அசுரன் 67
வீட்டிற்கு வந்தும் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை… இருவரிடையே ஏதோ ஒரு சிறு தயக்கம் ஒட்டி இருந்தது… ஆனால் இருவருக்கும் உணர்வு பிழம்புகள் ஊற்றெடுத்தன… அமைதியாக இருப்பதே இருவருக்கும் நல்லது என்று இருவருக்குமே தோன்றியது… ஆனால் அவ்வப்போது அந்த இதழ் உரசலின் நொடி இருவருக்குமே ஞாபகம் வந்தது… ஞாபகம் வரும் பொழுதெல்லாம் வெட்கச் சிரிப்புடன் கைகள் தன்னால் தத்தம் இதழை தீண்டிக்கொண்டன…
இருவரும் உண்டு விட்டு, பிரிய மனமில்லாமல், தத்தம் அறையை அடைந்தனர்…
மேகம் கருக்கும் வேலையில் மயில் தோகை விரித்து ஆடுவதைப் போல… இந்த மந்த காச வேளையில் மலரின் கால்கள் ஆட பரபரத்தன.
வெகு நாட்களுக்குப் பின்…. ஆதியின் பிரம்மாண்ட புகைப்படத்தின் முன்னே…
கண்ணனுக்கு என்ன வேண்டும்
கண்ணனுக்கு என்ன வேண்டும்
தினமும் உதிக்கும் பொன்மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல்மலரோ
உன்னை எண்ணி ஏங்கித்தவிக்கும்
உள்ளம் என்னும் மலரோ
சொல்லு கண்ணா சொல்லு கண்ணா…
என்று மகிழ்ச்சியில் மலர், ஆதியை மனதில் நினைத்து பாடிக்கொண்டே… அவளின் மெல்லிய இடையை நளினமாக வளைத்து, நெளிந்து ஆடிக்கொண்டிருக்க….
அங்கே சுவரில் சாய்ந்து மார்பின் குறுக்கே கை கட்டியபடி அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அவளின் அழகன்.
அவனைப் பார்த்ததும் திடுக்கிட்டு, நடனத்தை நிறுத்தி, படபடப்பாய் நின்றவள்… அவன் பார்வையை பார்க்க… அது அவன் சரி இல்லை என்று சொல்லாமல் சொல்லியது.. “என்ன இப்படி சிவந்து இருக்கு” என்று அவன் கண்களையே வைத்த கண் வாங்காமல் அவள் பார்த்திருக்க…. அவள் பார்க்க பார்க்க நெருங்கி அருகே வந்தவன்…
ஏன்டி…. என்ன அப்படி முழுங்கற மாதிரி பாக்குற….என்று முகம் நெருங்கி இருக்க மூச்சுக்காற்று முகத்தில் பட மோன நிலையில் கேட்டான் ஆதி.
அதன் வெம்மை அவளுள் தடதடக்க அவள் இதழ்கள் பிரிந்து தவிக்க நீள் மூச்சில் நெஞ்சு ஏறி இறங்க…
அவள் பதில் கூற வெட்கப்பட்டு நிற்க…
அவளின் செழுமைகள் அவன் நெஞ்சில் அணைய அழுத்தமாக கட்டிப்பிடித்தான் அவனின் மனம் அவள் நாசியில் பரவி அவளை கிறங்கியது…
இந்தப் பாட்டை என்ன நினைச்சுக்கிட்டு தானே நீ பாடின என்று அவன் கேட்க….
ஆமாம் என்பது போல்… தலை கவிழ்ந்தாள் பெண் வெட்கத்துடன்…
என்ன வேண்டும், என்ன வேண்டும்…. அப்படின்னு கேட்டியே என்ன கேட்டாலும் தருவியா என்றான்….
அவள் மௌனமாய் நின்ற அடுத்த நொடி அதை சம்மதமாய் எடுத்துக்கொண்டு…
அவளை மெதுவாய் தழுவி முதுகை அணைத்தவன்… ஐ நீட் யூ பேட்லி நொவ்… என்றவன்… மெதுவாக அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.
அவன் வலது கை மெல்ல அவள் முதுகை தடவி கூந்தலுக்குள் நெளிந்து வளைந்து சென்று பிடரியை வருடியது.
ஜாக்கெட் மறைக்காத வெற்று முதுகை தடவி வருடி மெல்ல கீழிறங்கியது அவளின் மெல்லிடையின் வளைவுகளை ஆராய்ந்து மென்மையை சோதனை செய்தது…. அவனின் ஆராய்ச்சியில் இடுப்பில் ஒரு சிலிர்ப்பு எழுந்து மின்னல் பரவி படர்ந்தது அவளுள்..
அவள் நெற்றியிலும் கண்களிலும் முத்தமிட்டபடி இடுப்பு மடிப்பை மெல்ல விரல்களால் வருடினான் அதை மென்மையாய் தடவி அழுத்தி இறுக்கி பிடித்தான்… அதில் விழிவிரிய மெல்ல கைகளால் அவன் தோள் பற்றி முகம் நிமிர்ந்தாள்…
அவன் காந்த கண்கள் அவள் கண்களில் தெரிந்த பெண்மை தவிப்பை அறிந்து இன்னும் இன்னும் இடையில் ஊர்வலம் போனது இலக்கின்றி
அவனது கூர்மையான மூக்கு அவளது குட்டி மூக்கு… சிவந்த கன்னங்கள் என முட்டி முட்டி உரசியது.
பெண் அவள் கிளர்ந்து கண்களை மூடியதும், அவளது இமைகள் மீது அழுத்தமாக அவன் முத்தமிட அவளோ தன் உதடுகளை உள்ளெழுத்து தவிப்பில் பற்களால் கடித்திட… டோன்ட் ஹர்ட்…. தட்ஸ் மை பிராபர்ட்டி… என்று சொன்னவனின் வன் உதடுகள் அடுத்த நொடி அவளின் மென் இதழ்களை ஆக்ரோஷமாக கவ்விக்கொண்டன… அவள் உடல் விதிர்த்தது நடுங்கின கைகள் வெளிப்படையாக படபடத்தன… கால்கள் தளர்ந்தன… பெண் அவள் பெட்டில் தொப் என அமர்ந்தாள். அதுவரை மென்மையாக அவளை கையாண்டவன் இப்போது அசுரனாக ஆர்ப்பரித்தான்.
ஆடவனின் உதடுகள் மீண்டும் மீண்டும் அவளின் கன்னங்கள் உதடுகள் என்று மாறி மாறி முத்த படை எடுக்க பெண்ணோ போதைமயக்கம் கொண்டாள்.
தேவா… பிளீஸ்… தேவா… என அவனது பெயரை திக்கி திணறி கூற… அவன் கற்றை மீசையின் முடிகளும் தாடியும் அவள் கன்னங்களிலும் உதடுகளிலும் உறைந்து உறைந்து கூச்சத்தை ஏற்படுத்த…. அவளின் “தேவா” என்ற பிரத்தியோக அழைப்பை கேட்டதும் ஹார்மோன்கள் தாறுமாறாய் எகிறி குதித்தன….
அவன் முரட்டு விரல்கள் அவளின் இடுப்பு மடிப்பில் உணர்ந்து தவழ்ந்த இடத்தில் எல்லாம் இப்போது அவன் இதழ்கள் ஊர்ந்து கடித்து சுவைத்துக் கொண்டிருந்தது… மீண்டும் அவன் உதடுகள் அவள் உடல்களில் மச்சம் இருக்கும் இடங்களில் எங்கும் செல்ல கடி, கடித்து முத்தமிட்டன. மீண்டும் மீண்டும் அவனின் இந்த அதிரடி தாக்குதலினால் மொத்தமாக தொலைந்து போனாள் பெண்….
அவன் சிகையை அழுத்தி பிடித்து, தேவா… ஹக்.. தே.. வா… என மயக்க முணங்கல் கொடுக்க… அவள் மேனி எங்கும் முத்தயுத்தம் நடத்தி இருந்தான். அவளின் உடல் முழுவதும் அவன் எச்சில் ஈரம் தான்.
ஒரு கட்டத்தில் அவனின் ஆடை கலந்தவன்… அவளின் ஆடைகளை கழட்ட பொறுமை இல்லாமல் கிழிதெறிந்தான் … இருவரும் மற்றொருவரிடத்தில் இனி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில் தன்நிலை மறந்தனர்… உணர்ச்சி வேகம் தாங்காமல் அவன் முதுகில் நகங்களினால் கோலம் போட்டாள்… சொக்க வைத்தான் பெண் அவளை… அவனின் முதுகு முழுவதும் பெண்ணின் நக கீறல்கள் தான். ஆடவனின் சேவையில் லயித்து கழுத்து வளைவில், தோள் பட்டையில் இருந்த மச்சத்தை கடித்து வைத்தாள்… அது அவனை மேலும் போதை ஏற்றிருக்க வேண்டும் வன்மையெடுத்து பெண்ணவளுள் மொத்தமாக நுழைந்து இருந்தான் ஆடவன். வலியில் பெண்ணவள் ஆ…. ஆ… என்று தன்னை மறந்து கத்த…
இங்கு ஆ… என்று பெரும் சத்தத்துடன் அலறி, துடித்து… தூக்கத்தில் இருந்து எழுந்தாள் மலர்… அறை முழுதும் இருட்டு…
வேகமாய் குனிந்து தனது உடலை ஆராய்ந்தாள்…
ஆடை, தலையெல்லாம் கலைந்து உடல் முழுவதும் வேர்த்து ஊற்றி… மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க… தொண்டையின் நீர் வற்றி, உதடு உலர்ந்து எழுந்து அமர்ந்திருந்தாள் மலர்.
கனவா…. கனவு மாதிரி தெரியலையே நிஜத்தில் நடந்தது போலவே இருந்ததே… என இரு கைகளாலும் தலையைத் தாங்கி யோசித்துக் கொண்டிருக்கையில்…
அவள் மேனியில் இன்னும் ஆதியின் எச்சிலின் குறுகுறுப்பு இருப்பது போல் இருக்க… வேகமாய் தனது கழுத்து வளைவை தொட்டு பார்க்க அது ஈரமாகத்தான் இருந்தது… கனவிற்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாத குழப்பமான நிலையில் அவள் தேங்கி நிற்க..
மனம் கவர்ந்தவன் தான்… அணைப்பை எதிர்பார்த்தாளே தவிர திடீர் கலவியல் வரை யோசிக்கவில்லை…
பாவி பையன்… கனவில் வருவதற்கும் அனுமதி கேட்டு இருந்திருப்பான் போல மனதில் நுழைந்த உடன் கனவில் பாய்ந்து விட்டான்…
அவன் ஆக்ரோஷத்திலேயே கதி கலங்கிவிட்டாள் பெண்…
டப்…. டப்…. கதவு வேகமாக தட்டப்பட்டது…
திடீர் சத்தத்தில் இதயம் அதிர்ந்து போனாள் மலர்… ஒரு நிமிடம் தன் நெஞ்சில் கை வைத்து அழுத்தி நிதானத்திற்கு வந்து… குனிந்து தன்னைப் பார்க்க உடையெல்லாம் அலங்கோலமாய் இருந்தது… நடனம் ஆடிக் கொண்டிருந்தவள் களைத்து கட்டிலில் “”தொப்” என்று விழுந்து எதிரே இருக்கும் ஆதியின் புகைப்படத்தை பார்த்து பேசி கொண்டே உறங்கிப் போனாள் என்பது இப்பொழுது ஞாபகம் வந்தது…
மலர்… மலர்…. என்ன பண்ணிட்டு இருக்க…. கதவ தொற… என்று ஆதி கத்தினான்… என்னோட போன் அட்டென்ட் பண்ணு… என்றான்.
அப்பொழுதுதான் பக்கத்தில் இருந்த மொபைலை எடுத்து பார்த்தாள்… சைலண்ட்டில் இருந்தது… ஆதியின் கால் வர எடுத்து காதில் வைத்தாள்.
மலர் என்ன ஆச்சு… ஏன் இப்படி கத்துன… என்று அவன் படபடப்புடன் கேட்க…
அது கெட்ட கனவு… என்றாள் தயங்கியபடி…
ஹூப்… என்று ஊதி தன்னை நிதானப்படுத்திக் கொண்டது போனிலும் அவளுக்கு தெளிவாக தெரிந்தது… சரி வந்து கதவ தொற… என்றான் ஆதி..
பெண்ணவள் தன் நிலையை எண்ணி அமைதியாய் இருக்க…
அதை புரிந்து கொண்டவன், ஒன்னும் பிரச்சனை இல்ல நீ நிதானமா ரெடியாயிட்டு கதவ தொற நான் வெளியில தான் உனக்காக வெயிட் பண்றேன் என்று கூறிவிட்டு போனை வைத்தான்…
அவளும் தனது உடையை கழற்றி தூக்கி போட… கனவில் ஆதி உடையை கலைந்து தூக்கிப் போட்டது நினைவு வர… அவளது உடையில் அவனது வாசனை இருப்பது போல் ஒரு உணர்வு… அதை மெல்ல நுகர்ந்து பார்த்து விட்டு… தனது இரவு உடையை எடுத்து அணிந்து கொண்டாள்..
பின் குழப்பதுடனே முகத்தை கழுவி விட்டு துடைத்தபடியே கதவை திறந்து வெளியே வர…
சோபாவில் உட்கார்ந்து இருந்தவன்.. கதவு திறக்க சத்தம் கேட்டதும் வேகமாய் எழுந்து அவள் அருகில் வந்தான்…
அவன் தன் அருகில் வருவதை கண்டவள்
ஒரு அடி பின்னால் நகர்ந்தாள் பெண் அவனை நிமிர்ந்து அவளால் பார்க்க முடியவில்லை… கூச்சம் உயிரை பிடுங்கி தின்றது… அவன் அருகில் கை கால் எல்லாம் உதறல் எடுத்தது…. இதயம் படபடப்பை அதிகரித்தது… உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பித்தது…
அவள் பயந்து, பேயறைந்ததை போல் நிற்பதை கண்டவன்…
என்ன ஆச்சு பேய் கனவு ஏதாவது கண்டயா… என்று கேட்க..
அவனை மேல் கண்ணால் பார்த்துக் கொண்டே எச்சில் கூட்டி விழுங்கி, ஆமாம் என்பது போல் தலையசைத்து வைத்தாள்…..
பயந்து, ரத்தப் பசையாற்று வெளுத்து போய் இருக்கும் அவளது முகத்தை பார்த்தவன்… அவளை நகரும்படி கையசைத்து விட்டு… அவளது அறையை கண்களால் சோதனை செய்தான்.. வித்தியாசமாக எதுவும் தென்படாததால்… நிதானமாகி… அவளைக் காண உடல் வியர்வையில் நனைந்து இருந்தது… “ஏசி ரூம்ல ஏன் இப்படி வேர்க்குது மலர் உனக்கு”…. ரொம்ப பயந்துட்டியா…. என்றான் அமைதியாக…
ஆமாம் என்று தலையசைத்தாள் பெண். இப்பொழுது அவனிடம் பேச வாய் வரவில்லை…. நாக்கு அண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது போல் ஒரு உணர்வு….
அவனை இயல்பு நிலையில் பார்த்த பின்பு தான் இது 100% கனவு என்ற மனநிலைக்கு வந்து இருந்தாள் மலர்.
பிளாஸ்கில் அவன் போட்டு வைத்திருந்த பிளாக் காப்பியை ஒரு கப்பில் ஊற்றி அவளுக்கு கொடுத்து, குடி குடித்துவிட்டு போய் நிம்மதியா தூங்கு… என்றான் ஆதி.
நீங்க தூங்கலையா…. என்றாள் மெதுவாக…
இன்னும் எனக்கு மீட்டிங் முடியல மா… முடிச்சிட்டு நான் போய் படுத்துகிறேன்.. நீ போய் நிம்மதியா தூங்கு… என்றான் ஆதி.
போகாமல் தரையை பார்த்தபடி கைகளை பிசைந்து கொண்டு அங்கே நின்று இருந்த மலரை பார்த்தவன்…
என்னம்மா தனியா படுக்க பயமா இருக்கா…. வேணும்னா இங்க சோபால படுத்துக்கோ… எனக்கு மீட்டிங் முடிய கொஞ்சம் டைம் ஆகும் நான் இயர்லி மார்னிங் தான் தூங்க போவேன் சோ நான் முழிச்சிருக்கேன் நீ நிம்மதியா தூங்கு என்றான்…
அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்து விழித்தவள்.. அவள் பயமே அவன் தான் என்று எப்படி கூறுவாள்… வேணாம் நான் உள்ளேயே படுத்துக்குறேன்…. என்று கூறிவிட்டு வேகமாய் அறைக்குள் சென்று கதவை தாழிட்டாள்…
அவளின் வித்தியாசமான நடவடிக்கையை அவனும் கவனித்தான்…
விடியும் வேளையில் உறங்கிய ஆதி… அன்று ஆபீசுக்கு தாமதமாகவே கிளம்பினான்… கிளம்பி வெளியே வந்தவன் அப்பொழுதும் மலரின் அறை கதவு திறக்காமல் இருக்க….
மலருக்கு போன் அடிக்க… அது சைலன்டில் இருந்ததால் எடுக்கப்படவில்லை..
பின் ரவிக்கு அழைத்து மலர் அலுவலகம் வந்துவிட்டாளா என்று விசாரிக்க அவன் இல்லை என்றான்.
இரவு அவளின் பயந்த முகம் நினைவுக்கு வர… வேகமாய் மலரின் கதவை தட்டினான் ஆதி… ஒரு மெல்லிய முனகல் சத்தத்திற்கு பின் எந்த சத்தமும் வராத காரணத்தால்… அதிவேகமாக கதவை தட்ட… உள்ளிருந்து யாரும் திறக்கவில்லை என்பதை உணர்ந்தவன் ஏதோ சரியில்லை என்று உணர்ந்து… அந்த அறையின் சாவியை தேடினான்…. அது கிடைக்காத பட்சத்தில்… ஜன்னல் பக்கம் சென்று… ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து… உள்ளே நுழைந்து… கண்கள் மலரை தேட…
அங்கு மலர் இருக்கும் நிலை கண்டு தூக்கி வாரி போட்டது அவனுக்கு…
தரையில் ரத்த துளிகளுக்கு நடுவே அவனின் மலர் விழுந்து கிடந்தாள்…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️