அசுரன் 76

 

அசுரன் 76 

 

ஆதி அருண் விக்ரம் மூவரும் கடற்கரை கெஸ்ட் ஹவுஸ் செல்ல முடிவெடுத்து, கிளம்பினர்.

 

நண்பர்கள் மூவரும் எப்பொழுதாவது நினைக்கும் பொழுது அல்லது மாதத்திற்கு ஒருமுறை என கடற்கரை வீட்டிற்கு சென்று தாங்களே சமைத்து, முடிந்து மட்டும் குடித்து குளித்து கும்மாளமிட்டு  திரும்புவார்கள்…

 

இதோ இன்று… விக்ரம் அகல்யா.. காதலில் கைக்கூடிய சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக கிளம்பியுள்ளார்கள்…

 

இதோ கடற்கரை மணலில்… மூவரும் மல்லாக்க படுத்து வானத்தை பார்த்தபடி, 

அருணும், ஆதியும் முழு போதையில் இருக்க… விக்ரம் ஒருவனே சற்று நிதானத்தில் இருந்தான். அதற்கு மேல் அவனுடைய உடம்பு தாங்காது… இதற்கு மேல் ஒரு மில்லி உள்ளே சென்றாலும்..   விடியும் வரை வாந்தி தான்… இவன் நிதானத்தில் இருப்பதால்தான் நண்பர்களை அழைத்து சென்று வீட்டினுள் தூங்க வைக்க முடிகிறது…

 

மச்சான் மச்சான்னு… கூப்பிட்டு கடைசில உண்மையாவே மச்சான்… ஆக போறடா மச்சான்… என்றான் அருண் குளறலாக….

 

என் தங்கச்சி கண்ணுல கண்ணீர் வராமல் பார்த்துக்கணும்… அது என்ன…மோ சொல்லு…வாங்க…ளே… உதட்டின் மேல் ஒரு விரலை வைத்து யோசித்தவன் ஆ… அது… அ…ஆனந்த கண்ணீர்… அது மட்டும் தான் நான் பாக்கணும் என்று பாசமலர் டயலாக்கை பாதி பாதியாய் சொல்லி முடித்தான் ஆதி.

 

உண்மையிலே நீங்க இந்த அறிவுரை எல்லாம் உங்க தங்கச்சிக்கு தாண்டா சொல்லணும் அவ தாண்டா என்ன கண் கலங்காம பாத்துக்கணும்…

நம்ம மூணு பேரும் கல்யாணம் ஆனா கூட இதே மாதிரி வந்து சரக்கடிச்சு மட்டையாகணும்டா…

 

டேய் ஆதி… அருண், திவி (அருணின் அப்போதைய காதலி) கூட கமிட் ஆகிட்டான்… ஆனா பொண்ண தான் கண்ணுல காட்ட மாட்றான்… என்று அருணின் தோளை தட்ட…

 

எங்களோட ஃபர்ஸ்ட் இயர் லவ் அனிவர்சாரில இன்ட்ரோ குடுக்கறேண்டா… என்று அருண் கூற… ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஒவ்வொருத்தியா கூட்டு வந்து உங்களுக்கு இன்ட்ரோ பண்ணி சலிச்சு போச்சுடா… 

 

பாருடா… மச்சான் எப்படி வாழ்கிறான் என்று… அருணின் தோளை குலுக்கியவன்.. 

நானும் அகல்யா கூட கமிட் ஆகிட்டேன் … நீ எப்படா கமிட் ஆக போற… என்று விக்ரம் ஆதியை பார்த்து கேட்க… வயசாயிட்டா அப்புறம் பொண்ணு கிடைக்காதுடா..

 

ஏண்டா நல்லவனே… என் தங்கச்சி உனக்கு கட்டிக் கொடுக்கிறாமே டா…

அது மாதிரி உன் தங்கச்சியை எனக்கு கட்டி கொடுக்க மாட்டியா… என்று கேட்க…

 

மூவருக்கும் போதை தலைக்கு ஏறியது…

 

டேய் மச்சான்… அதுக்கு தான் எனக்கு கொடுப்பினை இல்லையேடா… மச்சான்.. எனக்கு தான் தங்கச்சியே இல்லையே என்று விக்ரம் அழுகும் குரலில் கேட்க…

 

அப்ப என்ன் பொண்டாட்டி…. உன் தங்கச்சி இல்லையா டா… என்று ஆதி திரும்ப கேட்க…

 

ஆமா… ஆமா… தங்கச்சி தான்… இரு கையையும் தலையையும் ஒரு சேர ஆட்டினான்… ஆனா உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு தானடா எனக்கு தங்கச்சியே ஆகுது… என்று விக்ரம் கூற…

 

அப்ப பஸ்ட் உனக்கு தங்கச்சி ஆகிட்டா… எனக்கு கட்டிக் கொடுக்க மாட்டியா டா… என்று ஆதி பாவமாய் முகத்தை வைத்து கேட்க … 

 

மச்சான் இவனுக்கு ஓவர் ஆயிடுச்சு போல டா என்னென்னமோ சொல்றான் எனக்கு ஒன்னும் புரியல என்று விக்ரம் அருண்னிடம் புகார் சொல்ல…

 

டேய் மச்சான் கம்முனு இருங்கடா என் திவியை கொஞ்ச விடுங்கடா என்று கூறிக் கொண்டே வானத்தில் இருந்த நிலாவை காட்டி ஒரு முத்தம் கொடுத்தான் அருண்.

 

எங்கடா தெரியுறா…உன்னோட தி..வி..என்று விக்ரம் கேட்க..

 

அங்க பாருடா… நிலாவுல தெரியுறா மச்சான்… என்ன பாத்து கண்ணடிக்கிறா மச்சான்… என்று அருண் கூற 

 

நிலாவை உத்துப் பார்த்த விக்ரமிற்கு அகல்யாவின் முகம் தெரிய…  மச்சான்… எனக்கு அகல்யா தெரியுறாடா.. என்று குதுகளித்தான் விக்ரம்.

 

லூசு பயலுக… ஒளர்றானுங்க… என்று கூறிக் கொண்டே ஆதி நிலவை பார்க்க அவனுக்கும் தெரிந்ததே… அவளின் மதிமுகம்… சிட்டுடுஉ… என்று அழைத்தவன்.

டேய் மச்சான் எனக்கும் தெரியுது டா… என்று ஆதி கண்களை தேய்த்துக் கொண்டே கூற..

 

உனக்கு யாருடா  தெரியறது என்று விக்ரம் சந்தேகமாய் கேட்க..

 

உன் தங்கச்சி டா மச்சான்.. என்று அவன் தோளைத் தட்டினான் ஆதி.

 

டேய் அருண், இவன் எங்கேயோ நல்லா விழுந்துட்டான் டா…

 

ஆமாண்டா ரோட்ல விழுந்துட்டேன்… அவதான் வந்து தூக்கி விட்டா..  கட்டு போட்டா… உ…ப்ஃ… உ…ப்ஃ….ஊதி விட்டாடா மச்சான்…  அதனாலதான் என் புண்ணு கூட சீக்கிரம் ஆறுச்சு…

 

அப்ப டாக்டர் கிட்ட போய் ஊசி போட்டதனால ஆற..லையா… என்று கையை விரித்து கண்ணை உருட்டி விக்ரம் கேட்க…

 

அந்த டாக்டர் உன்னை ஏமாத்திட்டாண்டா… அவ ஊதி விட்டதால் தான் ஆறுச்சு..   நீ அவளை பாக்கலேயே மச்சான்… இவ்ளோ நீளமா முடி வச்சிருக்காடா…கையை நீட்டி அளந்து காட்டினான். 

எங்க அம்மா மாதிரி.. அந்த வார்த்தையை சொல்லும்போது மட்டும் அந்த குரலில் அதீத மென்மை  வந்து சென்றது… அவளுக்கு டெய்லி பூ வாங்கி கொடுப்பதற்கே நான் தனியா ஆபீஸ் ஓபன் பண்ணனும்..  

 

அதப்பத்தி அவ புருஷன் தான்டா கவலைப்படணும் உனக்கு என்னடா கவலை… என விக்ரம் கேட்க..

 

இப்ப நீ என்ன சொன்ன… அப்…ப உன் தங்கச்..சியை எனக்..கு கட்டித் தர மாட்டியா டா… மச்சான்… என்று பாவமாய் முகத்தை வைத்து பழைய பல்லவி ஆதி தொடங்க…

 

உனக்கு தான்… உனக்கு தான்டா கட்டி தருவேன்…  ஒற்றை விரலால் ஆதியின் நெஞ்சை சுட்டி காண்பித்து சொன்னான் விக்ரம்…

 

அப்ப அவ புருஷன் நான் தானடா…

 

ஆமா… ஆமா… என ராகம் போட்டான் விக்ரம்.

 

என்னோட பொண்ணுக்கும் கூட அவளை மாதிரியே நீளமான முடிடா என்று கூற…

 

விக்ரம் அதிர்ச்சியாய் என்ன அதுக்குள்ள பொண்ணு பொறந்திருச்சா என்று விழி விரித்து கேட்க.. 

 

ஆமாண்டா இரண்டாவது பொண்ணு… மொத பையன் ஸ்கூலுக்கு போயிட்டான்…

 

டேய்.. மச்சான்… அதுக்கு முதல்ல கல்யாணம் பண்ணனும் டா..

 

யோசனையுடன்… கல்யாணம் பண்ணனுமா…  அப்போ உன் தங்கச்சியை… எனக்கு கட்டிக் கொடுக்க மாட்டியா டா… மச்சான்… என்று விடாப்பிடியாய் விக்ரமின் சட்டையை பிடித்து ஆதி கேட்க…

 

ஆதியின் டார்ச்சர் பொறுக்காமல் அருகில் இருந்த சரக்கை எடுத்து வாயில் கவுத்திய விக்ரம்…

டேய்… எங்க அம்மா மேல  சத்தியமா… என் தங்கச்சிய உனக்கு தாண்டா  கட்டிக் கொடுப்பேன்.. என்று கூறிவிட்டு ஆதியின் கையை பிடித்து அதில் சத்தியம் செய்து கிள்ளி ஊதி விட்டான் வானத்தைப் பார்த்து…

 

உன்னோட தங்கச்சியை எனக்கு கட்டிக் கொடுத்தேனா… என்னோட பொண்ண உன் பையனுக்கு கட்டி கொடுப்பேன் டா மச்சான் … 

 

சூப்பர் டா மச்சான்… இந்த டீலிங் நல்லா இருக்கு… அப்ப வா இப்பவே தட்டை மாத்திக்கலாம்… என்று கூறிவிட்டு, மிச்சரை எடுத்து சந்தனம் தடவுவது போல் மாறி மாறி இருவரின் கன்னத்திலும் தடவிக் கொண்டு…. சைடு டிஷ் தட்டை இருவரும் மாற்றிக் கொண்டார்கள்… நல்லா இருக்..கீங்களா சம்பந்தி… என்று விக்ரம் கேட்க… நீ..ங்க நல்லா இருக்…கீங்களா சம்மந்தி… என்று ஆதி கேட்க.. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து நலம் விசாரித்துக் கொண்டார்கள்… 

 

இங்கு நடக்கும் நிச்சயதார்த பெருவிழாவை பற்றி தெரியாமல்…

அருண் மட்டும் அங்கு தனியே தனி உலகில் திவியுடன் சஞ்சரித்துக் கொண்டு இருந்தான்…

 

என்னோட மூணாவது பையன் நாலாவது பொண்ண பத்தி… நீங்க ஒண்ணுமே கேக்கலையே சம்பந்தி…

 

ஹக்..  என்று.. விக்கி கொண்டே… உங்ககிட்ட ஒன்னே ஒன்னு தான் கேக்கணும் சம்பந்தி…. உங்களுக்கு இந்த ஆபீஸ் வேலைக்கு எல்லாம் போற எண்ணமே இல்லையா சம்பந்தி…. சொந்தமா ஸ்கூல் ஆரம்பிக்க போறீங்களா சம்மந்தி….

 

அஞ்சாவது புள்ள மாசமா இருக்கிற உன் தங்கச்சி கூட இதே தான் மச்சான் கேட்டா….

 

என்…தங்க…ச்சிக்கு…. அஞ்சா..வது புள்ள… எப்படி…டா மச்..சான்? என்று விக்ரம்  திக்கி திணறி உளர…

 

அப்போ நீ என்னை ஏமாத்த பாக்குறியா… உன் தங்கச்சியை எனக்கு கட்டிக் கொடுக்க மாட்டியா டா… மச்சான்… என்று ஆதி முதலில் இருந்து ஆரம்பிக்க…. அதைக் கேட்க அருகில் விக்ரம் இருந்தால்தானே… அவன் எப்போதோ….ஒரு ஓரத்தில் வாந்தி எடுத்து அங்கேயே மட்டையாகி விட்டான்….

 

அப்பொழுதும் ஆதி விடவில்லையே… அவனின் ஐந்தாவது குழந்தையின் திருமணம் வரையிலும் உளறி விட்டு தான் அமைதியானான்… சரியான அழுத்தக்காரன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வாங்குவதற்குள் எதிரில் இருப்பவர்களுக்கு ஜீவனே போய்விடும்… இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில்… அவன் மனம் திறந்து ஏதாவது உளறினால் தான் உண்டு… 

 

பின் மூவருக்கும் போதையில் கடற்கரையிலேயே உறங்கி விட்டனர்..

 

விடிந்ததும், முதலில் போதை தெளிந்தது ஆதிக்கு தான்… ஆளுக்கு ஒரு ஓரத்தில் உருண்டு கிடந்த நண்பர்களை எழுப்ப….

 

போதையில் கடல் காற்றில் விடிய விடிய படுத்து கிடந்ததால்  மூவருக்கும் தலைவலி பின்னியது…

 

ஒரு லெமன் டீ போட்டு அருந்திவிட்டு சாப்பாட்டை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர் நண்பர்கள்.

 

விக்ரம் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தான்…

 

டேய் மச்சான்… யாருடா அந்த பொண்ணு… என்று ஆதியை பார்த்து  கேட்க…

 

எந்த பொண்ணு!…என்று எதுவும் தெரியாதது போல் கேட்டான் ஆதி. 

 

அதுதான் நீ நேத்து நிலாவுல தெரியுதுன்னு சொன்னியே டா… இவ்வளவு நீளமா முடி இருக்கும்னு கூட சொன்னியேடா…  என்று அவனை போலவே கையினால் அளந்து காட்டினான்…

 

என்னடா ஒளர்ற…  இன்னும் அடிச்ச சரக்கு தெளியலையா… என்று ஆதி கேட்டான்

 

என்னது ஒளர்னா…  டேய் அருண்… நேத்து இவன் ஒரு பொண்ண பத்தி பேசிகிட்டு இருந்தான்லடா என்று அருணை துணைக்கு அழைக்க…

 

என்னடா சொல்ற நம்ம பேசிகிட்டு இருந்தோமா அது எப்ப… என்று அருண் விக்ரமை பார்த்து கேட்க…

 

விக்ரம் அருணை பார்த்து முறைக்க…

 

எனக்கு அதெல்லாம் ஞாபகம் இல்லப்பா..  திவி வந்தா.. கண்ணடிச்சா… கட்டிப்பிடிச்சா.. கிஸ் அடிச்சா… அப்புறம் என்னையும்…. என்று ஏதோ அருண் சொல்ல வர…

 

எப்பா சாமி… காலையிலேயே உன்னோட பலான படத்த இங்க  ஓட்டாதடா… என்று விக்ரம் தலைக்கு மேல் கை எடுத்து கும்பிட்டான்.

 

டேய் ஆதி உனக்கு நிஜமாவே ஞாபகம் இல்லையாடா உன் பொண்ணு அப்புறம் ஒரு பையன் அப்புறம் ஏதோ என் பையனுக்கும் உன் பொண்ணுக்கும் சம்பந்தம் என்று அவன் ஏதோ யோசனையில்… காற்றில் கைகளை அசைத்தபடி  விட்டத்தை பார்த்து  முணுமுணுத்துக் கொண்டிருக்கிற… 

 

ஏண்டா மச்சான்… உனக்கு தான் அளவுக்கு அதிகமா ஒரு மில்லி உள்ள போனாலும் சேராது என்று தெரிஞ்சும் எதுக்குடா மூக்கு முட்டும் படி குடிப்ப… என்று ஆதி அதட்ட…

 

டேய் நீ ஏதோ சொல்ல போய் தான்டா நான் கடுப்புல எடுத்து குடிச்சேன் ஆனா என்ன சொன்னேன்னு தான் மறந்துட்டேன்… என்று நாடியில் ஒரு விரலை வைத்து தட்டியபடி யோசித்துக் கொண்டிருந்தான் தரையை பார்த்து…

 

நீ இப்படியே யோசிச்சுக்கிட்டே இரு… நான் அகி கிட்ட போன் பண்ணி நீ நேத்து பண்ண வேலையை சொல்றேன் என்று கூறிவிட்டு ஆதி தனது போனை எடுத்து அகல்யாவுக்கு டயல் செய்ய முயல…

 

டேய் மச்சான் சும்மா இருடா அடாவடிக்கு தெரிஞ்சா…  அடிதடிய கையில எடுத்துடுவா… என் உடம்பு தாங்காது… நேத்து இங்க வர்றதுக்கே மூணு நாள் கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்கி இருக்கேன் டா… அதுலயும் ஆயிரம் கண்டிஷன் போட்டு தான் அனுப்பி வச்சா… உன்ன கேள்வி கேட்ட கொடுமைக்கு என் வாழ்க்கையில மண்ணள்ளி போட்டுறாத ராசா…  என்று கூறிக் கொண்டே தப்பித்து அவன் அறைக்கு செல்ல முயல…

 

இல்லடா மச்சான்… நீ தான் ஏதோ பொண்ணு, பையன்னு சந்தேகம் கேட்டுக்கிட்டு  இருந்தியா டா…. என்று ஆதி கத்தி கேட்க….

 

நான் ஒரு பொண்ணையும் பத்தி கேட்கல.. நான்தான் ஏதோ போதையில் உளறிட்டேன்… இனிமேல் அந்த பொண்ண பத்தி பேசினா உன் கால்ல கிடக்குற செருப்பை கழட்டி என்ன அடி… 

என்று போகிற போக்கில் கையை அசைத்து சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்து விட்டான் விக்ரம்.

 

அந்த பயம் இருக்கணும் மனசுல என் தங்கச்சி மேல… என்று மனதில் நினைத்துக் கொண்டு…

இவனை சமாளிச்சு அனுப்புறது பெரிய கஷ்டமா போச்சு என்று தனது டீ ஷர்டை ஒரு கையால் இழுத்து விட்டு….. உப்ப்…. என்ற மூச்சுடன்… விழி விரித்து தலையை குலுக்கி  விட்டு… வாசலில் வந்து நிற்கும் உணவு பார்சலை வாங்க ஆதி…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top