அசுரன் 70
அருண் இப்பொழுது எல்லாம் ஆதியின் அலுவலகத்திற்கு வர முடிவதில்லை, சொல்லப்போனால் ரதியின் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது…. அதற்கு ஒரு முக்கியமான காரணமும் உண்டு… ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல் கன்ஸ்ட்ரக்ஷன் முக்கியமான கம்பெனிகளில் இருந்து கொட்டேஷன் கேட்டிருந்தார்கள்… அருணும் ரதியும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் கம்பெனியின் பெயரில் கொட்டேஷன் அனுப்பப்பட்டது…
தேவன் கன்ஸ்ட்ரக்ஷன் இல் இருந்தும் கொட்டேஷன் அனுப்பப்பட்டது… எப்பொழுதும் இந்த மாதிரியான ப்ராஜெக்டுகள் ஆதியின் நிறுவனத்துக்கே சரியாய் போய் சேரும்… ஆனால் இந்த முறை அது தவறி இவர்களின் கம்பெனியை வந்து அடைந்திருந்தது… இது அருணுக்கு ஆச்சரியம்… ரதிக்கு ஆதியை வென்றுவிட்ட பெருந்திருப்தி… அதனால் அருணும் ரதியும் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை…
இருவரும் அந்த கம்பெனியில் சம நிலையில் உள்ள முதலாளிகள் என்றாலும், அங்கு ரதியின் பேச்சுக்கு மட்டுமே மதிப்பு… அருணின் பேச்சு இரண்டாம் தரத்திற்கு சென்றது… ப்ராஜெக்ட் என்று உட்காரும் குழுக்களில் பெரும்பாலும் அருணின் பேச்சுக்கள் மற்றும் ஐடியாக்கள் ரதியினால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை… சில நேரங்களில் சரி என்று ஏற்றுக் கொண்டாலும் அதை செயல்முறை படுத்துவதில்லை…
ஏன் இப்படி பண்ற ரதி….. எதுக்காக இதை எதுக்கு என்கிட்ட கேட்கணும்.. என்று அவன் கடிந்தால்.. உன்ன விட எனக்கு அனுபவம் ஜாஸ்தி அருண்… ஐ நோ வாட் ஐ அம் டூயிங்… என்று கூறி முடித்து விடுவாள்…
சில நேரங்களில் அவள் டிசைனிங்கில் ஏதாவது மாற்றம் சொன்னாள்… அருணை ஏளனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு… என்னோட டிசைனிங்க குறை சொல்றியா… நீ இங்க இருக்க லோக்கல் காலேஜ்ல படிச்சிட்டு வந்திருக்க…. நா அமெரிக்காவுல படிச்சிட்டு வந்தவ… அதை மறந்துடாத என்று அவனை மட்டம் தட்டுவாள்… அவள் பேச்சைக் கேட்டுக் தன்மானம் சீண்டப்பட்டதில் கடுப்பானவன் கையில் இருக்கும் பேப்பர்களை காற்றில் தூக்கி எறிந்து விட்டு வேகமாய் செல்வான் அருண்.
விரக்தியில் அலுவலகத்தை விட்டு கிளம்பியவன்… நேரே சென்றது பார்-க்கு தான். ரதியின் நடத்தையைப் பற்றி தனக்கு நடக்கும் அவமானத்தை பற்றியும் யோசித்துக் கொண்டே மது அருந்திக் கொண்டு இருந்தான்…
அழகான ஆளுமையான பெண்ணென்று விரும்பி கட்டியவன் தான் அவன்… அவளின் ஆளுமையும் கம்பீரமும் அவனை மிகவும் ஈர்த்தது… இன்று ஏனோ அந்த ஆளுமை தன்னை அடிமைப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது…
எதார்த்தமாக அவனுக்கு போன் பண்ணிய விக்ரம்… அவன் குரல் சரியில்லாமல் இருப்பதை எண்ணி, இருக்கும் இடம் கேட்டு அவனிடம் வந்து சேர்ந்தான்…
என்னடா இந்த நேரத்துல இங்க உக்காந்து இருக்க ஆபீஸ் போகலையா என்றான்…
போகலடா… போக புடிக்கல… ஐ நீட் சம் ரிலாக்சேஷன்…
அவன் முகத்தைப் பார்த்தே கணித்தவன்… ஆபீஸ்ல எதுவும் பிரச்சனையா… என்று கேட்க…
கையில் இருக்கும் மதுவை ஒரு மிடறு விழுங்கியவன்… இல்லை எனும் விதமாய் தலையசைத்தான்….
பின்ன ரதி கூட சண்டை போட்டியா…. என்று விக்ரம் கேட்க…
அவ என்ன மதிக்கவே மாட்டேங்குற டா… நான் சொல்ற ஐடியாவை காதுல கூட வாங்க மாட்டேங்குற… இதுக்கு எதுக்கு நாலு பேருக்கு முன்னாடி என்ன கூப்பிட்டு உட்கார வைத்து டிஸ்கஸ் பண்ணனும்… என்று சலித்துக் கொள்ள…
இதுல என்னடா இருக்கு… என்னோட ஆபீஸ்ல மோஸ்ட் ஆஃப் டெசிஷன் அகல்யா தான் எடுக்குறா… மோஸ்ட்லி அவ எடுக்கிற டெசிஷன் கரெக்டா தான் இருக்கும்… எனக்கும் அது ஹாப்பி தான்… யாரு டெசிஷன் எடுத்தா என்ன பிசினஸ் சக்சஸ் புல்லா ரன் ஆனா சரிதான்… என்று உற்ற நண்பனுக்கு உரிய நேரத்தில் எடுத்துரைத்தான் விக்ரம்..
ம்ச்… இதுவும்… அதுவும்… ஒன்னு இல்ல விக்ரம் என்றான் வெறுமையான முகத்துடன்…
ஹா… ஹா… என்று சிரித்தவன்… ஏன்னா இங்க டெசிஷன் எடுக்கிறது உன்னோட தங்கச்சி அதனால உன்னால அக்சப்ட் பண்ண முடியுது… அந்த பக்கம் டெசிஷன் எடுக்கிறது உன்னோட மனைவி அதனால உன்னால ஏத்துக்க முடியல… என்று விக்ரம் கூறினான்.
பொறுமையாக அவனை பக்கவாட்டாக திரும்பி ஒரு பார்வை பார்த்தவன்… என்னைக்காவது என்னோட தங்கச்சி… உனக்கெல்லாம் முடிவெடுக்கவே தகுதி இல்ல அப்படிங்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்திருக்காளா? உன்ன…
அமைதியாய் அருணை முகத்தை பார்த்தான் விக்ரம்…
என்ன என் பொண்டாட்டி பாக்குறா…. இங்க பிரச்சனையே அது தான்… லோக்கல்ல இருக்க காலேஜ்ல படிச்சிட்டு வந்துட்டு நீ எல்லாம் எனக்கு வந்து அட்வைஸ் சொல்றியா அப்படின்னு என்கிட்ட கேக்குற டா… அவ முன்னாடி எனக்கு பேசவே தகுதி இல்ல அப்படிங்கிற மாதிரி நடந்துக்குறா… நானும் போகப் போக மாறுவா அப்படின்னு நினைச்சேன் பட் சி டிஸ்அப் ஃபைண்ட் மீ… நாங்க ரெண்டு பேருமே அந்த கம்பெனியில் பார்ட்னர் அந்த வகையில் கூட என்னோட டிசிஷனை அவ கன்சிடர் கூட பண்றது இல்ல…. அவ டெசிஷன்தான் ஓகே ஆகணும் அப்படின்னு அட்டமெண்டா இருக்கா… என்னோட ஐடியா எதுலயும் இருக்கக் கூடாதுன்னு அவளுக்கு அப்டி ஒரு ஈகோ….
அருகில் மது வாங்க வந்த மற்றொரு குடிகார ஆடவன்… அருணின் பேச்சை கேட்டு விட்டு உங்களுக்கும் இந்தப் பிரச்சனையா சார்… எனக்கும் என்னோட கேர்ள் ஃபிரண்டுக்கும் கூட இந்த ஈகோ பிரச்சனைதான் சார்… சம்பந்தமில்லாமல் அவன் உள்ளே நுழைந்தான்..
அவன் கிடக்கிறான் குடிகாரன் என்னும் விதமாய் பார்த்துவிட்டு தனது பேச்சை தொடர்ந்தான் அருண்…
தென் ரித்து… என்ற தனது கைபேசியில் இருந்த ரித்துவின் புகைப்படத்தை ஜூம் செய்து அதற்கு முத்தமிட்டான்…அருண்.
உங்க குழந்தையா சார் பாக்க ரொம்ப அழகா இருக்கான்… அவனும் கைகளால் அள்ளி ஒரு முத்தமிட்டு கொண்டான்…
அவன் செயலில் கடுப்பான அருண்..
ஏய் இடியட்… யார்ரா நீ… மனுஷன டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு போடா அந்த பக்கம்… என்று அருண் திட்டியதும்…
ஓகே ஓகே… சார்… சாரி… சாரி… என்று உளறி விட்டு ஒரு இருக்கை விட்டு அடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்…
அந்த ஆடவன் நகர்ந்த பின் தனது பேச்சை தொடர்ந்தான் அருண்…
ரித்துவ பத்தி அவ யோசிக்கிறதே இல்லை…. இதுல யோசிக்க என்ன இருக்கு அப்படிங்கற மாதிரி கேக்குறா… நீயே பாக்குற இல்ல… அவன சரியா தூக்குறது கூட இல்ல டா… என்று இரவு வரை ஏதாவது அருண் புலம்பித் தள்ள… நண்பனின் மனதில் இருக்கும் குறைகள் அனைத்தையும் கொட்டி விடட்டும் என்று பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான் விக்ரம்.
உங்க மனசுல இவ்வளவு கவலையா சார் இதை கேட்கும் போது எனக்கே ரொம்ப கவலையா இருக்கு என்று பக்கத்தில் இருப்பவன் புலம்பி தள்ளினான்…
அதைக் கேட்டு பல்லை கடித்த அருண்… தன் கையில் இருந்த மது பாட்டிலை எடுத்து வாயில் சரித்தான்.
ஏற்கனவே அதில் நிறைய தண்ணீர் ஊற்றி வைத்திருந்தான் விக்ரம் இப்பொழுது அதை வேகமாக அருணிடமிருந்து பறித்தான்…
அருண் அளவு கடந்து குடித்து விடாமல் பார்த்து கொண்டான். தேவைப்படும் இடங்களில் சரியான ஆலோசனை வழங்கினான்.
இதெல்லாம் நம்ம ரெண்டு பேரும் பேசி என்னடா ஆகப் போகுது… இதையெல்லாம் நீ ரதி கிட்ட நேரடியா பேசி புரிய வை அருண்…. என்றான் விக்ரம்.
நீங்க என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாளுங்க.. எப்படினாலும் சுத்தி வளச்சி நம்ம மேல தான் பழிய போடுவாளுக.. என்று போதையில் உளறினான் மூன்றாம் நபர்.
அருண் அதை கவனிக்கும் மனநிலையை தாண்டி விட்டான்.
அவ எங்கடா இதெல்லாம் புரிஞ்சுக்க போற என்று சலித்துக் கொண்டே அருண் திரும்ப… அங்கு ரதி பாரினுள் வந்து கொண்டு இருந்தாள்.. அங்கு அருண் அவளை எதிர்பார்க்கவில்லை.. அருணின் ஒரு பக்கத்தில் விக்ரம் அமர்ந்திருக்க மறு பக்கத்தில் ரதி வந்து அவளுக்கு தேவையான மதுபானத்தை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தாள்… விக்ரம் ஒரு கோக் மட்டும் வாங்கி அதனுடன் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான்
மூவரும் அமைதியாக தங்களுது கையில் இருந்த பானங்களை அருந்திக்கொண்டு இருந்தனர்…
என்ன அருண் புலம்பி தள்ளிட்டியா என்று கேட்டாள் ரதி…. ஏன் அதுல உனக்கு என்ன பிரச்சனை இன்னும் போல் அவனை நிமிர்ந்து அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் மதுவை அருந்தினான் அருண்.
ஒரு பொண்ணு டெசிஷன் எடுத்தா உங்களால ஏன் தாங்கிக்க முடியல… இவ்வளவு அடமண்டா இருக்க… நானும் நீ போகப் போக மாறுவ மெச்சுடாவ அப்படின்னு நினைச்சேன்… பட் யூ டிஸ்அப்பாய்ண்ட் மீ… என்றாள்.
(அருணும் விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் என்னடா நாம பேச வேண்டியது எல்லாம் அவ பேசிகிட்டு இருக்கா என்னும் படியாக )
உன்னோட ஆட்டிட்யூடே எனக்கு ரொம்ப டிஸ்கஸ்டிங்கா இருக்கு… முதல்ல நான் என்ன சொல்றேன்னு காது கொடுத்து கேளு… நான் நம்ம கம்பெனியோட நல்லதுக்கு தான் யோசிச்சு சொல்லுவேன்… சொன்னது நல்ல ஐடியான அத எந்த ஈகோவும் இல்லாமல் அக்செப்ட் பண்ணி பழகு… ரெண்டு பேரும் பார்ட்னரா இருக்குற கம்பெனில ரெண்டு பேருக்குமே டெசிஷன் எடுக்கிற ரைட்ஸ் இருக்கு….
ஆஹான்… பரவால்ல இது கூட இவளுக்கு தெரிஞ்சிருக்கு… நான் கூட மறந்துட்டாளோனு நினைச்சேன்… எனும் படி கேலியாய் முகத்தை வைத்து பார்த்தான் அருண்…
ரதி பேசப்பேச விக்ரமிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை… சிரிப்பு வேற வந்தது.. “உன் மேல தான் பழிய போடுவாங்க” என்று சொன்ன மூன்றாம் நபரை பார்த்து “நீ ஞானி டா” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்…
மது அருந்திக்கொண்டே… பேசு பேசு இன்னும் என்னெல்லாம் பேசணுமோ பேசு…. எனும் படியாக அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் அருண்.
தான் பேச வேண்டிய வார்த்தைகள் அனைத்தையும் அவள் வாயில் இருந்து கேட்க கேட்க…. கோபம்… உச்சி மண்டைக்கு ஏறி நட்டுக் கொண்டு இருந்தது… நல்ல கணவனாய் நடந்து கொள்வது எப்படி என அட்வைஸ் மழையை அள்ளித் தெளித்தாள் ரதி…
ரித்து மேல கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக்க மாட்டேங்குற… அவனுடைய எதிர்காலத்து மேல உனக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்தா நீ இப்படி பண்ண மாட்ட… இன்னும் பல விஷயங்கள் பேசிக் கொண்டே போனாள்…
பின் அவளே… இதெல்லாம் எதுக்காக நான் பொறுத்துகிட்டு போறேன்னு தெரியுமா?…. என்று ரதி கேட்க…
என்ன சொல்லப் போறா…. எனும் விதமாக அருணும் விக்ரமும் அவள் முகத்தை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்…
நான் உன் மேல வச்சிருக்கே லவ்…. என்று சொன்னவுடன்…
குடித்துக் கொண்டிருந்த அருணுக்கு பட்டென்று பொறையறியது…
ஆனா இப்பல்லாம் உன்னையா லவ் பண்னேன் அப்படின்னு நீ என்னை நினைக்க வைக்கிற…. என்னோட லவ்வுக்கு நீ தகுதி இல்லையோ அப்படின்னு எனக்கு தோணுது… உன்னோட குணத்த கொஞ்சமாவது சேஞ்ச் பண்ணிக்கோ பேபி ஸ்டில் ஐ லவ் யூ வெரி மச்… என்று கூறிவிட்டு அருணின் பிடரியை பற்றியவள் இழுத்து அவனுக்கு இதழ் முத்தம் கொடுக்க போக..
மது போதையில் இருந்தவன்… மேலும் அவளின் குறை சொல்லும் பேச்சைக் கேட்டு கோபத்தின் உச்சியில் இருந்தவன்… அவளது முகத்தை உள்ளங்கையால் பிடித்து ஒரு தள்ளு தள்ளி விட்டான்…
அதில் நிலை தடுமாறியவள் கையில் இருந்த மது அவள் மேலே கொட்டியது… கீழே விழுகாமல் மேஜையின் விளிம்பை பிடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்…. அருகில் மூன்றாம் நபரின் சிரிப்பை கண்டதும் மேலும் அவமானமாய் போனது அவளுக்கு…
ஒரு நிமிடம் கண்ணை மூடி அமைதியாக இருந்தவள்…. புஸ்… புஸ்… என்று நெஞ்சம் விடைக்க கோப மூச்சு வாங்கியவள்…. அருணை நிமிர்ந்து பார்க்க… அவன் எந்த சலனமும் இல்லாமல் கையில் இருந்த மதுவை குடித்து கொண்டிருந்தான்…
தன்னிடம் மன்னிப்பு கூட கேட்காமல் தன்னை அலட்சியப்படுத்துபவனை கண்டு தன்மானம் சீண்ட பட்டவள்…
அருணை பார்த்து கொண்டே ஹொவ் டேர் யூ… என்று தரையில் காலை உதைத்து கத்தியவள்… தன் இரு விரல்களால் சொடக்கு போட்டபடியே… தனக்கு அடுத்து மது அருந்திக்கொண்டு இருந்த ஒருவனின் சட்டையைப் பிடித்து நிமிர்த்தி… கேன் வி கிஸ்? என்று கேட்க…
அழகு தேவதை ஒன்று ஆடி ஆஃபரில் வந்து முத்தமிடலாமா என்று கேட்டால் எவனாவது வேண்டாம் என்று கூறுவானா?
உடனே ஓ ஸ்சுயர்…. என்று அவன் தோளை குலுக்கி பெருந்தன்மையாய் அவன் சொல்ல…
நிலைமை தீவிரம் அறிந்து ரதியை தடுத்து நிறுத்துவதற்கு இருக்கை விட்டு எழுந்து ரதியின் அருகில் விக்ரம் வருவதற்குள்…. அந்த ஆடவனின் உதட்டில் தன் உதட்டை அழுத்தமாக பதிக்க போக…
ரதியின் செயலால் தூக்கி வாரி போட்ட அருண்… ஏய்!…. என்று அவளை ஒரு கை கொண்டு வேகமாய் இழுக்க… முத்தம் வைக்காமல் விலகியவள்… அருணை நிமிர்ந்து இதழ் வளைத்து ஏளனமாய் பார்க்க… ஓங்கி கன்னத்தில் வைப்பதற்கு அருண் கையை ஓங்கி இருந்த தருணம் தடுத்து நிறுத்தினாள் ரதி… நான் உன்கிட்ட தான் அருண் கேட்டேன் டீசண்டா… நீதான் என்னை இன்சல்ட் பண்ண… எனக்கு கிடைச்ச இடத்தில நான் எடுத்துக்க போறேன்… இதுல உனக்கு என்ன பிரச்சனை… என்று முகத்திற்கு நேராய் அவள் திமிராய் கேட்க…
இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்றே விக்ரமிற்கு தெரியவில்லை… விக்ரம் சங்கடத்திலும், அதிர்ச்சியிலும் நிற்க…
அருணின் கோபம் ஜெட் வேகத்தில் எகிற.. நொடியில் தவறிய முத்தத்தால் ஏமாற்றமடைந்த அருகில் இருப்பவன்…
எஸ் கிஸ் மீ … என்று… வாயை குவித்து அருகில் வந்து போதையில் உளற… கையில் இருந்த கண்ணாடி கிளாசை அவன் மண்டையோடு சேர்த்து அடித்தான் அருண்…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️