அசுரன் 44

 

அசுரன் 44

மலர் குழந்தையை தூக்கி வைத்திருக்க அதை அழகாக படம் பிடித்துக் 
கொண்டான் ராஜேஷ் தனது மொபைலில்…. 

அதை சற்று தூரம் தள்ளி இருந்த ஆதி, விக்ரம், அருண் மூவரும் பார்த்து 
கொண்டு தான் இருந்தனர். 

இவன் வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றான்டா…  
அன்னைக்கு என் கூட கார்ல வரும்போது இந்த பொண்ண நீங்க தான் 
எனக்கு வீட்ல பேசி கல்யாணம் பண்ணி கொடுக்கணும் அப்படின்னு… 
என்கிட்டயே  சொல்றான்டா…. 

அதான் பையன் மச்சான் மச்சான் மச்சான்…. மச்சான்னு.. M என் 
பின்னாடியே சுத்துறானா…. நல்ல விஷயம் தான்… ராஜேஷ்  நல்ல 
பையன் தான் பேசாம அவனுக்கே கல்யாணம் பண்ணி 
வச்சிடேன்  என்றான் விக்ரம். 

அவனை முறைத்துக் கொண்டே பேச்சை தொடர்ந்தான் அருண். 
இன்னைக்கு ஹாஸ்பிடல் ல இது எங்க பர்சனல் நீங்க தலையிடாதீங்க.. 
தள்ளி நில்லுங்கன்னு சொல்றான்டா… 

அவன் சொல்றதும் கரெக்டு தான் டா வேலைக்காரியோட வாழ்க்கையில 
தலையிடுவதற்கு ஓனருக்கு என்ன அதிகாரம் இருக்கு… என்று 
உண்மையைக் கூற… 
உன் கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா? என்ற தோரணையில் விக்ரமை 
பார்த்துவிட்டு முகத்தை ஆதியின்  பக்கம் திருப்பிக் கொண்டான் அருண். 

அவளோட போன் பேட்டன் வரைக்கும் தெரிஞ்சு வச்சிருக்கான்டா. Gpay 
பாஸ்வேர்டு கூட தெரிஞ்சு வச்சிருக்கான்டா.. 

எனக்கு தெரிஞ்சு மலர் கிட்ட போன் இருக்கிறதே உனக்கு இன்னைக்கு 
தான் தெரியும்னு நினைக்கிறேன் கரெக்டா?. என்று விக்ரம் கேட்க… 

ஆமாம் எனும் விதமாக தலையசைத்தான் அருண். 

அதானே…. தெரிஞ்சிருந்தா எதுக்கு இன்டர்காம்  போன் பண்ணி காப்பி 
கொண்டு வர சொல்ல போற ஸ்ட்ரெயிட்டா ஃபோனிலேயே பேசி 
இருப்பியே… என்று விக்ரம் நக்கலடிக்க… 

டேய்… இவன கொஞ்ச நேரம் மூடிக்கிட்டு சும்மா இருக்க சொல்லுடா…. 
என்னை ரொம்ப கடுப்படிக்கிறான்… என்று அருண் விக்ரமை குறைபட்டு 
கொண்டான் ஆதியிடம் … 

எனக்கு என்னவோ இவள கரெக்ட் பண்றதுக்காகவே இவன் ஊர்ல இருந்து 
வந்த மாதிரி தெரியுது… அவளை விட்டு நகர மாட்டேங்குறான்… 
அருண், ராஜேஷ் பத்தி சொல்லிக் கொண்டு இருக்க ஆதியின் பார்வை 
ராஜேஷை தான் அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தது. 

சரிடா… ராஜேஷ் பிரச்சனையை அப்புறம் பார்ப்போம்… இப்ப வா நம்ம 
நல்ல கேர் டேக்கரா தேடுவோம்… என்று அருணை பார்த்து விக்ரம் கூற… 

வெளியில ஒன்னும் தேட வேண்டாம்.. என்னோட குழந்தையை நம்ம வீட்ல 
இருக்கவங்களே பார்த்துகட்டும்.. என்றான் அருண். 

யார சொல்றான்?… என்று பார்வையிலேயே விக்ரம் கேட்க… 

என்ன பார்க்கிற? மலர் தான் என் குழந்தையை பார்த்துக்க போறது… 
என்றான் அருண். 

அதைக் கேட்டு அதிர்ந்த விக்ரம்… மச்சான் என்று பார்க்க மாட்டேன் 
ம**னும் பார்க்க மாட்டேன்… ஏன்டா ம** நீ ஒரு பொண்ண கல்யாணம் 
பண்ணி கூட்டிட்டு வந்து வீட்ல வேலைக்காரியா வச்சிருப்பே… அவள 
பிடிக்கலைன்னு இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணி 
குழந்தையும் பெத்துக்குவ… நீ பொத்து போடுற குழந்தைய 
கவனிக்கறதுக்கு உனக்கு இப்ப அவ தேவைப்படுவாளா? உன்னோட 
குழந்தை பாத்துக்க மட்டும் உன் தகுதிக்கு ஒத்து வராளா? அவள பாத்தா 
உனக்கு இளிச்சவாச்சி மாதிரி தெரியுதா? என்று அருணின் சட்டையைப் 
பிடிக்க… 

டேய் மச்சான் நேத்து வந்தவளுக்காக என்னோட சட்டையைவே 
புடிக்கிறியா… அப்போ உனக்கு, என்னையும், என் குழந்தையும் விட அவ 
உனக்கு முக்கியமா போயிட்டா அப்படித்தானே… என்று விக்ரமின் 
கையை விலக்கி விட்டபடி கேட்டான் அருண். 
இப்ப நான் யாரையும் பத்தி யோசிக்கிற மனநிலையில  இல்ல மச்சான்…. 
புரிஞ்சுக்க… எனக்கு இப்ப என்னோட குழந்தையோட வாழ்க்கை தான் 
முக்கியம்… என்று கூற… 

நீ முக்கியம் அப்படிங்குறதுக்காக நீ பண்ற எல்லா அக்கிரமத்துக்கும் 
என்னால துணை போக முடியாது அருண்…. நீ என்னைக்குடா அவளோட 
வாழ்க்கையை பத்தி யோசித்துப் பார்த்த… மொத உன் வாழ்க்கையை 
பத்தி யோசிச்ச இப்ப உன்னோட குழந்தைய வாழ்க்கையை பத்தி 
யோசிக்கிற… அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குனு உனக்கு 
என்னைக்கு புரியப்போகிறது என்று எனக்கு புரியல…. இதெல்லாம் 
பெரிய பாவம்டா.. 

இது தப்புன்னு எனக்கு புரியுதுடா…  ஐ பில் ஆல்சோ கில்டி… பட் எனக்கு 
வேற வழி தெரியல… 
அப்ப நீயே சொல்லு… ஒரு நல்ல கேர் டேக்கருக்கு என்ன பண்ணலாம்… 
இவளை தவிர வேற எந்த வழியும் எனக்கு தோணல.. 

நீங்க ரெண்டு பேரும் ஏன்டா சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க… அந்த 
பொண்ணு கிட்ட கேளுங்க… அவளுக்கு விருப்பம்னா குழந்தையை 
பாத்துக்கட்டும்.. இல்லையா விட்டுடுங்க… என்று ஆதி கூறினான். 

டேய் மச்சான்… யாரு என்ன சொன்னாலும் சரி… சரி…ன்னு தலைய மட்டும் 
தான் ஆட்டும். வாய தொறந்து ஒரு வார்த்தை எதிர்த்து பேச மாட்டா… 
இப்ப நம்ம போய் கேட்டாலும் தலையை குனிஞ்சுகிட்டே சரின்னு தலைய 
மட்டும் தான் ஆட்டும்..  என்றான் விக்ரம் ஆதங்கமாய்… 

அவங்க அவங்களுக்காக அவங்க அவங்க தாண்டா பேசணும்…. நீ பேசி 
ஒரு பிரயோஜனமும் இல்லை… என்றான் ஆதி. 

அத தாண்டா நானும் சொல்றேன்… அவ கிட்ட கேட்போம்.. அவளே 
பாத்துக்கிறேன்னு சொன்னா உனக்கு என்னடா இதுல பிரச்சனை… 
என்றான் அருண் ஆதங்கமாய்… 

உங்க கையில தஞ்சாவூரு தலையாட்டி பொம்மை ஒன்று கிடைச்சிருக்கு… 
அதனால உங்க தேவைக்கு எல்லாம் அதை யூஸ் பண்ணிக்கிறீங்க… 
நடத்துங்கடா நடத்துங்க… என்று கூறிவிட்டு விலகி நின்றான் விக்ரம். 

மலர் மற்றும் ராஜேஷின் அருகில் சென்ற அருண்… இங்க என்ன 
பண்ணிக்கிட்டு இருக்க?… குழந்தையை பாக்கலையா?… என்றான் 
மலரை பார்த்து. 

இல்லை…  என்று தலைசைத்தாள் மலர். 

ஏன்? பாக்க தோணலையா? என்றான் அருண். 

உங்க பேமிலி மெம்பர்ஸ் மட்டும் தான் குழந்தையை பார்க்க அலோவ்டு 
ன்னு சொன்னாங்க ப்ரோ… அதனாலதான் மலர் போகல… என்று 
விளக்கம் அளித்தான் ராஜேஷ். 

ஓஹோ… சரி… இப்ப போய் பாத்துட்டு வா… என்று அனுப்பி வைத்தான் 
அருண். 

சரி… என்று தலையாட்டி விட்டு மலர் செல்லப் போக… அவள் 
பின்னாலேயே ராஜேஷ் சென்றான். 

அவனின் கழுத்தைப் பிடித்து நிறுத்தினான் அருண். நீ எங்க போற… 

குழந்தையை பார்க்க ப்ரோ… 

நீ ஒன்னும் பார்க்க வேண்டாம், இங்கேயே நில்லு… என்று பிடித்து நிறுத்தி 
வைக்க… 

ப்ரோ அங்க பாருங்க நர்ஸ்ஸ உங்கள கூப்பிடுறாங்க… என்று கூற… 
அருண் கையை விட்டு திரும்பி பார்க்க… அந்த இடைவெளியில் ஓடி 
சென்று குழந்தை இருக்கும் அறைக்குள் நுழைந்து விட்டான் ராஜேஷ். 

மலர் குழந்தையை தான் ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தாள். 
ரொம்ப குட்டியா இருக்கான்ல… அழகா இருக்கான். என்று மென் 
புன்னகையுடன் கூற… அவள் முகத்தில் தெரியும் பாவனையை, வெளியில் 
இருந்து கண்ணாடி வட்டத்தினுள் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் 
அருண். 

நீ கொடுத்த ஜூஸுக்கெல்லாம் இந்நேரம் இவன் ஹல்க் மாதிரி 
புஷ்டியா  இருக்கணுமே… கோழி குஞ்சு மாதிரி இருக்கான்… இவனுக்கு 
கொஞ்சம் கூட கொடுக்காம எல்லாத்தையும் எங்க அண்ணியே 
குடிச்சிட்டாங்க போல… என்றான் ராஜேஷ். 

சும்மா இரு ராஜு… என்று மெல்லிய அடி ஒன்று அவள் தோளில் 
போட்டாள்… 

ஏனோ ராஜேஷ் இடம் மலர் சகஜமாக பழகுவது… அருணுக்கு ஒரு வித 
பொறாமையை உண்டு பண்ணியது… நம்ம பேசினா மட்டும் ஆமா… 
இல்ல.. அப்படின்னு தலைய மட்டும் ஆட்றது… இவன்கிட்ட 
மணிக்கணக்கா உட்கார்ந்து பேசுவா போல… 

குழந்தையை பார்த்துவிட்டு மலரும் ராஜேஷும் வெளியே வர வாசலில் 
மும்மூர்த்திகள் நின்று இருந்தனர்… 

அருண் தான் பேச்சை தொடங்கினான்.. குழந்தையை பாத்தியா எப்படி 
இருக்கான்? என்று கேட்டான். 

அழகா இருக்கான்… தூங்கிட்டு இருக்கான்… என்று தலையை குனிந்த படி 
பதில் சொன்னாள். 

ம்…அவன் ரொம்ப வீக்கா இருக்கான்.. அப்படின்னு டாக்டர் சொல்லி 
இருக்காங்க… இன்னும் ரெண்டு மாசத்துக்கு இங்கதான் (NICU) 
இங்குபேட்டர்ல வச்சு கவனிக்கணும் சொல்லி இருக்காங்க உன்னால 
அவனை இங்க தங்கி இருந்து பாத்துக்க முடியுமா? என்று கேட்டான் 
அருண்… 

அதெல்லாம் முடியாது ப்ரோ… நீங்க ஒழுக்கமா சம்பளமும் கொடுக்க 
மாட்டேங்கறீங்க… இப்படி வேலைக்கு மேல வேலை வாங்குறீங்க.. இட்ஸ் 
நாட் ஃபேர் ப்ரோ… என்று கூறினான் ராஜேஷ்… 

அறுந்து விழுந்த பல்லி வால் போல் துள்ளுபவனை பார்த்த விக்ரமிற்கு 
சிரிப்பு முட்டி கொண்டு வந்தது… 

நல்லா கேளுங்க மச்சான்… சம்பளம் இல்ல… போனஸ் இல்ல.. லீவு இல்ல.. 
எல்லாரும் சேர்ந்து என் தங்கச்சிக்கு அநியாயம் பண்றாங்க நீங்க தான் 
தட்டி கேட்டு நியாயம்  வாங்கி தரணும் என்று விக்ரம் விளையாட்டாய் 
கூற…. 

டேய்… விக்ரமா… அவன் தான் என் நிலைமை புரியாமல் பண்றான்.. நீ 
வேற ஏண்டா இப்படி பண்ற… எனும் விதமாய் பார்த்தான் அருண்,… 

யாராவது குழந்தையை வளர்த்த எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்கள பாத்துக்க 
சொல்லுங்க ப்ரோ , மலருக்கு எப்படி குழந்தைய பாத்துக்க தெரியும்… 
என்று ராஜேஷ் கேட்டான். 

அதெல்லாம் இங்க இருக்கிற நர்ஸ் ட்ரெய்னிங் குடுப்பாங்க… நம்ம கூட 
இருந்து பாத்துகிட்டா மட்டும் போதும்… என்று மலரை பார்த்து 
சொன்னான் அருண். 

ஓகே அப்ப பெரியம்மாவை  இருக்க சொல்லுங்க… என்று ராஜேஷ் 
கூறிக்கொண்டு இருக்க… 

இவர்களின் பேச்சின் நடுவே.. 
“நான் கூட இருந்து குழந்தையை பார்த்துக்கிறேன் சார்” என்றாள் மலர் 
அமைதியாய்…. 

“நீ மாட்டேன்னு சொன்னா தான் ஆச்சரியம்” என்று மனதில் நினைத்தான் 
விக்ரம். 

ஒரு கணம் அமைதியாய் மலரைப் பார்த்த ராஜேஷ்… அப்ப எனக்கும் ஓகே 
ப்ரோ, நானும் மலரும் டூ மந்த் இங்க இருந்து குழந்தையை 
பார்த்துக்கிறோம் என்று அவனையும் சேர்த்து கூறினான். 

அதைக் கேட்டு அதிர்ந்த அருண்…  குழந்தையை பாத்துக்குறவங்கள தவிர 
வேற யாருக்கும் உள்ள அலோவ்டு  இல்லை.. என்றான். 

ஐயையோ…. மலரில்லாம என்னால இருக்க முடியாதே… என்றான் 
ராஜேஷ்… 

அவனை தீயாய் முறைத்த அருண்…. போன மாசம் வரைக்கும் உங்க வீட்ல 
அப்படித்தான்டா இருந்த… 

அதற்கு ராஜேஷ் ஏதோ பதில் கூற வர…. ஆதியின் பார்வையை கவனித்த 
அவன் வாய் “கப்சிப்” என்று மூடிக்கொண்டது… 

************** 

அறைக்குள் ரதியிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான் அருண்… 

ப்ளீஸ் பேபி… நீ இங்க இருக்கிற ரெண்டு நாளைக்கு மட்டும் குழந்தைக்கு 
பால் கொடு… அதுக்கப்புறம் உனக்கு இன்ஜெக்ஷன் போட்டு ஸ்டாப் 
பண்ணிடுவாங்க… 
ப்ளீஸ் நம்ம குழந்தையோட ஹெல்த்த கன்சிடர் பண்ணு… 

என்ன அருண் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கிட்டு 
இருக்க… அது நம்ம குழந்தையே இல்ல.. அந்த குழந்தையை பார்க்கவே 
ஒரு மாதிரி இருக்கு… ப்ளீஸ் அருண் எனக்கு அதை தூக்கவே புடிக்கல… 

ப்ளீஸ் பேபி ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்… என்று அவன் அதிகமாய் கெஞ்ச… 

நீ இவ்ளோ கெஞ்சறத பார்த்தா குழந்தைக்காக கேக்குற மாதிரி 
தெரியலையே… டூ யூ லைக் டு டேஸ்ட் இட்… ஐ நோ… மேனி மேன் கர்வ் எ 
டெஸ்ட்.. என்று ரதி ஒரு மார்க்கமாய் கூறி கண்ணடிக்க… 

நான் என்ன கேட்கிறேன்… நீ என்ன பேசுற… என்று உச்சந்தலையில் ஏறிய 
கோபத்தை பின்னந்தலையை அழுத்த கோதி தணித்துக் கொண்டான் …   

இனிமேல் உன்கிட்ட என் குழந்தையை பத்தி பேசுறது வேஸ்ட்…. என்னும் 
விதமாய் தலையில் அடித்துக் கொண்டு அறையை விட்டு பட்டென்று 
வெளியே சென்றான் அருண். 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top