அசுரன் 95
ரவி காரை ஓட்டிக் கொண்டு வர… ஆதி மலரை முறைத்துக் கொண்டே வந்தான்.. அவள் நன்றாக தூங்கி விட்டாள்… அவனின் அவஸ்தை புரியாமல் சிறு குழந்தையாய் தூங்கும் அவளை தான் முறைத்தான்… முழித்திருக்கும் பொழுது காதல் பார்வை பார்ப்பதற்கே அவனுக்கு நேரம் போதவில்லை… அப்புறம் எங்க முறைப்பது… தூங்குபவளை முறைப்பது என்ற பெயரில் ரசித்தபடியே அவ்வவ் போது அந்த எடுப்பாய் எட்டி நிற்கும் உதட்டை ஜவ்வு மிட்டாய் போல் ஒரு கையில் இழுத்து ஒரு முத்தம் வைத்துக் கொள்வான்.. தவழ்ந்து செல்லும் குழந்தை தரையில் சிந்திய சர்க்கரையை பார்த்ததும்.. அம்மாவின் பார்வைக்கு பயந்து.. அவ்வப்போது ஒரு விரலால் தொட்டு, தொட்டு நக்கிக் கொள்ளும்.. ஆசையாய்… அது போல..
இவர்கள் இருவரையும் வீட்டில் இறக்கி விட்டு ரவி அலுவலகம் சென்று விட்டான் மணி அண்ணா அவர்கள் இருவரையும் வாழ்த்தி விட்டு, பைகளை எடுத்து வீட்டிற்குள் சென்றார்…
இருவரும் ஒரு சேர உள்ளே நுழைய போக.. ஒரு நிமிஷம் இங்கேயே நில்லு டி வரேன்… என்று கூறிவிட்டு உள்ளே சென்றவன்…
ஆரத்தி தட்டோடு வந்தான்…
அவனைப் பார்த்து சிரித்தவள் ஜோடியா நின்னு தான் ஆரத்தி வாங்கணும்… இப்ப எப்படி எடுப்பீங்க என்றாள்…
ஒரு நிமிடம் யோசித்தவன்.. கையில் இருந்த அவனது ஃபோனை பிரண்ட் கேமராவை ஆன் செய்து அவனை நோக்கி வைத்து அவள் கையில் கொடுத்தான்.. இப்போ ஓகேவா ரெண்டு பேரும் இருக்கோம்…
ஹ்ம்ம்… என்று அவள் கணவன் செய்யும் அட்டகாசங்களை தான் ரசித்துக்கொண்டே இருந்தாள்..
மூன்று முறை எப்படியோ ஒரு வழியாக சுற்றி அவள் நெத்தியில் பொட்டு வைத்து.. “வாமா இந்த வீட்டோட மருமகளே.. அஞ்சு ஆறு புள்ள குட்டிகளோட நல்லா இருக்கணும் என்று வாழ்த்தி அவளை உள்ளே அழைக்க…
சிரித்துக் கொண்டே உள்ளே வந்தவள்.. அவனை வெளியே நிக்க வைத்து அவனுக்கு ஆரத்தி சுத்தினாள்.. உண்மையிலேயே எங்க ஊர்ல உங்களுக்குத்தான் திருஷ்டி அதிகம்… ஊரே உங்கள பத்தி தான் பேச்சு… அதுவும் என் தங்கச்சிங்க எல்லாம் கண்ணுலையே முழுங்கிருவாளுக்கு போல… என்றபடி சிரித்துக் கொண்டு அவன் நெற்றியில் பொட்டு வைத்து.. உள்ளே அழைத்தாள் மலர்..
வீட்டிற்குள் நுழைந்ததும் கதவைச் சாத்திய வேகத்தில், அவளைத் தூக்கிச் சுவரோடு சாய்த்து இறுக அணைத்துக் கொண்டான் ஆதி. அந்த ஸ்பரிசத்தில் இருந்த உரிமை மலரை ஒரு நிமிடம் நிலைகுலையச் செய்தது. அவளது கழுத்துச் சரிவிலும், முதுகின் வெற்று பாகங்களிலும் தன் இதழ்களை அழுத்தமாகப் பதித்தவன், அவளது காதோரம் தன் இதமான மூச்சை ஏவி, “இனி நோ டிஸ்டர்பன்ஸ்… இப்போவே நாம ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று கிறக்கமான குரலில் கேட்டான்.
அவளது உடல் அவன் அணைப்பில் உருகினாலும், ஒரு நிமிடம் அவனைத் தடுத்து நிறுத்தினாள். “தேவா… ஒரு நிமிஷம் இருங்க… எனக்கு செம பசி… அப்புறம் ரொம்ப டயர்டாவும் இருக்கு. ப்ளீஸ்…” என்று கெஞ்சலாகச் சொன்னாள்.
ஆதி அவளை மெல்ல விடுவித்து, ஒரு குறும்புச் சிரிப்புடன் அவளது மூக்கைத் தட்டினான். “ஓ…செல்லத்துக்கு பசிக்குதோ? அதுவும் சரிதான். வயிறு ஃபுல்லா சாப்பிட்டு, இப்போ ஒரு குட்டித் தூக்கம் போட்டு ரெஸ்ட் எடுப்போம். அப்போதான் நைட்டுல இருந்து காலைல வரைக்கும் ‘வேலை’ பார்க்க முடியும். நோ டிஸ்டர்பன்ஸ்… அந்த எனர்ஜி நமக்கு வேணும்ல?” என்று வாய்விட்டுக் கணக்குப் போட்டுப் பேசினான்.
”இரு, ஸ்விக்கியில உனக்குப் பிடிச்சதை எல்லாம் ஆர்டர் பண்றேன். இன்னைக்கு நைட் ஃபுல்லா நாம முழிச்சிருக்கப் போறோம், சோ ஹெவியாவே ஆர்டர் பண்ணிடலாம்,” என்று சொல்லிக்கொண்டே பிரியாணி, ஸ்டார்ட்டர்ஸ் என குதூகலமாய் வரிசையாக ஆர்டர் செய்தான்.
இருவரும் சாப்பிட்டு விட்டு தனி, தனி அறையில் உறங்க…
வீட்டின் காலிங் பெல் அடிக்க.. ஆதி எழுந்து வந்து கதவை திறந்தான்…
விக்ரம் அகல்யாவும் நின்றிருந்தனர்…
வா அகி… வாடா மச்சான் என்று அழைத்து அமர வைத்து… உபசரித்தான்…
மலர் எங்கடா என்று கேட்டதற்கு தூங்கிட்டு இருக்கா என்று கூறி இதோ கூப்பிடுறேன்… என்று போனை எடுக்க… அறைக்குள் இருந்து வெளியே வந்தாள் மலர்…
வாங்கண்ணா… வாங்க மேடம்… என்றாள்…
இன்னும் என்ன “மேடம்” என்று முறைத்தாள் அகல்யா… அதான் எங்க அண்ணனோட பொண்டாட்டி ஆகிட்டயே… Call me அண்ணி..
அடியே அடாவடி.. நீ இப்படி முறைச்சு பார்த்தா அந்த பொண்ணு உன்னை எப்படி அண்ணி என்று கூப்பிடும்… நீ முதல்ல எதுக்கு அவளை எப்ப பாரு முறைச்சிகிட்டே இருக்க…
அவ என்ன பண்ணான்னு உங்களுக்கு தெரியாது… இவளை நம்பி நாங்க ஒரு இன்டர் காலேஜ் காம்படிஷன்ல சேர்ந்திருந்தோம்… இவதான் அதுக்கு சென்டர் பர்ஃபார்மன்ஸ் கொடுக்கிறதா இருந்தது… ஆனா நாங்க காலேஜுக்கு கிளம்பும்போது கடைசி நிமிஷத்துல இவ வரவே இல்ல அதனால நாங்க அந்த காம்பெட்டிஷன்ல தோத்துட்டோம். எங்களுக்கு எவ்வளவு இன்சால்ட்டா போயிடுச்சு தெரியுமா… ஜூனியர்ஸ் எல்லாம் எங்களை கலாய்ச்சாங்க… என்று அகல்யா வேதனை பட்டு கூற…
ஏண்டி இதெல்லாம் ஒரு காரணமா என்று விக்ரம் “ஆ” வென வாயை பிளந்து பார்த்தான்…
கடைசி நிமிஷம் வரைக்கும் இதோ வந்துட்டேன் பக்கத்துல வந்துட்டேன் அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தா… நாங்க கிளம்பி போயிட்டோம்.. அப்புறம் வந்து ரீசன் சொல்றா யாரோ ரோட்டுல அடிபட்டாங்க… அவங்களுக்கு கட்டுப்போட்டு… தெரிஞ்சவங்க வந்த உடனே விட்டு வரேன் அப்படின்னு சில்லி ரீசன் சொல்றா தெரியுமா… என்று அகல்யா முகத்தை வெட்டி அந்த பக்கமாய் திருப்பிக் கொள்ள…
இதுக்காகவா இத்தனை வருஷமா பேசாம இருக்க…
பின்ன இல்லையா… அது என்னோட பிரெஸ்டிஜ் பிராப்ளம்… என்றாள்..
உங்க ஆதி அண்ணன் காலேஜ் பர்ஸ்ட் இயர் படிக்கும்போது.. annual day ல 3d இயர் படிச்ச சீனியர வாயிலேயே குத்தி கடவாய உடைச்சான்… அடுத்த இயர்ல அவங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட் ஆயிட்டாங்க… பசங்க எங்களோட கோபம் அவ்வளவுதான்… நீங்க என்னமா டான்ஸ் ஆட வராதுக்கு எல்லாம் வருஷக்கணக்கா கோச்சுட்டு இருக்கீங்க…
இவர்கள் பேசிக் கொண்டு இருக்க சூடாய் கேசரியும் டீயும் போட்டு எடுத்து வந்தாள் மலர்…
ஆஹா எத்தனை நாளாச்சு என் தங்கச்சி செஞ்சு கொடுத்த ஸ்னாக்ஸ் சாப்பிட்டு… என்று முதல் ஆளாய் கையில் எடுத்தான் விக்ரம்.
சாரி அண்ணி… அந்த ரீசன் உண்மைதான் அடிபட்டவர் கூட உங்க பக்கத்துல தான் உட்கார்ந்து இருக்காரு.. அவர்கிட்டயே கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க என்றாள் மலர்..
யாரு எங்க ஆதி அண்ணாக்கா?…
ஆமாம் என தலையசைத்தான் ஆதி…
மலர்… இவனையெல்லாம் அப்படியே ரோட்லயே விட்டுட்டு நீ அவ கூட டான்ஸ் ஆட போயிருக்கலாம் தப்பு பண்ணிட்ட என்றான் விக்ரம் கேலியாக…
அப்படி நடந்திருந்தா… நானும் ரோடு ரோடா தேடாமல்… இந்நேரம் நிம்மதியா ஒரு கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தைகள் இருந்திருக்கும்… என்றான் மலரை சீண்டும் நோக்கத்துடன்…
ஆனால் மலர் இது எதையும் கவனிக்காமல் வேறொரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்…
இதை ஆதியும் கவனித்தான்.
சரி.. நான் வந்த விஷயத்தை சொல்றேன் எங்க வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கிறதுக்கு தான் வந்தோம் எப்ப வர்றீங்க என்று கேட்டான் விக்ரம்…
சாரிடா மச்சான்… இப்ப நான் அருண் வீட்டுக்கு வந்தா நல்லா இருக்காது ஆல்ரெடி ருத்ரா ஆன்ட்டி என்ன வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க…
மச்சா…ன்.. என்று தயங்கியவன்.. நாங்க இப்போ அகல்யா வீட்ல இல்ல… இங்க இருக்கிற எங்க வீட்ல தான் இருக்கோம்…
இது எப்ப இருந்துடா… ருத்ரா ஆண்டி எப்படி விட்டாங்க..
அது ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் டா..
நோ விக்கி… அது மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் இல்ல எங்கள இன்சல்ட் பண்ணிட்டாங்க அண்ணா நான் அதனால நாங்க வீட்டை விட்டு வந்துட்டோம்…
ஏன்… என்னாச்சு…
நடந்த அனைத்தையும் விக்ரம் கூறினான்…
பின் அனைவரும் உணவருந்தி விட்டு விக்ரம் அகல்யா அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார்..
கிளம்பும் முன் விக்ரம் ஆதியை கட்டி அணைத்து.. வாழ்த்துக்கள் டா மச்சான் என்றான்..
அதுதான் காலையிலேயே அத்தனை தடவ சொல்லிட்டியே அப்புறம் என்ன…
தெரியாத மாதிரி கேக்குறியே என்று.. சூசகமாக ஆதியின் வயிற்றில் குத்தியவன்… ரொம்ப பிஸி அஹ இருப்பேன்னு நினைச்சேன் மச்சான்.. கதவ தெறக்க மாட்டேன்னு நெனச்சேன்… அதனால உன் தங்கச்சியை கூட நேர்ல போக வேணாம் போன்ல சொல்லுன்னு சொன்னேன்… அவ தான் கேக்கல… நாங்க ஒன்னும் உன்ன டிஸ்டர்ப் பண்ணலையே மச்சான்… என்றான் கலாய்க்கும் தோணியில்…
டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லடா ரெண்டு பேரும் அவங்க அவங்க ரூம்ல தான் தூங்கிட்டு இருந்தோம்…
ஏன்டா…
எல்லாம் முறைப்படி தான் நடக்கணும்னு முட்ட கண்ண உருட்டுறா.. முட்டக்கண்ணி…
உன்ன பயமுறுத்துறதுக்கும் உலகத்துல ஒரு ஆள் இருக்கு பாரு…
ஒரே ஒரு சந்தேகம் மட்டும் மச்சான்… இந்த படத்துல எல்லாம் வர்ற மாதிரி பூ டெக்கரேஷன் எல்லாம் பண்ணலையா…
அப்படியே பேசிக்கிட்டே இருக்க போறியாடா… கிளம்பு என்று அவனது தோளை பிடித்து திருப்பி வாசல் நோக்கி தள்ளினான் ஆதி…
தங்கச்சி வந்த உடனே மச்சான மறந்துராதடா… உனக்கு முதல்ல ஐ லவ் யூ சொன்னது நான்தான்…
அப்படி சொல்லி தான்டா எனக்கு ஊருக்குள்ள கெட்ட பேரு வாங்கி கொடுத்து இருந்தீங்க… பேசாம போடா அடி வாங்காம..
அவர்களை வழி அனுப்பி வைத்து வாசல் கதவை பூட்டியவன் இதயம் படபட என்று அடிக்க ஆரம்பித்தது… உடல் முழுக்க குறுகுறு என்று இருந்தது… கை கால்கள் பரபரத்தன…
பேக்ரவுண்டில் குதிரை கணைக்கும் சத்தம் எல்லாம் கேட்டது..
“ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு…” என்று பாடிக் கொண்டு, குதுகளித்தபடியே… மலரின் அறைக்குள் நுழைந்து இருந்தான்…
குளித்து முடித்து ஈரத்தலையுடன் இரவு உடைக்கு மாறி இருந்தாள் பெண்…
கண்ணாடி முன் இருந்தவளை பின்னாடி இருந்து அணைத்தவன்…
என்னடி நைட் டிரஸ் போட்டு இருக்க.. சேலை கட்டு… என்று சொன்னபடி.. துண்டில் முடிந்திருந்த அவள் கூந்தலை அவிழ்த்து விட்டு துடைத்து விட்டான்…
இன்னைக்கு கண்டிப்பா அது நடக்கணுமா…?
இதைக் கேட்டு உலுக்கி விழுந்தவன்… என்னது நடக்கணுமா வா?… நடக்கணும் நடந்தே ஆகணும்… இன்னையோட என்னோட பிரம்மச்சாரியத்தை முடிச்சுக்க போறேன்… ஐ அம் வெரி எக்சைட்டிங்… நானும் போய் குளிச்சிட்டு பட்டு வேட்டி சட்டைல வரேன்… நீயும் சேலை கட்டி ரெடியாயிரு மாமா வரேன்…. என்று கன்னத்தில் முத்தமிட்டு ஓடி விட்டான்…
அவன் சென்றதும் வேகமாக அறையில்… எதையோ சுற்றும் முற்றும் துலாவினாள் மலர்.. பின்பு தன் கையில் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு…. சமையலறைக்கு சென்றாள்…
முந்திரி பாதாம் போட்ட பாலை திக்காக காய்ச்சினாள்… அதில் தன் கையில் வைத்திருந்த மாத்திரையை… ஒரு நிமிடம் கையில் எடுத்து பார்த்தவள்… சிறு யோசனைக்கு பின் அதை பாலில் கலந்தாள்…
சேலை கட்டி தேவதை போல் கை வளையல்கள் குலுங்க கால் கொசு சிணுங்க… தலையில் மல்லிகை வாசத்துடன்.. கையில் பால் டம்ளர் உடன் அரைக்குள் நுழைய… அவள் வருவதை முன்னையே கணித்து வைத்திருந்தவன்… உள்ளே வந்ததும் அணைத்துக் கொண்டான்…
ஒரு வழியாய் அவனை சமாளித்து படுக்கையில் அமர வைத்தவள்… கையில் இருந்த பாலை அவனைக் குடிக்க சொல்லிக் கொடுக்க… முதலில் வேண்டாம் என்று மறுத்தவன்… அப்பதான் உடம்புக்கு தெம்பு கிடைக்கும்… என்று அவளின் வற்புறுத்தலால்… முழுவதும் அவனே குடித்து முடித்தான்… சிறிது நேரம் ஏதேதோ அவனிடம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள்… பின் மெல்ல மெல்ல அவன் அவளை நெருங்க… அவள் கழுத்தை நெருங்கும் வேளையில்… அவள் மேலேயே தூங்கி விழுந்தான்… தேவா… சிறிது நேரம் அவன் தலையை தடவியவாறு படுத்துக் கொண்டிருந்தவள்… முழுமையாக தூங்க வைத்துவிட்டு, அவனை மெல்ல நகர்த்தி பக்கத்தில் படுக்க வைத்து விட்டு… எழ முயல…
சரியாக அவளுடைய போன் அழைத்தது…
Private Number calling….
போனில் வந்த அழைப்பை உடனே எடுத்தவள்…
சொல்லு… நீ சொன்ன மாதிரி அவர தூங்க வச்சுட்டேன்… என்று கூறினாள் மலர்.
மறுமுனையில் “குட் குட்” என்ற ஒரு ஆண் குரல் கேட்டது…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️