அசுரன் 6
நறுமுகையே நறுமுகையே,
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து,
நீயொரு திருமொழி சொல்லாய்….
அற்றைத் திங்கள் அந்நிலவில்,
நெற்றிதரல நீர்வடிய,
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா….
என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்து பரதம் அடிக்கொண்டிருந்தாள் மலர். போன்
விடாமல் ஒலித்து, தொந்தரவு செய்யவே… பாடலை அணைத்து விட்டு துப்பட்டாவை
சரி செய்து கொண்டே வந்து… போன்னை எடுத்து காதில் வைத்தாள்…
ஹலோ…சந்திரன் சார்.. வீடா,
ஆமா சார் நா அவரு பொண்ணு தான் பேசுறேன், நீங்க…
பாப்பா, உங்க அப்பாக்கு ஆபீஸ் பக்கத்துல ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு… பக்கத்துல
பி.வி.ஹாஸ்பிட்டல் கூட்டு போயிருக்காங்க.. சீக்கிரம் வாங்க…
அதிர்ச்சியில் உறைந்து நின்றவள். போனை வைத்து விட்டு, அம்ம்ம்மா….. என்று
அலறினாள். அவள் போட்ட சத்தத்தில் அலறி அடித்து ஓடிவந்த வாசுகி. பலமாக மூச்சு
திணற நிற்பவளை கண்டு, என்னம்மா…. என்ன ஆச்சு…. என்று பதறிய படி கேக்க….
அப்பாக்கு..ஆக்சிடெண்ட்..ஆபீஸ் பக்கத்துல..பி.வி.ஹாஸ்பிட்டல் கூட்டு போயிருக்கா
ங்க…
குடும்பமே.. அலறி அடித்து கொண்டு ஹாஸ்பிட்டல் ஓடியது..
அங்கு தலையில் பெரும் காயத்துடன் கட்டு போட்டு, செயற்கை சுவாசத்துடன், கண்
மூடி படுக்கையில் கிடந்தார் சந்திரன். அவரை பார்த்த மலர் மனதால் உடைந்து
போனாள். தன் அப்பாவை இப்படி பார்ப்பாள், என்று அவள் தன் கனவிலும்
நினைக்கவில்லை.
அன்று தொடங்கியது அவர்களின் மருத்துவ செலவு. சேர்த்து வைத்திருந்த, நகைகள்,
சேமிப்பு இருப்பு அனைத்தும், சந்திரனின் உயிரை விட பெரிதாய் தெரியவில்லை.
அனைத்தும் கரைந்தது.
கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டிருந்த மலர், பண நெருக்கடியால், படிப்பை
பாதியில் விட்டு, சூப்பர்மார்கெட் பில்லிங் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். எப்படி
பட்ட சிரமத்திலும் கவியின் படிப்பை மட்டும் பாதியில் நிறுத்த விடவில்லை மலர்.
மேலும் குடும்பத்திற்கு கஷ்டம் குடுக்க விரும்பாமல்… சந்திரன் இவ்வுலகில் இருந்து
விடைபெற்றார். ஊரே, ஒன்று கூடி அழுது தீர்த்தாலும், மலரால் ஒருதுளி கண்ணீர்
விடமுடியவில்லை.
நெஞ்சு வெடித்து விடுவது போல் அப்டி ஒரு அழுத்தம். வேக,வேகமாய், மூச்சு
வாங்கினாள். அவளை பற்றி தெரியாதவர்கள், “பெத்தவர் இறந்ததுக்கு ஒரு சொட்டு
கண்ணீர் விடலையே அந்த பொண்ணு” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
இத்தனை நாள், தனக்கிருப்பது குறையாக தெரியவில்லை, ஆனால் இன்று அது தான்
தன் வாழ்வின் சாபமாக, தோன்றியது. அவளால் என்ன செய்ய முடியும். சொல்ல
முடியாத துயரங்களையெல்லாம் கண்ணீர் விட்டு கரைக்கலாம். என்னதான்
வாய்விட்டு கத்தி, கதறினாலும், கண்ணீர் வராமல் அந்த அழுகை முழுமை பெறாதே!.
அதிக மன அழுத்தத்தினால் தலை வின், வின் என்று வலிக்க, தன் கீழுதட்டை கடித்து,
அதை குறைக்க முயன்றாள். வாசுகியும், கவியும் அழுது ஓய்ந்து துவண்டிருந்தனர்.
இப்படியே உடைந்து கிடந்தால், அடுத்தடுத்த காரியங்களை யார் பார்ப்பது. தன்னை
தேற்றி கொண்டு, மலரே அனைத்து காரியங்களையும் முன் நின்று செய்ய
வேண்டியதாய் போனது. சந்திரன் செய்த நன்வினைகளின் பலனாய், அவரின்
அலுவலக நண்பர்கள், சந்திரனின் உடலை நன்னடக்கம் பண்ணும் வரை கூட இருந்து
உதவினர்.
குடும்பத்தை தாங்கும் தூணாகி போனாள், மலர். அவளுடைய வருமானத்தில்
தங்கைக்கு பீஸ் கட்டவும், வாழ்க்கை ஓட்டவும் கொஞ்சம் சிரமமே. வாசுகி அருகில்
இருப்பவர்களுக்கு துணி தைத்து குடுத்து தன் பங்கிற்கு உதவினார். சந்திரன் வாழ்ந்த
காலத்தில் தன் நிலத்தில், சிறியதாக ஒரு வீடு கட்டி இருந்ததால் வாடகை
பிரச்சனையிலிருந்து தப்பித்தனர்.
சில மாதங்களில், குடும்பம் சீரான நிலைக்கு வந்திருந்தது.
“கவியும் படிச்சு முடிச்சு வேலைக்கு போனா கடனை சீக்கிரம் அடைச்சிடலாம்”…
அப்புறம் கொஞ்சம் காசு சேர்த்து, “உன்ன ஒருத்தன் கிட்ட புடிச்சி குடுத்திட்டா”..
என்னோட பாதி பாரம் கொறஞ்சிடும், அப்புறம் இரண்டு வருசத்துல, கவிக்கு பாக்க
ஆரம்பிக்கலாம்….. இப்டி எல்லா சுமையும் என் தலைல விட்டுட்டு, தனியா தவிக்க
விட்டுட்டு போய்ட்டாரே, என்று வாசுகி வாய் ஓயாமல்.. புலம்பி கொண்டிருப்பார்.
வேலை, வீடு என போய்க்கொண்டிருந்தது வாழ்கை. அப்போதுதான் தான் புது
பிரச்சனையை இழுத்து கொண்டு வந்தாள் கவி.
சூப்பர்மார்கெட்டில் வேலையில் இருந்தவளை போனை போட்டு வீட்டுக்கு வர
சொன்னார் வாசுகி. வீட்டிற்குள் நுழையும் போதே அழுது கொண்டு
இருந்த வாசுகியை கண்டு. என்னமா ஏன் அழுதுட்டு இருக்கீங்க..! என்று கேக்க,
காலையில் நடந்த விஷயத்தை விவரித்தார்.
“உங்க வீட்டு பொண்ணு, எங்க பையன் கூட சேர்ந்து சுத்துது.. பாத்து கண்டிச்சு
வைங்க, சந்திரன் முகத்துக்காக பாக்குறோம்… இல்ல வேற மாறி
ஆகியிருக்கும், திரும்ப நாங்க வந்து சொல்ற மாறி வைக்காதீங்க”, என்று மிரட்டி விட்டு
சென்றதை கூறினார்.
மலர் நொந்து போனாள்… இப்போ நம்ம இருக்குற நிலைமைல… இதெல்லாம் தேவை
தானா.. வரட்டும் பேசிக்கலாம்…என்றிருந்தாள்.
மாலை எப்போதும் போல் கல்லூரி முடிந்து வீடு திரும்பினாள், கவி.
அவள் நுழைந்த உடன், வாம்மா இது தான் காலேஜ் முடியிற நேரமா? என்றார் வாசுகி.
அம்மா..! ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு காலைல சொல்லிட்டு தானே போனேன்.
என்றாள் கவி.
நீ ஸ்பெஷல் கிளாஸ் போன லட்சணத்தை அந்த பையன் வீட்லருந்து வந்து
சொல்லிட்டு போனாங்க டி.. என்று கூறி முதுகில் இரண்டு அடி அடித்தார். அவரை
விலக்கிவிட்டு மலர், “எடுத்து சொன்னா புரிஞ்சுக்குவா ம்மா” “கவி படிக்கிற வயசுல
அத மட்டும் கவனி… இப்போ நம்ம குடும்பத்தோட நிலைமை தெரிஞ்சுதான்
இதெல்லாம் பண்றயா” அவங்க வீட்டு ஆளுங்க அம்மாவை வந்து மெரட்டிட்டு
போயிருக்காங்க டி… என்றாள் மலர்.
கவிக்கு விஷயம் புரிந்து போனது. அம்மா, நானும் அந்த பையனும் லவ் பண்றோம்
ம்மா.. என்றாள்.
“கவி மொத படிச்சு முடி அப்புறம், காதல், கல்யாணத்தபத்தி யோசிக்கலாம்” என்றாள்
மலர்.
“இல்லக்கா நல்ல பையன் என்ன நல்லா பாத்துப்பான், என் மேல உயிரையே
வைச்சிருக்கான், படிச்சி முடிஞ்சு, வேலைக்கு போன பின்னாடி கல்யாணம்
பண்ணிக்கலாம் னு தான் சொல்லிருக்கான் கா” என்றாள் கவி.
தங்கையின் தொலைநோக்கு பார்வையை கண்டு மெச்சி கொண்டாள்.
கையிலிருக்கும் பட்டை தீட்டாத வைரத்தை விட்டு (கல்வி), தூரத்தில் தெரியும் மின்
விளக்கு மேல் ஆசை கொண்டு கனவு காண்பதை நினைத்து மனதுக்குள், சிரித்து,
கொண்டாள்.
வேணாம் கவி..! அந்த பையன் கூட கொண்ட பழக்கத்தை இதோட நிறுத்திகிட்டு,
போய் படிக்கிற வேலையை பாரு, என்றாள்.
அவளும் சரி என்று தலை அட்ட, இதை பற்றி மேலும் பேசி பெரிசாக்க வேணாம்
என்றெண்ணி அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.
அன்றிலிருந்து… கவி, கல்லூரி முடிந்து சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வந்தாள். தன்
வேலைகளை தானே செய்தாள். அமைதியாக வலம் வந்தாள். வாசுகியும் தன் மகள்
மன மாற்றத்தை எண்ணி மகிழ்ச்சியுற்றார். ஒரு வாரம், ஓடியிருக்கும்….
அடுத்த இடியை இறக்கினாள் கவி, காவல் நிலையத்தில் இருந்து போன் வந்தது.
சந்திரன்-வாசுகி வீடுங்களா..?
ஆமாங்க சார்.. நான் வாசுகி தான் பேசுறேன், நீங்க ?
நான் A2 போலீஸ் ஸ்டேஷன்லயிருந்து ஏட்டு பேசுறேன் மா..! கொஞ்சம் A2 ஸ்டேஷன்
வரைக்கும் வந்துட்டு போங்க..! உங்க பொண்ணு கவிபிரியா இங்க தான்
இருக்காங்க… என்று சொல்லி போனை வைத்து விட்டார்.
அரக்கபறக்க ஒரு ஆட்டோவை புடித்து கொண்டு, சூப்பர்மார்கெட்டில் இருந்த
மலரையும் ஏற்றி கொண்டு, போலீஸ் ஸ்டேஷன் வந்தடைந்தனர்.
அங்கு கவி மாலையும், கழுத்துமாக நின்று கொண்டிருந்தாள். கழுத்தில் புது தாலி
தொங்கி கொண்டிருந்தது. பக்கத்தில் ஒருவன் உயரமாய் மாலையுடன்
நின்றுகொண்டிருந்தான். அவனை தங்களது தெருவில் அடிக்கடி பார்த்த ஞாபகம்
மலருக்கு. பையனின் குடும்பம் முன்னரே வந்து பிரச்சனை செய்து ஓய்ந்து ஒரு
ஓரமாய் நின்றிந்தனர். பையனின் தாய் பக்கத்தில் இருப்பவர்களிடம் புலம்பி
கொண்டிருந்தார். இவர்கள் உள்ள நுழைந்ததும் அனைவரது கவனமும் இவர்கள்
பக்கம் திரும்பியது.
வாங்கம்மா..! உங்க பொண்ணு இங்க பாதுகாப்பு கேட்டு வந்துருக்காங்க. அவங்க
ரெண்டு பேரும் சட்டப்படி மேஜர்… இப்போ அவங்களுக்கு சட்ட பூர்வமா கல்யாணம்
வேற ஆகிடுச்சு… அதனால ரெண்டு குடும்பமும் அவங்கள ஏத்துகிட்டு வாழ வைக்க
பாருங்க… மீறி பிரச்சனை பண்னீங்கனா… நாங்க உங்க மேல சட்டப்படி நடவடிக்கை
எடுப்போம்… எப்படி வசதின்னு ரெண்டு குடும்பமும் கலந்து, பேசி சொல்லுங்க.. என்று
வழக்கமாக கூற வேண்டியதை கூறி முடித்து விட்டார்.
இரு வீட்டினரும் பேசி, கடைசியில் மணமக்கள், இப்போது பையன் வீட்டினருடன்
செல்வதாகவும். அடுத்த வாரத்தில் ஒரு ரிசப்ஷன் வைக்கலாம் எனவும், முடிவு
செய்யப்பட்டது. அவர்களுடன் கிளம்பும் வரையில், கவி வாய்திறக்க வில்லை,
தலைகவிழ்ந்த படியே, அவர்களுடன் காரில் ஏறினார்.
“அக்கா நீ இருக்கும் போது அவளுக்கு என்ன அவசரம். சின்ன புள்ளன்னு நினைச்ச,
எப்படி அசிங்க படுத்திட்டாளே… அவரு மட்டும் உயிரோட இருந்திருந்தா
எப்படியெல்லாம் நடக்க விட்ருப்பாரா..!” என்று வீட்டிற்கு வந்து வாசுகி அழுது, புலம்பி
ஓய்ந்தார்.
நடந்தது நடந்து போச்சு.. இனி நடக்க வேண்டியதை பாப்போம் என்றாள் மலர்.
அவளுக்கு முன் கவிக்கு திருமணம் நடந்தது மலருக்கு கவலை இல்லை, ஆனால்
இவ்வளவு சிறிய வயதில் திருமணம் செய்து , குடும்ப வாழ்க்கையை எப்படி
கையாள்வாள்? என்பதே பயம்.
இப்போது தலை மேல் அடுத்த பிரச்சனை பண பிரச்சனை, ரிசப்ஷன் மற்றும் மறு
வீட்டு செலவுகள், பொண்ணுக்கு போக வேண்டிய நகை மேலும் இதர செலவுகளை
பார்ப்பதற்கு கைவசம் பணம் இல்லை இதற்கெல்லாம் வெளியில் தான் கடன் வாங்க
வேண்டும் ஏற்கனவே அப்பாவின் மருத்துவ செலவுக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட
வேண்டியது உள்ளது. இதற்கு மேலும் கடனை இழுத்துக் கொண்டால் என்ன செய்வது,
எப்படி வாழ்வது என்ற குழப்பங்கள் மனதிற்குள் வந்து குடியேறின.
வேற என்ன செய்ய முடியும் இந்த செலவுகளை எப்படியும் செய்து தான் ஆக
வேண்டும்
செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கினால் மலர்.
பெரிதான பின்புலங்கள் இல்லாத அவர்களுக்கு யாரும் கடன் தர முன்வரவில்லை
வேறு வழி இல்லாமல் தங்கள் வீட்டை அடமானம் வைத்து அதன் பெயரில் கடன்
பெற்று அனைத்து செலவுகளையும் சமாளித்தால் மலர்
பெற்றவளும், கூட பிறந்தவளும் பணத்திற்கு என்ன செய்வார்கள்? என்ற எந்த
கவலையும் இன்றி தனக்கு வேண்டியதை வாய் விட்டு கேட்டு வாங்கிக் கொண்டால்
கவி.
கவி திருமணமாகி போன இடத்தில் முதலில் அனைவரும் பாராமுகமாய் இருந்தாலும்,
சில மாதங்களிலேயே ஒரே பையன் என்பதால் வேறு வழி இன்றி மணமக்களை
ஏற்றுக்கொண்டு சமாதானமாய் போயினர்.
அந்த நேரத்தில் மலருக்கு, ஒரு வரன் வர அதை தன் குடும்பத்தின் நிலை கருதி
வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.
கடன் தொல்லை கழுத்தை நெரித்தாலும் ஒரு பக்கம் கவியின் வாழ்வு நன்றாக
அமைந்ததில் மலர் மற்றும் வாசுகிக்கு பெரும் மகிழ்ச்சியே… வாசுகிக்கு பாதி பாரம்
குறைந்து போனதாய் நிம்மதி.
ஒரு வழியாக அனைத்தையும் சமாளித்து நிம்மதி பெருமூச்சு விட்டாள் மலர்.
“இது என்ன கஷ்டம், இனிமேல் தான் உன்வாழ்வில் பல கஷ்டங்களையும்,
அவமானங்களையும் சந்திக்க போகிறாய்” என்று விதி அவளை பார்த்து சிரித்தது.
அதற்கடுத்த வாரத்தில், காலையில் மலர் வேலைக்கு கிளம்பும்போது, அவளின் வீட்டு
வாசலில் காரில் வந்து இறங்கினர் ருத்ராதேவி-சக்ரவர்த்தி தம்பதியினர்.
——————————-
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!