அசுரன் 64

 அசுரன் 64 

 

இதோ இன்றும் அருண் கண்ணில் மலரை படவிடவில்லை ஆதி…

 

மலர் மும்மரமாய் நாளைக்கு நடக்கவிருக்கும் மீட்டிங்கிருக்கு  பிரசன்டேஷனை தயார் செய்து கொண்டு இருந்தாள்…. நந்தினி அவளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து கொண்டிருந்தாள்… எப்படி ஒரு பர்சன்டேஷனை முன்னெடுக்க வேண்டும், விளக்க வேண்டும், அதை முடிக்க வேண்டும்… என அனைத்தும் அவளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது இருந்தாலும் மனதிற்குள் முதல் முதலில் ஒரு காரியத்தை செய்யும் பொழுது பதட்டமாக இருந்தது…

 

அருண் தான் ஆதியிடம் மலர் எப்போ இந்த கேபின்க்கு வருவா? என்று ஆதங்கமாய் கேட்க…

 

மீட்டிங் ஒர்க் முடிச்சுட்டு வருவா… என்று அருண் கேட்ட கேள்விக்கு விக்ரமை முறைத்தபடி பதில் சொன்னான் ஆதி…

 

இவன் எதுக்கு என்ன இந்த முறை முறைக்கிறான்… என யோசித்தான் விக்ரம்.

 

டேய் நான் வேணா மலர கூட்டிட்டு போய் என்னோட ஆபீஸ்ல வேலைக்கு சேர்த்துக்க வா?… என்று அருண் ஆசையாய் கேட்க…

 

ஏன் உன் வீட்ல வேலை செஞ்சு அந்த புள்ள பட்ட கஷ்டம் பத்தாதா இனி உன் ஆபீஸ்ல வேற வந்து கஷ்டப்படணுமா? என்று விக்ரம் கேட்க…

 

இல்லடா என் ஆஃபீஸ்ல இருந்தா எனக்கு அப்ரோச் பண்ண கொஞ்சம் ஈஸியா இருக்குமே அதனாலதான்… என்று இழுக்க…

 

நீ இப்படியே பேசிகிட்டு இருந்தேனா நான் மலர கூட்டிட்டு போயி ரதியோட ஆபீஸ்ல சேர்த்து விடுவேன்…. அப்புறம் ஃபுல் கண்ட்ரோல் உன்னோட பேபி கைக்கு போயிடும் பரவாயில்லையா என்றான் நக்கலாய்… 

அதில் திடுக்கிட்டு அதிர்ந்தான் அருண்.

பொறுப்பா ஒரு புள்ளைக்கு அப்பன் மாதிரி வேலைய மட்டும் பாருடா… இன்னும் சின்ன பையன் மாதிரி கல்யாணம் ஆகாத பொம்பள பிள்ளைங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க என் வேலையும் சேர்த்து கெடுத்துகிட்டு என்றான் கடுப்பாய்….

 

நாளை பிரசன்டேஷனுக்கு தேவையானவற்றை லேப்டாப்பில் காப்பி செய்து கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள் மலர்…

சில சந்தேகங்கள் ஆதி இடம் கேட்டு தெளிவுபடுத்த வேண்டி இருந்தது… இப்பொழுதெல்லாம் அலுவலகத்தில் ஆதியை பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் மிக அரிது… ஆதிக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் மலர்… நேரம் கடக்க ஏதாவது சமைக்கலாம் என்று அவள் கிச்சனினுள் செல்ல போக… போனில் மெசேஜ் வந்தது…

 

டோன்ட் பிரிப்பர் எனிதிங்…. ஐ வில் பி இன் டென் மினிட்ஸ்…  மெசேஜை படித்து சிரித்து விட்டு பிரசன்டேஷனை மீண்டும் ஒருமுறை முழுதாக ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பித்தாள்…

வெளியே ஆதி கார் வரும் சத்தம் கேட்டதும்… அப்பாவின் வண்டி சத்தத்தை கண்டு துள்ளி குதிக்கும் குழந்தை போல் வேகமாய் வெளியே சென்று எட்டி பார்க்க… ஆதி தான் காரினுள் இருந்து சில கவர்களையும் பைகளையும் எடுத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான்….

 

சார் எங்க போனீங்க? என்ன இவ்வளவு நேரம் ஆயிடுச்சு… 

 

மெல்லிய சிரிப்பு ஆதியின் இதழ் ஓரத்தில்… வீட்டில் கேள்வி கேட்க ஒரு ஆள் இருக்குடா இனிமேல் உன் இஷ்டத்துக்கு வெளியில சுத்த முடியாது.. வீட்ல பதில் சொல்லணும் ஞாபகம் வச்சுக்கோ…. என்று அவன் மனதுக்குள் அவனே சொல்லிக் கொண்டு…

நின்று நிமிர்ந்து மலரை தான் பார்த்தான்.. 

 

என்னை இப்படியெல்லாம் நிறுத்தி கேள்வி கேட்காதேன்னு சொல்லி கோபப்படுவாரோ… என்று மலர் திருத்திருவன முழிக்க… 

 

ஷாப்பிங் போயிருந்தேன் அதான் கொஞ்சம் லேட் ஆயிருச்சு நமக்கு டின்னர் வாங்கிட்டு வந்துட்டேன் சேர்ந்து சாப்பிடலாம் ரெடி ஆயிட்டு வரேன் என்று நிதானமாக நின்று பதில் கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தான் ஆதி…

 

சாப்பாடு பார்சலை எடுத்து பிரித்து டேபிள் மேல் வைத்தாள்… அவனும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து அமர…  இது உனக்கு மலர்… இது எனக்கு… என்று பார்சலை தனியே பிரித்துக் கொடுத்தான்… ரவா தோசையும் நெய் குழிப்பணியாரமும் வாங்கி வந்திருந்தான் அவளுக்காக… அவனுக்கு மூன்று இட்லிகள் மட்டுமே… 

 

அவள் பார்சலை திறந்து பார்த்ததும் முட்டை கண் விரிந்தது..

சார் இதெல்லாம் எனக்கு பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி சார் தெரியும்….

 

இதுதான் சூடா இருந்தது… பார்த்தேன் வாங்கிட்டு வந்தேன்… ஓ… இதெல்லாம் உனக்கு பிடிக்குமா? என்று கேட்டான்…

 

சார் அதுவும் இந்த குழிப்பணியாரம் என்னோட ஆல் டைம் ஃபேவரைட்..  இதை எப்படி சாப்பிடணும்னா… என்று ஏதோ அவள் சொல்ல வர…

 

திடுக்கிட்டவன்… ஆதி, உன்ன  கலீபரம் பண்ண போறா… என நினைத்துக் கொண்டு… பிரசன்டேஷனுக்கு ரெடி ஆயிட்டீங்களா? என்றான்.

 

ஓ ரெடி ஆயிட்டேன் சார்… உங்ககிட்ட ப்ரெசென்ட் பண்ணி காமிக்கிறதுக்காக தான் இவ்வளவு நேரம் நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்… சாப்பிட்டு வாங்க எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு கிளியர் பண்ணி குடுங்க என்று கூறினாள்…

 

பண்ணிடலாம் என்றான் ஆதி. 

 

ஆதியின் முன்னாள் பிரசண்ட் பண்ணி காண்பித்தாள் மலர்… சோபாவில் ஒரு கையை விரித்த படி ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டியபடி ஒரு கையால் கன்னத்தை தாங்கி அவளை தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடைய முன்னெடுப்பு தெளிவாய் அழகாய் இருந்தது… ஆனால் இடையிடையே ஆதியை பார்த்தவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட… 

 

இப்போ எதுக்கு இவ்வளவு ஸ்ட்ரெஸ்…. இது நம்ம ஆபீஸ்ல மட்டும் நடக்கிற மீட்டிங் தான்… இவ்ளோ பயம்… பதட்டம்… சரியா தான் பண்றோமா அப்படிங்கிற சந்தேகம்… இது எல்லாம் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தா இப்படி மூச்சு திணறல் வரத்தான் செய்யும்… தைரியமா ப்ரெசென்ட் பண்ணுங்க… என்ன மட்டும் பாக்காதீங்க நாளைக்கு உங்க முன்னாடி 100 பேர் இருப்பாங்க அவங்க எல்லாரையும் பாக்குற மாதிரி கான்ஃபிடண்டா மூவ் பண்ணுங்க… உங்களுக்கு கிடைத்த இந்த ஆப்பர்ச்சூனிட்டி உங்களோட சீனியர்ஸ்க்கு இன்னும் கிடைக்கல… சோ அத வேஸ்ட் ஆக்காம யூஸ் பண்ணி முன்னேற பாருங்க…  என்று கூறிவிட்டு மேலும் பல திருத்தங்களையும் விளக்கங்களையும் கூறிவிட்டு அவளை தூங்குவதற்கு அனுப்பி வைத்தான்.

தூக்கம் தான் வருவேனா என்றது…  புரண்டு புரண்டு படுத்து ஒரு வழியாய் உறங்கிப் போனாள் மலர்.

அவள் காலையில் எழுந்து வெளியே வர. கிச்சனில் ஆதி தான் காபி போட்டுக் கொண்டு வந்து மலருக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்தான்… 

பின் மலரிடம் சில கவர்களை கொடுத்து… இதுல இருக்கிற எல்லாத்தையும் போட்டுக்கோ… இதுதான் இன்னைக்கு உன்னோட டிரஸ் கோட்… தென் ஹேர்ஸ்டைல்  போனிட்டைல் போட்டுக்கோ… என்று கூறிவிட்டு தனது அறைக்கு சென்றான் ஆதி.

 

யோசனையுடன் கவர்களை வாங்கி தனது அறைக்கு சென்றவள்…. குளித்துவிட்டு டவளுடன் வந்து அதைப் பிரித்துப் பார்த்தாள்… ப்ளூ ஜீன்… வைட் ஷர்ட்… சில்வர் இயர் ரிங்… தென் ஒன் லிப்ஸ்டிக்… இருந்தது. 

 

ஐயோ இன்னைக்கு ஜீன்ஸ் பேண்ட் போட்டு போறதா?… இதுதான் போடணும்னு மிரட்டிட்டு போனாரு… எதுக்கு வம்பு இதுவே போட்டுருவோம்…. 

அவன் கொடுத்ததை அணிந்து கொண்டாள்…

ஆடைகள் அனைத்தும் மிகச் சரியான அளவில் இருந்தன…

எப்படி ரெடிமேட் டிரஸ் இவ்ளோ கரெக்ட் பிட்டிங்கா இருக்கு…

லிப்ஸ்டிக் கூட அவளின் இதழுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது.

தயங்கி தயங்கி வெளியே வந்தாள் மலர். 

ஆதி கிளம்பி சோபாவில் அமர்ந்திருந்தான்… அவளுக்காக தான் காத்துக் கொண்டிருந்திருப்பான் போலும்…

அவளை கண்டதும் ஓகே குட் வந்துட்டியா!… என்று கூறியபடி அவளிடம் வந்தவன் தலையில் இருந்து கால் வரை ஆராய்ச்சி பார்வை பார்த்துவிட்டு, 

ஓகே… கையை நீட்டு… இரு கைகளிலும், முழு கை சட்டையை முழங்கைக்கு மேலே வரை மடித்து விட்டான்… 

அன்றுதான் அவளுடைய ஐடி கார்டு ரெடி பண்ணி வாங்கி வந்திருந்தான்… அதை எடுத்து அவள் கழுத்தில் போட்டுவிட்டு, 

பின் அவன் வாங்கி வைத்திருந்த ஒரு ஸ்டிக்கர் பொட்டில் ஒரு குட்டி பொட்டை எடுத்து அவளது நெற்றியில் வைத்து விட்டான்…

( என்ன பொட்டு கூட வாங்கிட்டு வந்து இருக்காரு மலரின் மைண்ட் வாய்ஸ் )

புதிதாக வாங்கி வைத்திருந்த கட் ஷூவை எடுத்து போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினான்… அவள் போடுவதற்கு திணற… அவனே குனிந்து காலை பிடித்து போட்டு விட, ஐயோ…. சார்… என்ன பண்றீங்க… என பதறிவிட்டாள் பெண்.

 

அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை…

இட்ஸ் ஓகே… நோ ப்ராப்ளம்…. இதில் என்ன இருக்கு… புதுசா போடறதுக்கு கஷ்டப்பட்ட போட்டு விட்டேன்… 

 

அவளுக்குத்தான் இதயம் படபடத்தது அவன் அதை கடந்து, ஓகே எனக்கு ஒரு introduction  மட்டும் ப்ரெசென்ட் பண்ணுங்க… என்று கூறி… அவளை முழுதாய் ஆராய்ந்து விட்டு… பர்ஃபெக்ட்… 

எல்லாமே ஓகே மலர் இனிமேல் ப்ரெசென்ட் பண்றது உங்க கையில தான் இருக்கு ஆல் த பெஸ்ட் என்றான்… கையை நீட்டி… அவளும் கையை நீட்ட… தனது பாக்கெட்டில் இருந்து ஒரு வாட்ச்சினை எடுத்து அவள் கையில் கட்டி விட்டான்… கண்டிப்பா இன்னைக்கு நீங்க நல்லா பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும் அதுக்கு தான் என்னோட கிப்ட்… என்றான்.. 

 



 

 

புதிதாய் பள்ளிக்கு அனுப்பும் எல்கேஜி குழந்தையை தலை முதல் கால் வரை கிளப்புவது போல் பொறுமையாக கிளப்பி… கண்ணுக்குள் நிரப்பி கொண்டு…

 

அவளை கண்ணாடி முன்னாடி நிற்க வைத்தான்… அவளின் பின்னால் அவன் நின்று இருந்தான்… கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை சிறிது தயக்கத்துடன் எதிர் கொண்டாள் மலர்.

 



 

மலர்… நேரா பாரு… நிமிர்ந்து பாரு… உன்னோட உருவத்தை கான்பிடன்டா பாரு… 

தென் சே… ஐ கேன் டூ இட்… என்றான்.

 

தயங்கி தயங்கி ஐ… கேன் டூ.. இட் என்றாள்…

 

மலர் நீ கான்ஃபிடன்ட்டா “ஐ காண்ட் டு இட்” சொல்ற வரைக்கும் நான் இங்க இருந்து நகர மாட்டேன் ஆல்ரெடி எனக்கு ஆபீஸ்க்கு லேட் ஆயிடுச்சு என்றான் கடிகாரத்தை பார்த்தபடி…  புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்… என்றான் சிங்க குரலில்…

 

அந்த குரலில் மருண்டவள் ஒரு நிமிடம் கண்ணை மூடி ஆழ்ந்து மூச்சிட்டு…. கண்ணை திறத்த உடன் கண்ணாடியில் ஆர்வத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டு இருக்கும் ஆதியின் முகம் தான் அவள் கண்ணில் பட்டது…  அவன் போதுமான இடைவெளி விட்டு தான் நின்றிருந்தான்…. ஆனால் கண்ணாடியில் இருவர் முகத்தையும் நெருக்கமாக காட்டியது அதை பார்க்க அவளுக்கு சிறிது வெட்கம் வேறு வந்து தொலைத்தது இன்று… பின் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு,…. மீண்டும் அவள் சொல்ல முயற்சிக்க… நிதானத்தை இழுத்து பிடித்து ஊப்ப்… என்ற படி ஆதி அருகில் வர… அவனிடம் சாரி சொல்வதற்காக இவளும்  திரும்ப சட்டென்று… அவன் மார்பிலே மோதி நின்றாள்… கண்ணை மூடி ஒரு கணத்திற்கு பின் அவள் நிமிர்ந்து பார்க்க இருவரின் கண்களும் மோதிக்கொண்டன…. மெல்ல இருவரின் பார்வையும் நகர்ந்து அடுத்தவரின் இதழுக்கு சென்றது… 

 

திட்டப் போறாரு… என்று பயந்தபடி மலர் பார்க்க…

 

அங்க மட்டும் பாக்காத ஆதி… என்று சொன்ன மனசாட்சியை அடித்து துரத்தி விட்டு அவன் கண்கள், அவளின் இதழுக்குத்தான் அழுத்தமாய் சென்றது….அவன் வாங்கி கொடுத்த லிப்ஸ்டிக் அவனை சோதனைக்கு உள்ளாக்கியது… “டேஸ்ட் மி” என்று அழைக்க… 

 

மெல்ல ஆதி குனிந்து மலரின் கிட்டே வர… பெண்ணவள் சிலை போல் நின்றாள்… அவளின் இதயம் ஏக்கத்தப்பாய் துடித்தது. அவள் காது மடலில் உஷ்ண மூச்சு பட 

“சீக்கிரம் சொல்லு ஆபிஸ்க்கு லேட் ஆச்சு” என்று ஹஸ்கி வாய்ஸில் பொறுமையாய் கூறிவிட்டு விலகி நின்றான் ஆதி… ஆனால் அந்த கண்கள் சிவந்து, சிங்ககுரலில் ஏதோ ஒன்று கூடி குழைந்து இருந்தது. அதை கேட்டு சட்டென பெண் அவளின்  இதழில் சிறு வெட்கத்துடன் கூடிய புன்னகை வந்து மறைந்தது… அதை அவனும் கவனித்தான்.

 

சில கணங்களில் எகிரி துடித்த இதயத்தையும், மூளையையும் ஒரு நிதானத்திற்கு வரவழைத்துக் கொண்டு, 

நேராய் நிமிர்ந்து, தெளிவாய்  “ஐ கேன் டூ ஈட்” என்றாள். அவள் கண்ணில் தெரிந்த தன்னம்பிக்கையை பார்த்த பின் தான்…

 

குட்..  இன்னைக்கு பைக்ல வர வேணாம் வெளியில உனக்கு ஒரு கார் வெயிட் பண்னும் அதுல ஏறி ஆஃபீஸ்க்கு வந்துடு….  நான் சைட்டுக்கு போயிட்டு ஆபீஸ்க்கு வந்துருவேன்… சோ…. நான் இப்பவே கிளம்புறேன்… என கூறிவிட்டு அவசரமாய் கடிகாரத்தில் நேரத்தை சரி பார்த்துக் கொண்டே காரில் ஏறி ஆதி கிளம்பினான்…

 

போகும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்… மனமும் அவனுடன் செல்வது போல் இருந்தது…. அதை தனக்குள் கட்டுப்படுத்தி வைத்தாள். அவனும் காரின் கண்ணாடி வழியே அவளைத்தான் பார்த்துக் கொண்டே சென்றான்…. அவன் போன பின் வீட்டில் ஒரு வெறுமையை உணர்ந்தாள்….. 

 

என்ன மாதிரியான மனிதன் இவன்… அவனுடைய செயலை எதன் கீழ் கொண்டு வருவது நேசமா… பாசமா…  அக்கறையா…. ஆனால் ஒன்று மட்டும் உறுதி அவன் எது செய்தாலும் அது மலரின் நன்மைக்கே என்று ஒரு ஆணித்தரமான கருத்தை அவள் மனதில் பதிய வைத்திருந்தான்…

 

திரும்பி உணவு டேபிளை பார்க்க அவளுக்கான உணவு அங்கு மூடி வைக்கப்பட்டிருந்தது… கோதுமை தோசை கார சட்னி… அதைப் பார்த்து சிரித்துக் கொண்டாள்… இவ்ளோ அவசரத்துலையும் இது எப்ப பண்ணாரு… என எண்ணியவள்… அதை சிரித்தபடியே சாப்பிட்டு முடித்துவிட்டு,

தன்னுடைய அலுவலகப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு… காரில் அலுவலகம் வந்து அடைந்தாள் மலர்.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

     

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top