அசுரன் 83
பாவை அவளோ நெஞ்சம் படபடக்க அதிர்ச்சியில் விழி விரித்து அவனைப் பார்க்கும் பொழுதொ ஆடவனோ ஒற்றை கையால் அவளின் மெல்லிடையை பிடித்து அவளை தன்னை நெருக்கி அணைத்தான்…
பெண் அவளின் இதழில் உள்ள தேன் முழுவதையும் ருசிக்க தொடங்கினான்… ஆழ்ந்த அழுத்தமான வன்முத்தம்.. வாழ்வில் முதன் முறையாய் கிடைத்த வன்இதழ் முத்தத்தில் மிரண்டாலும் அவனது இதழ் முத்தத்தில் வீரியத்தில் விழிகள் சொருக மயங்கி போனாள்.. நீண்ட நெடிய ஆழ்ந்த இதழ் முத்தம்
சிறிதும் இடைவெளி இன்றி தொடர்ந்தது… இருவரின் மூச்சுக்காற்று அந்த ஏசி காரையே உஷ்ணமாக்கிட… இதழ்களுக்குள் உமிழ்நீரின் பரிமாற்றங்கள் நடந்தேறின பின்ன அவனின் இதழ்கள் முதல் முறை மேனியில் உண்டாக்கிய அவஸ்தையான உணர்வில் தேவா…ப்ளீஸ்… என போலியான மறுப்புடன் முணுமுணுக்க… அவளின் சொற்கள் அனைத்தும் அவனது இதழ்களுக்குள் கரைந்து காணாமல் போயிருந்தது…
முதலில் முத்தம் கொடுக்க தெரியாமல் திணறிய கன்னியவள்… இதனை அசைக்காமல் வைத்திருந்தால்… பின் அவனின் இதழ்வண்ணத்தில் கற்றுக் கொண்டால்… பின் அவனுக்கு ஏற்ப அசைந்து கொடுத்தாள்.. ஒரே நாளில் முத்தம் கொடுப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்து விட்டானே..
அவள் இதழை சுவைத்து.. மென்று.. தின்று பின்பு அடுத்த கட்டமாய்… ஓபன் யுவர் லிப்ஸ் என்றான்…
என்ன… என்பது போல் விழி விரித்தாள்…
ஓபன் பண்ணுடி… ஐ நீட் டு டச் யுவர் டங்…
விழி மேலும் பெரிதானது…
அப்பொழுதும் இதழ் பிரியாமல் இருக்க… இடையில் அழுத்தம் கொடுத்தான்… ஹா… என்று இதழ் பிரிந்தது…
அவன் தேடிய பொருள் கிடைத்தது… நாக பாம்புகள் போல் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது…
அவளின் கன்னத்தை பற்றி இருந்தவனின் கட்டை விரல் பெண் அவளின் வதனத்தின் மென்மையை ஸ்பரிசிக்க ஆரம்பிக்க அவளின் மெல்லிய மேனியோ அவனின் தீண்டலில் சிலிர்த்து கிளர்ந்தது…
தன் நெஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பவனின் முத்தத்தையும் தீண்டலையும் அவளால் எவ்வாறு மறுக்க முடியும்… அதனால் அவனுள் புதைந்து போக துடித்தவளாய் மேனி சிலிர்க்க அவனிடம் இன்னும் ஆழம் புதைந்தாள்….
அதில் வெற்றி புன்னகை பூத்தவனின் இதழ்கள் இப்போது தன் பெண்அவளின் அகரங்கள் முழுவதையும் தனக்குள் விழுங்கி அவளின் தேன் அமுதத்தை முழுமையாக உறிஞ்சி குடிக்க இளம் பெண்ணின் மேனியோ ஆடவன் செய்த மாயத்தில் சூடு ஏறி சிவந்து உருக தொடங்கினாள்….
அவளின் உணர்ச்சிகள் அனைத்தும் பிழம்புகளாய் வெடித்து சிதற அதன் வீரியம் தாங்காமல் அவனோடு மேலும் இளைந்தவளின் கரங்களோ அவனின் சட்டை காலரை இறுகப்பற்றிக் கொண்டது…
ஆடவனோ ஒரு கையால் காரின் இருக்கையை தளர்த்தினான்… அவளின் இடையில் கை கொடுத்து மேலும் தன்னோடு இறுக்கினான்.. தன் காலால் மியூசிக் சிஸ்டத்தை ஆப் செய்தான்… ஏனோ அவனுக்கு இதழிடும் “சப்” “ச்ச்” என்ற சத்தத்தை தவிர வேறு எதுவும் கேட்க பிடிக்கவில்லை போலும்…
மரத்தை சுற்றி படர்ந்திருந்த கொடி போல் இருவரின் சரீரமும் ஒன்றோடு ஒன்று சரசத்தோடு பின்னிப் பிணைந்து இருந்தன…
இப்போது இருவரின் உணர்ச்சிகளும் தங்கள் தடையை உடைத்துக் கொண்டு தறிகட்டு திமிர ஆரம்பித்தனர்…
முதலில் அவளை ஒரு நிமிட இதழ் ஒற்றளுடன் அவளிடம் இருந்து விலகி விடலாம் என்று எண்ணியிருந்தவன்… பெண் அவளின் ஸ்பரிசத்திலும் அவளது மேனியின் மென்மையிலும் கிறங்கி அவளுள் மேலும் மூழ்கிப் போனான்.
இருவரின் உணர்ச்சிகளும் சிறிது சிறிதாக தன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அவளின் கன்னத்தை மட்டும் ஸ்பரிசித்து கொண்டிருந்தவனின் கரங்கள் சற்று கீழ் இறங்கி அவளின் மேனியில் எல்லை தாண்டி சஞ்சரிக்க தொடங்க…
ம்ம்… ம் ம்… என்று அவள் கண்களால் மறுக்க…
ஒன்னும் பண்ண மாட்டேன்டி… என்னை டிஸ்டர்ப் பண்ணாத…
அவன் சொன்னதை கேட்டு மருண்டு விழித்தால் பெண்… அதுவும் சில வினாடிகள் தான்… அவளின் தேவன் செய்த மாயத்தில்… தேவா… என கிசுகிசுப்பாய் முனங்கியவளின் கரங்களோ இப்போது ஆடவனின் பின்னந்தலையில் கைகோர்த்து தன்னோடு நெறிக்க இப்போது பெண் அவள் முழுமையாய் தன் சுய உணர்வை இழந்து சொர்க்கலோகத்தின் பிடியில் சிக்கி இருந்தால் ஸ்பரிசங்களின் தீண்டலினால் அவர்களுக்குள் புதைந்திருந்த உணர்வுகளை வெளி கொண்டு வந்தது அவர்களின் இந்த இதழ் முத்தம்….
சில நிமிடங்கள் தொடர்ந்து அந்த முத்த தாக்குதலில் தன்னையே மொத்தமாய் இழந்தவளின் கண்கள் இறுதியில் சொருகி விட்டன…
தேவனால் தேன்மலரிலிருந்த தேன் மொத்தமும் உறிஞ்சப்பட்டது
காருக்குள் முத்த யுத்தத்தில் இருவரும் திளைத்திருக்க… அதைக் கலைக்கும் விதமாய் ஒலித்தது ஆதியின் போன்..
இதழை பிரிக்காமலேயே கைகளால் போனை எடுத்து கட் செய்தான்… மீண்டும் மீண்டும் போன் வர எரிச்சல் ஆனவன் ஃபோனை எடுத்து ஸ்பீக்கரில் போட..
ஆதி எங்க இருக்க… வா… கேக் கட் பண்ணலாம் என்று சக தோழர்கள் அழைக்க.. ம்ம்… என்று மட்டும் ஒரு குரலை கொடுத்துவிட்டு போனை கட் செய்தான்..
அதன் பின்பும் சில நிமிடங்கள் அந்த இதழை விட மனமில்லை… தன் இதழை தனியே பிரித்து… சப்… சப் என்று… இரண்டு மூன்று முறை அழுத்தமாய் முத்தமிட்டு தான் விலகினான்… தாறுமாறாய் மூச்சு வாங்கியது இருவருக்கும்… ஆடவனின் உணர்ச்சி கொந்தளிப்பு… கன்னியவளை களிபரம் செய்து வைத்து இருந்தது… சேலை விலகி தலைகலைந்து… முகம் முழுதும் வியர்த்து… இளம் ரோஜா நிறமாய் இருந்த இதழ்கள் ரத்த சிவப்பாய் கன்றி போய்… இருந்தது.. முதலில் ஆழ்ந்த மூச்சு எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்… கசங்கிய சட்டையை கைகளால் நீவி விட்டு… தன் கலைந்த தேசத்தை… டேஷ்போர்டில் இருந்த ஹேர் பிரஸ் வைத்து சரி செய்தான்…
மங்கை அவளுக்கோ… உடலில் இருந்த மொத்த சத்தையும் உறிஞ்சி எடுத்தது போல் ஒரு உணர்வு…. மெல்லிய நடுக்கம்… அவனை பார்க்க கூச்சம்… எழுந்து தனது உடைகளை சரி செய்தவள்… தன் இடையை பார்க்க… அதில் அவனுடைய விரல் தடம் பதிந்திருந்தது… ஆழ்ந்த மூச்சு எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்…
ஒரு கிஸ்அ முழுசா கொடுக்க விடுறாங்களா… டார்ச்சர் பண்றானுங்க.. ஏன் நான் வராமல் கேக் கட் பண்ண மாட்டானுங்கலாமா… என்று அவன் கடுப்பாய் புலம்பி தள்ளிக் கொண்டு இருந்தான்..
அவன் கூறியதைக் கேட்டு விழி விரித்தவள்.. என்ன கிஸ் இன்னும் முடியலையா.. என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கையில்…
கைக்குட்டையை எடுத்து அவள் முகத்தில் இருந்த வேர்வையை ஒற்றி எடுத்தான்… ஏசி கார்ல என்னடி உனக்கு இப்படி இருக்குது.. என்று ஒன்னும் அறியாதவன் போல் அவன் கேட்க…
அவன் அறியவில்லை… அவன் மூச்சுக்காற்றில் இருந்த வெப்பத்திற்கு… அவள் மேனி புண்ணாகாமல் இருந்ததே பெரிய விஷயம்…
முகத்தை துடைத்துக் கொண்டே இருக்கும் பொழுதே… அவனது பார்வை அவள் இதழை தழுவியது… கன்றி சிவந்து போய் இருந்த இதழை தனது இரு விரலால் பிடித்து இழுக்க… அவன் குனியும் முன்னே… எச்சரிக்கையாய்… தன் கைகளால் தனது வாயை பொத்தினாள்…
உங்க பிரெண்ட்ஸ் கேக் கட் பண்ண வர சொன்னாங்க… என்று ஞாபகப்படுத்தினாள்…
ஒன்னும் பண்ணல டி… சும்மா பாக்க தான் செஞ்சேன்…
இந்த லிப்ஸ் கலர் நல்லா இருக்கு… இனிமேல் இதையே மெயின்டைன் பண்ணிக்கலாம்… என்றானே பார்க்கலாம்…
தூக்கி வாரி போட்டது மலருக்கு…
பயத்துடனே எப்படி என்றாள்?
கண்ணை சிமிட்டி சிரித்தான் ஆணழகன்…
காருக்குள்ளயே இரு வரேன் என்று கூறிவிட்டு… சுற்றி முற்றி பார்த்தவன்… தூரத்தில் ஒரு மாடல் அழகி வருவதை கண்டு… ஏதோ பேசி விட்டு காரினுள் வந்தான்…
அவனுடைய ஹேர்பிரசை வைத்து அவளுடைய சிகையை சரி செய்து விட்டான்… சேலையை ஒழுங்கு படுத்தினான்.. இப்பொழுது அவனுக்கு தயக்கம் என்பது முற்றிலும் இல்லாமல் போனது… என்ன அவள் தான் கூச்சத்தில் நெளிந்து கொண்டு இருந்தாள்… பின் அவள் இதழை இருவிரலால் பிடித்தான்… அவள் அடம்பிடித்தால்…
அமைதியா இரு.. இல்லன்னா கடிச்சிடுவேன்.. என்று பற்களால் கடிப்பது போல் மிரட்டினான்…
பின் தனது பாக்கெட்டில் இருந்த லிப்ஸ்டிக்கை எடுத்து அவள் உதடுகளில் பூசி விட்டான் மிக மென்மையாக…
ஏது இது…
இப்பதான் ஒரு பொண்ணு கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தேன்…
அதுஉ…. எப்ப்டி… கேட்டவுதனே குடுத்துட்தாங்களா? என்றாள் விரலுக்கு இடையே சிக்கிய இதழ் உடன்…
கேட்கிற விதத்தில் கேட்ட கொடுப்பாங்கடி…
எப்படி?
அவள் உதட்டை வருடியபடியே…
Your lips are like a master piece. Could I keep your shades as a memory of such perfection?
(ஓவியம் போன்ற உன் இதழ்களின் ஞாபகமாக, அந்த வண்ணத்தை நான் எடுத்துக்கொள்ளவா?) இந்த வார்த்தைகளை.. அவள் உதட்டை பார்த்து சொல்லும் போது அவன் கண்களிலும் குரலிலும் அப்படி ஒரு கிறக்கம்…
அப்படின்னு கேட்டேன்… வெக்கப்பட்டுக்கிட்டே கொடுத்துட்டாங்க… என்றான்.
இதை கேட்டு ஆதியை தீயாய் முறைத்தாள் பெண்ணவள்… வேக மூச்சுகள் எடுக்க மார்புக்கூடு ஏறி இறங்கியது…
இப்படியெல்லாம் பண்ணாதடி… ஏற்கனவே காரை விட்டு கீழே இறங்க எனக்கு மனசே இல்ல.. மனுஷன் நிலைமை புரியாம நீ வேற டெம்ப் பண்ணாத….
கோவத்தில் அவள் முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொள்ள… அதைப் பார்த்து சிரித்தவன்…
பொய் சொன்னேன் டி… 500 ரூபாய் லிப்ஸ்டிக்… 5000 குடுக்குறேன்… குடுங்கன்னு கேட்டேன் கொடுத்துட்டாங்க… சிம்பிள்… என்றான் கண்ணை சிமிட்டியபடி…
க்கும்… என்ன உதட்டை சுழித்து காண்பித்தாள் மலர்…
அதை மோக பார்வை பார்த்தவன்.. ஏய்.. இது சூப்பரா இருக்கு நீ என்ன பண்ணு நம்ம திரும்ப காரில் வந்து ஏறும் போது… இத எனக்கு திரும்ப செஞ்சு காட்டு என்றான் விஷமமாக…
அவளும் அப்பாவியாய் சரி என தலையசைத்து வைத்தாள்..
இருவரும் காரை விட்டு கீழே இறங்க… தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து சரி செய்து கொண்டவன்…
மலரை மேலிருந்து கீழ் ஒரு முறை சோதனை பார்வை பார்த்தவன்… சேலையின் கீழ் மடிப்புகள் கலைந்து இருக்க… ஒரு காலை மடக்கி உட்கார்ந்து அதை சரியாய் வரிசைப்படுத்தி கைகளால் நீவி விட்டான்…
வேணாம் விடுங்க.. என்று அவள் தடுக்க… நிமிர்ந்து ஒரு பார்வை தான் பார்த்தான் இல்லை முறைத்தான்… வாய் கப்சிப் என்று மூடிக்கொண்டது..
பின் இருவரும் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல அங்கு கேக் கட் பண்ணப்பட்டது… அதிக அழுத்தத்தில் பியர் பாட்டில்கள் ஓபன் செய்யப்பட்டு பியர் மழை கொட்டியது….
மலர் காருக்கு சென்றதிலிருந்து அவள் திரும்பி வந்தது வரை கண்காணித்தனர் பெண்கள் குழு… ஆதி மண்டியிட்டு அவள் புடவையை சரி செய்ததும்… அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டனர்… மலர் அவர்களிடம் சொன்ன பொய் அனைத்தும் இப்பொழுது உண்மை என்றானது… அனைவரும் சைத்ராவை காரி துப்பாத குறையாக, திட்டி தீர்த்து விட்டு தான் சென்றார்கள்… பல நாட்களாக அவள் கட்டி வைத்திருந்த பொய் கோட்டையை ஒரே நாளில் மலர் தகர்த்து எறிந்து விட்டு சென்று விட்டாள்…
ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்தவளை மேற்கொண்டு காண்டாகும் விதமாய் ஒரு விஷயம் நடந்தது…
அனைவரும் தங்கள் ஜோடியுடன் நடனமாட தொடங்கினர்… பின் ஒவ்வொரு ஜோடியாய்… ஸ்பாட் லைட் இன் கீழே… தனித்தனியே வந்து நடனமாடி கவர்ந்தனர்…
நடனம் ஆடுபவர்கள் காலையெல்லாம் பார்த்து ரசித்தவள் அழகா ஆடுறாங்கல்ல.. என்றாள்.
வா நம்மளும் ஆடலாம் என்றான்…
அய்யய்யோ… எனக்கு இந்த மாதிரி டான்ஸ்.. எல்லாம் தெரியாது…
இது டான்சே கிடையாது அவங்களா ஆடுறது… என்று கூறியபடி அவளது கை பிடித்து இழுத்து சென்றான்…
அவர்களுக்கு என ஒரு மெல்லிய இசை இசைக்கப்பட்டது… முதலில் கால்களை எப்படி சுழற்ற வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தான் ஆதி… விழி விரித்தால் மலர்… உங்களுக்கு டான்ஸ் ஆட தெரியுமா?… ம்ம்… நீ பக்கத்துல இருந்தா என்றவன்… நான் சொல்ற மாதிரி ஆடு ஆடிறலாம் என்றான்.
டக்.. டக்கென்று அவன் ஷூ அணிந்த நீள கால்கள் சுழலுவதும் வேகமாய் அசைவதையும்… அவன் மேனரிசத்தையும் பார்த்த இளம் பெண்கள்.. ஆஹ… என வாயை பிளந்தனர்… ரோபோட் மாதிரி வந்துட்டு போவானே பார்ட்டிக்கு அவனா இவன்… என்பது போல் இருந்தது அவர்களின் பாவனை…
ஆதியின் டான்ஸ் பார்த்த மலருக்கு புத்துணர்வு தொற்றிக் கொண்டது அவன் சொல்ல சொல்ல ஆர்வமாய் செய்தாள் …. ஆதி டிஜேவிடம் கண் காட்ட… ஒரு ரொமாண்டிக் மியூசிக் ப்ளே செய்யப்பட்டது… இருவரும் ஒருவரை ஒருவர் தழுவி அழகாய் ஆடினர்… அவர்கள் உலகத்தில் அவர்கள் மட்டுமே இருந்தனர்… ஆடலின் முடிவில் மலரை ஒரு கையில் சாய்த்தபடி மற்றொரு கையால் அவள் இடையை தாங்கி நின்ற ஆதி…
“Time to break the news” என்றான்.
மூச்சு வாங்க… How? என்றாள் பெண் அவள்…
Take a deep breath… என்றான்… ஆட்டோமேட்டிக்காக சொன்னதை செய்தது அவளின் உடல்…
மூச்சை இழுத்து விட்ட நொடியில் அவள் இதழில் ஆழமாய் தன் இதழை பதித்திருந்தான் ஆதி..
சுற்றி அவர்கள் நடனத்தில் ரசித்திருந்தவர்கள் அவர்களின் இந்த திடீர் காதல் முத்தத்தை கண்டு கைதட்ட… சைத்ராவோ ஆதியின் முத்தத்தை கண்டு கட்டுப்பானாள்… சுற்றி இருந்த நிறைய இளம் பெண்கள்… இந்த சைத்ரா ஓட பேச்ச கேட்டு.. ஆதிய மிஸ் பண்ணிட்டோம்… என்று பலவாறு தங்களுக்குள் புலம்பிக்கொண்டனர்… முத்தத்தின் அழுத்தமும் நேரமும் அதிகமாக கரவொலியும் அதிகரித்தது… அங்கிருந்து அனைவரும் ஒரு சேர “கங்கிராஜுலேஷன்ஸ் கைஸ்” என்று கத்த… சக தோழமைகள்
” ஆதி The floor is on fire! செம பெர்ஃபார்மன்ஸ்!… “
“ஹலோ… சிங்கிள்ஸ் நாங்க இங்கதான் இருக்கோம், கொஞ்சம் எங்க நிலைமையையும் யோசிங்கப்பா!”
“ஆதி நீ இவ்வளவு பெரிய ‘ரொமாண்டிக் கிங்’னு எங்களுக்குத் தெரியாம போச்சே!”
Heavenly couple! Perfect frame!
என்று பலவாறு கத்தினர்..
ஆதி ஆழ்ந்து முத்தமிடுவதையும்.. மலர் கண்ணை மூடி அவனுக்கு வாகாய் இசைந்து கொடுப்பதையும்… சுற்றி இருக்கும் நண்பர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதையும், பெட்ரோல் ஊற்றாமல் கொழுந்து விட்டெரியும் வயிற்றுடன்… கூட்டத்தின் நடுவில் நின்று, முகம் சிவக்க கடுமையான கோபத்துடன்..பார்த்துக் கொண்டிருந்தான் அருண். 😆🫣
*******
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️