இங்கு அருண் வீட்டின் முழு நேர வேலைக்காரியாய் மாறிப் போனாள் மலர்.
காலையில் எழுந்தது முதல், இரவு தூக்கத்திற்கு அறைக்கு செல்லும் வரை யார்
யாருக்கு என்னென்ன வேண்டும் என்று பார்த்து, பார்த்து கவனித்துக் கொண்டாள்
மலர். இவை அனைத்தும் தனது கடமையாக நினைத்து முழு மனதுடன் செய்தாள்.
ருத்ராவிற்கு தேவையான அனைத்து வேலைகளையும் அவளே முன் வந்து செய்வாள்…
காபி, சாப்பாடு பரிமாறுவது… இரவு உறங்க செல்கையில் அவருக்கு தேவையான
மாத்திரைகளை எடுத்துக் கொடுப்பது… அனைத்தையும் அவள் பொறுப்பில் ஏற்றுக்
கொண்டாள். இரவில் சுடுதண்ணி வைத்து கால்களை இதமாக பிடித்து விடுவாள்.
அவள் தன் கடமையை மட்டும் நேர்த்தியாக பார்ப்பதால் ருத்ராவும் அவளை வேற
எதுவும் சொல்வதில்லை. ஆனால் தன்னை “ஐஸ்” வைத்து ஏமாற்றி தன் மகனுடன்
வாழ்வதற்காகவே இந்தப் பணிவிடைகள் எல்லாம் பண்ணுகிறாள் என்ற எண்ணம்
ருத்ராவிற்கு இருந்தது. அருணின் எண்ணத்திற்கு சற்றும் குறைவில்லாதது ருத்ராவின்
எண்ணம்.
அவளை நூறு சதவீதம் தன் வீட்டின் வேலைக்காரியாகவே நடத்தினார்…
ருத்ராவின் எண்ணத்திற்கு முற்றிலும் முரண்பட்டவர் சக்ரவர்த்தி. மலரை அவரது
மருமகளாகவே எண்ணினார். ” மருமகளே” என்று தான் அழைப்பார்.
சார் ப்ளீஸ்…என்ன பேர் சொல்லி கூப்பிடுங்க சார்… என்று மலர் பலமுறை கோரிக்கை
வைத்து பார்த்தாள்… ஆனால் சக்ரவர்த்தி மறுத்துவிட்டார்.
நான் உன்னை “மாமா”னு கூப்பிட சொல்றேன்.. நீ கூப்பிடுறியா?…. அப்புறம் நான்
மட்டும் ஏன் நீ சொல்றத கேட்கணும் என்பது அவருடைய வாதம்… எனக்கு இப்படி தான்
கூப்பிட பிடிச்சிருக்கு “மருமகளே” என்பார்… விளையாட்டாக, பெயருக்காவது இந்த
உறவுமுறை இருக்கட்டும் என்று நினைத்து விட்டார் போலும். அருண்
ஏற்றுக்கொள்ளாத வரை மலர் தன்னை உறவு முறை சொல்லி அழைக்க மாட்டாள்,
என்பது சக்ரவர்த்திக்கும் தெரியும்.
அடிக்கடி தன் பேச்சின் இடையே மலருக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டு,
தன்மகன் நல்லவன் என்றும், ருத்ராவின் வளர்ப்பினால் இப்படி மாறி
போயிருக்கிறான் என்றும், கண்டிப்பாக ஒருநாள் உன்னை ஏற்றுக்கொண்டு
வாழ்வான்.. என்றும் அடிக்கடி நம்பிக்கை வார்த்தை கூறுவார்.
அதைக் கேட்கும் பொழுது மலரின் முகத்தில் ஒரு வெறுமையான சிரிப்பு தோன்றும்.
அந்த சிரிப்பு சொல்லும் அவள் பட்ட அவமானத்தின் வலியை.
அவருக்கு மலரின் நிலைமை புரியவில்லை….மலர் மேல் அருணுக்கு இருப்பது கோபம்
அல்ல
.. வெறுப்பு அவளுடைய ஏழ்மையை வெறுக்கிறான். அவளுடைய உருவத்தை
வெறுக்கிறான்…. அவளையே மொத்தமாக வெறுக்கிறான் ஒரு அற்ப புழுவை
பார்ப்பது போல் பார்க்கிறான். இந்த வெறுப்பு அவ்வளவு எளிதில் மாறாதது என்று
அவர் அறியாமல் போய்விட்டார்.
அருண் இடம் மலரைப் பற்றி எடுத்துக்கூறி புரிய வைக்கலாம்… என்று நினைத்து
அலுவலகத்திற்கு சென்றால் அவரை முற்றிலுமாக தவிர்த்து விடுவான் அவன்.
மலரின் வாழ்க்கையை பார்க்கும் பொழுதெல்லாம் சக்கரவர்த்திக்கு குற்ற உணர்வு
வருவதை தடுக்க முடியவில்லை… அதனால்…
சக்கரவர்த்தி ஓய்வு நேரங்களில் எல்லாம் அவளை தோட்டத்தில் அழைத்து வைத்து,
சுவாரசியமாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். அவருக்கு மருமகள் என்பதை
தாண்டி தோழியாகி போனாள்…
ஆனால் அவரை இன்னும் “சார்” என்று தான் அழைப்பாள். கட்டியவன் உரிமை
கொடுக்காத போது அவள் மற்றவர்களிடம் முறை சொல்லி உரிமையாக
அழைக்க முன்வரவில்லை.
வீட்டில் தனிமையில் இருப்பதற்கு பதிலாக அலுவலகம் கிளம்பி
செல்பவர், இப்பொழுது எல்லாம் வீட்டில் ஓய்வில் இருப்பதையே விரும்புகிறார். தன்
வாழ்வில் நடந்த சுவாரசியமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டே
இருப்பார்… அதில் அதிகமாக அவருடைய அம்மாவின் நினைவுகள் இருக்கும்.
அவருடைய அம்மா அவரை “ராஜா” என்று மென்மையாக அழைப்பார் என்று
சிலாகித்து கூறுவார். மலரின் குரல் தன் தாயின் குரல் போல் மென்மையாக
இருப்பதாக கூறுவார்… அவரின் அம்மாவின் கை பக்குவத்தை நினைத்து மெய்
சிலிர்ப்பார்.
அவருடைய சிறு வயது கதைகளை கேட்டு அதில் அவர் கண்களில் தெரியும் உணவின்
ஆர்வத்தை வைத்தே அவருக்கு பிடித்தமானவைகளை செய்து கொடுத்து
ஆச்சரியப்படுத்துவாள்.
இருவரும் மாலை வேளைகளில் தோட்டத்தில் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி டீ
மற்றும் சிற்றுண்டிகளுடன் பொழுதை கழிப்பது வழக்கம். அவர் ரசித்த பழைய
படங்களையும் ரசிக்க தவறவிட்ட படங்களையும் இருவரும் மதிய வேளையில்
சோபாவில் உட்கார்ந்து ஒன்றாக பார்ப்பர்.
தான் தொலைத்த இளமை காலங்களை திரும்பவும் பெற்றதாய் எண்ணினார்
சக்ரவர்த்தி.
தான் இழந்த தந்தையின் பாசத்தை சக்ரவர்த்தியிடம் தேடினாள் மலர்.
அவர் பேசும்போது கன்னத்தில் கை வைத்து மெல்லிய புன்னகையுடன் அவரையே
பார்த்துக் கொண்டு தலையசைத்துக் கொண்டிருப்பாள்.
“ரொம்ப போரடிக்கிறேனா” என்று சக்ரவர்த்தி கேட்டால், மெல்லிய புன்னகையுடன்
இல்லை என்று தலை ஆட்டுவாள்.
அவருக்கு உடல்நிலை சரியில்லாத நாட்களில் எல்லாம் தோழியை தாண்டி, ஒரு
அம்மாவாகி போவாள்.
அவர் உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டாள்…
சிறிது நாளில் இவர்கள் கூட்டணியுடன் விக்ரமும் சேர்ந்து கொண்டான்..
சக்ரவர்த்திக்கு சமைக்கும் உணவு வகைகள், தின்பண்டங்களை வாசனையை
வைத்தே சமையல் அறைக்குள் நுழைந்து விடுவான், செய்யும் பதார்த்தங்களை
முதலில் அவசர அவசரமாய் சுவைத்து பார்ப்பது விக்ரமே…
மாலையில் இவர்களுடன் அமர்ந்து தேநீர் அருந்தவே அலுவலகத்தில் இருந்து கிளம்பி
வீட்டுக்கு வந்துவிடுவான். மலர் செய்யும் சிற்றுண்டிகள் அவனுக்கு மிகப் பிரியம்…
அவர்கள் நட்பின் சேட்டைகளை பற்றி சுவாரசியமாக விவரித்து கொண்டிருப்பான்
விக்ரம்.
அச்சு முறுக்கு,அதிரசம், ராகி உருண்டை, கள்ள உருண்டை இதையெல்லாம் வாயில்
போட்டு அரைத்துக் கொண்டே…
“மலரு!.. இதெல்லாம் நான் சாப்பிட்டதே இல்லை.. ரொம்ப நல்லா இருக்கு”..
இதெல்லாம் தான் நாங்க சின்ன வயசுல சாப்பிட்டு வளர்ந்தது அண்ணா… அம்மா
செஞ்சு கொடுப்பாங்க.. இதெல்லாம் குழந்தைகள் சாப்பிட்டா ரொம்ப சத்துன்னு
சொல்லி சொல்லி கொடுப்பாங்க…
ம்ம்.. அப்ப சரி என்னோட குழந்தைகளுக்கு நீ இதெல்லாம் செஞ்சு கொடுக்கணும்…
சிரித்துக் கொண்டே… “செஞ்சி கொடுத்துடலாம் அண்ணா” என்பாள்..
“என்னோட குழந்தைகள நீ தான் வளர்க்க போற”என்றான்.
“அது என் பாக்கியம் அண்ணா” இன்று நாடக தோணியில் கையை அசைத்து கூற
இருவரும் சிரித்துக் கொண்டனர்.
விக்ரம் அடிக்கும் லூட்டியில்… அவனை “அண்ணா” என்று அழைக்க துவங்கி
விட்டாள்…
பாசத்திற்கு ஏங்கிய இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பொழிந்து கொள்வார்கள்.
என்னம்மா… உங்க அண்ணாவை பார்த்ததும் என்ன மறந்துட்டியே என்று நக்கல்
அடிப்பார் சக்கரவர்த்தி.
மலர் கையினால் வைக்கும் மீன் குழம்பிற்கு விக்ரமின் நாக்கு அடிமை.
ஆஹா.. உன்ன மாதிரி மீன் குழம்பு வைக்க ஆளே இல்லம்மா… என்று சொல்லி
சிலாகிப்பான். இப்படி குழம்பு வைக்க யார் கிட்ட கத்துக்கிட்ட…
அப்பா கிட்ட ண்ணா…
ஓ.. உங்க அப்பாவுக்கு சமைக்க எல்லாம் தெரியுமா?
எனக்கு நான்வெஜ் ரொம்ப பிடிக்கும்னு அவர் தேடி தேடி சமைக்க கத்துக்கிட்டார்
ண்ணா…
ம்ச்… கொடுத்து வச்ச பொண்ணு தான்.. என்று விக்ரம் மெச்சிக்கொள்ள, அதுவரை
மலரின் முகத்தில் இருந்த மெல்லிய புன்னகை மறைந்து ஒரு விரக்தி புன்னகை
பரவியது.
இவர்கள் இருவருடன் சகஜமாக பேச ஆரம்பித்ததில் இருந்து மலரின் மனம்
இலகுவாகியது பாரங்கள் குறைந்தது. அருண் மலரின் மனதிற்கு கொடுக்கும்
காயங்களுக்கு இவர்களுடன் பேசி சிரித்து மருந்திட்டு கொண்டாள் மலர்.
அவள் என்னதான் சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக் கொண்டாலும்,
அவள் மனதிற்குள் வெறுமையும் விரக்தியும் முழுதாக குடி கொண்டிருந்தது அவள்
முகம் எப்பொழுதும் களையிழந்தே காணப்படும். திடீரென்று வெள்ளத்தில் அடித்து
வரப்பட்ட மனிதன் சிறு ஆசுவாசத்திற்காக ஒரு மரக்கிளையை பற்றிக் கொண்டது
போல இந்த சிரிப்பும் மகிழ்ச்சியும்….
டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்த விக்ரம் தன்னை கடந்து சென்ற
அகல்யாவை பார்த்து….
அகி!… இந்த ஸ்னாக்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. வா… வந்து… டேஸ்ட் பண்ணி பாரு
என்று டைனிங் டேபிளில் அமர்ந்தவாறு சீடையை வாயில் போட்டு மென்று கொண்டே
அழைக்க…, விக்ரமையும், மலரையும் முறைத்துக் கொண்டே அறையினுள் சென்று
விடுவாள் அகல்யா.
அண்ணா…! மேடம் முறைசிட்டு போறாங்க ஏதாவது திட்ட போறாங்கண்ணா…
என்றாள் மலர்.
அவ கெடக்குறா…விடுமா… நீ எனக்கு எடுத்து வை… “இது ரொம்ப நல்லா இருக்கு!…
என்று பரிதாபங்கள் சுதாகர் மாடுலேஷனில் சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்து
அகல்யாவிற்கான சிற்றுண்டியை தன் அறைக்கு வாங்கி செல்வான்.
அப்பொழுதும் மலர்… அண்ணா..! மேடம் கிட்ட குடுங்க நீங்களே ஃபுல்லா
சாப்பிடாதீங்க… என்று சொல்லி அனுப்புவாள்.
ஐயோ இதுக்கு மேல சாப்பிடுவதற்கு வயிற்றில் இடம் இல்லம்மா..! என்று
சொல்லிவிட்டு வாங்கி செல்வான்.
அறையினுள் நுழைந்தவன் லேப் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருக்கும்
அகல்யாவின் தோளை உரசியபடியே உட்கார்ந்து..
ஏண்டி… அடாவடி! அந்த பொண்ணை ஏன் எப்ப பாரு முறைச்சிகிட்டே இருக்க…
அத தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க…
நல்ல்ல…பொண்ணு டி…
உங்களுக்கு இந்த மாதிரி ஸ்னாக்ஸ் எல்லாம் செஞ்சு கொடுத்தா நல்ல பொண்ணா
தான் தெரியும்..
அடிப்பாவி!… அப்ப சாப்பாட்டுக்காக தான் அவ கூட பழகுறேன் அப்படின்னு நீ
நினைக்கிறியா…
பின்ன இல்லையா என்ன…
மலர் என் தங்கச்சி மாதிரி டி…
ரொம்ப பாசக்கார பொண்ணு டி பாசம் வச்சுட்டா உயிரை கூட குடுக்கும்….
அதான் பாக்குறேனே நீங்க மூணு பேரும் தோட்டத்துல உட்கார்ந்து அரட்டை
அடிக்கிறத….
அடிப்பாவி…. என்ன சைலன்ட்டா வாட்ச் பண்ற பாத்தியா…வர வர நீயும் குட்டி
ராஜமாதாவா மாறிக்கிட்டு வர..
உன்ன பல வருஷமா வாட்ச் பண்ணதுனால தான்டா கல்யாணமே பண்ணி
இருக்கேன்… என்ன இங்க வந்து உட்கார்ந்து இருக்க வயிறு முட்ட சாப்பிட்டியா…
சாப்பிட்டேன்…. சாப்பிட்டு, உனக்கும் சீடை எடுத்துக் வந்திருக்கேன் …. என்று எடுத்து
வந்த சிற்றுண்டியை அவளிடம் கொடுக்க,
அவளும் உண்டு விட்டு, “ம்ம்…டேஸ்ட் குட்” என்றாள்…
சீடையை வாயில் போட்டு அவள் மெதுவாக மென்று தின்னும் அழகை தலையை
கையில் தாங்கிய படியே படுத்துக் கொண்டு, ரசித்து கொண்டு இருந்தவன்… பின்
அவள் பிடரியைப் பிடித்து இழுத்து ஒவ்வொரு சீடையாக அவள் வாயிலிருந்து தன்
வாயிற்கு இடம் மாற்றிக் கொண்டான் விக்ரம்.
காதல் கணவனின் இந்த விளையாட்டு மனதிற்கு பிடித்திருந்தாலும் அதை மறைத்துக்
கொண்டு, “இதுக்கு எதுக்கு எனக்கு கொடுக்கணும்… இப்படி புடிங்கி சாப்பிடணும்”
என்று சலித்துக் கொண்டாள் அகல்யா. நான் தனியா சாப்பிட்டது கார சீடை டி, உன்
கிட்ட இருந்து வாங்குனது “ஸ்வீட்” சீடை.. என்று அவளது கீழ் உதட்டை இருவிரலால்
பிடித்து இழுத்து மெல்லிய முத்தம் ஒன்று வைத்தான்.
அகல்யாவை பொருத்தவரை மலரை அவள் ஏற்றுக் கொள்ளவும் இல்லை, விலக்கி
வைக்கவும் இல்லை, பேசினால் பேசுவாள். மற்றபடி அவளை வார்த்தைகளால்
துன்புறுத்தும் எண்ணம் அவளுக்கு இல்லை… மலர் செய்யும் சமையலை சாப்பிட்டு
பார்த்து மனதில் மெச்சிக்கொள்வாள் ஆனால் வெளியே காட்டிக் கொண்டது இல்லை.
ஆனால் மலரை பார்க்கும் பொழுதெல்லாம் அகல்யா முறைத்துக் கொண்டு செல்லும்
காரணம் மட்டும் விக்ரமிற்கு தெரியவில்லை…
ஆக மொத்தம் இந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மலர் வேண்டும்… மலரின்
சேவை வேண்டும்.
இப்படியே நாட்கள் ஓடியது…
மலரும், இந்த வாழ்க்கைக்கு பழகிக் கொண்டாள்..
ஆனால் நான் உன்னை இப்படியே விட மாட்டேன், அடுத்த கட்ட அவமானத்திற்கும்,
துன்பத்திற்கும் தயாராகு என்று விதி கூறியது….
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!