ராவணா 13

‘என்னவேண்டுமானாலும் செய்துகொள்’ என சொல்லாமல் சொன்ன ராவணனின் பதிலில்  சக்திவேலின் முகம் இறுகியது. ஆனாலும் அவர் விட வில்லை, பொடிப்பையன் அவனுக்கே அவ்வளவு இருக்கும் என்றால், எனக்கு எவ்வளவு இருக்கும், என்று அவருக்குள் இருக்கும் அகம் அவரை தூண்டி விட,

“டேய் என்ன ஓவர் ஸீனா இருக்கு, நான் யாருன்னு தெரியுமா? உயிர் இருக்காது” காட்டுக்கத்து கத்தினார். 

ஆனால் ராவணன்,”ஏன் தெரியாது மினிஸ்டர் சக்திவேல் தானே” என எள்ளல் பொதிந்த குரலில் மிக மிக நிதானமாக கேட்டான். சக்திவேல் ஒருகணம் அசந்துவிட்டார். அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை,’என்னய்யா இது? நான் யாருன்னு எப்படி அவனுக்கு தெரியும்?’ என்று எண்ணியபடி சக்திவேல் வரதனை ‘நீயா சொன்ன’ என்பது போல தன் புருவும் இடுங்க பார்க்க, அவன்  உடனே மறுத்துவிட, ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்த சக்திவேல் தன்னை சமநிலை படுத்திகொண்டு,

“டேய் அதான் நான் யாருன்னு தெரியுதுல மரியாதையா சரக்கை நீயே வந்து குடு” என்று கட்டளையிட,

“சரக்கு தானே தந்திரலாம், அதுக்கு முன்னாடி ஒன்னும் சொல்லணும், பரந்தாமன் வீட்ல ஆதாரத்தை அழிக்கும் பொழுது நம்ம பசங்க ஒரு ஃபைலும், ஃபோனும் இருந்துச்சின்னு எடுத்துட்டு வந்துட்டாங்க ஓபன் பண்ணி பார்த்தா உள்ள நீ இருக்க! உன் மொத்த வரலாறும் இருக்கு. எலெக்ஷ்ன் வருதுல,என்கிட்ட இருக்கிற  அந்த வீடியோ அப்புறம்  அந்த ஃபைல் எல்லாத்தையும் மீடியாக்கு லீக் பண்ணினா ஏதும் பிரச்சனை வருமா என்ன? கொஞ்சம் சொல்லிட்டு போ” என மிக இயல்பாக அவன் ஒருமையில் பேசிவிட , சட்டென்று பொங்கிய ஆத்திரத்துடன்,

“டேய் என் பலம் தெரியாம மோதுற” என தன் ரத்தம் அழுத்தம் ஏகத்துக்கும் எகிற சக்திவேல் கத்தினார். அவன் சிரித்தான்.

எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியுள்ளேன், விடயம் மட்டும் மீடியாவுக்கு வந்தால்? சேர்த்து வைத்த செல்வாக்கு, நான் இருக்கும் பதிவி என தன் மொத்த அரசியல் வாழ்க்கையும் ஆட்டம் கண்டுவிடுமே என்று மனதிற்குள் நிஜமாகவே அஞ்சியவர். இப்பொழுது ஆத்திரத்தை விடுத்து நிதானமாய் சிந்தித்து,

“ஓகே உனக்கு என்ன வேணும் சொல்லு? நான் செஞ்சி தரேன். சரக்கும் நான் சம்பந்தப்பட்ட விஷயங்களும்  எனக்கு வேணும்” என ராவணனிடம் பொறுமையாக பேசினார்.

“உன்கிட்ட எல்லாம் சொல்ல முடியாது, நீயா என்கிட்ட டீல் பேசனின, வரதனை இன்னைக்கு என் ஆபிஸ்ல வந்து என்னை பார்க்க சொல்லு. எனக்கு என்ன வேணும்ன்னு அவன் கிட்ட நான் சொல்லிக்கிறேன். நான் கேட்டதை செஞ்சா, நீ கேட்டதை நான் தரேன்” என்ற ராவணன் அழைப்பை அணைத்துவிட சக்திவேல் எரிச்சலுடன் வரத பெருமாளை பார்த்தான்.

!!!

“அந்த பரந்தாமனா! ச்ச, எல்லாம் பணம் படுத்துற பாடு, உன்ன காப்பாத்தினானே அவன் அந்த பரந்தாமனை ஒரு தடவை எல்லாம் சுட்ருக்க கூடாது, பல தடவை சுட்டுருக்கணும்” என்று கொதிப்புடன் கூறிய இந்திரா மேலும் தொடர்ந்து, “நீ அவனை விட்ருக்க கூடாது அஜூ, அவன் ஏதாவது பண்ணிருக்கணும்” என்று அறையில் பல்லை கடித்தபடி குறுக்கும் நடுக்கும் நடந்துகொண்டே கூறினாள். அப்பொழுது,

“அஜூதியா” என்று அஜூதியாவை கத்தி அழைத்தபடி அவள் அறைக்குள் கையில் செய்தித்தாளுடம் பரபரப்பாக நுழைந்த ஆஷ்ரம நிர்வாகி ஜானகியிடம்,

“மா என்னாச்சு என்று”பெண்கள் இருவரும் அவரது பதற்றத்தை உள்வாங்கிக்கொண்டு கேட்க, அஜூதியாவிடம் நாளிதழை நீட்டியவர்,

“உன் காலேஜ் சேர்மென் மிஸ்டர் பரந்தாமன் இறந்துட்டார்” என்று சொல்ல, நாளிதழை வாங்கி பார்த்தவள்  அதிர்ச்சியுடன் தன் தோழியை பார்க்க அவளை அமைதியாக இருக்கும் படி செய்கை செய்தவள் அவள் கரத்தில் இருந்து நாளிதழை வாங்கி அதில் எழுதப்பட்டிருந்த செய்தியை வாசித்தாள்.

“உனக்கு இதை பத்தி எதுவும் தெரியுமா அஜூதியா” என்ற ஜானகியிடம் இந்திராவின் சமிக்கைக்கு இணங்க தெரியாது என்றவள் நேற்று நடந்த எதை பற்றியும் கூறவில்லை.

“நீ இன்னைக்கு தானே வருவேன்னு சொன்ன, நைட்டே வந்துட்டன்னு வாச் மென் சொன்னாங்க”

“மா அது வந்து” என்ன பதில் சொல்வது என்று அஜூதியா தடுமாறவும், “அது மேம் அங்க ஹாஸ்ட்டல்ல தங்குறதுக்கு ரூம் எதுவும் காலியா இல்லாம இருந்திருக்கு, அதான் வேற வழியில்லாம நைட்டே வந்திருக்கா” என்று இந்திரா முந்திக்கொள்ள, 

“ஓ, என்னவோ நீ நல்லபடியா வந்துட்ட” என்றவர், “யாரு இப்படி பண்ணினாங்களோ? பாவம் நல்ல மனுஷன் அவருக்கு இப்படி ஆகிடுச்சு, நம்ம ஆஷ்ரமத்துக்கு நிறைய உதவி பண்ணிருக்காரு, ஹம் நல்லவர்களுக்கு இப்போ எல்லாம் காலமே இல்லை” என்று ஒருவித கவலையுடன் கூறியவர் அறையை விட்டு வெளியேறவும் வேகமாக சென்று இந்திரா கதவுக்கு தாழிட, அஜூதியாவோ கால்கள் தள்ளாட அப்படியே தொப்பென்று படுக்கையில் அமர்ந்தாள். 

“அஜூ பரந்தாமன் சாகலைன்னு சொன்ன, ஆனா கையெல்லாம் வெட்டி ஷூட் பண்ணி கொலை பண்ணிருக்காங்க” 

“அதான் எனக்கு ஒண்ணுமே புரியல இந்து, என்கிட்ட பரந்தாமன் சாகலைன்னு தான் அவர் சொன்னாரு”

“உன்னை காப்பாத்தினவன் யாரு? அவன் பேர் என்ன? இப்படி ஏதாவது தெரியுமா?”

“ம்ஹூம் தெரியாது, நான் கேட்டேன், அதுக்கு எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா போய் வாழுன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க”

“என்னாச்சு இந்து?”

“உனக்கு ஏதும் பிரச்சனை வருமோன்னு பயமா இருக்கு அஜூ”

“என்ன சொல்ற இந்திரா? எனக்கு என்ன பிரச்சனை வரும்? நான் என்ன செஞ்சேன்?” அஜூதியா கலவரமாக இந்திராவை பார்க்க அவளோ,

“ஏய் நீ ஏன் இப்போ கத்துற? நீ முதல்ல பொறுமையா, ஒரு விஷயத்தை பத்தி யோசி. பரந்தாமனை கொலை பண்ணிருக்காங்க, அவரு எக்ஸ் மினிஸ்டர், போலீஸ் இந்த கேஸை ஈஸியா விடமாட்டாங்க எல்லாரையும் விசாரிக்க ஆரம்பிப்பாங்க, நேத்து நைட் நீ அவரோட கெஸ்ட் ஹவுஸுக்கு போயிருக்க கெஸ்ட் ஹவுஸ்ல சிசிடிவி கேமெரா இல்லாம இருக்காது. கண்டிப்பா உன் முகம் அதுல ரெக்கார்ட் ஆகியிருக்க வாய்ப்பு இருக்கு. அதை வச்சு போலீஸ் உன்னை விசாரிக்க வந்தா என்ன பண்றது? எப்படி சமாளிக்கிறது? இந்த விஷயத்துல தேவை இல்லாம உன் பேரு அடிபடுமோன்னு நினைச்சு தான் பயமா இருக்குன்னு சொன்னேன். ”

“ஆமா நீ சொல்லும் பொழுது தான் புரியுது, இப்போ என்ன பண்றது இந்து? ஜானகி மாகிட்டையும் எதுவும் சொல்லல, ஒருமாதிரி டென்ஷனா இருக்கு டி”

“அஜூ இப்போதைக்கு நீ ரிலாக்ஸ்சா இரு, உனக்கு ஏதாவது இதுல பிரச்சனை வர்ற மாதிரி இருந்தா போலீஸ் கிட்ட எதையும் மறைக்காம நடந்த எல்லாத்தையும் சொல்லிடு, நம்ம பக்கம் உண்மை இருக்கு, சோ நாம பயப்பட வேண்டாம். துணிவா சமாளிச்சிக்கலாம்” என்ற இந்த்ராவிடம்,

“நடந்த எல்லாத்தையும் எப்படி டி சொல்ல முடியும்” என்றாள் அஜூதியா.

“ஏன் சொன்னா என்ன? உன் மேல தப்பு இல்லாதப்போ என்ன பயம்?”

“எல்லாத்தையும் சொல்லும் பொழுது, அவரை பத்தியும் சொல்ல வேண்டி வரும். நோ அவரு மட்டும் இல்லைனா நான் இப்போ இல்லை இந்து. என்னால அவரை எப்பவுமே காட்டிக்கொடுக்க முடியாது”

“நீ சொன்னதை வச்சு பார்க்கும் பொழுது அவங்களும் ஒன்னு நல்லவங்க மாதிரி தெரியலையே, கன்ஸ் எல்லாம் யூஸ் பண்றதை பார்த்தா கேங்ஸ்டர்ஸ் போல தான் தெரியுது” என்ற இந்திரா முடிப்பதற்குள், “இந்து ” என்று அவளை குறுக்கிட்ட அஜூதியா,

“அவர் கெட்டவராவே இருக்கட்டும், ஏன் கொலை செய்யுற கேங்ஸ்டராவே இருக்கட்டும், ஆனா எனக்கு அவர் தான் நல்லவர். அந்த பரந்தாமன் என்னை எப்படி பார்த்தான் தெரியுமா? என் கைய புடிச்சு என் ட்ரெஸை கிழிச்சு” என்று தன் தொண்டை அடைக்க பேச முடியாமல் திணறியவள், கண்ணீர் வடிய, “சொன்னா உனக்கு புரியுமா தெரியல இந்து, அந்த நிமிஷம் நான் அடைஞ்ச வலி இருக்கே  அந்த கடவுளுக்கு தான் தெரியும். நீ சொல்ற அந்த கேங்ஸ்டர் மட்டும் என்னை காப்பாத்தலைன்னு வச்சுக்கோயேன் இன்னைக்கு இந்த நியூஸ்பேப்பர்ல என் ஃபோட்டோ வந்துருக்கும்” என்று ஏங்கி ஏங்கி அழும் அஜூதியாவை இறுக்கமாக அணைத்துக்கொண்ட இந்திரா, 

“சாரி டி, உனக்காக தான் அப்படி சொன்னேன் வெறி வெறி சாரி. நீ அழாத, எந்த பிரச்சனையும் வராது அப்படியே வந்தாலும் வரும்பொழுது பார்த்துக்கலாம்” என்று தைரியம் கூறினாள்.

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top