அசுரன் 66
ஆதியின் வீட்டில் மலருக்கு சந்தோசத்திற்கும், சுதந்திரத்திற்கும் பஞ்சமில்லை… காலையில் முதலில் யார் கண்விழிப்பார்களோ அவர்கள் மற்றவரை எழுப்பி டீ/காபி போட்டுக் கொடுப்பர்…
காலையில் மலர் டிபன் செய்வாள் இரவு ஆதி சாப்பிட ஏதாவது செய்து தருவான்… அவன் சமைக்கும் வரையிலும் கிச்சனில் தான் நின்று இருப்பாள்… பின் இருவரும் சேர்ந்து ஏதாவது வெட்டி கதைகள் பேசியபடி வீட்டை சுத்தம் செய்வர்.. பெரும்பாலும் மலர்தான் பேசுவாள்… அவன் கேட்பதோடு சரி…
வேலையின் நடவே சில நேரங்களில் உடல்கள் முட்டிக் கொள்வதும் உரசிக் கொள்வதும் நிகழும்… கண்ணை மூடி ஒரு நிமிடம் அமைதியாக இருந்து விட்டு பின்… “stay away from me” என்பான் கண்களை சிமிட்டு கொண்டே…
கோபத்தில் சொல்ல வேண்டிய வார்த்தைகளை… அவன் நிதானமாக குறு நகையுடன் கூட… புரியாமல் விழிப்பாள் மலர்.
என்னமோ இவர் மேல தெரிஞ்சே இடிச்ச மாதிரி… ” க்கும்” என்று உதட்டை சுழித்து விட்டு செல்வாள்…
சில நேரங்களில் அதுவும் அவன் கண்ணில் பட்டுவிடும்… ஏக்க பெருமூச்சுடன் கடந்து விடுவான்…
விடுமுறை தினங்களில், காபியை போட்டுவிட்டு அவனைத் தேட… பின்புறம் தோட்ட வேலைகளை செய்து கொண்டிருப்பான் ஆதி…
ஆம் கட் பணியனும்… சார்ட்ஸ் அணிந்திருப்பான்… குனிந்து நிமிர்ந்து… பூ தொட்டியை தூக்கி அவன் வேலை செய்ய அவனுடைய புஜங்களும், தசை கோள்களும் விரிந்து சுருங்குவதை… மெய் மறந்து பார்க்க.. பின்னே அவளின் பார்வையை உணர்ந்து அவன் திரும்பும் போது… காபியை அவன் கண் முன் நீட்ட… அந்த பனியன் அவனது உடல் அமைப்பை எடுத்துக்காட்ட…. உடல் எங்கும் வேர்வை துளிகள் வடிய… வந்து காபியை வாங்கி கொள்வான்…
அவனை அந்த கோலத்தில் பார்க்க மலருக்கே சிறு வெக்கம் வந்துவிடும்..
அவள் காபியை குடித்துக்கொண்டே சுற்று முற்றும் வேடிக்கை பார்க்க… பக்கத்து வீட்டில் இருக்கும் இளம் பெண்கள் சிலர் மாடியில் நின்று அவனைத்தான் சைட் அடித்து கொண்டிருப்பர்…
ஐயோ… என்ன வாயில் கை வைத்தவள்… என்ன கண்காட்சியை வேடிக்கை பாக்குற மாதிரி நின்னு பாத்துகிட்டு இருக்காளுங்க…
இவரும் அறையும் குறையுமா டிரஸ் போட்டுகிட்டு போஸ் கொடுத்துக்கிட்டு இருக்காரு… என்ன பொண்ணுங்க இதுங்க கொஞ்சம் கூட வெட்கமில்லாமல்… என்று மனதிற்குள் கருவி கொள்ள… ( ஏம்மா மலர்… அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி அணு அணுவா பார்த்து ரசிச்சியே உனக்கு முதல்ல வெட்கம் இருக்காமா என்று அவள் மனசாட்சி உண்மையை உரைக்க… அது… நா சும்மா தான் பார்த்தேன் நீ உள்ள போ முதல்ல… என்று அடக்கி வைப்பாள் )
சார்… வெயில்ல ஏன் கஷ்டப்படணும்? நம்ம அப்புறமா வந்து இந்த வேலையெல்லாம் பார்க்கலாம் வாங்க இப்போ உள்ள போலாம் என்று ஆதியை அவசரப்படுத்த…
வெயில்ல தான் வேலை பார்க்கணும் மலர்… ஏசி குள்ளயே வாழ்றேன்… விட்டமின் டி கிடைக்க வேணாமா… என்று அவன் சூரியனைப் பார்த்து கூற…
ஐயோ… இப்ப நான் என்ன பண்றது இந்த பொண்ணுங்க கிட்ட இருந்து இவரை எப்படி காப்பாற்றுவது… என்று மனது அடித்துக் கொள்ள…
சார் நம்ம அந்த பக்கம் போய் கிளீன் பண்ணிட்டு அதுக்கப்புறம் இந்த பக்கம் வருவோமா? என்று மலர் கேட்க…
அந்தப் பக்கம் லாஸ்ட் வீக் கிளீன் பண்ணிட்டேன்…. மலர் இப்ப இந்த பக்கம் தான் கிளீன் பண்ணனும்…
ஐயோ சார்… என்னோட கஷ்டத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே… என்று முனங்கியவள். போதும் சார்… இப்போ சுத்தி வெயிலோட தொல்லை ரொம்ம்ம்ப அதிகமாயிருச்சு இதுக்கு மேல இருந்தா என்னால தாங்க முடியாது… இல்ல.. இல்ல… சாரி… உங்களால தாங்க முடியாது… அதனால மீதி வேலையை நான் மணி அண்ணா வச்சு வாங்கிக்கிறேன்… இப்போ வாங்க உள்ள போலாம்… என்று அவன் மறுத்து பதில் பேசும் முன்னே… அவன் கையைப் பிடித்து உள்ளே இழுத்து வந்தாள்…. பக்கத்து வீட்டு மாடியில் இருந்த பெண்களை முறைத்த படி…
அழகான பையன்களை லவ் பண்ணா …. மத்த பொண்ணுங்க கிட்ட இருந்து காப்பாற்றுவதே முழு நேர வேலையா இருக்கும் போலயே.. ஸ்.. ஷப்பா… முடியல… என்று வடிவேல் பாணியில் இடுப்பில் கை வைத்து அவள் பெருமூச்சு விட…
அவளின் செய்கைகளை சுவாரசியமாக பார்த்தவன்… இப்படி எல்லாம் என்னோட பர்மிஷன் இல்லாம என்ன தொடாத மலர்… நான் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேன்… பின்ன அதோட விளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாது. stay away from me… என்று ஆக்ரோஷமாய் சொல்ல வேண்டிய வார்த்தைகளை… பூனை குட்டியை தடவி கொடுப்பது போல் கண்ணை சிமிட்டியபடி சொல்லிவிட்டு சென்றான் ஆதி.
என்ன சொல்லிட்டு போறாரு என்பது போல் முழிப்பாள் மலர்.
இதற்கு நடுவில் அதை சாப்பிட சொல்லித் தரவா… இதை சாப்பிட கற்றுத் தரவா என்று அவனை ஏகத்துக்கும் உணர்ச்சியை கிளர்ச்சி பெற வைத்து, தலைத் தெறிக்க ஓட விடுவாள்…
இதோ இன்று கூட ஜீராவில் ஊறிய குலோப் ஜாமுனை எப்படி ஐஸ்கிரீம் உடன் கலந்து சாப்பிட வேண்டும் என்று… செய்முறை விளக்கம் கொடுக்க ஆரம்பிக்க…
“ராட்சசி கொஞ்சம் கூட இரக்கப்பட மாட்டேங்குற”… வச்சு செய்றா… என்று புலம்பியபடி வேர்த்து விறுவிறுத்து கால் மேல் கால் போட்டபடி வேகமாய் காலை ஆட்டி, தன்னை கட்டுப்படுத்த…. அவன் அரும்பாடு பட்டான்… ஒரு கட்டத்தில் இதற்கு மேலும் தாங்காது என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே வேகமாய் எழுந்து தனது அறைக்கு ஓடி விட்டான்…
ஏன் இப்படி ஓடுறாரு.. என்று நினைத்துக் கொண்டே தனது இதழில் வழிந்த ஜீராவுடன் கூடிய ஐஸ்கிரீமை தன் நாவால் துடைத்தபடி, ஓடும் அவனைப் புரியாமல் பார்த்தாள் மலர்.
சிறிது நேரத்தில் கழித்து முகம் முழுதும் புத்துணர்ச்சியாய் வந்து அமர்ந்தவனை…
ஏன் சார் இப்படி ஓடுனீங்க என்று அவள் பாவமாய் கேட்க…
முள்ளு மேல சேலை பட்டாலும் சேலை மேல முள்ளு பட்டாலும்… இந்த உலகம் என்னவோ… “முள்ளு குத்திடுச்சு” ன்னு தான் சொல்லும்… என்று அவன் விஷமமாய் பதில் கூற…
ஙே… என்ன புரியாமல் விழித்தாள் மலர்…
வர வர புரியாமலே பேசுறாரு… ஒருவேளை வெயில்ல வேலை பார்த்தாததனால மண்டை குழம்பி இருக்குமோ… பாவம்… நாமதான் கடைசி வரைக்கும் நல்லா பாத்துக்கணும்… என்று மனதில் நினைத்துக் கொள்வாள்.
அன்று மீட்டிங் முடிந்ததும் அருணை கையோடு வீட்டுக்கு அழைத்து வந்த விக்ரம் அதன் பிறகு ஆதியின் அலுவலகத்திற்கு அனுப்பவில்லை…. ஏதோ ஒரு காரணம் சொல்லி அருணை அவன் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தான். இல்லையென்றால் தன்னுடைய அலுவலகத்திற்கு கூட்டி சென்றான்…
அருண் அலுவலகத்திற்கு வராத காரணத்தால் மலருக்கு ஆதியின் அறையில் அவளின் கேபின்குள்ளயே இடம் கிடைத்தது…
இன்று காலையில் வீட்டில் அதிகாலை நேரமே கிளம்பி வெளியே சென்று விட்டான்… அதனால் அவனைப் பார்க்கவில்லை…
ஆதி வருவதற்காக காத்திருந்தவள் சில பைல்கள் வேண்டி உஷாவின் கேபினுக்கு செல்ல….
அங்கே உஷாவும், ரூபாவும் பம்பரமாக தயாராவதை கண்டவுடன் அவளுக்கு புரிந்து விட்டது… ஆதி வரும் நேரம் இது… அவர்களை மறைத்தபடி
மலரும் ஆர்வமாக வெளியே எட்டிப் பார்க்க… வேகமாக காரின் கதவை தெரிந்து கொண்டு தனது பூட்ஸ் காலை எடுத்து வைத்து வெளியே வந்தான் ஆதி…
கருப்பு கலர் ஷர்ட் மற்றும் கருப்பு கலர் பேண்ட் அணிந்திருந்தான் ray-ban கூலர்ஸ் கண்ணில் இருந்தது… தனது அடங்கமறுத்து சிகையை ஒரு கையால் கோதிக்கொண்டே ஸ்டைலாக அவன் நடந்து வர அவனைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் மலர்… என்ன இன்னைக்கு இவ்ளோ அழகா தெரிகிறாரு… என்று கடந்து போகும் அவனை பார்த்துக் கொண்டே நினைத்தாள்…
அப்படியே பக்கபாட்டில் திரும்ப… உஷாவும் ரூபாவும் வைத்த கண் எடுக்கவில்லை இன்னும்… அதில் கடுப்பானவள்… இவளுங்க சாதாரணமா வரும் பொழுதே கடிச்சு திங்கிற மாதிரி பாப்பாளுக… இன்னைக்கு ஆள் பார்க்க வேற கொஞ்சம் அழகா இருக்காரு… (கொஞ்சமா என்று அவள் மனசாட்சி கேட்க… ச்சீ… போ.. என்று அதை அடித்து துரத்தி விட்டாள்)… போதும்டி வாய மூடுங்க…. அவர் போயிட்டாரு… என்று அவர்களை சடைந்து விட்டு…
அதென்ன சட்டைல ரெண்டு பட்டனை திறந்து விட்டுட்டு வர்றது…. இவரோட கட்டழகை இங்க இருக்கிற எல்லோருக்கும் காட்டணுமா என்ன… என மனதுக்குள் காரணமே இல்லாமல் சலித்துக் கொண்டவள் பைலை வாங்கிவிட்டு… குட் மார்னிங் சார்.. என்ற படி ஆதியின் அறைக்குள் நுழைந்தாள்…
அறைக்குள் நுழைந்த ஆதி நேராக தனது தனி அறைக்கு சென்று இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி கண்ணாடியில் முகத்தை திருப்பி திருப்பி பார்த்தான்.. என்னடா இன்னைக்கு ரொம்ப அழகா இருப்ப போல… அப்படியே, வச்ச கண்ணு எடுக்காம உன்னை முழுகுற மாதிரி பார்க்கிறா… ரொம்ப நாளைக்கு அப்புறம் சேலை கட்டிட்டு வந்து இருக்கா போல.. அப்போ சிறப்பு தரிசனம் இன்று உண்டு…. என்று தலையை கோதி கொண்டே அவன் தனக்குத்தானே பேசிக்கொண்டு இருக்கையில், அறைக்கு வெளியே மலரின் குரல் கேட்க… வந்துட்டா போல.. டேய் ஆதி…. இன்னைக்கு கிட்டயே அவளை வர விடக்கூடாது… கிட்டத்துல விட்ட உன்ன டெம்ப் பண்ணி சாவடிப்பா… அவ இடத்தில் உட்கார வைச்சே வேலை வாங்கு… என்று அவனுக்கு அவனே கட்டளை இட்டு விட்டு சென்றான்…
அவளிடத்தில் தான் அமர்ந்து இருந்தாள்…
ரொம்ப சமத்தா உட்கார்ந்திருக்காளே… அவனிடத்தில் வந்து அமர்ந்தவன் வேலையை பார்க்க தொடங்கினான்…
ஆனால் மலருக்கு வேலை செய்யும் எண்ணம் இல்லை போலும் கன்னத்தில் கை வைத்து அவனைத்தான் பார்த்துக் கொண்டே இருந்தாள்….
ஒரு கட்டத்தில் அவளின் பார்வை குறுகுறுப்பு தாங்காதவன் மலர் வேலையை பாரு… என்று உறுமினான்…
ஐயோ மாட்டிக்கிட்டியேடி… இப்படியா கண்டுபிடிக்கிற மாதிரி சைட் அடிக்கிறது… மானம் போச்சு… என்று ஒற்றைக்கண்ணை அடித்து தனது நுனி நாக்கை கடித்துக் கொண்டாள்.
அவள் கண்ணை நகர்த்தினால்தான் அவன் பார்க்க முடியும்… அவன் கவலை அவனுக்கு…
சிவப்பு நிற சேலை அணிந்திருந்தாள்… காதில் ஒரு பெரிய ஜிமிக்கி… கழுத்தில் எதுவும் அணியவில்லை… அணிந்திருந்தாலும் கூட… அவ்வளவு அழகாக இருக்குமா என்று தெரியாது… வெறும் கழுத்தே அவனை போதை ஏற்றியது… “அவள பார்த்தது போதுண்டா வேலைய பாரு” என்று அவன் கை வைத்தே அவனது முகத்தை திருப்பிக் கொண்டான்.
இடையில் ஏதோ சந்தேகம் கேட்க மலர் எழுந்து வர பார்க்க…
என்ன வேணும் எதுக்கு எந்திரிக்கிற என்றான் மிரட்டும் தோணியில்…
அது ஒரு சந்தேகம் என்றாள் மலர்…
நீ இங்க வராத… அங்கேயே இரு நான் வரேன்… என்று கூறிவிட்டு அவன் எழுந்து அவள் இடத்திற்கு சென்றான்…
என்ன டவுட்…
கணினியில் உட்கார்ந்த படி அவளுடைய சந்தேகத்தை அவளது கணினியில் காண்பிக்க… அதற்கு ஆதி குனிந்து விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தான்… அவள் கொடுக்கும் ஒவ்வொரு விளக்கத்திற்கும் அவள் தலையை ஆட்ட அந்த ஜிமிக்கி வேறு டான்ஸ் ஆடியது…. அதை கவனித்தவன் அப்படியே அது உரசி சென்ற அந்த காதோரத்தில் இருந்த மச்சத்தையும் கவனித்தான்… ஒவ்வொரு தலையாட்டலுக்கும் அந்த ஜிமிக்கி அந்த மச்சத்தை முத்தமிட்டது… அதைப் பார்த்து பொறாமையில் மனம் தடுமாற அதை கவனிக்க கூடாது என்று நினைத்தே இன்னும் அவன் அருகே கீழே குனிய… இன்று ஏனோ மல்லிகைப் பூ வைத்து வந்திருந்தாள்… அதன் வாசம் வேறு ஆளை மயக்க… பேசிக் கொண்டிருந்தவன் ஒரு நிமிடம் அந்த ஏகாந்தத்தில் மூழ்கி கண்ணை மூடி அமைதியாய் இருக்க… என்ன சத்தத்தை காணோம் என்று நினைத்தபடி அவள் வேகமாய் பக்கவாட்டாய் திரும்ப… ஆதியும் தன்னை மீட்டு எடுத்து திரும்பி பேச்சை ஆரம்பிக்க முன்வரும்போது… இச்… என்று இருவர் இதழும் ஒரு நிமிடம் எக்கத் தப்பாய் ஒரு நொடி உரசி நின்றது. இருவரின் விழிகளும் விரிய… ஒரு நொடிதான்… இருவருக்குள்ளும் பூகம்பம்… படபடப்பு… உடல் சிலிர்ப்பு… உதடுகள் உரசிய படியே அவள் கண்களைப் பார்த்து… Stay away from me.. என்று மோன நிலையில் அவன் சொல்ல… இதற்கு அவன் முத்தமிட்டே இருக்கலாம் என்று தோன்றியது…
சிறப்பு தரிசனத்தை எதிர்பார்த்தவனுக்கு சிறப்பு நெய் சக்கரை பொங்கல் கிடைத்தது போல் குதூகலம்… மின்னலுக்கு சமமான மின்சாரம் உடலில் இறங்கியதாய் உணர்வு… தவறி விழுந்த தேன் துளியாய் நாவால் இதழை ஈரப்படுத்தி விட்டு, எதுவும் பேசாமல் விலகி மௌனமாய் அவரவர் வேலையை பார்ப்பது போல் நடிக்க ஆரம்பித்தனர். அதே ஏகாந்த நிலையுடன்..
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️