அசுரன் 93

அசுரன் 93 

 

வெளியே மழை அடித்து வெளுத்துக் கொண்டிருந்தது. காரின் விண்ட்ஷீல்டுக்கு மேல் விழும் ஒவ்வொரு மழைத்துளியும் ஒரு தாளத்தை உருவாக்க, உள்ளே நிலவிய அந்த நிசப்தம் இன்னும் கவித்துவமாக இருந்தது. காரின் ஏசி குளிரையும் தாண்டி, உள்ளே அவள் சூடியிருந்த மல்லிகைப் பூவின் வாசம் ஆதியின் நாசிகளைத் துளைத்து, அவனது ஆழ்மனதில் ஒரு விதமான போதையை ஏற்றியது.

அவள் தன் முகத்தை இரண்டு கைகளாலும் மூடிக்கொண்டு வெட்கத்தில் நெளிந்தபோது, அந்தச் சத்தமில்லாத காருக்குள் அவளது கண்ணாடி வளையல்கள் செய்த ‘கிண் கிண்’ ஓசை அவனுக்கு ஒரு மெலோடி போலத் தெரிந்தது. மழையில் நனைந்திருந்த அவளது ஆடை அவளது உடலோடு ஒட்டிக் கொண்டு, ஒரு ஓவியத்தைப் போல அவளைக் காட்டிக் கொடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் கழுத்தில் மின்னிய அந்தப் புது மஞ்சள் தாலி… அது அவளுக்கு ஒரு தெய்வீகப் பொலிவைக் கொடுத்தது என்றால், ஆதிக்கு ‘இவள் இனி என் சொத்து’ என்கிற அந்தத் திமிரான உரிமையைக் கொடுத்தது.

 

அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்குக் கண்கள் போதவில்லை. மெதுவாக அவளது கைகளை முகத்திலிருந்து விலக்கினான். அவளது விரல்களில் இருந்த மருதாணி சிவப்பை விட, அவளது கன்னங்கள் அதிக சிவப்பாகியிருந்தன. 

 

அந்த மருதாணி கையில் தன் முதல் முத்தத்தைப் பதித்தவன், ஒரு தாபமான குரலில் கேட்டான், சிட்டு… அந்த டே-வ ரீ-கிரியேட் பண்ணலாமா? இந்த காருக்குள்ள நம்மளோட அந்த ஃபஸ்ட் கிஸ்… இன்னமும் எனக்கு அது ரொம்ப பிரஷியஸ்.

அவன் சொல்லும்போதே அவளது ஒவ்வொரு விரலாக இதழ்களால் வருடினான். அவளுக்குத் தேகம் சிலிர்த்தது. குளிரா அல்லது அவனது ஸ்பரிசமா என்று தெரியாத ஒரு நடுக்கம் அவளை ஆட்கொண்டது. 

 

​”தேவா … வேண்டாம்… வீட்டுக்கு போயிடலாம்…” என்று அவள் பலவீனமாகச் சொன்னாள். ஆனால் அவளது உடல் அவனது அணைப்பிற்கு இன்னும் நெருக்கமாக ஒத்துழைத்தது.

 

​”வீட்டுக்கு போனா இந்த மழையும், இந்த காடும், இந்தத் கிளைமேட்ம் கிடைக்குமா டி?” என்று அவன் கேட்டபடியே, அவளது கழுத்தின் பின்புறம் தன் கைகளை விட்டு, அவளைத் தன்பக்கம் இன்னும் அழுத்தமாக இழுத்தான். அவளது இதழ்கள்… அவன் சட்டையின் இரண்டு பட்டன்களை  திறந்து, அவளது முகத்தை தன் மார்போடு சேர்த்துக் கொண்டான்.

​அவனது இதயத் துடிப்பை அவள் உணர்ந்த அந்த நொடி, அவளுக்குள் இருந்த எல்லாத் தடுப்புகளும் உடைந்தன. ஆதி மெல்ல அவளது தோள்பட்டையில் இருந்த அந்த நனைந்த சேலையைச் சற்றே விலக்கினான். அவளது தங்க நிற தோள் மழையின் குளிரில் சிலிர்த்துப் போய் இருக்க, அவனது சூடான இதழ்கள் அங்கே தஞ்சம் புகுந்தன.

​”தேவா…” என்று அவள் முனகியபடி அவன் தலையைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டாள்.

 

அவனது கைகள் இப்போது அவளது இடையைத் தாண்டி, அவளது முதுகின் வளைவுகளை மெல்ல வருடின. அவளது மேலாடையின் ஊக்குகளைத் தன் விரல்களால் அவன் சீண்டியபோது, அவளுக்குள் ஒரு மின்னல் வெட்டியது போல இருந்தது.

 

தேவா வேண்டாம் ப்ளீஸ்… ஒருவித படபடப்பு, அவள் பட்டாம்பூச்சி கண்களில் தெரிந்தது…

 

“என்ன வேண்டாம்? என்று கேட்டபடி அவள் பக்கம் இன்னும் நெருங்கினான். அவளது கழுத்து ஓரம் லேசாகக் கலைந்திருந்த முடியை ஒதுக்கிவிட்டு, அந்த மஞ்சள் தாலியை மென்மையாகத் தொட்டான். “இப்போ நீ என்னோட வைஃப்… முழு உரிமை எனக்கு இருக்கு,” என்றான் ஒரு குறும்பான சிரிப்புடன்.

அவள் மெதுவாக அவன் கண்களை ஏறிட்டாள். “அன்னைக்கு பயம்… இன்னைக்கு ஒரு மாதிரியான படபடப்பு தேவா,” என்றாள் மிக மெல்லிய குரலில்.

 

தேவன், அவளது இடையைச் சுற்றி ஒரு கையைப் போட்டு, அவளை இன்னும் அருகில் இழுத்துக் கொண்டான். காரின் அந்தச் சிறிய இடைவெளியில் அவர்களின் மூச்சுக்காற்று ஒன்றுடன் ஒன்று கலந்தது. ” காம் டவுன்… ஐ ஆம் ஹியர் ஃபார் யூ,” என்று சொல்லிக் கொண்டே அவளது நெற்றியில் நீண்ட முத்தம் ஒன்றை வைத்தான். அந்த ஈரமான கூந்தலின் வாசம் அவனுக்குள் இன்னும் வேட்கையை அதிகமாக்கியது.

 

வெளியே இடி இடித்த சத்தத்தில் அவள் திடுக்கிட்டு அவன் சட்டையை இறுகப் பற்றினாள். “பயப்படாத டி , நா இருக்கேன்,” என்று சொல்லி அவளது கன்னங்களை வருடினான். அவனது கட்டைவிரல் அவளது இதழ்களை மென்மையாக வருடியது. அவள் கண்கள் தானாகவே மூடிக்கொண்டன.

அவன் மெல்ல குனிந்து அவளது இதழ்களுக்கு அருகில் சென்றான். அவளது இதழ்களில் இருந்து வெளிவந்த அந்தத் தகிக்கும் மூச்சுக்காற்று அவனது முகத்தில் பட்டது. ஒரு நொடி அவளைத் தவிக்கவிட்டு, பின் மிக மென்மையாக அவளது இதழ்களைத் தன் இதழ்களால் சிறைபிடித்தான். அந்த முத்தத்தில் காதல், ஏக்கதுடன் இன்று என் உரிமை என்ற ஒன்று கலந்திருந்தது.

 

அவள் மெல்ல அவன் கழுத்தைச் சுற்றி கைகளைப் பின்னிக்கொண்டாள். அவளது கண்ணாடி வளையல்கள் மீண்டும் அந்த இசையை மீட்டின. காரின் ஜன்னல் கண்ணாடிகள் மூடுபனியால் மறைக்கப்பட, உலகம் முழுவதும் மறைந்து அந்தச் சிறிய காருக்குள் அவர்கள் இருவர் மட்டுமே இருப்பது போன்ற பிரம்மை ஏற்பட்டது.

 

“யூ ஆர் சோ சாஃப்ட் ,” என்று அவள் இதழ்களிலேயே முணுமுணுத்தான். அவனது கைகள் அவளது மேனியை வருடிக்கொண்டிருக்க, அவளது கூச்சம் மெல்ல மெல்லக் குறைந்து தேவனின் காதலில் கரைந்து போனாள்.  இந்த முறை அது வெறும் முத்தம் மட்டுமல்ல; அது ஒரு நீண்ட தாகத்தின் தீர்வு. அவளது நாவோடு அவன் நாவுகள் விளையாட, இருவரின் மூச்சும் திணறியது. காருக்குள் இருந்த ஆக்சிஜன் மொத்தமும் தீர்ந்து போனது போன்ற ஒரு உணர்வு.

 

​அவள் மெல்ல அவனது சட்டையை விலக்கி, அவனது தோள்களைத் தன் நகங்களால் கீறினாள். அந்தச் சிறு வலி அவனுக்கு இன்னும் போதையை ஏற்றியது. முத்தத்தின் வேகம் அதிகரித்தது, இப்பொழுதே மொத்தமாய் அபகரித்து விடும் வேட்கை… அவளது வளையல்கள் இப்போது அதிவேகமாக சத்தமிட, காரின் சீட் மெல்லப் பின்னோக்கிச் சாய்ந்தது.

​”சிட்டு… இன்னைக்கு உன்னோட இந்த வாசம் என்னை பைத்தியம் பிடிக்க வைக்குது டி ” என்று அவன் அவளது காதோரம் கிசுகிசுக்க, ஆடவன் சொல்லிவிட்டான்… ஆனால் பெண் அவள் அவன் வாசனையில் மதி மயங்கி கிடந்தாள்… அந்த மழை வாசமும், மல்லிகை வாசமும், அவர்களது முதல் முத்தத்தின் மறுபதிப்பும் அந்த காரை ஒரு சொர்க்கமாக மாற்றியது..  ஆதியின் மனம் இதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உந்தி தள்ளி, அவளுடைய மேலாடையின் கழன்ட கொக்கிகளின் இடைவெளியில் தனது முகத்தை புதைத்து, சொர்க்கவாசலை சாவிக் கொண்டு திறக்க முற்பட்ட நேரம்… 

 

“இங்க நான் ஒருத்தன் இருக்கேன் டா” என்னும் விதமாய்… போன் ஒலித்தது…

 

மார்பு பிளவில் மதி மயங்கி புதைந்து இருந்தவனை தட்டி எழுப்பி போனை எடுக்க செய்தாள் மலர்…

என்னோட செல்லத்தை விட்டு நான் எங்கயும் போக மாட்டேன் என்னும் விதமாய் இறுக்கி பிடித்துக் கொண்டான்… ஐயோ என்றானது அவளுக்கு 

 

ப்ளீஸ் தேவா… போன் பண்ணிட்டே இருக்காங்க எடுங்க… என்று சிணுங்கியவள் வலுக்கட்டாயமாய் அவனை பிரித்து எடுத்தாள்… 

 

ரவி தான் அழைத்திருந்தான்… சார் நீங்க அனுப்புன லொகேஷனுக்கு நான் வந்துட்டேன் சார் எங்க இருக்கீங்க என்று கேட்க….

 

என்ன ரவி எப்படி இவ்ளோ சீக்கிரம் வந்தீங்க…

 

சார்… எல்லா வேலையும் அப்படியே போட்டுட்டு காரை எடுத்து விரட்டி அடிச்சு வந்துட்டேன் சார்… அதனாலதான் சரியான நேரத்துக்கு நீங்க சொன்ன இடத்துக்கு வர முடிஞ்சது என்றான்…

 

ரொம்ப சரிரிஈ..யான நேரத்துக்கு வந்துட்டீங்க… நல்ல்..லா இருப்பீங்க… என்றான் பல்லை கடித்த படி…

 

மலருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை சத்தமில்லாமல் குலுங்கி குலுங்கி சிரித்தாள்.

 

தேங்க்ஸ் சார்…  ஏதோ என்னால முடிஞ்ச உதவி… நான் வெயிட் பண்றேன் சார் நீங்க வாங்க… என்று அழைப்பை துண்டித்தான்… 

 

என்னோட நிலைமையை பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கு…  இத விட்டு  போகவே மனசு இல்லடி… பார்வையிலேயே களிபரம் செய்தான்…

 

எங்க போய்ட போது… எல்லாம் உங்களுக்கு தான்…. இப்போ போங்க…

என்றாள் சிறு அதட்டலாக…

 

ஒரு ஏக்கமூச்சுடன்… போறேன்… வேற வழி… என விரல் விரித்து சலித்துக் கொண்டவன்.. வீட்டுக்கு போயிட்டு நான் எப்ப கேட்டாலும் தரணும்…

 

வெட்கமும் கூச்சமும் போட்டி போட அடக்கப்பட்ட சிரிப்புடன் தர்ர்ர்றேன்… போங்க… என்று அழுத்தமாய் கூறி அவன் தோளை பிடித்து தள்ளினாள்…. 

 

********

 

கையில் விவாகரத்து பத்திரத்துடன், படுக்கை அறையில்  உள்ளே நுழைந்தான் அருண்…

 

சாட்டின் ரக இரவு உடையுடன் கையில் மது கோப்பையுடன் அமர்ந்திருந்தாள் ரதி…

 

அமைதியாய் வந்து அவள் அருகில் அமர்ந்தவன்… ரதி நம்ம ரெண்டு பேரும் மியூச்சுவல் டைவர்ஸ் அப்ளை பண்ணலாம்னு இருக்கேன்… எனக்கு இந்த திருமண வாழ்க்கையில் பெருசா விருப்பம் இல்லாம போயிடுச்சு என்றான் அருண்..

 

அருண் நீட்டிய அந்த விவாகரத்து பத்திரத்தைப் பார்த்த ரதியின் இதழ்களில் ஒரு ஏளனச் சிரிப்பு அரும்பியது. அவள் கையில் இருந்த ஒயின் கிளாஸை மேஜை மீது வைத்துவிட்டு, மெல்ல எழுந்து அருணின் முன்னே வந்து நின்றாள். அவளிடம் இருந்த அந்த விலை உயர்ந்த மதுவின் வாசனையும், வில்லங்கமான  பார்வையும் அருணை ஒரு கணம் தயங்க வைத்தது.

 

சோ உனக்கு என்னவோ நம்ம குழந்தையவோ பிரியிறதுல எந்த பிரச்சனையும் இல்ல அப்படித்தானே அருண்…

 

குழந்தையை அப்படியே விட போறது இல்ல ரதி நான் குழந்தை ஓட கஷ்டடி எடுத்துக்கிறேன் என்றான்…

 

அதுக்கு நான் சம்மதிக்கணுமே… என் கூட தான் ரித்து இருப்பான் எப்பவுமே… என்றாள் அழுத்தமாய்…

 

உனக்கு அகைன்ஸ்டா நான் கஷ்டடி பைல் பண்ணுவேன்…

 

ஹா.. ஹா…  ஹா… என்று மெல்ல கைதட்டி ஒரு நிமிடம் சிரித்தவள்…

 

அடுத்து அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து படுக்கையை விட்டு எழுந்தான் அருண்..

 

நீ அந்த குழந்தைக்கு அப்பாவே இல்லன்னு நான் fake proof பைல் பண்ணுவேன்… என்றால் ரதி வஞ்சக சிரிப்புடன்.. 

 

வாட்ட எ ஃப**ங் மைண்ட்…  இட்ஸ் நாட் ஃபேர்…. உன்னை நீயே அசிங்கப்படுத்திக்க போறியா… 

 

இதுல உன்னோட மானமும் தான் அடங்கி இருக்கு மறந்துடாத… என்றாள்..

 

ஒத்து வராத பார்ட்னர் கூட எப்படி வாழ முடியும்… பிரிஞ்சு போறது தான் சரி…

 

சில நிமிடங்கள் அங்கும் இங்கும் நடந்த படி யோசித்தவள்… 

ஓகே..  லெட்ஸ் மேக் ஒன் டீல்…

 

நம்ம ரெண்டு பேரும் எதனால கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அப்படின்னு நீ நினைக்கிற அருண்…

 

மே பி அப்போ இருந்த லவ் அண்ட் கிரஷ்… என்று தோளை ஏற்றி இறக்கி  பேசினான்… கடுகடுப்பாய்.. 

 

ஒரு ஏளன சிரிப்புடன் அவனை ஒரு பார்வை பார்த்தவள்…

இது ஏதாவது நம்பறது போல இருக்கா… நான் உண்மைய சொல்றேன்…

 

நீ என்னோட அழகுல அட்மையர் ஆகி  கல்யாணம் பண்ணிக்கிட்டே…

 

நான் உன்னோட ஆண்மையில அட்மையர் ஆகி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… இட்ஸ் ட்ரூ… உன்னோட அந்த வேகம்..   முரட்டுத்தனம்… பார்த்த உடனே பக்குனு பத்திக்கிற மாதிரி… உன்னோட இந்த பிசிக்… என்று கைகளால் அவன் உடம்பை வருடிக் கொண்டே அவள் பேசிக்கொண்டு இருக்க…

அருண் எதையும் மறுத்து வாதிடும் நிலைமையில் இல்லை…

ஆனா இது எதையும் நான் இன்னும் முழுசா அனுபவிச்சு முடிக்கல… சோ இன்னும் ஒரு சிக்ஸ் மந்த் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம்… நம்ம பிசிகல் ரிலேஷன்ஷிப் வச்சுக்கலாம்… எனக்கு எப்போ உன் மேல… உன்னோட இந்த பிசிக் மேல  இருக்க அந்த கிரஷ் குறையுதோ…  அப்போ எந்த டிமாண்ட்ம் இல்லாமல் மியூச்சுவலா நம்ம ரெண்டு பேரும் இந்த மேரேஜ் ரிலேஷன்ஷிப்ப பிரேக் பண்ணிக்கலாம்.. என்ன சேடிஸ்பைடு பண்ணிட்டு, உன்னோட டிவோசை ஈஸியா வாங்கிக்கோ..  குழந்தை உன் கிட்ட சிக்ஸ் மந்த் என்கிட்ட சிக்ஸ் மன்த் இருக்கட்டும்… இல்ல உன்கிட்டயே வாழ்ந்தாலும் எனக்கு ஓகே… எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை… ஆனா என்ன மாதிரி ஒரு ஏஞ்சல் பொண்ண மிஸ் பண்ணதுக்கு நீ வாழ்க்கையில் ரொம்ப வருத்தப்படுவ…

 

அவள் பேசிய அனைத்தையும் கேட்டு, தன் உடம்புகாக தான் தன்னை திருமணம் செய்துள்ளாள்..  என்பதை தெரிந்து அதிர்ச்சியில், மனம் உடைந்து  நின்றான் அருண்.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top