அத்தியாயம் 5
நிலாவை அறையில் அடைத்து வைத்து விட்டு, அவன் ஜீப்பில் ஏறி எங்கோ சென்றான்..
நிலாவோ ! அங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி கிடைக்குமா என்று பார்த்தாள்…
“ச்சீ! என் நேரம்! இங்க வந்து இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கறேன்..இது என்ன இடம் ன்னு கூட தெரியாதே?”
“நான் தொலைஞ்சு போனது , வீட்டுல யாருக்காவது தெரிஞ்சு இருக்குமா?”
வீட்ல சொல்றதுக்கு கூட ஃபோன் இல்லையே என்று தவித்துப் போனாள்..
அன்று ! இந்த வேலையை தேர்வு செய்ததற்கு , அவளிடம் அறிவுரை கூறியவர்களைப் பார்த்து சிரித்தாள்..
ஆனால் !இப்பொழுதோ இங்கு மாட்டிக் கொண்டதற்கு தன்னையே நொந்து கொண்டாள் நிலா..
கொஞ்ச நேரம் கழித்து, பழங்கள் ரொட்டிகள், தண்ணீர் பாட்டில்களுடன் , அவள் இருந்த அறைக்குள் வேகமாக வந்தான்..
இந்தா! இங்க பாரு இனிமேல் கொஞ்ச நாள் நீ! இங்க தான் இருக்கணும்… அதனால நான் கொடுக்கிறத சாப்பிட்டு ஒழுங்கா இரு..
சாப்பிடாம செத்து தொலைஞ்சிடாத! என்று கத்தினான்..
எங்கயாவது தப்பிக்க ட்ரை பண்றேன்னு சொல்லி ஏதாவது மிருகத்துக்கிட்ட மாட்டியும் செத்து போயிடாத..
மிருகத்துகிட்ட மாட்டி செத்து போற நிலைமை வந்தா எப்படி இருக்கும்னு உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன் என்று சொல்லி எச்சரித்து விட்டு , கதவை பூட்டிவிட்டு, அவனுடைய ஜீப்பை எடுத்துக்கொண்டு கோவையை நோக்கி புறப்பட்டான்…
பல மணி நேரத்திற்குப் பிறகு கோவைக்கு வந்தான்.. வந்த உடனே பெரியவரை பார்க்கச் சென்றான்..
ரொம்ப தூரம் ஜீப்பை ஓட்டியது அவனுக்கு அசதியாக இருந்தாலும் அவரை பார்க்கச் சென்றான்.. இல்லையென்றால் அவர் ஏதாவது நினைத்துக் கொள்வார் அதற்காகவே சென்றான்…
ஜீப்பை நிறுத்திவிட்டு செக்யூரிட்டியிடம் விசாரிக்க,
அவர் வீட்டின் பின்புறம் இருப்பதாக செக்யூரிட்டி சொன்னார்…
அவனும் பின்பக்கம் சென்றான்..
பெரியவர் ஒரு மர நாற்காலியில் அமர்ந்து சுருட்டு பிடித்துக் கொண்டு இருந்தார்..
அறுபது வயது இருக்கும்..
நரைத்த தலை, நெற்றியில் பட்டை, வெள்ளை பனியன், லுங்கி அணிந்து இருந்தார்..
அவருடைய முகம் , மிகவும் கோபமாக இருந்தது..
அவன் எதிரே ஒருவன் மண்டியிட்டு அமர்ந்து இருந்தான்…
அவனுக்கு பயத்தில் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது..
“ஏன் காண்ட்ராக்டரே! நானே ஊரை அடிச்சு உலையில போடுறவன்..
என்கிட்டயே அந்த மணல் தாது வியாபாரத்துல நீயும் அந்த கணக்கு என்னை ஏமாத்தறீங்களா?”
“எனக்கு தெரியாம ஒரு லோடு கூட ஏமாத்த முடியாது”..
ஆனா ! நீங்க பொய் கணக்கு எழுதி உங்களுக்குள்ள பதுக்கிட்டு இருந்திருக்கீங்க அப்படித்தானே! என்றார் கோபமாக .
“நானே ஏமாத்தறவன்.. என்னையே ஏமாத்தலாம்ன்னு நினைச்சீங்களா?”
என்னைப் பார்த்தா முட்டாள் மாதிரி தெரியுதா?..
நான் இங்க ஒருத்தனையும், நம்ப மாட்டேன்..
இங்க எனக்கு எத்தனை உளவாளி இருக்கான் ன்னு யாருக்குமே தெரியாது?..
நான் என்ன கண்ணை பொடனில வெச்சு இருக்கேன்னு நினைச்சியோ என்று அவனை எட்டி உதைத்தார்..
அவன் தள்ளிப் போய் விழுந்தான்..
மீண்டும் தடுமாறி எழுந்து அவரிடம் வந்தவன் ,
“ஐயா !தெரியாம
செஞ்சுட்டாங்க ..
மன்னிச்சிடுங்க என்று கதறினார் அந்த காண்ட்ராக்டர்…
“என் சோத்தை தின்னுட்டு எனக்கே துரோகம் நினைச்சா நான் சும்மா இருப்பேன்னு நினைச்சியா?”
“ஒருத்தன் போய் சேர்ந்துட்டான் அடுத்து நீதான்” என்றார் சிரித்துக் கொண்டே..
அவர் பிடித்துக் கொண்டிருந்த சுருட்டை அவன் தோள்பட்டையில் வைத்து அழுத்தினார்..
அவனும் வலி பொறுக்க முடியாமல் கத்தினான்..
மீண்டும் மீண்டும் அதே போல செய்தார் பெரியவர்…
அவன் வலியில் சுருண்டு கீழே படுத்துக்கொண்டு துடித்தான்..
“நாய்னா நன்றியோட இருக்கணும்.”.
“என்னைக்கு அந்த நாய்க்கு விசுவாசம் குறையுதோ அப்பவே அந்த நாய கொன்னு புதைச்சுடனும்”..
“இல்லை !நம்ம கிட்ட வாலாட்டிக்கிட்டு இருந்தது நம்ம மேலேயே பாய்ஞ்சுரும்” என்று பேச்சை நிறுத்தியவர்..
டேய்! மருது என்று கத்தினார்…
ஐயா! என அவரிடம் ஓடி வந்து ஒரு பெரிய கத்தியை நீட்டினான்..
அதை வாங்கி அந்த காண்ட்ராக்டர் சுதாரிக்கும் முன்பே அவன் கழுத்தோடு சேர்த்து வெட்டினார்…
அவன் அப்படியே ரத்தம் வெளியேற துடிதுடித்து இறந்து விட்டான்..
அடுத்த நிமிடம் , அவருடைய ஆட்கள் அந்த உடலை எடுத்துக்கொண்டு மறைவாக சென்று விட்டனர்.
வேறு சில ஆட்கள் வந்து அந்த ரத்தக்கரையை துடைத்து அந்த இடத்தை சுத்தம் செய்தனர்..
இது எப்போதும் நடப்பது , என்பதால் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு சென்றனர் ..
“என்ன அக்னி ! நேத்து ஆளையே காணோம்” என்று அவனை குறுகுறுவென்று பார்த்தார் பெரியவர்…
அவன் உடம்பில் சின்ன மாற்றத்தை கூட காட்டாமல் அவரிடம்
ஐயா இது வந்து என்று இழுத்தான்..
மருது சொன்னான், “ ஒரு டாக்டர் பொண்ணு பாத்துச்சாமே என்று கேட்டார்..
ஐயா! அது பொண்ண அழகா இருந்துச்சு எப்படியும் சாகப் போறது தானே; அதுதான் என்று அவரைப் பார்த்து மீதி வார்த்தை பேசாமல் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தான்…
தப்பு இல்லை, தப்பு இல்லை ,ஆதரத்தை அழிச்சா போதும் எனக்கு வேற ஒன்னும் வேண்டாம் என்றார் சிரித்துக் கொண்டே…
பெரியவரோ வீட்டுக்குள் சென்று விட்டார்…
மருதுவோ அக்னியை ஒரு மாதிரி சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டே இருந்தான்…
என்ன டா? என்றான் அக்னீ மருதுவிடம்..
அது ஒன்னும் இல்லைண்ணா என்றான்..
லாரி லோடு ஏத்தனும்.. நான் போய் பாக்கறேன் என்று சென்று விட்டான்…
அக்னீ பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான்…
தன் தலையை கோதிக் கொண்டே வீட்டுக்குச் சென்றான்அக்னீ..