அத்தியாயம் 2

 

காதல் ரெண்டு எபி 2

 

அதி மெட்டல்ஸ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் உடைய சிஇஓ தான் அதிரூபன்… அவனுடைய தந்தை அதியமான்.. தாத்தா அதிவீரபாண்டியன்…

 

ஆரம்பத்தில் சிறிதாக ஆரம்பித்த கடை தற்போது பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு அதியமான் மற்றும் அதிரூபனின் உழைப்பு மிகப்பெரியது எனலாம் …

 

ரூபனின் தந்தை மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அவருக்கு தெரியாமல் அவன் வைத்திருக்கும்  சொந்த பார் தான் இது… அங்கு தான் அவன் தன்னுடைய காதலியான ரேவந்த் உடன் எப்போதும் சல்லாபிப்பான்…

 

இருவருக்கும் மட்டுமேயான இந்த தனிப்பட்ட நிமிடங்களை இருவரும் ஆழ்ந்து அனுபவிப்பார்கள் …

இருவரும் ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும் அவ்வளவாய்  பேசி பழகி இருந்ததில்லை… ரூபனின் கம்பெனியில் ரேவந்த் பணியில் சேர்ந்ததும் ரூபன் முதலில் அதிர்ந்து தான் போனான்…

 

ஆனால் இருவரும் முன்னமே தெரிந்தவர்கள் என ஒருவரை ஒருவர் தெரிந்த மாதிரி காட்டிக் கொண்டது கூட கிடையாது …

 

ரூபனுக்கு கீழ் ரேவந்த் பிஏவாக பணிபுரிவதால் இருவரும் எப்போதும் ஒன்றாகத்தான் சுற்றுவார்கள்…

 

போகப் போக இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உண்டானது…

 

ஒருநாள் பார்ட்டி ஒன்றிற்க்கு சென்று விட்டு வரும் போது ரூபன் தான் முதலில் ரேவந்துக்கு முத்தம் தந்திருந்தான்…

 

இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டிகள் என இருவருக்கும் அவர்களது உடல் மொழியில்  தெரிந்திருக்கும் போல …ரூபன் முத்தம் தந்ததும் அவனை தடுக்காது அரவணைத்துக் கொண்டான் ரேவந்த்… 

 

தற்போது நான்கு வருடங்களாக காதலித்துக் கொண்டு வருகிறார்கள் …

அனைவருக்கும் முன்பும் இருவரும் அத்தனை கண்ணியமாக நடந்து கொள்வார்கள்… தன் முதலாளியின் மீது அளவு கடந்த பற்றும் மரியாதையும் வைத்திருப்பவன் தான் இந்த ரேவந்த் என எண்ணி கொள்வார்கள் மற்றவர்கள்..

 

ஆனால் இருவருக்கு மட்டும் தான் தெரியும் அவர்கள் வாழும் லட்சணம் எந்த அளவு என்று ..!

 

பிசினஸ் மீட்டிங் என எதுவாக இருந்தாலும் அதிரூபன் ரேவந்தை  தான் தன்னுடன் அழைத்துச் செல்வான்…

வெளியில் தன் முதலாளியின் மீது விசுவாசமானவனாக ரேவந்த் தன்னை காட்டிக் கொண்டாலும் அதிரூபன் தான் ரேவந்த் மீது பைத்தியமாக இருந்தான் எனலாம்… 

 

பிசினஸ் மீட்டிங் முடிந்தவுடன் இருவரும் ஒரே அறையில் கொட்டமடிப்பார்கள் ..‌

 

ரேவந்த் திற்காக நிறைய உதவிகளை செய்து இருக்கிறான் அதிரூபன்… அதேபோல நிறைய செலவும் செய்து இருக்கிறான்…

 

இத்தனைக்கும் ரேவந்த் தேதையும் வாய்விட்டு கேட்டது இல்லை.. சொல்லப்போனால் அதிரூபன் செய்யும் எதற்கும் விடாப்படியாக மறுத்து விடுவான் ரேவந்த் ..

 

ஆனால் அதிரூபன்  சரி என கேட்டுக் கொள்ளும் பழக்கமுடையவன் இல்லையே..! 

 

அவன் தன் காதலியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்பவன் ஆயிற்றே!… அதற்காக அவனுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து இருந்தான் அதிரூபன்… ஏன் தனி ஃபளாட் ஒன்றை ரேவந்துக்காக பார்த்து பார்த்து வாங்கி தந்து இருந்தான் அதிரூபன்…

 

ரூபனின் தயவால் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் ரேவந்துக்கு எளிமை தான் மிகவும் பிடிக்கும் …அந்த எளிமையை அனுபவிக்க தான் அதிரூபன் விடமாட்டான் …

 

அன்றும் ஒரு மீட்டிங் கிற்காக அதிரூபன் தயாராகி அலுவலகத்திற்கு வந்திட.. அங்கு இருந்த  கண்ணாடி தடுப்புகளால் அமைக்கப்பட்ட பத்து மாடி கட்டிடத்தை தனது விழிகளால் ஆராய்ந்து பார்த்தவனும் எப்போதும் ஒரு வித கர்வம் உண்டாகும் …

 

பல கிளைகள் இருந்தாலும் இதுதான் முதன்மை அலுவலகம்.. இங்குதான் அதிரூபன் எப்போதும் இருப்பான்… 

 

நேரத்தை பார்த்தவன் தனது அழுத்தமான காலடி தடங்களால் முன்னேறி சென்றிட.. அனைவரும் அவனுக்கு வணக்கம் வைத்தவாறு இருந்தனர் …

 

அவனுக்கென்று இருக்கும் பிரத்யேக மின் தூக்கியில் ஏறிய கணம் அதற்காகவே காத்திருந்தது போல ரேவந்தும் உடன் ஏறிக் கொண்டான் …

 

“மார்னிங் பாஸ்..!”  என குரலில் அத்தனை மரியாதையுடன் கூறியதும் சிறு தலை அசைப்புடன் ஏற்றுக்கொண்ட ரூபனின் விழிகள் நொடிக்கும் குறைவான நேரமே ரேவந்தின் மீது படிந்து மீண்டது …

 

தன்னறை வந்ததும் அன்றைய மீட்டிங்கிற்கான ஷெட்யூல் பற்றி ரேவந்த் விளாவரியாக விளக்கினான்.…

 

அனைத்தையும் கேட்டவாறு முன்னேறி சென்றவன் ஒரே ஒரு கணம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சட்டென ரேவந்தை பக்கவாட்டாய் தள்ளி அவனை மோகமாய் பார்த்தான்…

 

அவனது பார்வையில் சற்று தயங்கி நின்ற ரேவந்த்,

 

” வந்து.. பாஸ்… “ என இழுக்கவும்”

 

“லுக்கிங் சோ ஹாட் ரே…!”  என கரகரத்த குரலிலு கூறியதும் ரேவந்தின் இதழ்கள் புன்னகையில் வளைந்தது… 

பின் இருவரும் ஒன்றாய் மீட்டிங் நடக்கும் ஹாலில் நுழைந்ததும் அனைவரும் அதிரூபனுக்கு மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தனர்…

 

ரேவந்த் அவனுக்கான இருக்கையில் அமர்ந்திட… அதிரூபன் தன் இருக்கையில் அத்தனை கம்பீரமாக அமர்ந்தவன் அலுவல் விடயங்களை அவர்களுடன் பேசலானான்…

 

இங்கு அதி மெட்டல்ஸ் குரூப் ஆப் கம்பெனிஸின் ஃபேக்டரியில் தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள் அவள்… அவந்திகா …

 

மேனேஜராக சில வருடங்களாக இங்கு பணிபுரிந்து வருகிறாள்… நியாயமானவள், தைரியமானவள், நேர்மையானவள்…

 

அத்தோடு அதியமானிற்கு விசுவாசமான ஒரு தொழிலாளி… 

ஃபேக்டரி பற்றி அதியமான் அவ்வளவாய் கவலைப்பட மாட்டார் …ஏனெனில் அவந்திகா மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தார் அவர்…

 

சொல்லப்போனால் அத்தகைய நம்பிக்கையை பெற பெரிதும் உழைத்திருந்தாள் அவந்திகா …

 

ஆஷ்ரமத்தில் வளர்ந்து தனி ஆளாய் படித்து முன்னேறி எடுத்ததும் இந்த கம்பெனியில் தான் வேலைக்கு சேர்ந்திருந்தாள்…

 

அனுபவம் இல்லை என கொஞ்சம் கூட தடுமாறிடவில்லை அவள் …

 

கையில் எடுத்த பணிகளை சிறப்பாய் செய்து முடித்து அதியமானின் நம்பிக்கையையும் பெற்றிருந்தாள் …

 

அவளுக்கென பல கனவுகள் உண்டு ..வாழும் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என ஒவ்வொரு நாளும் நினைத்து அதற்கேற்ப வாழ்பவள் …

 

ஆண்டவன் அருளிய இந்த வாழ்வை தன் ஆசைப்பட்டது போல வாழ வேண்டும் என துடிப்புடன் செயல்படும் பெண் அவள் …

 

ஃபேக்டரியில் பணிபுரிந்து வருபவளை தற்போது அதியமான் தன் மகன் இருக்கும் அலுவலகத்திற்கு வர வைத்திருந்தார்…

இனி அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொள்ளமாறு அன்புக்கட்டளை விடுத்திருந்தார்  அதியமான்…

 

ஃபேக்டரியில் தன் திறமையினை காட்டி அதியமானின் நம்பிக்கையை பெற்றிருந்த அவந்திகா தற்போது அலுவலகத்திலும் தன் திறமையை காட்டி அதிரூபனிடம் அவளது நம்பிக்கையை பெறுவாளா??… பார்ப்போம் ..

 

படித்து விட்டு கருத்தினை தெரிவிக்கவும் நன்றி 🙏 🙏 🙏 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top