அசுரன் 62

 அசுரன் 62 

 

காரில் இருவரும் ஆதியின் வீட்டை வந்து அடைந்தார்கள்… சுற்றிலும் குடியிருப்புகளுக்கு நடுவே அமைந்த ஒரு தனி வில்லா… சுற்றி மரங்கள் நடுவே வீடு…. வேடிக்கை பார்த்துக் கொண்டே தான் வந்தாள் மலர்…

 

மணி அண்ணா கேட்டை திறந்து விட்டார்…

 

கார் உள்ளே நுழைந்ததும்..  ஆதி காரை விட்டு இறங்க… மணி அருகில் வந்து தம்பி உங்களுக்கு எதுவும் வேணும்னா சொல்லுங்க வாங்கிட்டு வந்து தரேன்… நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா? என்றார்..

 

அப்போது காரை விட்டு கீழே இறங்கிய மலரை காண்பித்து, இவங்க மலர் என்னோட ஃப்ரெண்ட்   இனிமேல் இங்கதான் தங்க போறாங்க… என்று அவருக்கு மலரை அறிமுகம் செய்து வைத்தான்.

அவரும் மரியாதை நிமித்தம் ஒரு வணக்கம் வைத்தார்.

சரி அண்ணா… நீங்க கிளம்புங்க காலையில வந்துருங்க..  என்று கூறி அவரை அனுப்பி வைத்துவிட்டு… 

 

வீட்டுக்குள் இருவரும் ஒரு சேர  வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தார்கள்.. வீட்டை பார்த்தபடி எதார்த்தமாக மலர் உள்ளே வர… அவள் காலை பார்த்தபடி அவனும் கால் எடுத்து வைத்து உள்ளே வந்தான் ஆதி. மனம் இறக்கை கட்டி பறந்தது…

 

அங்கங்கே பியர் பாட்டில்களும்… சாப்பிட்டு போட்ட பார்சல்களும்…. தோரணமாய் தொங்கும் ஆடைகளும் இருக்கும் என எதிர்பார்த்து வந்தவளுக்கு… 

வீட்டில் பொருள்கள் அனைத்தும் நேர்த்தியாய் அடுக்கி, வீடு படு சுத்தமாக இருந்தது. வீட்டின் சுத்தத்தை பார்த்து விழி விரித்தால் மலர். சார் வீடு இவ்வளவு சுத்தமா இருக்கு என்று மலர் கேட்க…

 

எஸ்…. நான்தான் சுத்தப்படுத்துவேன்… மணி அண்ணா ஹெல்ப் பண்ணுவார்…

 

எப்படி சார்… ஆபீஸ் ஒர்க்கே உங்களுக்கு தலைக்கு மேல இருக்குமே…

 

ஆபீஸ்ல நான் என்ன வேலையா செய்ய போறேன் வேலை வாங்குவது தானே என்னோட வேலை… மைண்ட் ரிலாக்சேஷன் வேணாமா?… சோ வீட்டு வேலை தோட்ட வேலை எல்லாமே நான் தான் பார்ப்பேன்…. என்று ஆதி கூற…

முட்டைக்கண்ணை முழுதாய் விரித்து ஆச்சரியப்பட்டாள்….

 

அதைப் பார்த்து குறுநகை புரிந்தவன்… கண்ணு ரெண்டும் கீழ விழுந்துற போது… பார்த்து வா…. என்றான்.

 

இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீட்டில்.. அது இப்ப நான் தங்கி இருக்கிற ரூம் என்று கூறிவிட்டு, காலியாக இருந்த ஒரு அறையை மலருக்கு கொடுத்தான் ஆதி.

 

இனிமேல் இதுதான் உன் ரூம்… என்று அறையை திறந்து விட… தனது பையுடன் உள்ளே நுழைந்தாள் மலர். அறைக்குள் வந்தவன், கண்ணை மூடி, ஆழ்ந்து மூச்சு எடுத்து விட்டான்… மலரும் அவனுடைய செயலை கவனித்தாள்…

இட்ஸ் மை ஃபேவரைட் ரூம்… இப்போதான் ஒரு ஒன் இயரா பக்கத்து ரூம்ல தங்குறேன் அதுக்கு முன்னாடி இதுதான் என்னோட பெட்ரூம் என்று ஆதி கூற…  

 

புடிச்ச ரூம்னா நீங்க இங்கேயே தங்கலாமே சார் என்று மலர் கேட்க….

மலரின் முகத்தை ஒரு கனம் ஆழ்ந்து பார்த்தவன்…. எனக்கு நேரம் சரி இல்லன்னு பக்கத்து ரூம்ல தங்க சொல்லிட்டாங்க என்றான்…

 

யாரு?

 

அ…. அதுதான் அந்த அவங்க.. என்று யோசித்தவன்… அ…. அதான் என்று தன் நெற்றியை ஒரு விரலால் அழுத்தியவன் … ஜோசியர்… என்றான் டக்கென்று நினைவு வந்தவனாய்…

 

ஓஹோ…. என்று தலையை மேலும் கீழும் அசைத்தவள்… நீங்களும் ஜோசியத்தை நம்புவீங்களா… என்றாள் சலிப்பாய்….

 

எல்லா நேரமும் நம்பாட்டியும் உயிர் பிரச்சனை அப்படின்னு வரும்போது நம்ப வேண்டியதா இருக்குதே…. என்றான் ஒரு பெருமூச்சுடன்…

அந்த கபோர்டுல உன்னோட துணி எல்லாம் வச்சுக்கோ… ஓகே நீ ரெப்ரஸ் ஆயிட்டு வா…  என்று அறையை விட்டு வெளியே வந்தான் ஆதி.

 

இப்பொழுது தான் மலரின் கண்கள் அந்த அறையை ஆராய்ந்தது…. பெரிய, அனைத்து வசதிகளும் அடங்கிய ஏசி அறை…

ஒரு குளியல் அறையுடன் சேர்ந்த அறை… அறைக்குள்ளயே ஒரு சிறிய டைனிங் டேபிள், ஸ்டடி டேபிள்… கம்ப்யூட்டர் டேபிள், புக் ஸெல்ப், ஒரு பெரிய சோபா என அனைத்தும் இருந்தது. சுவரில் பெரிய அளவில் தேவாதித்யன் புகைப்படம் மாட்ட பட்டிருந்தது… கருநிற கோட் சூட்டில் கையில் ரோலக்ஸ் வாட்ச் உடன்… இருக்கையில் அமைந்த அமர்ந்தபடி போஸ் கொடுத்து இருந்தான்… ஒரு ராஜாவைப் போல்… அந்தப் புகைப்படத்தின் அழகே அவனுடைய கூர் விழி பார்வை தான்… 

 

போட்டோக்கு கூட சிரிச்சிருக்காரா பாரு… சரியான உராங்கொட்டான்… என நினைத்துக் கொண்டாள்.

 

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு மலர் வெளியே வர… சமையலறையில் சத்தம் கேட்டது… ஒரு டீ சர்ட் ட்ராக் பேண்ட் உடன் ஆதி தான் இருவருக்கும் பிரட் ஆம்லெட் போட்டுக் கொண்டிருந்தான்…

 

சமையலறைக்குள் நுழைந்தவளை தடுத்து… எங்க வர… டைனிங் டேபிள்ல வெயிட் பண்ணு… 

 

உங்களுக்கு ஏதாவது ஹெல்ப்…

 

நோ நீட்… பிரிப்பேர் பண்ணிட்டேன்… டூ மினிட்ஸ்… என்றான்..

 

சுட சுட பிரட் ஆம்லெட்டும் பிளாக் காபியும் வந்தது…

 

மலருக்கும் பரிமாறி அவனும் சாப்பிட்டான்…

 

சார் சூப்பரா இருக்கு சார்… என்று சொல்ல…

 

அவளை கேலியாய் பார்த்தவன் இதுல சூப்பரா இருக்க என்ன இருக்கு… என்றான். 

 

ஹி.. ஹி… என்ன சிரித்தவள்… நாளைல இருந்து உங்களுக்கு நான் சமைச்சு கொடுக்கிறேன் சார்… என்று அவள் கூற… 

 

அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை… நானே பிரிப்பேர் பண்ணி தாரேன்.. இல்லன்னா கடையில வாங்கிக்கலாம்… வீட்டுக்கு வந்து நீ படி, டிசைனிங் ஐடியாஸ் பத்தி ப்ரிப்பேர் பண்ணு.. கிச்சனை பார்த்த உடனே பாஞ்சுகிட்டு உள்ள போகணும்னு நினைக்காத… 

 

சரி என தலையசைத்தாள் மலர்.

 

அப்புறம் மலர் இது உன்னோட வீடு தான்.. எங்க இருக்கிற எல்லா பொருளும் உனக்கும் சொந்தம்..  என்னையும் சேர்த்து… ஆனால் கடைசி வார்த்தையை மட்டும் வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டான்…

சோ எதை வேணா நீ தாராளமா யூஸ் பண்ணிக்கலாம்… டோன்ட் ஹெசிடேட்… உன்னோட ஸ்கூட்டிய டிரைவரை எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன்… காலையில வீட்டு வாசல்ல நிக்கும்… நீ டெய்லி அதுல ஆஃபீஸ் வந்துடு… நான் இயர்லியா ஆபீஸ் போய்டுவேன்… அந்த கபோர்டு ஓட கீ எல்லாம் ட்ரா குள்ள இருக்கும் எடுத்துக்கோ…

 

ஆதி அனைத்து உரிமையையும் தூக்கிக் கொடுக்க…. அவளுக்கு தான் மனம் குறுகுறுத்தது…. உன்கிட்ட நல்லா பழகுறாங்க அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக இன்னும் எவ்வளவு தொந்தரவு பண்ணுவ என்று அவள் மனசாட்சி இடித்துரைக்க… 

மலர் அமைதியாக தரையை பார்த்தபடி யோசனையில் உட்கார்ந்திருந்தாள்.

 

என்ன பலமான யோசனையா இருக்கு…

 

சாரி சார்…. நான் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திரனு எனக்கு தோணுது… இப்ப இருக்க சிச்சுவேஷன்ல எனக்கு வேற வழி தெரியல…  இனிமேல் நான் எந்த ஹாஸ்டல் போனாலும் எப்படியும் அங்க அருண் சார் தேடி வருவாரு… பின்னாடியே ரதி மேடம் பிரச்சனை பண்ணிட்டு வருவாங்க… திரும்ப நான் உங்களுக்கு தான் போன் பண்ணுவேன்… இப்படி எத்தனை இடம் நம்மளால மாற முடியும்… அதனாலதான் என்று மலர் இழுக்க….

 

அதனால என்ன இப்போ…. குரல் கர்ஜினையாய் வெளிவந்தது… 

 

இல்ல ஆபீஸ்ல உங்களுக்கு பொண்ணுங்களே பிடிக்காது அப்படின்னு சொன்னாங்க… அப்படி இருக்கும்போது… உங்க வீட்டிலேயே வந்து ஒரு பொண்ணு தங்கற மாதிரி இருந்தா அது உங்களுக்கு கம்பர்ட்டபிளா இருக்காது இல்ல…. என்று அவள் கண்ணை சுருக்கி சோகமாய் கேட்க….

 

கைகளை தூக்கி சோம்பல் முறித்தவன்… ஓஹோ ஆபீஸ்ல வேற என்ன.. என்ன… சொன்னாங்க… என்று கழுத்தை இடப்பக்கமும் வலபக்கமும் வளைத்து சோம்பல் முறித்தபடி கேட்டான்..

வேற ஒன்னு சொல்லல என்று அவள் கீழ்கண்ணால் முழிக்க…

 

சோபாவில் இருந்து எழுந்து நின்று இடுப்பில் கை வைத்தபடி…. ஹா…ஹா.. என்று சிரித்தவன்…

சார் பொண்ணுங்க கிட்டயே போக மாட்டாரு… பொண்ணுங்களே ஆசைப்பட்டு வந்தாலும் அவரால் எதுவும் முடியாதுன்னு சொல்லி இருப்பாங்களே… பட்டென்று ஆதி சொல்லிவிட…

 

அதிர்ந்து விழித்தாள் மலர்.

 

என் ஆபீஸ்ல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம இருப்பேன்னு நினைச்சியா மலர்….

சோ…. அவங்க சொல்ற எல்லாத்தையும் நீ நம்புற அப்படித்தானே…. ஐ திங்க் அந்த தைரியத்துல தான் என் கூட வீட்டுக்கு வந்து தங்குறேன்னு சொன்னியா மலர் என்று வெறுமையான முகத்துடன் ஆதி கேட்க…

 

ஐயோ சார்…. என்று அதிர்ச்சியில் வாயில் கை வைத்தவள்….  நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை…. நான் உங்களோட பிரைவசியை கெடுத்துட்டேன் அப்படின்னு தான் பீல் பண்ணேன்… மத்தபடி வேற எதுவும் தப்பா நினைக்கல சார்… என்று அவசரமாய் அவன் கூற்றை மறுக்க…

 

அமைதியாய் அவள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தவன்… சரி போ போய் தூங்கு எதுனாலும் காலைல பேசிக்கலாம்… குட் நைட் என்று கூறிவிட்டு 

வேகமாய் சோபாவை விட்டு எழுந்து அறையை நோக்கி செல்லப் போனவன் … பின் அவள் பக்கம் பொறுமையாக திரும்பி… தன் முன்னெற்றியை தேய்த்தபடியே… அவங்க சொல்றது எல்லாம் ஏதோ ஒரு வகையில உண்மைதான் மலர்….( என்ன சொல்ரீங்க என்பது போல் முட்டைக்கண் விரிந்தது) ஆனா அதெல்லாம் உன் விஷயத்துல பொருந்தாது… என்று சூட்சமமாக கூறிவிட்டு சென்றான்.

 

என்ன சொல்லிட்டு போறாரு… என்று மலர் யோசித்துக் கொண்டே படுக்கைக்கு சென்றாள். 

 

அறைக்குள் சென்ற ஆதி….

 

தனது போனை எடுத்து ரவிக்கு அழைத்தான்… ரவி மலரோட ஹாஸ்டல் ரூமை காலி பண்ணியாச்சு அந்த வார்டனுக்கு பேலன்ஸ் அமௌன்ட் செட்டில் பண்ணிடுங்க… ரொம்ப பாவமா பெர்பாம் பண்ணி இருப்பாங்க போல கொஞ்சம் பணம் சேர்த்து கொடுத்திடு… எனக் கூறிவிட்டு போனை வைத்தான்…

 

ஆம் இவை அனைத்தும் ஆதியின் பிளான் தான்…

காலையில் நடந்ததை யோசித்துப் பார்த்தான்… 

அருண் உறுதியாய் அவளை அழைத்துக்கொண்டு தான் செல்வேன் என்று கூற…. அப்பொழுதே முடிவு செய்துவிட்டான் இதற்கு மேலும் மலரை ஹாஸ்டலில் தங்க வைக்கக் கூடாது என்று…

உடனே ரவி மூலம் ஹாஸ்டல் வார்டனை தொடர்பு கொண்டு தகுந்த காரணங்களை கூறி மலரை ஹாஸ்டலில் காலி செய்ய சொல்லுமாறு வற்புறுத்த… அவர் மறுக்க… பின் பணம் தான் பேசியது…

மலர் ஹாஸ்டலை விட்டு வெளியே வரும்பொழுது ஆதி எதிர்ப்புறம் இருந்த ஹோட்டலில் இருந்து கண்ணாடி கதவு வழியே அவளை பார்த்துக் கொண்டுதான் இருந்தான்… அவளே போன் செய்வாள் என்று நினைக்க…. அவள் போனை கையில் வைத்து யோசித்துக் கொண்டே இருக்க ஆதியே போன் செய்தான்… பிரச்சனையை சொல்ல வைத்தான்…. அதனால்தான் ஐந்து நிமிடத்தில் அவனால் வர முடிந்தது…

என்னுடன் வந்து தங்கி விடு என்று அவளை அவனால் கேட்க முடியாது… அதனால் இங்க இருக்கிற ஏதாவது பிரண்ட் வீடு சொல்லு என்று கேட்டு தூண்டிவிட்டு, அவள் வாயாலேயே உங்க வீட்டுக்கு போகலாம் என சொல்ல வைத்தான்… எப்படியோ….. நினைத்தது போல் தன் வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டான் மலரை.

 

இனிமேலும் அவளை தனியா விட்டு வைக்க நான் என்ன முட்டாளாடா… என மனதிற்குள் நினைத்தவன்.

பாதி நாள் பக்கத்துல வச்சிருந்தவளை, இப்ப முழு நேரமும் கூடவே வைத்திருக்க போறேன்…. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு தேங்க்ஸ்டா அருண்…. எனக் கூறிவிட்டு, காற்றில் ஒரு பறக்கும் முத்தம் ஒன்றை வானத்தைப் பார்த்து அவனுக்கு கொடுத்து விட்டு, குதூகலத்துடன் ஆதி தன் படுக்கையை சென்று அடைந்தான். சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

     

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top