அசுரன் 103

 

அசுரன் 103

 

நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க இன்னும் ஊருக்கு கிளம்பலையா ராஜேஷ் என்றான் தனது சிங்கக்குரலில்…

 

என்னோட திங்ஸ் எடுக்க வந்தேன் ப்ரோ.. இதோ கிளம்பிட்டேன் என்று தனது பொருட்களை எடுத்துக்கொண்டு, பாய் மலர்! என்று கூறிவிட்டு.  வேகமாய் அங்கிருந்து கிளம்பினான் ராஜேஷ்..

 

போகும் அவனைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல், மலரை பார்த்து ஒரு முறை முறைத்து விட்டு… அறையை விட்டு வெளியே வந்து, லேப்டாப் உடன் சோபாவில் அமர்ந்தான் ஆதி.

 

அவன் முறைப்பை பார்த்தவள்… நீ என்னோட ப்ராப்பர்ட்டி.. நீயே உன்ன தொடக்கூடாதுன்னு சொல்லுவாரு… இவன் பண்ணிட்டு போற வேலைக்கு என்ன சொல்ல போறாரோ… என்று பயந்து படியே சேலையின் தலைப்பை திருகிக்கொண்டே…. அவன் அருகே வந்து நின்று மெதுவாய்,

அது நானும் ராஜூவும் சும்மா தான் பேசிக்கிட்டு இருந்தோம்… என்றாள்.

 

சரி… அதுக்கு இப்போ என்ன என்றான் ஆதி மிரட்டலாய்…

 

அவன் ஒரு பிரண்ட்லியா தான் என்னோட நெத்தியில முட்டினான்… என்றாள் திக்கி திணறி… 

 

ஏன் உனக்கு பேச தெரியாதா? திக்கு வாயா…. சொல்ல வேண்டியத சொல்லிட்டு டக்குனு நகரு!.. எனக்கு ஆன்லைன்ல மீட்டிங் இருக்கு.. என்று எரிந்து விழுந்தான்…

 

எதுக்கு இப்ப இவ்வளவு கோவமா இருக்கீங்க..  சாரி உங்களுக்கு பிடிக்கலைன்னா இனிமேல் நான் ராஜேஷ் கூட பேசல என்றாள்.. முகத்தை தொங்க போட்டு…

 

இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு மூஞ்சிய இப்படி தொங்க போடுற..

 

நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு கோவமா இருக்கீங்க.. 

 

எனக்கு ஒரு கோபமும் இல்லை..

 

இப்ப எதுக்கு மூக்கும் காதும் இப்படி சிவந்து இருக்கு.. என்றாள் அப்பாவியாய்…

 

குளிக்கப் போன புருஷனுக்கு துண்டு எடுத்துக் கொடுக்க பாத்ரூமுக்கு வருவான்னு நினைச்சா..  இங்க இவன் கூட நின்னு பேசிகிட்டு இருக்க… நான் அங்க உன்னை எதிர்பார்த்து காத்து இருந்துட்டு கடுப்பாகி வந்துட்டேன்… என்றான் ஆதி கோவமாய்.

 

அவன் கோபத்தின் காரணம் அறிந்து மெல்ல சிரித்தவள்…

அப்ப நான் ராஜேஷ் கூட பேசினதுக்கு நீங்க கோபப்படலையா… என்றாள் மேல் கண்ணால் பார்த்தபடி…

 

ஏண்டி… நான் உன்ன லவ் பண்ற ஒரே காரணத்துக்காக ஊர்ல இருக்க யார் கூடயும் பேசாமலே உன்னை அடைச்சு வைக்க முடியுமா..  அதெல்லாம் சைக்கோ தனத்தோட உச்சகட்டம்…  உனக்குனு அண்ணன், தம்பி, மாமா, மச்சான் நாலு பிரண்ட்ஸ் இருப்பாங்க அவங்க எல்லாத்தையும் புடுங்கிட்டு அந்த இடத்துல ஃபுல்லா என்ன நிரப்ப முடியாது… என்னுடைய இடத்தை அவங்களால நிரப்ப முடியாது… என்றான்.

 

ஆதியின் வார்த்தையை கேட்ட பின் கொஞ்சம் அமைதியானாள்…

 

நான் கூட நீங்க ஏதோ தப்பா நினைச்சுக்கிட்டீங்க நினைச்சு பயந்துட்டேன் என்று நிம்மதி பெருமூச்சு விட்டு… நான் உங்களுக்கு போய் காபி எடுத்துட்டு வரேன்… என்று கூறி எழுந்தவளை..

 

நானும் என்னோட கேர்ள் பிரண்ஸ்டோட கண்ணத்த புடிச்சு நெத்தி முட்டிட்டு நிக்கும் போது நீயும் தப்பா எதுவும் எடுத்துக்க கூடாது என்றான் வில்லத்தனமாய் உள்நாக்கை சுழற்றியபடி.. 

 

நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன்… என்று தலையை சிலுப்பிக் கொண்டு சென்றாள்.

 

அப்போ எனக்கும் ஓகே… என்று தோள்களை குலுக்கினான்.

 

சிறிது நேரத்தில் அவன் அருகில் வந்தவள், ராஜேஷ் கிட்ட இனிமேல் தள்ளி நின்னு பேசுறேன்…. என்றாள் சமத்து பிள்ளையாய்.

 

அப்படி வாடி வழிக்கு என்று நினைத்தவன்….

 

நானும் தள்ளி நின்னு பேசுறேன் நீயும் தள்ளி நின்னு பேசு என்று இதன் அர்த்தம்… இதை புரிந்து கொண்டவன்.

 

லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த படி பார்வையை நிமிர்த்தி அவளைப் பார்த்து ஒரு புன்னகை செய்தான்… 

 

அவள் திரும்ப வந்து இப்படித்தான் சொல்வாள் என்று அவனுக்கு தெரியும்… சட்டை பட்டன் திறந்து இருப்பதையே அனுமதிக்காதவள்… நெத்தி முட்டி நிக்க விட்டு விடுவாளா என்ன?… அவளுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?… அவள் வாயாலேயே சொல்ல வைத்தான் விஷமக்காரன்.

 

காபியை எடுத்து வந்து அவன் அருகில் அமர்ந்தவள்… அவனுக்கும் கொடுத்து தானும் குடித்தாள்…

 

இந்த காபியை எப்படி குடிக்கணும் என்றான் ஆதி விஷமமாய்…

 

பாவம் பெண் பிள்ளை அறியாமல்… அன்று கொடுத்த விளக்கத்தை இன்றும் ஏமாந்து கொடுத்து விட்டது…

 

அவள் விளக்கியது போல்…

முதலாவது…. 

அவளை கண்ணால் பார்த்து அங்குலம் அங்குலமாக ரசித்தவன்.. பீல் தி கலர்… என்றான். அவன் பார்வையே பெண்ணவளுக்கு பல கதைகள் சொல்லியது… மேனி கூசியது… 

 

இரண்டாவது… 

அவளை நெருங்கி, அவளை இழுத்து மடியில் அமர வைத்து கழுத்தில் முகம் புதைத்து, அவளது வாசனையை ஆழ்ந்த உள்ளிழுத்தவன்… பீல் தி ஸ்மெல்…. என்றான்… அவனின் கூர் மூக்கின் நுனி செய்த செயலில் இருவரின் உடலும் சிலிர்த்தது… 

 

மூணாவது..   

 

காபியை குடிக்கணும்…. அதுவும் காஃபி அவசர அவசரமா நேரடியா நம்ம தொண்டைக்கு போகக்கூடாது பொறுமையா நம்ம நாக்குல பட்டு மெதுவா காபியோட டேஸ்ட்ட உணர்ந்து  அதுக்கப்புறம் அதை முழுங்கணும்… பீல் தி டேஸ்ட்…. என்று அவள் சொன்னது அனைத்தையும்… ஒன்று விடாமல் ரசித்து அவள் மேனியில்… இதழ்களால் ஊர்ந்து… ரசித்து ருசித்து….  டிகாஷன் மிதமாய்  கலந்த, அவனது மடியில் படுத்திருந்த காபியில் செய்து முடித்தான் கிராதகன்… அவனது பெட் காஃபி… கண்கள் சொருகி, உதடு கடித்து, அவனது பிடரியைப் பிடித்து அழுத்திக் கொண்டு இருந்தது… சொட்டு மிச்சம் வைக்காமல் அவனது காபியை முழுதாய் ருசித்த பின்னரே… விட்டான்… முகம் முழுவதும் வியர்த்து  சீரற்ற மூச்சு வாங்கியவன்  இப்பவும் காபி அருந்துவதை நிறுத்த மனசு இல்லை… ஆனால் ஆன்லைன் மீட்டிங் காண அழைப்பு வந்தது… அதனால் விட்டான்.. நைட் இருக்குடி உனக்கு… என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன்… வேலையை கவனிக்க…

 

அவள் எழுந்து சென்று, தன்னை ஒவ்வொரு முறையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பவனை முறைத்தபடியே அவனை மெதுவாய் நிதானித்துக் கொண்டு… கிச்சனில் இரவு உணவு காண வேலைகளை தொடங்கினாள்…

 

மீட்டிங்கை முடித்து வந்தான்… இருவரும் ஒருவரை ஒருவர் மோன பார்வை பார்த்துக் கொண்டே… இரவு உணவே உண்ணத் தொடங்கினர்…

 

நான் ஒன்னு கேட்கட்டுமா என்று ஆரம்பித்தாள்..

 

ம்ம்..  என்றான். ஒரு வாய் உணவை வாயில் வைத்தபடி…

 

ராஜேஷ நீங்கதான் என்ன பாத்துக்க  அனுப்பி வச்சீங்களா? என்று கேட்டாள்…

 

ஒரு கணம் அவளை நிமிர்ந்து பார்த்தவன்… எல்லாத்தையும் உன்கிட்ட உளறிட்டு போயிட்டானா… அதுக்கான காரணத்தையும் அவனே சொல்லிட்டு போயிருப்பானே… அப்புறம் எதுக்கு என்கிட்ட கேக்குற…

 

அந்த ரெண்டு பேரும் எதுக்கு அடைச்சு வச்சு கொடுமைப்படுத்தினீங்க விரலை வேற கட் பண்ணிட்டீங்கன்னு சொல்றான்…

 

எந்த ரெண்டு பேர… தெரியாதது போலவே கேட்டான்…

 

அன்னைக்கு ரதி பார்ட்டில என்கிட்ட அடி வாங்கினாங்களே அவங்க… அவன் உணவு தட்டின் தேவையை பார்த்து பரிமாறினாள்…

 

எங்க வீட்டு பொண்ணு இல்ல… எந்த பொண்ணு மேல கை வைத்திருந்தாலும் அவனோட நிலைமை இதுதான்… என்றான் அழுத்தமாய்.. 

 

“சப்” என்றானது மலருக்கு…

 

இப்போ இந்த ராகேஷுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை..  எதனால இப்படி நடந்துக்கிட்டார்…

 

கண்டிப்பா தெரிஞ்சிக்கனுமா… 

 

இதுக்கு நடுவுல நானும் இருக்கேனே..  அப்ப நானும் காரணம் தெரிஞ்சுக்க வேண்டும் தானே… என்றாள்.

 

அவனோட கேர்ள் ஃப்ரெண்ட் அருண் கூட பழக ஆரம்பிச்சா… உடனே ராகேஷ் பொசசிவ்ல அருண் போட்டு அடிச்சான்… அருண அடிக்கிறதை பார்த்துட்டு நான் போய் அவன் மூஞ்சிலேயே குத்தினேன்…. அதனால அவன் முகத்தில் அடிபட்டுருச்சு… அந்த காலேஜ்ல அதுக்கு முன்னாடியே அவன் பெரிய டான் மாதிரி இருந்தான்… நான் அடிச்ச பிறகு அவனோட மாஸ் குறைஞ்சு போச்சு… அவனோட கேர்ள் பிரண்டு பிரேக்கப் பண்ணிட்டா.. அதனால உன்னை என்னையும் பிரேக் அப் பண்றதுக்காக இந்த வேலையெல்லாம் பார்த்து இருக்கான்… என்றான் சுருக்கமாய்.. 

 

நீங்க போய் அமைதியா என்ன சண்டன்னு கேட்டு சமாதானப்படுத்தி இருக்கலாமே எதுக்காக போய் அடிச்சீங்க என்றாள்… உணவை மென்றபடி…

 

எவனோ ஒருத்தன் நம்ம பிரண்டு போட்டு அடிச்சிட்டு இருப்பான் நம்ம பாத்துட்டு இருக்க முடியுமா…? 

 

ஒருவேளை தப்பு அருண் மேல இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க…

 

சாப்பிடுவதை ஒரு கணம் நிறுத்தி…

யாரு மேல தப்பு இருந்தாலும் என் ஃப்ரெண்ட அடிச்சது மகா தப்பு… அவனுடைய தோல உரிச்சிருப்பேன் அதுக்குள்ள பசங்க எல்லாம் வந்து தடுத்துட்டாங்க.. என்றான் பல்லை கடித்த படி…

 

உங்களோட அந்த சின்ன கோபத்தினால் உங்க வாழ்க்கையில எவ்வளவு பெரிய பிரச்சனை வர பார்த்து இருக்கு பாத்தீங்களா?… ப்ளீஸ் கொஞ்சம் கோபத்தை கண்ட்ரோல் பண்ணுங்க எடுத்த உடனே அடிக்காதீங்க… நிதானமா இருங்க… 

 

ஒரு கணம் சாப்பிடுவதை நிறுத்தியவன் அவளை நிமிர்ந்து பார்த்து… 

நான் எல்லா விஷயத்தையும் நிதானமா தான் ஹேண்டில் பண்ணவேன் மலர்… என்னோட ஃப்ரெண்ட்ஸையும், உன்னையும் தவிர… என்றான் மிக அழுத்தமாய்.. 

 

ஏனோ இந்த கணம் ஆதி கூறிய பதில் மலரின் மனதுக்கு நெருடலாக இருந்தது… எப்பொழுதும் அவன் வாழ்வில் முக்கியம் தான்தான் என்று சொல்லியே கேட்டவள்… இன்று அவனின் நண்பர்களும் அந்த இடத்திற்கு வர.  ஒரு சந்தேகம் மனதிற்குள் நுழைத்தது…

வாய் இருக்க மாட்டாமல் அதையும் வெளியே கேட்டுவிட்டாள்.

 

ஒருவேளை ஏதோ ஒரு சூழ்நிலையில, நானா இல்ல உங்க பிரண்ஸா அப்படின்னு ஒரு சிச்சுவேஷன் வந்தா… நீங்க யாரை சூஸ் பண்ணுவீங்க… என்றாள் மலர்.

 

அந்த மாதிரி சூழ்நிலை எப்பபவுஉம் வராஆது..  என்றான்..ஆதி. தலை குனிந்த படி பல்லை கடித்துக் கொண்டு அழுத்தமாய்… 

 

அவளும் விடுவதாய் இல்லை… ஒருவேளை வந்தாஆஆ….  என்றாள் கண்களை உருட்டி…

 

உங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர தான் நான் சூஸ் பண்ணிட்டு வாழனும் அப்படிங்கற சூழ்நிலை வந்தா..  அதுக்கு மேல நான் வாழ விரும்பல… அதுதான் என்னோட கடைசி நாளா இருக்கும்… என்றான் ஆதி..  

 

சொல்லிவிட்டு,  சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டில் கை கழுவி விட்டு, விரட்டென்று எழுந்து அவர்களது அறைக்குள் நுழையாமல், அவனது அறைக்குள் சென்று “பட்” கதவடைத்துக் கொண்டான்.

 

இப்படி ஒரு பதிலை மலரும் எதிர்பார்க்கவில்லை… இதெல்லாம் அவளுக்கு புதிதாய் தெரிந்தது…

 

அவனின் கோப வார்த்தைகளை கேட்டு மிரட்சி உடன் அமர்ந்திருந்தவள்… நிறைய யோசித்தவள் ஒன்றை புரிந்து கொண்டாள்… ஒரு இடத்தில் நண்பனின் உயிரா அல்லது என் மேல் வைத்த காதலா என்று வரும் பொழுது அவன் தேர்ந்தெடுத்தது நண்பனின் உயிரைத்தான்… 

ஏற்கனவே தெரிந்த விஷயம் எனினும், இன்று தான் மனம் அதற்காய் வலித்தது… 

 

அவளும் வேறு எதுவும் பேசாமல் தங்களது படுக்கை அறையில் போய் படுத்துக் கொண்டாள்.  

 

அறைக்குள் விட்டத்தை பார்த்து படுத்திருந்தவன்… மலர் கேட்ட கேள்வியைப் பற்றி தான் யோசித்துக் கொண்டு இருந்தான்…

ஏன் யாராவது ஒருத்தரை தேர்ந்தெடுக்க வேண்டும்… அவனுக்கு மூவருமே முக்கியம்… அவளை திருமணம் செய்து கொண்டதால் அவனை சுற்றி இருக்கும் அனைத்து நண்பர்களையும் இழக்க வேண்டுமா என்ன?.. ஏன் அவளுக்கு இப்படி எண்ணம் போகிறது என்று யோசித்து கொண்டு இருந்தான்… அவனுக்கு ஒன்று புரியவில்லை அவளுக்கு அப்படிப்பட்ட எண்ணத்தை உருவாக்கியதே அவன்தான்.. என் வாழ்வின் அனைத்தும் நீதான் என்று சொல்லி பழகியவன்… இன்று திடீரென்று மற்றொரு விஷயத்துடன் ஒப்பிட்டு பார்த்ததால் வந்த குழப்பம் இது. கொஞ்சம் நிதானமாய் சொல்லி புரிய வைத்திருந்தால் கூட பரவாயில்லை… முன் கோபத்தில் வெடுக்கென்று எழுந்து வந்து அறைக்குள் அடைந்து கொண்டான் இவன்… தேவையில்லாத அனைத்தையும் யோசித்து விட்டு, தனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள் அவள்.

 

திருமணத்திற்கு பின், இருவருக்குமான முதல் சண்டை அழகாய் ஆரம்பமானது..

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top