அசுரன் 80

அசுரன் 80 

 

 

 

போகப் போக அகல்யாவின் உடல் நிலையும் மனநிலையும் மோசமாகி கொண்டு சென்றது… பெரிதாய் எதிலும் பற்று இல்லாதது போல் ஒரு மனநிலைக்கு வந்திருந்தாள்..

 

தொழில் கூட அவளுடைய கவனம் குறைந்து இருந்தது…

என்ன சம்பாரிச்சி யாருக்கு பிரயோஜனம் குழந்தையா குட்டியா… எங்கோ கேட்ட குரல்..

 

சொல்லடி வாங்கி வாங்கி உடலும் மனமும் மரத்துப் போனது போல் ஒரு உணர்வு… வாழ்க்கையின் மீது இருந்த நாட்டத்தை அது குறைத்து விட்டது… அதுவே அவளுடைய மன அழுத்தத்திற்கு காரணமாக அமைந்தது… விக்ரமிடம் கூட சரியாக பேசுவதில்லை… காதல் வாழ்க்கையிலும் பெரிதாக நாட்டமில்லை… 

 

ரித்து குட்டியிடம் கூட அளவாக தான் நேரம் செலவழிப்பாள் உள்ளே அடங்கி இருக்கும் காயத்தை மெல்ல மெல்ல கீறுவதைப் போல் ஒரு வலி… 

 

அதிகம் ஊர் சுற்ற வேண்டும் என்று எண்ணுபவள் அறையிலேயே தஞ்சமடைந்தால்… 

 

ஏம்மா இப்படி இருக்க…  என்று விரக்தியாய் கேட்பவனிடம்… எப்படி இருக்கேன் நல்லாத்தான் இருக்கேன் உன் கண்ணுக்கு நான் நோயாளி மாதிரி தெரிவேன் போல…

இப்படி கேட்டு கேட்டு நல்லா இருக்க என்ன மெண்டல் ஆக்கிடாத… என எரிந்து விழுந்தாள்…

 

அடியே அடாவடி… இன்னைக்கு ஏதாவது புதுசா ட்ரை பண்ணலாமா என்று அவள் கூந்தலுக்குள் மூக்கை நுழைத்து வாசம் பிடித்து ஆசையாய் தாப குரலில் கேட்பவனிடம்…

 

அப்படியாவது குழந்தை வருமானு பாக்குறியா.. வாய்ப்பில்ல ராஜா என்பாள்… 

 

ஏதாவது உணவை வாங்கி வந்து.. இதை சாப்பிட்டு பாருடி டேஸ்ட் சூப்பரா இருக்கு… ஆயில் இல்ல உடம்புக்கு நல்லதும் கூட… என்று அவன் உணவை ஊட்ட வந்தால்,

 

இதை சாப்பிட்டாவது உடம்ப தேத்து அப்பதான் குழந்தை வரும் அப்படின்னு சொல்றியா.. என்று அவள் சண்டை போடும் நோக்கில் கேட்க…

 

நான் எப்ப அப்படி சொன்னேன் என்பது போல் உணவை வாயில் வைத்த படி அவள் முகத்தை “பே “என பார்ப்பான் விக்ரம்…

 

அலைபேசியில் ஒரு பாடலை ரசித்து கொண்டிருந்தவன்… 

“நான் உனக்கு குழந்தையாய் மாறவா நீ தாயாகி தாலாட்ட வா” 

என்று வரிகள் வர… எப்பொழுதும் போல் அதை ரசித்து கேட்டான்..  அதை பார்த்துக் கொண்டிருந்தவள் வேகமாய் அவன் அருகில் வந்து,

 

அப்ப கடைசி வரைக்கும் நீயும் நானும் மட்டும்தான் நமக்கு குழந்தை பிறக்காது என்று முடிவே பண்ணிட்டே அப்படித்தானே என்று கேட்டாள்… ஏன் விக்ரம் எப்படி செல்பிஷா இருக்க.. என்று திட்டி விட்டு சென்றாள்… 

இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டான்… என்ற ஒரு நாள் அலுவலகத்திற்கு கிளம்பும் போது… சோறுடன் படுக்கையில் அமர்ந்திருந்தவளை பார்த்து… 

 

என்னடி அடாவடி… என்ன யோசிச்சிட்டு இருக்க என்று அவள் தோளை தட்ட… 

 

என்ன நினைவில் இருந்தாலோ பொங்கி விட்டாள் மங்கை…

 

உண்மையை சொல்லு விக்ரம் என்னை எதனால் அடாவடின்னு கூப்பிடுற பையன் மாதிரி அடிதடி பண்ணிட்டு அலையுறேன் அப்படின்னு நினைச்சு தானே நீ சொல்ற… பொண்ணு மாதிரி அடக்க ஒடுக்கம் இல்ல…  நான் பொண்ணே இல்ல அப்படின்னு தான் நீ நினைக்கிற… பொண்ணுக்கான எந்த தகுதியும் என்கிட்ட இல்ல அப்படி நீ நினைக்கிற கரெக்டா என்று அவள் பொரிந்து கொண்டே செல்ல…

 

அஞ்சாம் கிளாஸ்ல என் மூக்கை உடைச்சையே அப்ப இருந்தே நான் உன்ன அப்படி தானடி கூப்பிடுறேன்… என்று விக்ரம் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூற…

 

ஓஹோ அப்ப… அஞ்சாங் கிளாஸ் படிக்கும் போதே முடிவு பண்ணிட்ட நான் ஆம்பள பையன் மாதிரி தான் இருக்கேன் அப்படின்னு… என்று அவள் குதர்க்கமாய் கேட்க…

 

என்னடி என்னென்னமோ சொல்ற… எனும் படி அவள் முகத்தை பார்த்து… ஒன்னும் புரியாமல் பேந்த… பேந்த… விழிக்க…

முதலில் அள்ளி எடுத்து கொஞ்ச தோன்றிய முகம்…

 

இப்படி அப்பாவி மாதிரி முழிக்காத விக்ரம் பார்த்தாலே எரிச்சலா இருக்கு என்று பல்லைக் கடித்துக் கொண்டு கத்தி விட்டு செல்வாள்…

 

ஏதாவது அலுவலகத்தில் சில்மிஷம் செய்து அவள் மூடை மாற்றலாம் என்று நினைத்து… அவள் அருகில் ஏதோ சொல்ல வருவது போல் சென்று பசக்கென்று அவள் கன்னத்தில் முத்தம் வைக்க,

 

எப்படி விக்ரம் உன்னால எவ்வளவு விளையாட்டா இருக்க முடியுது… என்னோட கஷ்டம் எதுவும் உனக்கு புரியலையா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா… முதல்ல உனக்கு எப்படி கிஸ் கொடுக்க மூடு வருது… பொண்டாட்டிங்கிறவ இதுக்கு மட்டும் தான் அப்படின்னு முடிவே பண்ணிட்டியா… உன்னோட குணம் எப்பொழுது இருந்து இப்படி சீப்பா மாறுச்சு… என்று கண்டபடி கேள்விகள் திசை மாறிப் போகும்…

 

பொண்டாட்டிக்கு ஒரு உம்மா கொடுத்தது தப்பா… என்னோட பரம்பரையவே இந்த கிழி கிழிக்கிறா… என்று நினைத்து விட்டு விலகிக் கொண்டான் …

 

அன்று ஒரு நாள்… அவளை நெருங்கும் எண்ணத்தில்… ஒரு ஆங்கில படத்தை பார்த்து… இத கொஞ்சம் பாரேன்… உனக்கு புடிச்ச மெத்தட்… இங்கிலீஷ்காரன்…. இங்கிலீஸ்காரன்… தான் என்னாமா பண்றான்..  எச்சில் விழுங்கி கொண்டு சிலாகித்தபடி… அகல்யாவிடம் காண்பிக்க… லேப்டாப் பறந்து சென்று சுவரில் அடித்து நொறுங்கியது…

 

லேப்… போச்சே…

 

இப்பொழுதெல்லாம் படத்தையும் அவளையும் ஏக்கத்துடன் பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறான்.

 

இப்பொழுதெல்லாம் அவளிடம் பேசுவதற்கும் நெருங்குவதற்கும் விக்ரமிற்க்கே பயமாக உள்ளது…

எது செய்யப் போனாலும் அது சண்டையிலேயே முடிகிறது.. சிறிய சண்டையா இருந்து அது சமாதானம் செய்ய போய் பெரிய சண்டையாய் மாறுகிறது..  அதனால் அவளின் அருகாமையையே தவிர்த்தான்… தூரத்திலிருந்து அவளை வெறிக்க, வெறிக்க பார்க்கும் படியாகிவிட்டது அவன் நிலைமை.. 

காதல் வரும்போது ஏக்கத்துடன் பார்ப்பான்.. 

தாபம் வரும்போது எச்சில் கூட்டி விழுங்கியபடி மோகமாய் பார்ப்பான்…

 

இந்த நிலை தொடர அவன் விரும்பவில்லை…

 

அவளை எப்படி புரிந்து கொள்வது,  கையாள்வது என்றும் அவனுக்கு தெரியவில்லை… இதைப் பற்றி மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு செல்ல..  அவர்… உங்கள் மனைவியை ஏதாவது காரணம் சொல்லி அழைத்து வாருங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

இதை எப்படி அவளிடம் சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி சோபாவில் அமர்ந்திருந்தான்..

 

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட ரதியிடம் அவளின் கர்ப்பப்பை ஆபரேஷனை பற்றி அருண் கேட்க… 

 

எனக்கு தேவை இல்லைன்னு தோணுச்சு… அதனால எனக்கு நிறைய டிஸ்டர்பன்ஸ்… அதனால தான் ரிமூவ் பண்ணிட்டேன் அருண்… அதனால உனக்கு என்ன பிரச்சனை என்றாள்…

 

என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல தோணலையா ரதி உனக்கு…

 

உன்கிட்ட சொன்னா உன்னோட ஆசையை என் மேல திணிக்க பார்ப்ப… இல்ல ஒரு மணி நேரத்துக்கு உட்கார வைத்து பேசுவ… தென்… என்னோட உடம்புல இருந்து ஒரு பார்ட்ஸ் ரிமூவ் பண்றதுக்கு நான் உன்கிட்ட எதுக்கு பர்மிஷன் கேக்கணும் அருண்… 

 

உன்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்னோட கையில் இல்லாம ஆப்ரேஷன் பண்ண டாக்டர் உண்டு இல்லைன்னு பண்ணிட்டு வரேன்… என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்…

 

கோவத்தின் உச்சியில் தடதடவென படி இறங்கி வந்தவன் விக்ரமனை அழைத்துக் கொண்டு ரதிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு சென்றான்…

 

செவிலியர்கள் தடுத்து நிறுத்தியதை கண்டு கொள்ளாமல் நேராக மருத்துவர் சைலஜா இருந்த அறைக்குள் கதவை திறந்து கொண்டு கோவமாய் இருவரும் உள்ளே சென்றனர்…

 

அவனை முந்திக்கொண்டு செவிலியர்கள் மேடம்… சொல்ல சொல்ல கேட்காமல் உள்ள வந்துட்டாரு… என்று தங்கள் நிலையை எடுத்துரைக்க….

 

நீங்க போங்க என்னோட பிரண்டு தான் என்று கூறி அனுப்பி வைத்தார் மருத்துவர்…

 

என்ன அருண் எப்படி இருக்க என்று சைலஜா வினவ…

 

ரதிக்கு யூட்ரஸ் ஆபரேஷன் பண்ணி ரிமூவ் பண்ணி இருக்கீங்க என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல என்னோட கையெழுத்து இல்லாம எப்படி பண்ணலாம் என்று அருண் கோபமாய் கேட்க…

 

பதிவிட அம்மா அப்பா கையெழுத்து போட்டு கொடுத்திருக்காங்க ரதியும் சுயநினைவு கூட கையெழுத்து போட்டு கொடுத்து இருக்காங்க அதனால உன்கிட்ட கையெழுத்து வாங்கல… 

 

ஓகே ஆபீஸியலா  என்கிட்ட சைன் வாங்க தேவையில்லை… அஸ் எ பிரண்டா நீ என்கிட்ட சொல்லி இருக்க வேண்டாமா.. 

 

இந்த ஆபரேஷன் நான் பண்ணல… அருண் நான் டூ மந்த் லீவுல இருந்தப்போ வேற டாக்டர் பண்ணி இருக்காங்க… அதனால எனக்கே இந்த விஷயம் கொஞ்ச நாள் முன்னாடி தான் ரதி செக்கப் வரும்போது தெரியும்… என்று மருத்துவர் தன்னிலையை எடுத்துரைக்க..

 

இப்படித்தான் யார் வந்து கேட்டாலும் கர்ப்பப்பையை எடுத்து விட்டுருவீங்களா… இந்த ஹாஸ்பிடல் மேல நான் லீகலா ஆக்சன் பைல் பண்றேன்…  என்று இரு கைகளையும் மருத்துவரின் டேபிள் ஊன்றியபடி நின்று கொண்டு கேள்வி கேட்டு கொண்டிருந்தான் அருண்.

 

அருண்.. விடுடா நடந்தது நடந்து போச்சு… இவங்க கிட்ட உன்னோட கோபத்தை காட்டி நீ என்ன பண்ண போற… என்று விக்ரம் சமாதானப்படுத்த முயல…

 

இல்லடா ரித்து பிறந்ததுக்கு அப்புறம் தான்… அடுத்து எனக்கு ஒரு பேபி கேர்ள் வேணும்னு தோணுச்சு… அதனாலதான் அன்னைக்கு கூட நான் ரொம்ப எக்சைட்மெண்டா இருந்தேன்…

 

அவன் வேதனை குரலை கேட்ட மருத்துவர்..

அருண் நீ முதலில் பொறுமையா உட்காரு நான் உனக்கு எல்லாமே எக்ஸ்ப்ளைன் பண்றேன்…

 

விக்ரமும் அருணின் தோளை தட்டி இருக்கையில் அமர வைத்தான்…

 

ரதி கர்ப்பப்பையை எடுத்தது தான் உனக்கு பிரச்சனைனா… அது இருந்தா கூட அவளால் குழந்தை பெத்துக்க முடியாது என்று ஒரு துண்டை தூக்கி போட்டார் மருத்துவர்…

 

ஏன்? என்பது போல் பார்த்தான் அருண்…

 

இது உனக்கு தெரியுமா தெரியாதானு? எங்களுக்கு தெரியல அருண்…  சிறிது தயங்கிய மருத்துவர்… இது ரதியோட பர்சனல் உன்கிட்ட சொல்லலாமா வேணாமா அப்படின்னு எனக்கு தெரியல… பட் என்னோட பிரண்டு அப்படிங்கறது நாள சொல்ற தெரிஞ்சுக்கோ… 

 

அவ ஆல்ரெடி 4 டைம்ஸ் அபார்ஷன் பண்ணிட்டா… ரித்துவையும் வயித்துல இருக்கும்போது அபார்ஷன் பண்றதுக்காக தான் நேரா என்கிட்ட வந்தா….  

 

நான் செக் பண்ணி பார்த்ததில் அவளோட கர்ப்பப்பை ரொம்ப வீக்கா இருந்தது…. ஒருவேளை இந்த குழந்தையை அபார்ஷன் பண்ணிட்டா இதுக்கு மேல உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு ரொம்ப கம்மி சொல்லப்போனா… வாய்ப்புகள் அமையாமல் கூட போலாம் அப்படின்னு சொன்னதுனால தான்… வீட்டுக்கு ஒரு வாரிசு வேணும்னு  ரித்துவ பெத்துக்கறதுக்கு சம்மதிச்சா… இப்போ அந்த கர்ப்பப்பை உபயோகம் இல்லாம எதுக்கு இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டு ரிமூவ் பண்ணிட்டா… 

She thinks that it is a disturbance for her freedom.. என்று அனைத்தையும் மருத்துவர் மூச்சு விடாமல் சொல்லி முடிக்க…

 

தலையில் இடி விழுந்தது போல் இருந்தது அருணுக்கு…

 

அவளுக்கு இரண்டு, மூன்று கடந்த கால காதல் இருந்தது அவனுக்கு தெரியும்… மருத்துவர் சொன்ன மற்ற தகவல் எல்லாம் அவனுக்கு புதிது… அவன் இதுவரை…. தன்னால் குழந்தை உருவானதால் அதை கலைக்க மனம் இல்லாமல் தான் தன்னை திருமணம் செய்து கொண்டாள் என்று நினைத்திருந்தான்..

 

உண்மையில் அவமானத்திலும், ஏமாற்றத்திலும் கூனி குறுகி தான் மருத்துவமனையில் காத்திருப்பு இருக்கையில் இரு கைகளாலும் முகத்தை மூடியபடி  அமர்ந்திருந்தான் அருண்… 

அருகில் அவன் தொடையில் ஆறுதலுக்கு கை வைத்து சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தான் விக்ரம்…

 

******

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top