அத்தியாயம் -36

நாள் வாரமாகி ஓடிப் போச்சு. விதுரன்–மதுரியா வாழ்க்கை அமைதியாப் போச்சு. முதல்லே கடமைக்கு வந்த நட்பு இப்போ மனசார வந்துச்சு. அதனாலேயே அவங்களுக்குள்ளே ஒரு அழகான புரிதலும் வந்துச்சு. அதனால விதுரன் சந்தோஷமாவே வளைய வந்தான். ஆனா மதுரியா எந்நேரமும் மண்டையை அரிக்கற யோசனையிலேயே இருந்தா. இவ்வளோ தூரம் செய்யறவனை சீக்கிரம் எல்லாருக்கும் முன்னாடி நிறுத்தணும், விட்டா ஆபத்து-னு தோணவும், எப்படி கண்டுபிடிக்கறது-னு அதே யோசனை. ஒரு வேளை அந்த பெரிய ப்ராஜெக்ட்லே சொதப்பல் பண்றதுக்குத் தான் இவ்வளவும் பண்ணானா-னு யோசிக்க ஆரம்பிச்சா. என்ன வேலை பண்ணாலும் அதே யோசனை தான். அதனாலேயே சீக்கிரம் அலண்டுப் போனா. அவளோட நிலைமை மோசமாகிற மாதிரி ரீனாவும் கிளம்பி செங்கல்பட்டுப் போயிட்டா அவ படிப்புக்கு. போன் பண்ணாலும் எடுக்கவேயில்லை. 

ஒரு நாள் சாயங்காலம் அவங்க அறையில விதுரன் மடிகணினியில அவன் வேலையை பண்ணும் போது மதுரியா அவ புத்தகத்தை திறந்து வைச்சுட்டு ரீனாவுக்கு போன் முயற்சி பண்ணிட்டிருந்தா. “ஏய்… எனக்கு உன்னை மீட் பண்ணணும்.. முக்கியமான விஷயம் டீ… ஏன் இப்படி என் உயிரை எடுக்கறே?”-னு ரீனாகிட்ட சள்னு விழுந்தா மதுரியா. அவளை உடனே திரும்பி பார்த்தான் விதுரன். “என்ன புடலங்கா பிஸி? சும்மா சால்ஜாப்பு சொல்லிட்டு இருக்கே?”-னு போனை கட் பண்ணி தூக்கி எறிஞ்சா.. அது மெதுவா உருண்டு போய் அவன் காலடியிலே விழுந்துச்சு. அதை ஸ்மைல் பண்ணிட்டே எடுத்துட்டு, கட்டில்ல உட்கார்ந்து இருந்தவ பக்கத்துலே போய் உட்கார்ந்தான். “ஓ… காட்… இவன் இருக்கறதை மறந்துட்டோமே?”-னு தோண ஆரம்பிச்சுது. அவ காதோர முடியை ஒதுக்கிவிட்டு, “என்னாச்சு மது? ஏதாவது ப்ராப்ளமா?”-னு கனிவா கேட்டான். “அது.. அது.. வந்து.. நான்…எப்படி சொல்ல?”-னு இழுக்கவும், “நீ என்னை ஃப்ரெண்ட்-னு சொன்னதும், நானா ரீனாவை விட க்ளோஸ்-னு நினைச்சிருக்கக் கூடாது. சாரி”-னு சொல்லிட்டு எந்திருக்கவும், “உட்காருங்க… ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க? நீங்க எனக்கு ஃப்ரெண்ட் மட்டும் இல்லே… ஹஸ்பெண்டும் தான். அதனால தயங்கினேன்”-னு கையை பிடிச்சு நிறுத்திக் கடுப்பா சொன்னா. திரும்ப உட்கார்ந்தவன், ‘அதனால என்ன?’-னு கேள்வியா பார்த்தான்.

“இப்போ தெரியும்… அதனால என்ன-னு? என் சீனியர் பையன் அசோக்கை தெரியும்லே? அவன் தான் பிரச்சினை. அவன் பார்வையும் பேச்சும் எப்போவும் அத்துமீறலாயிருக்கு. ஹைலி இரிடேடிங்”-னு கடுப்பா சொல்லவும், விதுரனுக்கு கோபம் வந்துச்சு. “நீ கண்டிப்பா சொல்ல வேண்டியது தானே? இன்னும் ஏன் விட்டு வைச்சு இருக்கே?”-னு யோசனையா கேட்டான் விதுரன். “விது, அந்த ஹாஸ்பிடல்லே ஒரு சைட் ஃபுல்லா ஆக்யுபை பண்ணி இருக்கான். விசாரிச்சப்போ சேரிட்டிக்கு-னு சொல்றான். ஆனா ஏதோ தப்பு நடக்குது.. அது என்ன-னு கண்டுபிடிச்சு சீனியர் கிட்ட சொல்லணும்.. அதுக்குத் தான் பொறுமையா இருக்கேன். ஆனா அந்தப் பொறுமையும் போயிட்டே இருக்கு”-னு சொன்னா மதுரியா. “மது… இதெல்லாம் உனக்கு தேவையா-னு கேட்க மாட்டேன். நீ எது செஞ்சாலும் சரியாத் தான் இருக்கும். பட் டேக்-கேர்… கேர்ஃபுல். எப்போ என்ன ஹெல்ப் வேணும்னாலும் கூப்பிடு ப்ளீஸ்”-னு அழுத்தமா சொன்னான் விதுரன். அதோட அதை விட்டுட்டாங்க. ஆனா விதுரன் மனசுலே எந்நேரமும் இது ஓடிட்டே இருந்துச்சு.

அதே மாதிரி நாள் ஓடவும், ரெண்டு நாள் பொறுத்து மதுரியா வேலை முடியற நேரம் ரீனா போன் பண்ணா. அவ வர சொல்லவும் ப்ரேம் கிட்ட அனுமதிக் கேட்டு பத்து நிமிஷம் முன்னாடியே கிளம்பிட்டா. விதுரனுக்கு போன் பண்ணி வெளியே போறேன். ஆபீஸ் வரலே-னு சொல்லிட்டா. அவ பதட்டம்  அசோக் விஷயமா போறாளோ-னு நினைச்சு, வேகமா மருத்துவமனைக்குப் போனான். அவன் போய் சேர்றதுக்குள்ளே ரீனாவும் மதுரியாவும் அவங்க ஆஸ்தான ஆவின் பூங்காவுல ஐஸ்க்ரீம் சகிதம் உட்கார்ந்தாங்க. “எதுக்கு டீ என்னை இப்படி விரட்டி தேடினே?”னு ரீனா கேட்டது தான் தாமதம். மடமட-னு எல்லாம் சொல்லிட்டா.. ரீனா ஒரு நிமிஷம் ஆடியே போயிட்டா. “ரியா, என்ன இது? யாரிந்த விக்கி? ஏன் இப்படி எல்லாம் பண்றான்? பேசாம தீபுவையும் விதுரனையும் உட்கார வைச்சு எல்லாம் சொல்லிடலாம்”-னு சொல்லவும், “ரீனா அண்டர்ஸ்டாண்ட்… நம்மளை நம்பமாட்டாங்க. அவங்க சைல்ட்-ஹூட் ஃப்ரெண்ட்ஸை வில்லன்-னு சொல்ல நம்ம கிட்ட என்ன ஆதாரம் இருக்கு? அந்த ஆடியோ க்ளிப் பத்தாது. ஸ்டிராங் எவிடென்ஸ் வேணும்”-னு பொறுமையா சொன்னா. “யா… கரெக்ட்… ஆனா எப்படி?”னு தவிப்போட கேட்டா ரீனா.

“ரீன்ஸ் எனக்கென்னமோ எல்லாமே அந்த பெரிய ப்ராஜெக்ட் சுத்தி தான் நடந்திருக்கு-னு தோணுது. நாளைக்குப் போய் அந்த டெண்டரை இன்னொரு வாட்டி பார்க்கணும். ஏதாவது க்ளூ கிடைக்குதான்-னு பார்க்கணும்”-னு மதுரியா சொல்லவும், “அதுக்கென்ன ரியா? பேப்பர்லே பப்ளிஷ் ஆனா அறிவிப்பு தானே? ஆன்லைன்-ல தேடுனா கிடைக்க போகுது”-னு ரெண்டுப் பேரும் தேட ஆரம்பிச்சாங்க. ரீனா அவ போன்லே கண்டுப்பிடிக்கவும், அதைப் பார்த்த மதுரியாவுக்கு ஒண்ணும் புரியலே. “என்ன ரீனா பாதி தான் இருக்கு? மத்த விவரம் எங்கே? வேறே விளம்பரத்துல பாரு”-னு சொல்லி தேடவும், எல்லா இடத்துலேயும் ஒரே அறிவிப்புத் தான் இருந்துச்சு. “ரீனா.. இது இல்லை… விதுரன் கிட்ட இருக்கறது வேறே”-னு சொல்லி போனை வேகமா எடுத்து யாருக்கோக் கூப்பிட்டா. “பிரபு அங்கிள், ரியா பேசறேன். லாக்கர்லே இருக்கற ப்ரௌன் கவர்-ல அந்த ‘கவுதம் இண்வெஸ்டர்ஸ்’ டெண்டர்ஸ் அறிவிப்பு எனக்கு ஸ்கேன் பண்ணி வாட்ஸாப் பண்ணுங்க அங்கிள். ப்ளீஸ்.. அர்ஜெண்ட் அங்கிள்”-னு அவர் கிட்ட சொல்லவும், அஞ்சாவது நிமிஷம் வந்துச்சு. 

அது மொத்தமா வேறேயா இருந்துச்சு. ஒரிஜினல் அறிவிப்புக்கு கீழே முதலீடு, பண கையிருப்பு, ஆள் கணக்கு எல்லாம் தனி தனியா சேர்க்கப் பட்டிருந்துச்சு. “என்ன ரியா இது?”-னு அதிர்ந்தா ரீனா. “ஆமா ரீனா.. மொத்தமா ஃப்ராட் வேலை. ப்ளான் பண்ணி விதுவை கடன் வாங்க வைச்சு புதுசா ஆளெடுக்க வைச்சு, மொத்தத்துலே ப்ளான் பண்ணி படுக்குழியிலே தள்ளி இருக்கான் விக்கி. ஆனா அவன் செஞ்சதுக்கு ப்ரூஃப் இல்லை. இதைக் காட்டி கேட்டா தன்னையே யாரோ ஏமாத்திட்டதா நடிச்சுடுவான்.. சே.. எப்படி ஏமாத்தி இருக்கான்? இவனெல்லாம் மனுஷனா?”-னு சொல்லும் போதே கண்ணுலே தண்ணி வழிஞ்சுது. மனவேதனையும் வலியுமா ரெண்டுப் பேரும் கிளம்பினாங்க.

அதே நேரம் மருத்துவமனையில மதுரியாவை பார்க்க முயற்சிப் பண்ண விதுரன் முன்னாடி வந்து நின்னான் அசோக். “ஹலோ… எங்கே சார் இவ்வளோ தூரம்?”-னு கையை குலுக்கினான் அசோக். “நீங்க யார்?-னு விதுரன் கேட்கவும், “ஐ அம் அசோக். உங்க வைஃபோட சீனியரோட பையன்”-னு சொன்னான். “ஓ.. மதுரியா எங்கே?”னு கேட்டான். “அவ தான் சர்ஜரி முடிஞ்சு கிளம்பிட்டாளே? ப்ரதீப்பை மீட் பண்ண போயிருப்பா. பயங்கரமான நட்பு… ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒன்ஸ் போன்… ஒன் மீட் இல்லேன்னா முடியாது ரெண்டுப் பேருக்கும்… மேரேஜ் முன்னாடியிலே இருந்தே நடக்குது… உங்களுக்கு தெரியாதா?”-னு பத்த வைச்சான். விதுரன் அவனை பார்த்து “நாசமா போனவனே! அவ பிரதீப் கூடப் போயி பேசினது, பார்த்தது எல்லாம் என்னைத் தான் டா டவரா வாயா”-னு முணுமுணுத்துட்டு, “ஓகே…. தேங்க்ஸ். நான் கிளம்பறேன்”-னு சட்-னு கிளம்பினான் விதுரன். அதை ஒரு குரூர சிரிப்போட பார்த்துட்டு விக்கிக்கு போன் பண்ணி சொன்னான். வெளியே நடந்துட்டே ப்ரதீப்புக்கு போன் பண்ணான் விதுரன். “ப்ரதீப்! என் டார்லிங் வந்தாளா?”-னு கேட்கவும், “அது சரி, அவ குரலை கேட்டே நாலு நாள் ஆகுது… அப்பா கூட கேட்டுட்டு இருந்தார்”னு சொன்னான். அப்புறம் சாதாரணமா பேசிட்டு வைச்சவன் யோசனையோட ஆபீசுக்கு போனான்.

அன்னிக்கு வேலை முடிச்சு வீட்டுக்கு போனா, அவன் ரூம் மேசையில புத்தகத்தைத் திறந்து வைச்சுட்டு எங்கேயோ வெறிச்சுட்டு இருந்தா மதுரியா. கண்ணுலே தண்ணி நிக்காம கொட்டுச்சு. மதுரியாவுக்கு விக்கியோடத் துரோகத்தை கண்டுப்பிடிச்சதுலே இருந்து அவ்வளோ ரண வேதனை. முதுகுல குத்தறதுன்னா என்ன-னு முழுசா புரிஞ்சு வலிச்சுது. இதை எப்படி விதுரன் தாங்குவான்-னு நினைச்சே கண்ணுலே இருந்து அவ்வளோ தண்ணி. அவ கண்ணுலே வழியற தண்ணியை பார்த்து திகைச்சுப் போய், “மது… என்னடா?”-னு அவ தோள்லே கையை வைக்கவும், “விது…..”னு அவன் இடையோடக் கட்டிட்டு, அவன் வயித்துலேயே முகம் புதைச்சு கதறிட்டா. அதே நேரம் அவன் காபியை ரூமுக்கு கொண்டு வந்த கிருத்திகாவுக்கு எதுவும் புரியலே. “மதுக்குட்டி… என்னடா? என்னாச்சு? எதுக்கும்மா இவ்வளோ அழுகை?”-னு சமாதானம் பண்ணவும், அவ சமாதானம் ஆகாம தேம்பினா. “ரியா… ரியா… என்னம்மா?”-னு கிருத்திகாவும் பதறவும், “தெரியலே அண்ணி, தனியா அழுதுட்டு இருந்தா”-னு சொன்னான் விதுரன். “மது… இன்னிக்கு ஆபரேஷன் ஃபெயிலியரா? அதான் வருத்தப்படறியா?”-னு விதுரன் கேட்கவும் தலையை நிமிர்த்தாம தேம்பிட்டே ஆமா-னு ஆட்டவும், மத்த ரெண்டுப் பேருக்கும் ஒரு மாதிரி சமாதானமாச்சு. கிருத்திகா வேகமா போயி தண்ணியை கொண்டு வைச்சுட்டு அவனே சமாதானம் பண்ணட்டும்-னு போயிட்டா.

விதுரனும் தலையைத் தடவி முதுகைத் தடவி வார்த்தைகள் இல்லாமலே சமாதானம் பண்ணான். கொஞ்ச நேரம் கழிச்சு நிமிர்ந்தவ அவன் நீல சட்டையிலே வயித்துக்கிட்ட அவ கண்ணீரும் மையும் பார்த்து, “சாரி விது… சாரி… சட்டையிலே கறை”-னு சொல்லவும், சிரிச்சுட்டு, “போய் முகம் கழுவிட்டு வா. நானும் டிரெஸ் சேஞ்ஜ் பண்ணிட்டு வரேன்”-னு அனுப்பி வைச்சான். ரெண்டுப் பேரும் தயாராகி வரவும் அவ கையிலே தண்ணியை குடுத்து குடிக்க சொன்னான். அப்புறம், “மது, உன் வேலையிலே இதெல்லாம் சகஜம். இப்படி அழலாமா? என்னவோ ஏதோ-னு பயந்துட்டேன். ஒண்ணு மட்டும் ஞாபகம் வைச்சுக்கோ. நான் இருக்கற வரை நீயும், நீ இருக்கற வரை நானும் அழவோ உடைஞ்சு போகவோ தேவையில்லை… நான் எப்போவும் பண்ண மாட்டேன். நீயும் பண்ணக் கூடாது. சரியா?”-னு கேட்கவும், அவன் எதை நினைச்சு சொன்னானோ, ஆனா அவளுக்கு அது யானை பலம் குடுத்துச்சு. ஒரு ஸ்மைலோட “ம்ம்ம்..”-னு சொன்னா. “இப்படியா இவ்வளோ நேரம் அழுவாங்க? பார் முகமெல்லாம் சிவந்து, சுடுது… லூசு! வா. காத்தாட ஒரு வாக் போயிட்டு வரலாம்”-னு கூட்டிட்டு போகவும், “வீ-யும் கூட்டிட்டு போகலாம்”-னு சொன்னா. அவனும் சிரிச்சுட்டே சரி-னு சொன்னான்.

திரும்ப எல்லாம் இயல்புநிலைக்கு போச்சு. மதுரியா விக்கி விஷயத்துலே ஆதாரத்தை வெறியோடத் தேட ஆரம்பிச்சா. அதே சமயம் தான் டாக்டர்.ப்ரேம்நாத் அவளை சர்ஜரிக்காக மத்த ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சார். நேரம் இன்னும் சுருங்கவும், விக்கி விஷயத்துலே கவனம் செலுத்த முடியாம போய் இன்னும் கடுப்பானா. அப்படி ஒரு நாள் வேறே ஒரு ஹாஸ்பிடல்லே சிகிச்சை முடிச்சு வரும் போது, சுவாதியும் விக்கியும் ஒரு பெரிய பாதிக் கட்டியநிலையில இருந்தக் கட்டிடத்துள்ள நுழையறதை பார்த்தா. அந்த இடத்துலேயே ஆட்டோவை விட்டெறங்கி அவங்க பின்னாடி தொடர்ந்துப் போனா. அது ‘பீனா கன்ஸ்டிரக்‌ஷனோட’ கட்டிடம். அதையும் மனசுலே குறிச்சுட்டு பின்னாடியேப் போனா. அவங்க பின்னாடியே மூணாவது மாடிக்கு போய் மறைஞ்சிருந்து அவங்க பேசறதை வீடியோ எடுக்க ஆரம்பிச்சா. முதலாளி இருக்கற இடத்துக்கு வேலையாளுங்க வராம இருந்தது அவளுக்கு வசதியா போச்சு. மறைவா நின்னு, சுத்தியும் பார்த்துக் கிட்டேப் பதிவு பண்ணா.

“சுவாதி! இவர் தான் பீனா கன்ஸ்டிரக்‌ஷன் எம்.டி சாதிக். சாதிக்! இவங்க சுவாதி. எனக்கு வேண்டியப் பொண்ணு. எக்ஸ் வேதம் எம்ப்ளாயீ”-னு அறிமுகம் பண்ணவும், “ரைட்… ரைட்… அந்த கௌதம் இன்வெஸ்டர்ஸ் ப்ராஜெக்ட் இன்ஃபோ குடுத்தவங்க.. வேறே என்ன தெரியும் உனக்கு வேதம் பத்தி?”-னு கேட்டான் சாதிக். “சார்… வேறே எதுவும் தெரியாது”-னு சுவாதி தடுமாறவும், “சாதிக்! விதுரன் கொஞ்சம் அறிவாளி. எப்படியும் ப்ராஜெக்ட் ஜெயிச்சுடுவான்னு தெரிஞ்சு தான் இவ.. ஐ மீன் இவங்க மூலமா தகவல் ஏற்பாடு பண்ணேன்”-னு விக்கி சொன்னான். “ஐ நோ விக்கி. பட் அதனால எந்த லாபமும் இல்லே. அவ்வளோ போராடி பண்ண அப்புறம் கூட அந்த இன்வெஸ்டர் ப்ராஜெக்டை கேன்சல் பண்ணிட்டான். ஸோ.. என்ன கெயின் அதுலே? கண்டிப்பா இவங்களுக்கு வேலை உண்டு எனக்கு ஏதாவது லாபம் இருந்தா”-னு சொல்லிட்டு உள்ளே போனான் சாதிக். “விக்கி, நான் உங்களுக்கு தெரிஞ்சப் பொண்ணு மட்டும் தானா? டோண்ட் வி லவ் ஈச் அதர்?”-னு ஆதங்கமா கேட்டா சுவாதி. “லவ்வா? குட் ஜோக்.. விட்டா கல்யாணம் பண்ணிக்க சொல்லுவியோ? என்ன விதுரன் கிட்ட போட்ட டிராமாவை என்கிட்ட கண்டின்யூ பண்றியா?”-னு நக்கலா சிரிச்சுட்டே கேட்டான் விக்கி.

“விக்கி, விதுரன் கிட்ட பழகினது, பேசினது, வேதம்லே வேலைக்கு சேர்ந்தது, அப்புறம் விட்டது எல்லாம் உங்க மேலே இருக்கற அன்புனாலே! நீங்க சொல்லி தான்! இப்போ இப்படி பேசறீங்க?”-னு கோபமாகப் பேசினா. “வாவ்… அதெல்லாம் பேசி, செஞ்சது மட்டுமில்லாம அவன் கூட கை கோர்த்துட்டு சுத்தி அவனை கரெக்ட் பண்ண டிரை பண்ணது கூட நான் சொன்னேனா? அவன் கூட லைட்டா உன் பக்கம் சாய்ஞ்சா மாதிரி இருந்தான். ஆனா சுதாரிச்சுட்டான்.. விழுந்திருக்கணும். உன்னை மாதிரி ஒரு ஒழுக்கமில்லாத சனியன் கிட்ட சின்னா பின்னமாயிருக்கணும் அவன் வாழ்கை. நீயெல்லாம் ஒருத்தன் கூடவே இருந்து ஃபேமிலி நடத்தற மெடீரியல் கிடையாது.. விட்டில் பூச்சி”-னு எகத்தாளமா சொன்னான். 

“மைண்ட் யுவர் வர்ட்ஸ் விக்கி. நீங்க யார்? என்னவெல்லாம் விதுரனுக்கு செஞ்சீங்க-னு எல்லாம் எனக்கு தெரியும். என்னை கழட்டி விட நினைச்சீங்க.. அப்புறம் வேறே சுவாதியை பார்ப்பீங்க”-னு அவனையே மிரட்டினா சுவாதி. விக்கி கொஞ்சம் சுதாரிச்சு, “இங்கே பார், நான் அப்படி எதுவும் நினைக்கலே.. நீயே நினைச்சா உனக்கு விளக்கம் சொல்ல எனக்கு டைம் இல்லை.. இப்போ உனக்கு இந்த வேலை வேணும்னா நீ ஒரு விஷயம் செய்யணும். முடியுமா?”-னு நேரடியாக் கேட்டான் விக்கி. “ம்ம்ம்.. சொல்லுங்க”-னு ஏட்டிட்யூடோட கேட்டா. “போய் விதுரன் கிட்ட வேலைக்கு சேரணும். இரண்டே மாசம். அங்கே குழப்பம் பண்ணிட்டு அப்படியே வேதத்தோட க்ளையண்ட் லிஸ்ட் கொண்டு வரணும்”-னு சொல்லவும் சரின்னு சொன்னா சுவாதி.

அதே நேரம் உள் அறையிலே இருந்து சாதிக் வரவும் வீடியோவை அணைச்சுட்டு கைப்பையில போட்டுட்டு வேகமா படி வழியா கீழே இறங்க ஆரம்பிச்சா மதுரியா. எங்கே சாதிக் தன்னை பார்த்து பின்னாடி வந்துடுவானோங்கற பயத்துலே கண்ணு மண்ணு தெரியாம ஓட ஆரம்பிச்சா. அப்போ தான் முதல் மாடியிலே படிக்கட்டுலே திரும்பும் போது படிக்கட்டையே பார்த்து வந்தவ, குறுக்கே பெரிய ‘ஜன்னல் நெலவை’ தூக்கிட்டு வந்தவங்களை தாமதமா தான் கவனிச்சா. கவனிச்ச உடனே, திரும்பி சுதாரிக்கறதுக்குள்ளே, அந்த கனமான மரநெலவு அவளோட நடு முதுகுலே முழு வேகத்தோட இடிச்சுது. தூக்கிட்டு வந்தவங்க பார்த்து அதை இழுத்துப் பிடிக்கறதுக்குள்ளே அவளை பலமா இடிச்சுடுச்சு அந்த நெலவு. 

தாளமுடியாத வலியிலே கண்ணை இருட்டிட்டு வரவும் மயங்கி படிக்கட்டுலே உருண்டு அடித்தள நடைப் பாதையிலே விழுந்தா. “என்ன சத்தம்?”-னு வந்தான் சாதிக். அவன் பின்னாடியெ விக்கியும் வந்தான். ஆனா மதுரியாவை சுத்தி கூட்டம் கூடினதுனால அது யார்-னு அவங்களுக்கு தெரியலே. “சார் ஃப்ரேம் இடிச்சு ஒரு பொண்ணு கீழே விழுந்துடுச்சுங்க”-னு சொல்லவும், “யோவ் பார்த்து வேலை செய்யுங்க. யாரு-னு பார்த்து ஹெல்ப் பண்ணுங்க”-னு திட்டிட்டே உள்ளே போனான் சாதிக்.

மதுரியா கீழே விழும் போதே ஒரு ஆள் அவ பக்கத்திலே வந்தான். அவன் அடர்நிற மெரூன் சர்ட் போட்டிருந்தான்னு மட்டும் தான் மதுரியா பார்த்தா. அந்த ஆள் யோசனையோட சாதிக்கையும் விக்கியையும் பார்த்தான். அப்புறம், மதுரியா மயங்கிடவும், “சிஸ்டர்… சிஸ்டர்.. இங்கே பாருங்க.. கண்ணை திறங்க”-னு அவ கன்னத்துலே தட்டவும் அவளுக்கு நினைவு வரலே. “சே! அண்ணா! எனக்கு தெரிஞ்சவங்க தான். என் கார்லே ஏத்த ஹெல்ப் பண்ணுங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்”-னு சொல்லி அவளை அவன் வண்டியில ஏத்திட்டு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போய் சேர்த்தான்.

யாரிவன்??

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top