அசுரன் 35
தனது வில்லாவில் இரு கைகளையும் தலைக்கு கொடுத்து… படுக்கையில்
படுத்தபடி விட்டத்தை பார்த்துக்கொண்டு சிந்தனையில் மூழ்கி
இருந்தான் ஆதி.
அவனை சுற்றி பேரமைதி…
அவனுக்கு தனிமை பிடிக்கும் தான்… அவனிடம் நிரந்தரமாக இருப்பது
அதுவே என்று அவனுக்கு தெரியும் அதனால் அதனையே பிடித்தமானதாக
மாற்றிக் கொண்டான்… பெரும்பாலும் ஆதி வீட்டிற்கு
வேலைக்காரர்களை நியமிப்பது இல்லை. ஒரே ஒருவர் மட்டும் தோட்டத்து
வேலை வீட்டை பராமரிப்பது போன்றவைகளை வந்து செய்துவிட்டு
செல்வார்…. பெரும்பாலும் அவனே அவனுக்கு என்ன தோன்றுகிறதோ
அதை சமைத்து சாப்பிட்டுவிட்டு பாத்திரத்தை சுத்தப்படுத்தி
வைத்துவிட்டு படுத்து விடுவான். வெளியில் தான் பல கோடிக்கு அதிபதி
ஆடம்பரமாக தெரிபவன்… உள்ளே மிடில் கிளாஸ் மாதவன் தான்…
தனிமையில் புத்தகங்கள் படிப்பான், கவிதை வாசிப்பான், உடற்பயிற்சி
செய்வான் நேரம் கிடைத்தால் தோட்ட வேலையும் செய்வான்….
ஒரு காலத்தில் அவன் சிறு பையனாக இருந்த பொழுது அவரது வீட்டில்
அம்மா அப்பா தாத்தா பாட்டி சித்தி சித்தப்பா என்று எப்பொழுதும்
ஆட்கள் நடமாடிக் கொண்டு உயிர்ப்புடன் இருந்த வீட்டில்
நிசப்தம் என்பதே ஒரு நாளும் இருக்காது… அப்படியே வாழ்ந்து
பழக்கப்பட்டவனுக்கு ஒரு நாள் வாழ்க்கை பேரமைதியை பரிசாக
கொடுத்தது… அன்றிலிருந்து இன்று வரை அது தான் அவனுக்கு நிரந்தரம்
என்று அவனும் அறிவான். இதிலிருந்து தன்னை சிறிது காலம் தற்காத்துக்
கொள்ளவே அருண் வீட்டிற்கும் அவ்வப்போது சென்று வருவான்
நண்பர்களுடன் இருப்பது ஒரு மன நிம்மதியை கொடுக்கும்…
ஆனால் இனிமேல் அதற்கு அனுமதி இல்லை..
ஆம் இன்றுடன் அவன் தனது வில்லாவிற்கு வந்து ஒரு மாதத்திற்கு மேல்
ஆகிவிட்டது.
நிச்சயம் நின்று போன மறுநாள்…
மதிய உணவு இடைவேளையின் போது ஒரு பைலை எடுக்க வந்த ஆதியை
தடுத்து நிறுத்தினார் ருத்ரா..
என்ன ஆதி உன் மனசுல நினைச்சுகிட்டு இருக்க நேத்து நாங்க அவ்வளவு
தூரம் உன்கிட்ட சொல்றோம் கூப்பிடுறோம் எங்களை மதிக்காம நீ
பாட்டுக்கு எடுத்து எறிஞ்சிட்டு… போய்கிட்டே இருக்க… என்றார்
சைத்ரா ஓட அம்மா அப்பா முகத்தில் எங்களால முழிக்க முடியல ரொம்ப
அவமானமா போச்சு எங்களுக்கு…
ஒரு சபையை கூட்டி வச்சு அதுக்கு நடுவுல நீ எங்களை
அவமானப்படுத்திட்டு போறதுக்கு தான் உன்ன இத்தனை நாளா நாங்க
வளர்த்தோமா என்றார் ருத்ரா!…
(உண்மையில் ருத்ரா தான் ஆதியை வளர்த்தாரா… என்று
கேட்டோமேயானால் அவர் அருணையே வளர்க்கவில்லை அப்புறம் எங்கு
ஆதியை வளர்க்க…)
இந்த விஷயத்தை பத்தி நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லி
இருந்தீங்கன்னா… ஆரம்பத்திலேயே இது வேணாம்னு சொல்லி நான்
தடுத்து இருப்பேன்… கடைசி நிமிஷத்துல வந்து என்கிட்ட சொன்னா நான்
வேற என்ன பண்ண முடியும்…
நான் ஆல்ரெடி சைத்ரா கிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன் உனக்கும்
எனக்கும் செட் ஆகாது அப்படின்னு அதையும் மீறி உங்ககிட்ட வந்து பேசி
நிச்சயம் வரைக்கும் கொண்டு வந்து உங்களை அவமானப்படுத்துனது
சைத்ரா ஃபேமிலி தான்… நீங்க கோபப்படனும்னா அவங்க கிட்ட தான்
படணும்… அண்ட் ஒன் மோர் திங்.. உங்க மேல உள்ள பாசத்த… பிடிக்காத
கல்யாணத்தை பண்ணிக்கிட்டு தான் நிரூபிக்கணும்னு அவசியம்
கிடையாது… பின்னாடி ஒரு நாள் எனக்கு பிடிக்காம தான் இந்த
கல்யாணத்தை பண்ணிக்கிட்டு நான் வாழ்கிறேன் அப்படின்னு
அங்கிளுக்கு தெரிஞ்சா அவர் மனசு ரொம்பவே உடைஞ்சி
போயிடுவாரு…. அதுக்கு முன்னாடியே எந்த பிரச்சனையும் இல்லாம
முகத்துக்கு நேரா சொல்லி இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்துவது
தான் எல்லாருக்குமே நல்லது… என்று கர்ஜித்தான் ஆதி.
அவன் கர்ஜனைக்கெல்லாம் பயந்தவர் இல்லையே ருத்ரா…
சைத்ராவுக்கு என்ன குறைச்சல் ஆதி… அழகு அறிவு அந்தஸ்து
எல்லாத்துலயுமே அவ நமக்கு சரிசமமானவ தான்… நாங்க உனக்கு ஒரு
பொண்ணு பார்த்து இருந்தாலும் சைத்ரா மாதிரி தான் பார்த்திருப்போம்
நாங்க பார்த்த பொண்ணா நெனச்சு நீ கல்யாணம் பண்ணிக்க கூடாதா…
நீங்க பார்த்த பொண்ணாவே சைத்ராவ கூட்டிட்டு வந்தாலும் நான்
கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் … இன்னும் சொல்லப்போனால் எனக்கு
கல்யாணமே வேணாம்…
சமாளிக்கிறதுக்காக ஏதாவது சொல்லாத ஆதி… நீ ஏன் சைத்ராவை
வேணாம்னு சொல்றனு எனக்கு வேலிட் ரீசன் சொல்லு…. நான்
ஏத்துகிறேன் என்றார்…
ஒரு கணம் யோசித்தவன் என்ன சொல்வான்… எளிதில் நண்பர்களுடன்
பகிர முடிந்ததை நடுக்கூடத்தில் வைத்து பகிர முடியாதே…
புடிக்கல அப்படிங்கறதுதான் காரணமே…. என்றான் அழுத்தமாய்…
ஓஹோ இப்ப புரியுது ஆதி… நீ எங்கள அவமானப் படுத்தனும்
அப்படிங்கறதுக்காகவே காரணமே இல்லாம… இதை செஞ்சிருக்க…
என்று ருத்ரா சொன்னதையே திரும்ப அழுத்தி சொல்ல…
சரி … உங்களுக்கு அப்படி தோணுச்சுன்னா அதைக்கூட நெனச்சுக்கோங்க
எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறினான் ஆதி.
ஓஹோ அந்த அளவுக்கு வளர்ந்திட்டியா ஆதி… அப்போ இனிமேல்
உனக்கு இந்த வீடு தேவைப்படாது அதனால நீ இங்கிருந்து நிரந்தரமா
கிளம்பலாம்…. இனி இங்க வராத எங்க யாரையும் பாக்கணும்னு…
அவசியமும் உனக்கு இல்லை… என்று முகத்தில் அடித்தால் போல்
கூறினார் ருத்ரா.
இங்கு நடந்த அனைத்து சம்பாஷனைகளையும் சோபாவில் கால் மேல்
கால் போட்டபடி கர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ரதி .
அதுதான் உங்க விருப்பம் நா நான் இனிமேல் இங்கே வரமாட்டேன்!…
இதில் பெரிய அதிர்வு ஒன்றும் இல்லை ஆதிக்கு…. இது என்றாவது
ஒருநாள் நடக்கும் என்று அவனுக்கு தெரியும் அதனாலேயே தனியாக
வில்லா எடுத்து தங்கி இருந்தான்… அது எதிர்பாராத விதமாக இன்று
நடந்து விட்டது…
ஒரு நிமிஷம் ஆதி என்று கூறி… வாயிலை நோக்கி நடந்து செல்பவனை
தடுத்து நிறுத்திய ரதி. மெதுவாக எழுந்து அவனிடத்தில் வந்து….
அதுதான் இனிமேல் உன்ன இந்த வீட்டு பக்கம் வர வேணாம்னு
சொல்லிட்டாங்க இல்ல…. உங்க பொருளையும் எடுத்துட்டு கிளம்புங்க…
அதை எல்லாம் வச்சு நாங்க என்ன பண்ண போறோம்… இடம்மாவது
காலியாகும் என்று அலட்சியமாக கூறினாள்…
அவனுக்கு புரிந்தது இதற்கெல்லாம் காரணகர்த்தாவே இவள் தான் என்று.
உடனே தனது போனை எடுத்து தனது காரியதரிசி ரவிக்கு அழைத்த ஆதி,
ரவி… அருண் வீட்ல இருக்கிற என்னோட எல்லா திங்க்ஸையும் என்னோட
வீட்டுக்கு ஷிப்ட் பண்ணிருங்க… இமீடியட்டா… என்று அழுத்தமாக
கூறினான்..
பின் போனை கட் செய்து தனது கோட் பாக்கெட்டில் வைத்தவன் ரதியை
ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டையும் திரும்பி ஒரு பார்வை
பார்த்துவிட்டு வெளியே கிளம்பி விட்டான்.
வீட்டில் அலுவலகம் செல்வோர் அனைவரும் அலுவலகம் சென்று
விட்டனர்… சுதாவும் மலரும் கூட காய்கறிகள் வாங்கி வர கடைக்கு
சென்று விட்டனர்…
ஆதியை அந்த வீட்டை விட்டு அனுப்பியதைப் பற்றி சக்கரவர்த்திக்கு
தகவல் தெரிவிக்க அங்கு வேறு யாருமில்லை..
அதனால் இன்னமும் விக்ரமிற்கும் அருணுக்கும் ஆதி வெளியேறிய
விஷயம் தெரியாது.. இரண்டு இடத்திலும் மாறி மாறி ஆதி
இருப்பதினால்… சில காலம் இங்கிருந்து விட்டு நேரம் கிடைக்கும்போது
அங்கு வந்து விடுவான் என்று இரு நண்பர்களும் நினைத்துக்
கொண்டிருந்தனர்.
ஆதியின் பொருட்கள் அந்த அறையை விட்டு அகற்றப்பட்டது
நண்பர்களின் பார்வைக்கு வர வாய்ப்பு இல்லை…
*******************
தான் எடுத்த காரியத்தை சிறப்பாக நடத்தி முடித்த திருப்தியில்…
முகத்தில் வன்ம சிரிப்புடன் தனது அறைக்கு சென்று… படுக்கையில்
சாய்ந்தால்… ரதி.
இதுவரைக்கும் அவள் கணக்கில்லாமல் அவமானப்படுத்திய ஆண்கள்
அனைவருக்கும் சேர்த்து ஆதி அவளை அவமானப்படுத்தியதாய்
உனக்கு கர்வம் இருக்க வேண்டியது தான் ஆதி ஆனா அத நீ என்கிட்ட
காமிச்சு இருக்க கூடாது. தப்பு பண்ணிட்டா அது தப்பு பண்ணிட்ட…
இதுக்கு ஒரு நாள் நீ பதில் சொல்லியே ஆகணும். இன்று மனதிற்குள்
நினைத்துக் கொண்டாள்.
அதன் முதல் படியாய் இதோ இன்று சக்கரவர்த்தியின் வீட்டில் இருந்து
அவனை பிரித்தாயிற்று… அடுத்து அவளின் இலக்கு மூவரின்
பிரண்ட்ஷிப்பை பிரிப்பதே…
இதற்கு முன் அவர்களின் நட்பை பிரிக்க அவள் எதுவும் செய்யவில்லையா
என்று கேட்டால் நிறையவே செய்திருக்கிறாள்…
அருணுடன் கூடல் முடிந்து வெற்றுடலாய் படுக்கையில் இருக்கும்
பொழுது…
பேபி… உங்க பிரண்டு இங்கேயே தங்குறாரு… அவருக்கு வீடு இல்லையா…
அவங்க வீட்டுக்கு போக மாட்டாரா…. என்று கேட்க…
அவன் சின்ன வயசுல இருந்து எங்க கூட தான் இருக்கான் பேபி…
அப்பப்போ அவன் வீட்டுக்கு போயிட்டு வருவான்.. ஏன் அதனால உனக்கு
என்ன பிரச்சனை என்று சற்று காட்டமாய் அவன் குரல் மாற….
ஒன்னும் பிரச்சனை இல்ல… ஆனா அவர் என்ன பார்க்கிறதே சரியில்ல
ஒரு மாதிரி… முழுங்குற மாதிரி பாக்குறாரு… என்று அருணை
கட்டியணைத்தபடி அவன் மார்பில் வருடி கொண்டே ரதி ஆதியை குற்றம்
சொல்ல…
அவளை குனிந்து ஒரு கணம் பார்த்தவன்… நீ சொல்றது எதுவும் நம்புற
மாதிரி இல்ல ரதி. அவன் பொண்ணுங்க பக்கமே திரும்ப மாட்டான்….
அவனா போய் எந்த பொண்ணு கிட்டயும் பேசினதா சரித்திரமே இல்ல…
அவன் எதார்த்தமா பார்த்திருப்பான்… உனக்கு அப்படி தெரிஞ்சி
இருக்கலாம்… என்றான் அழுத்தமாய்…
ஒருவேளை என்ன மாதிரி அழகான பொண்ணுங்கள பார்த்ததிலேயே
என்னவோ என்று ரதி கேலியாய் கூற…
ஒரு சிறு கோபமூச்சுடன், அவளை விட்டு ஒரு அடி நகர்ந்து
படுத்தவன்.. அவளின் முகத்தை நேரே பார்த்து…
உன்ன மாதிரி இல்ல… உன்ன விட அழகான பொண்ணுங்களே அவன
அப்ரோச் பண்ணிருக்காங்க… சாரி நாட் இன்ட்ரஸ்ட்… அப்படின்னு
சொல்லிட்டு திரும்பி கூட பாக்காம போய்கிட்டே இருப்பான்… சிறிது
நேரத்திற்கு முன் “பேபி” என உருகிய குரலாக இது என்று யோசிக்கும்
அளவுக்கு அவனது குரல் காட்டமாய் வெளியே வந்தது.
அவ்வளவு எளிதில் நண்பனை விட்டுக் கொடுத்து விடுவானா என்ன…
ஆதியை பற்றிய அருண் எண்ணத்தை கண்டு, கடுப்பாய் போனாள் ரதி.
அதனாலயே அருணை விட்டுவிட்டு ருத்ராவின் பக்கம் போய் நின்றாள்
ரதி. ருத்ராவை சரியான நேரத்திற்கு ஏற்றிவிட்டு சிறிது திரியை தூண்டி
விட்டால் எரிமலையை கொந்தளித்து விடுவார் என்று தெரிந்தே…
அன்று வீட்டில் நடந்த பார்ட்டியில்… சைத்ராவிடம் போட்டு வாங்கி…
சக்கரவர்த்தி மற்றும் ஆதியின் உறவைப் பற்றி எடுத்துக் கூறி… அவளை
வீட்டுக்கு வரவழைத்து… அங்கு சக்கரவர்த்தியின் திருமண நாள்
விழாவை பற்றி கூறி … மறைமுக நிச்சய விழாவை ஏற்பாடு செய்ய ஐடியா
கொடுத்து… ஆதியின் திமிரை பற்றி தான் அவளுக்கு நன்றாக தெரியுமே
இந்த நிச்சயம் கண்டிப்பாக நடக்காது என்று அவளுக்கு முன்னமே
தெரியும்… யார் சொன்னாலும்… அவன் சைத்ராவை ஏற்றுக் கொள்ள
மாட்டான் சைத்ரா நினைத்தது நடக்காது. அந்த அவமானத்தை எடுத்து
சொல்லி ருத்ராவை பகடைக்காய்யாய் பயன்படுத்தி ஆதியை
வெளியேற்றி விட்டாள் ரதி.
ஆனால் ஏன் இவ்வளவு வன்மம்…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️