அத்தியாயம் 12
ராஜதுரை வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், அவனுக்கு ஆரத்தி எடுக்க வந்தார் மீனாட்சி…
அப்போது, “அப்பா” என்று ஒரு மழலை குரல்…
சட்டென ஆழ்ந்து பார்த்தான்.
மீனாட்சி அருகே நின்ற நீலாவின் கையில் இருந்த மந்தாகினி தான் கையை நீட்டி, அவனை சிரிப்புடன் அழைத்தாள்.
அவனுக்கோ ஆச்சரியம்…
‘அப்பா’ என்று அழைக்கின்றாளே…
சட்டென கையை நீட்டி தூக்கிக் கொண்டே, குழந்தையை முகத்துக்கு நேரே பார்த்தான்…
என்ன உணர்வென்று அவனுக்கே தெரியவில்லை…
தனது குழந்தை முதன் முதலில் பார்க்கின்றான்.
உள்ளுக்குள் தோன்றும் சிலிர்ப்பையும் பரவசத்தையும் தவிர்க்க முடியவில்லை…
அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “மந்தாகினி” என்றான்.
மெல்லிய குரலில்…
குழந்தை பற்களை காட்டி சிரிக்க, அவளை கையில் தூக்கிக் கொண்டே மென் சிரிப்புடன் நின்று இருக்க, மீனாட்சி அவனுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றார்.
அதனை தொடர்ந்து நீலாவோ, அவனிடம் இருந்து குழந்தையை வாங்கியவள், “இன்ஸ்பெக்டர் அம்மாவுக்கு தெரிஞ்சா தாம் தூமுன்னு குதிப்பாங்க, நான் கிளம்புறேன் அண்ணா” என்று ராவணனிடம் சொன்னாள்.
அவனோ, “இன்னுமே அதே திமிரோட தான் இருக்காளா?” என்று கேட்க, ராஜதுரையோ, “நல்ல பொண்ணு டா, ஆனா இந்த அச்சம் மடம் நாணம் எல்லாம் நீ எதிர்பார்க்க முடியாது” என்று சொன்னார்.
ராவணனோ, “பழி வாங்குறதுக்கு இந்த அச்சம் மடம் நாணம் எல்லாம் எனக்கெதுக்கு?” என்று கேட்டான்.
மீனாட்சியோ, “சேர்ந்து வாழுற எண்ணம் இல்லையா ராவணா?” என்று கேட்க, “வாய்ப்பே இல்ல” என்று சொல்லி விட்டு ஜெகனை பார்த்தவன், “இவங்கள விட்டுட்டு வாடா” என்று சொல்ல, அவர்களும் ஜெகனுடன் கிளம்பி விட்டார்கள்.
நிறைய நாட்கள் கழித்து வாய்க்கு ருசியாக மீனாட்சி கையால் சாப்பிட்டான்…
அமிர்தம் போல இருந்தது…
நான்கு வருடங்கள் கழித்து அங்கே வேலை செய்யும் எல்லாரையும் பார்த்து பேசி விட்டு, வீட்டுக்கு கிளம்பி விட்டான்.
கிளம்பும் போதே, வீடு எப்படி இருக்கும்? என்கின்ற யோசனை…
அதே யோசைனையுடன் தான் வீட்டை திறக்க, வீடு நேர்த்தியாக இருந்தது…
ஜெகன் தான் எல்லாமே பராமரித்து இருக்கின்றான் என்று ராவணனுக்கும் புரிய, நண்பனை நினைத்து மெல்லிய புன்னகை…
அப்படியே வந்து கட்டிலில் படுத்தான்…
நிறைய நாட்கள் கழித்து பஞ்சு மெத்தையில் படுகின்றான்.
படுத்ததும் தூக்கம் அவனை தழுவியது…
இதே சமயம், அன்று மாலை வீட்டுக்கு வந்த மோகினியிடம், “அம்மா அப்பாவை பார்த்தேன்” என்று மழலை குரலில் மந்தாகினி சொல்ல, நீலாவோ மனதுக்குள், ‘அடிப்பாவி போட்டு கொடுத்துட்டியே டி’ என்று முணுமுணுத்து விட்டு, “ஹீ ஹீ ஃபோட்டோ ல பார்த்தா” என்றாள்.
மோகினியோ, “நான் போலீஸ் டி, என் கிட்டயே பொய் சொல்றியா?” என்று திட்டி விட்டு, குளிக்க சென்றவளுக்கு பெரிதாக ஆத்திரம் எல்லாம் வரவில்லை…
அவளுக்கே தனது மாற்றம் ஆச்சரியமாக இருந்தது…
குளித்து விட்டு வந்தவளோ, குழந்தையை தூக்கிக் கொண்டே, “இதுவே கடைசியா இருக்கட்டும்” என்று ஒரு சின்ன மிரட்டலுடன் நீலாவை அனுப்பினாள்.
நீலாவுக்கு ஏனோ கடுப்பாக இருந்தது…
குழந்தையின் தந்தைக்கு உரிமை இல்லையா என்கின்ற ஆதங்கம்…
வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அவள் அழைத்து என்னவோ ரிஷிக்கு தான்…
அவனும், “சொல்லுடி” என்க, “இன்னைக்கு உங்க அக்கா என்ன பண்ணுனாங்க தெரியுமா?” என்று ஆரம்பித்து எல்லாமே சொன்னவள், “அவர் தானே அப்பா, அவருக்கு பார்க்க உரிமை இல்லையா?” என்று கேட்டாள்.
அவள் சொல்வதை நிதானமாக கேட்ட ரிஷியோ, “இவ்ளோ சாதாரணமாவா உன்னை மிரட்டுனாங்க?” என்று கேட்க, அவளும், “இது சாதாரணமா?” என்று கேட்டாள்.
“ம்ம், அவங்க உண்மையா மிரட்டி இருந்தா பதறி இருப்ப, பெருசா கோபம் இல்லன்னு நினைக்கிறன், அதான் ரொம்ப கம்மியா மிரட்டி இருக்காங்க” என்றான்.
நீலாவோ கடுப்பாக, “உங்க கிட்ட சொல்ல வந்தது என் தப்பு தான்” என்றாள்.
அவனோ, “அது இருக்கட்டும், அதான் உன் அண்ணா வந்துட்டாரே, எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்?” என்று கேட்க, சட்டென நீலாவுக்கு கன்னங்கள் சிவந்து கொள்ள, “உங்க இஷ்டம்” என்றாள்.
அவனோ மென் சிரிப்புடன், “அம்மா கிட்ட இன்னைக்கே பேசுறேன்” என்று சொல்லி விட்டு வைத்து இருந்தான்…
இப்படியே இரு நாட்கள் கடந்து இருக்கும், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு எமெர்ஜென்சி கால் வர, விரைந்து கிளம்பி இருந்தாள் மோகினி…
அவர்கள் சொன்ன கரும்பு காட்டில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை…
அருகே ஜீப்பை நிறுத்தி விட்டு, இடையில் கையை வைத்தபடி, “இங்க தானே சண்டைன்னு கால் வந்திச்சு முருகன்” என்று பேசிக் கொண்டு இருந்தவள், சட்டென மயங்கி ஒருவனின் மேனியில் சரிந்து இருந்தாள்.
ஆம் அவள் மூக்கை மூடி மயக்க மருந்தை செலுத்தி இருந்தான் ஒருவன்…
அவன் விழிகள் ஒரு கணம் தான் ட்ரைவர் முருகனை பார்க்க, அவனோ, “அப்போ நான் கிளம்புறேன்” என்று அவன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்…
கண்களை மெதுவாக திறந்தாள் மோகினி… அவள் கைகளை அசைக்க முடியவில்லை… மேலே இழுத்து கட்டப்பட்டு இருந்தது…
எல்லாமே மங்கலாக தெரிந்தது…
கண்களை மூடி திறந்து பார்வையை நிலையாக்க முனைந்தாள்.
ஆனால் இப்போதும் தெளிவாக பார்க்க முடியவில்லை…
வட்டம் வட்டமாக புகை தான் தெரிந்தது…
உற்று பார்த்தாள்.
அங்கே சாய்ந்து அமர்ந்து சிகெரெட்டை ஊதி தள்ளிக் கொண்டு இருந்தது வேறு யாருமல்ல ராவணன் தான்.
ஜெயிலில் இருந்து வெளியேறி வந்த பிறகு இன்று தான் பார்க்கின்றாள்.
அவள் விழிகளில் பயம் இல்லை. அதே சமயம் காதலும் இல்லை.
ஒரு வெறுமையான பார்வை வீசியவளை பார்த்துக் கொண்டே எழுந்த ராவணனோ அவளை நெருங்கி நின்று, “செல்லம் எப்படி இருக்க? பார்த்து நாலு வருஷம் ஆச்சு?” என்றான் கிண்டலாக.
அவனை விழிகளுக்கு நேரே பார்த்தவள், “போலீசையே கடத்துற அளவுக்கு தைரியமா ?” என்று கேட்க, “கொல்லவே தைரியம் இருக்கும் போது கடத்த தைரியம் இருக்காதா என்ன ?” என்று கேட்டபடி அருகே இருந்த கத்திரியை எடுத்தான்.
இப்போது அவளுக்கு பயமாக இருந்தது…
குத்தி கொன்று விடுவானோ என்று பயம்.
செய்ய கூடியவன் தானே
தனி ஆள் என்றால் உயிருக்கு கூட பயப்பட
மாட்டாள்.
அவளை நம்பி குழந்தை இருக்கின்றதே .
அவனிடம் பணிந்து போவதை தவிர வேறு வழி
இல்லை..
“எப்படி வேணும்னாலும் பழி வாங்கிக்கோ ஆனா உயிரை மட்டும் விட்டிரு, அப்புறம் மந்தாகினி தனிச்சு போயிடுவா” என்று சொல்ல, “அவ தனிச்சு போக கூடாதுன்னு தான் உன்னை அழைச்சு வந்ததே , அவளுக்கு தம்பியோ தங்கச்சியோ வேணாமா ?” என்று கேட்க அவள் விழிகள் அதிர்ந்து விரிய, அவள் தாடையை இறுக பற்றி அவள் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவன், “அதென்னடி பேர் மந்தாகினி ஹேம மாலினின்னு , பேர் கூடவா ஒழுங்கா வைக்க தெரியாது” என்று கேட்டப்படி அவள் முகத்தில் சிகரெட்டை ஊத, அவளோ கண்களை மூடி திறந்தவள், “அவ என் பொண்ணு என்ன பேர் வேணும்னாலும் வைப்பேன்” என்றாள் அழுத்தமாக.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “அப்பன் நான் தானே, அப்போ கேக்க தான் செய்வன்” என்றபடி ரெண்டெட்டு விலகி நின்று அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், “சும்மா சொல்ல கூடாது செம்ம கட்டடி நீ” என்றான்.
அவனை மோகினி முறைத்து பார்க்க, கத்தரியை தூக்கி அவள் முன்னே காட்டியவன், “இது உன்னை கொல்லன்னு நினைச்சியா?” என்று கேட்டு விட்டு, இல்லை என்று தலையாட்டியவன், அவள் போலீஸ் ஜீன்சை பார்த்துக் கொண்டே, “ஜீன்ஸை கழட்டிடலாம், ஆனா மேல கை கட்டி இருக்குல்ல, அதான் ஷேர்ட்டை வெட்டிடலாம்” என்று சொன்னவன், அவளை நெருங்க, அவள் விழிகளோ அதிர்ந்து விரிந்து கொண்டன…
“கிட்ட வராதே” என்று சீறினாள்.
அவன் கேட்டாள் தானே, அவளுடன் மொத்தமாக மேனி உரச நின்று இருந்தான் ராவணன்… அத்துடன் நிறுத்துவானா? தனது ஷேர்ட்டை கழட்டி அங்கிருந்த மேசையில் போட்டவன், அவள் சீறிய போதிலும் கண்டு கொள்ளாமல், அவள் ஷேர்ட்டை மொத்தமாக வெட்டி எறிந்தவனோ, மெதுவாக தள்ளி நின்று அவளை இமைக்காமல் பார்த்தான்.
அப்படியே பார்த்துக் கொண்டே இதழ் குவித்து ஊதினான்.
அவளும் அவனும் ஒரே நிலையில்.
அவனுக்கு படிக்கட்டு தேகம், அவளுக்கு வளைவு நெளிவுகளுடன் பெண்மையான தேகம்…
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, “நாலு வருஷம் காய்ஞ்சு போய் இருக்கேன்” என்று சொன்னபடி தனது ஜீன்ஸில் கையை வைக்க, “டோன்ட் டு தட்” என்று பெண்ணவள் கத்தியது காற்றில் தான் கரைந்து போனது…