அசுரன் 23

அசுரன் 23
பார்ட்டியில், இருவர் மலரிடம் வம்பு இழுத்து கொண்டு இருந்தனர். 

தயவு செஞ்சு என்னோட கைய விடுங்க என்று கெஞ்சி கொண்டு 
இருந்தாள் மலர்… 

ஒருவன் அவள் இடையை சுற்றி வளைக்க கையை கொண்டு 
செல்லும்போது ஒரு கை அவனை தடுத்தது.. 

வேறு யார் கையும் அல்ல மலரின் மற்றொரு கை தான் அது…. 
(ஹி.. ஹி.. பொண்ணுங்களுக்கு பிரச்சனை வந்தா பொண்ணுங்க தான் 
அவங்கள பாத்துக்கணும் ஹீரோ எல்லாம் வரமாட்டார்…) 

மற்றொரு கையால் அந்த நபரின் கையை அழுத்தி பிடித்தாள் மலர். அந்த 
மென் கை பட்டா அவனுக்கு வலிக்கப் போகிறது… ஏளனமாக அவளைப் 
பார்த்து சிரித்தான் அந்த நபர். 

அவளது கை மெதுவாக கீழ இறங்கி அவனது சுண்டு விரலை பிடித்து 
பின்பக்கமாக வளைத்து உடைத்தது… ஆ…. என்று அலறி கொண்டே 
அவளைப் பற்றி இருந்த கையை விட்டு இரண்டு அடி பின்னால் தள்ளி 
நின்றான் .  

தைரியம் இருந்தா… இப்ப மேல கைய வைடா பாக்கலாம்..  என்று 
உறுமினாள் … 

இருவரில், மற்றொருவன் சுதாரிக்கும் முன்னே அருகில் இருந்த சேரை 
தூக்கி அவன் காலில் அடித்தாள். கீழே விழ பார்த்தவனின்  சட்டையை 
பிடித்து நிறுத்தினாள் மலர். வலியில் பேய் கத்து கத்தினான் அந்த நபர். 

இதை எதிர்பார்க்காத ரதி அரண்டு விட்டாள்… எவ்வளவு கேவலமாக 
பேசினாலும் தலை குனிந்து  கொண்டு தனது அறைக்குள் சென்று பூட்டி 
கொள்பவளா… இவள் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றியது. 

அந்த இருவரின் அலறல் சத்தத்தில் பாட்டு சத்தம் நிறுத்தி அனைவரும் 
அங்கே கூடி விட்டனர்… 

ஏய்… வேலைக்கார நாயே… என்னடி பண்ணிட்டு இருக்க… எவ்வளவு 
தைரியம் இருந்தா… என்னோட பிரெண்ட்ஸ் மேலேயே கைய வைப்ப.. 
அவங்க எல்லாம் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? என்று 
கேட்டுக்கொண்டே ரதி மலரை அடிக்க கை ஓங்க…  

ரதியை அழுத்தமாக பார்த்துக்கொண்டே பிடித்திருந்த அந்த நபரின் 
கன்னத்தில் சப்ப்ப்… என்று ஓங்கி ஒரு அறை விட்டாள் மலர்.. கதி 
கலங்கியது, அறை வாங்கியவனுக்கு… 

ஏய்ய்ய்… என்று விரல் நீட்டி ரதி கத்தி கொண்டே கிட்ட வர…. 

மீண்டும் ஒரு அழுத்தமான அரைச் சப்ப்ப்… என்று அவன் கன்னத்தில் 
விழுந்தது… 

அந்த அறை ரதிக்கே விழுந்தது போல் இருந்தது. தனது கன்னத்தில் 
கையை வைத்துக் கொண்டு அதை உணர்ந்தாள். 

அப்பொழுது அங்கே வந்த அருண்… என்ன நடந்தது என்ற 
விசாரிக்காமல்… பார்ட்டி கெட்டுவிட்டதே என்று எண்ணி,  வாட்ஸ் 
ஹேப்பெனிங் ஹியர்… என்று கோபமாக கத்தினான். 

என்னோட ஃபிரண்ட்ஸ் அவளோட கைய புடிச்சுட்டாங்க… அதனால 
அவங்களை இப்படி அடிச்சு கீழே தள்ளி விட்டுட்டாள்.. என்று ரதி 
உண்மையை மறைத்து கூற… 

அருண் கோபப்பட்டு அவர்களை அடிப்பான் என்று மலர் எண்ண… 

ஏண்டா… நீங்க எல்லாம் பெரிய இடத்து பசங்களா டா போயும்.. போயும்.. 
வேலைக்காரி இவளோட கைய தான் பிடிப்பீங்களா…  என்று 
பார்வையால் மலரை மேலும் கீழும் அற்ப புழுவை போல்  பார்த்துக் 
கொண்டே கேட்க… 

மலர் அதிர்ந்து அவனை பார்த்தாள். ரதி ஏளனமாக மலரை பார்த்து 
சிரித்தாள். 

அப்பொழுது தான் கூட்டத்தை விலக்கிவிட்டு ஆதியும்.. விக்ரமும்.. உள்ளே 
நுழைந்து, என்ன நடக்கிறது… என்று புரியாமல் நின்று கொண்டு இருக்க… 

ஒரு சிறு, பெருமூச்சு விட்டு, கண்களை அழுத்தமாக ஒரு முறை மூடி 
திறந்து  தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு, அருணை அழுத்தமாக 
பார்த்துக் கொண்டே… பிடித்திருந்த நபரின் கன்னத்தில் சப்… சப்.. என்று 
ஓங்கி இரண்டு அறைகளை வைத்தாள் மலர். 

அதைப் பார்த்த அருணுக்கு, “இந்த அறை உனக்கு விழுக வேண்டியது” 
என்பது போல் இருந்தது மலரின் பார்வை. 

மலரின் அந்த அழுத்த பார்வையை கண்டு ஒரு நிமிடம்  அதிர்ந்து 
விட்டான் அருண். தன்னிடம் ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசாதவளா 
இவள்… இன்று என்ன ஆயிற்று?… என்று புரியாமல் முழித்தான். 

அவள் அறைந்த அறையை பார்த்து அங்கிருந்து அனைவரும் 
அதிர்ந்தனர்.. ஆதியும் விக்ரமும் கூட.. 
மலரின் இந்த அவதாரம் அவர்களுக்கு புதிது. 

ஏய்… என்ன பண்ற நீ… என்று அவன் மலரின் கிட்ட வர… அவள் முறைத்த 
முறைப்பில் அங்கேயே நின்று விட்டான் அருண். 

அருணை அழுத்தமாக பார்த்துக் கொண்டே… பிடித்திருந்த சட்டையை 
விட்டவள் திரும்பி நடக்க எண்ணி, பின் என்ன நினைத்தாளோ அந்த 
நபரின் பக்கம் திரும்பி, என்னோட ஓடிப்போன புருஷனைப் பத்தி 
கேட்டியே… அங்க நிக்கிறாரே அவர்கிட்ட கேளு சொல்லுவாரு..  என்று 
அருணை கண்ணால் காண்பித்து விட்டு,  அருணையும் ரதியையும் ஒரு 
பார்வை பார்த்துவிட்டு…. விரு விரு என்று வீட்டிற்குள் நுழைந்து விட்டாள்.. 

அவள் சொல்லியதை கேட்ட அருண்…  என்னது “ஓடிப்போன புருஷனா”… 
அதுவும் இவளுக்கா ச்சீ… என மனதிற்குள் அருவருத்து கொண்டான்… 
நல்லவேளை இத்தனை பேர் கூடியிருக்கும் இடத்தில் இவன்தான் 
“புருஷன்” என்று கை காட்டாமல் விட்டாளே அந்த மட்டும் நல்லது என்று 
மனதுக்குள் எண்ணிக்கொண்டான் அருண். 

அருணுக்கும், ரதிக்கும் நண்பர்கள் மத்தியில் பெருத்த அவமானமாய் 
போனது. ரதியின் ஆறுதலுக்கு அவளின் அருகே அவள் கையை பற்றி 
கொண்டு நின்று இருந்தால் சைத்ரா. 

என்ன நடந்தது என்று அங்கிருந்தவர்களை கேட்டு தெரிந்து கொண்ட 
விக்ரம்… அவர்களைப் பிடித்து நாலு சாத்து சாத்தினான். 

டேய்… அவங்கள விடுடா.. என்று ஆதி விக்ரமை தடுத்து நிறுத்தி,  அடிபட்ட 
நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான். 

டேய்… இந்த நாய்களை எல்லாம் அடிச்சே கொல்லணும்டா.. என் தங்கச்சி 
மேலேயே கைவைப்பார்களா? வாடா போலீஸ் கம்ப்ளைன்ட் 
பண்ணலாம்… என்றான் விக்ரம். 

அதான் உன்னோட தங்கச்சியே அடிச்சுட்டாங்களே.. அப்புறம் என்ன… 
இந்த பிரச்சனையை இதோட விடு.. என்றான் ஆதி. 

என்னடா… ஆதி நீயும் இப்படி பேசுற.. என்று கூறிவிட்டு அருணின் பக்கம் 
திரும்பியவன்.. 

டேய்… நம்ம வீட்டு பொண்ணு மேல கைய வச்சிருக்கானுங்க… நீ 
என்னடான்னா… அவனுங்க கிட்ட மலர மட்டம் தட்டி பேசிகிட்டு இருக்க… 
உன்னோட வன்மத்தை காண்பிக்க இது தான் நேரமா டா… என்று 
அருணிடம் காட்டமாய் கேட்டான் விக்ரம். 

ஓவர் சீன் போடாத விக்ரம்… இப்போ அவ கைய புடிச்சதனால என்ன 
ஆச்சு… புடிக்கலனா புடிக்கலைன்னு சொல்லிட்டு போக வேண்டியது 
தானே… அதுக்காக அவனுங்கள அடிப்பாளா? என்றான் அருண் பல்லை 
கடித்த படி… 

என்னடா பதில் இது… ஒருவேளை அகல்யாவோட கைய புடிச்சு 
இழுத்தாலும்… அப்ப இதே பதிலை தான் சொல்லி இருப்பியா.. என்றான் 
விக்ரம் விரக்தியாய்… 

என்னோட தங்கச்சியும், வீட்ல வேலை செய்றவங்களும் ஒன்னு இல்ல 
விக்ரம்… என்றான் அருண் கடுப்பாய்.. 

உன்னை எல்லாம் திருத்தவே முடியாது அருண்… பட்… யூ பே பார் திஸ்… 
என்று சொல்லிவிட்டு வேகமாய் அந்த இடத்தை விட்டு சென்றான் விக்ரம். 

அவன் பின்னையே தனது பேண்ட் பாக்கெட்டினுள் கை நுழைத்த படி 
மெதுவாக நடந்து வீட்டிற்குள் நுழைந்தான் ஆதி. 

நடந்து போகும் ஆதியை இரு ஜோடி கண்கள் வன்மமாய் பார்த்தது… 

ஃபர்ஸ்ட் இவளை யாரு.. இங்க வர சொன்னது ரதி.. என்று கோபமாய் 
கேட்டான் அருண். ஏனென்றால் அவனுக்கே தெரியும் அவன் நிற்கும் 
இடத்திற்கு அவள் வர மாட்டாள் என்று. 

நான் தான் சர்வ் பண்ண ஆள் பத்தலன்னு வர சொன்னேன் என்றாள் ரதி. 

இப்போ அவ வந்ததுனால தான் நமக்கு தேவையில்லாத அவமானம் 
பாத்தியா!… என்றான் அருண் பல்லை கடித்த படி….  ஒன்னு நல்லா 
புரிஞ்சுக்கோ ரதி.. ஒரு புழுவை கூட சும்மா… சும்மா… சீண்டி பார்த்தேனா 
அது தன்னுடைய எதிர்ப்பை ஏதாவது ஒரு இடத்தில் காண்பிக்கும்.. 
அதனால அவளை இப்படியே விட்டுடு அதான் நமக்கு நல்லது என்றான் 
அழுத்தமாக… 

20 பேருக்கு மத்தியில் அவளின் ஆடையை பறித்து அவமானப்படுத்தி 
கூனிக்குறுகி அனுப்பி வைக்கலாம் என்று நினைத்தாள் ரதி ஆனால் புள்ள 
பூச்சிக்கு கொடுக்கும் முளைக்கும் என்று அவள் கனவா கண்டாள்… 
இப்பொழுது அவமானப்பட்டு நிற்பது அவள்.. மலரின் மேல் வன்மம் 
கூடியது ரதிக்கு… 

இந்த மாதிரி பொண்ணு எல்லாம் எதுக்கு வீட்ல வேலைக்கு வைக்கிறீங்க… 
ஃபர்ஸ்ட் அவளை வேலையை விட்டு தூக்குங்க… என்று கூறினாள் சைத்ரா. 

சாரி! கைஸ்… நீங்க பார்ட்டி என்ஜாய் பண்ணுங்க என்று மீண்டும் 
பார்ட்டியை  தொடங்கி வைத்தான் அருண். 

அனைவரும் நார்மல் நிலைக்கு திரும்பி பார்ட்டியை தொடர்ந்தனர். 

ஆனால் அருணின் மனமும் ரதியின் மனமும் அமைதி அடையவில்லை… 

ரதியின் மனநிலையை மாற்றும் பொருட்டு… உன்னோட மேரேஜ் லைப் 
எப்படி போகுது?.. என்று கேட்டாள் சைத்ரா.. 

யா!… இட்ஸ் குட்! என்றாள் ரதி. 

நான் என்னென்ன குவாலிட்டிஸ் எதிர்பார்த்தனோ… அது எல்லாமே 
அருண் கிட்ட இருக்கு… வி ஆர் மேட் ஃபார் ஈச் அதர்.. என்றாள் ரதி. 
அண்ட் வாட் அபௌட் யு? என்று சைத்ராவை வினவ… 

ஆஃப் கோர்ஸ்…. நானும் எனக்கு பர்ஃபெக்ட் மேட்சிங்கா… இருக்கிற 
பர்சனத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்… என்றாள் சைத்ரா. 

ஆனா சைத்ரா.. உன்னோட பார்வையே சரியில்ல, எவ்வளவு கூட்டம் 
இருந்தாலும் உன்னோட பார்வை ஆதியை விட்டு நகர மாட்டேங்குதே 
என்ன விஷயம்… 
என்றாள் ரதி கண்களில் குறும்பு கொப்பளிக்க. 

ஐ அம் அட்மையர் வித் ஆதி… பட் அவன் இன்ட்ரஸ்ட் காட்ட மாட்றான்.. 
என்றாள் சலிப்பாக. 

அவன கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறியா? என்றாள் ரதி. 

மேரேஜ், லவ், லிவிங் எல்லாமே கேட்டு பாத்துட்டேன் அவன் எதுக்கும் ஒத்து 
வரல… என்றாள் பெருமூச்சுடன். 

மேரேஜ் ப்ரோபோஸ்ல நீ அவன்கிட்ட இருந்து ஸ்டார்ட் பண்ணி இருக்கக் 
கூடாது சைத்ரா… அதுக்கெல்லாம் வேற ஒரு ஆள் இருக்காங்க என்றாள் 
ரதி. 

யார்? என்பதைப் போல தலையை திருப்பி ரதியை பார்த்தால் சைத்ரா… 

அது என்னோட மாமனார் தான்… அவர் சொன்னா என்ன வேணாலும் 
பண்ணுவான் ஆதி. அவனுக்கு சின்ன வயசுல இருந்து மார்வெல் 
சப்போர்ட்டா இருக்கிறது அவர் தான் அவர் மேல பெரிய மரியாதையே 
வச்சிருக்கான் ஆதி. சோ… சக்கரவர்த்தி அங்கிள் சொன்னா அருண் 
கேட்கிறானோ இல்லையோ ஆதி கண்டிப்பா கேட்பான். 

நீ மேரேஜ் ப்ரொபோஸ்ல உங்க பேமிலி கிட்ட சொல்லி நேரா சக்கரவர்த்தி 
அங்கிள் கிட்ட மூவ் பண்ணு… நானும் ஆன்ட்டி கிட்ட சொல்லி உனக்கு 
சப்போர்ட் பண்றேன்… அப்போ சக்சஸ் ஆகும் என்று யோசனை 
வழங்கினாள் ரதி. 

யா… இட்ஸ் குட் தாட்… தேங்க்ஸ் மை டியர்… என்று சொல்லி அவளை 
அணைத்துக் கொண்டாள் சைத்ரா…. 

அடுத்த நாளே தன் தந்தையிடம் சொல்லி சக்கரவர்த்தியின் முன்னால் 
அமர்ந்திருந்தாள் சைத்ரா. 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top