அரக்கன் 10

கணவனிடம் சண்டைக்கு சென்றவள் அவன் விழியை நோக்கி கண் அடிக்க அவளோ, முறைப்புடன் அவன் அருகில், வந்து அமர்ந்து கொண்டாள் …. 

 வர்மனை அவள் ஒரு எதிர் பார்ப்புடன் பார்க்க ,  அவன் ஏதுவும் சொல்ல வில்லை அவள் முகம் வாட ஆரம்பிக்க ஆர்யன் தன் மனைவியின் முகத்தில் உள்ள ஏமாற்றத்தை பார்த்தவன்     “நம்ம சென்னை போக போறோம்” என்று அவன் சொன்னதும் அவள் முகத்தில் அப்படியொரு புன்னகை அவளின் புன்னகையை பார்த்த இருவருக்கும் கவலையாக இருந்தது …..

இந்த புன்னகை இனி எப்பொழுதும் இவள் முகத்தில் இருக்க வேண்டும்…

 ஆனால் அங்கு சென்ற பிறகு இது சாத்தியமா என்று இருவருக்கும் தெரியவில்லை…. 

அவர்கள் இருவருக்கும் தனிமை குடுக்க நினைத்து தான் தூங்க போவதாக வர்மன், சொல்லி   அங்கு அவனுக்கு என்று இருக்கும் அறைக்கு சென்றுவிட்டான்…….

ஆர்யனிடம் விழி “அண்ணா சாப்பிடல” என்று கூற” “அவன் ரெஸ்ட் எடுக்கட்டும் நீ வா நம்ம சமைக்கலாம் என்று அவளுடன் உணவு சமைக்க சென்றான்…..

தாராவோ! மணி 7 ஆகியும் எழுந்து  இருக்காமல் இருக்க பயத்துடன் அந்த பெண் நிற்று கொண்டு இருந்தாள் “அந்த சார் இப்போ கால் பண்ணா நா என்ன சொல்லுவே” இந்த அம்மா இப்படி தூங்குது என்று மனதில் நினைத்தாள் ….

அவள் நினைத்தது போலவே அவளுக்கு அழைப்பு வர சற்று தயக்கதுடன் அழைப்பை எடுத்த அந்த பெண்ணோ! சார் என்று சொல்ல மகாராணி இன்னும் எழுதுக்கலய இல்ல சார் என்று சொல்ல இதுக்குத்தான் உங்கள அங்க பாத்துக்க சொன்னேனா நா வேற யாராவது வச்சு பாத்துக்குறே என்று அவன் சொல்ல சார் சார் வேண்டாம் சார் நான் போய் எழுப்புறேன் சார் என்று சொல்ல, தண்ணிய மேல ஊத்தி ஏழுப்புங்க அப்போதா சீக்கிரம் எழுதிரிப்பா என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டான்…….

அந்த பெண்மணி அறைக்குள் நுழைந்து அங்கு இருந்த தண்ணிரை அப்படியே அவள் மேல் ஊற்ற அவள் கோவத்துடன் எழுத்து பார்த்து அந்த பெண்ணை முறைக்க ஆரம்பிக்க” சார் இப்படிதா எழுப்ப  சொன்னார்” என்று அந்த பெண் சொல்ல அவள் வேறு எதுவும் சொல்ல வில்லை……

குளியலறை புகுந்து தன் கடமைகளை முடித்து வெளியே வந்தவள் ஏதாவது உடை கிடைக்குமா என்று பார்த்தாள், அங்கு 2 செட் ஆடைகள் இருந்தன…….

இத்தனை நாட்கள் அவள் அணிந்து இருந்த உடைகளை துவைத்து காயவைத்து மீண்டும் அணிவாள்…

 இன்று தான் வேறு உடை அணிய போகிறாள் குளித்து முடித்து ஒரு இலகுவான உடையுடன் வெளியே வந்தாள் …..

 நேற்று வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து வைத்து விட்டாலள். இரண்டு அறைகள்‌ மட்டும் சுத்தம் செய்யாமல் இருக்க அந்த அறையை நோக்கி சென்றாள்…..

அங்கு இருந்த ஒரு அறையை திறந்து உள்ளே சென்றவள் அப்படியே நின்று விட்டாள்  காரணம் அந்த அறை சுவர்  முழுவதுமே புகைப்படங்கள் இரண்டு அடவர்களும் ஒரு பெண்ணும் அதில் ஒரு ஆடவன் வர்மன் பார்க்க அழகாக இருந்தான் கன்ன குழி சிரிப்புடன் அனைவரையும் கவரும் தோற்றத்தில் இருந்தான்….

தாடி இல்லாமல், தலை முடி, சரியாக வெட்ட பட்டு புகைப்படத்தில் உள்ளவனுக்கும் நேரில்உள்ளவனுக்கும் ஏத்தனை மாறுபாடுகள் தாடி அடர்ந்து ,தலை முடி, தோல்வரை, வளர்த்து இறுக்கமான முகத்துடன், எத்தனையோ வித்தியாசம் சொல்லலாம் ,…..

ஆடவர்கள் இருவம் அந்த பெண்ணின் தோள் மீது கை போட்டவாரு  ,அவளின் மடியில் இருவரும் தூங்குவதை போல் அவள் இருவர் தலை முடிகளையும் கோதிவிடுவது, போல் உணவு ஊட்டுவது போல், அவ்வளவு புகை படங்கள் அந்த புகை படமே சொன்னது அவர்கள் எவ்ளோ மகிழ்ச்சியாக வாழ்ந்துது இருக்கிறார்கள் என்று ,இந்த    மூவரில் யாருக்கு நான் என்ன செய்தேன் என்று யோசித்து பார்த்தாள்…..

 ஏதும் தெரிய வில்லை எனக்கு ஏதும் ஞாபகம் வர மட்டுதே இவங்க யாருனு கூட தெரியல அப்புறம் எப்படி நான் காரணமாக  இருக்க முடியும் என்று யோசித்தவள் அந்த பெண்ணின் குரல் கேட்க சுதாகரித்தவள் மெதுவாக வெளியே வந்து விட்டாள்… 

அந்த பெண் சார் உங்கள இங்க விட கூடாதுனு சொல்லி இருக்கார் கீழ வாங்க என்று அழைத்து சென்று விட்டாள் ……

 இங்கு ஒருவனோ, அவள் என்ன எல்லாம் அங்கு செய்தால் என்று திறையில் பார்த்தவன்  அவள் உள்ளே சென்று வெளியே வந்தது முதல் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்…..

 அதுதானே அவனுக்கு தேவை அவளை நன்றாக குழப்பி விட்டவன்” Game Start” என்று மனதில் நினைத்தவன் குடும்பத்துடன் வெளியே சுத்தி பார்க்க சென்று விட்டான் ……

 மூவரும் சேர்ந்து   ஊட்டியில் எல்லா இடங்களும் சென்று சுத்தி பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்….

ஆண்கள் இருவரும் இரவு உணவு சமைக்க  அவர்களை புன்னகையுடன் கண்கள் கலங்க பார்த்து கொண்டு இருந்தாள் விழி…..

மீண்டும் வருவான்  ………..

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top