ராவணா 17

மயக்கும் மாலை பொழுதில், மக்கள் கூட்டம் அலைமோத ஈகிள் மாலில் திலீப்பின் கரத்தை தயக்கம் இன்றி பிடித்து கொண்டு கடை கடையாக வேணி சுற்றி கொண்டிருக்க, அவளுக்கு துணையாக வந்த அஜூதியாவோ இரெண்டு கடை ஏறி இறங்கியதுமே சோர்ந்து போனவள், 

“நான் வரல நீங்க மட்டும் போங்க” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அங்கே ஓரமாக போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று கண்களை மூடி அமர்ந்தாள். மறுநொடி அவன் வந்தான்! சிரித்தான்!கண்சிமிட்டினான்!  முறைத்தான்! அவள் திணற திணற வித விதமாய் காட்சி தந்தான், ஆனால் பெண்ணவள் இம்முறை அதிர்ச்சியெல்லாம் அடையவில்லை. ஆனால் அவன் மேல் செல்ல கோபம் மட்டும் கொண்டாள்.

“யார் நீ? உன் பேரு என்ன? எதுவும் தெரியாது? அன்னைக்கு புயலா மறைஞ்சு போன இப்போ என் கண்ணு முன்னாடி, வந்து வந்து மாயாஜாலம் செய்யிற. எங்க இருக்க நீ? உன்னை நான் எப்படி தான் கண்டு புடிக்கிறது? படுத்துற டா நீ” என ராவணன் மீது ஊடல் கொண்டவள் மெல்ல கண்விழிக்க, அப்பொழுது அவளை கடந்து சென்ற அனைவரின் பார்வையும் அவள் மீதே இருக்கவும், முதலில் புரியாது விழித்த அஜூதியா, பின்பு தான் தன் மனதிற்குள் பேசுகிறோம் என்று எண்ணி சத்தமாக பேசியிருக்கின்றோம் என்பது புரிந்து தன்னை தானே திட்டிக்கொண்டு,

“பைத்தியமாகிட்ட அஜூ, அவன் உன்னை பைத்தியமாக்கிட்டான்” என்று மனதிற்குள் புலம்பியவளின் மனதில் மீண்டும் வித விதமாக ராவணனின் நினைவுகளே வளம் வரவும், 

“என்னாச்சு அஜூ உனக்கு?” என தனக்கு தானே கேட்ட அஜூதியாவின் இதழ் லேசாக புன்னகைத்துக்கொண்டது.

அப்பொழுது ஜானகியிடம் இருந்து அழைப்பு வரவும் அட்டென்ட் செய்தாள்.

“என்னமா பண்றீங்க”என்று கேட்ட ஜானகியிடம்,

“மால்ல தான் மா இருக்கோம்” என்றாள் அஜூதியா.

“ம்ம், ரொம்ப நேரம் வெளியில இருக்க வேண்டாம் மா சீக்கிரம் வந்துருங்க”

“சரி மா”

“ரெண்டு பேரையும் தனியா அனுப்ப வேண்டாம்ன்னு தான் நான் உன்னையும் சேர்த்து அனுப்பி வச்சேன். நீ பார்த்து சீக்கிரம் கூட்டிட்டு வந்திடு சரியா” என மீண்டும் சொன்னவரின் குரலில் இருந்த தவிப்பை புரிந்து கொண்டவள்,

“கவலை படாதீங்க நான் பார்த்துகிறேன், ரெண்டு பேரும் கடைக்கு தான் போயிருக்காங்க நீங்க தேவையில்லாம கவலை படாதீங்க ஜானகி மா” என்றவள் அவரிடம் பேசிவிட்டு, இந்திராவிடம் இன்டர்வ்யூவ் பற்றி கேட்பதற்காக அவளுக்கு  அழைப்பு விடுத்தவள் அவளிடம், 

“ஹாஸ்ப்பிட்டள் புடிச்சிருக்கா இந்து” போடப்பட்டிருந்த கண்ணாடி தடுப்பு சுவரில் தன் கரங்களை ஊன்றியபடி கீழே போய்வரும் ஆட்களை வேடிக்கை பார்த்தபடி வினவினாள் .

“ம்ம் ரொம்ப டி, எவ்வளவு பெரிய ஹாஸ்ப்பிட்டல் தெரியுமா?” என இந்து மகிழ்ச்சியுடன் கூற, 

“அப்புறம் சொல்லுங்க நர்ஸ் மேடம் எப்போ ட்யூட்டில ஜாயின் பண்றீங்க” என்ற அஜூதியா எஸ்கலேட்டரில் தன் சகாக்களுடன் மேலே ஏறிவரும் ராவணனை பார்த்து, “இது சரி வராது சீக்கிரம் பைத்தியமாக போற” என வாய்விட்டே கூறிவிட, அதை கேட்ட இந்திரா, “என்னாச்சு டி” என்று கேட்க, 

“ஒன்னும் இல்லை, நீ நேர்ல வா பேசலாம், இப்போ நீ சொல்லு எப்போ ஜாயின் பண்ணனும்” என்றவளின் கண்களுக்கு, எப்பொழுதும் காட்சி தந்த சில வினாடிகளில் மறைந்துவிடும் ராவணன், இன்று வெகு நேரம் தெரியவும், ‘எனக்கு நிஜமாவே பைத்தியம் பிடிச்சிருச்சு போலையே’ என தனக்குள்ளே கூறி, தன் பார்வையை அவனை விட்டு திருப்பியவளின் மனதிற்குள் ஏதோ தோன்றவும் திரும்பி மீண்டும் அவன் இருந்த திசை நோக்கி பார்க்க, வேக எட்டுக்களுடன் அவன் வந்துகொண்டிருந்தான். 

அஜூதியாவுக்கு ஒருகணம் ஒன்றுமே விளங்கவில்லை. 

இது அவன் தானா!? தான் பார்த்து கொண்டிருப்பது நிஜம் தானா? என்கின்ற குழப்பத்தில் தன்னை மறந்து அப்படியே நின்றுவிட, அவள் பார்க்க அவள் கண் முன் அவளை கடந்து சென்றவன்,

“ராவணன் சார்” என யாரோ தன் பெயரை அழைக்கவும் நின்று திரும்பி பார்க்க, நாற்பது வயது மதிக்க தக்க ஒருவர் ராவணனின் முன்பு வந்து, “கான்ஃபரன்ஸ் ரூம் அங்க சார்” என்க, அவர் சொன்ன இடம் நோக்கி அவன் செல்லவும், சுயம் பெற்றவளுக்கு தான் கண்டது கனவல்ல நிஜம் தான் என்பதை உள்வாங்கிக்கொள்ளவே சிலவ் நொடி அவகாசம் தேவைப்பட்டது.

 கனத்த மூச்சை வெளியிட்டவளுக்கு தன்னவனை நேரில் கண்டதில் உள்ளுக்குள் இன்ப படபடப்பு.

இந்த படபடப்பு தனக்கு சரியா? தெரியவில்லை. தன் மனதில் இருக்கும் ஆசை சரியா? தெரியவில்லை. அவன் மீது கொண்ட காதல் சரியா? தெரியவில்லை. ஆனால் இதயம் இறக்கை முளைத்தது போல பறந்துகொண்டிருந்தது. மூளை சரியா தவறா என்ற யோசனையில் இருக்க, கால்களோ தன்னிசையாக அவன் இருக்கும் திசை நோக்கி சென்றது.

 

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top