அசுரன் 84
மருத்துவர் சொன்ன தகவல்களை வைத்து… ரதியிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தான் அருண்…
நீ இந்த மாதிரி ஒரு மோசமான பொண்ணா இருப்பேன் நான் கனவுல கூட நினைக்கல ரதி…
ஆஹா என்பதுபோல் தலையை ஒரு சாய்த்து அருணை பார்த்தவள்…
நீ ஒரு உத்தம புருஷனா இருந்து என்ன பாத்து இந்த மாதிரி கேள்வி கேட்டா பரவாயில்ல… நீ என்ன விட… இந்த விஷயத்தில் எக்ஸ்பர்ட் அருண் மறந்துட்டியா…
ஆனா நீ இப்படி அபார்ஷன் வரைக்கும் போயிருப்பன்னு எனக்கு தெரியாது ரதி…
நீ என்னப்பா ஆம்பள… ஜஸ்ட் லைக் தட்… கேர்லெஸ் மிஸ்டேக்… அப்படின்னு சொல்லிட்டு போயிட்டே இருப்ப… ஒத்து வராத காதலன் கூட இந்த குழந்தையை காரணம் காட்டி வாழ முடியுமா… அதனாலதான் அபார்ட் பண்னேன்… ஏன் நீ வேற யார் கூடயும் சேப்டி இல்லாம இருந்ததில்லையா… உன்னால பிரக்னெண்ட்டான பொண்ணுங்க அபார்ட் பண்ணிட்டு தான வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணி இருப்பாங்க… உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?.. என்று கேள்வி கேட்டவள் அவன் முகத்தைப் பார்த்து பேச்சை தொடர்ந்தாள்…
உனக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் தான்… நீ ஆம்பளங்கறதுனால பிரக்னன்ட் ஆகல நான் பொம்பளைங்கறதுனால.. பிரகனண்ட் ஆயிட்டேன்… பட் இனிமேல் அதுக்கும் சான்ஸ் இல்ல… சோ வீ போத் ஆர் ஈக்வல்… என்றாள் தனது தோள்களை குலுக்கியபடி…
உன்னோட கடந்த காலத்தை பத்தி ஏன் என்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லல ரதி என்றான் கோபமாய்…
நான்தான் பாஸ்ட்ல எனக்கு த்ரீ லவ் இருந்துச்சு அவங்க கூட டேட்டிங் எல்லாமே போயிருக்கேன் சொன்னேனே… டேட்டிங் எதுக்கு போவாங்க… பொங்கல் சாப்பிட வா… என்றாள்.. நாக்கை நக்கலாய் சுழற்றி படி…
நீ சொல்றது எல்லாம் கேட்கவே கேவலமா இருக்கு… உன்ன பத்தி தெரியாம நான் தான் வந்து மாட்டிக்கிட்டேன்…
நீ எதுக்கு இப்படி புலம்புரன்னு எனக்கு சத்தியமா புரியல அருண்… ஒருவேள நீ ஆதி மாதிரி ஒரு ஜெனியூன் பெர்சனா இருந்தா நீ புலம்புறதுல ஒரு நியாயம் இருக்கு… நீ பண்ணும் போது தப்பா தெரியாதது நான் பண்ணும் போது மட்டும் உனக்கு தப்பா தெரியுதா…
அவன் தந்தையைப் போல் ஆதியுடன் கம்பர் செய்ததால் கோபத்தில் கொந்தளித்தவன்… ஆதி மாதிரி வேணும்னா நீ அவன் கிட்ட தான் ப்ரொபோஸ் பண்ணி இருக்கணும் என்கிட்ட இல்ல…
கரெக்ட்… பஸ்டு அவனுக்கு தான் நான் ப்ரொபோஸ் பண்ணினேன் அவன் நாட் இன்ட்ரஸ்ட் சொல்லிட்டான்…
இந்த செய்தி அருணுக்கு மிகப் புதிது… என்ன சொல்ற ஆதிக்கு ப்ரொபோஸ் பண்ணியா…
எஸ் பிஃபோர் மேரேஜ்… ஒரு 3 இயர்ஸ்க்கு முன்னாடி பண்ணேன்… பிராமிஸா அப்ப நா விர்ஜின் தான்… பட் அன் லக்கி ஃபெல்லோ என்ன மிஸ் பண்ணிட்டான்… என்று கூறியபடி படுக்கையில் சென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் ரதி.
அவன் சொல்லியதை கேட்டு மண்டை காய்ந்தது அருணுக்கு….. ஆதியைவிட தனக்கு அனைத்தும் சிறப்பாய் வேண்டும் என்று தான் அவன் ரதியை தேர்வு செய்தது… ஆனால் அவளே.. ஆதியால் மறுக்கப்பட்டவள்… என்று நினைக்கும் போது… பெட்ரோல் ஊற்றாமலே வயிறு எரிந்தது.. ரதியை பற்றி தன்னிடம் இதுவரை ஒண்ணுமே சொல்லவில்லை என்று ஆதியின் மேல் ஏகத்துக்கும் கடுப்பு ஏறியது..
உன்னையும் வேணாம்னு சொல்லிட்டான் அந்த சைத்ராவையும் வேணாம்னு சொல்லிட்டான் அப்ப அவனுக்கு எப்படிப்பட்ட பொண்ணு தான் வேணுமாம்… அப்படி யாரைத்தான் மனசுக்குள்ள அவன் தேடிட்டு இருக்கான்…
அருண் இப்படி சிந்தித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் தனது முதல் முத்தத்தை மலரின் இதழில் பதித்து கொண்டிருந்தான் ஆதி…
பார்ட்டிக்கு செல்ல வேண்டி இருந்ததை ஃபோன் வந்து ஞாபகப்படுத்தியதால்… சண்டையை பாதியில் நிறுத்திவிட்டு, தாமதமாக பார்ட்டிக்கு கிளம்பி சென்றவன் தான்… கண்டது ஆதியும் மலரும் முத்தமிட்டு கொண்டிருந்த காட்சியை…
ஆதியும் மலரும் தன்னைத் திட்டமிட்டு ஏமாற்றி விட்டதாக நினைத்தான்…
*******
பார்ட்டியை விட்டு கிளம்பியவர்கள் அரை மணி நேரத்தில் வந்து சேர வேண்டிய வீட்டிற்கு ஒன்றரை மணி நேரம் கழித்து வந்திருந்தனர்…
பத்து நிமிடத்திற்கு ஒருமுறை 15 நிமிட முத்தம் என்று… அவளை ஒரு வழிப்படுத்தியே வீட்டிற்கு அழைத்து வந்தான்…
இடையில் அவள் லிப்ஸ் எரியுது என்று சிணுங்க.. காரை ஐஸ்கிரீம் பார்லரில் நிறுத்தி… மூன்று ஐஸ்கிரீம்கள் வாங்கி, அதில் இரண்டை அங்கேயே சாப்பிட வைத்து ஒன்றை மட்டும் கையில் வாங்கிக் கொண்டு காரில் ஏற போக நீங்க ஐஸ்கிரீம் சாப்பிடலையா… என்று கேட்டாள் மலர்…
நீ சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரிதான்… என்று ஆதி கூறியதை பொதுவான பாணியில் அவள் எடுத்துக் கொண்டாள்… அவன் விஷமமாக கூறியது அவனுக்கு தான் தெரியும்..
கையில் இருந்த ஐஸ்கிரீமை காண்பித்து இது எதுக்கு? என்று மலர் கேட்க… எனக்கும் இந்த ஐஸ்கிரீமுக்கும் பழைய பகை ஒன்னு இருக்கு அதை தீர்த்துக்கறதுக்கு என்று கூறினான்…
கையில் வாங்கி வந்த ஐஸ்கிரீமையும் காரினுள் வந்தவுடன் அவளிடம் கொடுக்க… உங்களுக்கு வேணாமா என்று கேட்டவள்… அவன் வேணாம் என்று தலையசைத்ததும், எந்த மறுப்பும் இன்றி வாங்கி உண்டாள்… அவள் சாப்பிடுவதை தான் பார்த்துக் கொண்டு இருந்தான் ஏனோ இன்று மிகவும் சமத்தாக சாப்பிட்டால் இதழ்களில் படாமல்.. அவனின் விடாமல் துரத்தும் பார்வையைக் கண்டு கடைசி ஒரு ஸ்பூனை உங்களுக்கு வேணுமா? என்று கேட்க…
ஆம் என்று தலையசைத்தவன்… அதை கையில் வாங்கி.. அவள் இதழின் மேல் பூச.. என்ன பண்றீங்க என்று கேட்ட அவளின் வார்த்தை அவன் இதழுக்குள் அடங்கி கொண்டது… கிராதகன்… வாங்கி கொடுத்த மூன்று ஐஸ்கிரீமையும் உறிஞ்சி விட்டு தான் அவளை விட்டான்…
தன் இதழின் காயங்களை தன் ஆள்காட்டி விரலால் மெல்ல தொட்டு, தொட்டு பார்த்து கொண்டே அவனை முறைத்தபடி… மலர் அருகே இருக்க… சாரி… நைட் ஆயில்மெண்ட் போட்டு விடுறேன்… என்று கண்ணை சிமிட்டி குழந்தையாய் சிரித்தான் (ஆதியின் இந்த முகம் மலருக்கு புதிதாய் தெரிந்தது…)
திருவிழாவில் ஆசையாய் கேட்ட பொம்மையை வாங்கி கையில் வைத்து, தொட்டு பார்த்து.. குதுகளிக்கும் சிறுவன் போல்… அவனின் நடவடிக்கைகள் தெரிந்தது.. அதீத குதுகளிப்பில் இருந்தான்.. அந்த முகம் சோர்வடையவே இல்லை…
ஒரு வழியாய் வீடு வந்து
சேர்ந்திருந்தார்கள்…
காரில் இருந்து இறங்கி… அவள் பக்க கதவை திறந்து விட்டான்… ஆனால் அவள் தான் இறங்க மனம் இல்லாமல் யோசனையுடன் உட்கார்ந்திருந்தாள்…
ஆதியின் இந்த குதூகலம் தான் அவளை பயமுறுத்தியது… குழப்பமும் பயமும் நிறைந்த முகத்துடன் ஆதியை ஏறிட்டு பார்க்க…
என்னடி ரொம்ப வலிக்குதா…
இல்லை என்று தலையசைத்தாள்…
நான் கிஸ் பண்ணது புடிக்கலையா… தலையசைக்காமல் வாயைத் திறந்து பதில் சொல்லு… நான் தெரிஞ்சுக்கணும்…
தலையைக் கவிழ்ந்தபடி “புடிச்சிருக்கு” என்றாள்..
அவள் பதிலை கேட்டு மென் புன்னகை சிந்தியவன்… அது அவனுக்கும் தெரியும்… முத்தமிடும் போதே அவள் சம்மதத்தையும் உணர்ந்தான்… அவள் இரு கன்னத்தையும் கைகளால் ஏந்தி நின்று… அவள் கண்ணைப் பார்த்து
என்னடி என் கூட இருக்க பயமா இருக்கா?… எதுஉஉவும் பண்ண மாட்டேன்… வெறும் கிஸ் மட்டும் தான்… அதுவும் நீ என்ன டெம்ப் பண்ணா மட்டும்தான்.. என்று முன்நெற்றியில் முட்டியபடி கூறினான்… அவள் பாவமாய் அப்பாவியாய் இதழை பித்துகிய படி அவனை பார்க்க… இதழில் குட்டி முத்தம் ஒன்றை வைத்தவன்… நம்புடி… கல்யாணத்துக்கு அப்புறம் தான் எல்லாமே… இட்ஸ் யுவர் தேவா ப்ராமிஸ்…
அவன் மேல் அவளுக்கு இல்லாத நம்பிக்கையா… ஆனால் இன்று இந்த தேவ அவதாரம்தான் அவளை பயமுறுத்துகிறது…
தூக்கிட்டு போகணும் நினைக்கிறியா… என்று தன் கை சட்டையை மேலே ஏற்றி விட்டபடி கேட்க…
வேணா நானே வரேன்… என்று கூறிவிட்டு வேகமாக வீட்டில் நுழைந்தவள் அறையினுள் நுழையப் போக…
நில்ல்லுடி.. ரெப்ரஷ் ஆகிட்டு வா காபி போட்டு வைக்கிறேன் குடிச்சுட்டு போய் தூங்கு… நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டு இருக்கோம்.. த்ரோட் இன்பெக்சன் ஆயிடும்… என்றான் அக்கறையாய்…

சரி என்று தலை அசைத்து விட்டு அறையினுள் சென்றவள்… சிறிது நேரம் கழித்து வெளியே வர… காபியுடன் அவளுக்காக காத்திருந்தான்… காபி குடித்து முடித்ததும் அவள் அருகே வந்து அமர்ந்தவன்… அவள் இதழை விரல்களால் வருட… தனது வாயை ஒற்றை கையால் மறைத்தாள்.
அவளின் அவசர செய்கையை பார்த்து.. சிரித்தவன்…
ஆயில்மெண்ட் போட போறேன் டி கையை எடு… என்றான்…
குடுங்க.. நானே போட்டுக்கிறேன்..
இது இன்னைல இருந்து என்னோட ப்ராப்பர்ட்டி. அதை இனிமேல் தொடக்கூட உனக்கு அனுமதி இல்லை… என் பொருளை பாதுகாக்க வேண்டியது என்னோட பொறுப்பு… யூ டோன்ட் கேர்… என்று … கூறியபடியே மருந்தை அவள் இதழில் தன் விரல் கொண்டு மென்மையாக பூசி விட்டான்… ரொம்ப சாஃப்டா இருக்குடி… அதனாலதான் சீக்கிரமே புண் ஆயிடுச்சு… என்று அவன் கூற
கோழிக்குண்டு கண்கள் என்னமோ முறைக்க தான் செய்தன… ஆனால் அவன் செய்கையால் பூத்த வெட்கத்தை வெளி காட்டாமல் மறைக்க அது முகம் முழுவதும் சிவந்து அவள் நிலையை எடுத்துக் காண்பித்தது…
இன்னொரு ஆயில்மெண்ட் எடுத்து அவள் கையில் கொடுத்தான்… இடுப்புல போட்டுக்கோ… இனிமேல் நான் ஓபன் பண்ணு சொன்னா… உடனே பண்ணனும்… ம்ம்… ம்ம்… அப்படின்னு தலையாட்டினேனா இப்படித்தான் பண்ணுவேன்… என்றான்…
மருண்டு விழித்தபடி வாங்கிக் கொண்டாள்…
“வேணும்னா இதையும் நானே போட்டு விடவா…” என்று அவள் இடுப்பினருகே கையை கொண்டு செல்ல…
ஒன்னும் வேணாம்… நானே போட்டுக்கிறேன்… என்று செல்லக் கோபமாய் சினுங்கி விட்டு மருந்தை வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழையப் போனவளிடம்…
ஒரு நீண்ட ஏக்க மூச்சுடன்… சரி… போ… போய் தூங்கு… கதவை தாழ்ப்பாள் போட்டுக்கோ போன் பண்ணா எடு… பத்திரமா தூங்கு… குட் நைட்… என்று… பக்கத்து அறைக்கு செல்பவளை… பாரின் செல்பவள் போல்.. பிரிய மனமில்லாமல் வழி அனுப்பி வைத்தான் தேவன்…
அவள் போன பின்பு பெருமூச்சு விட்டவன் “இன்னைக்கு என் மனசு என்கிட்ட இல்ல…” என்று கூறியபடியே தலைக்கு கை கொடுத்து சோபாவில் சாய்ந்தான் ஆதி…
உள்ளே நுழைந்தவள் கதவை அடைத்து அதில் சாய்ந்து படி பெருமூச்சு வாங்கினாள்… என்ன ஒரே நாள்ல இப்படி மாறிட்டாரு… அம்பின்னு நினைச்சோம்… ஆனா ரெமோ ரேஞ்சுக்கு பெர்பார்ம் பண்றாரே…
இவர்கிட்ட இனி கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்…
ஏம்மா!… ஒண்ணுமே பண்ணலனாலும் சலிச்சிட்டு போற, மனுஷன் ஏதாவது பெர்பார்ம் பண்ணாலும் பயந்துக்கிற… இப்ப அவரை என்னதான் பண்ண சொல்ற… என்று மனசாட்சி நியாயமாய் கேள்வி எழுப்ப
அதுக்குன்னு ஒரே நாள்ல இத்தனை முத்தம் கொடுப்பாங்களா…
சரி அப்போ ஒரு நாளைக்கு எத்தனை கொடுக்கலாம் நீ நினைக்கிற..
அது வந்து ஒரு… ஒன்னு.. ரெண்டு.. இல்ல இல்ல.. ஒரு அஞ்சு😆 என்று அவள் பதிலளிக்க…
“த்து” என துப்பி விட்டு சென்றது மனசாட்சி.. இவ்வளவு நேரம் ஏதோ புடிக்காத மாதிரியே பேசினியே…
விரலை கடித்த படி…. புடிச்சிருக்கு.. ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்புன்னு கொஞ்சம் உறுத்தலா இருக்கு…
முட்டைய சைவத்துல சேர்த்த மாதிரி… இப்போ முத்தத்தையும் சைவத்தில சேர்த்துட்டாங்க… நீ போய் நிம்மதியா தூங்கு… நேர்ல பண்ண முடியாததெல்லாம் கனவுல வந்து பண்ணுவாரு போ.. என்று மனசாட்சி அவளை அறிவுரை கூறி அனுப்பி வைத்தது… ஆம் காய்ச்சலுக்கு பிறகு பாவம் பார்த்து பையன் விடவில்லை அவ்வுப்போது கனவில் வந்து கள்ளத்தனமாய் தன் வேலையை முடித்துக் கொண்டு சென்று விடுவான் கள்வன். அதில் பழக்கப்பட்டது தான் அந்த மச்ச-உச்ச விபரங்கள் எல்லாம்…
கலர் கலர் கனவுகளுடன் கட்டிலில் சாய்ந்தாள் பெண்மலர்…
*********
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️