அசுரன் 18
திருமண மண்டபத்திற்குள் நுழைந்த ஆதியின் கண்கள் வட்டமடித்து
தேடியது.. அப்போது விக்ரம் கண்களில் பட்டான் ஆதி.
“டேய் மச்சான்” அப்படின்னு கையை தூக்கி தன் இருப்பிடத்தை அவனுக்கு
காமித்து வேக வேகமாய் பேசிக்கொண்டிருந்தவர்களிடம் “ஒரு நிமிஷம்
வந்துடறேன்” என்று கூறிவிட்டு வந்தான்.
கூட்டத்திற்குள் நடந்து வந்த ஆதியை ஓடி சென்று கட்டிக் கொண்டான்.
மச்சான்…. எப்படா வந்த… நேத்தே வந்து இருக்கலாம் இல்ல
டா… சாரிடா.. இங்க மண்டபத்துல வேலை இருந்ததுனால… என்னால
ஏர்போர்ட் கூட வர முடியல… என்றான் விக்ரம்.
அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லடா… என்னால தான்
கல்யாண வேலையெல்லாம் செய்ய முடியல… நீயாவது இருந்து
பார்க்கிறத நினைக்கிறப்ப சந்தோஷமா இருக்கு… எங்க அருண் ஃபேமிலி
யாரையும் காணோம்… என்றான் ஆதி.
“வாடா மேடைக்கு போலாம்” என்று அழைத்து சென்றான் விக்ரம்.
“இதுதான் வர நேரமாடா பங்ஷன் டையத்துக்கு கரெக்ட்டா தான்
வருவியா” என்று கோபித்துக் கொண்டான் அருண்.
ரதியை ஆதியிடம் பெருமையாக அறிமுகம் செய்து வைத்தான் அருண்.
இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கினான்
ஆதி.
அப்பொழுது அவன் முன் வந்து நின்றாள் சைத்ரா.
என்ன ஆதி!…. உங்க பிரண்ட்ஸ்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆயிடுச்சு!..
அடுத்து உங்களுக்கு தான் என்றாள் இரு பொருள் பட…
மே… பி… என்றான் ஆதி தோள்களை உயர்த்தி காட்டி.
அப்புறம் அன்னைக்கு நான் அனுப்புன மெசேஜ்க்கு நீங்க ரிப்ளை
பண்ணவே இல்லையா ஆதி என்றாள் சைத்ரா.
என்ன மெசேஜ்…. நான் எதுவும் பார்க்கலையே…. என்றான் ஆதி. அன்று
அவன் இருந்த மன உளைச்சலில் அவன் எங்கே அதையெல்லாம்
கவனித்தான் அவளுடைய நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டுவிட்டு
போனை சுவிட்ச் ஆப்… செய்து விட்டான்.
சைத்ரா வேகமாக தனது அலைபேசியை எடுத்து அதில்
அவள் அனுப்பியிருந்த மெசேஜை காண்பித்தாள்…
ஆர்… யூ… இபோடென்ட்…! என்று மெசேஜை வாசித்தான் ஆதி…
கோபப்படவில்லை… மெல்லிய சிரிப்புடன் தனது முன்னேற்றியை
தடவியவாறு அதுக்கு தான் நான் உன்கிட்ட சாரி கேட்டேனே சைத்ரா…
நான் அன்னைக்கி ஓகே சொல்லி உன்ன ஹோட்டலுக்கு கூட்டிட்டு
போனதே, ரொம்ப கில்டியா ஃபீல் பண்றேன். ” ஐ அம் ரியலி சாரி”
என்றான் ஆதி. என்னோட மனக்குழப்பத்திற்கு உன்கிட்ட பதில் தேடி
இருக்க கூடாது அதுக்கு அப்புறம் யோசிச்சு பார்த்தேன் அப்பதான் நான்
பண்ண தப்பு புரிஞ்சது உன்னோட உணர்வுகளுக்கும் நான் மதிப்பு
கொடுத்து இருக்கணும் சாரி… சைத்ரா.. ரியலி சாரி… என்றான் ஆதி.
இட்ஸ் ஓகே ஆதி!… இன்னொரு நாள் நம்ம ட்ரை பண்ணலாம் என்றாள்
சைத்ரா.
சாரி!… சைத்ரா… அன்னைக்கு சொன்னது தான் இப்பயும் “ஐ அம் நாட்
இன்ட்ரஸ்ட்”… என்றான் ஆதி.
என் மேல இன்ட்ரஸ்ட் இல்லையா இல்ல பொண்ணுங்க மேலையே
இன்ட்ரஸ்ட் இல்லையா!… என்றாள் நக்கலாக.
…… அவன் சிரித்தபடியே தலையை ஆட்டிவிட்டு நகர முற்பட…
என்னோட மெசேஜ்க்கு இன்னும் நீ ரிப்ளை பண்ணல ஆதி என்றாள்
சைத்ரா.
இதுக்கு நான் பதில் சொல்றத விட என் பொண்டாட்டி வந்து பதில்
சொல்லுவா… அப்ப கேட்டுக்கோ!… என்று சொல்லிவிட்டு ஆதி அவளை
கடந்து சென்று விட்டான்.
“செட் ஆகலன்னு சொன்னா இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருக்கான்” என
நினைத்துக் கொண்டான் விக்ரம்.
மேலும் இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை சக்கரவர்த்தியும்
கவனித்தார். அவர் மனதிற்குள் ஒரு எண்ணம் உதயமாகியது.
வரவேற்பு நிகழ்வு முடிந்து அனைவரும் மணமக்களுடன் வீட்டிற்கு
சென்றனர்.
*******************
மலர் சமையலறையில் வேலை செய்து கொண்டு இருந்தாள் அவளுக்கு
நிறைய வேலை கொடுக்கப்பட்டிருந்தது. ஆரத்தி கலக்கி வை… பால் பழம்
எடுத்து வை… பூஜையறையை டெக்கரேட் பண்ணி ரெடியா வை… இந்த
மாதிரி மணமக்களை வரவேற்க அனைத்து வேலைகளும் அவள்
தலையில் கட்டப்பட்டிருந்தது அவளும் முகம் துளிக்காமல் செய்து
கொண்டிருந்தால் , அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்
கொண்டிருந்தார் சுதா..
மணமக்கள் ஆரவார சத்தத்துடன் காரில் வந்து இறங்கினர். மணமக்கள்
இருவரும் கைகளைப் பிடித்துக் கொண்டு வாசலில் வந்து நிற்க அகல்யா
மலரிடமிருந்து ஆரத்தி தட்டை வாங்கிக் கொண்டு சென்று ஆரத்தி
எடுத்து உள்ளே அழைத்து வந்தாள்.
அவர்களைத் தொடர்ந்து அனைவரும் உள்ளே நுழைந்தனர். பல நாட்கள்
கழித்து ஆதியும், அருண் வீட்டிற்கு வந்தான்.
மணமக்களை சோபாவில் அமர வைத்து பாலும் பழமும் கொடுத்தாள்
அகல்யா, மணமக்கள் விளையாடிக்கொண்டே உண்டு முடித்தனர்.
பூஜை அறைக்குள் நுழைந்து அனைத்தையும் சரிபார்த்த ருத்ரா வா ரதி..!
முதல்ல சாமிக்கு உன் கையால விளக்கு ஏத்து!.. இது எங்களோட
பரம்பரை விளக்கு இதுல இந்த வீட்டோட மருமகள்கள் தான் விளக்கு
ஏத்தணும் இதுக்கு முன்னாடி நான் ஏத்துனேன் இப்போ நீ ஏத்த போற நம்ம
ரெண்டு பேருக்கு மட்டும் தான்… இந்த விளக்கு ஏத்த உரிமை இருக்கு வேற
யாரும் இத தொடக்கூட மாட்டாங்க… என்றார் ருத்ரா மலரை மனதில்
வைத்துக் கொண்டு.
இதை அங்கிருந்த அனைவரும் கேட்டுக் கொண்டு தான் இருந்தனர்.
அனைவரும் திரும்பி மலரை ஒரு பார்வை பார்க்க அவள் அதையெல்லாம்
கண்டு கொள்ளாமல் சமையல் அறையில் வேலை செய்து கொண்டு
இருந்தாள்.
பூஜையறையில் சம்பிரதாயங்கள் முடிக்கப்பட்டு பின் சமையலறையில்
சில சம்பிரதாயங்கள் செய்த பின்பு அடக்கிய அனுப்பப்பட்டனர்
மணமக்கள்.
விக்ரமும்… ஆதியும்…சோபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டு
இருந்தனர். அருண் ரதியின் கையைப் பிடித்து மாடிக்கு அழைத்துச்
செல்வதை பார்த்த விக்ரம், ரதி முதல் நாள் வீட்டிற்கு வந்த பொழுது நடந்த
நிகழ்வை கூறி சிரித்துக் கொண்டிருந்தான்.
“லிப்ஸ்டிக் ஓட வந்து கதவை திறந்தாண்டா மச்சான்..! என்று சொல்லிக்
கொண்டிருந்தான் ஆதியிடம்..
அப்போது அங்கு சில வேலையாட்கள் உள்ளே நுழைந்தனர்.
சார்..! இங்க முதலிரவு அறை அலங்காரம் பண்ண சொல்லி இருந்தாங்க
எந்த அறைன்னு சொன்னீங்கன்னா… வேலையை தொடங்கிடலாம்…
சார்… என்றனர்.
நல்ல நேரத்துக்கு வந்தாங்கடா..! இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் லேட்டா
வந்து இருந்தாலும்… அவன் அங்க வேலையை தொடங்கி இருப்பான்
என்று ஆதியின் காதலியை கிசுகிசு தான் விக்ரம்.
விக்ரமின் எண்ணத்தைப் போலவே அறைக்குள் அருண், இன்னைக்கு
ரொம்ப அழகா இருந்தடி என்று சொல்லிக் கொண்டே ரதியை அணைத்து
முத்தமிடப் போக கதவு தட்டப்பட்டது.
மச்… யாரு..? என்றான் கதவை திறக்காமலேயே..
டேய் மச்சான் உன்னோட ரூம் டெக்ரேட் பண்ண ஆள் வந்து இருக்காங்க
டா கொஞ்சம் கதவை தர என்றான் விக்ரம்.
ஒரு குட்டி முத்தத்தை அவள் இதழில் வைத்து விட்டு மத்ததெல்லாம் நைட்
பார்த்துக்கலாம்…! என்று சொல்லிவிட்டு வேகமாக வந்து கதவை
திறந்தான் அருண்.
அவனை மேலிருந்து கீழே ஒரு மார்க்கமாக பார்த்து விக்ரம் இன்னைக்கு
மறக்காம லிப்ஸ்டிக்கை தொடச்சிட்டு வந்துட்ட போல என்றான்.
மரியாதையா போயிருடா!.. இல்லனா என்கிட்ட உதை வாங்குவ என்றான்
அருண்.
ரதியை பக்கத்து அறையில் ஓய்வு எடுக்குமாறு கூறிவிட்டு அருணை
கையோடு அழைத்துக் கொண்டு கீழே வந்து சோபாவில் அமர்ந்தான்
விக்ரம்.
இன்னைக்கு இவனுக்கு முத ராத்திரின்னு ஊரே நம்பிகிட்டு இருக்குடா!…
ஆனா எத்தனாவது
ராத்திரி ன்னு அவனுக்கு மட்டும் தான் அது தெரியும் என்றான் விக்ரம்.
அது அவனுக்கே தெரியுமா என்றதே சந்தேகம்டா… வேணும்னா கேட்டு
பாரு என்றான் ஆதி.
யா கரெக்ட்…! என்றான் அருண். ஏண்டா இதெல்லாம் கவுண்ட் ஞாபகம்
வச்சு இருப்பாங்க என்றான் அருண் தலையில் தட்டி கொண்டே..
மச்சான்… ஆக்சிடன்ட்டா சைக்ளோன் ஃபார்ம் ஆகி கேள்விப்பட்டிருப்ப…
ஆனா ஆக்சிடென்ட்டா பேபி ஃபாம் ஆகி கேள்வி பட்டு இருக்கியா…
இதெல்லாம் என் மச்சானோட சாதனை டா…
ரொம்ப புகழாதடா ஒரே கூச்சமா.. இருக்கு இன்னைக்கு… என்றான்
அருண் வெட்கப்பட்டுக் கொண்டே…
நீ என்ன வேணா பண்ணு கரும வெட்க மட்டும் படாதே என்றாலும்
விக்ரம்…
எப்படி டா மச்சான் இன்னிக்கி இங்க கொண்டாடுவியா..! இல்ல
இன்னைக்கும் எங்கேயாவது கிளம்பி போயிருவியா என்றான்..
நான் நேத்துல இருந்து திருந்திட்டேன் டா இனிமே என் வாழ்க்கையில
என்னோட ரதி மட்டும் தான்… என்றான் அருண் தலையை
ஆட்டிக்கொண்டே…
சொல்லிட்டு திருந்துங்கடா…! இப்படி திடீர்னு திருந்தினால் எங்க
மனசெல்லாம் தாங்க வேணாமா என்றான் விக்ரம்.
எங்கிட்டோ நல்லா இருந்தா சரி!… என்றான் விக்ரம்.
நண்பர்கள் மூவரும் வெகு நாளைக்கு பிறகு தங்களுக்குள் கலாய்த்து
பேசி சிரித்துக்கொண்டனர்.
அப்பொழுது அந்தப் பக்கமாக விருந்தினர்களுக்கு டீ எடுத்து சென்ற மலர்
கால் தடுமாறி விழ போக… வேகமாக அவளது கையைப் பிடித்து
நிறுத்தினான் ஆதி.
சூடான டீ அனைத்தும் கீழே கொட்டியது…
பார்த்து போக மாட்ட… கண்ண எங்க வச்சிருக்க… என்று கோபமாக
திட்டினான் ஆதி.
சாரி சார்!… கால் தடுமாறிடுச்சு… என்று என்று கூறிவிட்டு வேகவேகமாக
சமையல் அறைக்குள் சென்று விட்டாள் மலர்.
விடுடா ஆதி எதுக்கு இப்படி திட்டுற ஏதோ தெரியாம நடந்திருக்கும்
பாவம் அந்த பொண்ணே மன கஷ்டத்துல இருக்கும் அதை போய் இப்படி
கோபமா பேசிட்டு இருக்க என்றான் விக்ரம்.
என்ன கஷ்டமா இருந்தாலும் கவனமா வேலை செய்யணும் டா…
யாராவது வழுக்கி விழுந்தா… இல்ல யார் கால்யாவது பட்டா என்ன ஆகும்
யோசித்துப் பாரு… என்று சீறினான் ஆதி.
அப்பொழுது அருணுக்கு..ரதி ஃபோன் செய்தாள்…
சொல்லு பேபி…
அந்த வேலைக்கார பொண்ண கொஞ்சம் மேல வர சொல்லுங்க என்றாள்
ரதி.
அவ எதுக்கு…
முதலிரவுக்கு மேக்கப் பண்ண சொன்னாங்க… என்னோட உதவிக்கு அந்த
பொண்ணு அனுப்பி வைங்க…
அதுக்கு எதுக்கு பேபி மேக்கப்…
சரி வர சொல்றேன்.. என்று கூறிவிட்டு போனை வைத்தான் அருண்.
டேய் மச்சான்… அந்த பொண்ண ரதி ஹெல்ப்க்கு கூப்பிடுறா.. போக
சொல்லுடா… என்றான் அருண்.
எந்த பொண்ண டா… என்று தெரியாதது போல் கேட்டான்.
உன்கிட்ட சொன்னேன் பாரு… என்ன சொல்லணும்..
வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்தவன்.. ஏய்..! உன்ன மேல
கூப்பிடுறாங்க போ.. என்றான் அருண்.
சரிங்க சார்.. என்று தலை அசைத்து விட்டு படி ஏறி, ரதி இருக்கும்
அறைக்கு சென்றாள் மலர்.
போகும் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தனர் ஆதியும் விக்ரமும்.
டேய் அருண் இதெல்லாம் ரொம்ப தப்பு டா… வீம்புக்கு பண்ற மாதிரி
இருக்கு.. ஏன் வீட்ல வேற யாரும் இல்லையா என்ன… அந்த பொண்ண
அனுப்பி வைக்கிற… ரொம்ப ஓவரா தான் டா போய்கிட்டு இருக்கீங்க…
என்றான் விக்ரம் கடுப்பாக.
ஏன், இப்போ அவ போனா என்ன?…
என்று கேட்டான் அருண்.
உன்கிட்ட எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது டா… தூங்குறவங்கள
எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவங்கள எழுப்ப முடியாது உன்கிட்ட
பேசி பிரயோஜனம் இல்லை…. நாங்க ரூமுக்கு போறோம்… என்று
கூறிவிட்டு ஆதியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு விக்ரம் சென்று
விட்டான்.
அங்கு ரதியின் அறையில்…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!