அசுரன் 47

அசுரன் 47

அடுத்த நாள்… குழந்தையுடன் நேரம் செலவழிக்கும் பொருட்டு வீட்டில் 
தான் இருந்தான் அருண். நியூஸ் பார்த்துக் கொண்டு சோபாவில் 
அமர்ந்திருந்தான்… 

வீட்டின் முன்பு கார் வந்து நிக்க யார் என்று எட்டிப் பார்த்தான் அருண்… 

காரில் இருந்து இறங்கினான் ராஜேஷ்… 

இந்த குரங்கு எங்க போயிட்டு வருது இந்த நேரம்…  என்று மனதிற்குள் 
யோசனையாய்… மேற்கொண்டு பார்க்க… 

மற்றொருபுறம் இருந்து ருத்ர இறங்கினார்… 

அவரைத் தொடர்ந்து ஸ்டைலாய், கண்ணில் கூலர்சுடன்  இறங்கி 
வெளியே வந்தாள் ரதி. 

அவளைப் பார்த்தவன், வேகமாய் சோபாவில் இருந்து எழுந்து நின்றான்… 
ஃபாரின்ல இருந்து வந்துட்டாளா? இன்னைக்கே போய் கூட்டிட்டு 
வந்துட்டாங்களா?… என்று யோசனையில் நிற்க… 

ரதியை வாசலில் நிற்க வைத்து, மலரை ஆரத்தி கரைத்து எடுத்து வர 
சொல்லி, ருத்ரா ஆரத்தி எடுத்து, ரதியை உள்ளே அழைத்து வந்தார். 

ஒயிலாய் வீட்டில் உள்ளே நடந்து வந்தாள் ரதி… முன்பை விட அழகாய் 
மாறி இருந்தாள்.. அவளுடைய பழைய ஜீரோ சைஸ் பிகரை 
மீட்டுக்கொண்டு வந்திருந்தாள்.. 
எப்பொழுதும் அருண் எதிர்பார்க்கும் அல்ட்ரா மாடர்ன் அழகி அவள்… 
அருணின் அருகில் வந்தவள்… 

ஹாய் பேபி எப்படி இருக்க?… 

ம்.. பைன்… 

நான் எப்படி இருக்கேன்.. என்று தன் இடையே வளைத்து வளைத்துக் 
காண்பித்தாள்?… 

ஆல்வேஸ் பியூட்டிஃபுல்… என்றான் அருண்… வாய் தான் அப்படி கூறியது… 
ஆனால் கண்கள் ரசிக்கவில்லை…  ஆரத்தி தட்டை வெளியில் 
ஊற்றிவிட்டு, சமையலறைக்குள் நுழைந்த மலரை தான் பார்த்துக் 
கொண்டிருந்தது.. 

ஓகே… வேர் இஸ் அவர் சன்…  என்று ரதி கேட்க… 

மலர்…. குழந்தையை எடுத்துட்டு வந்து ரதி கிட்ட குடு… என்று ருத்ரா 
கட்டளையிட்டார்… 

அது… வந்து..  மேடம்…  குழந்தை தூங்கிட்டு இருக்கான் என்று 
தயங்கினாள்… மலர். 

தூங்கிட்டு இருந்தா என்ன?…. தூக்கிட்டு வந்து குடு… சொன்னதை மட்டும் 
செய்…. என்று அதட்டினார் ருத்ரா. 

தயங்கியபடி அவளுடைய அறைக்குள் நுழைந்து குழந்தையை தோளில் 
தூக்கி வந்து, ரதியின் கையில் கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு 
நகர்ந்தாள் மலர்… 

குழந்தையை பார்த்த ரதியின் கண்கள் விரிந்தது… 
வாவ்… பியூட்டிஃபுல்லா இருக்கான்… சோ க்யூட்… என்று தன் முகத்தின் 
அருகில் வைத்து… ஹீ இஸ் லுக் லைக் மீ… என்று கூறிக் கொண்டே தனது 
செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டாள்… 

ரதியின் நடவடிக்கை அருணுக்கு எரிச்சலை கிளப்பியது.. 

அரை தூக்கத்தில் கண்ணை முழிக்க முடியாமல் முழித்த பட்டு குட்டி, 
தூக்கத்தை தொந்தரவு செய்த கோபத்தில்… கைகளால் கண்ணை 
தேய்த்துக் கொண்டே குட்டியின் வாய் w போல் நெளிந்தது…   பின் “வீல்” 
என்று அழுகத் தொடங்கினான்… 
ஏன் இப்படி அழுகிறான்… என்று ரதி முழிக்க… 

குழந்தையை தன் கைக்கு மாற்றி தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான் 
அருண்… 

தந்தையின் கைக்கு சென்றதும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன்… 
பின் திரும்பவும் தனது அழுகையை தொடங்க… சுற்றி இருந்த 
அனைவரும் தூக்கி சமாதானப்படுத்தி ஒரு வழியாகினர்…. அழுதழுது… 
குழந்தையின் முகம் சிவந்து போனது… 

குழந்தை எவ்வளவு நேரம் அழுகுது என்னன்னு வந்து வாங்குறளானு 
பாரு….  என்று கடுப்புடன் குழந்தையை வாங்கிக்கொண்டு… மலரின் 
அறையை நெருங்க… அவன் தட்டுவதற்கு முன்னமே அறை கதவை 
திறந்து குழந்தையை வாங்கினாள் மலர். அவளின் முகமும் சிவந்து தான் 
இருந்தது…. புரிந்தது அவனுக்கு, குழந்தையை வாங்குவதற்கு தயங்கி, 
என்ன செய்வது என்று தெரியாமல், கதவின் அருகிலேயே நின்று இருந்து 
இருப்பாள் போலும்… 

அவளை கண்டதும் பாய்ந்து அவளிடம் சென்ற குட்டி… இரண்டு தடவை 
அவளுடைய கழுத்தில் தனது மூக்கை உரசி பின் அவள் கழுத்தில் 
முகத்தை புதைந்து, கழுத்தை கட்டிக்கொண்டு உறங்கியது அந்த 
செல்லகுட்டி… இது குழந்தையின் தினசரி வழக்கம் தான்.. குழந்தையின் 
முதுகை தட்டி கொடுத்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் 
மலர். 

குழந்தையின் செயலை தான் ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான் 
அருண்… 

ஏன்டா இதுக்கா இந்த அழுக அழுத… ஏன் வேற எங்கேயும் தூங்குனா 
உனக்கு தூக்கம் வராதா? அங்கேயே தான் படுத்து தூங்கனுமா… என்று 
கேட்டான் ராஜேஷ் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை பார்த்து… 

இவன் என்னதான் டார்ச்சர் பண்றா ன்னு பாத்தா என்னோட மகனையும் 
நிம்மதியா இருக்க விட மாட்டான் போல… என்று நினைத்துக் கொண்டே… 
ஸ்லோ மோஷனில் ஓர கண்ணில் முறைத்தான் அருண். 

ப்ரோ நீங்க என்ன பாசமா பார்த்தது போதும்… அண்ணி உங்கள ரொம்ப 
நேரமா பாசமா பாத்துட்டு இருக்காங்க… என்னன்னு திரும்பி பாருங்க… 
என்று ராஜேஷ் கூற… 

அருண் திரும்பிப் பார்க்க ரதி இவ்வளவு நேரமும் அருணை தான் 
பார்த்துக் கொண்டிருந்தாள்.. 

ஓ…கே… அப்ப குழந்தையோட கேர் டேக்கர்  இவ தானா? என்று ரதி கேட்க… 

எங்கோ பார்த்தபடி ஆமாம்… என்று தலையசைத்தான் அருண். 

இட்ஸ் நாட் குட் அருண்… வீட்ல சமையல் வேலை பார்க்கிறவங்களை 
எல்லாம் குழந்தைக்கு கேர்டேக்கரா அப்பாயிண்ட்மெண்ட் பண்ணி 
இருக்க…. 

என்னோட குழந்தைக்கு யாரை கேர் டேக்கரா  போடணும்னு எனக்கு 
தெரியும்… இந்த விஷயத்துல நீ தலையிடாதே ரதி… என்றான் 
அழுத்தமாய்… 

இரண்டு புருவத்தையும் மேல் உயர்த்தி தலையை சாய்த்து அருணை 
பார்த்த ரதி… 

அவ குழந்தைக்கு ஆயா வேலை பாக்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் 
இல்ல… ஆனா அவளை குழந்தைக்கு அம்மாவா ஆக்கணும்னு நீயும் 
நினைக்க கூடாது… அம்மாவா ஆகணும்னு அவளும் நினைக்க கூடாது… 
அதையும் மீறி நீ ஏதாவது பண்ணனும் நெனச்சா பேபி… நீ இதுவரைக்கும் 
பார்க்காத ஒரு ரதிய நீ பார்ப்ப… மைண்ட் இட்…. என்று கூறிவிட்டு… மேலே 
ரூமுக்கு வா… என்று கண்களால் அருணுக்கு ஜாடை செய்து விட்டு படி 
ஏறினாள் ரதி. 

அருண் மேலே செல்ல போக, ராஜேஷ் மலரின் அறையை நோக்கி 
நகர்ந்தான்…. அவனைக் கொத்தாக கழுத்தை பிடித்து நிறுத்திய அருண்… 

அங்க எங்க போற… குழந்தை தூங்கிட்டு இருக்கான்ல உன்னோட ரூமுக்கு 
போ… என்று ராஜேஷின் அறையை நோக்கி தள்ளினான் அருண்… 

ப்ரோ… என்கிட்ட மட்டும் நல்ல கோபப்படுறீங்க ஆனா அண்ணி 
உங்களையும், என்னோட லவ்வரையும் சேர்த்து வச்சு பேசிட்டு 
போறாங்க… நீங்களும் கோவப்படாம நிக்கிறீங்க… என்று ராஜேஷ் கூற… 

ரா…ஜேஷ்ஷ்….. என்று பல்லை கடித்தான்  அருண்.  

இதுக்கே டென்ஷன் ஆகாதீங்க ப்ரோ… அண்ணி உங்கள மேல 
கூப்பிட்டாங்க பாருங்க.. என்று ஒரு மார்க்கமாக அருணின் அறையை 
சுட்டி காட்டியவன்…. 
ஆல் தி பெஸ்ட் ஃபார் செகண்ட் இன்னிங்ஸ் ப்ரோ….. என்று அருணின் 
கையைப் பிடித்து குலுக்கினான் ராஜேஷ். 

ஆக்சுவலி ப்ரோ, நீங்க எனக்கு தேங்க் பண்ணனும்… என்று ஒரு விரலை 
நாடியில் வைத்து மேலே பார்த்தபடி கூறினான்… 

எதுக்கு? எனும் விதமாக நெற்றியை சுருக்கி ராஜேஷை பார்க்க… 

நீங்க அண்ணிய ரொம்ப மிஸ் பண்றீங்கன்னு எனக்கு தெரியும் ப்ரோ.. 
அதனால.. நான் தான் காலையிலேயே பெரியம்மாவை எழுப்பி அவங்க 
கிட்ட பேசி அண்ணி வீட்டில் போய் பேசி உடனடியா அவங்கள கூட்டிட்டு 
வந்தோம்… என்றான் ராஜேஷ்… 

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்த அருண்…. அடப்படுபாவி பயலே…. 
உனக்கு என்னடா பாவம் பண்ணேன் நானு…. அந்த நல்ல காரியத்தை 
இன்னைக்கே பண்ணவன் நீ தானடா என்று மனதுக்குள் நொந்து 
கொண்டான். 

இப்ப பாருங்க நீங்களும் ஹாப்பி.. நானும் ஹாப்பி… 
எங்க… தம்பிக்கு தேங்க்ஸ் சொல்லுங்க பார்ப்போம்..  என்று அவன் 
ஸ்டைலாய் நிற்க.. 

மவனே… ஓங்கி ஒரு மிதி மிதிச்சேன் வையி….. உன் வாழ்நாளில் 
உன்னோட தம்பி எந்திரிக்கவே மாட்டான் பரவாயில்லையா … என்று 
அருண் பல்லை கடித்த படி கேட்க… 

ஐயோ ப்ரோ… அப்படி ஏதும் பண்ணிடாதீங்க… என்று தன் கால்கள் 
இரண்டையும் குறுக்கியபடியே  அவன் அறையை நோக்கி நடந்தான் 
ராஜேஷ். 

மேலே தன் அறைக்குள் நுழைந்தான் அருண்.. 

அருணை பின்னால் இருந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் ரதி. 

பேபி..  ஐ மிஸ் யூ… என்றாள் கிறக்கமாக.. அவனுடைய முதுகில் மெல்ல 
தன் உதடுகளால் கோலம் போட்டு முத்தமிட்டுக்கொண்டே…       டு யூ? 
என்றாள் ரதி. 

ஒரு மாதம் பிரிவுக்குப் பின் அழகின் உருவமாய் வந்திருக்கும் காதல் 
மனைவியை…. பார்த்தவுடன் கட்டிப்பிடித்து, முத்த மழை பொழிந்து… 
கலவி புரிந்திருக்க வேண்டும்…  ஆனால்… இங்கு நடந்ததோ வேறு… 
ரதியின் செய்கை அருணுக்கு எரிச்சலை கிளப்பியது… 

மீ டூ… என்று வார்த்தைகளால் கூறிவிட்டு அவள் கையை விலக்கிவிட்டு, 
சோபாவில் சென்று அமர்ந்தான் அருண்…. 

என்கிட்ட ஏதாவது சேஞ்சஸ் உனக்கு தெரியுதா?… மை நோஸ், மை ஐஸ் 
என்று ஆரம்பித்து  மை பேக்ஸ் அண்ட் பூப்ஸ் என்று கிசுகிசுப்பாக 
முடித்தாள் … 

கால் மேல் கால் போட்டு இருக்கைகளையும் சோபாவில் விரித்து 
விட்டிருந்தவன் ரதியை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தான்… 
கர்ப்ப காலத்தில் ஏறிய எடையை குறைத்திருந்தாள்… லிப் பில்லிங் 
செய்திருப்பாள் போலும்… முன்பை விட உதடுகள் கொஞ்சம் தடித்து 
காணப்பட்டன… இடுப்பை சுற்றி வளர்ந்திருந்த சதை வழித்து எடுத்தது 
போல் இருந்தது…  தலைமுடியை கலரிங் செய்திருந்தாள்… கழுத்தை 
விட்டு கீழே இறங்கிய கண்கள்… அவளின்  மார்பழகை பார்க்கும் 
பொழுது… மோகத்தில் சிவக்க வேண்டிய கண்கள்…. கோவத்தில் 
சிவந்தன… மனது சிறிது வலித்தது… தனது மகனுக்கு அங்கு இடம் 
கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்… 

அவன் வேண்டி விரும்பும் அல்ட்ரா மாடல் அழகி… ஆனால் இன்று ஏனோ 
ரசிக்க தோன்றவில்லை… 

டோட்டலி… ஒன் குரோர் போர் திஸ் சேஞ்ச்… என்றாள் ரதி. 

தொகையை கேட்டு விழி விரித்தவன்… (எப்படி அவ மட்டும் ₹100 வச்சு 
வாழ்றா… அவளுக்கு இந்த மேக்கப் ப்ராடக்ட் எதுவுமே தேவைப்படாதா… 
என்று மனதிற்குள் நினைத்தான்) 

எதுக்காக ரதி நீ இவ்வளவு செலவு பண்ணிட்டு வந்துருக்க… ஏற்கனவே நீ 
அழகா தானே இருப்ப என்று கேட்க… 

ஒயிலாய் நடந்து வந்து அவன் மடியில் உட்கார்ந்தவள்… 

நீயும் ஒரு சைல்டுக்கு அப்பா தானே… பாக்குறதுக்கு எப்படி ஹாட் அண்ட் 
செக்ஸியா இருக்க… என்று அவனது நெஞ்சை தடவி மையத்தை 
கிள்ளினாள்… 

உப்ப்… என்று தனது நெஞ்சை தேய்த்துக் கொண்டான் அருண்.. 

அப்போ உனக்கு ஈக்குவலா நானும் இருக்க வேணாமா… எங்க இப்ப அதே 
மாதிரி நீ கிள்ளு பாப்போம்… என்றாள்… 

அவளுடைய செய்கை பிடிக்காதவன்… அவளை மெல்ல நகர்த்தி 
சோபாவில் உட்கார வைத்து விட்டு எழ முயன்றான்… 

இப்ப எதுக்காக என்ன அவாய்ட் பண்ற அருண்… என்று நேரடியாகவே 
கேட்டாள் ரதி. 

அன்னைக்கு குழந்தைக்கு பால் கொடுத்துட்டு போ னு உன்னை எத்தனை 
தடவை கெஞ்சுனேன்? கொஞ்சமாவது மதிச்சியா நீ… 

தட் இஸ் மை சாய்ஸ்… அருண்… 

பால் கொடுக்க விருப்பம் இல்லாத போது எதுக்கு குழந்தை 
பெத்துக்கிட்ட… 

பிகாஸ்…. இந்த குழந்தையை அபார்ட் பண்ண முடியாதுன்னு டாக்டர் 
சொல்லிட்டாங்க… பெத்துக்கிறது தான் நல்லதுன்னு டாக்டர் 
சொன்னாங்க… அதனால பெத்துக்கிட்டேன்.. என்னோட வீட்டுக்கும் ஒரு 
வாரிசு வேணும்.. உன்னோட வீட்டுக்கும் ஒரு வாரிசு வேணும் 
மறந்துடாத… 

அதிர்ச்சியான அருண்… அப்போ அவன் மேல உனக்கு பாசமே 
இல்லையா… 

ஏன் இல்ல…. இவ்ளோ சொத்துக்கும் ஒரே வாரிசு அவன் தான் அவன 
பிரின்ஸ் மாதிரி வளர்க்கலாம்… 

நீ வளர்க்கறதுன்னு எதை மீன் பண்றேன்னு எனக்கு சத்தியமா புரியல 
ரதி… அவனுக்கு பணம் செலவழிக்கிறது யா… 

நீயும் நானும் எப்படி வளர்ந்தோமோ அப்படித்தான்… 

அருண் ஒன்றை புரிந்து கொண்டான் இந்த ஜென்மத்தில் அவளுக்கு தான் 
நினைப்பதை புரிய வைக்க முடியாது என்று… 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top