அசுரன் 24
ஆதியை அடைய ஒரு வழி கிடைத்ததை எண்ணி நிம்மதியாக தன் வீட்டை
அடைந்தாள் சைத்ரா….
முதல் வேலையாக தனது தந்தையிடம் தன் விருப்பத்தை சொல்லி,
சக்கரவர்த்தியிடம் பேச சொன்னாள்.
மறுநாள் சைத்ராவும்.. அவளது பெற்றோர் ராஜ்காந்த் மற்றும் மிதுலா…
சக்கரவர்த்தியின் வீட்டில், அவர் முன் அமர்ந்திருந்தனர்.
சைத்ராவை பார்த்தவுடன் புரிந்து விட்டது சக்கரவர்த்திக்கு அவர்கள்
வந்த விவரம்…
சக்கரவர்த்தியை பொருத்தவரை அருணின் திருமணத்தில் ஆதியும்
சைத்ராவும் பேசிக் கொண்டிருந்ததை வைத்து அவர்கள் இருவருக்கும்
விருப்பம் என நினைத்துக் கொண்டு இருந்தார்.
சக்கரவர்த்திக்கும் ராஜ்காந்திற்கும் பெரிய அறிமுகம் எல்லாம்
தேவைப்படாது…. இருவருமே பெரிய தொழிலதிபர்கள் என்பதால்
முன்னமே அறிமுகம் இருந்தது.
சக்கரவர்த்தி சார்….
இது என்னோட ஒரே பொண்ணு சைத்ரா.. இவளும் உங்க நண்பனோட
மகன் ஆதியும் விரும்புறாங்க.. கல்யாணம் பண்ணிக்கனும்னு
ஆசைபடுராங்க …
நீங்கதான் ஆதிய சின்ன வயசுல இருந்த கைட் பண்ணிட்டு வரீங்க
அதனால உங்க கிட்டயே நேரடியா பேசலாம்னு வந்தோம் என்றார்
ராஜ்காந்த்.
சந்தோசம் சார்…. ஆதியும் என்னோட பையனா தான் நான் பாக்குறேன்..
பசங்களுக்கு விருப்பமிருந்தா நம்ம இதுல தடை போடுறதுக்கு என்ன
இருக்கு சொல்லுங்க… பாப்போம்… என்றார் சக்கரவர்த்தி..
( அய்யய்யோ… அவனுக்கு தான் விருப்பம் இல்லையே இப்ப என்ன
பண்றது என்று மனதுக்குள் யோசித்தாள் சைத்ரா)
இல்ல அங்கிள்… நானும் ஆதியும் பேசி பழகினோம், புடிச்சிருந்தது…
கல்யாணத்துல அங்கிளுக்கு விருப்பம்னா எனக்கு விருப்பம்ன்னு
ஆதி சொல்லிட்டாரு அதனாலதான் உங்ககிட்ட கேட்கலாம் என்று
வந்தோம்… என்றாள் மிகவும் அடக்கமான பெண்ணாக…
இதற்கு இடையில் மலர் வந்து அவர்களுக்கு டீ மற்றும் ஸ்னாக்ஸ்களை
கொடுத்துவிட்டு சென்றாள்…
சைத்ரா அவளை ஒரு முறைப்புடனே பார்த்து வைத்தாள்.
“இன்னும் இவள எதுக்கு வேலைய விட்டு தூக்காம இருக்காங்க”… என
மனதில் நினைத்துக் கொண்டாள்.
மலர் சென்றவுடன், சக்கரவர்த்தியை பார்க்கும்போது சாந்தமாக தனது
முகத்தை மாற்றிக் கொண்டாள்.
நானும் ஆதியோட கல்யாணத்த பத்தி தான் யோசித்து கொண்டு
இருந்தேன்… அருண், ஆதி, விக்ரம் மூணு பேரும் ஒன்னாவே
வளர்ந்தவர்கள்… அருணுக்கும் விக்ரமுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு
அடுத்து ஆதிக்கு தான் பார்க்கலாம்னு இருந்தேன் என்றார்.
சைத்ராவும் ஆதிக்கு எல்லா வகையிலும் பொருத்தமான பொண்ணு
தான்…
எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் தான். ஒரு நல்ல நாளா
பார்த்து பேசி முடிவு பண்ணிக்கலாம் என்று கூறினார் சக்கரவர்த்தி.
ஆதியின் மனதில் இருப்பதை அறியாமல் அவராகவே ஏதோ ஒன்றை
நினைத்துக் கொண்டு தவறாக முடிவு செய்துவிட்டார் சக்கரவர்த்தி.
சக்கரவர்த்தியின் முடிவை கேட்டதும் சைத்ரா வேகமாக அவரது காலில்
விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
இந்த காலத்துல இப்படி ஒரு அடக்கமான பொண்ணா.. என்று மனதிற்குள்
பூரித்துப் போனார் சக்கரவர்த்தி. ஆதிக்கு இவள் சரியான பொருத்தம்
என்று எண்ணிக் கொண்டார்.
ஏனென்றால் அருணின் குணத்தைப் பற்றியும் சக்கரவர்த்திக்கு தெரியும்
ஆதியின் குணத்தை பற்றியும் நன்கு தெரியும் அவனிடம் ஒரு
கண்ணியம், நேர்மை இருக்கும். அதனால் அவனுக்கு தகுந்தது போல்
வரன் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருந்தார்.
அவனுக்கு எல்லாமும் ஆக இருக்க வேண்டும். தான் அப்படிப்பட்ட ஒரு
வாழ்க்கை துணையை அவனுக்கு தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.
என்று அவர் எண்ணிக் கொண்டு இருந்தார்.
கீழே நடக்கும் அனைத்தையும் ரதி மேலே நின்று கவனித்துக் கொண்டே
இருந்தாள்.
அவள் இதழில் மர்ம புன்னகை…
அறையினுள் இருந்த ருத்ராவை அழைத்து, எதிரில் இருப்பவர்களை
அறிமுகம் செய்து வைத்து பின் தான் எடுத்த முடிவை சக்கரவர்த்தி கூற..
தன் வீட்டில் மிதிலாவை பார்த்த ருத்ராவிற்கு இன்ப அதிர்ச்சி.. மிதிலாவும்
ருத்ராவும் லேடிஸ் கிளப் நெருங்கிய தோழிகள்..
மிதுனம் ருத்ராவும் ஒருமுறை கட்டியணைத்து விடுவித்துக் கொள்ள
மிதிலா தான் வந்த நோக்கத்தை கூறினார்.
ருத்ராவும் வேகமாக சம்மதித்தார்… அவர் முடிவே கட்டி விட்டார் ஆதிக்கு
தான் சைத்ரா என்று…
சைத்ராவின் பக்கம் பலம் கூடிக் கொண்டே சென்றது.
ரதியின் பார்ட்டி முடிந்த பிறகு ஆதி அவனது வீட்டிற்கு சென்று விட்டான்…
விக்ரமும், அகல்யாவும் ஹாஸ்பிடல் சென்றிருந்தனர் அருண் அலுவலகம்
சென்று விட்டான்… அதனால் இவர்கள் வந்த விபரம் ஆதி அறிய
வாய்ப்பில்லை…
ஒரு நல்ல நாளில் நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு
செய்யப்பட… இந்த விஷயம் ஆதியின் காதுகளுக்கு செல்லாமல் இருக்க
எண்ணி….
அங்கிள்!.. ஆதிக்கு தெரியாம சர்ப்ரைஸா இந்த என்கேஜ்மென்ட் பிளான்
பண்ணனும்னு… நான் நினைக்கிறேன் என்றாள் சைத்ரா… கெஞ்சுதலாக…
அது எப்படிமா முடியும்? என்றார் சக்கரவர்த்தி…
முடியும் அங்கிள்!… உங்க வீட்ல வேற ஏதாவது பங்க்ஷன் வரும்போது நீங்க
ஸ்டேஜ்ல எங்க என்கேஜ்மென்ட் அனவுன்ஸ்மென்ட் பண்ணலாம்… அது
ஆதிக்கு சர்ப்ரைஸா இருக்கும் என்றாள் சைத்ரா..
நெக்ஸ்ட் எங்களோட வெட்டிங் ஆனிவர்சரி வருது அத செலிபிரேட்
பண்ணலாம்னு இருக்கோம்… அதுல வேணா நம்ம என்கேஜ்மென்ட்
அநௌன்ஸ்மென்ட் வச்சுக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்
ருத்ரா…
சூப்பர் ஆன்ட்டி!…. அப்போ அதுலயே வச்சுக்கலாம்.. என்றாள் சைத்ரா
குதூகலமாக …
எதுக்குமா… இதெல்லாம்… தேவையில்லாம… ஆதி கிட்ட சொல்லிட்டே
பண்ணலாமே… மண்டபத்துல கிராண்டா பண்ணலாம்… என்றார்
சக்கரவர்த்தி…
இல்ல அங்கிள் என்னோட ட்ரீம் மேரேஜ் இப்படித்தான் இருக்கணும்னு
எனக்குள்ள ஒரு எதிர்பார்ப்பு இருக்கு… அதை நிறைவேத்திக்கணும்னு
நான் ஆசைப்படுறேன் என்றாள் சைத்ரா…
ஒரு பெருமூச்சுவிட்டு.. சரி மா… உன்னோட இஷ்டப்படி பண்ணிக்கலாம்…
என்றார் சக்கரவர்த்தி…
இந்த வார்த்தையை கேட்ட பின்பு தான் சைத்ராவிற்கு நிம்மதி பெரும்
மூச்சை வந்தது…
அதுவரையில் தாங்கள் வந்து சென்ற நிகழ்வு ஆதிக்கு தெரிய வேண்டாம்
என்று சொல்லிவிட்டு சென்றனர் சைத்ராவின் குடும்பத்தினர்…
காரில் மிதுலா, சைத்ராவிடம் இப்ப எதுக்கு ஆதிக்கு தெரிய வேணாம்னு
சொன்ன நாளைக்கு அந்த ஃபங்ஷன்ல வச்சு அவன் உன்ன வேணாம்னு
சொல்லிட்டா என்ன பண்ணுவ… என்று கேட்டார்..
சக்கரவர்த்தி அங்கிள் வெட்டிங் ஆனிவர்சரி அன்னைக்கு அவர் ஒன்னு
ஆசைப்பட்டு கேட்டு செய்ய சொல்லும் போது, மூஞ்சில அடிச்ச மாதிரி
செய்ய மாட்டேன் அப்படின்னு ஆதியால சொல்ல முடியாது…. அக்சப்ட்
பண்ணி தான் ஆகணும்..
அதனாலதான் அன்னைக்கு எங்கேஜ்மென்ட் வச்சுக்கலாம்னு நான்
சொன்னேன் என்றாள் சைத்ரா..
உனக்கு எப்படி அவங்க வீட்ல அடுத்து ஒரு பங்க்ஷன் வருதுன்னு தெரியும்
என்றார் மிதுலா…
எல்லா ரதியோட பிளான் என்றாள் சைத்ரா..
இப்படி எல்லாம் பண்ணி கண்டிப்பா அந்த ஆதிய தான் கட்டணுமா
என்றார் மிதிலா..
மாம்!… புடிச்ச பொருளை அடைந்தே தீரணும்… அதை எனக்கு சொல்லிக்
கொடுத்ததே நீங்கதான் என்றாள் சிரித்தபடியே.
**************
விக்ரமும், அகல்யாவும் சைலஜா மருத்துவமனையில் தங்கள் அழைப்பு
வரும் வரை காத்திருந்தனர்.
காத்திருக்கும் நேரத்தில் அகல்யாவின் கை விக்ரமின் கையை
இறுக்கமாக பற்றி இருந்தது.
அவள் உள்ளங்கையில் குளிர் பரவி இருந்தது அதை விக்ரமும்
உணர்ந்தான்.
என்னடி… கை இவ்ளோ சில்லுனு இருக்கு… என்றான். தன் இரு கைகளால்
அவள் ஒற்றை கையை பிடித்து படி..
கொஞ்ச நர்வஸ்ஸா இருக்குடா…
அகல்யா இவ்வளவு பதட்டமாக இருக்க ஒரு காரணம் உண்டு அருணின்
கல்யாணத்திலேயே இரண்டு மூன்று பேர் அகல்யாவிடம் குழந்தையை
பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். இன்னும் இரண்டு மூன்று
மாதங்கள் போனால் ரதிக்கு வளைகாப்பு நடைபெறும்… அப்பொழுது
ஒட்டுமொத்த கூட்டமே தன்னைத்தான் கேள்வி கேட்கும் என்று ஒரு
உறுத்தல்… என்னதான் இந்த கால நாகரிக பெண் என்றாலும்
அடுத்தவர்களைப் பற்றி பெரிதாக கவலைக் கொள்பவள் இல்லை
என்றாலும் இந்த ஒட்டுமொத்த சமுதாயமும் அவள் மேல் ஒரு பாரத்தை
இறக்குவதாய் ஒரு எண்ணம். ரதியின் வளைகாப்பிற்கு முன்னதாகவே
தான் கருத்தரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
என்கிட்ட பண்ண பிராமிஸ் மறந்துடாத… என்றான் விக்ரம் கொஞ்சம்
கடுமையாய்.. அப்படி இல்லன்னா நம்ம டாக்டரே பார்க்க வேண்டாம்
கிளம்பிடலாமா என்று கேட்டுக் கொண்டே அவன் எழ முயல .. அதற்குள்
இவர்களுக்கு டாக்டரிடம் இருந்து
அழைப்பு வர இருவரும் ஒரு சேர உள்ளே நுழைந்தனர்..
அவர்களைப் பார்த்த மருத்துவர் சைலஜா..
ஹாய் விக்ரம்!…. எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க நேரா
உள்ளேயே வந்து இருக்கலாமே என்றார்.
ஹாய் சைலஜா!.. இல்ல உள்ள வேற பேசன்ட் இருந்தாங்க.. அதனால தான்
டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு.. வெயிட் பண்ணனும் இப்பதான் வந்தோம்
என்றான் விக்ரம்.
குடும்ப உறுப்பினர்களின் நல விசாரிப்புகளுக்கு பின்…
அவர்களின் திருமண வாழ்க்கை உணவு முறை தாம்பத்திய வாழ்க்கை
என்று மருத்துவர் அவர்களிடம் ஆலோசித்துக் கொண்டு இருந்தார்..
பின் இருவருக்கும் பொதுவான சில தாம்பத்திய விதிகள், ஓவுலேசன்
பீரியட், அதிக சாத்தியக்கூறுகள் உள்ள தாம்பத்திய முறை, போன்ற
பொதுவான அறிவுரைகளை கூறி டெஸ்ட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பின் இருவருக்கும் சில பல டெஸ்டுகள் எடுக்கப்பட்டது..
ரிப்போர்ட்ஸ் நாளைக்கு ரெடியாயிரும் நீங்க நாளைக்கு வந்து
வாங்கிக்கோங்க… என்று மருத்துவமனையில் சொல்லி அனுப்பி
வைத்தனர்.
******************
மலர் எப்பொழுதும் போல் தனது வீட்டு வேலைகளை தொடர்ந்து
கொண்டு இருந்தாள்… ஆனால் மலரை பார்க்கும் பொழுதெல்லாம்
ரதிக்கு ஆத்திரம் மேலோங்கியது…
காலையில் தலைக்கு குளித்துவிட்டு தனது நீண்ட கூந்தலை விரித்து
விட்டு கழுத்தில் தழைய தழைய தொங்கும் மஞ்சள் தாலியடனும்..
நெற்றியில் குங்குமத்துடனும் மங்களகரமாக உரிமையுடன் அந்த வீட்டை
சுற்றி சுற்றி வருபவளை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு பற்றி
கொண்டு வந்தது…
மலர் அருணை கண்டு கொள்வதில்லை…. அருணும் மலரை பற்றி
யோசிப்பதில்லை…
ஆனால் ரதிக்கு மலரை பற்றிய சிந்தனையே மண்டைக்குள்
ஓடிக்கொண்டே இருந்தது….
சக்கரவர்த்தியின் “மருமகளே” என்ற அழைப்பு வேறு அவளை கடுப்பை
கிளப்பியது.
தனக்கு கிடைக்காத ஏதோ ஒரு உரிமையை அந்த தாலி மலருக்கு
கொடுப்பதாய் மனதிற்குள் மருகினாள் ரதி…
ஒரு நாள் ரதி… டைனிங் டேபிளில் ருத்ரா சக்கரவர்த்தியுடன் சேர்ந்து
உணவருந்தி கொண்டு இருந்தாள் அப்பொழுது மலர் பரிமாறும் பொழுது
ரதியின் மேல் உணவு சிந்தி விட… அவளுடைய உடை அழுக்கானதினால்
வந்த கோபத்தில் மலரை அடிக்க கை ஓங்க அவளை தடுத்து நிறுத்தினார்
சக்கரவர்த்தி..
என்னோட மருமகள நீ எப்படி அடிக்கலாம் என்று அவர் நியாயம் கேட்க…
இவ உங்க மருமகள்னா அப்ப நான் யாரு என்று ரதி கேட்க..
என் பையன் கட்டிய தாலி அவ கழுத்துல இருக்குற வரைக்கும் அவன் இந்த
வீட்டோட மருமக என்று சக்கரவர்த்தி கூற…
இந்தத் தாலி இருந்தா தானே அவளுக்கு இந்த வீட்ல இருக்குறதுக்கு
உரிமை இருக்கு… என்று கோவத்தில் மலரின் கழுத்தில் இருந்த
தாலியைப் பற்றி ரதி இழுக்க முடியல..
மலர், ரதியின் கையைப் பிடித்து தடுத்தாள்… சக்கரவர்த்தி பதறிப்
போனார்…
அந்த மஞ்சள் கயிறு அறுந்து போகும் நொடி நேரத்திற்கு முன்னே…
சக்கரவர்த்தியின் தொலைபேசி அடித்தது…
அந்தப் பக்கம் சொன்ன செய்தியை கேட்டு சக்கரவர்த்தி வேர்த்து
விதிர்விதிர்த்து பதட்டமானார்….
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️