அசுரன் 54

அசுரன் 54

 

இதோ இரு பெண்களும்…. ஊரை சுற்றி வளைத்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்… அவளுக்கு தேவையான காட்டன் புடவைகள் மற்றும் ரெடிமேட் பிளவுஸ் களை தேடி பார்த்து வாங்கிக் கொண்டாள்…  நந்தினி அவளுக்கு மேலும் ஷர்ட் ஜீன்ஸ் டாப்ஸ் சுடிதார் போன்றவற்றையும் தேர்ந்தெடுத்து வாங்கி கொடுத்தாள்..

இவர்களின் லைவ் லொகேஷன் ஆதியின் போனில் ஓடிக்கொண்டிருந்தது…

நந்தினிக்கு அவ்வப்போது ஆதியிடமிருந்து மெசேஜ் வரும்…

துணி எடுக்கும் கடையில் இருக்கும் பொழுது…

“நேவி ப்ளூ கலர் டிரஸ் சூஸ் பண்ணுங்க…”

பார்லரில் இருக்கும் பொழுது…

“ஐ ப்ரோ திரட் பண்ண வேணாம்… ஹேர் லென்த் கம்மி பண்ண வேணாம்..”.

ஹோட்டலில் இருக்கும் பொழுது…

 

“நோ ஐஸ் கிரீம்ஸ் கோல்ட் வரும்… த்ரோட் இன்ஃபெக்சன் ஆயிரும்…”

 

முடிஞ்ச அளவுக்கு அவளை சந்தோஷமா வச்சுக்க பாருங்க எதைப்பற்றியும் நினைக்க விடாதீங்க…

இந்த மெசேஜ்களை படித்துவிட்டு புன்னகைத்துக் கொள்வாள் நந்தினி … இதுக்கு எதுக்கு நம்மள கூப்பிட்டு வர சொல்லணும் அவரே கூப்பிட்டு வந்திருக்கலாமே என மனதில் நினைத்துக் கொண்டாள்…

தனியே சிரிப்பவளை பார்த்து என்ன நந்து… பாய்பிரண்டா? என்று கேட்டாள் மலர்…

இல்லை என கூறியவள்… ஆனா பாய் பிரண்ட்டான நல்லா இருக்கும்ன்னு நினைக்கிற மாதிரி ஒரு ஃபிரண்ட்… என்று ஒற்றை கண்ணாடித்துக் கூறினாள் நந்தினி. 

நீயும் ஆதிசாரும் சின்ன வயசுல இருந்து பிரெண்டா?… என்று மலரை பார்த்து கேட்டாள் 

இல்ல நந்து… சொல்லப்போனா அவர் எனக்கு நேத்து இருந்து தான் ஃப்ரெண்ட்…

அதைக் கேட்டு அதிர்ந்த நந்தினி…

அப்புறம் எப்படி  ஆதி சார தெரியும்…

( என்ன சொல்வது என்றே மலருக்கு தெரியவில்லை, அருணை பற்றி விளக்க அவள் விரும்பவில்லை)

எங்க அண்ணாவுக்கு அவர் பிரண்டு.. 

உங்க அண்ணா பேரு…

விக்ரம்…

ஓ விக்ரம் சாரோட தங்கச்சியா நீ…

கூட பிறந்த தங்கச்சி இல்ல தங்கச்சி மாதிரி… 

(மலருக்கு தன் நிலையை விளக்க முடியாத சூழல் ஒன்று இருப்பதைப் புரிந்து கொண்டாள் நந்தினி) இப்படியே இரண்டு நாட்களை கழித்தனர்… இந்த இரு நாட்களில் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர்…

இரு நாட்கள் முடிந்து அலுவலகத்திற்கு தயாராகி தன்னை கண்ணாடியில் பார்த்தாள் மலர்…

உண்மையில் இப்பொழுது அவளைப் பார்க்க அவளுக்கே ஒரு தன்னம்பிக்கை பிறந்தது..  நேர்த்தியான காட்டன் புடவையை அயன் பண்ணி அணிந்திருந்தாள்… ரெடிமேடு ரவிக்கை அவளுக்கு கணக்கச்சிதமாக பொருந்தி இருந்தது ஆனால் பின் கழுத்து அவள் வைத்து தைப்பதை விட  கொஞ்சம் இறக்கம் என்பது அவளது கவலை… ஒரு கையில் வாட்ச் ஒரு கையில் பிரேஸ்லெட்..  நீளக் கூந்தலை அழகாக  பின்னலிட்டு இருந்தாள். மிக அளவான ஒப்பனை… குட்டி பொட்டு… காதில் கழுத்தில் குட்டி இமிடேஷன் ஜுவல்லரி… கண்ணுக்கு மை இட்டு இருந்தாள்…  எப்பொழுதும் சோர்ந்து போய் குழப்பத்தில் இருக்கும் முகம் இன்று கொஞ்சம் தெளிச்சியாய் இருந்தது.. இப்ப தாண்டி பாக்குறதுக்கு “படிச்ச பொண்ணு மாதிரி இருக்க..” சும்மா சொல்லக்கூடாது பார்க்க கொஞ்சம் அழகாத்தான் இருக்க…  என்று கூறி கண்ணாடியில் தெரிந்த அவள் முகத்திற்கு அவளே ஒரு முத்தமிட்டு கொண்டாள்..   

புதியதாக வாங்கிய ஹேண்ட் பேக் உடன்.. முதல் நாள் புது பொருட்களுடன்  பள்ளிக்கு செல்லும் சிறுமியின் குதுகலத்துடன் கிளம்பி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள் மலர்.

ரிசப்ஷனில் நின்றிருந்த பெண்ணிற்கு ஒரு குட் மார்னிங்  கூறிவிட்டு… ஆதியின் அறையை நோக்கி நகர்ந்தாள்..

ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம பார்த்த பொண்ணா இது என்று அந்த வரவேற்பு பெண், மலரையே ஆ… வென பார்த்துக் கொண்டிருந்தாள்…

கதவைத் தட்டி அனுமதி பெற்று, ஆதியின் அறை உள்ளே நுழைந்தாள்… அறையில் யாரும் இல்லை… ஆதியின் தனிப்பட்ட அறையில் காலடி சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.. 

அங்கேயே நின்று, அன்று தான் அவனது அறையை முழுமையாக பார்வையால் சுற்றி பார்த்தாள்… அன்று வரும் பொழுது இருந்த குழப்பத்தில் இதையெல்லாம் அவள் கவனிக்கும் மனநிலையில் இல்லை…

பெரிய அறை ஏசி அறை … உள்ளே அவனுக்கு என்று ஒரு தனிப்பட்ட அறை வேறு இருந்தது… 

R.தேவாதித்யன் M.D என்ற பெயர் பலகையை பார்த்து அவனது பெயரை மனதிற்குள் வாசித்துப் பார்த்தாள்… ஓ இதுதான் இவரோட  பேரா நல்லா தான் இருக்கு..  அப்ப எல்லாரும் சுருக்கி ஆதின்னு கூப்பிடுவாங்க போல….

உள்ளே இருந்து ஒரு சில பைல்களுடன் வெளியே வந்தான் ஆதி..  வந்தவன் மலர் இருப்பதை அறிந்து..  வாங்க மிஸ்.மலர்… உட்காருங்க… ஹவ் யு ஃபீல் நவ்…

வெரி ரெப்ரஸிங் சார்…

குட்…  

சார்…. எனக்கு என்ன ஒர்க்ன்னு சொல்லிட்டீங்கன்னா… என்று அவள் ஆரம்பிக்க…

ம்… ஸ்டார்ட் பண்ணலாம். அதுக்கு முன்னாடி சில வேலைகள் இருக்கு அத பினிஷ் பண்ணிடலாம்…

சரி வாங்க ஒரு இடத்துக்கு போகணும் போயிட்டு வந்துரலாம் என்று கூறி அவன் நடக்க அவள் பின்தொடர்ந்தால் நீங்க முன்னாடி போங்க..  ஒரு நிமிஷம் நான் வந்துடறேன் என்று கூறிவிட்டு தனது மொபைலையும் வாலட்டயும் எடுத்து எடுத்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்தான் ஆதி…

தன் முதுகுக்கு பின்னால் ஏதோ பார்வை குறு குறுக்க… சட்டென திரும்பினாள் மலர்… போன் பார்த்துக் கொண்டே வேகமாய் நடந்து வந்த ஆதியின் மேலே இடித்து நின்றாள்…

ஐயோ சாரி…  சாரி சார்…   தெரியாம…

இட்ஸ் ஓகே… நீங்க போங்க… என்று விலகி முன்னே நடந்தான் ஆதி..

இருவரும் ஒன்றாக காரில் வந்து ஏற… பின் சீட்டை ஒருமுறை திரும்பி பார்த்தாள் மலர். முதன் முதலில் இந்த காரில் தான், பின் சீட்டில் அமர்ந்து மனதில் ஒரு வெறுமையோடு அருண் வீட்டிற்கு சென்றாள். 

என்ன பின்னாடி திரும்பி பாக்குறீங்க…. மலரும் நினைவுகளா? இல்ல மலரின் நினைவுகளா? என்று குதர்க்கமாய் கேட்டான் ஆதி.

ரெண்டும் இல்ல சார்… ஜஸ்ட் பாஸிங் கிளவுட்ஸ்…

இருவரும் வந்து இறங்கிய இடம் மலரின் கல்லூரி…

தன் கல்லூரியின் வாயிலை பார்த்து அவளது முட்டை கண்ணை விரித்தாள்…

இங்க என்ன வேலையா வந்திருக்கோம்…. என்று மனதில் நினைத்துக் கொண்டே ஆதியை பின்தொடர்ந்தாள் மலர்…

நீள கால்களை உடையவன் வேகமாய் நடக்க சிறிது ஓட்டமும் நடையுமாய் அவனை பின் தொடர வேண்டி இருந்தது மலருக்கு…

என்ன இவ்வளவு வேகமா நடக்குறாரு… பின்னாடி வர்றவங்கள பத்தி யோசிக்கிறாரான்னு பாரு.. இன்று மனதுக்குள் ஆதிக்கு திட்டு வேறு கிடைத்தது…

பிரின்சிபல் அறையை அடைந்தவன்… முதலிலேயே அனுமதி பெற்று இருப்பான் போலும்… கல்லூரி முதல்வரும் ஆதியை வரவேற்பதை பார்க்கும் பொழுது, இருவருக்கும் முன் அறிமுகம் இருக்கும் என தோன்றியது.

இவங்க மிஸ் மலர் உங்க காலேஜ்ல தான் BE படிச்சாங்க  லாஸ்ட் செமஸ்டர் மட்டும் அவங்க தனிப்பட்ட பிரச்சனைனால காலேஜ் வர முடியாம போயிடுச்சு… சோ அத கம்ப்ளீட் பண்றதுக்கு தான் நாங்க வந்திருக்கோம் அதுக்கான பார்மாலிட்டி என்னன்னு சொன்னீங்கன்னா… என்று முடிக்கும் முன்னே மலர் ஆதியை அதிர்ந்து பார்த்தாள்.

அது ரொம்ப சிம்பிள் ஃபார்மாலிட்டி தான் சார்..  ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் சொல்லிருங்க உங்களோட ப்ரூப் எல்லாம் சமிட் பண்ணிடுங்க… பீஸ் காட்டிடுங்க புக்ஸ் வாங்கிட்டு போயிடலாம் இன்னைக்கு அதுக்கப்புறம் நீங்க எக்ஸாம் டைம் மட்டும் வந்து உங்களோட அரியர் கிளியர் பண்ற மாதிரி வரும் 

உன்னோட ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் ஞாபகம் இருக்கா மா…. என்று கல்லூரி முதல்வர் கேட்க 

அனைத்து தகவல்களும் கல்லூரி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு பணம் கட்டப்பட்டு புத்தகங்களை வாங்கி மலரின் கையில் கொடுத்தான் ஆதி.

புது புத்தகங்களை பார்த்தவளுக்கு மனம் கலங்கி போனது…. அதை மிருதுவாக தடவி பார்த்து புத்தகங்களை புரட்டி அதன் வாசனையை நுகர்ந்து ஆழ்ந்து மூச்சு எடுத்தாள் மலர்.

அவள் செய்கைகள் எதுவும் இங்கு ஒருத்தனின் கண்ணில் இருந்து தப்பாது.

பின் அலுவலகம் திரும்ப காரில் ஏறினார்கள்… 

உங்களுக்கு எப்படி சார் தெரியும்? நான் இங்கதான் படிச்சேன்னு…

தெரியும்… விக்ரம் சொன்னான்.

இப்போ எதுக்காக சார் என்ன காலேஜ்ல கொண்டுவந்து சேர்த்து விட்டீங்க நான் முதல்ல வேலை பார்க்க ஆரம்பித்து விட்டு பணம் வந்ததுக்கப்புறம் படிக்க சேர்ந்திருப்பேனே…

காரை ஓட்டிக்கொண்டே அவளை ஒரு கணம் பார்த்து திரும்பியவன்… முதல்ல டிகிரிய கையில வாங்கி உங்க அப்பாவோட ஆசையை நிறைவேத்து மலர்… 

உண்மைதான் அவளின் அப்பா தனக்காக கூட எதுவும் செய்யாமல் அவள் படிப்புக்காக மிகவும் பிரயாத்னம் பட்டார்… அதனாலையே எப்பொழுதும் மலர் படிப்பில் கெட்டிகாரி…

எங்க அப்பாவ உங்களுக்கு தெரியுமா?

உங்க அப்பாவ எனக்கு தெரியாது… ஆனா உங்க அப்பாவோட ஆசை இதுதான்னு எனக்கு தெரியும்…

எப்படி?… என அவள் தலையை சாய்த்து கேட்க…

ரெண்டு நாள் ஷாப்பிங் எப்படி போச்சு…. நந்தினி உங்ககிட்ட நல்லா பழகுனாங்களா…. என்று ஆதி கேட்க…

ஓ நல்ல பழகினாங்களே… என்று தனது இரு நாள் ஊர் சுற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விட்டாள் மலர்.

( அப்பாடா… கேட்ட கேள்விய மறந்துட்டா… என்று ஒரு நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டான் ஆதி )

அவள் பேசும்போது ஒவ்வொரு அசைவையும் ரசித்து மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டான்… 

காரை ஓரிடத்தில் நிறுத்தி, ஒரு சின்ன குடில் கடையில் அவளுக்கு டீ வாங்கி கொடுத்தான்… காரை விட்டு அவளை இறங்க விடவில்லை… காரில் இருந்தபடியே அவனது நடவடிக்கைகளை கவனித்தாள்… ஒரு வயதான தாத்தாவும் பாட்டியும் டீ போட்டுக் கொண்டிருந்தார்கள்… பாட்டியின் உடை அவர்கள் கேரளாவை சார்ந்தவர்கள் என்று புரிய வைத்தது… இரண்டு கப்பில் டீ வாங்கிக் கொண்டு வந்து அவளுக்கு கொடுத்துவிட்டு அதே கதவில் அவனும் சாய்ந்து நின்றபடி குடித்தான்… பின் அவளது கப்பையும் வாங்கிக்கொண்டு அதை குப்பை தொட்டியில் எறிந்தவன், வேற ஏதாவது உனக்கு வேணுமா என்று கேட்டுவிட்டு, அவள் இல்லை என்று சொன்னவுடன்  பணத்தை கொடுத்து விட்டு காரில் ஏறினான்…

அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே இருந்த மலர்… 

நீங்க இந்த மாதிரி சின்ன கடையில் கூட டீ குடிப்பீங்களா…

ஏன்? டீ நல்லா இல்லையா?

இல்ல நல்லா இருந்துச்சு…

அவ்வளவுதான் நல்லா இருக்க ஒரு கடையில டீ குடிச்சா முடிஞ்சு போச்சு… யாருமே இல்லாத ஒரு ஹோட்டலுக்கு போய் தனியா ஆர்டர் பண்ணி, போன் பார்த்துக்கிட்டே அந்த டீய குடிக்கிறதுல என்ன சந்தோசம் கிடைக்கப் போகுது…

இப்படி இயற்கையை பார்த்துக்கிட்டே காத்து வாங்கிட்டு நிதானமா ஒரு நிமிஷம் டீ குடிச்சா தான் டீ யோட டேஸ்ட் எனக்கு உணர்ந்த மாதிரி இருக்கும்…..

இவருக்குள்ள இப்படி ஒரு ரசனையா… என ஆச்சரியப்பட்டாள் மலர்.

அன்றும் கோவிலில் இருந்து திரும்பும் பொழுது அப்படித்தான்… அவளுக்கு பசிக்க விடாமல், அவள் மறுக்க, மறுக்க, ஏதோ ஒன்று சாப்பிட வாங்கி கொடுத்துக் கொண்டே வந்தான்… அப்பொழுது அவள் அதை கவனிக்கும் நிலையில் இல்லை… ஆனால் இப்பொழுது உணர்கிறாள்…

இத்தனை நாள் சிடுமூஞ்சி… பணதிமிர் பிடித்தவன்…. என்ற பார்வை மாறி…. 

மலரின் பார்வையில் ஆதி புதுவிதமாய் தெரிய ஆரம்பித்தான்….

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top