1. தருணம்

யூ எஸ் மாகாணம் 

நள்ளிரவு நேரம், பப்பில் அனைவரும் குடித்துக் கொண்டு, டிஜே பாடல்களை ஒளிபரப்ப, ஆண் பெண் என்று பேதம் இன்றி,  அதற்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தனர்..

ஒரு ஓரத்தில் ஓ என்ற சத்தத்துடன் ஒரு கும்பல் நடனம் ஆடிக் கொண்டிருந்தது..

 அங்குள்ள போத்தலை எடுத்தவள் அதனை குலுக்கி கைகளை மேலே உயர்த்த, அதிலிருந்து மது பீறிக் கொண்டு வெளியேறியது. அதில் அனைவரும் நனைந்திட மீண்டும் ஒரு கூச்சல்..

அனைவரும் மதுவை எடுத்து பருக, அவள் மட்டும் நடனத்தை தொடர்ந்தள்..

“ஏய் அனு..! நாங்க எல்லாம் குடிக்கிறோம் நீ மட்டும் அமைதியா நிக்கிற. கமான் யா..” என்றான் ஒருவன் ஆங்கிலத்தில் 

“ நோ டியர் எனக்கு குடிக்கிற பழக்கம் இல்லை..”

“அப்புறம் எதுக்கு எங்களை பப்புக்கு கூட்டிட்டு வந்த..” என்றான் இன்னொருவன் 

“இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் ஆசைப்பட்டது நிறைவேறிருச்சு. அதனால உங்களுக்கு பார்ட்டி கொடுக்கணும்னு நினைச்சேன். அதான் கூட்டிட்டு வந்தேன்..” என்றாள் 

“என்ன ஆசைப்பட்ட? என்ன நிறைவேறிடுச்சு? எதுக்கு இந்த பார்ட்டி?” என்று ஒவ்வொருவராக தங்களின் கேள்விகளை அடுக்க 

“நான் டாக்டராகிட்டேன். அதுக்கு தான் இந்த பார்ட்டி..” என்றாள் குதுகளித்தபடி 

அவளின் நண்பர்களோ “அப்ப நாங்க எல்லாம்..” என்றனர் 

அனு அவர்களை முறைக்க,                        “ நாங்களும் டாக்டர்ஸ் தான் மா. ஏதோ நீ மட்டும் எக்ஸாம் முடிச்சு டாக்டர் ஆன மாதிரி ரொம்ப தான் பெருமைப்பட்டுக்குற..” என்றனர் 

அனு அதற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாக தன் நடனத்தை தொடர,

“ சரி குடிக்கலன்னா அப்புறம் எதுக்கு பப்புக்கு வந்த..” என்றான் ஒருவன் 

“அட நம்ம சந்தோஷமா இருக்கிறப்போ இல்ல துக்கமா இருக்குறப்ப இந்த மாதிரி பாட்டு கேட்டு நடனமாடுனா நம்ம எனர்ஜியா, பிரஷ்ஷா ஃபீல் பண்ணுவோமா. அதுக்குதான்..” என்றாள் 

“ஆனால், இந்த டிஜே பாரு மொக்க சாங் போடுறான். எனக்கு புடிக்கல. வைப்புனா என்னென்னு அவனுக்கு காமிச்சுட்டு வரேன். ஒரு நிமிஷம் இருங்க ..”என்றவாறு டிஜே இடம் சென்றாள் நம் கதையின் நாயகி அனு பிரபா

“ஹாய் பாஸ் இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் சொல்ற பாட்ட கொஞ்சம் ஒளிபரப்பீங்களா..” என்று ஆங்கிலத்தில் கேட்க

 டிஜே அதற்கு மறுப்பு தெரிவித்தான்..

“ ப்ளீஸ்.. ப்ளீஸ் பாஸ்..!”  என்று கெஞ்சி கொஞ்சி அவனை சம்மதிக்க வைத்திருந்தாள்..

 சில பல பாடல்களை அவனிடம் கொடுத்தவள். அதை ஒளிபரப்பக் கூறி தன் நண்பர்கள் கூட்டத்தில் ஐக்கியமானாள்..

பாடல்களை ஒளிபரப்ப அதன் பின்பு தான் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைத்து, பாட்டிற்கு ஏற்ப நடனமாட ஆரம்பித்தனர்..

 அனைவரும் நடனம் ஆடுவதை பார்த்த அனு “வைபுன்னா இது வைப். அதுக்கெல்லாம் நம்ம தமிழ் பாட்டு தான் சரி. பாரு எப்படி ஆடுறாங்கன்னு..” என்றவாறு பாடல்களை கேட்டு தன் நண்பர்களோடு சேர்ந்து இவளும் நடனம் ஆடிக் கொண்டிருந்தாள்

 மூச்சு வாங்க நடனமாடியவளை பார்த்தவர்கள் “ரொம்ப சந்தோஷமா இருக்க போலையே. ரொம்ப என்ஜாய் பண்ற..” என்று கேட்க 

“ஆமா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..” என்றவாறு தன் நடனத்தை தொடர்ந்தாள்..

“சரி ஆசைப்பட்ட மாதிரி டாக்டர் படிப்பு முடிஞ்சது. அதுக்கப்புறம் என்ன..” என்று ஒருவன் கேட்க 

“இன்னும் மூணு வருஷம் கோர்ஸ் ஒன்னு இருக்கு. அதை படிச்சுட்டா டாக்டர் அனு பிரபா அப்படின்னு பலகை வச்சு, கிளினிக் ஒன்னு ஆரம்பிச்சு, இங்கேயே டாக்டரா செட்டில் ஆகிடுவேன்..” என்றாள் 

 “அப்போ இந்த மேரேஜ்..” என்று ஒருவன் கேட்க

“ இப்போதைக்கு அந்த எண்ணம் எனக்கு இல்லை. மே பி ஃபியூச்சர்ல வரலாம்..”

“ அப்போ ஃபியூச்சர்ல நான் ட்ரை பண்ணவா..” என்றவாறு அனுவை ஒருவன் நெருங்கி வர 

“ஹலோ யூ ஆர் ஜஸ்ட் மை ஃபிரண்ட். டோன்ட் க்ராஸ் தி லிமிட். ஓகே..!” என்றாள் கோபமாக 

“ஜஸ்ட் ரிலாக்ஸ் அனு. இவ்வளவு சீரியஸா எல்லாம் எடுத்துக்காத.. ஐ அம் ஜஸ்ட் கிட்டிங்..” என்றவாறு பின்னால் நகர்ந்து சென்றான் 

பி்ன் அனைவரும் குடித்துவிட்டு நடனமாடி கலைத்து விட, விடியற்காலை மூன்று அரை மணி தள்ளாடியபடியே அனைவரும் பப்பில் இருந்து வெளியேற, அனுவும் அவர்கள் நண்பர்களோடு சேர்ந்து வெளியேறினாள்..

அனு வெளியேறும் முன் டிஜே அனு அருகில் வர அனு புரியாமல் விழித்தாள்..

“ நீங்க கொடுத்த  பாடல்கள் எல்லாமே நல்லா இருந்தது. எனக்கும் கொஞ்சம் தரீங்களா. நானும் அப்பப்ப இந்த பாடல்கள் எல்லாத்தையும் ஒளிபரப்பி பேர் வாங்கிக்கிறேன்..” என்றான்.

 சிரித்தபடிய “கண்டிப்பா பாஸ்..” என்றவாறு அவனுக்காக சில பல தமிழ் பாடல்களை பதிவிறக்கம் செய்து அவனுக்கு ஏற்றி விட்டால்.. பின்பு நன்றி கூறி விடை பெற்று வெளியேறினாள்..

தள்ளாடிய நண்பர்களை தன் காரில் ஏற்றியவள், பப்பை விட்டு வெளியேற, “இப்ப தெரியுதா  நான் ஏன் குடிக்கலன்னு..” என்று திரும்பிப் தன் நண்பர்களை பார்த்து கேட்க

 “ அப்போ எங்களை பத்திரமா கூட்டிட்டு போறதுக்காக தான் நீ குடிக்கலையா. அவ்வளோ நல்லவ எல்லாம் இல்லையே நீ.”என்றனர்

 “அதானே ஒரு நல்லது பண்ணிட கூடாது. உங்களுக்காக எல்லாம் குடிக்காம இல்ல. எனக்கே குடிக்க புடிக்கல. அதோட வாசமே புடிக்கல. அதான் குடிக்கிறது இல்ல..” என்றவாறு அவரவர் விடுதிகளில் நண்பர்களை இறக்கி விட்டுப் பார்க்க அவளது தோழி கீர்த்தி மட்டுமே இருந்தாள்..

“அவனுங்க தான் இன்னைக்கு தான் கடைசி நாள் என்னும் ரீதியில் மொடா முழுங்கி மாதிரி குடிக்கிறானுங்க என்றால்,  இவளும் குடிச்சு இருக்கா பாரு பிராந்து..” என்று திட்ட 

“கேட்டுச்சு கேட்டுச்சு நீ பிராந்துன்னு சொன்னது கேட்டுச்சு..” என்று குரல் வர அனு காரை சடன் ப்ரேக் அடித்து நிப்பாட்டி கீர்த்தியை பார்த்தாள்..

“ஹே..! நீ போதைல இல்லையா..” என்று கேட்க 

“ அடச்சீ..!  நான் எப்ப டி குடிச்சேன்.. உன்ன மாதிரி தானடி எனக்கும் குடிக்கிறது  பிடிக்காது..” என்றாள் 

 ஆம் இரு தோழிகளும் பப்புக்கு செல்வது வழக்கம்தான்..

 ஆனால் ஒருபோதும் மதுவை தொட்டது கூட இல்லை..

 இன்று மட்டும் தான் அதிசயமாக அனு கையில் போத்தலை தொட்டு இருக்கிறாள். மற்ற நாளில் அது கூட இருக்காது..

அனு கீர்த்தி மட்டுமே இந்தியாவை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெளிநாட்டவர்கள்..

 அனு தமிழ்நாடு, கீர்த்தி கேரளாவை சேர்ந்தவள்..

சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு ஒருவனுக்கு உயிர் மூச்சு என்று கருதுபவர்கள்..

 இவர்கள் குடியை நாடியதில்லை. தங்கள் ஆடைகளில் கவனம் செலுத்துபவர்கள். அதோடு நண்பர்கள் கூட்டத்திலும் ஒரு எல்லை கோடுகள் எப்போதும் உண்டு..

“நீ தள்ளாடியபடியே வந்தியா கண்டிப்பா குடிச்சி இருப்பேன்னு நான் நினைச்சேன்..” என்றாள்  அனு 

“அடி போடி உன்னை விட்டு விடுவானுங்கடி புடிக்கலைன்னு சொல்றேன்னு. ஆனா, என்ன கண்டிப்பா விடமாட்டானுங்க. கைகால புடிச்சாவது வாயில ஊத்தி விடுவாங்க. அதான்,  குடிச்ச மாதிரி கொஞ்சம் ஆக்டிங் கொடுத்தேன்..” என்றாள் 

அதன் பின்பு தான் அனு காரை கிளம்பினாள்.

 “ஆமா என்ன கேட்டான். அவன் ப்ரொபோஸ் பண்ண மாதிரி இருந்தது..” என்று கீர்த்தி கேட்க 

“கிட்டத்தட்ட அப்படித்தான் வச்சுக்கோயேன். நான் வேணாம்னு சொல்லிட்டேன்..”

“ஏன்?”

“இப்போ கல்யாணம் பண்ற ஐடியா எனக்கு இல்ல. அப்படி ஒரு வேளை அதிசயமா என் வாழ்க்கையில் அப்படி ஒன்று நடந்தா கண்டிப்பா தமிழ்நாட்டுக்காரன் தான் கட்டிக்குவேன்..” என்றாள்

“இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான் ஏகப்பட்ட பேர் இருக்காங்களே..” என்று கீர்த்தி கூற 

“சே சே..! வேலைக்காக வந்தவங்களோ இல்ல இங்கேயே தமிழ்நாட்டுக்காரங்க செட்டில் ஆனவர்களோ இருக்க கூடாது. பக்கா தமிழ் நாட்டுக்காரனாவே இருக்கணும்..”

“ அதுக்கு நீ தமிழ்நாட்டுக்குல போகணும்..” என்று கீர்த்தி கூற 

“நோ வே..! நான் எல்லாம் தமிழ்நாட்டுக்கு போகிறதா. சான்ஸ் இல்ல..” என்று கூறி வாயை மூடவில்லை அவளின் அன்னையிடமிருந்து கால் வந்தது..

“யாரு டி போன்ல..” என்று கீர்த்தி கேட்டாள்

ஏனென்றால், ஃபோனையே வெரித்து பார்த்துக் கொண்டிருந்தவள் அட்டென்ட் செய்யவில்லை..

 அதுவோ ரெண்டு மூணு ரிங்கு போய் கட் ஆனது. அதனைப் பார்த்தவள் கேட்க

“ எங்க அம்மாடி..”என்று பதறியவாறு கூறினாள்

“நீயேன்?  உங்க அம்மா எப்ப போன் பண்ணாலும் பதறுற..” என்று கேட்க 

“அது உனக்கு சொன்னா புரியாது விடு..” என்றவாறு காரை ஓரம் கட்டியவள் ஃபோனை அட்டென்ட் செய்து பேசினாள் 

“ சொல்லுங்கம்மா.” என்று கேட்க எதிர்ப்புறத்தில் என்ன கூறப்பட்டதோ, 

“ அம்மா எ..என்ன ? எப்போ ?  எப்படி ஆச்சு?  ஏன்மா இதை முன்னாடியே சொல்லல?” என்றவாறு பதறினாள்.

 கீர்த்திக்கும் பதறியது இவளின் பேச்சை கேட்டு..

“இதோ உடனே.. உடனே கிளம்பி வரேன். நான் வந்துருவேன். நீங்க பதற்ற படாதீங்க தைரியமா இருங்க..” என்றவாறு போனை வைத்தவள் பதற்றத்துடனே அமர்ந்திருந்தாள்..

 அனுவுக்கு கைகால் எல்லாம் நடுங்கியது. வியர்த்து கொட்டியது..

 அதனை பார்த்தவள் தண்ணீர் பாட்டிலை எடுத்து அனுவிடம் நீட்டி “என்ன ஆச்சு?  ஏன் டி இப்படி உட்கார்ந்து இருக்க?” என்று கீர்த்தி  கேட்க

“அப்பாவுக்கு முடியலையாம் டி. ஐ சி யூ வில் அட்மிட் பண்ணி இருக்காங்களாம். உடனே அம்மா கிளம்பி வர சொல்றாங்க..” என்றாள் 

“என்ன ஆச்சு திடீர்னு. உடம்பு சரியில்லாமல் ஏதும்  இருந்தாரா..” என்று கேட்க 

“தெரியலடி. எனக்குமே பயமா தான் இருக்கு. எங்க அப்பா தான் எப்பவும் பேசுவாரு. ரெண்டு நாளா அவரு பேசாம இருக்கும் போது, எனக்கு ஒரு மாதிரி தான் ஃபீல் ஆச்சு. சரி எக்ஸாம்லாம் முடிச்சிட்டு பேசிக்கலாம்னு நானும் விட்டுட்டேன். கடைசில என்னென்னமோ சொல்லி பயமுறுத்துறாங்க. நான் உடனே கிளம்பனும்..” என்றவாறு காரைக் கிளப்பினாள்..

“ ஒன்னும் இல்ல. அப்பாக்கு எதுவும் இருக்காது. நீ பயப்படாம போ..” என்றவாறு  கீர்த்தி  ஆறுதல் கூறினாள்.

  வேகமாக காரை தன் இருப்பிடத்தில் நிறுத்தியவள், “நான் உடனே கிளம்புறேன். சரியா..!  நீ பத்திரமா இரு..” என்றவாறு

 தன் பேக்கினில் துணி அடுக்கி வைத்து விட்டு, பிளைட் டிக்கெட் புக் செய்தவள் கிளம்பி இருந்தாள் இந்தியாவிற்கு…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top