அத்தியாயம் 3

சில பல மீட்டிங்கிற்காக மட்டும் அலுவலகத்திற்கு வருவாள் அவந்திகா… தற்போது இங்கு தான் பணிபுரிய வேண்டும் என அதியமான் கூறிடவும் மறுக்காது சம்மதம் தெரிவித்து இருந்தாள் அவர் மீது கொண்டு விசுவாசத்தால்…

 

அதன்படி அன்று காலையிலேயே கம்பீரமாக தயாராகி அலுவலகத்திற்கு தனது ஹூண்டாய் கிரெட்டா எஸ்எக்ஸ் ப்ரீமியம் காரினை எடுத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள் அவந்திகா …

காரினை அதற்குரிய  இடத்தில் பார்க் செய்து விட்டு கதவை திறந்து கொண்டு  கீழே இறங்கினாள்…

 

டார்க் ஆலிவ் கிரீன் நிற கோ-ஆர்ட் செட் அணிந்து இருந்தவளது  கையில் லேப்டாப் பேக் அழகாய் வீற்றி இருந்தது…

 

 

அவளது கரத்தில் கண்ணுக்கே தெரியாத வகையில் நேரத்தை காட்டி கொண்டிருந்தது கைக்கடிகாரம்…

 

மற்றொரு கரத்தில் சங்கத்தில் பிரேஸ்லெட் அணிந்திருந்தாள்… கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலி அணிந்திருக்க காதிலும் சிறிய அளவில் கடுக்கன் போன்ற  காதணிகளை மாட்டி இருந்தாள்..

அவ்வளவுதான் அவளுடைய ஆபரணங்கள்…காலுக்கு வழக்கம் போல ஹை ஹீல்ஸ் அணியாது அவளது உடைக்கு ஏற்ற  கறுப்பு நிற பாயிண்ட்டெட்-டோ கட் ஷூக்கள் ஒலிக்க  நடந்து வந்தாள் அவந்திகா…

 

பார்க்கவே அத்தனை நேர்த்தியாக இருந்தாள் அவந்திகா …சந்தன நிறத்தில் இருந்தவளது உதட்டிற்கு அவளது நிறத்தோடு ஏற்ப உதட்டுச் சாயத்தை தீட்டி இருந்தவள் அவளது கண்ணிற்கு மட்டும் மை பூசி இருந்தாள்…

 

ஏற்கனவே அடர்த்தியான புருவங்கள் அவளுக்கு அதை செதுக்கி வைத்திருந்தாள் அவந்திகா… 

 

முதுகு வரை மட்டுமே அடர்த்தியான கூந்தல் அவளுக்கு.. அதைத் தாண்டி வளர விடமாட்டாள்…

 

அவள் முகத்திற்கு ஏற்ற வகையில் முடியை கத்தரித்திருந்தவள் அதனை கிளிப்பிலோ ஹேர் பேண்டிலோ அடக்காது அழகாக விரித்து விட்டிருந்தாள்… 

 

பார்ப்பதற்கே அவள் மீது மரியாதையும் அவளது தீட்சண்யமான பார்வையில் ஒரு வித நிமிர்வும் இருந்தது …

தனது ஐடி கார்டை மாட்டிக் கொண்டு ஹேண்ட்பேகினையும் எடுத்துக்கொண்டு அந்த உயர்ந்த நின்ற கண்ணாடி கட்டிடத்தினை பெருமூச்சுடன் பார்த்தவள் பின்பு நிமிர்ந்த நடையுடன் உள்ளே சென்றாள்…

 

அங்கிருந்த வரவேற்பு பெண்ணும் அவளைப் பார்த்து,

 

” குட்மார்னிங் மேம்..”  என மரியாதையாக கூறியதும்  பதிலுக்கு சிறு தலையசைப்பு தந்து,

 

“மார்னிங் ப்ரீத்தி…. சார் வந்துட்டாரா…?” 

 

“இன்னும் இல்ல மேம்.. பட் அவர் வந்ததும் உங்களை வர சொல்லி ரேவந்த் சார் சொன்னாரு..” என்றதும்,

 

“ஓஓஓ….ஓகே.. எனக்கு இன்பார்ம் பண்ணுங்க..”  என்று விட்டு பணியாளர்களுக்கான லிஃப்பிடினை நோக்கி சென்றாள்…

 

அங்கு கிட்டத்தட்ட பத்து தளங்கள் கொண்ட கட்டிடம் அது… அதில் பத்தாவது தளத்தில் தான் அதிரூபனின் அறை இருக்கிறது…

 

அவளுக்கும் அதே பத்தாவது தளத்தில் தான் அறை ஒதுக்கி பட்டு உள்ளது… பத்தாவது தளத்திற்கான எண்ணை அழுத்தி விட்டு காத்துக் கொண்டிருந்தாள்…

 

அப்போது மூன்றாம் தளத்தில் இருந்து அவளுடன் இணைந்து கொண்டான் ரேவந்த் …

 

ஏனோ அவனைக் கண்டாலே அவந்திகாவிற்கு பிடிக்காது.. அவனை மட்டுமல்ல அதிரூபனை கூட  அவளுக்கு அவ்வளவாய்  பிடிக்காது.…

என்ன தான் அதிரூபன் அதியமானின் மகனாகவே இருந்தாலும் ஏதோ ஒரு விதப் பிடித்தமின்மை அவனிடம் எப்போதும் இருக்கும் அவந்திகாவிற்கு…

 

இத்தனைக்கும் அவன் யாரிடமும் வழிந்தது கிடையாது.. ஏன் அவளிடம் கூட பணி நிமித்தமான விஷயங்களை மட்டும் தான் பேசிடுவானே ஒழிய அதை தவிர மேலும் ஒற்றை வார்த்தைகூட கூட பேசிட மாட்டான்…

 

கண்ணியமாகத்தான் நடந்து கொள்வான் அதிரூபன்… இருந்தும் ஏதோ ஒரு பிடித்தமின்மை அவனிடத்தில் எப்போதும் இருக்கும் அவந்திகாவிற்கு…அவளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவன் திறமையற்றவன் என்றெல்லாம் எண்ணியது இல்லை அவள்…அவனது திறமையை பல இடங்களில் கண்டு வியந்துள்ளாள்…

 

ஏன் அவளது பாஸான அதியமானை விட புத்திசாலி அவன் என்பதை நிரூபித்தும் காட்டி உள்ளான் அதிரூபன்…அதனால் தான் மகனை நம்பி பொறுப்புகளை அவனது கையில் தந்துள்ளார் அதியமான்…

 

பொறுப்புகளை அவன் கையில் தந்து இருந்தாலும் இன்னும் அதியமான் தான் தனது கம்பெனிகளுக்கு மேனேஜிங் டைரக்டராக இருந்து வருகிறார்…பல முக்கிய முடிவுகளை தந்தையும் மகனும் இணைந்து தான் எடுப்பார்கள்…

 

 

அதிரூபனை கூட ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்வாள் ஆனால் இந்த ரேவந்தை தான் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது …

 

எப்போதும் மீட்டிங்கிற்காக அவள் வந்தாலும் அவளது வேலையில்  ஏதேனும் குறையை கண்டுபிடித்து விடுவான் ரேவந்த்…

 

இத்தனைக்கும் அவள் அதற்கான தெளிவான விளக்கம் அளித்தாலும் ஒரு வித நக்கல் பாவனை இருக்கும் அவனது பேச்சில்… அது அவந்திகாவை மிகுந்த கோபத்தை உண்டாக்கும்…

 

ஒரு சமயம் இதுபோல தான் அவன் நக்கல் தோணியில் அனைவரும் முன்பும் அவளிடம் பேசிட கோபத்தில் அவனை திட்டி இருந்தாள் அவந்திகா..

 

அதில் முகம் கருத்து போன ரேவந்த் பதில் பேசும் முன் அதிரூபன் அவளை வெளியேற கூறியதும் மிகவும் அவமானப்பட்டு விட்டிருந்தாள்..

 

விஷயம் கேள்விப்பட்ட அதியமான் நேரடியாகவே அதிரூபினிடம் விளக்கத்தை கேட்டிட… தவறு அவள் மீது இல்லை என நிரூபிக்கப்பட்டாலும் அதிரூபன் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லே…

 

அதியமான் கூறிய போது கூட தனது ரேவந்துக்காக சிறிதும் இறங்கி வரவில்லை அதிரூபன்…

 

அதில் தந்தையும் மகனும் இரு நாட்கள் பேசிக்கொள்ளவில்லை.. மகன் சார்பாக அதியமானே அவளிடம் மன்னிப்பு கேட்டது அவளுக்குத்தான் சங்கடமாகி போனது …

 

இப்போது ரேவந்தை கண்டதும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ள கூட இல்லை அவள்…

 

ஏன் அவன் ஒருவன் உள்ளே வருகின்றான் என்பதைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை..

 

ஆனால் ரேவந்த் அவளை நக்கலாக பார்த்தவாறு அருகே நின்றவன் மேலிருந்து கீழாக அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு,

 

” வெல்கம் ஆபீஸ் அவந்திகா..”  என வேண்டும்  என்றே குழைந்த குரலில்  கூறியதும் அவளுக்கு பளார் என அறையலாம் போல இருந்தது …

 

” முன்ன ஃபேக்டரில  வேலை பார்த்த… இனி இங்க ஆபீஸ்ல வேலை பார்க்கணும் …என் கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு.. ஏன்னா நான் உன்னோட பாஸ் அதிரூபன் மாதிரி கிடையாது.. ஏதாவது மிஸ்டேக் பண்ணனு தெரிஞ்சுதுன்னா  முதல்ல நான் தான் பனிஷ் பண்ணுவேன்..!”  என வேண்டும் என்றே அவளிடம் வம்பு இழுத்தான் ரேவந்த்…

 

சரியாக பத்தாவது தளம் வந்திடவும் அவனை திடமாக நேருக்கு நேர் பார்த்த அவந்திகா,

 

” ஃபார் யுவர் கையிண்ட் இன்பர்மேஷன் என்னோட பாஸ் அதிரூபன் கிடையாது… அதியமான்….உன்னோட சொம்பு தூக்குற வேலை எல்லாம் உன் பாஸ் கிட்ட வெச்சிக்கோ….நான் என் பாஸ் அதியமான் மாதிரி…யாருன்னுலாம் பார்க்க மாட்டேன் தூக்கி போட்டு போயிட்டே இருப்பேன்…” என புருவங்களை உயர்த்தி அழுத்தம் திருத்தமாய் உரைத்து விட்டு லிப்டிலிருந்து வெளியேறி விட்டிருந்தாள் அவந்திகா…

 

செல்பவளது  முதுகை வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரேவந்த்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top