தான்” என்றால் சிரித்து கொண்டே
“ஏதோ வயசான பாட்டி போல பேசுற” என சிரித்தவன் ருத்ரன் சொன்னது போல மதி அப்படி ஒன்றும் மோசமானவளாக அவனுக்கு தெரியவில்லை நல்லா பெண்ணாக தான் இருக்கா என நினைத்தான்
“என்னாச்சு ஏன் ஒரு மாதிரி அகிட்டீங்க ”
“அது எனக்குன்னு சிஸ்டர்ஸ் யாரும் இல்லை… இதுவரை யாரும் என்னைய அண்ணான்னு கூப்பிட்டது இல்லையா அதான்”
“நீங்க ப்ளே பாயா… இது தெரியாம போச்சே…. உங்களுக்கு நிறைய கேர்ள் ஃப்ரண்ட் இருப்பாங்களோ” என சிரித்து கொண்டே கேட்க
“அட நீ வேற வாய வச்சுகிட்டு சும்மா இரும்மா எனக்கு அப்படிலாம் கேர்ள் ஃப்ரண்ட் இல்லை” என்று புன்னகைத்தான்
“சரி சரி நம்பிட்டேன்…ரெஸ்டாரண்ட் புதுசா கட்டினது போல தெரியலையே” என்று கேட்டாள் மதி
“ஆமா பழைய ரெஸ்டாரண்ட் தான்…நாங்களும் தரமான சமையலை செய்து பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்ல அதே சமயம் பெரியதா நஷ்டமும் இல்லை….ஆல்டர் நேட் பண்ணி பார்த்தும் கஸ்டமரை பெரிசா இம்ப்ரஸ் பண்ணலை” என்றான் வருத்தமான குரலில்
சிறிது நேரத்திலே ருத்ரனும் வந்து சேர
“என்னா மச்சான் இப்ப தான் கால் பண்ணேன் அதுகுள்ள வந்துட்ட” என்ற விஷ்ணுவின் கேள்விக்கு பதிலளிக்காமல் மதியிடம்,
“அத்தை சொன்னாங்க நீ இங்கே வந்து இருக்கேன்னு…டிசைன்”என கை நீட்டினான்
அவளும் தான் வடிவமைத்ததை அழகாக வரிசைபடுததி கொடுத்தவள் ஒரு பென்டிரைவையும் கொடுத்தாள் “இதுலயும் காப்பி பண்ணி இருக்கேன்” என்றாள் மெல்லிய குரலில்
“ம்” என்று அவள் கொடுத்த டிசைனில் பார்வையை பதித்தவாறு கை நீட்டி வாங்கியவன்
“போய் எதாவது குடிக்க எடுத்துட்டு வா” என்றான் விஷ்ணுவிடம் தலை நிமிராமலே
“நானா” என்றான் விஷ்ணு
“ஏன்டா எனக்குலாம் எதுவும் எடுத்துட்டு வர மாட்டியா என்ன புதுசா வந்தவங்களுக்கெல்லாம் எடுத்துட்டு வர்ற உன் நண்பன் எனக்கு இல்லையா மச்சான்”
“போக சொன்னா போக போறேன் அதுக்கு ஏன்டா சுற்றி வளைக்கிற” என்றவன் மதியை பார்க்க அவளோ போகதே எனும் விதமாக தலையை ஆட்டினாள்
“நீ இன்னும் போகலை” என்றான் ருத்ரன்
“இதோ போய்ட்டேன்” என்று சென்றுவிட இப்போழுது மதியும் அவனும் மட்டுமே அறையில் இருந்தனர்
ருத்ரனிடம் பேச ஏனோ தயக்கம் அவளிடம்… அவனை நிமிர்ந்து பாராமல் அந்த அறையில் தன் பார்வையை அலைய விட்டாள்
சுழல் நாற்காலியில் அரைவட்டம் போட்டு சுழன்றபடி “என் நம்பர் உன்கிட்ட இல்லையா” என்றான் ருத்ரன் கணீர் குரலில்
“இல்லை”என்றாள் அவனை பார்க்காமலே
“அத்தை கிட்ட என் நம்பரை வாங்கி என்கிட்ட சொல்ல தோனலையா” பென்டிரைவ்வை கணிணியில் இணைத்து கொண்டே கேட்டான்
நான் ஏன் இவன் நம்பரை வாங்கனும் என நினைத்தவள்,”அது… அதான் சித்தி சொல்லிட்டாங்களே”
“இங்கே வேலை செய்ய போறது நீயா இல்லை அத்தையா”
கணிணியில் அவளது டிசைனை பார்த்தவன் “குட் நல்லா வொர்க் பண்ணி இருக்க” என பாராட்டினான்
“ம்ம் தேங்க்ஸ்” என்று அவனை நிமிர்ந்து பார்க்க அதிர்ந்து போனாள் டேபிளில் கை வைத்து கண்ணத்தை தாங்கி அவளையே பார்த்து கொண்டு இருந்தான் ருத்ரன்
ஒரு வாரமாக அவளை பார்க்காதது அவனுக்கு என்னவோ செய்து இருந்தது…. பார்த்து பத்து நாளே ஆன பெண்ணிடம் ஏன் மனம் இப்படி தவிக்கிறது என புரியாமல் எல்லாரிடமும் எரிந்து எரிந்து விழுந்தான்… வீட்டில் இருப்பவர்களோ அதிர்ந்து தான் போயினர் ருத்ரனின் இந்த கோபம் அவர்களுக்கு புதிது அல்லவா
இப்ப எதுக்கு நம்மள இப்படி பார்கிறான் இந்த விஷ்ணு அண்ணா என்ன பன்றார் ஒரு ஜுஸ் எடுக்க இவ்ளோ நேரமா என மனதினுள் புலம்பினாள்
“வீட்ல அத்தை நல்லா இருக்காங்களா” என்றால் எதாவது பேச வேண்டுமே என்று
“என்ன சொன்ன” என்றான் கண்ண குழி விழ அழகாக சிரித்தான்
“அது…அது அவங்க தான் அப்படி கூப்பிட சொன்னாங்க சாரி வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க” என்று தயங்கி தயங்கி பேசினால்
“ம்ம் ஃபைன்….என்றவன் சிறிது நேரத்துக்கு பின் “என்னையேல்லாம் கேட்க மாட்டியா மதி” என்று ஆழ்ந்த குரலில் கேட்க மதியோ அதிர்ந்து விழித்தாள்
ஆஆங் இவன் பேச்சு ஒன்னும் சரியில்லையே அய்யோ இதுக்கு இவன் பேசாமலே இருந்து இருக்கலாம் என்று யோசிக்க அவளை காப்பாற்றும் விதமாக விஷ்ணு ஒரு ஜுஸுடன் வந்தான்
அதன் பின் வேலையை பற்றி பேச ஆரம்பித்தாள் டேபிள் சேர்…. ஃப்ரண்ட் டிசைன்… ஒவ்வொரு டேபிளில் மேற்புறத்தில் வைக்கும் பூ வேலைபாடு…. லைட்டிங்…என அவள் வடிவமைத்த டேக்கரேஷனை பத்தி விவரிக்க ருத்ரன் விஷ்ணு இருவருக்குமே பிடித்து போனது
“சூப்பர் மதிம்மா அதுவும் குழந்தைகளுகான ஊஞ்சல்….நல்லா இருக்கு நானும் நிறைய பேரை பார்த்து இருக்கேன் குழந்தைகளோட வர்றவங்க குழந்தைய வச்சுகிட்டு சிரமபட்டு சாப்பிட முடியாம கஷ்டபடுவாங்க”
“ஆமான்னா அதான் குழந்தையோட வர்றவங்களுக்கு அவங்க சாப்பிடற இடத்து பக்கத்துலயே ஊஞ்சலை செட் பண்ணிட்டா அவங்களும் கொஞ்சம் ரிலாக்ஸா நிம்மதியா சாப்பிடுவாங்க” என்றால் விஷ்ணுவை பார்த்து
“ம்ம் ஓகே நீ எப்ப வேலைய ஸ்டார்ட் பண்ற”என்றான் ருத்ரன்
“நானா நான் எப்படி தனியா செய்ய முடியும் இன்டீரியர் டேக்கரேட் பண்ணற ஆளுங்க கிட்ட நீங்க இதை காமிங்க” என்றாள்
“இது எனக்கு தெரியாதா…. நீ தானே டிசைன் பண்ண கூட இருந்து வேலைய முடித்து குடு…” என்றவன் “எப்ப வேலைய ஆரம்பிக்க போற”
“அதை நீங்க தான் சொல்லனும் ”
“சரி கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு… கொஞ்ச நேரத்துல ஆளுங்க வந்துடுவாங்க அவங்க கிட்ட நீயே உன் டிசைனை எக்ஸ்ப்ளைன் பண்ணு” என்றதும்
“சரி” என்றவள் விஷ்ணுவிடம் திரும்பி பேச போனாள்
“நீ இங்கே என்ன பண்ற இன்னும் வீட்டுக்கு போகலை” என்றான் ருத்ரன் விஷ்ணுவை முறைத்து கொண்டு
“கத்திரிகாய் முத்தினா கடைதெருவுக்கு வந்து தானே ஆகனும் மச்சி அப்ப பார்த்துகறேன்”
மதி புரியாமல் என்ன கத்திரிகாய் என்றாள்
“முரட்டு கத்திரிகாய் ஒன்னு ஒரு வாரமா இறங்கி வராமா ஆட்டம் காமிக்குது அதை தான் சொன்னேன் தங்கச்சி” என்றான் விஷ்ணு ருத்ரனை பார்த்து கொண்டே
என்ன சொல்றார் இவர் கத்திரிகாயில் கூட முத்தல் இருக்குமா… இருக்கும் போல இதை பத்தி சித்தி கிட்ட கேட்கனும் என நினைத்தால் வெண்மதி
“சரிம்மா நான் கிளம்பறேன் “என்ற விஷ்ணுவிடம்
“வீட்டுக்கு சேஃபா போங்கன்னா போய்ட்டு கால் பண்ணுங்க” என அக்கறையாக சொன்னவளை முறைத்தான் ருத்ரன் விஷ்ணு சென்றதும் இந்த கருவாயன் கூட இருக்க வேணாம் இவன் பார்வையே சரியில்லை வெளியே போய்டலாம் என நினைத்தவள் எழுந்து நின்றதும் உட்காரு என்றான்
இப்ப எதுக்கு இப்படி முறைகிறார்
“சோ விஷ்ணு நம்பர் கூட உன்கிட்ட இருக்கு” என்றான்
“ம் இருக்கு” என்றாள் அவனை பார்ப்பதை தவிர்க்க போனை பார்க்க ஆரம்பித்தாள்
பேசுனா வாயில் இருந்து முத்தா உதிர்ந்திடும் என அவளை மனதிற்குள் திட்டி கொண்டாலும் அவளையே பார்த்து கொண்டு இருந்தவனுக்கு தான் ஏன் அவளை இப்படி பார்க்கிறோம் என புரியவே இல்லை அவள் அழகாக இருப்பதால் ரசிக்கிறோம் போல என நினைத்து கொண்டான்
சில நிமிடங்களில் இன்டீரியர் ஆட்கள் வர மதி அழகாக அவர்களிடம் சொல்ல அவர்களுக்கு பிடித்து விட்டது
“நீங்க வேற எங்கயாவது வேலை பார்கிறீங்களா”என கேட்டதும்
அவள்”இங்கு இல்லை பட் மும்பையில் பார்த்தேன் ” என்றாள்
“நீங்க எங்க கிட்டயே வேலை பார்க்க முடியுமா உங்க கிரியேட்டிவ் திங்க்…டிசைன் ரொம்ப நல்லா இருக்கு” என்றதும்
“அவ வீட்லயே இருந்து தான் வேலை பார்ப்பா உங்களுக்கு ஓகேயா” என்றான் ருத்ரன்
இந்த கருவாயன் ஏன் இப்ப இப்படி பேசறான் என அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்
“ஓகே ஸார் பராவாயால்லை இவ்ளோ நல்லா டேலண்டான பெண்ணை நாங்க இழக்க விரும்பல… அப்புறம் வேலைய எப்ப ஸார் ஆரம்பிக்கலாம் எப்டியும் ஒரு வாரம் எடுக்கும் நாங்க வேலைய முடிக்க”
“மன்டேயில் இருந்து வேலைய ஆரம்பிக்கலாம்” என்றதும் பட்ஜெட் பத்தி சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பி விட்டார்கள்
“நீங்க ஏன் அப்படி சொன்னீங்க நான் எங்க வேலை பார்த்தா உங்களுக்கு என்ன” அவனிடம் கேட்டு விட்டாள்
“என்னைய நம்பி மாமா உன்னைய என் கிட்ட ஒப்படைச்சு இருக்கார்” என்றான் அமைதியான குரலில்
“வாட் “அவன் பேச்சில் சினமுற்றவள் “லுக் மிஸ்டர் நீங்க பேசறது எதுவுமே சரியில்லை கொஞ்சம் லிமிடோட பேசுங்க உங்க கிட்ட வேலை பார்க்கறவங்க கிட்ட இப்படி தான் பேசுவீங்களா ”
“நீ எல்லாரையும் போல இல்லையே நீயும்…எனக்கு முறை பொண்ணு மாதிரி தானே”என்றானே பார்க்கனும் அவள் அதிர்ந்தே விட்டாள்
அவளுக்கோ முகம் கோபத்தில் சிவந்து விட்டது “வெட்கபடறியா என்ன அழகா இருக்கு” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்
“ஹல்லோ மிஸ்டர்…. சித்தியோட அண்ணா பையன்னு பார்க்கறேன்…என்கிட்ட இது போல பேசாதிங்க இரிடேட்ங்கா இருக்கு” கோபத்தில் கூட நிதானமாக பேசுபவளை பார்த்தவன்
“ஓகே கிளம்பலாமா” என்றான்
நான் என்ன பேசிட்டு இருக்கேன் ச்சே இவன் கிட்ட பேசுவதே வேஸ்ட் என எரிச்சலான குரலில் “நோ தேங்க்ஸ் நானே போய்கறேன்” என விறுவிறுவென வெளியேறினாள்