அசுரன் 72
இரண்டு நாட்களும் ஆதியிடம் மலர் சரியாக பேசவில்லை முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு தான் சுற்றினாள்… அவள் அருகில் இருக்கும் வரை அவள் தன்னிடம் இப்படி இருப்பதே நல்லது என்று ஆதியும் விட்டு விட்டான்…
மூன்றாம் நாள் அலுவலகம் கிளம்பினான்… அவளை வீட்டில் தனியே விட்டுவிட்டு அவனுக்கு அலுவலகத்தில் எந்த வேலையும் ஓடாது… தன் கண் பார்வையில் வைத்திருக்க எண்ணி, “இன்னைக்கு கண்டிப்பா ஆபீஸ் வரணும் மலர்…. லீவ் போட்டது போதும் நிறைய ஒர்க் இருக்கு” என்று கண்டித்துக் கூறிவிட்டே சென்றான்…
நிமிர்ந்தும் பாராமல் பதில் எதுவும் பேசாமல் சரி சரி என்று தலையை மட்டும் அசைத்தாள் மலர்.
தலைக் கவிழ்ந்திருக்கும் அவளை தான் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான் ஆதி.
தரையை நோக்கியபடி ஆழ்ந்த யோசனைகள் இருந்தாள் பெண்.
நான் பேசாமல் இருப்பது அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதே மலர்க்கு வேதனை அளித்தது…
சோ… என் மேல அவருக்கு எந்த ஃபீலிங்கும் இல்ல… நான் தான் தேவையில்லாம மனசுக்குள்ள ஆசைகளை வளர்த்துக்கிறேன்… அதனால தான் தப்பு தப்பா கனவு வருது…. பாவம் தெரிஞ்ச பொண்ணுன்னு தான் அவரு ஹெல்ப் பண்றார்… இனிமேல் அவரை தொந்தரவு பண்ணக் கூடாது. விலகி இருக்கிறது தான் இரண்டு பேருக்குமே நல்லதுன்னு தோணுது… என்று அவளாகவே மனதுக்குள் ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டு… அலுவலகத்திற்கு கிளம்பினாள் மலர்.
ஸ்கூட்டியில் அலுவலகம் வந்து அடைந்தவள். மே ஐ கம் இன் சார்… என்று உத்தரவு கேட்டு உள்ளே நுழைந்தவள் பூனைக்குட்டி போல் தன்னிடத்தில் போய் பதுக்கி கொண்டாள்… புன்னகையுடன் கூடிய குட்மார்னிங் இல்லை… கண்ணால் அந்த பெயர் பலகையை பார்க்க கூட இல்லை…
ஆதியும் பாவமாய் அவள் முகத்தை பார்த்து வைத்தான்.. வலுக்கட்டாயமாக தன் அருகில் கூப்பிட்டு வேலை கொடுத்தால் எதிரில் தலைக்கவிழ்ந்தபடி நின்று கேட்டுக் கொண்டாள்.. கொடுத்த வேலைகளை செவ்வனே செய்தாள்…. படிக்க சொன்னான் படித்தாள்… அவனுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைத்து விட்டு எல்லா காதலிகளையும் போலவும் காதலனை வெறுப்பு ஏற்றும் அனைத்து யுக்திகளையும் கடைப்பிடித்தாள்…. அனைவரிடமும் சிரித்து பேசினாள் அலுவலக வாட்ச்மேன் இடம் கூட சிரித்து பேசினாள்.. ஆனால் ஆதியை கண்டவுடன் மட்டும் மூஞ்சி மூஞ்சுறு போல் ஆகிவிடும்…
அவனும் ஒரு நாள் விட்டு பார்த்தான் இதே நிலை தொடரவே… புது காதலனுக்கு காதலியை சமாதானப்படுத்தும் வலி தெரியாமல் chatgpt யிடம் ஐடியா கேட்க… அது உங்கள் காதலியை ஷாப்பிங் அழைத்து செல்லவும் பெரும்பாலான பெண்களுக்கு இது மகிழ்ச்சியை தரும் என்று பதில் அளித்தது… அதன் படி அவளை அவுட்டிங் கூட்டி செல்ல முடிவு செய்தான்…
அவளை அழைத்து செல்வது ஒன்னும் பெரிய காரியமில்லை அவன் எங்கே சென்றாலும்… ஏன் என்று கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு அவன் பின்னே செல்ல வேண்டும் அதுதான் அவள் வேலை…
இருவரும் காரில் மால்க்கு வந்து இறங்கினர்..
இங்கே எதுக்கு என்பது போல் அவனை பார்க்க…
எதுவும் சொல்லாமல் கீழே இறங்கி நடந்தான் ஆதி…
ஏதாவது சொல்றாரா பாரு அவரு பாட்டுக்கு போறாரு… இவர் நடக்குற ஸ்பீட்க்கு நம்மளால ஓடவேற முடிய மாட்டேங்குது… என்று முனங்கியபடியே ஒரு கையால் சேலையை பிடித்துக் கொண்டு அவனை பின்தொடர்ந்தாள் மலர்.
அவளை ஒரு டிரஸ் கடைனுள் அழைத்து சென்று… உனக்கு ஏதாவது வாங்கணுமா? என்றான்…
இல்ல சார் நீங்க வாங்குங்க நான் வெளியில வெயிட் பண்றேன்… என்று கூறிவிட்டு அவள் செல்ல போக…
இன்னும் எத்தனை நாள் மூஞ்சிய தூக்கிட்டு இருக்க போற… இப்ப என்கூட பேச போறியா இல்லையா… என்று அவன் உறும…
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க…
இப்ப நான் என்ன பண்ணனும்.. தன் பிடரியை தன் கையால் வருடி கொண்டு… உனக்கு ஒரு ஹக் தானே வேணும்… என்று அவன் தனது இரு கைகளையும் நீட்டி அவளை வா என்று அழைக்க…
இப்பொழுது பிகு பண்ணுவது அவளது முறையை ஆயிற்று… ஆமா இவரு பெரிய மன்மதரு, இவரை கட்டிப்பிடிக்கிறதுக்கு ஏங்குறாங்க… என்று அவள் முணுமுணுத்துவிட்டு… (இல்லையா பின்ன…. என்று மனசாட்சி அவளை கேட்டது அதை ஓரம் தள்ளி விட்டு) அதெல்லாம் ஒன்னும் வேணாம்… என்று மறுத்தாள்…
இப்பொழுது ஏமாற்றம் அடைவது ஆதியின் முறையாகிற்று… கையை ஏமாற்றத்துடன் இறக்கி இடுப்பில் ஊன்றியவன்..
சரி…. அப்ப நான் என்ன தாண்டி பண்ணனும்… என்றான் கடுப்பாய் அவளின் முகத்தை பார்த்து…
என்ன பண்ண சொன்னாலும் பண்ணுவீங்களா என்றாள்..
ஐயோ என்றானது அவனுக்கு..
பண்றேன் வேற வழி… இந்த முகத்தை… ஒரு விரலால் அவள் முகத்தை சுற்றி வட்டமிட்டவன்… இப்படி பார்க்கவும் முடியல ரெண்டு நாள் பேசாம இருக்கவும் முடியல… மண்டைக்குள்ள உக்காந்துகிட்டு குடையிற… என்றான் சலிப்பான முகத்துடன்…
பேசாம இருக்க முடியலையா… வருது வருது… அவருக்குள்ளேயும் ஃபீலிங் வருது… மனதிற்குள் குதூகலமாய் நினைத்தவள்…
மேல் கண்ணால் பார்த்தபடி கைகளை நீட்டி ப்ராமிஸ் என்றாள்…
ம்ம்… என்றான் அழுத்தமாய் பக்கவாட்டில் திரும்பிக்கொண்டே…
டெய்லி ஆபிஸ்க்கு டை கட்டிட்டு வரணும்.. என்றாள்.
புருவத்தை சுருக்கி அதிர்ச்சியாய் திரும்பி அவளின் முகம் பார்த்தான்…
ஆமாம் என்பது போல் கண்களை சிமிட்டினாள்…
பார்டன்… என்றான்…
எஸ்… நீங்க கேட்டது சரிதான் டெய்லி ஆபிஸ்க்கு டை கட்டிட்டு வரணும்… என்னோட கோரிக்கையை நீங்க நிறைவேத்திட்டா நம்ம ரெண்டு பேரும் சமாதானமா போயிடலாம் என்றாள் தோள்களை உயர்த்தி காட்டி பெருந்தன்மையாக…
டை கட்டணுமா.. ஏன்?
தெரியல உங்களுக்கு டை கட்டி பார்க்கணும் போல தோணுச்சு… என்றாள்..
என்கிட்ட டையே கிடையாது…
ஷாப்பிங் தானே வந்திருக்கோம்… இப்ப வாங்கிட்டு போலாம் நானே ப்ரெசென்ட் பண்றேன்… என்று சாதாரணமாக… கூறியபடியே டை இருக்கும் இடத்திற்கு தேடி சென்றாள் மலர்…
அவளையே புரியாமல் பார்த்துக் கொண்டே வந்தான் ஆதி… அவ்வளவுதானா சண்டை முடிஞ்சா… இது தெரிஞ்சிருந்தா ரெண்டு நாளைக்கு முன்னாடியே டை கட்டி காமிச்சி இருப்பேனே… ஏதோ பெருசா கேட்க போறான்னு நினைச்சேன்… என்று நினைத்துக் கொண்டே அவளை பின்தொடர்ந்தான் ஆதி. ஒவ்வொரு இடத்திலும் ஓடி ஆடி டைகளை பார்த்து தேடிக் கொண்டிருந்தாள்..
பார்வையில் பின்னழகையே ரசித்துக் கொண்டே வந்தவன்… அவளின் ஜடையின் நடனத்தை கண்டு..
முன்னழகில் நீயும் சீத
பின்னழகில் ஏறும் போத…
என்று தன் பின்னந்தலையை தடவிக் கொண்டே மெய்மறந்து கள்வன் கள்ளத்தனமாய் பாட…
முன்னாள் சென்றவளுக்கு கேட்டுவிட்டது…
டக் என்று நின்று திரும்பி, பக்கவாட்டில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த அவனை பார்த்து… இப்போ நீங்க பாடுனீங்களா…. என்று கேட்டாள் சந்தேகமாய்…
அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவன்… என்னோட குரல் உனக்கு பாடுற குரல் மாதிரியா இருக்கு என்று கர்ஜிக்க…
அதுவும் சரிதான்… இந்த குரலில் எப்படி பாட முடியும்… திட்ட வேணா செய்யலாம்… ஆனா எனக்கு கேட்டுச்சே…
என்ன கேட்டுச்சு…
அது பின்னாடி… அழகு…னு… என்று யோசித்தவள்.. சுற்றி முற்றி எட்டி பார்க்க வேறு யாரும் அருகில் இல்லை… அவள் பார்க்கும் திசை பக்கம் எல்லாம் அவனும் பார்த்தான்…
கண்டுபிடிச்சிடுவாளோ என்று ஆதி யோசித்துக் கொண்டு இருக்கையில்…
ஒன்னும் இல்ல… ஒருவேளை கனவு ஏதாவது கண்டிருப்பன்… என்று பழியை அவளே ஏற்றுக்கொண்டு… சேலையின் முந்தியை ஒற்றையாய் விரித்து தனது பின்பக்கத்தை மறைத்து முந்தியை இடுப்பில் சொருகி கொண்டாள்…
தன் சந்தோஷத்தை பிடுங்கிக் கொண்ட அதிருப்தியில் ம்ச்.. என்று கடுப்பாய் நெற்றியை தேய்த்துக் கொண்டான் ஆதி…
கடையில் தேடிப் பிடித்து…
ஏழு நாட்களுக்கும் ஏழு டை வாங்கினாள்… ஒவ்வொன்றை வாங்கும் பொழுதும் இது உங்களுக்கு பிடிச்சிருக்கா என்று தலையை ஆட்டி… அவனின் விருப்பத்தை கேட்டு… கேட்டு… வாங்கினாள்…
அவன் எங்கு பொருளைப் பார்த்தான் பொருள் வாங்கும் அழகை அல்லவா ரசித்துக் கொண்டு இருந்தான்…
பில் போடும் இடத்திற்கு சென்றவள் அங்கே விளையாண்டு கொண்டிருந்த குழந்தைகளை பார்த்ததும்… ஒரு நிமிஷம் வந்துடறேன் என்று கூறியபடி… கடைக்குள் வேகமாய் நுழைந்தவள்.. ஒரு பெரிய டெடி பியர் வாங்கிக் கொண்டு வந்தாள்…
இது எதுக்கு என்பது போல் ஆதி பார்க்க..
பொம்மையை முகத்திற்கு அருகே வைத்து.. ரித்து குட்டிக்கு என்றாள் கண்ணை சிமிட்டி…
மெல்லிய புன்னகையுடன் குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்குமோ என்றான்…
ஆமா… ரொம்ப ரொம்ப என்றாள்… தலையை ஒரு பக்கமாய் ஆட்டி…
சரி… விடு பெத்துக்கலாம் என்றான்…
முதலில் வேகமாய் சரி என தலையாட்டியவள்…. பின் ஒரு கணம் ஏதோ புரிவது போல் அமைதியாக இருந்து பின் இப்போ என்ன சொன்னீங்க? என்றாள் அதிர்ச்சியாய்…
சரி… வீட்டுக்கு போய் பேசிக்கலாம்… என்றான் அழுத்தமாய்…
அப்படியா சொன்னிங்க எனக்கு அப்போ வேற மாதிரி கேட்டுச்சு… என்று ஒரு கையை மட்டும் உயர்த்தி அவள் சொல்ல…
ஆனா நான் இதானே சொன்னேன்… ஆமா உனக்கு என்ன கேட்டுச்சு… என்று ஆதி விஷமமாய் வினவ…
அடியே மலரு…. உனக்கு என்னடி ஆச்சு தப்பு தப்பா நினைக்கிற… தப்பு தப்பா கேட்கிற… தப்பு தப்பா பாடுற… என்று கையை உதறி முணுமுணுத்தவள்… பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்து.. உங்களுக்கு ஒன்னு தெரியுமா… எனக்கு புதுசா ஒரு டிஸ்ஆர்டர் வந்து இருக்கு.. என்றாள்.
இது என்ன புதுசா என்பது போல் பார்த்தான் ஆதி…
பைபோலார் டிஸ்ஆர்டர்..
மேலே சொல் என்பது போல் அவன் பார்க்க…
3 (Three) மூவி பார்த்திருக்கீங்களா? அதுல தனுசுக்கு இருக்குமே அந்த டிஸார்டர் தான் அவருக்கு காது பக்கத்துல யாரோ உட்கார்ந்து பேசிக்கிட்டே இருப்பாங்க… அதிகமான ஸ்ட்ரெஸ்ல இருந்தா வருமாமே… நான் ஒரு நாலு நாளா உங்க கூட பேசாம ஸ்ட்ரெஸ் ல இருந்தனா… எனக்கும் வந்துருச்சு போல… என்று முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு அவள் கூற…
ஆதிக்கு சிரிப்பு வந்துவிட்டது.. பாவமாய் இருக்கும் அவள் முகத்தை கட்டிக்கொண்டு சிரிக்க தான் ஆசைவந்தது…
இப்ப என்ன பண்றது டாக்டர் கிட்ட போலாமா… என்று கேட்டாள் அப்பாவியாய்..
எனக்கு சரி பண்ண தெரியும் நான் சரி பண்ணி விடவா.. என்றான் இரு புருவங்களையும் உயர்த்தி விஷமமாய்…
அப்படியா உங்களுக்கு தெரியுமா ? சரி பண்ணி விடுங்க என்றாள்…
இந்த டிஸார்டர் வந்தவுடனே சரி பண்ண முடியாது கொஞ்ச நாள் கழிச்சு தான் பண்ண முடியும் கொஞ்ச நாள் கழிச்சு நானே உனக்கு இத சரி பண்ணி விடுறேன் என்றான்..
நிஜமா… என்று கேட்டவள் அவனது சிறு முறைப்பிற்கு பின் சரி… சரி… என தலையாட்டிக்கொண்டாள் அவளாகவே…
இவ எங்க நாலு நாளா ஸ்ட்ரெஸ்ல இருந்தா… இவளால நம்ம தான் இருந்தோம்… இவ நல்லா ஜாலியா வாட்ச்மேன கூட விடாம அரட்டை அடிச்சிட்டு இருந்தா… இப்ப எப்படி அப்பாவியா மூஞ்ச வச்சி இருக்கா பாரு… என மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ஆதி.
பின் அவள் பெண்கள் பக்கம் உள்ளாடைகள் வாங்க செல்ல.. ஆதி ஆண்கள் பக்கம் சென்றிருந்தான்…
அப்பொழுது பயர்(fire) அலாரம் அடித்தது மாலில்… எமர்ஜென்சி என்று அனௌன்ஸ்மென்ட் வர… அனைவரும் மொத்தமாய் அனைத்து கடைகளை விட்டும் வெளியேறினர்…
ஆதியும் மலரும் வேறு வேறு பக்கமாய் மாட்டிக் கொண்டனர்… மலர் மக்கள் கூட்டத்தால் நகர்த்தி செல்லப்பட்டாள்… கூட்டம் அவளை காலியாக இருந்த ஒரு அறையின் பக்கம் இழுத்துச் செல்லப்பட… ஆதி எந்தப் பக்கம் சென்று இருக்கிறான் என்பதை கழுத்தை மேல் நீட்டி ஆதி சார்…. ஆதி சார்… என்று கத்தியபடியே தேடிக்கொண்டே இருந்தவள் கூட்டம் இழுத்துச் சென்றதை கவனிக்கவில்லை…
மக்கள் கூட்டம் அறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் தவறுதலாக அறையின் கதவு லாக் செய்யப்பட்டது… அதை உள்ளே மாட்டி இருக்கும் மக்கள் யாருக்கும் திறக்க தெரியவில்லை அப்பொழுதுதான் தான் இருக்கும் சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்தாள் மலர்.. அவளை சுற்றி ஆண்கள் கூட்டம்.. பெண்கள் என்று ஒருவர் கூட இல்லை.. அவர்களை விட்டு எப்படியோ விலகி ஒரு மூலைக்கு சென்றவள்… தன்னை பாதுகாத்துக் கொள்ள சுவரின் பக்கம் திரும்பி முகத்தை மூடி உடலை குறுகிய படி நின்றிருந்தாள்… மூச்சு விடவே சிரமமாக இருந்தது.. அந்நிய ஆண்களின் உடல் உரச அருவருப்பாய் இருந்தது… அவள் கோழி குஞ்சு போல் மூளையில் ஒடுங்கி நிற்பதை அறியாமல் மொத்த கூட்டமும் அவளை நெருக்கி தள்ளியது… மயக்கம் கண்ணை கட்ட… மயங்கி விழுந்தால் கண்டிப்பாக உயிர் மிஞ்சாது என்று நினைத்தவள்.. தன் கையை தானே வலிக்கும்படி கிள்ளிகொண்டாள்… சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் பொருட்டு… அறையின் கரண்ட் கட் ஆகி இருள் சூழ்ந்தது…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️