அசுரன் 42
இதோ அலுவலகத்தில் விருப்பமே இல்லாமல் சலிப்பாக அனைத்தையும்
பார்த்துக் கொண்டும்… கேட்டுக் கொண்டும் இருந்தான் ராஜேஷ்….
அலுவலக வேலையை வெறுப்பவன் அவன். அதற்காக சோம்பேறி
என்றெல்லாம் சொல்லிவிட முடியாது எனக்கான வேலை நேரத்தை தானே
முடிவு எடுக்க வேண்டும் என்பது அவனுடைய எண்ணம்..
உணவு இடைவேளை வந்ததும்… அருணும் ராஜேஷம் உணவருந்த
அலுவலக தனி அறைக்குள் சென்றனர். அங்கு அருணுக்கு மட்டும்
உணவகத்தில் வாங்கின உணவு கவர் வைக்கப்பட்டு இருந்தது… என்ன
ராஜேஷ் உனக்கு சாப்பாடு வாங்க சொல்லலையா… என்று கேட்க
இல்ல ப்ரோ… எனக்கு வீட்ல இருந்து கொடுத்துவிட்டு இருக்காங்க… என்று
கூறி டேபிளின் அருகில் இருந்த உணவுப்பையை எடுத்து மேலே
வைத்தான் ராஜேஷ்.
அதைக் கடுப்பாய் பார்த்துக் கொண்டே… வேண்டா வெறுப்பாய் தனது
உணவை திறந்து உண்ண தயாரானான் அருண்.
ராஜேஷ் ஒவ்வொரு டப்பாவாக எடுத்து வெளியே வைத்து கொண்டு
இருந்தான். அனைத்தும் ஹாட் பேக்கில் பேக்கிங் செய்யப்பட்டிருந்தது…
சாதம் குழம்பு கூட்டு பொரியல் ரசம் மோர்.. கூடவே இரு வாழை இலை…
வாழை இலையை விரித்து அதில் தண்ணீர் தெளித்தவன்… ஒவ்வொரு
டப்பாவாக திறந்து அதனை வாசனை பிடித்து பின் சிலாகித்து
வர்ணித்து ஒவ்வொன்றாக அழகாய் பரிமாறினான்…
என்ன திடீர்னு வீட்ல இருந்து சாப்பாடு எப்பயும் ஹோட்டலில் தானே
வாங்குவோம் என்று அருண் கேட்க…
இல்ல ப்ரோ வயிறு கொஞ்சம் வலிக்கிற மாதிரி இருந்தது ஹோட்டல் ஃபுட்
ஒத்துக்கல.. பிளவர் கிட்ட சொன்னேன்… சோ மார்னிங் எனக்கு
தேவையானத சமைச்சு பேக்கிங் பண்ணி கொடுத்துட்டா… நொவ் ஐ அம்
ஹாப்பி.. என்று கண்ணை சிமிட்டி சிரித்தான்.
ஓஹோ… மேடம் ஓட ஏற்பாடு தானா இதெல்லாம்…
ப்ரோ நீங்களும் வீட்டு சாப்பாடு சாப்பிடுறீங்களா ரெண்டு வாழை இலை
கொடுத்து விட்டு இருக்கா…. அப்படின்னா ரெண்டு பேருக்கு சாப்பாடு
இருக்குன்னு அர்த்தம் என்று கூற…
ஓ… அப்படி…. மேடம்… நினைப்பதை கூட சாரு கண்டுபிடித்துவிடுவாரு…
அவ்ளோ க்குளோஸ் ஆயிட்டீங்க அப்படித்தானே…
எங்க ப்ரோ இப்பதான் பிரண்ட் லெவலுக்கு வந்திருக்கேன்… இனிமேல்
போக போக தான் டெவலப் பண்ணனும்… என்று ராஜேஷ் கூற…
பண்ணு பண்ணு நல்லா பண்ணு… அதுவரைக்கும் உன்னை இங்க விட்டு
வச்சிருந்தா தானடா…. என்று மனதுக்குள்ளயே கருவிக்கொண்டான்
அருண்.
உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜேஷ் இடையில் புன்னகைக்க…
என்ன தனியா சிரிக்கிற என்றான் அருண்.
சாப்பாடு அருமையா இருக்கு ப்ரோ…
இந்த சாப்பாடு எனக்கும் என் குழந்தைக்கு வாழ்நாள் முழுக்க கிடைக்க
போகுது அப்படின்னு நினைக்கும்போதே ஒரு சந்தோசம் உடம்பெல்லாம்
ஒரு பூரிப்பு… சாப்பிட்டு முடிக்கிறதுக்கு முன்னாடியே வயிறு நிரஞ்ச
மாதிரி ஒரு ஃபீலிங்… அதான் சிரிச்சேன்…
ஓ…. குழந்தை வரைக்கும் போயாச்சா… என்று நினைத்துக் கொண்டு
பல்லை நரநரவன கடித்தவன்….
கொஞ்சம் “மூடிகிட்டு சாப்பிடுறீங்களா” மிஸ்டர் ராஜேஷ்… இன்று
கடுப்பின் உச்சகட்டத்தில் கூற…
நீங்க என்ன ப்ரோ நான் சந்தோச பட்டாலே நீங்க இவ்ளோ டென்ஷன்
ஆகுறீங்க… உங்கள ஹாஸ்பிட்டல் கொண்டு போய் செக் பண்ணனும்…
பின் எதோ கூற வர அவனது செல்போன் ஒலித்தது…
மலரே நின்னை….
(இதுது….வேற…. என்று மனதில் சலித்துக் கொண்டான் அருண்)
போனில் ஏதோ ஒரு புது நம்பர் தெரிய… சாப்பிட்டு கொண்டு இருந்தவன்
போனை ஸ்பீக்கரில் போட்டான்…
ராஜு.. ராஜு.. நான் மலர் பேசுறேன்… என்றாள் பதட்டமாக…
என்னடா!… இது யார் நம்பர் உன்னோட நம்பர் என்ன ஆச்சு…. ஏன்
இவ்ளோ பதட்டமா இருக்க என்று ராஜேஷ் வினவ…
ராஜு ரதி மேடம் படி ஏறும் போது கால் இடறி விழுந்துட்டாங்க… அவங்கள
நான் ரதி மேடம் செக்கப் போற ஹாஸ்பிடல சேர்த்து இருக்கேன்…
கொஞ்சம் இத அருண் சார் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடு.. அப்படியே
சக்கரவர்த்தி சார்… விக்ரம் அண்ணா கிட்டயும் இன்பார்ம் பண்ணிடு…
முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வாங்க… என்று சொல்லிக் கொண்டே
இருக்கும் பொழுதே…
மேடம் கொஞ்சம் போன் வேணும் பேசி முடிச்சிட்டீங்கன்னா குடுங்க…
என்று அருகில் ஒரு குரல் கேட்க..
ராஜு, திரும்ப இந்த நம்பருக்கு கூப்பிடாத.. என்னோட நம்பருக்கு
கூப்பிடு என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டாள்.
பதட்டமாக இரு ஆண்களும் ஹாஸ்பிட்டல் வந்து சேர… பிரசவ அறையின்
வாசலில் கையை பிசைந்தபடி நின்றிருந்தாள் மலர்.
என்ன ஆச்சு… என்று அருண் பதட்டமாய் வந்து மலரிடம் கேட்க…
சார்…. மேடம், படியிலிருந்து இறங்கி வரும்போது அவங்க கால் தடுக்கி
கீழ விழுந்து அந்த கைப்பிடியில் இடிச்சிட்டாங்க சார்…
பனிக்குடம் உடைஞ்சிடுச்சு… குழந்தை பிறக்க போகுது … அப்படின்னு
உள்ள கூட்டிட்டு போயிருக்காங்க சார்… என்று மலர் சொல்ல…
ஓ.. சிட்… என்று தன் முன்னந் தலையில் கை வைத்தவன்… ரதிய பத்திரமா
பாத்துக்கறதை விட உங்களுக்கெல்லாம் என்ன வேல…. வீட்ல நீங்க
எல்லாரும் என்ன புடுங்கிட்டு இருக்கீங்க?… இப்ப எல்லாம் நீ வீட்ல
வேலையே பாக்கறது இல்ல எப்ப பாரு ரூமுக்குள் போய் படுத்துகிற…
இல்லாட்டினா தேவையில்லாத அத்தனை வேலையும் பார்க்கிறே…. என்று
அவன் சொல்லும்போது அவனது பார்வை ராஜேஷை ஒரு கணம் தொட்டு
மீண்டது..
ராஜேஷும் இருக்கையில் அமர்ந்தபடி அருணை தான் பார்த்துக்
கொண்டே இருந்தான்.
இடியட்…. உனக்கு வேலை செய்ய விருப்பம் இல்லனா அவங்க அவங்க
வீட்டுக்கு கிளம்பி போயிரனும் இப்படி கூடவே இருந்து உயிரை வாங்க
கூடாது… யூஸ்லெஸ் பெல்லோ…. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்ன
சும்மா விட மாட்டேன்… என்று தன்னுடைய ஒட்டுமொத்த கோபத்தையும்
ஒரே நாளில் காட்டி விட நினைத்தான்போலும்.. மருத்துவமனை என்றும்
பார்க்காமல் காட்டுகத்து கத்தி கொண்டு இருந்தான் அருண்.
அழுகையை அடக்கும் விதமாக… உள்ளங்கையை மடக்கி, உதட்டை
பற்களால் கடித்தாள் மலர்.
அருண் கத்திவிட்டு அமைதியான பின்…
மலரின் அருகில் வந்த ராஜேஷ்…
தலை குனிந்து உதட்டை கடித்த படி நின்றிருந்த மலரை… மொத்தமாக
மென்மையாக கட்டி பிடித்தான்… ஒரு தாயின் அரவணைப்பு போல்..
ராஜேஷ்…. என்ன பண்ற நீ முதல்ல அவள விடு… என்று அருண் கத்த..
ப்ரோ ஏன் கத்துறீங்க இவ்வளவு நேரம் நீங்க பேசிக்கிட்டு இருக்கும் போது
நான் அமைதியா தானே இருந்தேன்… இப்ப நான் பேசும்போது நீங்க
கொஞ்சம் அமைதியா இருங்க… கொஞ்சம் தள்ளி நில்லுங்க… இது எங்க
பர்சனல்… என்று அருணின் முகத்தில் அடித்தால் போல் கூற…
கோபம் உச்சந் தலைக்கு ஏற.. அவனை வெறிகொண்டு முறைத்துக்
கொண்டு… எதுடா உன்னோட பர்சனல் இப்படி ஹாஸ்பிடல்ல
கட்டிப்பிடித்து நிக்கிறதா…
அப்பொழுதும் அவன் அணைப்பை விடவில்லை…. சில கணம்
அமைதிக்கு பின்… ஓனர் நா அப்படி தான் திட்டுவாங்க அதுக்காக
அழுகலாமா? என்று கேட்க…
அவன் அணைப்பை விட்டு விலகி, அதிர்ச்சியாய் அவனை நிமிர்ந்து
பார்த்தாள்.
ஏன் அப்படி பாக்குற?
நான் அழுதது உனக்கு தெரிஞ்சதா? என்று அவள் ஆச்சரியமாய் கேட்க…
ம்ம்… எஸ் ஐ பீல்…
மலரின் கண்களில் ஒரு பூரிப்பு சிரிப்பு…
ஏன்? வேற ஒருத்தவங்க நம்பர்ல இருந்து போன் பண்ண… உன்னோட
போனுக்கு என்ன ஆச்சு? என்று அக்கரையாய் கேட்டான்…
அது… வந்து… இந்த மாசம் நான் ரீசார்ஜ் பண்ண மாட்டேன் என்று
கூறினாள் மலர்.
ஏன் அப்படி?…
அது வந்து… என்று கையை பிசைந்தபடி நிற்க…
அவள் கையில இருந்த போனை பிடுங்கி அன்லாக் செய்தான்.
Gpay சென்று அவளது அக்கவுண்ட் பேலன்ஸை பார்க்க… அது 100 ரூபாய்
என காட்டியது…
(என்ன அன்லாக் எல்லாம் பண்ணுகிறான்… எனும் விதமாக அருண்
முழித்துக் கொண்டு இருந்தான். மலரிடம் ஃபோன் இருப்பதே அருணுக்கு
இன்று தான் தெரியும்…)
கடந்த ஆறு மாத கால வரவு செலவை அவன் பார்க்க… அது 3000த்தை
தாண்டவில்லை…
நடக்கும் அனைத்தையும் அருகில் நின்று பார்த்துக் கொண்டுதான்
இருந்தான் அருண்.
என்ன ப்ரோ…. இப்படி கண்டபடி திட்டுறீங்க…ஆனா சரியா சம்பளம்
போட மாட்டீங்க போல… என்று அருணை பார்த்து சொல்லிக் கொண்டே…
இந்த உலகத்திலேயே… ஒரு மாசத்துக்கு 100 ரூபாய் வச்சு வாழ்க்கை
ஓட்டறது நீதான் நினைக்கிறேன்… ரீசார்ஜ் பண்ணாத அப்போ உங்க
அம்மாகிட்ட எப்படி பேசுவ? என்று மலரிடம் கேட்டான்.
அது… சுதாம்மா போன வாங்கி பேசுவேன்…
சரி… என்ற தலையாட்டிக் கொண்டே தனது போனை எடுத்தவன்… ஆறு
மாதத்திற்கு அவளுக்கு தேவையான ரீசார்ஜ் செய்தான்..
அவள் வேண்டாம் என மறுக்க மறுக்க… அவளது அக்கவுண்டிற்கு
பத்தாயிரம் ரூபாய் டிரான்ஸ்பர் செய்து விட்டான்.. ஏன்? நான் குடுத்தா
வாங்க மாட்டியா?… என்று கேட்டுக்கொண்டே… இருக்கமாக மூடி இருந்த
அவளது உள்ளங்கையை மெதுவாக திறந்து அவனது கைக்குள்
வைத்தான்….
ஏன் கை இவ்வளவு சில்லுனு இருக்கு… ரொம்ப பயந்துட்டியா ? என்று
மென்மையாக கேட்டான்…
அவளும் ஆம் என தலையசைத்தாள்…
அதெல்லாம் எந்த பிரச்சனையும் இருக்காது… சேஃபா குழந்தை
பிறந்துடும்… போ நீ போய் உட்காரு… என்று அவளை அழைத்து வந்து
இருக்கையில் அமர வைத்து பக்கத்தில் அவனும் அமர்ந்து கொண்டான்.
அப்புறம் அருண் ப்ரோ உங்க வைஃபோட ட்ரஸ் அங்க வச்சிருக்காங்க
பாருங்க… அதுல அவங்க போட்டு இருந்த செப்பல் பாருங்க
பாய்ண்ட் ஹீல்ஸ் வச்ச ஷூ யூஸ் பண்ணி இருக்காங்க … அதனாலதான்
அவங்க கால் இடரி விட்டு இருக்கு.. என்று ராஜேஷ் என்ன நடந்திருக்கும்
என்பதை விளக்கினான்.
ராஜேஷின் மலரின் மீதான உரிமை அவனுக்கு கடும் கோபத்தை
உண்டாக்கினாலும், ஏனோ மலரின் நிலை இன்று அவன் மனதை
உறுத்தியது…
காசு இல்லனா என்கிட்ட கேட்டு வாங்க வேண்டியது தானே…என்று
மலரிடம் உரிமையாய் கோபித்துக் கொள்ள…
ஏன் ப்ரோ…. எந்த வீட்ல ஓனர் கிட்ட காசு கேட்டு வாங்குவாங்க… என்று
ராஜேஷ் கேட்க..
இவன் வேற நடுவுல வந்து உயிரை வாங்குறான்… என்று மனதுக்குள்ளே
திட்டிக் கொண்டே அருண்.
ஆனால் அதைவிட பெரிய கடுப்பு…
வந்ததுல இருந்து இப்பொழுது வரை அருணை மலர் நிமிர்ந்தே
பார்க்கவில்லை… ஆனால் அதைப் பற்றி விவாதிக்கும் நிலையில்
அருண் இல்லை…
அவசரமாக உள்ளே வெளியே சென்று கொண்டிருக்கும்
செவிலியர்களிடம் ரதியின் நிலைமையை கேட்டு அறிந்து
கொண்டிருந்தான்.
நர்ஸ் நான் உள்ள வரலாமா? என்று அருண் கேட்க…
உங்க மனைவி அவங்க அழுகிறத யாரும் பாக்க கூடாது.. அதனால
யாரையும் உள்ள விட வேண்டாம். அப்படின்னு சொல்லிட்டாங்க சார்…
நீண்ட பெருமூச்சு விட்டு தலையசைத்து பின் சுவரில் சாய்ந்து நின்று
இருந்தான் அருண்.
சிறிது நேரத்தில் சக்கரவர்த்தியின் மொத்த குடும்பமும்
மருத்துவமனையில் இருந்தது… ஆதி உட்பட..
ரதியின் குடும்பமும் வந்து சேர்ந்தது.
ரதி நேரத்தையும் காலத்தையும் குறித்து காத்துக் கொண்டிருக்க உன்
இஷ்ட ம** கெல்லாம் என்னால குழந்தையை பிறக்க வைக்க முடியாது….
நான் நினைக்கிற நேரத்துக்கு தான் அது நடக்கும் என்று… இயற்கை
இன்றே சுகப்பிரசவத்தில் அருணின் குழந்தையை பூமிக்கு கொண்டு
வந்து இருந்தது.
சக்கரவர்த்தி குடும்பத்தின் முதல் வாரிசு பூமியில் ஜனித்தது..
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️