அசுரன் 78

 அசுரன் 78 

 

இதற்கிடையில் ஒரு நாள் ரதி அவனை தனியே சந்தித்து பேச வேண்டும் என்று கூறி இருக்க… தொழில் நிமித்தம் பல பேச்சுவார்த்தைகள் இப்படி தனிப்பட்ட முறையில் நடப்பதுண்டு அதனால் கிளம்பி ஆதியும் சென்றிருந்தான்… அப்பொழுது ரதி தன் மனதில் இருந்த ஆசைகளை ஆதி இடம் சொல்லிக் கொண்டிருக்க… கண்ணாடி கதவின் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் கண்ணில்… அவனின் கனவு பெண் போல் யாரோ தென்பட… ரதியிடம் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி வேகமாய் எழுந்த பொழுது தான்… அவள் மேல் ஜூஸ் கொட்டியது… அவன் எதையும் கவனிக்கும் மன நிலையில் இல்லை… சாலையை விட்டு பார்வையை அகற்றவில்லை அந்தப் பெண் போகும் பாதையை பார்த்துக் கொண்டிருந்தான்… ரதியிடம் மன்னிப்பு கோரி விட்டு வேகமாக நடந்து சாலையைக் கடந்து போய் தேடிப் பார்க்க… அங்கு ஒருத்தி இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை… அந்த இடத்தில் கடந்து சென்ற பேருந்துகளையெல்லாம் தாவி தாவி பார்த்துக் கொண்டிருந்தான்… கடந்து சென்றது அவள்தான் என்று மனம் சொல்லியது… ஆட்டோக்களை மறைத்து உள்ளிருப்பவர்களை பார்த்தான் நான்கு கெட்ட வார்த்தைகளையும் பரிசாக வாங்கிக் கொண்டான்… சுற்றி இருந்த நான்கு சாலைகளிலும் சிறிது தூரம் ஓடிப் போய் தேடிப் பார்த்தான்… அவள் போல் யாரும் கண்ணில் படவில்லை.. இத்தனை நாளுக்கு அப்புறம் இப்பதான் கண்ணுல சிக்கி இருக்கா இந்த ஏரியாவில்… கண்டுபிடிக்கிறேன்… என்று அவன் மனதை தேற்றிக் கொண்டவன் அலுவலகம் கிளம்பி சென்றான்…

 

இந்தப் பக்கம் ரதி அவன் நிலைமை தெரியாமல் அவன் மேல் வன்மத்தை வளர்த்துக் கொண்டாள்…

 

சில நாட்கள் கழித்து  சக்கரவர்த்தியின் அழைப்பை முன்னிட்டு அருணின் வீட்டிற்கு கிளம்பி செல்ல… அங்கு அருணின் திருமண செய்தி காத்திருந்தது…

 

என்ன அங்கிள்… என்ன அவசரமா பாக்கணும்னு வர சொல்லி இருந்தீங்க…

 

இல்ல அதி இப்போ அருண் உயிருக்கு ஆபத்துனு ஜோசியர் சொல்லி இருக்காங்க… ஒரு மாங்கல்ய பலம் உள்ள பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சா.. அவன் உயிருக்கு எதுவும் ஆபத்து வராது அப்படின்னு சொல்லி இருக்காங்க… அதனால நாங்க அவனுக்கு ஒரு பெண் பார்த்து இருக்கோம்…. வீட்ல யாருக்கும் இந்த கல்யாணம் புடிக்கல… ஆனா கட்டாயம் நடத்தியாக வேண்டிய சூழ்நிலை… அதனால நம்ம வீட்டு ஆளுங்க மட்டும் போயி கல்யாணம் நடத்திட்டு வந்துடலாம்… பின்னாடி அருண் ஒத்துழைச்சா ஒரு ரிசப்ஷன் வச்சுக்கலாம்… என்று வீட்டில் இருக்கும் சூழ்நிலையை எளிமையாக விளக்கி முடித்தார் சக்கரவர்த்தி.. 

 

அருண் இத பத்தி என்கிட்ட எதுவும் சொல்லல அங்கிள்.. 

 

அவனுக்கு அந்த பொண்ணையும் புடிக்கல இந்த கல்யாணமும் புடிக்கல ஆதி அதனால சொல்லி இருக்க மாட்டான்…

 

ஆதி அமைதியாக தரையை பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்… அவனைப் பொறுத்த வரையில் இந்த ஜோசியத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை… சொல்லப்போனால் அவர்களின் குடும்பம் இறந்த அன்றிலிருந்து கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் போனது… அவனுக்கு ஏதோ ஆபத்து என்று பரிகாரம் பண்ண கோவிலுக்கு சென்றவர்கள் தான் குடும்பத்துடன் திரும்பி வரவே இல்லை… ஆனால் நண்பனின் உயிர் என்று வரும் பொழுது ஒரு சதவீதம் கூட ரிஸ்க் எடுக்க அவன் விரும்பவில்லை..

இனிமேலும் வாழ்க்கையில் அவனுடன் இருக்கும் யாரையும் அவன் இழக்க விரும்பவில்லை…

 

அடுத்த நாள் அனைவரும் கிளம்பி திருமணத்திற்காக கோவிலுக்கு சென்றனர்… அருண் விக்ரம் ஒரு காரிலும்..   ஆதி ஒரு காரிலும்… மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஒரு காரிலும் சென்றனர்… சிறிது நேரம் காத்திருக்க பெண் விட்டார்  இன்னும் அங்கு வரவில்லை… ருத்ராவிற்கு கோபம் தலைக்கு ஏறியது…

நம்மளே கிளம்பி வந்துட்டோம் இதுகளுக்கு என்ன வர்றதுக்கு… என்று பொருமி தள்ளிக் கொண்டு இருந்தார்…

நம்ம கார்ல வந்தோம் அதனால வந்துட்டோம் அவங்க கிராமத்துல இருந்து வர வேணாமா… கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம்… என்று சக்கரவர்த்தி சமாதானம் மொழிந்தார். அங்கு யார் முகத்திலும் திருமணத்திற்கான எந்த தடயமும் தெரியவில்லை… வேண்டாய் வெறுப்பாய் நின்றிருப்பதை ஆதியும் கவனித்தான்…

 

அந்த சமயத்தில் பெண் தேடும் படலத்திலிருந்து ஒரு முக்கியமான நபரிடம் இருந்து போன் வர ஆர்வமாய் அதை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு பின்புறம் வந்தான் ஆதி…

 

கோவிலுக்கு முன்புறம் ஆட்டோவில் இருந்து இறங்கி கோவிலுக்குள் நுழைந்தாள் மலர்…

 

சிறிது நேரம் போனை பேசிவிட்டு திரும்பி கோவிலுக்குள் நுழைய… அவன் கண்டது… தேன் மலரின் கழுத்தில் வேண்டா வெறுப்பாய்  தாலி கட்டிக் கொண்டிருக்கும் அருணை தான்… முதலில் கண்கள் அவன் நண்பனை தான் பார்த்து… திரும்பி தனது போனை பார்க்க முற்பட அப்பொழுதுதான் ஒன்று அவன் மூளைக்கு உரைத்தது…

மெல்ல தலையை நிமிர்த்தி அருணின் பக்கத்தில் நிற்கும் பெண்ணை பார்க்க… 

 

கடப்பாறையை கொண்டு தலையில் ஓங்கி அடித்தது போல் ஒரு வலி… உண்மையில் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது… உனக்கு யாரைப் பார்த்தாலும் அவளை மாதிரி தெரியும் போல நல்லா பாரு…. என்று தனது பின் தலையை தானே தட்டிக் கொண்டு தன்னை நிதானப்படுத்திவிட்டு மீண்டும் தெளிவாக காண… 

 

ஆம் அவளே தான்… 

 

இத்தனை நாள் அவனை கனவில் ஆண்டவள்… உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மொத்த ரத்தமும் நரம்புகளில் ஊர்ந்து கண்ணுக்கு ஏறியது… நெஞ்சோடு வேகமாக ஏறி இறங்கி மூச்சு வாங்கியது…. கண்கள் கலங்கி சிவந்து… உடைப்பு எடுக்கும் அழுகையை அடக்கியதால்… மூக்கு வழி நீர் ஊற்றியது… கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே… 

இது நிஜம் இல்ல நம்பாத நம்பாத என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு… நடு நடுங்கும் கைகளால் மீண்டும் கண்ணை கசக்கி கொண்டு அவன் பார்க்க… காட்சி மறையவில்லை…

அங்கேயேதான் நின்று இருந்தாள்…

அருணின் மனைவியாய்…

 

ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அவனால்… இதயம் தனது துடிப்பை அதிகரித்து காது அடைத்தது… நிற்க்க கூட திறம் இல்லாமல் கோவில் திட்டில் சரிந்து அமர்ந்தான்… தொண்டை அடைத்து வெடித்து சிதறும் ஒரு கட்டத்தில் இதற்கு மேல் அடக்க முடியாது என சத்தம் இல்லாமல் கதறி கதறி அழுதான் அந்த ஆறடி ஆடவன்… அவன் குனிந்திருக்க தோள்கள் இரண்டும் அழுகையில் குலுங்கியது…  அவளைத்தான் வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்… 

ஏண்டி இப்படி பண்ண… என்று மானசிகமாய் கேட்டபடியே அழுதான். முகம் சிவந்து, கண்ணு.. மூக்கு..  வாய்.. என அனைத்திலிருந்தும் நீர் வடிய முகத்தை மூடி அழுது தீர்த்தான்… கடைசியாய் அவன் எப்பொழுது அழுதான் என்று அவனுக்கே நினைவில்லை… அவனின் மொத்த சாம்ராஜ்யத்தையும் ஒரு குரலில் அடக்குபவன்… மொத்தமாய் நொறுங்கி அழுதான்…  அவள் ஒருவள் தான் உலகம் என்று வாழ்ந்தவன் ஆயிற்றே… ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை இந்த ஏமாற்றத்தை..

 

கூரிய வாள் இதயத்தில் இறங்கியது போல் வலி..  தாங்க முடியாத வலி… இப்பொழுதே உயிர் பிரிந்தால் கூட தேவலாம் என்ற நிலையில்… தன் கையை மடக்கி பின்னால் இருந்த சுவற்றில் ஓங்கி..  ஓங்கி.. குத்திக் கொண்டான்… மீண்டும் அந்த முகத்தை ஒரு முறையாவது பார்த்து விடமாட்டோமா என்று தெருத்தெருவாய் தேடி அலைந்தானே… பேருந்து பேருந்தாய் ஏறி இறங்கினானே… இந்த நிலையில் பார்க்க வா…

 

பக்கவாட்டாக இருந்த அவனை கோவில் பிரகாரத்தை முன் நின்றவர்கள் கவனிக்கவில்லை…. சிறிது நேரத்தில் அழுத முகத்தை இரு பக்க தோளிலும் மாறி மாறி துடைத்துக் கொண்டவன். உடல் வியறுத்து கண்கலங்கி..  மனம் நொந்து..  தவறி விழுந்த பீங்கான் பாத்திரம் போல் சில்லு சில்லாய்  உடைந்து போனான்… கண்ணில் நீர் நிற்பேனா என்றது…ஆடவன் உடைந்து அழுததை பார்த்து அங்கிருந்த கோவில் சிற்பங்களும் உருகி உறைந்தன…

 

அவன் அன்று பார்த்ததுக்கும்.. இன்றைய நாளுக்கும் அவளிடம் 100 வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்…

 

அனைத்தையும் இழந்து விரக்தியுடன் நிற்பது போல் வெறுமையான முகத்துடன் தலையை குனிந்த படி நின்றிருந்தாள் அவள்… அன்று அவளின் கண்ணில் இருந்த ஒளி இன்று காணாமல் போயிருந்தது… அப்பொழுதும் அந்தப் பாவி பயலின் மனம்… ஏன் முகம் இப்படி வாடி போய் இருக்கு… ரொம்ப கஷ்டப்பட்டாலோ…  இது தெரியாம நான்  இவள நெனச்சுக்கிட்டு ரொம்ப சந்தோசமா வாழ்ந்து இருந்திருக்கேன்… 

 

நீ ஏண்டி கஷ்டப்படுற இப்படியே கிளம்பி வா… நம்ம வீட்டுக்கு போயிடலாம்…. இவங்க யாரும் நமக்கு வேணாம்… என்று மனதோடு அவளிடம் பேசிக் கொண்டு இருந்தான்…

 

மற்றொரு மனமோ… இதுவரைக்கும் அவளோட நினைவுகளுடன் வாழ்ந்த.. இனி உனக்கு அதுக்கு கூட வழி இல்லை… ஏற்றுக்கொள் இதுதான் நிதர்சனம்… இனிமேல் அவள் உன் நண்பனின் மனைவி… என்று… மூச்சு திணற திணற உண்மையை முகத்துக்கு நேரே எடுத்துரைத்தது… அவனது மூளைக்கு…

 

அவள் இல்லாமல் வாழ்வதா… அதற்கு வாய்ப்பு இருந்தால் அவன் என்றோ அதை செய்திருப்பானே… முடிந்த அளவு அழுத தீர்த்தவன் பின் தன் முகத்தை அருகில் இருக்கும் குழாயில் கழுவி விட்டு… ஆடையை சரி செய்து கொண்டு… தளர்ந்து நடையுடன் காரினுள் வந்து அடைந்து கொண்டான் அவனின் இந்த முகத்தை யாரும் காண விரும்பவில்லை, கண்களுக்கு கண்ணாடி அணிந்து கொண்டான்… ஒருவேளை அந்த இடத்தில் வேறு யாராவது இருந்தால் தாலியை கழட்டி எறிந்து அவளின் கை பிடித்து கூட்டு வரவும் வாய்ப்புண்டு… இப்பொழுது இதில் நண்பனின் உயிரும் அடங்கியிருக்கிறது… அவனின் செயலால் நண்பனின் உயிருக்கு ஏதாவது ஆனால் என்ன செய்ய…

 

திருமணம் முடிந்த கையோடு அருண் மட்டும் அவனது காரை எடுத்துக் கொண்டு செல்ல மற்றவர்கள் மற்றொரு காரில் ஏறிக்கொள்ள… மலர் ஆதியின் காரில் ஏற்றப்பட்டாள்… பின் சீட்டில் யோசனையுடன் உட்கார்ந்து இருந்தவளின் முகத்தைத் தான் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு வந்தான்… 

 

அவள் முகத்திலேயே தெரிந்தது… இந்த திருமணம் அவள் விருப்பத்துடன் நடக்கவில்லை என்று… 

 

அருண் வீட்டிற்கு சென்றால் நிச்சயமாக அவளுக்கு நரக வாழ்க்கை தான் என்று அவனுக்கு தெரியும்… அவன் தேவதை கஷ்டப்படுவதை மனம் கேட்கவில்லை…

அதனால் தான் “இப்பயும் ஒண்ணும் கெட்டு போகல காரை , பஸ்ஸ்டாண்ட் ல நிறுத்துறேன். இறங்கி எங்கையாவது போய் நிம்மதியா வாழு! இந்த வாழ்க்கை -ல , இனி நீ நரகத்தை தான் பாப்ப.. ஏன்டா கல்யாணம் பண்னோம் னு பீல் பண்ணுவ” என்றான் தடுமாறிய தன் சிங்கக் குரலில்…

 

அவளின் மறுப்பான பதிலை கேட்டு, 

உங்கள மாறி பொண்ணுங்க எல்லாம் ஏன்தான் இப்டி இருக்கீங்களோ! என்று ஒரு விரக்தி பெருமூச்சுடன் உன் பேரென்ன என வினவினான்.. நெடுநாள் ஆசை அவள் பெயரை உச்சரிப்பது..  ஆயிரம் பெயர்களை யோசித்து இருப்பான்…

 

தேன்…மலர்… பொருத்தமான பெயர் என்று நினைத்துக் கொண்டான்…

(ஒருவேளை அவள் பெயர் ராணி மங்கம்மாள் என்று சொல்லி இருந்தாலும்..  அப்பொழுதும் அதை பேரானந்தமாய் ரசித்திருப்பான்…)

 

இத்தனை நாள் மனதால் வாழ்ந்தவளின் பெயரை இன்று தான் தெரிந்து கொண்டான்… இப்படியே காரை கொண்டு போய் லாரி மேல் ஏத்தி விடலாமா? என்று கூட அந்த பாலாய் போன மனதிற்கு தோன்றியது… ஒன்றாய் வாழ முடியாமல் போனால் என்ன இன்றே செத்து விடுவோமே என்று மூளை எக்கு தப்பாய் யோசித்தது… சாகும் அளவுக்கு கோழை இல்லையே அவன்… அவள் நினைவுடன் வாழ பழகியவன்..  அவள் நினைவை துறந்து உயிரற்ற ஜடம் போல் வாழ போகிறான்… பல யோசனைகளுக்கு நடுவே கார் ஓட்டியவன்… இறுதியாய் அவள் முகத்தை கண்ணாடியில் பார்த்து கண்ணுக்குள் நிரப்பினான். கழுத்தில் இருந்த தாலி அவன் மனதை உருத்தியது… ஆழ்ந்த யோசனைக்கு பின் ஒரு முடிவெடுத்திருந்தான்..

 

வீட்டில் வந்து அவளை இறக்கி விட்டவன் அவளுடன் தான் வீட்டின் உள் நுழைந்தான்… எல்லாம் அவன் கனவில் எதிர்பார்த்ததுதான் ஆனால் இந்த சூழ்நிலையில் இல்லை…

 

இனி அவளைப் பற்றி நினைக்காதே என்று மனம் எடுத்துரைக்க தலையில் வலி அதிகமானது… இனி எக்காரணத்தை கொண்டும் அவளை நினைக்க கூடாது… இப்பொழுது இந்த திருமணம் சங்கடத்தில் ஆரம்பித்தாலும் விரைவில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து விடுவர் என்ற நம்பிக்கையில்…

 

இனிமேலும் அவளை நினைப்பதும்,  பார்ப்பதும் நட்புக்கே செய்யும் துரோகமாக கருதினான்…

 

இனிமேலும் தான் இந்த ஊரில் இருப்பது சரிப்பட்டு வராது என்று தெரிந்து வேலை விஷயமாக வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது என்று கூறிவிட்டு தனது உடமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு… ஊரை விட்டு..  நாட்டை விட்டு… கிளம்பினான் ஆதி. திரும்பி இங்கு வரும் எண்ணம் இல்லை அவனுக்கு…  அவள் நினைவுகளுடன் சேர்த்து அனைத்தையும் இங்கேயே விட்டு சென்று விட்டான் தூரமாய்…

உயிர் இல்லாத கூடாய்… 💔

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top