அத்தியாயம் 09 (USAP)

அத்தியாயம் 09 (USAP)

 

சயந்தன் மயங்கி கிடந்த மனைவியை காதலியை என்று சொல்வதை விட அவனது ஆராய்ச்சி எலியை உற்று நோக்கி விட்டு தன் மகனையும் பார்த்தவன்,

 

” கலர் மட்டும் தான் என்ன மாதிரி முழி உதடு முடின்னு அத்தனையும் ஆத்தாள உரிச்சு வச்சிருக்கான்”

 

என்றவன் பயந்து விழித்துக் கொண்டிருந்த மகனது கன்னத்தில் முத்தம் வைத்து, “ஓய்! உன் பெயர் என்னடா?” என்றதும் அவனோ மிரண்டபடி மீண்டும் உதட்டை பிதுக்க

 

மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டவன் முத்தங்கள் வைத்து, “இப்போ கூட உங்க அம்மா மாதிரியே இருக்க நான் உனக்கு பெயர் வைக்கட்டுமா?”

 

என்று கேட்க ருக்கனோ, “ம்கூம் என்க்கு பெயர் இடுக்கு” என்று திக்கி திக்கி சொல்ல,

 

“ம்ம் சொல்லு” என்றான் அதிகாரமாக அவன் தோரணையில் பயந்த குழந்தையோ,

 

“சத்ருக்கன்” என்று ஒருவாறு கூற, “நைஸ் நேம், இப்போ என்ன அப்பானு கூப்பிடு”

 

என்றதும் குழந்தையோ மறுப்பாக தலையசைக்க, அவனோ நக்கலாக சிரித்தபடி, “அம்மாவுக்கு பயப்படுறீயா? அவள வேணும்னா கார்ல இருந்து தள்ளி விட்டுறட்டுமா ம்ம் சொல்லு”

 

என்றதும் குழந்தையோ பயத்தில் விம்ம, அவனுக்கோ எரிச்சல் வந்தது., “உங்க ஆத்தாக்காரி மாதிரி கண்ணுல டேம் வச்சிருக்கீயா? சும்மா சும்மா அழுதா எனக்கு கெட்ட கோபம் வரும்டா கண்ணா”

 

என்று மென்மையாக முடிக்க ருக்கனும் பயத்தில் விம்மல் விக்கலுடன் அவனை பார்க்க, “அப்பா சொல்லு” என்றதும் மறுப்பாக தலையசைத்து

 

“அம்மா சொல்ட்டும் அப்பறோம் நான் சொல்லுவேன்” என்றதும் வாய் விட்டு நகைத்தவன், “ம்ம் சூப்பர் அழுத்தத்துல என்ன போலவே இருக்க”

 

என்று கூறிக் கொண்டிருக்கும் போதே சயந்தனின் கார் அதிக ஆள் நடமாட்டமற்ற வனப்பகுதி போன்ற இடத்தை அடைந்திருக்க தனது ஆட்களுக்கு அழைப்பையேற்படுத்தியவன் சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு கொஞ்ச நேரம் காத்திருக்க அவனது ஆட்களும் அவ்விடத்தை நோக்கி ட்ரக்குடன் வந்திருந்தனர்.

 

ராதிகாவையும் சத்ருக்கனையும் ட்ரக்கினுள் கிடத்தி விட்டு, வாகன ஓட்டுனரிடம் சென்று,

 

“நீங்க போங்க ராம் நான் கூப்பிடுற நேரம் வந்தா போதும்” என்றதும் ஓட்டுனரும் வண்டியை கிளப்ப காரையே வெறித்து பார்த்திருந்தவன், சிரித்துக் கொண்டே,

 

“உன் மகனுக்கு எஞ்சினியரிங் சீட்டோ, டாக்டர் சீட்டோ கான்போர்ம் ராம்” என்றவன் கையில் ஒரு சிறிய அழைப்பேசி போன்ற சாதனத்தில் சிவப்பு பொத்தானை அழுத்தியபடி, “ஹாப்பி ஜர்னி” என்றது தான் தாமதம் அவன் வந்த உயர்ரக வாகனம் சுக்கல் சுக்கலாக வெடித்து சிதற தன் விசுவாசிகளிடம்

 

“கிளீன் இட்” என்று கட்டளை பிறப்பித்து விட்டு ட்ரக்கினுள் துள்ளி அமர்ந்தவன், “ஓகே போகலாம்”

 

என்று கூறியபடி மீண்டும் மகனை கையணைவுக்குள் கொண்டு வந்தான்.

 

மகனோ இவனது செய்கையில் மிரண்டு பார்க்க, அவனது நெற்றியில் முத்தமிட்டு நெஞ்சோடு சாய்த்துக் கொண்டவன், “பயப்படக் கூடாது அப்பாக்கு அடுத்து நீ தான் இதெல்லாம் பண்ணனும்”

 

என்று அறிவுரை கூறிய முதல் நல்ல அப்பன் இவனாக தான் இருப்பான். சயந்தனை பொறுத்தவரையில் அவன் செய்த தப்புகளுக்கோ செய்யப்போகும் தப்புகளுக்கோ தடயம் இருக்கக் கூடாது அதற்காக யாரை வேண்டுமானாலும் பலியிடுவான்.

 

ராதிகாவோ சயந்தனுக்கு சொந்தமான மருத்துவ பரிசோதனை நிலையத்தில் அவனது பிரத்யேக அறையில் இமைகளை கஷ்டப்பட்டு விரித்துக் கொண்டாள்.,

அவளை சுற்றிலும் இருட்டு தான் சூழ்ந்திருந்தது.

 

பயத்துடனே “ருகன் ருகன் இருக்கியா?” என்று மென்மையாக அழைக்க,

 

அங்கிருந்த மின் விளக்குகள் அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒளிரத் தொடங்கியது. அந்த வெளிச்சத்தில் கண் கூச மெதுவாக கண்களை மூடி திறந்து தன்னை சமன் செய்துக் கொண்டவள்,

 

எதிரில் குழந்தையை வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தவனை பார்த்தது தான் தாமதம் பயத்தில் படுக்கையோடு பல்லியை போல் ஒட்டிக் கொண்டாள்.

 

அதை அவதானித்த சயந்தனோ, “விபா குழந்தைய கவனமா பார்த்துக்கோ நான் உங்க மேடம் கிட்ட பேச வேண்டி இருக்கு” என்று அங்கு வந்த சேவகியிடம்

 

குழந்தையை கொடுக்க இவனிடமிருந்து தப்பித்து விட்டால் போதுமென நினைத்தானோ என்னவோ ருகன் அப் பெண்ணிடம் சமத்தாக இருந்துக் கொண்டான்.

 

அப் பெண் வெளியே செல்லும் வரை காத்திருந்தவன் கதவை அடைத்து சில பல சென்சார் பூட்டுக்களை கொண்டு கதவை முறையாக பூட்டி விட்டு,

 

அவளை நோக்கி அடி மேல் அடி வைத்து வந்தவன், “சிங்கத்தின் குகைக்கு இந்த அழகான மான் குட்டியை வரவேற்பதில் சிங்கம் பெரும் மகிழ்ச்சி அடைகிறது”

 

என்று நாடக பாணியில் குனிந்து நிமிர இங்கு ராதிகாவுக்கோ உதடு துடித்தது. கைகள் போர்வையை இறுக பற்றிக் கொண்டு நடுக்கத்தை குறைக்க முயன்று கொண்டிருக்க அவனோ அணிந்திருந்த பாத்ரோப்பை தூக்கி தூரப் போட்டவன்,

 

ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருக்க அவளோ அவனது முகத்தை கூட பார்க்க பிடிக்காது முகத்தை திருப்ப அவளது முகத்தை பலவந்தமாக திருப்பி,

 

“வாவ்! ஆப்டர் ப்ரெக்னன்சிக்கு பிறகு கூட ஹாட்டா இருக்கடி பாரேன் வீம்பா நிறைய விஷயத்த மிஸ் பண்ணிட்டேன்”

 

என்று அவன் பார்வை போன இடத்தை பார்த்ததும் பெண்ணவள் கைகளால் தன்னை மறைத்துக் கொண்டு,

 

“ப்ளீஸ் சார் எங்கள வாழ விடுங்க நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன் ஏன் என்னோட வாழ்க்கைய கெடுக்குறதிலேயே குறியா இருக்கீங்க?”

 

என்றதும் அவனோ அவளது அழு குரலிலும் உடல் நடுக்கத்திலும் மோகம் கொள்ள அவனால் மட்டுமே முடியும் ஒற்றை விரல் கொண்டு அவள் நெற்றியிலிருந்து கோடிழுத்து அவளது கழுத்தினருகே நிறுத்தியவன்,

 

“நீ பிறந்ததே பாவம்டி ஆனா பிறந்து தொலைச்ச என் கண்ணுல விழாம எங்கேயாவது நிம்மதியா வாழ்ந்திருக்கலாம்”

 

என்றபடி அவளது விரல்களுடன் விரல்கள் கோர்த்தவன், “ஆனா அதுவுமில்ல என் கண்ணுல பட்டு தொலைச்ச உன்ன சாதாரணமா கடந்து போயிரலாம்னு நினைக்கும் போது குறும்புத்தனம் பண்ணிட்டு என்னையே எதிர்த்து பேசிட்டு இருந்த அப்ப முடிவு பண்ணேன்

 

இந்த வெடக்கோழிய பிடிச்சு குழம்பு வைக்கணும்னு அதுக்கேத்த மாதிரி உன் அப்பனும் உன்ன திருத்தி டிசிப்ளினா மாத்த சொல்லி என்கிட்ட கேட்க விடுவேனா நானு?”

 

என்றவன் சேலையில் கைவைக்க பதறி போனவள் அவன் கையை தட்டி விட்டு, “சார் ப்ளீஸ் சார் நீங்க இருக்க திசை பக்கமே நான் வரமாட்டேன்”

 

என்று சேலையை மார்போடு பிடித்துக் கொண்டு கெஞ்ச அவனோ, “ம்ம் ஓகே இன்னைக்கு உன்ன விட்ரலாம் ஆனா இன்னும் ரெண்டே ரெண்டு வாரம் தான் நீ

 

எனக்கே எனக்கு பாப்பு உனக்கே தெரியும் நான் இந்த விஷயத்துல ரொம்ப மோசம் அதனால நாலு வருஷத்தோட ஆசைய ஒன்னா காண்பிக்க ஆவலா இருக்கேன்”

 

என்று கூறியது தான் தாமதம் அவன் காலை பற்றிக் கொண்டு, “சார், என்னால மறுபடி உங்க கூட அப்டி ஒரு வாழ்க்கைய நினைச்சு கூட பார்க்க முடியாது என்னையும் என் பிள்ளையையும் விட்ருங்க”

 

என்றதும் சயந்தனோ அவளை தூக்கி தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டவன், “உன் பிள்ளையா? பத்து மாசம் சுமந்தது மட்டும் தான் நீ, அதற்கான உழைப்பு என்னோடது மேடம் வேணும்னா இன்னொரு பத்து மாசம் வெய்ட் பண்ணு இன்னொன்னு பெத்துக்கலாம் அது பெண் குழந்தையா இருந்தா வெரி ஸாரி அது

 

எனக்கு தான் அடுத்து சார்னு கூப்பிடாத அது காலேஜ்ல முடிஞ்சு போச்சு இப்போ அத்தான், சயு, டார்லிங், பேபின்னு ஏதாவது செல்ல பெயர் வச்சு கூப்பிடு நம்ம உறவு முறைக்கு சார் மிஸ்ட்டர்லாம் ரொம்ப டிஸ்டன்ஸா பீல் ஆகுது நல்லாவுமில்ல”

 

என்று ஒரு வித மோகம் கலந்த நக்கலுடன் கூறியவன் சட்டென அவளை தன்னிடமிருந்து பிரித்தபடி,

 

“அரசு உனக்கு அண்ணனா?” என்று கேட்க ராதிகவோ திருதிரு விழிக்க அவனோ,

 

“சொல்லுடி?” என்று அழுத்தம் கூட்டி கத்த அவளோ நா குழறியபடி, “பெரியப்பா மகன்”

 

என்று கூற அவனோ, “ம்ம் உன் மேல ரொம்ப பாசம் போல?” என்றதும் அவளது தலையோ ஆமோதிப்பாக அசைய

 

“அப்போ நீ நம்ம உறவு அதாவது நம்ம பழகுன முறைய பத்தி அவன்கிட்ட சொல்லியிருக்க அதான் அவன் என் தங்கச்சிய பழிவாங்கி ரோட்டுல விட்ருக்கான்”
 

என்று கேள்வியாக நோக்க அவளோ மறுப்பாக தலையசைத்தபடி,

 

“இல்ல நீங்க காசை கொடுத்து மிரட்டி என் வேலை முடிஞ்சதுன்னு சொன்னதும் நானும் அம்மாவும் வேற ஊருக்கு வந்துட்டோம் சார் எந்த விதத்துலயும் அண்ணன கான்டெக்ட் பண்ணல இது என் புள்ள மேல சத்தியம் சார்”

 

என்று கூறியதும் அவனோ சட்டென, “என்னத்துக்கு புள்ளைய பெத்துக்கிட்ட? என் சொத்துக்காகவா? இல்ல என் மேல காதலா?”

 

என்று புகைக்க தொடங்க அவளோ, “ரெண்டுமில்ல சார் மனிதாபிமானம் என்ன நம்பி ஒரு உயிர் இருக்கு அதுக்கு தீங்கு விளைவிக்கிற அளவுக்கு நான் கேடு கெட்டவ கிடையாது”

 

என்றதும் அவனோ கையை ஓங்கியபடி, “அடிங்! அப்போ நான் கெட்டவனா?” என்று கேட்கவும் அவளுக்கு உள்ளுக்குள் உதறலெடுத்தது.,

 

ஆனால் மனமோ,’இதில் சந்தேகம் வேறா?’ என்று எண்ணவும் தவறவில்லை.

 

அதை வெளியே கூற முடியாது அமைதியாக இருக்க, அவனோ மீண்டும், “அபார்ட் பண்ண தானே சொன்னேன் எதுக்காக பெத்துக்கிட்ட? எனக்குன்னு எவ்வளவு கனவு இருந்துச்சு தெரியுமா?

 

இப்போ உங்க அண்ணன் என்ன பிளாக்மெயில் பண்றதால உன்ன மாதிரி ஒருத்திய கட்டிக்க வேண்டியதா இருக்கு இடியட் அதுல குழந்தைய வேற பெத்து வச்சிருக்க சைக் என் கனவே நாசமா போச்சு”

 

என்று எரிச்சலாக கத்த அவளுக்கு நிமிடத்திற்கு நிமிடம் பச்சோந்தியாய் மாறும் அவன் கேவலமான குணத்தை பார்த்து அருவறுப்பு தான் எஞ்சியது. ஒரு கல்லூரி ஆசானாக அவளிடம் நடக்காது முறைத்தவறி பழகியது அவன் பிழை,

 

ஆனால் அதற்கு பொறுப்பேற்க அவன் மனம் தயாரில்லை. இப்போதும் கூட அரசுவால் ஆபத்து வந்து விடுமோ என்று தான் தேடி வந்ததே தவிர பந்த பாசமில்லை. அவளுக்கோ கோபம் சுறுசுறுவென வர,

 

 

“சார்! இப்பையும் உங்கள யாரும் இங்க புடிச்சு வைக்கல என் பிள்ளைய நான் வளர்த்துப்பேன் நீங்க உங்களுக்கு பிடிச்ச உங்க ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க”

 

என்றதும் அவனோ இளக்காரமாக பார்த்து விட்டு, “குழந்தைய பெத்துக்கிட்டு இப்போ தான் பேச்சு பேசுறா, சரி அப்போ நம்ம குழந்தை வளர்ந்து அம்மா அப்பா எங்கனு கேட்டா என்ன சொல்லுவ?”

 

என்று கேட்க அவளோ இவ்வளவு நேரம் பயந்து நடுங்கியதற்கு எதிர்மாறாக நக்கல் சிரிப்புடன், “உனக்கு அப்பாயில்ல இறந்துட்டார்னு சொல்லி வளர்ப்பேன்” என்றது தான் தாமதம்

 

சயந்தன் அவளது கழுத்தை இறுக பற்றி இருந்தான். அவனுக்கோ உள்ளுக்குள் அவள் மீது காதலுண்டு அதை வெளிக்காட்டும் அளவு மனமுமில்லை அதை விட வாயில் ஏழரை நாட்டு சனி வேறு, ஒரு நேரம் காதலை காட்டுபவன் மறு நேரம் அரசுவின் மீதுள்ள வெறுப்பையும் அவளிடம் தான் காட்டுவான்.

 

 

இங்கு பிறைமதியோ கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு, “எதுக்கு இப்ப அவக்கிட்ட கண்டதும் சொன்னீங்க?” என்று கேட்க

 

அவனோ, “உண்மைய தானே சொன்னேன்” என்று அசால்ட்டாக சொன்னவனை முறைத்து பார்த்தவள்,

 

“இங்கே பாருங்க நீங்க தான் என் வாழ்க்கைனு தேங்கி நிற்ப்பேன்னு நினைசீங்களா? நான் ஆறு மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு ஓடிட்டே இருப்பேன்”

 

அவனோ நக்கலாக விசிலடித்து கூலர்ஸை இறக்கி ஏற்றியபடி, “அப்போ நான் சமுத்திரம் மாதிரி ஆறு எங்க ஓடுனாலும் கடைசில என்னோட தான் கலக்கணும்”

 

என்றதும் அவளோ சட்டென, “நான் லூனி நதி மாதிரி கடல்ல கலக்கமாட்டேன்”

 

என்றபடி முகத்தை திருப்ப அவனோ, “அப்போ நான் தார் பாலைவனம் மாதிரி கடல்ல கலக்காட்டி என்ன?, மணலோடு கலந்திரலாம்” என்று கூற

 

அவளோ கோபத்தில், “சரி விடுங்க நான் ஆறே இல்ல” என்றதும் அவனோ

 

“அப்போ தேங்கி நிற்கிற சதுப்பு நில நீரா நீ அதுல உள்ள கண்டல் தாவரம் நானா?”

 

என்று நக்கலாக பாட அவளோ, “உங்ககிட்ட வாயை கொடுத்தது என் தப்பு தான் சாமி என்ன மன்னிச்சு விட்ருங்க” என்று கும்பிட

 

அவனோ, “நான் இன்னும் ஆரம்பிக்கவும் இல்ல நீ இன்னும் வாயை கொடுக்கவுமில்ல”

 

என்றதும் அவளோ, “ச்சைக் பொறுக்கி” என்று வாயிற்குள் முனக,

 

அவனுக்கோ அவளது ‘பொறுக்கி’ என்ற அழைப்பில் உடல் ரத்தமென சிவந்தது. கோபத்தினால் அல்ல ஆசையால் அவள் மீது கொண்ட மோகத்தால்,

 

முதல் முத்தத்தின் முடிவில் கூட அவள் முதலில் கூறிய வார்த்தை அது தானே ஜீப்பை கடற்கரையோரம் சற்று மறைவான இடத்தில் நிறுத்தியவன் அவளது கண்ணாடியை கழற்றி ஓரம் வைத்து விட்டு அவளது இடுப்பில் கைவைத்து தூக்கி தனது மடியில் இருத்திக் கொண்டு தன் இதழ்களை நாவால் வருடிக் கொண்டு

 

முத்தமிட்டு முத்தமிட்டு கொள்ளை கொள்ள அவளும் அவனுக்கு இசைந்துக் கொடுக்க அவனுக்கோ ஏக குஷி அவள் மனதில் தனக்கு இன்னும் இடமுண்டு என நினைத்து அவளது உடலிலும் அவனது கரங்கள் உறவாடி விளையாட அதற்கும் அவள் மறுத்தாளில்லை. கடைசியில் முத்த சண்டை முடிவுக்கு வர,

 

அவளோ அவனை பார்த்துக் கேட்ட கேள்வியில் இப்போது உடல் கொதித்தது. கண்கள் சிவந்தது சட்டென அவளை தன் மாடியிலிருந்து இறக்கி தள்ளியவன்,

 

“பஸ்ஸ புடிச்சு வீடு போய் சேருடி இங்கே இதுக்கு மேல ஒரு நிமிஷம் இருந்தாலும் அடிச்சே கொன்னுருவேன் உன்ன”

 

என்றதும் அவளோ, “நீங்க சொல்லும்போது இனிச்சது நான் சொல்லும் போது உள்ளுக்குள்ள துடிக்குதோ?” என்று நக்கலாக ஒற்றை புருவமுயர்த்த,

 

அவனோ பல்லைக் கடித்துக் கொண்டு, “போடின்னு சொன்னேன் போயிரு”

 

என்று கூற அவளோ அவனது கையில் ஒரு கல்யாண பத்திரிகையை திணித்து விட்டு,

 

“உங்களுக்கு சேர வேண்டியத வட்டியும் முதலுமா கொடுத்தாச்சு இந்தாங்க என் கல்யாண பத்திரிகை”

 

என்று கூறிவிட்டு செல்ல அவனுக்குள் உறங்கி கிடந்த மிருகத்தை அவளுக்கே தெரியாமல் தட்டி எழுப்பியிருந்தாள்.

 

கல்யாண பத்திரிகையை பார்த்தவன் மனதுக்குள், ‘இன்னைக்கு எவ்ளோ ரேட்டிங் கொடுப்பீங்க என் பெர்போமான்ஸுக்கு உங்க பிரெண்ட்ஸ்கிட்ட காலேஜ்ல சொன்ன மாதிரி டூ ஸ்டார்ஸா இல்ல முன்னேறிட்டனா?’

 

என்று நக்கலாக கேட்டது மீண்டுமீண்டும் தலைக்குள் ஓடியது., கண்களோ போகும் பிறைமதியை வெறித்தபடி,

 

“ஆழம் தெரியாம காலை விட்டுட்ட உனக்கு இருக்குடி” என்றவன் திருமண பத்திரிகையில் இருந்த சதீஷ் என்ற பெயரை பார்த்தவன்,

 

“ம்ம் சதீஷ்” என்று கூறிக் கொண்டே தனது சகத்தோழனுக்கு அழைத்து அந்த சதீஷை பற்றி ஆதி முதல் அந்தம் வரை அலசும்படி கட்டளையிட்டவன்

 

வழமையாக செல்லும் ஜிம்முக்கு சென்று அளவுக்கதிகமாக தனது வெறி அடங்கும் வரை உடற்பயிற்சி செய்யத் தொடங்கியிருந்தான்.

                                                   தொடரும்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top