மயக்கும் மாலைபொழுது கொஞ்சம் கொஞ்சமாக மறைய, இனிக்கும் இரவு மெல்ல மெல்ல மலர்ந்து நள்ளிரவை அடைந்திருக்க,
“மன மன மெண்டல் மனது” என்கின்ற பாடல் ஒலிக்க, இளம் வயது ஆண்கள் பெண்கள் சேர்ந்த பட்டாளம் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த ரோட்டில் தங்களின் கார்களில் தங்களது வயதுக்கும் மிஞ்சிய வேகத்தில் பறந்தனர்.
அப்பொழுது ஒரு பைக் மின்னலையும் மிஞ்சும் வேகத்தோடு வந்து அவர்கள் முன்பு சடன் ப்ரேக் போட்டு நிற்க, அனைவரும் யாரது என்பதைப் போல் பார்த்தனர்.
அப்பொழுது பைக்கில் வந்த அந்த இளைஞன் தன் தலையில் இருந்த ஹெல்மெட்டை கழற்றி விட்டு தனது அலைபாயும் கேசத்தைச் சரி செய்தபடி தனது இதழ் இழுத்து புன்னகைக்க, அங்கிருந்த அனைத்து பெண்களும்,
“ரோஹித், ரோஹித்” என்று கத்த துவங்கினர்.
சிறிது நொடிகள் கழிந்த பிறகு, அங்கே இருந்த அனைவரும் ஆரவாரம் செய்ய அங்குப் பைக் ரேஸ் துடங்கியது, அங்கிருந்த பாதிக்கும் மேற்ப்பட்ட பெண்கள்,
“ரோஹித் ரோஹித் ரோஹித்” என்று ஆரவாரம் செய்ய. ரோஹித் பைனல் லைனை நெருங்க ஒரு சில நொடிகளே இருந்த பொழுது, அவர்களைப் போலீஸ் ஜீப் ஒன்று நெருங்கியது.
@@@@@@
ஆபிஸ் கான்பரென்ஸ் ரூமில், வீடியோ காலில் பாரீன் டெலிகேட்ஸுடன் மீட்டிங்கில் இருந்த பொழுது, தன் அலைபேசி விடாமல் ஒழிக்க அதை அட்டெண்ட் செய்த அர்ஜுன் அவசர அவசரமாக மீட்டிங்கில் இருந்து கிளம்பி தனது கருப்பு நிற ஆடி காரில் காட்டாறு போலப் பாய்ந்தான்.
@@@@@@@
போலிஸ் ஸ்டேஷனில் ரோஹித்,
“சார் எங்கள வேணும்னா வச்சிக்கோங்க கேர்ள்ஸ விட்ருங்க”
“அதெல்லாம் நான் முடிவு பண்ண முடியாதுப்பா இன்ஸ்பெக்டர் சார் கிட்ட பேசிக்கோங்க” என்று ஏட்டு மாணிக்கம் கூற, அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சரத்,
“என்ன ஏட்டையா பையன் என்ன சொல்றான்” என்று தன் புருவம் உயர்த்தியபடி கேட்டார்.
“பொம்பள புள்ளைங்கள விடச் சொல்றான் சார்”
உடனே அவரோ,”ஏன் ரோமியோக்கு தாங்க முடியலையோ” என்று நக்கலாகக் கேட்க
“சார் நீங்க வேணும்ன்னே பண்றீங்க முதல்ல எங்களை ஏன் இங்க வச்சிருக்கீங்க நாங்க எந்த பப்லிக் நியுசென்சும் பண்ணல ஆள் இல்லாத சிவிலியன்ஸ் இல்லாத இடத்துல தானே ரேஸ் வச்சோம் சார், அப்படியே புடிக்கணும்னாலும் எங்களை மட்டும் தானே சார் புடிக்கணும், பொண்ணுங்களை ஏன் உள்ள வச்சிருக்கீங்க, சட்டப்படி லேடி கான்ஸ்டபிள் இல்லாம பொண்ணுங்களை நைட் டைம் போலீஸ் ஸ்டேஷன்ல வைக்கக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியாது” என்றான் அழுத்தமாக.
“ என்னடா எனக்கே சட்டம் சொல்லி தரியா ஹான் என்ன நினைச்சிட்டு இருக்க. நீ தான் இந்தப் பொறுக்கி கும்பலுக்குப் பாஸா, பொட்ட புள்ளைங்களோட நடுரோட்ல உனக்கு என்னடா ரேஸ் வேண்டி கிடக்குது, நீ என்ன வித்தகாரனா, ரேஸ் மட்டும் தானா இல்ல வேற எதுவும் சேர்த்து பண்றீங்களா”
“சார்” என்று அவன் தனது குரலை உயர்த்தவும்,
“ஏய் என்ன குரலை உயர்தர உன் பணக்கார திமிரல்லாம் என்கிட்ட காட்டாத, பேசுறதுக்கு வாய் இல்லாம பண்ணிருவேன். ஆமா எதோ பெருசா ஒத்த போன் பண்ணினா போதும் பெருசா கிளிச்சிருவேன்னு சொன்ன என்ன ஒரு ஈ காக்காவ கூடக் காணும், போ போய் அந்த மூலையில உக்காரு, போ டா” என்றவர்,
அனைவரையும் பார்த்து
“டேய் உங்க எல்லாரையும் அரரெஸ்ட் பண்ணி எவ்வளவு நேரம் ஆச்சு உங்க வீட்ல இருந்து ஒரு போன் கால் கூட வரல, என்ன மொத்தமா தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்க போல” என்று கூறி சிரித்தவாறு கான்ஸ்டபிளிடம்,
“இங்க இருக்குற பொண்ணுங்க பசங்க எல்லார் மேலயும் ட்ரன்க் அண்ட் டிரைவ், பப்ளிக் நியுசனஸ்ன்னு கேஸ் பைல் பண்ணுங்க அப்போ தான் புத்தி வரும்” என்று ரோஹித்தை பார்த்து முறைத்தபடியே கூறினார்.
அப்பொழுது, “சார் என்ன பண்றீங்க, நாங்க யாரும் ட்ரின்க் பண்ணல, ரேஸ் தான் வச்சோம் அதுவும் யாரும் வராத ரோட்ல தான். ஏன் பொய் சொல்றீங்க,பர்ஸ்ட் எல்லா கேர்ள்ஸையும் ரீலீஸ் பண்ணுங்க” என்று ரோஹித் கோபமாகத் திமிரவும்,
“என்னடா எனக்கே ஆர்டர் போடுறியா, ம்ம்ம் போலீஸ் என்ன நீ வச்ச ஆளா ஏறி மிதிச்சேன் குருகெலும்பு உடைஞ்சிரும், போ எனக்குக் கோபம் வர்றதுக்குள்ள வாயமூடிட்டு போய் உக்காரு” என்று அவர் சிடுசிடுக்க, ரோஹித்தோ அவரை முறைத்து பார்க்க, கோபம் கொண்ட அதிகாரி,
“என்னடா முறைக்கிற என்ன அடிச்சிருவியா ம்ம்ம் அடிடா அடிடா” என்று ரோஹித்தின் நெஞ்சில் தன் கரம் வைத்து தள்ள, தன் பொறுமையை இழந்த ரோஹித், அவர் முன் தன் விரலை நீட்டி,
“பேசிட்டு இருக்கும் போது மேல கை வைக்கிற வேலை எல்லாம் வேண்டாம்” என்று தன் வயதுக்கே உரிய வீரத்தில் எகிறவும் தன் பொறுமையை இழந்த இன்ஸ்பெக்டர்,
“என்னடா கை நீட்டி பேசுற” என்று கூறி அவன் கன்னத்தை நோக்கி தன் கரத்தை வீசிய நேரம் அவரது கையை aர்ஜுன் இறுக்கமாகப் பற்றினான்.
“யாருடா நீ கைய விடுடா, இப்போ மட்டும் நீ விடல போலீஸ் அடிய நான் காட்ட வேண்டிருக்கும்” இன்ஸ்பெக்டரின் கடுமையான குரல் அங்கே சலசலப்பை ஏற்படுத்த, பதில் எதுவும் பேசாதவன் ஸ்டேஷனில் உள்ள அனைவரும் வாயடைத்து போய் நிற்க, தனது பிடியின் வலிமையை மட்டும் அதிகரித்தபடி அமைதியாய் நின்றான்.
இன்ஸ்பெக்ட்டரின் பார்வை கோபத்தில் அனலாய் கொதிக்கக் கொதிக்க அவனது பிடியின் வலிமையோ மேலும் மேலும் கூடிக்கொண்டே போனது, ஒரு கட்டத்தில் அவர் ரோஹித் மீது தான் ஓங்கிய கையை மெல்ல தளர்த்தவும், மறு நொடி aர்ஜுன் தன் பிடியில் இருந்த அவரது கையை விடுவித்தான்.
பின் அங்கிருந்த அனைவரையும் தன் கண்களாலே வருமாறு கூறிவிட்டு ரோஹித்தை தன்னோடு அழைத்துச் செல்ல முயலும் பொழுது, அந்த இன்ஸ்பெக்டர் அவனைத் தடுத்து,
“என்னடா நீயா வந்த, நீயா இவங்க எல்லாரையும் கூட்டிட்டு போற என்ன எங்களைப் பார்த்தா எப்படி இருக்கு, முதல்ல உன்னை லாக் அப்ல வைக்கிறேன்” என்று கூறி அவனது சட்டையைப் பிடிக்க, தன் புருவம் உயர்த்தியபடி அவரது கரத்தை தட்டிவிட்டவன், விடமால் ஒளித்துக் கொண்டிருந்த அவரது அலைபேசியை சுட்டிக்காட்டி அட்டென்ட் செய்யுமாறு தன் விழிகளினாலே செய்கை செய்தான்.
அவரோ நடந்ததை உயர் அதிகாரியிடம் கூறியவர், பதிலுக்கு எதிர் தரப்பில் என்ன சொல்லப்பட்டதோ ஓகே சார் ஓகே சார் என்று பயத்துடன் ம்ம் காட்டியவர், “ம்ம் சீக்கரம் வெளிய விடு” என்று அவரது உயர் அதிகாரி கட்டளையிட,
மறுநிமிடமே ஸ்டேஷனில் பிடித்து வைத்திருந்த இருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.