அனைவரும் வீட்டிற்கு வந்து இறங்கினர்.
முதலில் வந்த அருண் மாலையை தூக்கி எரிந்து விட்டு வேக , வேகமாக அவனது
அறையில் சென்று அடைந்து கொண்டான். ருத்ராதேவி மற்றும் அகல்யாவை வீட்டில்
இறக்கி விட்டு விக்ரம், சக்ரவர்த்தியுடன் அலுவலகத்தில் அவசர வேலை என்று
புறப்பட்டு விட்டான்.
அடுத்து வந்த ஆதியின் காரில் இருந்து இறங்கினாள் தேன்மலர். உள்ள போ ! வரேன்
என்று சொல்லிவிட்டு காரை பார்க் செய்ய போனான் ஆதி . ஆரத்தி எடுத்து அழைக்க
யாருக்கும் மனம் இல்லை, அம்மா ! ஆரத்தி எடுக்கவா.. என்று அகல்யா கேக்க.
தம்பதியர் சகிதம் தான் ஆரத்தி எடுக்கணும், தனியா எடுக்க கூடாது என்று
சொல்லிவிட, அகல்யா தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
உள்ள வா ! என்றான் ஆதி.
“மேல இருக்கு அருண் ரூம்” என்று ருத்ரா சொல்ல, இரண்டு படி ஏறி இருப்பாள்,
மேலிருந்து அருண் கீழிறங்கி வந்தான். டெனிம் ஷர்ட் அண்ட் ஜீன்ஸ்
அணிந்திருந்தான். மாலையும் கழுத்துமாக படியேறி வரும் தேன்மலரை பார்த்து
கோப கண் ஏறி அம்ம்மாஹ்…. ! என்று அழைத்தான் சத்தமாக.
என்னடா….! ஏன் கத்துற என்றார் .
இவளை எதுக்கு என்னோட ரூமுக்கு அனுப்புறீங்க… என்னோட ரூமை கிளீன்
பண்றதுக்கு தவிர வேற எதுக்கும் என் ரூம் பக்கம் இவ வரக்கூடாது என்றான்.
“சரி விடு அனுப்பல… நைட் முகூர்த்தத்துக்கு மட்டும் அனுப்புறேன்”.. என்றார் ருத்ரா.
விக்கித்து போனாள் மலர்.
அம்ம்மாஹ்…. ! அந்த கண்ராவியெல்லாம் ஒன்னும் வேணாம். வீணா என்ன
கொலைகாரனா மாத்தாதீங்க. என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு, வேகமாக
வெளியில் கிளம்பி சென்றான்.
சரி.. நீ கீழ கிட்சன் பக்கத்துல இருக்குற அறைல தங்கிக்கோ! தேவை இல்லாம அவன்
ரூமுக்கு போய் வாங்கி கட்டிக்காத…கொஞ்சநாள் போனா சரி ஆகிடுவான்…என்றார்
தேன்மலரை பார்த்து.
சரி என்று தலை ஆட்டிவிட்டு தனது பொருட்கள் உள்ள பையை எடுத்து கொண்டு அந்த
அறையில் தஞ்சம் கொண்டாள் பெண்ணவள்.
இங்கு நடந்தவைகள் அனைத்தையும் எந்தவித உணர்வும் இல்லாமல்
கேட்டுக்கொண்டு கவனித்து கொண்டே தனது துணிகளை எடுத்து வைத்து கொண்டு
வெளியே வந்தான் ஆதி. அருண் வீட்டில் ஆதிக்கு தனி அறை எப்போதும்
உண்டு. அவன் தொழிலை எடுத்து நடத்த ஆரம்பித்த உடன் தன் அலுவலகத்தின்
பக்கத்தில் அவனுக்கென்ன ஒரு வில்லாவை வாங்கியிருந்தான். தனிமை விரும்பி
பெரும்பாலும் அங்கு தான் தங்குவான். அவனின் அம்மா,அப்பா வாழ்ந்த வீட்டை
மாதம் ஒருமுறை சென்று பார்த்து வருவதுடன் சரி. குடும்பத்தினர் நினைவு வந்து
அலைக்கழிப்பதால் அங்கு தங்குவது இல்லை. அருண் திருமணத்தை முன்னிட்டு
சக்ரவர்த்தி தான் இருநாள் இங்கு வந்து தங்க சொன்னார்.
இன்று அவனது தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. திரும்பி
வர சில மாதங்கள் ஆகலாம் என்று வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, சில
பொறுப்புகளை விக்ரமிடம் ஒப்படைக்க டேய் ! கட்டாயம் போய் தான் ஆகணுமா?
என்றான்.
பெருமூச்சுடன் “ஆம்” என தலையை மேலும் கீழும் அசைத்தான். அருண் எங்க?
அவன்கிட்ட சொல்லிடு.. , அவனுக்கு போன் பண்ணேன் ” ஸ்விச் ஆப் ” னு வந்தது.
வெளிநாடு செல்லும் தன் நண்பனை கட்டி தழுவி பிரியா விடையளித்தான் விக்ரம்.
ஏர்போர்ட் வரட்டுமா? என்று கேக்க.. வேணாம் என்றான்.
மேலும் சில வேலைகளை தனது காரியதரிசி ரவி-யிடம் ஒப்படைத்து விட்டு, விமானம்
ஏறி இருந்தான். அவன் மனதில் என்ன ஓடுகிறது என்று அவனுக்கு மட்டுமே தெரியும்.
அறைக்குள் வந்த மலர், அறையை சுற்றி பார்த்தாள். அந்த வீட்டில் இருப்பதில் சிறிய
அறை அதுதான். ஆனால் அவளுக்கு அது பெரிய அறை. மாலையை கழட்டி
அங்கிருந்த ஹங்கரில் மாட்டிவிட்டு, வேறு புடவைக்கு மாறி… அங்கிருந்த பாத்ரூமில்
நுழைந்து தன்னை சுத்த படுத்தி கொண்டு, ஆசுவாசமாக அங்கிருந்த படுக்கையில்
ஒருக்களித்து படுத்தாள். திருமணம் ஆன முதல் நாளே அவளது எதிர்காலம் என்ன
என்று தெரிந்து விட்டது. அவளுக்கு திருமணத்தில் பெரிதாக ஒன்றும்
எதிர்பார்ப்பில்லை தான். ஆனால் இப்படி ஒரு திருமணம் நடக்கும் என்றும், இப்படி
ஒரு மணாளன் அமைவான் என்று கனவிலும் நினைக்கவில்லை. என்னை அவர்
மனைவியாய் நினைக்க வில்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு சக மனுஷியாக
மதித்திருந்தால் கூட மனம் நிம்மதி அடைந்திருக்கும். அற்ப புழுவை போல்
பார்ப்பவரின் மனதில் எவ்வாறு இடம் பிடிக்க முடியும். நீண்ட யோசனைக்கு பின் எந்த
பக்கம் போவது என்று தெரியாத பட்சத்தில் , வாழ்க்கை அழைத்து செல்லும் திசையில்
செல்ல முடிவெடுத்தாள்.
இங்கு பாரில், மதுவை தன் வாயில் ஊற்றி தனது கோவத்தை தணிக்க முயன்று
கொண்டிருந்தான் அருண். ஆனால் நான் இதெற்கெல்லாம் தணிய மாட்டேன் என்றது.
பல பால் வண்ண பணக்கார அழகிகள் “தன்னை மனைவியாக ஏற்று கொள்ள
மாட்டானா?” என்று தவித்து கொண்டிருக்க இப்படி பட்ட பெண்ணிற்கு தாலி
கட்டியதை அவனால் கிஞ்சித்தும் ஏற்று கொள்ள முடியவில்லை. அவனுக்கு அழகிலும்
படிப்பிலும் பணத்திலும் மேலோங்கிய பெண்ணையே தனது வாழ்க்கைக்கு
தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தான். சிந்தித்து கொண்டிருந்த
நேரத்தில் “ஹாய் ஹண்ட்ஸம்” என்று அருகில் வந்து நின்றாள் ஒரு அழகி. அவளை
மேலிருந்து கீழ் வரை அங்குலம் அங்குலமாக அளவெடுத்து பின் தனது ரசனைக்கு
ஏற்றவள் என்று அறிந்து “ஹாய் ” என்று தனது கையை நீட்டினான். ஷெல் வி ஜாயின் !
என்று கிறங்கிய குரலில் கேக்க, சுயர் ! என்றான்.
இன்று நடந்த நிகழ்வில் அவளுக்கு சாதகமாக நடந்த ஒன்று சாந்திமுகூர்த்தம்
தள்ளிபோனதே. அதில் அவளுக்கு விருப்பம் இல்லாமல் இல்லை, அவள் ஒன்னும்
விடலை பருவ பெண் இல்லையே, தனது அலுவலக தோழிகள் தங்களது முதலிரவு
அனுபவங்களை பகிரும் போது, இதை பற்றிய சிந்தனை வந்தது உண்டு. மனதால்
இணையாமல் வெறும் அங்கங்கள் மட்டும் இணைவதில் அவளுக்கு விருப்பம் இல்லை,
காதலுடன் கூடிய காமத்திலே விருப்பம். தன் கண் பார்த்து தன் தேவை அறிந்து
முன்னேறுப்பனை தன் கணவனாக வரவேண்டும் என்று கடவுளிடம்
வேண்டியிருக்கிறாள் (அவர் அந்த நேரத்தில் உலகை காக்கும் வேலையில் இதை
கவனிக்க வில்லை போலும்). ஒருவேளை அவனது அறையில் தூங்க நேர்ந்திருந்தால்
இப்படி சுதந்திரமாக யோசிக்கும் உரிமையும் பறி போயிருக்கும். பிறந்த வீட்டின்
எண்ணம் வர, அப்போது தான் தனது போனை தேடினாள், கைப்பையினுள் இருந்து
எடுத்து பார்க்க, அது எப்போவோ சார்ஜ் இல்லாமல் அதன் உயிரை விட்டிருந்தது.
அதை சார்ஜ் போட்டு விட்டு மீண்டும் படுக்கையை சென்றடைந்தாள். யோசித்து
கொண்டே உறங்கியும் போனாள். அதிகாலையில் எழுந்து கிளம்பியது, பசி,
அலைச்சல், எதிர்காலம் பற்றிய பயம் எல்லாம் சேர்ந்து அவளை ஆழ்ந்த நித்திரைக்கு
இழுத்து சென்றது.
மதிய வேலை கடந்து நடுஜாமத்தில் எழுந்தாள், அறை இருளில் மூழ்கி இருந்தது.
“என்ன கொஞ்சம் கவனியேன்” என்று அவளின் வயிறு கத்தியது. மானம் கெட்ட வயிறு
என்று மனதில் திட்டி கொண்டே… கிட்சன் நோக்கி சென்றாள்.
அங்கு சுட்டு வைத்திருந்த சப்பாத்தி மற்றும் குருமாவை பார்த்தாள். தனக்காக எடுத்து
வைத்தது போல் தெரிந்தது. யாரா இருக்கும் என்று யோசித்து கொண்டே எடுத்து
வைத்து சாப்பிட்டு விளக்கை அணைக்க போகும் நேரம். தள்ளாடி கொண்டே உள்ளே
நுழைந்தான் அருண். அவனை பார்த்தவள் “இவருக்கு குடி பழக்கம் வேற இருக்கா”
என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.
மாடியேற சென்றவனை பார்த்து “சாப்பாடு எடுத்து வைக்கவா” என்றாள்.
அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு, பால் எடுத்துட்டு ரூமுக்கு வா! என்று கூறி விட்டு
சென்றான்.
அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து, அவன் அறைக்குள் போகும் வரை அவனையே
பார்த்து கொண்டிருந்தாள். ரூமுக்கா! எதுவும் பண்ணிடுவாரோ!.. ஐயோ
!.. இப்போ தான் ஒரு நல்லது நடந்ததுனு நினைச்சேன் இப்போ அதுவும் போச்சா! என்று
இரு கைகளையும் உதறிக்கொண்டு, புலம்பியபடி, ப்ரிஜில் இருக்கும் பாலை காய்ச்சி
எடுத்து கொண்டு அவன் அறை நோக்கி அடி மேல், அடி வைத்து நடந்து சென்றாள்.
உள்ளுக்குள் பய பந்து உருண்டோடியது.
அறை கதவை தட்டினாள். எஸ் கம் இன் ! என்றான்.
கதவை திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தாள். கட்டிலில் அமர்ந்து இருந்தான்.
கண்கள் சிவந்து இருந்தது, உள்ளே வரும் அவளையே பார்வையால் தொடர்ந்து
கொண்டிருந்தான் . பின்பக்க டேபிளை பார்வையால் சுட்டி கட்டி பால்-அ டேபிள் ல
வை என்றான். பாலை டம்ளரை வைத்து விட்டு திரும்ப எத்தனிக்க, மெல்ல அவள்
கழுத்தில் ஏதோ ஊறுவது போல் இருக்க, சட்டென்று திரும்பி பார்த்தாள். அவன் தான்
நின்றிருந்தான். மிக நெருக்கத்தில், அவள் விலகி செல்ல பாக்க, அவள் இடையை
அழுத்தி பிடித்து நிறுத்தினான். “இன்னைக்கு நமக்கு என்ன நடக்கணும்” என்றான்.
ப …ர் …பர்ஸ்ட் நைட் ….என்று ஒரு வழியாக சொல்லி முடித்தாள்.
போ.. போய்.. படு என்றான், படுக்கையை கண்களால் காட்டிய படி.
அவள் தயங்கி நிற்க, அவள் சேலையை வெடுக்கென்று உருவ, ப்ளீஸ்! இன்னைக்கு
வேணாம்.. நா இதுக்கு இன்னும் மனதளவில் ரெடி ஆகல .. சோ ப்ளீஸ் ! இப்போ
வேணாம்… என்று சொல்லி கொண்டே இருகைகளாலும் சேலையை பிடித்து
கொண்டே பின்னால் நகர… கட்டிலிலிருந்து “டொம் ” என்று கீழே விழுந்தாள். அதிர்ந்து
சேலையை பிடித்துக்கொண்டு கண் திறந்து பார்க்க..அப்போது தான் அது கனவு என்று
புரிந்தது.
கனவிற்கே வேர்த்து, விறுவிறுத்து, நா வறண்டு போனது. இதயம் வேகமாக துடித்து,
படபடப்பை அதிகரித்தது. “ச்சி..என்ன இப்படியெல்லாம் கனவு வருது” என்று
நினைத்து கொண்டு தன்னை படபடப்பில் இருந்து வெளிய கொண்டு வர பெரும் பாடு
பட்டு போனாள்.
தாகம் அதிகரிக்க, தண்ணீர் குடிக்க கிட்சன் சென்றாள். டிபன் ஒரு தட்டில் மூடி வைக்க
பட்டிருந்தது. வேலையை முடித்து, விளக்கை அணைக்கும் போது கதவு திறக்கும் ஓசை
கேக்க, வெளிய எட்டி பாக்க, அருண் தான் தள்ளாடிய படி நடந்து வந்தான்.
சட்டையெல்லாம் கசங்கி, தலை கலைந்து, அதை பார்த்து ஐயோ! என்ன கனவுல வந்த
மாறியே நடக்குது என்று யோசித்து கொண்டு நின்றிருந்தாள்.
கிட்சன் வாயிலில் கற்சிலை போல் நின்றிந்தவளை கடந்து போனவன், என்ன
நினைத்தானோ, பால் எடுத்துட்டு ரூமுக்கு வா! என்று கூறிவிட்டு தள்ளாடியபடி
படியேறி தனது அறையை அடைந்தான்.
ஷாக் அடித்தது போல் பேய் முழி முழித்து கொண்டு அதிர்ந்து நின்றாள்.
கனவு பலித்தது…