தூங்கி எழுந்தவள் முதல் வேலையாக தனது அன்னைக்கு போன் செய்தாள். வாசுகி
போனை எடுத்தார்
ஹலோ.. அம்மா.. என்ன பண்றீங்க….
மலரு… நல்லா இருக்கியா,…..என்னடி போயிட்டு போன் பண்ணவே இல்ல..
போன்ல சார்ஜ் இல்லம்மா…
சரிவிடு… வீடெல்லாம் செட் ஆயிடுச்சா.. மாமியார், மாமனார் எல்லாம் நல்லா
பாத்துக்கிறார்களா?… மாப்பிள்ளை உன்கிட்ட நல்லா பேசினாரா? என்று ஆர்வமாக
கேள்விக்கணைகளை தொடுத்து கொண்டே போனார்…
எல்லாம் நல்லா பாத்துக்கிறாங்கமா.. நல்லா பேசுறாங்க… என்று பொய் கூறினாள்.
தான் இங்கு படும் அவமானங்களும், பாராமுகமும் அம்மாவிற்கு மன சங்கடத்தை
உண்டாக்கும் என்று அவளுக்கு தெரியும். அதனால், பொய்யுரைத்தாள்.
எனக்கு தெரியும்மா… நீ நல்லா இருப்பன்னு அதனாலதான் உன்னை இந்த
கல்யாணத்துக்கு சம்மதிக்க சொன்னேன் என்றார்.
விரக்தியாய் சிரித்துக் கொண்டே “நீங்க நினைச்சது சரிதாம்மா” என்றாள்.
பூரிப்புடன் பேசும் தாயிடம் வேறென்ன சொல்ல முடியும், தன்னை தன் கணவன் அற்ப
புழுவை போல் பார்க்கிறான் என்றா…. இல்லை இந்த வீட்டில் நான் ஒரு
வேலைக்காரியாக தான் நியமிக்கப்பட்டுள்ளேன் என்றா. உண்மை நிலை மிகவும்
வலிக்கும் அது என்னுடன் போகட்டும்,
அம்மாவாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
மலரு….உன்னோட கல்யாண விஷயம்… கவி, வீட்டுக்கு தெரிஞ்சு சண்டை
போட்டாங்களாம் மரியாதை தெரியாத குடும்பம்…. மூத்த மாப்பிள்ளையை மதிக்கல
அப்படின்னு சொல்லி சண்டை போட்டாங்களாம்… போன் பண்ணி சொல்லி அழுதாடி..
உங்களால என்னோட குடும்பத்துல சண்டை வருது.. ஏன் இப்படி பண்றீங்க
அப்படின்னு கேட்டா… எங்களை அவமானப் படுத்தனும்னே இப்படி எல்லாம்
பண்றீங்களா? அப்படின்னு, பெரிய மனுஷி மாதிரி கேக்குறாடி..
யாரா இருந்தாலும் கேட்கதாமா செய்வாங்க.. ஆனா என்ன செய்ய நம்மளோட
சூழ்நிலை அப்படி என்றால் மலர் தங்கையை விட்டுக் கொடுக்காத படி.
உன்னோட மாமியார் தான் கல்யாணத்துக்கு யாரும் வரக்கூடாதுன்னு
சொல்லிட்டாங்களே… சிம்பிளா கல்யாணம் பண்ணலாம்னு சொன்னாங்க…. ஆனா
இவ்வளவு சிம்பிளா கல்யாணம் பண்ணுவாங்கனு நான் கனவுல கூட நினைக்கல…
உனக்கு ஒரு பட்டு சேலை கூட எடுக்கலையே டி.. வந்தவங்களுக்கு ஒரு வாய் தண்ணி
கொடுக்கல, சோறு போடல அப்படியே கூட்டி போய்ட்டாங்க…
( இப்ப இருக்கிற பிரச்சனைல இதுதான் இப்போ ரொம்ப முக்கியம் என மனதிற்குள்
நினைத்துக் கொண்டாள் மலர்)
உங்க அப்பா மட்டும் உயிரோட இருந்திருந்தா, உனக்கு எப்படி எல்லாம் கல்யாணம்
பண்ணி அழகு பார்த்து இருப்பார்… அதை எல்லாம் நினைக்கும்போது மனசே கேட்க
மாட்டேங்குதுடி,
அம்மா… ப்ளீஸ்மா இது பத்தி எல்லாம் இப்ப பேசாதம்மா…
சரி விடு, உன் தலையில என்னை எழுதி இருக்கோ அதானே நடக்கும்,
ஆனா சொன்னபடி வீட்டு பத்திரத்தை திருப்பி கொடுத்துட்டாங்க.. இப்பதான் கடனும்
வட்டியும் இல்லாம நிம்மதியா என்னால இருக்க முடியுது மலரு… ரெண்டு பிள்ளையும்
கரை சேர்த்துட்டேன், இதுக்கு மேல எனக்கு பெரிய கவலை எதுவும் இல்லடி… நிம்மதி
பெருமூச்சு விட்டுக்கொண்டு இதுக்கு மேல எனக்கு எதுவும் ஆனாலும் நிம்மதியா
போய் சேர்ந்திடுவேன்…
ஏம்மா… இப்படி எல்லாம் பேசுற என்றாள் மலர் சோகமாக.
அவளது குரலில் இருந்த சோகத்தை உணர்ந்த வாசுகி, “நான் ஒரு கிறுக்கி”
என்னென்னமோ பேசிகிட்டு இருக்கேன்…. நீ சாப்பிட்டியா…. என்ன செஞ்ச, என்று
வாசுகி கேட்க…
அவர் கேட்கும்போது தான், தான் காலையில் உணவு சாப்பிடவில்லை என்பது
ஞாபகத்திற்கு வந்தது…
காலையில் அவள் அறைக்குள் நுழைந்த பின் யாரும் வந்து ஏன்? என்றும்
கேட்கவில்லை சாப்பிடு என்று கூறவும் இல்லை…. இதுதான் இங்கு இருக்கும்
மனிதர்களின் குணம் என்று தெரிந்து கொண்டாள். இதுதான் நமது வாழ்க்கை,
இதுக்கு பழகிக் கொள்… என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
மலரு… மலரு… லைன்ல இருக்கியா என்று வாசுகி கேட்க.
என்னம்மா…. லைன்ல தான் இருக்கேன் சொல்லுங்க…
சாந்தி முகூர்த்தம் எல்லாம் நல்லா நடந்தது தானே..? மாப்பிள்ளைக்கு புடிச்ச மாதிரி நீ
நடந்துக்கிட்டயா? என்றார் கிசுகிசுப்பான குரலில்… தனது அதி முக்கிய
சந்தேகத்தை கேட்டுவிட்டார்.
இந்த வார்த்தையை கேட்டவுடன் மலருக்கு பூமிக்குள் புதைந்து விடலாமா? என்று
இருந்தது.
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் பிடிக்குதோ புடிக்கலையோ ஆனா சாந்தி
முகூர்த்தம் மட்டும் கட்டாயம் இவங்களுக்கு நடக்கணும்.
அதெல்லாம்… நடந்துச்சு மா.. என்று பொதுவாக சொல்லி வைத்தாள்.
குளிச்சு நல்ல சேலையா உடுத்தி, தலை நிறைய பூ வச்சு சிரிச்ச முகமாய் இரு,
அப்பதான் மாப்பிள்ளைக்கு உன்ன புடிக்கும் என்று அறிவுரை வழங்கினார்.
ச்ச்.. என்று முகத்தை திருப்பி சலித்துக் கொண்டாள்.
சும்மா போய் கண்ணு முன்னாடி நின்னாலே… என்ன கண்டபடி திட்டுவார்… இதுல
இவங்க சொல்ற மாதிரி போய் நின்னா அவ்வளவுதான்… மானக்கேடா பேசுவார் இன
மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் .
அம்மா மலரு… நான் திரும்பத் திரும்ப சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத…
வாழ்க்கையில சின்ன சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும் அதெல்லாம் சரியா
போயிடும், கொஞ்சம் அனுசரிச்சு போ…, மாப்பிள்ளையோட மனச புரிஞ்சு நடந்துக்க
பாரு…, அவருக்கு புடிச்சதெல்லாம் சமைச்சு கொடு…, சிரிச்ச முகமா அவர் முன்னாடி
இரு, ஒரு குழந்தை பிறந்தால் எல்லாமே சரியா போகும் என்று அவர் சொல்ல,…
அவர் முகத்தைப் பார்த்து பேசுறதுக்கே பயமா இருக்கு, இதுல எங்க குழந்தை
பெற்றுக்கொள்வது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “அம்மா எனக்கு
பசிக்குது” நான் போய் சாப்பிடுகிறேன். நாளைக்கு உனக்கு கூப்பிடுறேன் என்று
கூறிவிட்டு போனை கட் செய்தாள்.
நம்ம மனசுல இருக்க கஷ்டத்தை சொல்லி புலம்பலான்னு போன் பண்ணா அவங்க
புலம்பிட்டு போன வைக்கிறாங்க.. என்று நெற்றியில் தட்டிக் கொண்டே போனை
கட்டிலின் மேல் தூக்கிப் போட்டாள்.
நேற்று வரை, பிடிக்காமல் ஆரம்பித்த திருமண பந்தம் போகப் போக மாற்றத்தை
தரும் நம்முடைய வாழ்வும் சீராகும் என்று இருந்த எண்ணம்… இன்று காலையில்
அருண் படுத்திய அவமானத்தில் முற்றிலும் மறைந்து போனது….
அறையை விட்டு வெளியே வந்து வீட்டை பார்த்தால் வீடு பேரமைதியாக இருந்தது.
கிச்சனுக்குள் நுழைந்தாள் சுதா வெளியில் போய் இருப்பார் போலும், தனக்கான
உணவு, தட்டில் எடுத்து வைக்கப்பட்டு மூடி வைக்கப்பட்டு இருந்தது அதை எடுத்து
போட்டு சாப்பிட்டு பாத்திரங்களை கழுவி வைத்தாள்.
அப்பொழுது அங்கு இருந்த தொலைபேசி மணி அடித்தது… வீட்டில் வேறு யாரும்
இல்லாததால்… மலர் அதை எடுத்தாள்.
ஹலோ… அருண்தேவ் சார் இருக்காங்களா…
இல்ல சார்…
அவங்க ஆபீஸ் போயிட்டாங்க சார்…
நான் சக்கரவர்த்தி சாரோட ஆடிட்டர் பேசுறேன், அவரோட போன் எடுக்கல…
அதனாலதான் வீட்டு நம்பருக்கு கூப்பிட வேண்டியதா போயிருச்சு.. அவர் வந்தா நான்
போன் பண்ணேன்னு கண்டிப்பா சொல்லுங்க…
நீங்க யார் பேசுறது… என்று கேட்டார்.
நான் அவரோட மனைவி என்று பதில் கூறினாள்.
அந்த பக்கம் பேரமைதியா இருந்துவிட்டு… சரிங்க…..சார் வந்தா நான் போன் பண்ண
தான் மட்டும் சொல்லிருங்க… என்று சொல்லி போனை வைத்து விட்டார்.
அன்று வேலை இல்லாமல் இருந்த நேரங்களை தோட்டத்தில் உலாவி தனது
தனிமையை போக்கிக் கொண்டாள், பூக்களை பறித்து மாலையாய் கட்டி சாமிக்கு
போட்டால் மேலும் தன்னால் வீட்டில் என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ
அனைத்தையும் செய்தாள்.
சுதாவுடன் சேர்ந்து இரவு உணவை தயார் செய்தாள். அனைவரும் இரவு அலுவலகம்
முடிந்து வீட்டிற்கு வந்து உணவு உண்டு, சத்தம் அரை தேடி, அடைந்து கொண்டனர்
நேற்று போல் இல்லாமல் இன்று அருணின் கண்ணில் படாமல் அவன்
வருவதற்குள்ளையே தன்னுடைய அறையில் அடைந்து கொண்டாள், மலர்.
இனிமேல் அருண் கண்முன் வரக்கூடாது என்று முடிவு செய்து இருந்தாள்.
———————————————–
செங்கதிர்ரோன் காலையில் தன் கதிர்களை பூமி எங்கும் பரப்பி உயிர்களுக்கு
உணர்வூட்டிக்கொண்டு இருந்தான்….
காலையில், அனைவருக்கும் காபி கொண்டு போய் கொடுத்தவள் மறந்தும் அருணின்
அரைப்பக்கம் செல்லவே இல்லை. காப்பியை கூட சுதாவிடம் தான் கொடுத்து
விட்டாள்.
அவன் அலுவலகம் கிளம்பும் வரை இப்படியே தப்பித்து விட வேண்டும் என்று
நினைத்தாள்.
ஆனால் அதை மலர் மட்டும் நினைத்தால் போதாதே… அருண் நினைக்க
வேண்டுமே….
கிச்சன் இன்டர்காம் ஒலித்தது… தெரியும் யார் அழைப்பது என்று அதனாலையே
சுதாவை எடுக்கச் சொன்னாள் மலர்.
ஹலோ என்றார் சுதா…
“புரோட்டின் மில்க் ஷேக் ஜிம்முக்கு கொடுத்து விடுங்க” என்று சொல்லி காலை கட்
செய்துவிட்டான்.
கொடுத்து விடுங்க என்ற வார்த்தையிலேயே தெரிந்துவிட்டது அதை யார் கொண்டு
போக வேண்டும் என்று.
மில்க் ஷேக்கை ரெடி பண்ணி மலரின் கையில் கொடுத்து அனுப்பினார் சுதா.
ஜிம்மின் கதவை திறந்து கொண்டு உள் நுழைந்தாள் அருண் வியர்வை சொட்ட
சொட்ட உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான், அறையை சுற்றி பார்த்தாள்
மிகப்பெரிய அறை உடற்பயிற்சி செய்யறதுக்கு இவ்ளோ பெரிய அறையா ? இந்த
இடத்தில மூன்று ரூம் கட்டிறலாம்.. என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு
அறையை பார்த்துக் கொண்டு இருந்தாள்… உள்ளே வந்தவள் அமைதியாக நிற்பதை
கண்டு தன் உடல் அழகை தான் ரசிக்கிறாள் என்று எண்ணி “போதும் சைட் அடிச்சது”
என்று கூறினான். அப்பொழுதுதான் அங்கு இருப்பவனை கவனித்தாள்… அவனை
சட்டை இல்லாமல் பார்க்கவே மிகவும் கூச்சமாக இருந்தது… தலை குனிந்து
கொண்டாள்.
நேத்து யாராவது என்னை கேட்டு போன் பண்ணாங்களா என்றான்.
ஆமா சார் ஆடிட்டர் ஒருத்தர் போன் பண்ணாங்க..
அப்புறம் ஏன் என்கிட்ட சொல்லல,
அது….உங்களை இப்பதான் பார்க்கிறேன் சார்..
ஆடிட்டர் கிட்ட நீ என்ன சொன்ன…
ஆபீஸ் போயிட்டீங்கன்னு சொன்னேன் சார்…
மச்… வேற என்ன சொன்ன…
ஒன்னும் சொல்லல சார்….
இடியட்… உன்ன என்னோட பொண்டாட்டின்னு சொன்னியா….
ஆமா சார் அவங்க நீங்க யாருன்னு கேட்டாங்க அதனால சொன்னேன்….
முட்டாள்… முட்டாள்….. யாரைக் கேட்டு இந்த மாதிரி பப்ளிக்ல நீ சொல்லிக்கிட்டு
இருக்க….
நேத்து நான் சொன்னதுக்கு என்ன முடிவு எடுத்திருக்க…
சார்… அது…வந்து… நான் இந்த வீட்டிலேயே இருக்கிறேன் சார்…
அப்படி இருக்கணும்னா என்ன கண்டிஷன் நான் சொன்னேன்…..
வேலைக்காரியா…. இருக்கணும்னு சொன்னீங்க….
இப்ப சொல்லு போன்ல நீங்க யாருன்னு கேட்டா என்ன சொல்லணும்?…
( தலையை குனிந்து கொண்டே) வீட்டு வேலைக்காரின்னு சொல்லனும் சார்….
இல்ல கேட்கல… என்றான் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்து கொண்டே….
வேலைக்காரின்னு சொல்லணும் சார்… என்றாள் அழுத்தமாக….
பரவாயில்லையே…! உனக்கு கூட சொல்றது டக்குனு புரியுதே… என்றான் ஏளனமாக…
நீ இந்த வீட்ல இருக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல… ஆனா என்னோட
விஷயத்துல நீ தலையிடக்கூடாது… மனைவியா நீ என்கிட்ட எந்த உரிமையும்
எடுத்துக்க கூடாது… தேவையில்லாமல் என் கண்ணு முன்னாடி வரக்கூடாது.
யாருகிட்டயும் இந்த கல்யாண விஷயத்தை பத்தி சொல்லக்கூடாது. இதுக்கெல்லாம்
சம்மதம்னா நீ இந்த வீட்ல ஒரு ஓரமா இருந்துக்கோ இல்லையா இப்பையே பெட்டியை
கட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு கிளம்பிடு. மைண்ட் இட்…
சரி… சரி… என்று பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி விட்டு, வேகமாக அறையை
விட்டு வெளியேறி கிட்சனை நோக்கி சென்றாள்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!
————————————-