அத்தியாயம் 13
சயந்தனுக்கு அன்று பல நாட்கள் கழித்து நிம்மதியான உறக்கம் கிட்டியிருந்தது. இருந்தும் முதலில் தூக்கத்தை விட்டு விழித்துக் கொண்டது என்னவளோ அவன் தான் அவன் ஒரு பக்க மார்பில் முகம் புதைத்து உறங்கும் அவன் அழகியை தான் பார்த்திருந்தான். அவள் மென் இதழ்கள் அவன் மார்பில் எக்கு தப்பாய் உரச உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது.
உடலிலும் நரம்புகள் புடைத்துக் கொண்டு அவளுடன் காதல் யுத்தம் புரியும்படி ஒவ்வொரு அணுவும் கெஞ்ச மோகத்தை அடக்க படாத பாடு பட்டு போனான். இருந்தும் அவளை விட்டு பார்வை ஒரு விநாடி கூட விலகவில்லை.
அவனிடம் என்ன இல்லை? எல்லாம் இருக்கிறது பணம், பதவி, அதிகாரம், ஆடம்பரம் அனைத்தும் உண்டு அதையெல்லாம் தக்க வைத்துக் கொள்ள சுயநலமும் உண்டு. ஆளுமையும் உண்டு.,
கட்டுடலும் பிடரி மயிரும் கண்களில் தெரியும் தேஜஸும் முறுக்கி விட்ட மீசை தாடியும் ராஜ கம்பீரத்தை கூட்டி தான் காட்டும், பெண்களுக்கு மட்டுமா சந்தன நிறம் அழகு அவனுடைய அழகை மிகைப்படுத்தி காட்டுவதே அவன் நிறம் தான்,
அன்று ராவணை பாடவும் எழுதவும் கம்பரும் வால்மீகியும் இருக்க இன்று இந்த கலியுக ராவணனை பாட தான் கவிகள் இல்லாமல் போயினர். அவன் கம்பீரத்தையும் தந்திரத்தையும் ஆளுமையும் அழகையும் தங்கை மேல் வைத்த பாசத்தையும் பாட தான் புலவர்கள் அற்று போயினர்.
அவன் அழகன் அல்ல பேரழகன் ஆண்களே பொறாமை படும் ஆணழகன் தான் ஆனால் அவனிடம் இல்லாத ஒன்று உண்டு அது தான் ராதிகாவின் காதல், அவள் காதலை பெறுவதற்கு இதுவரை என்ன செய்திருக்கிறான்.
என்று கேட்டால் ஒன்றுமில்லை என்று தான் கூற வேண்டும். காதலை வெளிப்படையாக காட்ட தெரியாதவன் காமத்தையும் தன் தேவையையும் மாத்திரம் பூர்த்தி செய்துக் கொண்டால் எந்த பெண்ணுக்கு தான் காதல் வரும் ஆனால் அதை புரிந்துக் கொண்டு விலகி போகுமளவுக்கோ இல்லையென்றால் அவளை விட்டு விலகுமளவுக்கோ அவன் ஒன்றும் நல்லவனில்லை.
அவளது தூக்கம் கலையாது அவளை படுக்கையில் கிடத்தியவன் நாக்கை கன்னக்குழியில் சுழற்றி கொடுப்புக்குள் சிரித்தபடி,
உறங்கும் பெண்ணவளின் இதழ்களில் மென்முத்தம் பதித்தவனுக்கு இன்னும் மோகமும் காதலும் கூடியது. தன்னை அழிக்க தனது சாம்ராஜ்ஜியத்தை சிதைக்க வந்தவளின் கண்களில் தெரிந்த பொய்யான காதலுக்கே கட்டுண்டு போனானே
பெருமூச்செறிந்தான் இன்று கிளம்பியே ஆகவேண்டிய சூழல் எப்படியாவது அகமியின் திருமணத்தை நிறுத்த வேண்டுமே,
அதனால் தான் இல்லையென்றால் இன்னும் பல காரண காரணிகளை உருவாக்கியாவது அவள் மனதில் இது தான் உன் வாழ்க்கை நான் தான் உன் கணவன் என்று கூடல் மூலமே தனது காதலை காமத்தை புரிய வைத்திருப்பானோ என்னவோ, ஆனால் அவள் காதலுக்காக கேட்ட பரிசு அவன் அழிவு அதையும் கொடுக்க தயங்கவில்லை. இனி நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலையில்
தானும் குளித்து மகனை குளிப்பாட்டி உடைமாற்றி சோறூட்டியவன்,
“இவ்வளவு செஞ்சிருக்கேன் அப்பா சொல்லுடா அப்பான்னு சொல்லு” என்று குழந்தையை தலைகீழாக காலை பிடித்து வௌவால் போல தொங்க விட,
ருகனோ, “ஆஆ ம்மா ம்மா அஆவ்வ்வ் ஆஆ” என்று அலற ராதிகவோ அப்போது தான் குளித்தவள் அவசர அவசரமாக சேலையை சுற்றிக் கொண்டு குளித்த கூந்தலை அள்ளி முடிந்துக் கொண்டு ஓடி வர,
சயந்தனோ, “சும்மா கத்தாத அப்பான்னு சொல்லு இல்ல சொல்லாட்டியும் பிரச்சினையில்ல அதான் என்னோட வேலை சிறப்பா முடிஞ்சதே”
என்று குளித்து உடைமாற்றி வந்த ராதிகாவின் கழுத்தில் பதிந்திருந்த பற்தடத்தை பார்த்துக் கொண்டே மோகக் குரலில் கூற,
அவளோ எரிச்சலுடன், “எதுக்கு இப்போ குழந்தைய பயமுறுத்துறீங்க?” என்றதும்
சயனோ வாய் விட்டு சிரித்தபடி சத்ருக்கனிடம், “ஓஹ் பயப்படுறீயா? இல்ல அம்மா முன்னாடி நடிக்கிறீயா?”
என்று கூர்ந்து அளவிட்டபடி கேட்க சத்ருக்கனும் திரு திருவென விழித்து வைத்தான்.
ஆம் சத்ருக்கனுக்கு சயன் தந்தை என்பது தெளிவாக புரிந்தது. ராதிகா சயந்தனின் உரையாடல் சயந்தன் அவனை ஏந்திக் கொள்ளும் போது சயனிடம் தோன்றும் மெல்லிய நடுக்கம் அடாவடியான பாசம் எல்லாம் புரிய தான் செய்தது.
இருந்தும் தந்தையை போல் அழுத்தமானவன் வைராக்கியமானவன் ஆயிற்றே அன்னை கூறாது ‘அப்பா’ என கூற கூடாது என்ற கர்வம் தான் அவனை தடுக்கிறது.
குழந்தையை நேராக பிடித்தவன் மேலே தூக்கி போட்டபடி, “டேய்! என்ன அம்மாவுக்காக பழிவாங்குறீயா ராசா? அதெல்லாம் என்கிட்ட முடியாது ஒழுங்கா அப்பா இல்லாட்டி டேடி ஐ லவ் யூனு சொல்லு உனக்கு விளையாட ஒரு தங்கச்சி பாப்பா ரெடி பண்ணி தாரேன்”
என்று மகனிடம் ஒப்பந்தம் போட ருகனோ, “அதெல்லாம் வேணாம் எங்க அம்மா என்ன சொல்லுறாங்களோ அதை செய்ங்க நான் அப்பான்னு கூப்பிடுறேன்”
என்று மகன் பதிலுக்கு ஒப்பந்தம் போட அவன் கன்னத்தில் முத்தமிட்டவன், “அப்போ கண்டிப்பா இன்னைக்குள்ள என்ன அப்பான்னு கூப்பிடனும் கூப்பிட்டே ஆவ”
என்று கூறிக் கொண்டே ராதியின் கையில் ஒரு கோப்பை திணிக்க அவனை வியந்து பார்த்தவள் அவன் கொடுத்த கோப்பை புரட்டியபடி எச்சில் கூட்டி விழுங்கியவள் அவனை ஒரு பார்வை பார்க்க சயனோ,
“சில சமயம் கொடுத்த வாக்கை நானும் காப்பாத்துவேன் என்ன நீ நம்பலாம்” என்று நக்கலாக கூறிக் கொண்டிருக்கும் போதே அவன் அழைப்பேசி ஒலிக்க அதையேற்றவனுக்கு அப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ,
“இன்னும் கொஞ்சநேரத்துல அங்கே இருப்பேன்” என்று ஒருவித அழுத்தத்துடன் கூறியவன்,
அங்கிருந்து புறப்பட, இதே சமயம் அகமேந்தியோ மணப்பெண்ணுக்குரிய ஆடை அலங்காரத்துடன் சர்வ லட்சணத்தில் மகா லக்ஷ்மியாக ஜொலிக்க அரசு தான் அவளது அழகில் மெய் மறந்து போனான். மனதுக்குள்,
‘என்னைக்கு இருந்தாலும் இந்த அழகு இந்த செப்பு சிலை எனக்கே எனக்கு தான் சொந்தம்’ என்று நினைத்தபடி பார்க்க அகமியின் முகத்தில் ஒரு சொட்டு புன்னகையில்லை.
முகத்தில் ஒருவித மிடுக்கு ஆட்சி செய்ய அதே மிடுக்குடன் அரசுவின் அருகில் அமர்ந்துக் கொள்ள அரசோ, “ஏதோ இந்த கல்யாணம் நடக்காது நடத்த விடமாட்டேன்னு சொன்ன? இப்போ என்னாச்சு இங்கே இந்த அரசு வச்சது தான் சட்டம் அவன் நினைச்சது தான் நடக்கும்”
என்றபடி மாலையை சரி செய்ய அகமியோ அவனை பார்த்து ஒரு மார்க்கமாக புன்னகைத்தாள். அதில் காதலோ பாசமோ இல்லை மாறாக ‘முடிஞ்சா இன்னைக்கு என் கழுத்துல தாலி கட்டி காட்டுடா’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே அந்த புன்னகையில் தெரிந்தது.
வந்திருந்த முக்கிய புள்ளிகள் மற்றும் உறவினர்களை வரவேற்றபடி இருந்த அரசுவின் தந்தையின் முகத்தில் எவ்வளவு புன்னகை இருந்ததோ, அதேயளவு உள்ளுக்குள் மனம் கருகி கொண்டிருந்தது.
அங்கு பந்திகளை சரி பார்த்துக் கொண்டிருந்த அச்சுதனிடம், “என்னடா? உங்க அண்ணனுக்கு பைத்தியமா? முதல்ல அந்த ராதிகாவுக்காக கல்யாணம் காட்டுறேன்னு இவள கட்டினான் அதுக்கு பிறகு டைவர்ஸ் பண்ணான் சரி தான் இனி இவன யாராவது எம்.பி மகளுக்கு கட்டி நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போகலாம்னு பார்த்தா திருப்பியும் இந்த போயும் போயும் இவள மறுபடியும் கல்யாணம் கட்டுறான்”
என்று வெடுவெடுக்க அச்சுதனோ, “அதை அவன்கிட்ட போய் தான் கேட்கணும் என் கிட்ட கேட்டா?” என்றவன் அதற்குமேல் அவருடன் பேச பிடிக்காது,
அங்கு சீருடையில் பந்தோபஸ்து கொடுத்தபடி நின்ற அகச்செழியனிடம் சென்றவன்,
“உன் அப்பனும் வந்தாச்சு என் அப்பனும் வந்தாச்சு இன்னும் யாருக்காகடா வெயிட்டிங் அரெஸ்ட் வாரன்ட்டும் கைவசமிருக்கு பேசாம உள்ள தூக்கி போட்டா கல்யாணத்த நிறுத்திரலாம் தானே அதுக்கு பிறகும் ஏன்டா சும்மா நிற்கிற?”
என்றதும் செழியனோ, “முக்கியமான கெஸ்ட்டும் முக்கியமான ஆதாரமும் இன்னும் வரவே இல்லையே”
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவப்பு நிற பென்ஸ் கார் சீறி பாய்ந்தபடி மண்டபத்திற்குள் நுழைந்திருந்தது. அதன் முன்னால் பேனட்டில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஒரு கடுசியஸ் அடையாளம் பொறிக்கப்பட்டிருக்க,
உதடு வளைத்து சிரித்த செழியனோ, “சயந்தன்” என்ற பெயரை உச்சரித்தவன் காதில் பொறுத்தியிருந்த ப்ளூடூத் மூலம்
“டீம் டார்கெட்ஸ ரவுண்ட் அப் பண்ணுங்க” என்றது தான் தாமதம் அங்கு மணவறையை சோகமாக பார்த்தபடி அமர்ந்திருந்த அரிச்சந்திரன் தொடக்கம் மாணவறையை கோபமாக பார்த்திருந்த சத்யசீலன் தொடக்கம் வந்திருந்த அனைவரும் மாணவறையை அதிர்ச்சியாக விழி விரித்து பார்த்திருக்க,
அங்கு அகமி தான் அரசுவின் கையில் விலங்கை குறு நகையுடன் பூட்டியபடி,
“ஆற்றலரசு யூவர் அண்டர் அரெஸ்ட்” என்று கூற அரசுவோ, “வித் மை ப்ளெஷர் குயீன் இந்த கம்பீரம் பிடிச்சிருக்கு”
என்று அவள் கையில் அழுத்தமாக முத்தம் பதிக்க அவளோ சட்டென கையை பின்னால் வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள், அதை பார்த்து ஸ்தம்பித்து போன அங்கிருந்த சத்யசீலனோ சட்டென சுதாரித்தபடி,
“ஏய் யாரு கையில விலங்கு மாட்டுற?” என்று துள்ள அவர் பின்னால் நின்றிருந்த அதிகாரியோ,
“சார் உங்களையும் அரிச்சந்திரன் சாரையும் அரெஸ்ட் பண்ண சொல்லி மேலிடத்துல இருந்து உத்தரவு வந்திருக்கு”
என்று கூறியபடி அவர்கள் விலங்கை மாட்ட அகமியின் கண்களில் பல நாட்கள் கழித்து ஒருவித தேஜஸ் தனக்கு தவறிழைத்தவர்கள், தனக்கு நீதி கேட்க தவறியவர்கள், தன்னை ஏமாற்றியவர்கள் என்று
அத்தனை பேரும் ஒரே நாளில் அவர்கள் இரண்டு மூன்று வருடங்களாக போட்ட திட்டத்தின் படி இன்று ஆதாரத்துடன் கையும் களவுமாக மாட்டி இருக்க அதனால் கிடைத்த திருப்தி,
இங்கு சயந்தனின் முன்னால் வந்து நின்ற செழியனோ, “என்னடா மாமியார் வீட்டுக்கு போகலாமா?”
என்று கேட்டபடி கைவிலங்கை மாட்டப் போக சயந்தனோ, “என்ன மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வாரமா ஒரு மாசமோ தானே ஏன்னா இது என்னோட பால்ட் இல்லன்னு உனக்கு நல்லாவே தெரியும்”
என்றதும் செழியனோ, “ஆனா மெடிசின்ஸ் உன் கம்பெனி மெடிசின்ஸ் தான் டிஸ்ட்ரிபியூட் பண்ணது உன் அப்பா தானே இது ஒன்றரை வருஷ தேடுதல் வேட்டை கடைசில கூட்டத்தோட மாட்டுனீங்களா?”
என்றபடி கைவிலங்கை பூட்ட, அங்கு அவனை ஒரு வித வெறி கலந்த சந்தோஷத்துடன் பார்த்திருந்த ராதிகாவிடம் திரும்பிய சயனோ,
“மேடம் அந்த பைலை கொடுங்க அதுக்காக தான் கஷ்டப்பட்டு மாயாஜால வித்தை காட்டுனீங்க ரெண்டு நாளா”
என்று நக்கலாக கூறியவன் மகனின் தலையை தடவிக் கொடுத்து, “என்னடா உங்க அம்மா சொன்னத நிறைவேத்தியாச்சு இப்பவாவது அப்பான்னு கூப்பிடலாமே”
என்றது தான் தாமதம் பின்னாலிருந்து ஒரு குரல், “மண்ணாங்கட்டி!, அது மட்டும் தான் குறைச்சல் ஒழுங்கா வண்டியில ஏறுடா, மாமனுக்கும் மச்சானுக்கும் பொண்ணுங்கள வச்சு விளையாடுறது தான் வேலையே”
என்றபடி அரசுவை முன்னால் தள்ளியபடி பின்னால் கம்பீரமாக நடந்து வந்தாள் அவன் ஆரூயிர் தங்கை,
தொடரும்…