அசுரன் 75

 அசுரன் 75 

 

ஆதியின் கல்லூரி காலத்தில்…

 

மற்ற எல்லா நேரங்களிலும் ஒன்றாக சுத்தும் விக்ரமும் அருணும்… படிப்பு சம்பந்தமான விஷயங்கள் என்றால் நைசாக கழண்டு கொள்வார்கள்.

லைப்ரரியில் புத்தகம் தேட வேண்டும்… நோட்ஸ் எடுக்க வேண்டும்.. என்று கேள்விப்பட்டாலே அவர்களுக்கு அலர்ஜி…

அப்படித்தான்..

அன்று ஒரு நாள்… ஆதி ரெபரன்ஸ் புக் வாங்குவதற்காக தன்னுடைய சீனியர் வீட்டிற்கு சென்று தனியே திரும்பி வந்து கொண்டு இருக்கும்போது…

 

அவன் இரு சக்கர வாகனத்தின் நடுவே, ஒரு நாய் குறுக்கே வர அவன் சாலையில் சடன்பிரேக் போட ச…ர்..ர்ட்… என்று வண்டி ஸ்கிட் அடித்து விபத்துக்குள்ளானது. ஆதி உருண்டு சென்று வேகமாக பக்கவாட்டில் இருந்த நடைமேடையின் விளிம்பில் கால் முட்டி மோத விழுந்து கிடந்தான்.

 

ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் அடிபடவில்லை ஆனால் உருண்டு விழுந்ததில் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது ஆதிக்கு.

 

அப்பொழுது அவனின் கையைப் பிடித்து தோலை தூக்கி யாரோ அவனை அமர வைத்தனர்.

 

அவர்கள் ஹெல்மட்டை கழட்ட போக வேணாம் என்று தடுத்து விட்டான்.. 

 

ஐ அம் ஓகே… ஐ ஆம் ஓகே… என்றான்.

 

அப்பொழுது ஒரு கை அவன் சட்டையில் இருந்த மண்ணை தட்டி விட்டு கொண்டு இருக்க…

 

அருகே , நாயின் சங்கிலியை பிடித்துக்கொண்டு நின்றிருந்த ஒரு பெரியவர்…

 

ரோட்ல வண்டியாடா ஓட்டுரிங்க… ஏரோப்ளேன் ஓட்ற மாதிரி இவ்வளவு ஸ்பீடா போறீங்க…. அப்புறம் இப்படிதாண்டா ஆக்சிடென்ட் ஆகும் என்று.. ஒட்டு மொத்த இளைஞர்களின் மேலும் உள்ள கோவத்தையும் ஆதியின் மேல் கொட்டிக் கொண்டு இருந்தார்…

 

அப்போது அவன் ஏதோ சொல்ல வாய் எடுக்க அவனை முந்திக் கொண்டு ஒரு தேன்குரல் கேட்டது…

 

சார்… அவரே கீழ விழுந்து காயப்பட்டு உட்கார்ந்து இருக்கிறார் இப்ப வந்து அவர்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க…. உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா… உங்களால உதவ முடிஞ்சா உதவுங்க… இல்லனா இந்த இடத்தை காலி பண்ணுங்க… என்று முகத்தில் அடித்தால் போல் கூறினாள் ஒரு பெண்.

 

ஏம்மா உனக்கு தெரிஞ்சவனா? என்று கேட்டார்…

 

அவர் யாரா இருந்தா உங்களுக்கு என்ன சார்…  உங்க வேலைய போய் பாருங்க என்று கூறிவிட்டு ஆதியின் புறம் திரும்பினாள் அந்த பெண்.

 

அது விஐபிகள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதி அதனால் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை…. கையில் காய்கறி கூடையுடன் கடந்த சில பெண்களும் அவனைப் பார்த்து நாடியில் கை வைத்து பரிதாபப்பட்டு  விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.. 

 

ஆதி தனது கையின் பின்புறம் திருப்பி அதில் ஏற்பட்ட  சிராய்ப்புகளை பார்த்துக் கொண்டிருக்க, அது தீயாய் காந்தியது… அப்போது மெல்லிய தென்றல் ஒன்று அவன் காயத்தின் மேல் பட… கொழுந்து விட்டு எரியும் வெப்ப பாலைவனத்தில் உட்கார்ந்து இருந்தவனுக்கு மெல்லிய சாரல் வீசியது போல…  காயத்தின் எரிச்சல் கொஞ்சம் மட்டுபட்டது … அப்பொழுதான் நிமிர்ந்து பார்த்தான் அவளை…

 

யார் என்று தெரியாத ஒருவள், அவன் காயத்தில் உப்ஃ.. உப்ஃ… என்று இதழ்களை குவித்து மென்மையாக ஊதிக் கொண்டே தன் மென் விரல்களால் காயத்தின் மேலிருந்த மண்ணை தட்டி விட்டு கொண்டு இருந்தாள். அவன் பார்வை , இதழ் வழியே காற்று கொடுத்தே காயத்தை ஆற்றி விடலாமா? என்று முயன்று கொண்டு இருந்தவளின்  இதழ்களிலேயே  நிலைத்து நின்றது.

 

  அளவான சிறிய இளம் ரோஜா நிற இதழ்கள்.. ரோஜா இதழின் மென்மையை தொட்டால் தானே உணர முடியும் ஆனால் இவளின் இதழின் மென்மையை கண்ணாலேயே அவனால் உணர முடிந்தது…. அதனுள் இருந்து வந்த காற்று மெலிதாய் புல்லாங்குழல் இசைப்பது போல… சிறிய மேலுதடு சற்று தடித்த கீழ் உதடு… அவள் ஊதும் போது அவள் கீழ் உதட்டின் மேல் எச்சில் பட்டு தேனுறியது போல மின்னியது அவள் இதழ்கள். 

இதழ் குவித்து  அவள் ஊத எரிய வேண்டிய காயமோ ஜில்லென்று இருந்தது…

 

இளங்காளையின் உடம்பில் வயதிற்கு ஹார்மோன்கள் தாறுமாறாய் சுரக்க ஆரம்பித்தன போலும்.. 

ஆதியின் கண்கள் இப்பொழுதுதான் அவளை முழுதாய் ஆராய ஆரம்பித்தது.

 

இதழின் மேலே குட்டி மூக்கு.

அதன் மேலே மையிட்ட தேன் நிற கண்கள்.. அந்தக் கண்களில் இருந்த துரு துருப்பு அவனை என்னவோ செய்தது..  நீளமான வளைந்த இமை முடிகள் அந்த கண்ணை மூடி மூடி திறக்க பட்டாம்பூச்சி சிறகடிப்பதாய் உணர்ந்தான். அதன் மேலே அடர்ந்த புருவங்கள். அதன் நடுவே குட்டி கருப்பு நிற பொட்டு.

செழுமையான கன்னங்கள்… ஆக மொத்தம்  நல்ல கலையான கோதுமை நிற முகம். மீண்டும் அவள் இதழுக்கே வந்த அவன் கண்கள்.. 

அதைத் தாண்டி கீழே செல்லக்கூடாது என்று மனது நினைத்தாலும்… கண்கள் அதை சட்டை செய்யவில்லை… கழுத்தை ஒட்டி துப்பட்டா அணிந்திருந்தாள்  இப்பொழுதுதான் இவனை தூக்குவதற்காக துப்பட்டாவை மேலே ஏற்றி போட்டு இருக்க வேண்டும்… கழுத்தில் மெல்லிய தங்க செயின் அதில் பூ போன்ற வடிவிலான ஒரு டாலர் தொங்கிக் கொண்டிருந்தது அதற்கு கீழ் கண்கள் செல்ல அவனின் கண்ணியம் இடமளிக்க வில்லை…

 

 

ஹெல்மெட்டிற்குள் மறைந்திருக்கும் ஆதியின் கண்கள் செல்லும் திசை அறியாமல்… அந்தப் பெண் ஆதியின் கையில் இருந்த காயத்தின் மேல் ஒட்டி இருந்த மண் துகள்களை தன் வாட்டர் பாட்டிலில் உள்ள நீரால் கழுவி பின் இதழ் குவித்து ஊதி விட்டு…. சரியா போயிடும் சார்.. கவலைப்படாதீங்க… என்று, தனது கோழிக்குண்டு கண்ணை உருட்டி மேலே அவனை பார்த்து அவள் தலையை ஆட்ட… தனது கைக்குட்டையை எடுத்து காயத்தின் மேல் கட்டிவிட்டாள். 

 

அந்தப் பார்வை.. 

 

ஒரு பார்வையால் உயிரை உருக்கி எடுக்க முடியுமா?… இதோ இவளால் முடிகிறதே… ஆறடி ஆடவன் அவனும் பொம்மை போல் தலையை ஆட்டினான்…

அவள் செய்யும் பாவனையும்… அக்கறையையும் பார்த்து, நினைவு பின்னோக்கி சென்றது,  அவனின் அம்மா சிறுவயதில் சைக்கிளில் அடிபட்டு விழும் பொழுது அவனை தூக்கி காயம் பட்ட இடத்தில் ஊதி விட்டு சரியா போயிடும் கண்ணா… என்று கூறியது சட்டென  ஞாபகத்திற்கு வர கண்கள் கலங்கியது ஆதிக்கு…

 

சார்… சார்…. இப்போ ஓகேவா, என்று கேட்டாள்.

நினைவில் இருந்து திரும்பியவன்,

ஓகே… என்று தனது பெருவிரலை உயர்த்தி காட்டி விட்டு…

உள்ளங்கையில்  இருந்த மண்ணை தட்டி விட்டு எழுந்து கொள்ள போக அப்பொழுதுதான் அவன் முட்டியில் அடித்த அடியின் வீரியம் புரிந்தது.. எழுந்திரிக்க முடியாமல் திரும்ப கீழே அமர்ந்து விட்டான்.

 

ஐயோ சார்….என்ன சார்… எழுந்திருக்க முடியலையா… பலமா அடிபட்டு இருக்கா.. ஹாஸ்பிடல் போலாமா… என்றாள்.

 

இல்ல வேணாம்… ஒரு பைவ் மினிட்ஸ் என்று கூறிவிட்டு நடைமேடையில் ஏறி அமர்ந்தான் ஆதி. தன் காலை நீட்டவே சிரமப்பட்டான்.

 

அதை கவனித்த அந்த பெண்.

தனது கல்லூரி பையில் இருந்த தனது மற்றொரு உடையின் வெண்மை நிற துப்பட்டாவை எடுத்து அதை தண்ணீரில் நன்றாக நனைத்து ஆதியின் கால் முட்டியை சுற்றி கட்டி விட்டாள்.

 

அப்பொழுதுதான் ஆதி கவனித்தான் மெல்லிய நீளமான கைவிரல்கள்.. அதில் நீளமான நகங்கள் வளர்க்கப்பட்டிருந்தது நகப்பூச்சு புசவில்லை பிங்க் நிற நகங்களின் மேல் அதிகமாக வளர்ந்த நகங்கள் வெள்ளை நிறத்தில் ஒரு கிரீடம் போல அவன் கண்ணுக்கு காட்சியளிக்க அந்த கைவிரல்களையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு கையில் வாட்ச் ஒரு கையில் மெல்லிய தங்க வளையல்.

 

துணியை அவன் காலில் கட்டி விட்டு… கையை எடுக்கப் போக அப்பொழுது ஆதி வலிக்கிறது என்று தடுக்க போக அவளுடைய நகம் அவனது மணிக்கட்டில் கிழித்தது.

 

ஸ்.. ஸ்.. என்று ஆதி கூற..

 

சாரி சார்… தெரியாம பட்டுருச்சு என்று அதையும் ஒரு தேய்த்து விட்டு..

சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள்… அவனுடைய துணைக்கு.

 

துணைக்கு அமர்ந்தவளை, இரு கண் துணைக் கொண்டு தனக்குள் நிரப்பி கொள்ள ஆரம்பித்தான் ஆடவன்… கல்லூரியில் பெண்களை பார்க்காதவன் அல்ல… இத்தனைக்கும் அவன் படிக்கும் கல்லூரியில் ஆண் பெண் இருபாலரும் பழகுவதற்கு எந்த தடையும் இல்லை… அருண் விக்ரமுடன் சேர்ந்து பெண்களை சைட் அடிக்கவும் செய்து இருக்கிறான் தான்.  முதல் வாரம் தன்னிடம் காதலை சொன்ன பெண், ஆதி அதை நிராகரிக்க, அடுத்த வாரம் அருண் இடம் காதலை ஏற்க சொல்லி நிற்பாள்.. அதைக் கண்டு மெல்லிய சிரிப்புடன் தலையை ஆட்டிவிட்டு  கடந்து விடுவான். ஆனால் பெண்கள் மீதோ, பெண்களை துரத்தி துரத்தி காதலிப்பதில்லோ பெரிய ஈடுபாடு அவனுக்கு இருந்ததில்லை… ஒரு பெண்ணை இத்தனை நிமிடங்கள் அவன் கூர்ந்து கவனித்ததே இதுதான் முதன்முறை… அப்படி என்ன கண்டானோ அவளிடம்… இதோ தெருவோரம் என்று கூட பார்க்கவில்லையே… 

 

முட்டியைக் குறுக்கி அதன் மேல் தன்னுடைய ஹெல்மெட் அணிந்த தலையை வைத்து பக்கவாட்டில் திருப்பி அவளையே  பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.

 

டார்க் ப்ளூ கலர் சுடிதார் அணிந்திருந்தாள்… நீளமான இடைத் தாண்டிய  தலைமுடி… அவள் நடைமேடையில் அமர்ந்திருக்க அவள் தலை முடி நடைமேடையின் மேல் இருக்கும் புற்களின் மேல் படர்ந்து இருந்தது… தலையில் சிறிது வாடிய மல்லிகை சரம் தொங்கியது… காலில் நேர்த்தியாக நகங்கள் வெட்டப்பட்டு அழகான மென்மையான பாதங்கள்…

 

தன் அன்னையைப் போலவே நீளமான முடி.. சாந்தமான முகம்.. தேன் நிறவிழிகள்.. என ஒவ்வொன்றாக மனதிற்குள் சம்பந்தப்படுத்தி பார்த்துக் கொண்டான்…

 

மரத்தில் இருக்கும் சிட்டு குருவிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே காற்றில் அசைந்து தன் முகத்தில் விழும் முடிக்கற்றைகளை விரல்களால் காதுக்குப் பின்  ஒதுக்கியபடி உட்கார்ந்து இருந்தாள் அவள். 

 

அவளிடம் பேச நினைக்கவில்லை பேச தோன்றவும் இல்லை, தானாக போய் பேசவும் தெரியாது…  பெண்களிடம் கேட்டால் பதில் சொல்லி மட்டும்தான் பழக்கம். அதுவும் பத்து கேள்வி கேட்டால் தான் ஒற்றை பதில் கிடைக்கும்…

 

அடிபட்ட காயத்தின் வலி தெரியவில்லை போலும்… அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் ஆதி… அவனின் தவநிலையை கலைக்கவே போன் ஒலித்தது.. விக்ரம் அழைத்திருந்தான்..

அவனிடம் தனக்கு விபத்து நடந்ததை கூறி இடத்தையும் கூறி அருணனை அழைத்துக் கொண்டு வர சொன்னான். தன்னால் இப்பொழுது பைக்கை ஓட்டி செல்வது நடக்காத காரியம் என்று தெரிந்தது அவனுக்கு…. போன் பேசி வைத்துவிட்டு மீண்டும் தனது பணியை தொடங்கினான்.. அதுதான் அவளை சைட் அடிக்கும் பணி.

 

கீழே மண்ணில் விழுந்த முடியை தனது ஒரு கைகளால் அள்ளி முன் பக்கமாக போட்டுக் கொண்டு,

கன்னத்தில் கை வைத்து குருவிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

தெரிந்து கொண்டான்…. தான் இங்கிருந்து கிளம்பாமல் அவள்  போக மாட்டாள் என்று… “விக்ரம் சீக்கிரமா வந்துடாதடா”…. என்று மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டான் அவனின் இந்த நிலை அவனுக்கே ஆச்சரியம்… 

 

சிறிது நேரத்தில் அவளுக்கு ஒரு போன் வந்தது…

 

சாரி சீனியர்…. இதோ வந்துடுறேன்… இல்ல.. இங்க பக்கத்துல தான் இருக்கேன்… இல்ல ஒரு ஆக்சிடென்ட்..  இல்ல.. இல்ல… இப்ப வந்துருவேன்… என்று போனில்  கூறிக்கொண்டே அவள் எழுந்திருக்க…

 

தூரத்தில் பைக்கில் விக்ரம் வர…. ஆதி உட்கார்ந்த இடத்தில் இருந்தே கைகளை தூக்கி தனது இருப்பிடத்தை உணர்த்தினான்…

 

சரி… சார்.. உங்கள பாக்க ஆள் வந்துட்டாங்க… நீங்க பார்த்து பத்திரமா வீட்டுக்கு போங்க… நான் கிளம்புறேன்… கொஞ்சம் அவசர வேலை… என்று கூறிவிட்டு, அவனது பதிலை எதிர்பார்க்காமல், தனது பையை தூக்கிக் கொண்டு வேகமாக எதிர் திசையில்  நடந்தாள் அவள்.

 

அவசரமாக ஓடும் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி. அவளது முடி அவள் நடைக்கு ஏற்ப அசைந்து ஆடுவது ஆடவன் அவனுக்கு ரசனையை கூட்டியது..

 

பைக்கை நிறுத்தி விட்டு வேகமாக ஆதியின் அருகில் வந்தனர் விக்ரமும் அருணும்…

 

என்னடா மச்சான் ஆச்சு.. என்று விக்ரம் வினவ… 

 

ஆதியின் தோளை பிடித்து அருண் அவனை தூக்கி நிறுத்தினான். 

 

நாய் குறுக்க வந்துடுச்சுடா.. என்றான் ஆதி. 

 

ஆதியின் பார்வை போன திசையை, அருணும்  விக்ரமும்  பார்க்க தூரத்தில் ஒரு பெண் வேகமாக நடந்துகொண்டு இருந்தாள்.

 

என்னடா மச்சான்… யார் அந்த பொண்ணு உனக்கு தெரிஞ்ச பொண்ணா… என்று கேட்டான் விக்ரம்.

 

இல்லடா மச்சான்… அந்த பொண்ணு தான் எனக்கு ஃபர்ஸ்ட் எய்டு பண்ணி  விட்டா… என்றான் ஆதி.

 

சரி… வா… ஹாஸ்பிடல் போகலாம் என்று அவனை அங்கிருந்து தோளை பிடித்து  அழைத்து சென்றனர் விக்ரமும் அருணும்.

 

ஆதி விக்ரமின் பின்னால் உட்கார்ந்து கொள்ள அருண் ஆதியின் பைக்கை எடுத்துக்கொண்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினர்.

 

தனது சைட் அடிக்கும் பணியை சிறிது நேரம் நிறுத்தி வைத்து விட்டு அன்றே அவளிடம் உன் பெயர் என்ன என்று கேட்டிருக்கலாம் ஆதி…. இனி அவளால் அவன் படப்போகும் அவஸ்தை தெரியாமல்… 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top