அது ஒரு இரவு வேளை, கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு, அப்பொழுது தான் ராவணன் இந்த தொழிலில் தனக்கென்று பெயர் வாங்கி, உறுதியாக கால்பதித்திருந்தான்.
ராவணனின் திடீர் வளர்ச்சி, ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்த பலரை கீழே தள்ளிவிட்டிருக்க, அவனை எப்படியாவது ஒழித்துவிட்டு அந்த இடத்திற்கு தான் வர வேண்டும் என்று, வெகு நாட்களாக தீவிரமாக அவனுக்கு எதிராக திட்டம் தீட்டியபடி காத்திருந்த ராவணனின் தொழில் சார்ந்த எதிரி விஸ்வநாதன் சரியான சந்தர்ப்பம் அமையவும் தன் திட்டத்தை செயல்படுத்தினான்.
அன்று வேலை விடயமாக சந்துரு உட்பட அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு சென்றிருக்க, ராவணன் மட்டும் தனியாக தான் ஏற்றுக்கொண்ட வேலையை முடிக்க வந்திருக்க, கண்களில் கொலைவெறியுடன் ராவணனை அழிக்க காத்திருந்த விஸ்வநாதனின் செவிக்கு இந்த செய்தி வரவும் திட்டம் தீட்டியவன், ராவணன் வேலை முடித்து திரும்பி வரும் வழியில் தன் ஆட்களுடன் காத்திருந்த விஸ்வநாதன் தன் திட்டத்தை செயல்படுத்தினான்.
விஸ்வநாதனை கண்டதும் இது தனக்காக வெட்டப்பட்ட குழி என்பதை புரிந்து கொண்ட ராவணன், அந்த நிலைமையிலும் நிதானமாக செயல்ப்பட்டவன் அனைவரையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு அசராமல் அடித்து வீழ்த்தினான். ஆனால் நேரம் ராவணனுக்கு எதிராக அமைந்திருக்க, அவன் சண்டையிட்டு கொண்டிருக்கும் பொழுது ஒருவன் வந்து பின்னால் இருந்து இரும்பு ராடால் அவனது பின்மண்டையில் அடிக்கவும் நிலை தடுமாறியவன் கீழே விழுந்துவிட, அதன் பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து அவனை முகம், கை, கால் என உடம்பில் உள்ள அனைத்து இடத்திலும் சரமாறியாக தாக்கனர்.
அவ்வளவு தாக்கப்பட்டும் அவர்களுடன் போராடி உடம்பு முழுவதும் ரெத்தம் வழிய தப்பித்த ராவணன் அவர்கள் கண்ணில் படாமல் ஓடினான். இருந்தும் குருதி அதிகமாக வழியவும் சோர்வடைந்தவன் அவர்கள் தன்னை நெருங்குவது புரிந்து ரயில்வே ஸ்டேஷன் வெளியே இருந்த கார்ப்பிரேஷ்ன் குப்பை தொட்டிக்கு பின்னால் சென்று மூச்சு வாங்க சோர்ந்து அமர்ந்து, சுற்றும் முற்றும் தன் பார்வையை ஓட்டியவன் அப்பொழுது தான் தன்னையே கண்களில் மிரட்சியுடன் பார்த்து கொண்டிருந்த அஜூதியாவை பார்த்தான். தோளில் பையுடன் உடல் வெடவெடக்க நின்றிருந்தாள்.
அந்நேரம் பார்த்து தங்கள் கரங்களில் ஆயுதங்களுடன் அஜூதியாவை நோக்கி வந்த விஸ்வநாதனின் ஆட்கள்,
“ஏய் பொண்ணு, ரெத்த காயத்தோட யாரவது இந்த பக்கமா போறதை பார்த்தியா?” என்று அஜூதியாவிடம் ஆக்ரோஷமாக கேட்டார்கள்.
அப்பொழுது தனிமையும், இரவும் பெண்ணவளை பயங்கரமாக பயமுறுத்த நடுங்கியவள், பேசாமல் காட்டிக்கொடுத்துவிடலாமா என்ற யோசனையுடன் குப்பை தொட்டி பக்கம் தன் பார்வையை சுழற்றியபொழுது அவனை பார்த்தாள். அவனும் பார்த்தான் காப்பற்ற சொல்லி கெஞ்சவெல்லாம் இல்லை. அடையாலமே தெரியாதளவு முகமெல்லாம் ரெத்த கரையாக இருக்க வலியை மட்டும் பல்லை கடித்தபடி சமாளித்து கொண்டிருந்தான். அதை பார்த்ததும் என்ன நினைத்தாளோ,
“ஆமாம், கொஞ்ச தூரம் ஓடினான் அப்போ ஒரு கார் வந்து அவனை கூட்டிட்டு போச்சு” என பயத்தை மறைத்துக்கொண்டு உண்மை போல கூறினாள்.
அதை கேட்டு, “ச்ச” என்று ஒருவன் தாங்கள் வந்த காரியம் முடியாததில் எரிச்சல் பட, மற்றொருவன்,
“எங்க அண்ணன் போயிருக்க போறான் வாங்க புடிச்சிடலாம்” என்று சொல்ல, யாருக்கோ அலைபேசியில் அழைத்தவர்கள் கார் வந்த அடுத்த நொடி அதில் ஏறி புயலென மறைந்தனர்.
அப்பொழுது ஒருகணம் அவளை பார்த்த ராவணன் அவர்கள் சென்ற எதிர் திசை நோக்கி ஓட ஆரம்பித்து சட்டென்று சாலையை கடக்க முயற்சிக்க, அந்த நேரம் வேகமாக வந்த லாரி அவன் மீது மோத தூக்கி எறியப்பட்டான்.
இது அத்தனையும் அஜூதியா பார்க்க நொடி பொழுதில் நடந்திருக்க பெண்ணவளுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருநொடி அப்படியே உரைந்துவிட்டவளின் கண் முன் தன் தாயும், தகப்பனும் இது போல ஆக்சிடெண்டில் ரெத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்து போனது காட்சியாக வந்து போக, கண்களில் இருந்து கண்ணீர் வடிய தன் தாயையும் தந்தையையும் எண்ணிப்பார்த்தவள், அதன் பின்பு எதையுமே யோசிக்கவில்லை, தன்னை ஆஷ்ரமத்திற்கு அழைத்து செல்ல வந்துகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனருக்கு அழைப்பு விடுத்து வேகமாக வருமாறு அழைத்தவள் அவர் வந்ததும் அவரிடம் கெஞ்சி அவரை சம்மதிக்க வைத்து அவரின் உதவியுடன் அவனை ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனை நோக்கி விரைந்தாள்.
“கேஸ் ரொம்ப சீரியஸ் மா, இது போல போலீஸ் கேஸெல்லாம் முன் பணம் கெட்டாம ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ண மாட்டோம்” என்று மருத்துமனையில் கூறிவிட, என்ன செய்வதென்று தெரியாமல் திணறியவள் பின்பு தனக்குள் எழுந்த நெருடலை ஒதுக்கிவிட்டு, தனது கழுத்தில் தன் தாய் தந்தையின் நினைவாய் கிடந்த தங்க சங்கிலியை கழற்றிய அஜூதியா ரிசெப்ஷனில் இருந்த பெண்ணிடம் கொடுக்க, அவளோ பணம் தான் வேண்டும் என்று சொல்லி அதை மறுக்கவும்,
“இந்த செயின் வச்சு நீங்க ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணுங்க, அடுத்த நாள் நான் பணம் கட்டி செயின் வாங்கிக்கிறேன் ப்ளீஸ்” என்று யாரென்று கூட தெரியாத ராவணனுக்காக அந்த பெண்ணிடம் அஜூதியா மிகவும் கெஞ்ச, அஜூதியாவை பார்த்து மிகவும் இறக்கமுற்ற அப்பெண்ணும் சரி என்று கூறினாள்.
அஜூதியாவிடம் ஃபார்முடன் வேகமாக வந்த செவிலிய பெண் நோயாளியின் பெயர் என்ன என்று கேட்டாள்.
செவிலிய பெண் அவனது பெயரை கேட்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கிவள், பேசாமல் யாரென்று தெரியாது என்கின்ற உண்மையை சொல்லிவிடலாமா என யோசித்தவள், பின்பு ஒருவேளை தான் இப்படி கூறினால் ட்ரீட்மெண்ட் செய்ய மாட்டோம் என்று கூறிவிடுவார்களோ என்று பயந்து,
சிறு தயக்கத்திற்கு பிறகு தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமான ராவணனின் பெயரை சொல்ல அதை எழுதி கொண்டார் செவிலியபெண்.
பின்பு அவளது பெயரை கேட்க அஜூதியா என்று அவள் கூறவும் அதையும் எழுதியவர், வீட்டு அட்ரெஸை கேட்க, ஆஷ்ரமத்தின் பெயரை கூற யோசித்து குத்துமதிப்பாக ஒரு விலாசத்தை கூறினாள்.
அஜூதியா கெஞ்சியதை வைத்து இவள் ராவணனின் மனைவி என தவறாக நினைத்த நர்ஸ் ஒப்புதல் வழங்கியவர் என்னும் இடத்தில் மனைவி என்று இவளை கேட்காமலே எழுதிவிட்டு அவளிடம் கையெழுத்து போடும் படி கூற, இவளும் பதற்றத்தில் சரியாக கவனிக்காமல் கையெழுத்து போட்டுக்கொடுத்துவிட, ராவணனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மருத்துவம் ஆரம்பமானது.
அவனுக்கு ரத்தம் அதிகம் போயிருந்ததால் தன் ரத்தம் முதற்கொண்டு கொடுத்து அவனுக்கு உதவிய அஜூதியா, அவன் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டான் என்று தெரிந்த பிறகு அவ்வளவு நிம்மதி அடைந்தாள்.
“இன்று நான் இவனை காப்பாற்றியது போல, அன்று யாராவது என் தாயையும் தந்தையும் காப்பாற்றியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்” என ஆதங்கப்பட்ட அஜூதியா தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு,
“எப்படியோ நாம் வந்த கடமை முடிந்து விட்டது, இனி இவன், இவனது வீட்டினரின் பொறுப்பு, ஏற்கனவே ரௌடிகள் வேறு இவனை தேடி கொண்டிருக்கிறார்கள் இதற்கு மேல் இருந்தால் தேவை இல்லாத பிரச்சனை வரலாம்” என்று முடிவெடுத்து, ரிசெப்ஷனில் இருந்த பெண்ணிடம், வீட்டிற்கு சென்று பணத்தையும், மாற்று உடையையும் எடுத்து கொண்டு வருவதாக கூறியவள் அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் சென்ற சில மணி நேரத்திலே மிக சிரமப்பட்டு கண் திறந்து எழுந்துகொள்ள முயற்சித்த ராவணனிடம் ,
“முழிச்சிடீங்களா சார் ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க, பெயின் இருக்கும் ரெஸ்ட் எடுங்க” என்ற செவிலிய பெண், “உங்க வைஃப் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வர இங்க தான் இருந்தாங்க” என்று சொல்லவும், “வைஃபா” என மனதிற்குள் குழம்பியவன் அவரிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல், “ம்ம்” என்று மட்டும் சொல்ல, “ரொம்ப அழுதுட்டே இருந்தாங்க, நீங்க நல்லா ஆகிட்டிங்கன்னு தெரிஞ்சதும் வீட்டுக்கு போயிட்டு ட்ரெஸ் எடுத்துட்டு வரேன்னு போயிருக்காங்க” என்று அவனுக்கு ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸை சரி செய்தபடி சொல்லவும் சின்ன புன்னகையுடன் தலையை மட்டும் அசைத்தவன், தன் உடமைகளை பற்றி கேட்க, அதை அவர் கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிட்டு சென்றதும் தன் அலைபேசியில் இருந்து உடனே சந்ருவுக்கு தான் தகவல் கொடுத்தான்.
ராவணனிடம் இருந்து தகவல் வந்த அடுத்த நொடி விரைந்து செயல்பட்ட சந்ரு அடுத்த சில மணிநேரத்தில் அவன் முன்னே நின்றிருந்தான்.
“விட கூடாது ராவண் பாய், ஒருத்தனையும் விட கூடாது” என தன் முன் அதீத கோபத்தில் சீறிய சந்ருவை அமைதியாக இருக்கும்படி செய்கை செய்த ராவணன்,
“கண்டிப்பா யாரும் தப்ப போறதில்லை, கொடுத்ததை திருப்பி கொடுக்கலைனா எப்படி? ஆனா அதுக்கு முன்னாடி இங்க இருந்து போகணும், பில்லை செட்டில் பண்ணிடு. அப்புறம் என்னை யாரு அட்மிட் பண்ணினதுனு எனக்கு தெரியணும் சிசிடிவி புட்டேஜ் ரெடி பண்ணு” என்ற ராவணனின் சொல்படி செயலாற்றிய சந்துரு அவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதியும் வீட்டிலே கிடைக்கும் மாறு ஏற்பாடு செய்ய ராவணன் தன் வீட்டிற்கு கிளம்பினான்.
கட்டுபோடப்பட்டிருந்த ராவணனின் விரல்கள் அஜூதியாவின் கழுத்து சங்கிலியை உறுதியாக பிடித்திருக்க, அவனது கூர் விழிகளோ தொலைக்காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்த மருத்துவமனை சிசிசிடிவ் பதிவின் மீது அழுத்தமாக பதிந்திருந்தது.
அப்பொழுது,
“பேரு அஜூதியா தனிய ஷக்தி, என்ஜினீயரிங் செகண்ட் இயர், ரொம்ப புடிச்சது பரதநாட்டியம்” என்று கூறிய சந்துருவை நிமிர்ந்து பார்த்த ராவணன்,
“என்ன டா உளறிட்டு இருக்க?” என்று தன் கணீர் குரலில் அழுத்தமாக கேட்கவும்,
“இதோட நான் பார்க்க ஒரு அஞ்சு தடவையாவது நீங்க இந்த விடிவோவை பார்துடீங்க, அதான் அண்ணியை பத்தி விசாரிக்கலாம்ன்னு” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறிய சந்ருவிடம்,
“டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லை, நீயா எதையும் கிளப்பிவிடாத” என்று ராவணன் கூறினான்.
அதற்கு,”சும்மா சொல்லாதீங்க பாய், ஒன்னும் இல்லாமலா அந்த பொண்ணு உங்க பெயரை கரெக்ட்டா சொல்லிற்கு.”
“டேய் சும்மா அவசரத்துல ஏதாவது சொல்லிருக்கும் அது சரியா இருந்திருக்கு,நீ வேற”
“சரி அது ஓகே, ஆனா நீங்க ஏன் இந்த விடீயோவை பார்த்துட்டே இருக்கீங்க? மனசுக்குள்ள ஒன்னும் இல்லாமலா பார்த்துட்டே இருக்கீங்க, கூச்சப்படாதீங்க பாய், பசங்க கிட்ட சொல்லி அண்ணியோட மொத்த டீட்டையில்ஸையும் எடுத்துடலாம்” எனக் கண்சிமிட்டி கூறிய சந்ருவை தன் பல்லைக்கடித்தபடி பார்த்த ராவணன் அவனைத் தன் அருகில் வருமாறு அழைக்க, அவன் தன் அருகில் வந்து நிற்கவும் தன் கரம் கொண்டு அவனது கரத்தை வலிக்க பிடித்துத் திருகினான்.
ராவணன் பிடித்த பிடியில், “ராவண் பாய் வலிக்குது” என்று அலறிய சந்ருவிடம்,
“டேய் உன் சேட்டையெல்லாம் இன்னையோட நிப்பாட்டிக்க, இந்த பேச்செல்லாம் இனி இருக்க கூடாது பசங்க கிட்ட ஏதும் உளறி வைக்காத அப்புறம் அந்த பொண்ணை பத்தி விசாரிக்கிறதெல்லாம் இதோட நிப்பாட்டிக்க” என்று ராவணன் எச்சரிக்கை விடுக்க, “சரி பையா நிப்பாட்டிக்கிறேன், வலிக்குது” என்று ராவணன் கூறிய அனைத்திற்கும் தலையாட்டிய சந்ரு வலியில் முகத்தை சுருக்கவும், அவனை ஒருமுறை பார்த்துவிட்டுத் தன் கரத்தை விடுவித்த ராவணன் அன்றோடு அஜூதியாவை பற்றி நினைப்பதை விட்டுவிட, சந்ருவும் ராவணனின் சொல்படி அமைதியாகிவிட்டான்.