அத்தியாயம் -37

மதுரியா கண்ணை திறந்தப்போ அவ ஒரு ஹாஸ்பிடல் அறையில இருந்தா. கீழே விழுந்தப்போ முதுகு தண்டுலே ஈட்டி இறங்கினா போல ஒரு வலியும் காலே இல்லாம பறக்கற உணர்வும் இப்போ கூட பயத்தை குடுக்கவும் வேகமா படக்-னு எந்திரிச்சு கால்கள் ரெண்டையும் இப்படியும் அப்படியுமா ஆட்டி, மடக்கி பார்த்துக்கிட்டா. அதைப் பார்த்ததும், “கண்ணம்மா… எப்படிடா இருக்கே? என்னாச்சுடா?”-னு பதறிகிட்டே வந்தான் விதுரன். அவன் கூடவே அந்த மெரூன் சர்ட் ஆள். அவனை பார்த்ததும் “நீங்க… நீங்க அங்கே இருந்தவர் தானே?”-னு தடுமாறி இழுத்தா. “ஹலோ சிஸ்டர்… நீங்க அந்த தள்ளு வண்டி வந்துச்சுனு ஒரு லெவல் மேலே ஏறி நின்னீங்க போல.. கால் இடறி கீழே விழுந்துட்டீங்க. அதான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தேன்”-னு அந்த ஆள் அவன் பக்கக் கதையை சொன்னான். மதுரியா மனசுக்குள்ளே “நல்ல வேளை.. அந்த பில்டிங்லே இருந்து வெளியே வர்றதை பார்க்கலே”-னு நினைச்சா. “ஓ.. லாஸ்டா உங்க சர்ட் கலர் தான் நினைப்பிருக்கு. மத்தது எதுவும் நினைப்பில்லே. பை தி வே… ரொம்ப தேங்க்ஸ். விது.. நீங்க எப்படி இங்கே?”-னு கேட்கவும், அவ கை பிடிச்சுப் பக்கத்துலே வந்தான்.

“மது… இவன் தான் என் ஃப்ரெண்ட் அரவிந்த். நீ விழுந்த பில்டிங்லே யாரையோ பார்க்க வந்தப் போது உனக்கு அப்படியாகவும் அட்மிட் பண்ணி உடனே அங்கே இருந்து எனக்கு போன் பண்ணிட்டான். ஆமா.. நீ அங்கே எங்கேடா போனே?”-னு கேட்டான் விதுரன். “நா.. நான் சர்ஜரி.. வேறே ஹாஸ்பிடல்லே முடிச்சு கிளம்ப லேட்டாச்சு… பசி.. அதான் சாப்பிட்டு ஹாஸ்பிடல் போகலாம்-னு வந்திட்டு இருந்தப்போ டயர்ட்லே கிறுகிறு-னு வந்துடுச்சு. அந்த பில்டிங்லே அகல் மாதிரி இருந்தாங்க. அகலா இருந்தா தண்ணி வாங்கலாம்-னு போனேன். அது… அதுதான் நினைப்பு இருக்கு. அப்புறம் கண்ணைத் திறந்தா இந்த ரூம்லே இருக்கேன்”-னு கோர்வையா சொல்லவும், “மது என்னடா?”-னு தோளோட சேர்த்தணைச்சான். “விது.. என்ன இது? விடுங்க.. இது ஹாஸ்பிடல். உங்க ரூம் இல்லே”-னு சொல்லவும் ரெண்டு ஆண்களுமே சிரிச்சாங்க. “என்ன சிரிப்பு? போய் ட்யூட்டி டாக்டரை கேளுங்க. கிளம்பலாம். ஐ டோண்ட் திங்க் எனிதிங் ஈஸ் ராங் வித் மீ.. அப்சர்வேஷன் கூட வேண்டாம்”-னு கெத்தா சொல்லவும் “அதை டாக்டர் சொல்லட்டும் சிஸ்டர்! நீங்க சொல்லக் கூடாது”-னு அரவிந்த் சிரிச்சான். “நீயா பன்னு வாங்காதே டா. அவளே டாக்டர் தான். வாயாடி… கேட்டுட்டு வர்றேன். கிளம்பலாம்”-னு சொல்லிட்டு அரவிந்தையும் கூட்டிட்டு போனான்.

ரூமை விட்டு வெளியே வந்ததும், அரவிந்த், “விதுரன்… ஒரு நிமிஷம்.. இதை நீ எப்படி எடுத்துப்பேன்னு தெரியலே.. ஆனா சொல்றது என் ட்யூட்டி. நான் இன்னிக்கு பீனா கன்ஸ்டிரக்‌ஷன் எம்.டி சாதிக்கை பார்க்கத்தான் போனேன். ஹீ ஈஸ் மை க்ளையண்ட். அப்போ தான் மயங்கினாங்க. அங்கே விக்கியும் இருந்தான். சிஸ்டர் மயங்கி விழறதை பார்த்தான். ஆனா அப்படியே கண்டுக்காம போயிட்டான். உங்களுக்குள்ளே ப்ராப்ளம் இல்லே தானே? நல்ல நட்பு பிரியக் கூடாது-னு நல்ல எண்ணத்துலே சொன்னேன். தப்பா எடுத்துக்காதே”-னு சொல்லிட்டு கிளம்பிட்டான். விதுரனுக்கு மண்டைக்குள்ளே ரெண்டு யோசனை. “விக்கிக்கு மது மேலே என்ன கோபம்? என்ன வெறுப்பு? ஏன் இப்படி நடந்துக்கிறான்? வெறும் பொசஸிவ்னெஸ் மாதிரி தெரியலியே? மதுவுக்கும் கூட வெறுப்போ கோபமோ இல்லையே. அவளுக்கு என்னை தனியா விட்டாங்க-னு மூணு பேர் மேலேயும் தான் கோபம். மதுவுக்கு விக்கி மேலே தனிப்பட்ட கோபம்-னு எதுவும் இல்லை. அப்போ விக்கிக்கு அவ மேலே என்ன குரோதம்? அதோட அவன் “பீனா” எம்.டி கூட என்ன பண்றான்? பிசினஸ்-னு பார்த்தா ரெண்டு பேரும் ஒரே ஸ்டைல் பிசினஸ். காம்பெடிடர்ஸ் ரெண்டு பேரும்.. அப்புறம் என்ன டீலிங்?”-னு மண்டைக்குள்ளே நண்டு ஓடுச்சு.

அவன் எப்படி பணம் கட்டினான், டாக்டர் கிட்ட என்ன பேசினான்னு அவனுக்கே தெரியாது. “விதூ..”-னு மதுரியா உலுக்கவும் தான் “ஹாங்..”-னு கனவுலேயிருந்து முழிச்சான். “என்னடா?”-னு கேட்டான். “சரியா போச்சு. தூக்கமா? போலாமா?-னு கேட்டேன்.. டைம் 4.30.. போயி சாப்பிடணும். பசிக்குது”-னு சிணுங்கலா சொன்னா. “சாரி… சாரி… எதோ யோசனை. வா சாப்பிட்டே வீட்டுக்குப் போகலாம்”-னு சொல்லி கூட்டிட்டு போகும் போதே, சீக்கிரமே விக்கியை பார்த்து இதைப்பத்தி பேசிடணும்னு நினைச்சான். ஆனா அது நடக்கவே இல்லை. நடந்திருந்தா பல விபரீதங்களை அவன் அன்னிக்கே தடுத்திருக்கலாம். ஆனா விதி அவனுக்கு பல பிரச்சினைகளை குடுத்து இந்த விஷயத்தை மறக்க வைச்சுது. சோதனை காலங்கள் ஆரம்பம்.

மதுரியா மயங்கி விழுந்து ரெண்டு மூணு நாள் ஆயிடுச்சு. வீட்டுலே சங்கரி, நீலவேணி சேர்ந்து அவ சாப்பாடுலே பயங்கர கெடுபிடிப் பண்ணிட்டாங்க. அவங்களுக்கும் சரி, மதுரியா வீட்டுலேயும் சரி அவ சாப்பிடாம மயங்கிட்டாங்கறது ஒத்துக்கவே முடியலே. விதுரனும் முடிஞ்ச அன்னிக்கு ஆபீஸ் வந்தா போதும்-னு சொல்லிட்டான். 

மதுரியா ஏற்கனவே பிரபு கிட்ட சொல்லி வைச்சிருந்தா – ஆபீசுக்கு புதுசாவோ இல்லை யாராவது வேலை கேட்டு வந்தா கண்டிப்பா தன் கிட்ட சொல்லணும்-னு. அன்னிக்கு நாள் நல்லா தான் போச்சு. ஒரு 11 மணி வாக்குலே சுவாதி விதுரனோட ஆபீசுக்கு வந்தா. அன்னிக்கு விதுரனுக்கு வேலை அதிகமா இருந்ததால மூணு மணி போல வரச் சொன்னார் பிரபு. அப்படியே அதை மதுரியாகிட்டேயும் சொல்லிட்டார். ஒரு ரெண்டரை மணி போல சுவாதி திரும்ப ஆபீசுக்கு வரவும் வேறே வழியில்லாம விதுரன் ரூமுக்கு அனுப்பி வைச்சார். விதுரனுக்கு சுவாதியை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி கொஞ்சம் பரிதாபம். ஆனா எதையும் வெளியே காட்டிக்கலே. 

“ஹாய் விதுரன்”-னு சொல்லி உரிமையோட பக்கத்துலே போக முயற்சிப் பண்ணா. “ஹாய்… ஹேவ் யுவர் சீட்”-னு ஃபார்மலா சொன்னான். வேறே வழியில்லாம எதிரே இருந்த சீட்லே உட்கார்ந்து, “எப்படி இருக்கீங்க பேபி?”-னு குழைவா கேட்டா சுவாதி. “சுவாதி, உன் கேரக்டர் பத்தி எந்த தப்பு அபிப்ராயத்துக்கும் நான் இது வரைக்கும் வரலே… வர வைச்சுடாதே. தேவையில்லாத நெருக்கத்தை உண்டுப் பண்ண டிரை பண்ணாதே. எனக்கு அல்ரெடி கல்யாணம் ஆயிடுச்சு. ஸோ… பிஹேவ் யுவர்செல்ஃப்”-னு நறுக்குத்தெறிச்ச மாதிரி சொன்னான். “கல்யாணம் ஆயிடுச்சா? எ… என்ன சொல்றீங்க? அப்போ என் கதி?”-னு அழுகுரல்ல கேட்டா சுவாதி. “நான் எப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்-னு சொன்னேன்?”-னு கேட்டான் விதுரன். “அப்போ… என்னை… நீங்க மறந்துட்டீங்களா?”-னு  அவன் கையை பிடிக்கவும், வெடுக்-னு உதறிட்டு, “இப்போ உனக்கு என்ன வேணும்?”-னு எரிச்சலா கேட்டான். 

“ஒரு வேலை வேணும்… உங்க கிட்ட”-னு மையலா பார்க்கவும், “அது என் டிபார்ட்மெண்டாச்சே!”-னு சொல்லிட்டே உள்ளே வந்தா மதுரியா. “ஏய்… நீ எங்கே வந்தே?”-னு ஏக வசனத்துலே கேட்டா சுவாதி. “மைண்ட் யுவர் வர்ட்ஸ்… கன்னா பின்னா-னு பேசினா ஐ வில் த்ரோ யூ அவுட்”-னு சீறினா மதுரியா. “ரிலேக்ஸ் மதும்மா. இங்கே வா”-னு கூட்டிட்டு போய் அவன் சேர்லே உட்கார வைச்சு அதோட கைப் பிடியில் அவன் உட்கார்ந்தான்.

“ம்ம்ம்.. சொல்லுங்க… நீங்க யார்?”-னு எடுப்பா கேட்டா மதுரியா. “ம்ம்ம்.. நான் சுவாதி”-னு அவளுக்கு குறையாம சொன்னா சுவாதி. “ஓ… அப்படியா? நம்ம ஜனாதிபதி பேர் சுவாதியா இப்போ? இல்லே பிரதமர் பேரா அது? விது உங்களுக்கு தெரியுமா?” அப்படீ-னு எகத்தாளமா கேட்டா மதுரியா. விதுரன் வந்த சிரிப்பை உதட்டை சுருட்டி உள்ளே அடக்கினான். “கிண்டலா? நான் அவர் ஃப்ரெண்ட்”-னு உரிமையா சொல்லவும், “ம்ம்ம்… விதுரன் மாதிரி ஆளுங்களை ஃப்ரெண்ட்-னு சொல்லிக்க ஒரு தனி கும்பலே இருக்கு.. என்ன விஷயமா வந்து இருக்கீங்க?”-னு சாதாரணமா கேட்டா மதுரியா. 

“ஒரு வேலை வேணும்”னு எடுப்பா சொன்னா சுவாதி. “என்ன படிச்சு இருக்கீங்க? ரெஸ்யூம் எங்கே? இதுக்கு முன்னாடி எங்கே வர்க் பண்ணீங்க?”-னு சரமாரியா கேட்டா மதுரியா. “விதுரன்.. இவ என்னை ரொம்ப இன்சல்ட் பண்றா”-னு சுவாதி சொல்லவும், கண்ணாடி டம்ளர் பறந்துச்சு. “ஏதோ விதுரன் ஃப்ரெண்ட்-னு ரெஸ்பெக்ட் குடுத்து பேசினா ஆட்டமாடறீங்க? இது ஆபீஸ்.. ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் வெளியிலே. விது, பிரபு அங்கிளுக்கு போன் போட்டு வர சொல்லுங்க. எந்திரி.. வேலை தேடி வர்றவங்க யாரும் எம்.டி ரூமுக்கு வரத் தேவை இல்லே. ஃபர்ஸ்ட்… இங்கே வேலைக்கு சேரணும்னா முதல்லே பழைய நினைப்பு, உரிமை எல்லாம் விட்டுட்டு வாங்க… ஐ அம் ஒன் ஆஃப் தி டெசிஷன் மேக்கர் ஹியர்.. இன்னொரு வாட்டி மரியாதை இல்லாம பேசினா அவ்வளோ தான்”-னு பெண் புலியா சீறவும் ஆடிப் போனா சுவாதி.

அதே நேரம் பிரபு உள்ளே வரவும், “அங்கிள்.. இவங்கக் கிட்டே இருந்து ரெஸ்யூம் வாங்கிக்கோங்க.. ஸீ வாட் யூ கேன் டூ”-னு சொல்லி, கட்டை விரலை கழுத்துலே வைச்சு இழுத்து, ‘முடிச்சிடுங்க’-னு செய்கை பண்ணா. “மிஸ்.சுவாதி இனிமே உங்க வேலை விஷயமா நீங்க பிரபு அங்கிள் கிட்ட பேசுங்க… யூ மே கோ நவ்”-னு அதிகாரமா சொன்னா. சுவாதி பேயறைஞ்சது போல ஆயிட்டா. மதுரியா கிட்ட இவ்வளோ எடுப்பு எதிர்பார்க்கலே. அதோட விதுரனை இப்படி ஒரு பொண்டாட்டி-தாசனாவும் எதிர்பார்க்கலே. வேறே வழியில்லாம வெளியே போனா சுவாதி. பிரபுவும் பின்னாடியே போனார். 

வேக மூச்சை எடுத்து விட்டு சமன்படுத்திக்கற மதுரியாவை தன்னோட சேர்த்து அணைச்சான். அவ உச்சியிலே அழுத்தமா முத்தம் குடுத்தான். கொஞ்ச நேரம் கழிச்சு, “ஃபீலிங் பெட்டர்?”-னு கேட்டான். “ம்ம்..”-னு சொன்னா. “அது.. ப்ளேக்-லிஸ்டிங் கொஞ்சம் அதிகமில்லே? அது…. அவளை ஆட்டி வைத்த சாட்டை நான் தான்… சுவாதி வெறும் பம்பரம் தான்”-னு சொன்னான். “அது பழைய கதை.. இன்னிக்கு வேறொருத்தர் புருஷனை மயக்க வந்தவ தானே? அதோட வேறே சில ரீசனுக்காகவும் நான் இதை செய்து தான் ஆகணும்… நீங்க என்னை நம்பணும்”-னு சொன்னா மதுரியா. “மது… நான் உன்னை எவ்வளோ நம்பறேன்-னு தெரியுமா?”-னு சொல்லிட்டே அவ உதடுகளை சிறைப் பிடிச்சான்.

எவ்வளோ நேரம் நீடிச்சுதோ, பிரபு கதவை தட்டவும் பதறி விலகினாங்க. விதுரனுக்கு தான் தன்னை சுதாரிக்க அதிக நேரம் தேவைப்பட்டுது. தலைமுடியை அழுத்தி கோதிட்டே போய் எதிர்லே உட்கார்ந்தான். அதுக்குள்ளே பிரபுவும் உள்ளே வந்தார். விதுரனுக்கு யாரையும் பார்க்கவே முடியலே. தானா இப்படி ஒரு வேலையை அலுவலகத்துல பண்ணோம்-னு ஆகிப்போச்சு. இந்த சின்ன பொண்ணு நம்மளை இப்படி பித்துப் பிடிச்சு அலைய விடறாளே-னு நினைச்சான். வெளியிலே இருக்கறவங்களுக்கு, ஆபீசுலே, வீட்டுலே கூட மதுரியாவை தவிர மத்த எல்லார்கிட்டெயும் சிம்மமூர்த்தி தான் விதுரன். ஏனோ மதுரியா கிட்ட மட்டும் அந்த பப்பு வேகறதில்லை. பிரபு உள்ளே வந்ததும் அவரைப் பார்த்து அசட்டுத்தனமா சிரிச்சான் விதுரன். 

மதுரியா விதுரனை முறைச்சா. பிரபு சுவாதினால தான் ஏதோ பிரச்சினை-னு நினைச்சார். “ரியாம்மா அந்த பொண்ணை ப்ளேக்-லிஸ்ட் பண்ண அரேஞ்ஜ் பண்ணியாச்சு. அந்த பொண்ணோட ரெஸ்யூம் இதோ. பிபிஏ படிச்சிருக்கு. நம்ம கம்பெனியிலே எந்த ஓபனிங்குக்கும் செட் ஆகுமா-னு தெரியலே”-னு ரெஸ்யூமை அவ முன்னாடி வைச்சார். “சரி அங்கிள் நான் பார்த்துக்கறேன். ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்”-னு சொன்னா மதுரியா. பிரபு கிளம்பாம தயங்கி நிக்கவும், “என்ன அங்கிள்?”-னு கேட்டா மதுரியா. “அது… வந்து… நீங்க ஏன் பண்ணீங்க-னு தெரியுதும்மா.. ஆனா வேறே எங்கேயும் வேலை கிடைக்காம திரும்ப தம்பியைத் தேடி வந்துட்டான்னா?”-னு கேட்டார் பிரபு. “வந்தா என்ன பண்ணுவார்-னு உங்க பாஸைத் தான் கேட்கணும் அங்கிள்”-னு மதுரியா கிண்டலா சொல்லவும், “அங்கிள், என்னை ஏன் கோத்துவிடறீங்க? எனக்கு அந்தப் பொண்ணை திரும்பப் பார்க்கக் கூட வேண்டாம். அது அவளுக்கும் தெரியும். நான் வேறே என்ன செய்யணும்-னு என் பாஸ் எதிர்பார்க்கிறாங்க-னு கேளுங்க அங்கிள்”-னு சிரிப்போட முடிக்கவும், பிரபுவும் சிரிச்சுட்டார். “வெல்… அப்போ நெக்ஸ்ட் டைம் வந்தா நான் டீல் பண்ணிக்கிறேன். அவளை கொஞ்சம் கார்னர் பண்ணி சில விஷயங்கள் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்”-னு சொன்னா மதுரியா. பிரபு அதுக்கு மேலே எதுவும் சொல்லலே. விதுரனும் ஒண்ணும் பேசலே. ஆனா அவளையே கூர்மையா பார்த்தான்.

அந்த பார்வையோட வீர்யம் தாங்காம, “என் முகத்தையே பார்க்காம வேலையை பண்ண சொல்லுங்க அங்கிள். நான் கிளம்பறேன்”-னு எந்திரிச்சா. அவன் விழி வீச்சுனால, அதோட தாக்கத்துனால சுவாதியோட ரெஸ்யூமை அங்கேயே வைச்சுட்டு எந்திரிச்சா. அவ நகர்ந்துப் போனதும் விதுரன் அந்த இடத்தில் உட்காரவும் தான் அவ ரெஸ்யூமை மறந்தது நினைப்பு வந்து டக்-னு திரும்பினா. அவ திரும்பின உடனே அன்னிக்கு அடிப்பட்ட உடனே வந்த மாதிரி நடு முதுகுலே தாள முடியாத பளிச்-னு வலி வந்துச்சு. அந்த வலியோட சேர்த்து கீழ் பாதியிலே ஒரு நிமிஷம் மரத்துப் போன உணர்வு ஆக்கிரமிக்க கால்கள் பலமிழந்து மடங்கி கீழே விழுந்தா மதுரியா “விதூஊஊ..”-னு அலறலோட. “ஹேய்.. மது என்னாச்சு, என்ன டீ?”-னு பதறி ஓடி வந்தான் விதுரன். மதுரியா கீழே விழுந்த அடுத்த கணம் காலை ஆட்டிப் பார்க்கவும் அது ஆடுச்சு. கீழ் பாதி சுரணை இருந்துச்சு. அந்த ஒரு நொடி தனக்கு என்ன நடந்துச்சு-னு அவளுக்குப் புரியலே.

மதுரியா கீழே உட்கார்ந்து பேந்தப் பேந்த முழிச்சா. வலியிலே கண்ணு குளம் கட்டிச்சு. “ரியாம்மா… என்னாச்சு? அடி எதுவும் படலியே?”-னு கேட்டார் பிரபு. “என்னடீ… கேட்டுட்டே இருக்கோம்? பதிலே சொல்ல மாட்டேங்கிறே. என்னாச்சு?”-னு எரிச்சலா கேட்டான் விதுரன். “தெரியலே விது.. திடீர்-னு கால் ஸ்லிப் ஆயிடுச்சு.. எப்படி-னு தெரியலே… கா… கால் வலி”-னு தடுமாறவும் அவனுக்கு எதுவும் புரியலே. “சரி… விடு.. எந்திரி.. அடி ஏதும் படலே தானே?”-னு எழுப்பி விட்டான். “இல்லே… ஆனா எப்படி?”-னு குழம்பவும், “விடு மது.. எதோ நடந்துச்சு.. வா வீட்டுக்கு போகலாம். ஐ வில் டிராப் யூ”-னு சொன்னான் விதுரன். “இல்லை விதுரன்… நோ ப்ராப்ளம்.. ஐ அம் ஓகே.. நீங்க வேலையை பாருங்க”-னு மதுரியா சொன்னா. “பார்த்துப் போ… டேக் கேர்”-னு சொல்லி அனுப்பினான். 

அவ போனதும் “தம்பி! அவங்களுக்கு என்னாச்சு?”-னு அடக்க முடியாம கேட்டார் பிரபு. “தெரியலே அங்கிள். ஏதோ யோசனையிலே இருக்கா எப்போதும்.. குறிப்பா அன்னிக்கு கீழே விழுந்ததிலே இருந்து அப்படி இருக்கா. விவரம் கேட்டா சொல்லலே. ரொம்ப ஸ்டிராங் கேரக்டர் பொண்ணு அங்கிள்.. அதட்டி உருட்டி எல்லாம் கேட்க முடியாது. அதான் அவளே சொல்லட்டும்-னு விட்டுட்டேன்”-னு சொல்லிட்டு வேலையை பார்க்க ஆரம்பிச்சுட்டான். பிரபுவும் போயிட்டார்.

கொஞ்ச நேரத்துலே அந்த ரெஸ்யூமை எடுத்து அசுவாரசியமா பார்த்தவன் கண்ணு அதிர்ச்சியிலே விரிஞ்சுது. “வாட்?”-னு வாயை விட்டே சொல்லிட்டான். “இதைத் தான் மதுவும் விசாரிக்கறாளா? என்ன தான் நடக்குது என்னை சுத்தி?”-னு யோசிச்சு பைத்தியமே பிடிச்சுது விதுரனுக்கு. அப்படி அவன் பார்த்தது, சுவாதியோட வேலை சார்ந்த முன் அனுபவம்.. அதுலே இருந்த கம்பெனி ‘விக்னேஷ் அசோஸியேட்ஸ்’ தான். அது விக்கியோட கம்பெனி. 

ஒரு கட்டத்துல தாங்க முடியாம ப்ரதீப் முன்னாடிப் போய் உட்கார்ந்து எல்லாம் சொன்னான். “எனக்கும் தெரியலே மாம்ஸ்.. ரியா தனியா இல்லே.. ரீனாவும் ஹெல்ப் பண்றா. ஆனா விவரம் சொல்ல மாட்டேங்கறா”-னு சொல்லவும், “அது மதுவே சொன்னாலே ஒழிய வெளியே வராது.. ரீனா எக்ஸேக்ட்லி அவளைப் போலவே.. ஃப்ரெண்ட்ஸ்லே இதுங்க ரெண்டும் ஒரே மாதிரி. மத்த ரெண்டும் கொஞ்சம் ஓட்டை சல்லடை”-னு சொன்னான் விதுரன். “ஒரு வேளை விக்கிப் பத்தி உன்கிட்ட சொன்னா சண்டை வரும்-னு நினைச்சு சொல்லாம இருக்காளா?”-னு இழுத்தான் ப்ரதீப். “இருக்கலாம்… ஆனா அவன் கிட்ட ஏதோத் தப்பு இருக்கு. அது புரியுது.. ஆனா என்ன காரணம்-னு தெரியலே. அதை தெரிஞ்சுக்கிட்டு அவளுக்கு புரிய வைக்கிறேன்”-னு சொன்னான் விதுரன். ஆனா அவனுக்கு தெரியலே, அவனோட சோதனை காலம் இனிமே தான் ஆரம்பம்-னு.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top