போவதற்காகவா வந்தாள் தன்னவனிடம் தன் காதலை சொல்ல அல்லவா வந்தாள், ஆனால் இப்படி கண்கள் இடுங்க தன்னை அழுத்தமாக பார்த்தபடி தன் முன்னால் அவன் நிற்கவும் வரும் பொழுது இருந்த துணிச்சல் இப்பொழுது இல்லாவிட்டாலும் சிறிது நேரம் பேசவாவது செய்யலாம் என்றால் இவன் என்ன விரட்டி அடிக்காத குறையாக நடந்து கொள்கிறான், அஜூதியாவின் மனம் சுணங்கியது.
கவலையோடு அவனை பார்த்தவளோ சட்டென்று நினைவு வந்தவளாய்,
“என் ஹண்ட் பேக்” என்றவள் அவனை தாண்டி சென்று தன் கை பையை தேடி எடுத்து, அதில் பின்னால் உள்ள சிறிய ஜிப்பை திறந்து உள்ளே இருந்த அவனது வாலெட்டை எடுத்து அதை அவனிடம் நீட்டி,
“இன்னைக்கு மார்னிங் கார்ல ஏறும் பொழுது மிஸ் பண்ணிடீங்க, தேங்க்ஸ் சொல்லி இதையும் கொடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்று சிறு புன்னகையுடன் சொல்ல, அவளை பார்த்தபடியே அதை அவளிடம் இருந்து வாங்கியவன்,
“ஓகே அவ்வளவு தானே” என்று கேட்க, அவளும் அவ்வளவு தான் என்பது போல தன் தலையை அசைத்து வைக்க, ராவணனோ மீண்டும் வாசலை காட்டவும், இவன் ஏன் இப்படி இருக்கான் என்று மனதில் நொந்து கொண்டாள்.
பின்பு வேலை செய்ய மறுத்த தன் மூளையை மிகவும் சிரமப்பட்டு வேலை செய்ய வைத்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து,
“எல்லாம் சரியா இருக்குல்ல” பேச்சை வளர்கிறாளாம்
அவளது செய்கையில் தன் கீழ் அதரத்தை கடித்தபடி நின்றிருந்தான் ராவணன்.
அவளை பார்க்கையில் சிரிப்பும் வந்தது பரிதாபமும் வந்தது இரண்டுமே மோசம் என்று எண்ணியவன் முகத்தை இறும்பாக வைத்து கொண்டு, “ம்ம்” என்று தலையசைக்கவும் வாசல் வரை வந்தவளோ சட்டென்று திரும்பிட,
அவள் பின்னால் வந்து கொண்டிருந்த ராவணனோ அவன் எதிர்பாராத நேரத்தில் அவள் திரும்பவும், தடுமாற்றத்தில் அவளது இடையை வளைத்து பிடித்திருக்க, அவன் தன் பின்னால் இவ்வளவு நெருக்கமாக நிற்பதை அறிந்திராத அஜூதியாவோ அவன் மார்பிலே மோதியதில், அவளது மென் இதலோ அவனது வேற்று மார்பை பட்டும் படாமல் தீண்டி செல்ல, தனக்குள் ஏற்பட்ட ப்ரளயத்தை மறைக்க பெரும்பாடு பட்டு போனான் ராவணன்.
பெண்ணவளோ செய்வதை செய்துவிட்டு அவன் கைவளைவுக்குள் நின்றபடி தன் விழிஉயர்த்தி அவன் விழிகளை அண்ணார்ந்து பார்க்க, அவனும் பார்க்க இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டது.
எதிர்பாரா இந்த நிகழ்வில் இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை, தெரியாது நடந்தாலும் இருவருக்கும் முதல் தீண்டல் அல்லவா, ஒரு மாதிரியாக உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.
விலகவும் மனமில்லை விலக்கவும் விருப்பமில்லை அப்படியொரு ஏகாந்த நிலையில் இருவரும் நின்றிருக்க, ராவணனின் அலைபேசி எழுப்பிய சத்தத்தில் முதலில் சுயம் பெற்ற ராவணன் சட்டென்று அவளிடம் இருந்து விலகியவன், உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர பெரும்பாடு பட்டுப்போக, அஜூதியாவுக்கு அங்கிருந்து செல்ல மனமே இல்லை.
ராவணனுமே இப்பொழுது அவளை போ என்று சொல்ல மனமே இல்லாது கதவை பிடித்துக்கொண்டு நிற்க, வா வென்று கூப்பிட்டு விடமாட்டானா என்று அவளும் ஏக்கத்துடன் அவனை பார்த்தாள்.
போய் தான் ஆகவேண்டுமா என்கிற ஏக்கம் பெண்ணவளது நெஞ்சை மிகவும் அழுத்தியது, அவனுக்கு மட்டும் என்ன மனதில் ஆசையை வைத்து கொண்டு விலகியிருப்பது ஒன்று லேசான காரியம் அல்லவே அவளை விட அதிகமாவே அழுத்தியது. போதா குறைக்கு சற்று முன் தன் மார்பை தீண்டிய அவளது இதழின் ஈரோமோ அவனுக்குள் நெருப்பை பற்றவைக்க, அவளின் பார்வை வேறு அவனை ஏதோ செய்ய, அதன் வீச்சை தாங்க முடியாத ராவணனோ உணர்வுகளை கடினப்பட்டு அடக்கிக்கொண்டு அவள் மேல் இருந்த தன் பார்வையை தவிர்த்துவிட்டு வேண்டுமென்றே அலைபேசியை பார்க்க ஆரம்பிக்கவும் அஜூதியாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட வேறு வழி இன்றி முகம் வாட கீழே வந்தாள்.
வந்தபோது இருந்த மகிழ்ச்சி இப்பொழுது அவள் முகத்தில் இல்லை என்பது கீழே வந்த அஜூதியாவை பார்த்ததுமே சந்துருவுக்கு புரிந்துவிட, ராவணை பெருமூச்சுடன் பார்த்தவன் அஜூதியாவிடம்,
“என்ன மா அதுக்குள்ள கிளம்பிட்டியா?” என்று கேட்டான்.
அவளோ ராவணனை ஒருகணம் பார்த்துவிட்டு, “ஆமா அண்ணா நான் போயிட்டு வரேன்” என்றாள்.
அதற்கு சந்த்ருவோ,
“என்ன மா நீ எங்க வீட்டுக்கு முதல் தடவ வந்துட்டு சாப்பிடாம போகலாமா? இன்னைக்கு நீ சாப்பிட்டுத்தான் போகணும். வா மா… வந்து உட்காரு.”
என்று பாசமாக அவளை அழைக்க அவளோ நிமிர்ந்து தனது அறையின் வாசலிலே நின்றுகொண்டு தங்களையே பார்த்து கொண்டிருந்த ராவணனை தான் பார்த்தாள்.
அவனோ கரங்களை மார்பின் குறுக்கே கட்டியபடி அவர்களையே அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்தப் பார்வையில் கோபமா?
எரிச்சலா?
அல்லது வேறு ஏதாவது உணர்வா? என்று அவளுக்குப் புரியவில்லை.
“இல்லைண்ணா வேண்டாம்” என்றாள் வருத்தத்தோடு. சந்த்ருவுக்கும் ராவணன் மேலே நின்று கொண்டு தங்களை கோபமாக பார்ப்பது தெரிந்து தான் இருந்தது இருந்தும் அஜூதியா என்று வந்துவிட்டால் அவனது கோபம் எல்லாம் வெளி பார்வைக்கு தான் என்று அறிந்து வைத்திருந்தவனோ,
“அட வா மா” என்று அஜூதியாவை அழைக்கே அப்பொழுது, “சந்த்ரு” என்று ராவணன் சத்தமாக அழைக்கவும்,
நிமிர்ந்து அவனை பார்த்தவன், “பாவம் பாய் வீடு தேடி வந்திருக்காங்க, சாப்பிட எதுவும் குடுக்கலைன்னா நம்மள என்ன நினைப்பாங்க” என்று கூறி குறும்பாக கண்சிமிட்டியவன் அஜூதியாவை அழைத்து கொண்டு சென்றான்.
ராவணனோ அவனை பல்லை கடித்துக்கொண்டு பார்க்க, ராவணனை பார்த்தபடியே சந்துருவோடு சென்றாள் அஜூதியா.
டைனிங் டேபிளில் அவளை அமர வைத்த சந்ருவோ அவள் குடிப்பதற்கு குளிர்பானத்தை கொடுத்தவன்,
“இப்போ இதை குடி மா கொஞ்ச நேரத்துல சாப்பாடு ரெடி ஆகிடும் சாப்பிட்டு முடிச்சதும் போலாம்” என்று புன்னகையோடு கூற, அஜூதியாவும் பதிலுக்கு புன்னகைத்தவள் தலை கவிழ்ந்த நிலையிலேயே அமர்ந்து கொண்டு ஜூஸ் க்ளாஸையே பார்த்து கொண்டிருக்க, “அண்ணாவை பத்தி யோசிக்கிறனு தெரியுது விடு மா பார்த்துக்கலாம் நீ முதல்ல குடி” என்றவன், “உனக்கு எங்க யார் பேரும் தெரியாதுல இதோ எல்லாருக்கும் இன்ட்ரோ கொடுக்குறேன்” என்றவன் சுற்றி இருந்த அனைவரையும் அழைத்து, “ஒவ்வொருவரின் பெயரை கூறி அறிமுகம் செய்து வைக்க”
முதலில் தயங்கினாலும் பிறகு அஜூதியா அனைவருடனும் அண்ணா அண்ணா என்று அன்பாக பேச துவங்க, மற்றவர்களுக்கும் அஜூதியாவை பிடித்துவிட்டது.
தாங்கள் யார் என்பதை மறந்து அவர்களும் அவர்கள் யார் என்பதை மறந்து அஜூதியாவும் அவர்களுடன் இயல்பாக பேசினாள்.
இயல்பாக ஆரம்பித்த பேச்சு ஒருக்கட்டத்தில் கேலி பேச்சாக மாற, அங்கே சிரிப்பு சத்தம் காதை நிறைத்தது. அஜூதியா தன் கரத்தை அசைத்து எது பற்றியோ ஆர்வமாக பேசிக்கொண்டிருக்க, மீதி ஒன்பது பேரும் கன்னத்தில் கைவைக்காத குறையாக அவளது பேச்சில் மூழ்கிருந்தனர்.
அப்பொழுது அங்கே வந்த ராவணனோ தான் வந்தது கூட தெரியாது அனைவரும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை எரிச்சலோடு பார்த்தவன் தான் கொண்டு வந்த காய்கறிகள் அடங்கிய தட்டை நாங்கென்று டேபிலுக்கு நடுவே வைத்தவன், அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு இறுதியாக அஜூதியாவை இன்னும் அழுத்தமாக பார்த்துவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்து கொள்ள அவன் பார்வையில் பெண்ணவளுக்கு முதுகெலும்பு சில்லிட்டுவிட, மீதி ஒன்பது பேரும் ராவணனின் தலை மறையும் வரை அமைதியாக இருந்தவர்கள் அவன் தலை மறைந்ததும் சிரிப்புடன் ஆளுக்கு ஒரு காய் என்று வெட்ட துவங்க, தேவராஜோ மலங்க மலங்க விழித்து கொண்டிருந்த அஜூதியாவை இயல்பாக்கும் பொருட்டு,
“சும்மா அவருக்கு பொறாமை” என்று சிரிக்க அஜூதியாவும் சிரித்து கொண்டாள்.
இப்படியே சில நிமிடங்கள் கழிந்ததும் மணியை பார்த்த அஜூதியாவோ, “சரிண்ணா நான் கிளம்புறேன்” என்று அனைவரையும் பார்த்து கூறிவிட்டு எழுந்துகொள்ள பார்க்கவும்,
டேவிட்டோ, “சாப்டுட்டு போ மா” என்க
சந்துருவோ, “உக்காருடா” என்றான்.
அனைவரும் அன்போடு வற்புருத்தவும் மறுக்க முடியாது அமர்ந்திருந்தவள், ராவணனை பற்றிய சிந்தனையிலே உலன்று கொண்டிருக்க,
“என்னாச்சு மா பகல்லயே ட்ரீம்ஸா” என்றான் சந்துரு.
அதற்கு அவனை பார்த்து மென்மையாக சிரித்தவள்,
“எங்க அண்ணா அதுக்கு முதல்ல என்னை அவருக்கு பிடிக்கணுமே. ஆனா அவருக்கு தான் என்னை பிடிக்கலையே. நானும் அவர்கிட்ட பேச முயற்சி பண்ணி பார்த்துட்டேன். நான் அவர் முன்னாடி நிக்கிறதுல கூட அவருக்கு விருப்பம் இல்லை இதோ இப்போ கூட எவ்ளோ முறைச்சாறு தெரியுமா.” என்று கேட்டாள்.
அவள் பேசி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த சந்துருவோ, அஜூதியாவிடம்,
“இப்போ நான் சொன்னா உனக்கு புரியாது என்கூட வா” என்றவன் சமையல் அறையை ஒருமுறை எட்டி பார்த்து, ராவணன் வேலையாக இருப்பதை உறுதி செய்துவிட்டு அஜூதியாவை மாடிக்கு அழைத்து சென்றான்.
@@@@
ராவணனின் அறையின் வாசலில் நின்றபடி,
“இங்க ஏன் அண்ணா கூட்டிட்டு வரீங்க?” என்று அஜூதியா சிறு தயக்கத்துடன் வினவ,
“சும்மா வா மா…” என்ற சந்துரு, அவளை அறைக்குள்ளே அழைத்து செல்ல,
“அண்ணா அவருக்கு தெரிஞ்சா என்னைத் திட்டப் போறாரு…” என்றாள் பயத்துடன்.
அவளது பயத்தைப் பார்த்து மெதுவாகச் சிரித்த சந்துரு,
“அட ஒன்னும் ஆகாது வா மா நான் இருக்கேன்” என்றவன் ராவணனின் அறைக்குள் இருந்த டேபிளில் உள்ள ட்ராயரை திறந்தான்.
அஜூதியா பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே ட்ராயரில் இருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்த சந்துரு, அதைத் திறந்து அதற்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த, அஜூதியா முன்னொரு காலத்தில் தவறவிட்ட அவளது சலங்கையையும், ராவணனை மருத்துவமனையில் அனுமதித்த பொழுது அவனுக்கு வைத்திய செலவிற்காக அஜூதியா கொடுத்த கழுத்து சங்கிலியையும் எடுத்துக் கொண்டு வந்து அவளது கைகளில் வைத்தான்.
அதைப் பார்த்த அஜூதியா அப்படியே அதிர்ந்து நின்றாள்.
“இதெல்லாம் என்னுடையது அண்ணா, இங்க இவர் கிட்ட எப்டி” அவளது குரல் நடுங்கியது.
அஜூதியாவை அமைதியாக பார்த்த சந்துரு, அவளிடம் கடந்த காலத்தில் நடந்த அனைத்தையும் கூறியவன், அஜூதியாவின் கலங்கிய விழிகளை பார்த்து,
“இப்போ இல்ல நீ பல வருஷத்துக்கு முன்னாடியே ராவணன் பாயோட வாழ்க்கையோட சேர்த்து மனசுக்குள்ளையும் வந்துட்ட மா. நீ விரும்புறதுக்கு முன்னாடியே அவர் உன்னை விரும்புறாரு.” என்றவனோ அஜூதியாவை பார்க்க அவளோ,
“மனசுக்குள்ளே இவ்வளவு காதலை வச்சிட்டு ஏண்ணா இப்படி பண்ணிட்டு இருக்காரு” கலக்கத்துடன் வினவினாள்.
அவள் கேட்ட கேள்வியில் இருந்த வலியைப் புரிந்துகொண்ட சந்துரு பெருமூச்சுடன்,
“அதுக்கு ஒரே காரணம் உன்னைப் பிடிக்காததால இல்லை அஜூ.” என்று
சிறிது நேரம் அமைதியாக இருந்த சந்துரு,
“உன்னை ரொம்ப பிடிச்சதுனால மா. எங்க நாங்க பாக்குற வேலை உனக்கு ஏதும் பிரச்சனைய குடுத்திடகூடாதுன்னு தான் அவர் விலகியிருக்காரு.” என்று சொல்லவும்,
அஜூதியாவின் கண்கள் கலங்கிவிட்டன.
“அதனால தான்… என்னை புடிக்காது மாதிரி நடக்கிறாரா?”
“ம்ம்…” சந்துரு தலையசைத்தான்.
“அதுதான் அவரோட பயம் மா. நாங்க வாழுற உலகம் உனக்கானது இல்லைன்னு அவர் நினைக்கிறாரு. அவரால உனக்கு ஏதாவது நடந்துடுமோன்னு பயப்படுறாரு.
அவர் உன்னை வெறுக்கலை அஜூ. உன்னை இழந்துடுவோமோன்னு பயந்து, உன்னிடமிருந்து விலகிக்கிட்டு இருக்காரு” என்க.
அந்த வார்த்தைகள் அஜூதியாவின் மனதிற்குள் சென்று ஆழமாகப் பதிந்தன.
அவள் இந்த நொடி வரை அவனது ஒவ்வொரு புறக்கணிப்பையும் காதலின்மையாக நினைத்திருக்க, ஆனால் இப்போழுதோ அதே புறக்கணிப்புக்குப் பின்னால் அவள் மீது அவன் மறைத்து வைத்திருந்த காதல் தெரியவும் பெண்ணவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தன் கையில் இருந்த சலங்கையை மெதுவாக வருடியவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது.
ராவணன் தன்னை விரும்புகிறான். அதுவும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே தன்னை காதலிக்கிறான். இதைவிட அவளுக்கு வேறு என்ன வேண்டும்? எத்தனை நாட்கள் தனக்கே தனக்கென்று யாரும் இல்லையே என்று எண்ணி உள்ளுக்குள்ளே மறுகிருப்பாள்? ஆனால் இப்பொழுது தன்னையே உயிராய் எண்ணி உருகும் ஒருத்தன் தனக்காக இருக்கிறான் இனி நான் அனாதை இல்லை என்கிற உணர்வே பெண்ணவளுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சியை கொடுத்திருக்க, அதீத மகிழ்ச்சியில் முதன் முறை அழுதாள் அஜூதியா.
இப்பொழுது ராவணனை நினைக்கும் பொழுதே உள்ளுக்குள் ஜில்லென்று இருக்க, பெண்ணவளின் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலர்ந்தது.
சில நொடிகளுக்கு முன்பு வரை ராவணனை இழந்து விடுவோமோ என்று எண்ணி பாரமாக இருந்த அவளது மனம், இப்போது காற்று போல லேசாக, ஏதோ உலகமே தன் கைக்குள் வந்தது போல, அவளது மனம் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது.
இனி என்ன நடந்தாலும் யார் என்ன சொன்னாலும் ஏன் ராவணனே சொன்னாலும் அவனை விட கூடாது என்று முடிவெடுத்தவள், ‘விலகியா போற இனிமே எப்டி போறன்னு நானும் பாக்குறேன்’ என்று தனக்குள் புன்னகையுடன் கூறிக்கொண்டாள்.
உரிமை இருக்கும் இடத்தில் பயத்துக்கும் தயக்கத்துக்கும் என்ன வேலை? ஆக இருந்த கொஞ்ச நன்ஞ்ச பயமும் பறந்து போக, சற்று துள்ளலுடனே சந்துருவுடன் கீழே வந்தாள் அஜூதியா.