அத்தியாயம் 8

காரை பார்க் செய்துவிட்டு வெளி வந்தவளின் பார்வையில் பட்டது என்னவோ  அங்கு நின்று இருந்த ரேவந்த் மற்றும் அதிரூபனின் கார்கள் தான்…

 

அதை கண்டு விழிகள் சுருக்கியவள் அங்கு வந்த காவலாளியிடம்,

 

” சார் இங்க இருக்காரா..??”  என ஆச்சரியம் பொங்க கேட்டதும் அந்த காவலாளியும் அங்கிருந்து இரு வண்டிகளை பார்த்துவிட்டு, 

 

“ஆமா மேடம்…அதிரூபன் சாரும் ரேவந்த் சாரும் கொஞ்ச நேரம் முன்னாடி தான் மேடம் வந்தாங்க… என்னன்னு தெரியல ஆபீஸ் விஷயமா ரெண்டு பேரும் பேசிகிட்டே போனாங்க அவசரமா..!”  என்றதும் சரியென தலையசைத்து விட்டு லிஃப்ட்டில் ஏறி பத்தாவது தளத்தை அடைந்தாள் …

 

தனது கைப்பையை சரி செய்தவாறு தன்னுடைய அறைக்கு  சென்று அங்கு இருந்த ட்ராயரில் வைத்து இருந்த பெண் ட்ரைவை எடுத்தவள் அதை தன் கைப்பையில் பத்திரப்படுத்திக் கொண்டு தன் அறையில் இருந்து வெளியேறினாள்..

 

லிஃப்ட்டினை நோக்கி செல்லும் சமயம் அவளையும் மீறி தலை அதிரூபனின் அறைநோக்கி திரும்பி நின்றது..

இவ்வளவு தூரம் வந்தாயிற்று அதிரூபனை காணாமல் சென்றால் மரியாதையாக இருக்காது என எண்ணிய அவந்திகா பெருமூச்சுடன் நேரத்தை பார்த்தாள்…

 

ஐந்து நிமிடம் செலவழிப்பதால் ஒன்றும் ஆகி விடாது என எண்ணிக் கொண்டவள் தன் கைப்பையை சரி செய்து கொண்டு அவனது அறையை நோக்கி சென்றாள்…

 

எப்போதும் அவன் அறை கதவு மூடி தான் இருக்கும்… இன்று ஏனோ அதிகமாக திறந்து இருந்தது… 

 

அதை கண்டதும் துணுக்குற்றவள் முகம் சுருக்கி மெல்ல கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்……

யாருமே இல்லை அங்கு…காலியாக கிடந்தது.. ஆனால் அவனது தனிப்பட்ட அறையில் இருந்து ஏதோ ஒரு விதமான சத்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது …

 

“ம்ம்ம்…யாரையும் காணோம் ரூம்ல என்ன பண்ணிட்டு இருக்காங்க..?”  என  தனக்குள்ளே பேசியவாறு இருவரும் அறையில் தான் இருக்கிறார்கள் என அவனது அறையை நோக்கி சென்று விட்டுள் அவள்…

 

அவனது அறையை நோக்கி செல்ல செல்ல இச்சு இச்சென்று சத்தங்களும் முனங்களும் நன்றாகவே கேட்டது… 

 

அவந்திகாவிற்கு அவளையும் மீறி உடலில் ஒருவித நடுக்கம் வந்து தொற்றிக் கொண்டது.. மூளை அங்கு போகாதே என அச்சுறுத்தினாலும் அப்படி என்னதான் சத்தம் அது..? இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?  என அறியும் ஆவலுடன் வேகமாக சென்று பார்த்தவளது விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன..

 

பார்க்க கூடாததை கண்டுவிட்டாள் போல நொடிக்கும் குறைவான நேரத்தில் தவறானதை அவள் கண்ட நொடி,

 

” ச்சீஈஈஈஈ…..”  என்கிற பெரும் சத்தத்தோடு தலையை திருப்பிக் கொண்டாள்.‌

 

  பாதி திறந்து இருந்த கதவில் கை வைத்திருந்தமையால் அதிர்ச்சியில் அவள் கரம் அழுத்தம் கொடுத்து விட அதில் பட்டென்று கதவு முழுமையாய் சுவற்றில் அடித்து முழுமையாய் திறந்து கொண்டது…

 

அச்சத்தத்தில் தங்கள் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்ட ஆண்கள் இருவரும் அதிர்ந்து போய் ஒருசேர தலை திருப்பிப் பார்த்தனர் …

 

இருவரது முகத்திலும் ஈ ஆடவில்லை …

 

‘இவ என்ன இந்த நேரத்தில?’  என்கிற எண்ணம் தான் ஆண்கள் இருவருக்குமே தோன்றியது..

 

அவந்திகாவை பார்த்ததும் நொடியில் ரேவந்த்திடம் இருந்து விலகி இருந்த அதிரூபன் வேகமாக அவளை நோக்கி விரைந்து வந்தான்…

 

பேண்ட் மட்டும் அணிந்து இருக்க  வியர்த்து வழிந்த தனது வெற்று மார்பை காட்டியவாறு பல்லை கடித்துக் கொண்டு அவளை நோக்கி வந்தான் அவன்…

 

தான் தவறான இடத்தில் மாட்டிக் கொண்டோம் என புரிந்து கொண்ட அவந்திகா தன்னை நோக்கி வரும் அதிரூபனை கண்டதும் அடித்து பிடித்துக்கொண்டு அங்கிருந்து  ஓடோடி  அவன் அறையிலிருந்து அதிவேகமாக வெளியேறி விட்டிருந்தாள்…

 

அதிரூபனுக்கு கோபம் மிருகம் போல மூலையில் ஏறி அமர்ந்துக் கொண்டது… எந்த விடயம் யாருக்கும் தெரியாது இத்தனை வருடங்களாக அவன் பாதுகாத்து வந்தானோ அவை அனைத்தையும் அவந்திகா உடைத்து தெரிந்து கொண்டு விட்டிருந்தாள்…

 

அவன் யார் என்று ரகசியம் அவளுக்கு தெரிந்துவிட்டாயிற்றே..!

 

அது மட்டுமல்லாது நிச்சயம் இந்த விடயம் தனது தந்தையின் காதை அடையும் என நினைக்கும் போதே அவனது ஒவ்வொரு செல்லும் கோபத்தில் கொதித்தது..

 

அங்கிருந்த கண்ணாடி சாளரத்தின் வழி அவன் வெறி கொண்ட வேங்கையாய் கீழே பார்த்திட பெண்ணவளோ விழுந்தடித்துக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சி தான் தென்பட்டது …

 

தனது வெற்று மார்பை காட்டிக் கொண்டு வேக வேகமாக வந்து சேர்ந்தான் ரேவந்த்…

அதிரூபனின் தோள்களை தொட்டு விட்டு வாசலை பார்த்தான் அவந்திகாவின் கார் வேகமாக வெளியேறியது…

அதை கண்டதும் அதிரூபன் என அந்த கண்ணாடியை உடைத்திடும் அளவு வெறிக்கொண்டு தன் கைகளாலே குத்தினான்…

 

ரேவந்த் அதிரூபன் தோளை பதற்றத்தில் இறுக்கமாய்   பற்றி கொண்டு,

 

” ரூப் நம்ம நல்ல மாட்டிக்கிட்டோம் ..! நிச்சயம் உங்க அப்பா கிட்ட இங்க பார்த்ததை சொல்லிடுவா ..இப்ப நாம என்ன பண்றது..?”  அவனின் பதற்றம் அதிரூபனையும் தொற்றிக்கொண்டது..

தலையை அழுந்த கோதி  கொண்டவனுக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை ..!

 

இருவரும் வேகமாகவும் அறைக்குள் நுழைந்து அங்கிருந்து சோஃபாவில் தலையை பிடித்தபடி அமர்ந்து விட்டனர்…

 

அதிரூபனோ,

 

” போச்சுடா ..எல்லாம் போச்சு.. அவன் மட்டும் எங்க அப்பா கிட்ட சொன்னா அவ்வளவு தான்..  கடவுளே..! இப்ப நான் என்ன பண்றது..?”  என புலம்பியவன் முன்பு வந்த ரேவந்த் 

விழிகளை சுருக்கி அதிரூபனைக் கண்டு,

 

” அவந்திகாவை நம் வழிக்கு கொண்டு வந்தாகணும்…!”  என்றதும் அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தான் அதிரூபன் …

 

அடுத்து என்ன செய்யலாம் என்பது அனைத்தும் ரேவந்த்தின் தலைமையில் அடுக்கடுக்காய் திட்டங்கள் தீட்டப்பட்டது …

 

அவன் கூறியதை கேட்ட அதிரூபன் முடியவே முடியாது என மறுத்து விட்டான்..

ஆனால் ரேவந்த் விடவே இல்லை ..

 

“ப்ச்…இப்படி பண்ணா மட்டும் தான் நம்மளால தப்பிக்க முடியும் ரூபன்.. இல்ல அந்த அவந்திகாவால எல்லாமே நாசமாயிடும் ..உங்க அப்பா உன்னை விட்டு போயிடுவாரு.. இந்த சாம்ராஜ்யம் எல்லாமே உன் கைவிட்டு போயிடும்..

தனியா பூஜ்ஜியமா தான் நீ நடு ரோட்ல நிக்கனும் …சொல்லு..??  அவ ஒருத்திக்காக இது எல்லாத்தையும் இழக்கனுமா..??  இதுல இருக்குற ஒன்னொன்னும் கஷ்டப்பட்டு வளர்த்திருக்க… இதுல உன்னோட பங்கும் இருக்கு ..

உங்க அப்பா நடு ரோட்ல நிக்க வச்சாலும் உன்னோட திறமையை வச்சு இதே மாதிரி நீ முன்னேறி வந்துடலாம் …

 

ஆனா விஷயம் முழுசா வெளிய போயிடுச்சுனா எல்லார் முன்னாடியும் நாம கேலி பொருளா தான் நிப்போம் …

 

இங்க பாரு எனக்கு உன் கூட இருக்கணும்… உன்னோட வளர்ச்சி எல்லாமே  பாக்கணும்…

உன்னை  தோற்கடிக்க ஒருத்தனும் இங்கு இருக்கக் கூடாது …அது யாரா இருந்தாலும் அவங்களை உன் காலடியில் விழ வைக்கணும்..

 

 எனக்கு உன் கூட இருக்கணும் ரூப்…உன்னை யாரும் கஷ்டப்படுத்த நான் விடமாட்டேன்..”  என அவனை அணைத்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி விட்டான் ரேவந்த்…

 

 அதிரூபனுக்கு எதிராக மற்றவர்கள் ஒரு கல்லை நகர்த்தினாலும் அதை நிச்சயம் ரேவந்த்தால்  தாங்கிக் கொள்ளவே முடியாது.. அந்த அளவு அதிரூபனின் மீது பெரும் காதல் கொண்டவன் அவன் ..

 

யார் முன்பும் அவமானப்பட விட்டு விட மாட்டான்… இப்போது அவந்திகாவால் அவனுடைய தரம் கீழ் இறங்க போவதை ரேவந்த்தால் ஏற்றுக் கொள்ள கூட முடியவில்லை ..

 

அதிரூபன் கலங்கி போய்,

 

“எப்படி இதெல்லாம் பண்ண முடியும் ரேவந்த் என்னால ..??? இது முடியும்னு நீ நம்புறியா??”  என கண்கள் கலங்க கேட்டவனை பரிதவிப்புடன் பார்த்த ரேவந்த்திற்கு உள்ளம் உலைகலனாய் கொதித்தது… 

 

“ப்ளீஸ் ரூபன் இப்படி கலங்கி நிற்காத… என்னால உன்னை இப்படி பார்க்க முடியாதுடா.. நீ ஜெயிக்க பிறந்தவன்.. தோற்கக்கூடாது …அவளை அடக்கி உன் வலைக்கு கொண்டு வரதுக்கு இது மட்டும் தான் சான்ஸ்..”என அவன்  தடவி கூறிட… ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு தொய்ந்து போய் இருக்கையில் சாய்ந்து விட்டான் அதிரூபன் …

 

அதன் பின் ரேவந்த் தானே ஒவ்வொன்றையும் செய்திட.. அதிரூபனால் எதையும் கண் கொண்டு பார்க்க முடியவில்லை ..‌

..

 

அவனது உடலில் ஒரு விதம் நடுக்கமும் பயமும் ஒன்று  சேர்ந்து அவனை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கியது …

 

அவன் செய்யப் போவது தவறு என அவன் மூளையும் சரி மனமும் சரி ஒரு சேர எடுத்துரைத்தது..

 

 ஆனால் அதை கேட்கும் நிலையில் தான் அவன் இல்லை..! என்ன செய்ய காத்திருக்கிறானோ!..

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top