அசுரன் 106
இரவு நேர சாப்பிட்ட அனைத்தும்.. மொத்தமாக குளியலறையில் வாய்வழியே வெளியேற்றிக் கொண்டிருந்தான் அருண்…. வாஅஹ்… வாஅஹ்……
என்ற சத்தம் மட்டும் படுக்கையில் அமர்ந்திருந்த ரதியின் காதில் விழுந்து கொண்டிருந்தது…
முகம் முழுவதும் வியர்த்து சிவந்து… களைத்து போய்… வெளியே வந்தான் அருண்…
என்ன அருண்!… இப்ப எல்லா நேரமும் நீ இப்படித்தான் பண்ற… யூ வெரி டிஸ் அப்பாயிண்டெட் மீ….
ரதி ப்ளீஸ் இத்தோட விட்டுட்டு எனக்கு இதுக்கு மேல சுத்தமா விருப்பம் இல்ல…. ப்ளீஸ் போய் தூங்கு… என்று களைப்புடனே சொல்லிவிட்டு குப்புற படுத்து விட்டான்…
முதலில் எல்லாம்… கூடல் பொழுதில் குமட்டிக் கொண்டு வந்தது… இப்பொழுது வாந்தியாகவே வர ஆரம்பித்துவிட்டது… அவனுடைய உடம்பும் மூளையும் சரிவர ஒத்துழைப்பதில்லை…
அருண்… உன்னால முடியலன்னா… நான் என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும்…
என்ன பண்ணுவியோ பண்ணு… ஆனா என்னால முடியல…
ரொம்ப சிம்பிள்… ரொம்ப காலமா சொல்லிக்கிட்டு இருக்கீங்களே ஒரு பழமொழி… வீட்ல சாப்பாடு சரி இல்லன்னா ஹோட்டல்ல தான் போய் சாப்பிடணும்… என்றாள்…
நீ எங்கேயோ போய் சாப்பிடு… ஆனா திரும்ப என்கிட்ட வராத என்றான் அருண்.
அப்போ உனக்கு ம்யூச்சுவல் டிவோர்ஸ் வேணா அப்படித்தானே…
ரதி ப்ளீஸ் புரிஞ்சுக்கோ… ஐ டோன்ட் நோ ஒய்… எனக்கு இன்டெர் கோர்ஸ்ல கன்டினியூ வாமிட் சென்சேஷன் இருந்துக்கிட்டே இருக்கு… என்னால எதுலயும் கான்சன்ட்ரேட் பண்ண முடியல..
என்னால முடியும் போது பண்றேன்.. இல்லையா என்ன விட்டுட்டு… உன் இஷ்டத்துக்கு என்னமோ பண்ணு உன் வழிய பாத்துக்கோ..
வாட் யூ மீன் அருண்…
ரதி நான் இப்பவும் சொல்றேன் இந்த பழக்கம் எல்லாத்தையும் நீ ஸ்டாப் பண்ணிடு… உன்னோட பாஸ்ட் பத்தி என்னோட பாஸ்ட் பத்தி எதுவுமே பேச வேணாம்… நம்ம நிம்மதியா ஒரு லைஃப் லீட் பண்ணலாம்.. நீ நான் ரித்து.. நிம்மதியா வாழலாம்…
நீ என்ன சொல்ற அருண்… இப்பயும் நான் நிம்மதியா சந்தோஷமா சுதந்திரமா இருக்கேன்… நீ என்னமோ இனிமேல்தான் நிம்மதியா வாழனும்னு சொல்ற…
நான் உனக்கு ஒரு அட்வைஸ் பண்றேன் கேளு நீயும் என் கூட சேர்ந்து அந்த ட்ரக் எடுத்துக்கோ சொர்க்கத்தை பார்ப்ப… அதுக்கப்புறம் நானே வேணாம்னு சொன்னாலும் நீ விடமாட்ட… என்ஜாய் யுவர் லைப் மேன்.. பழம் மாறி பேசிகிட்டு இருக்காத.. என்றாள் ரதி.
அவள் பேசியது அவனுக்கு கேட்டிருந்தால் தானே களைப்பில் அவன் உறங்கி விட்டான்…
*********
அலுவலகத்தில் அடுத்து நடைபெற இருக்கும் ஆர்க்கிடெக்சர் டிசைனிங் போட்டிக்காக தன்னை தயார் செய்து கொண்டு இருந்தாள் மலர்.
தேவாவின் நினைவுகளில் இருந்து தப்பிப்பதற்கு இதை தவிர வேறு வழி அவளுக்கு தெரியவில்லை…
முக்கியமாக அவனது அறையில் இருக்கும் வெற்று இருக்கையை அவளால் பார்க்கவே முடிவதில்லை… கண்கள் முழுதும் கண்ணாளனே நிறைந்திருக்கிறான்.. அவன் கம்பீரமாய் அமரும் அந்த இருக்கையில் போய் கோழி குஞ்சு போல் பதுங்கி கொள்கிறாள் அவன் நினைவில்…
பெண்ணுரிமையைப் பற்றி பேசுபவள் தான்… ஆனால் அவன் வாயிலிருந்து வரும் ஆணாதிக்கமிக்க “என்னடி” என்ற மையல் கொண்ட வார்த்தைக்கு மனம் ஏங்குகிறது… நுனி பல்லை கடித்துக்கொண்டு அழுத்தமாய் ஏக்கத்துடன் அவன் சொல்லும் அந்த வார்த்தையில் அவளுக்கு அப்படி ஒரு மயக்கம்..
எங்கு சென்றாலும் நந்தினி கூடவே வருகிறாள்… என்ன நந்தினி என்ன லவ் பண்றீங்களா என்ன.. விடாமல் ஃபாலோ பண்றீங்க… என்று கேலியாய் கேட்க…
உன்ன விட்டு எங்கும் போகக்கூடாது… உன்னை தனியாவே விட கூடாதுன்னு ஆதி சாரோட ஆர்டர்…
அலுவலகம் வெளியில் வந்தால் அவளுக்கான கார் காத்துக் கொண்டிருக்கும்… அவன் இல்லாத நேரத்தில் ஸ்கூட்டியில் செல்ல அனுமதி இல்லை… எங்கு சென்றாலும் கார் டிரைவர் நிதானமாக அவளை அழைத்து செல்வார்…
வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால்… சாரதா அம்மா காத்துக் கொண்டிருப்பார்… மணி அண்ணாவின் மனைவி… ஆதி ஊரில் இருந்து திரும்பும் வரை.. இதுவரையும் இங்கேயே தங்க சொல்லி உள்ளான்… அவர்களுக்கென்று ஒரு அறையும் உள்ளது…
எங்கும் அவள் தனிமையை உணராத வண்ணம் ஏற்பாடுகளை செய்துவிட்டு தான் சென்று இருக்கிறான்… அவன் நினைவு வரக்கூடாது என்று அவன் செய்த செயல்கள் எல்லாம்… அவனை அதிகம் தேட வைக்கிறது… அவனின் காதலை உணர வைக்கிறது… இறுக கட்டி அணைக்க தோணுகிறது… முகம் எல்லாம் முத்தம் வைக்க ஆசை பிறக்கிறது…
சரியாக காலை மாலை இரு நேரமும் ஒன்பது மணிக்கு அழைப்பான்… வீடியோ கால் தேடி வரும்… அவன் வேலை செய்து கொண்டே பேசுவான்… குரலில் ஏக்கம், காதல், பிரிவு மட்டுமில்லாமல் காமமும் தாபமும் போட்டி போடும்… தன்னை அடக்க பெரும்பாடு படுகிறான் என்று பேசுபவளுக்கு புரியும்… இவள் படுத்து கொண்டே பேசியபடி உறங்கியும் விடுவாள்… அவன் அவளின் உறங்கும் முகத்தை பார்த்துக் கொண்டே வேலை செய்வான்… வெளிநாடு சென்று ஒரு வாரம் முடிந்து விட்டது… எல்லா நாளும் இதுதான் வழக்கம்… முகம் பார்த்து பேசும் இந்த ஒரு மணி நேரம்தான் அடுத்த நாள் உயிர்ப்புடன் வைப்பதற்கு துணை புரிகிறது…
இதோ இன்றும் சரியாய் 9:00 மணிக்கு அழைத்து விட்டான்…
இரவு நேரம் குளித்து அவனுடைய சட்டையை தான் அணிந்து கொள்வாள்… கீழே ஒரு ஸ்கர்ட்…
அவனது சட்டையை பார்க்கும் போது அவனுக்கே பொறாமை ஏற்படும்… நான் தழுவிகொண்டு இருக்க வேண்டிய இடம் அது… என் சட்டையே எனக்கு போட்டியாக… ஹ்ம்ம்.. ஒரு நீண்ட பெருமூச்சு..
என்னடி என்ன பண்ணிட்டு இருக்க…
காலையில் எழுந்தது முதல் அலுவலகத்தில் நடந்தது வரை அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி தீர்ப்பாள்… அவனும் பொறுமையாகவும் “ம்ம்” கொட்டுவான்…
அவள் பேசிக் கொண்டு இருக்க இடையே தனது சட்டை பட்டனை கழட்டி சட்டை மேல் நோக்கி இழுத்து விட்டான்…
இப்போ எதுக்கு ஷர்ட் பட்டன கழட்டுறீங்க…
இங்க ஒரு நாலஞ்சு பொண்ணுங்க என்னையே பார்த்துட்டு இருக்காங்க அதான் சும்மா ஒரு ஸ்டைல்… என்றான் கள்வன்…
அப்ப நானும் அதே மாதிரி நாலு பட்டன் கழட்டிவிட்டு போகட்டுமா…
அது எப்படிம்மா நீ ஒரு பொண்ணு.. எப்டி கழட்டி விட்டுட்டு போக முடியும் என்று அவன் போட்டு வாங்க…
அதை அறியாமல்.. நான் போவேன் என்று அவள் வீம்பாக சட்டை பட்டனில் இரண்டு பட்டனை கழட்ட…
அவன் கண்கள் குதூகலமாய் மின்னியதை… கண்டுகொண்டாள் கள்வனின் சூட்சமத்தை…
அவனை ஒரு சிறு முறைப்புடன்… நாளைக்கு ஆபீஸ் போகும்போது கழட்டி விட்டுட்டு போறேன் இப்ப இல்ல என்று கூறிவிட்டு சட்டை பட்டனை மீண்டும் பூட்டப் போக….
ப்ளீஸ் டி… ப்ளீஸ் டி… டாப் ஆங்கில் வச்சு பேசுடி ஒரே ஒரு கிஸ் ப்ளீஸ் என்று பாவமாய் அவன் கெஞ்ச…
சரிஇ இ.. செஞ்சாதிங்க…. இப்ப நான் என்ன பண்ண…
கொஞ்சம் இறக்கம் காட்டு…
எதுக்கு…
சட்டையில கொஞ்சம் இறக்கம் காட்டு டி…
ச்சீ… தேவா… யுவர் வேர்ட்… வெரி பேட்… என்று திட்டி கொண்டாலும்..
கூச்சத்துடனே அவனின் விருப்பத்தை நிறைவேற்றுவாள்…
ஒரு முத்தம் என்று கூறி அது கணக்கில்லாமல் போகும்… அதுவும் அவன் செல்ல பெயர் வைத்து செல்லமாய் கொஞ்ச… என்னோட பாப்ஸ் என்னை ரொம்ப மிஸ் பண்றீங்களா… ஒரு வாரமா என்ன பாக்காம ரொம்ப மெலிஞ்சு போயிட்டீங்க ரெண்டு பேரும்.. நீ சரியா ஜூஸ் குடிக்கிறது இல்லையா மலர்… என்று அவளைப் பார்த்து சீரியஸாக கேட்க…
அவனைத் தீயாய் முறைத்து தள்ளுவாள்… இதில் வெட்கமும் கூச்சமும் போட்டி வேறு போடும்…
என்னடி முறைக்கிற…. நீ சரியா கவனிக்கறது இல்லன்னு என்கிட்ட கம்ப்ளைன்ட் பண்றாங்க.. Take care of both…
தேவா… நீங்க முதல்ல என் முகத்தை பார்த்து பேசுங்க… இப்படியே பேசினா அப்புறம் நான் ஆடியோ கால்ல தான் வருவேன்… என்று அவள் சிணுங்க…
சரி முகத்தை பார்த்து பேசுறேன்…
லிப்ஸ் ஏண்டி இவ்ளோ டிரையா இருக்கு…. என்னோட பஞ்சு மிட்டாய சரியா பாத்துக்குறது இல்லையா… என்று கேட்க…
தேவாஆ ஆ….
என்னடி… எல்லாருமே உன்ன பத்தி கம்ப்ளைன்ட் தான் சொல்றாங்க…
இதே பேச்சுதானா… வேற ஏதாவது பேசுங்க…
ஈரான் இப்போ குண்டு போட்டாங்களே அந்த இடத்தை பத்தி உனக்கு ஏதாவது டீடைல் தெரியுமா என்று ஆதி சீரியஸாய் கேட்க…
ஆங்… என விழித்தாள் மலர்…
என்ன பாக்குற… இப்படியா பேச முடியும்… புதுசா கல்யாணம் ஆகி பொண்டாட்டிய விட்டு பிரிஞ்சு இருக்கவன் வேற எதை பத்தி டி பேசுவான்…
நீங்க ஒன்னும் பேச வேண்டாம் நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க…
எப்போ வேலை முடியும்…
நான் இன்னும் தொடங்கவே இல்லையே டி… என்று பல்லை கடித்துக் கொண்டு ஒரு மார்க்கமாய் கூற…
கண்ணை உருட்டியப்படியே நான் ஆபீஸ் வேலைய பத்தி கேட்டேன்…
Oh… அது இன்னும் ஒரு வாரத்தில் முடியும்னு நினைக்கிறேன்…
அங்க கிளைமேட் எல்லாம் எப்படி இருக்கு…
வெளியே ஜில்லுனு தான் இருக்கு… உள்ளுக்குள்ள தான் ஒரே சூடா இருக்கு… என்றான் உடம்பை முறுக்கியபடி…
என்ன சாப்பிட்டீங்க…
இது எப்போ?…
அவள் புரியாமல் முழிக்க…
உன்னை எப்போ டி சாப்பிட்டேன்…. அதுக்குத்தான் நேரமே வரலையே… என்று ஒரு பெருமூச்சுடன் அவன் ஏக்கமாய் சொல்ல…
அவன் குறும்பு பேச்சுகளை பார்த்து என்ன சொல்வது என்றே அவளுக்கு தெரியவில்லை… கோலிகுண்டு கண்கள் இரண்டும் முறைக்க தான் செய்கின்றன… ஆனால் முகம் முழுவதும் சிவந்து, வெட்க சிரிப்பை அடக்கி படாதபாடு படுகிறாள்…
இதுக்கு மேல நான் ஒன்னும் கேட்கல… என்று கூறிவிட்டு மெத்தையில் குப்புற படுத்துக்கொண்டாள்…
அவள் எதிரே போனை வைக்க…
ஆஹா இதுவல்லவா காட்சி… என்று மனதிற்குள் சிலாகித்தவன்… திவ்ய தரிசனத்தை ரசித்தபடி… சரி… நீ பேச வேணாம் இப்படியே உன் தேவாகாக ஒரு பாட்டு பாடு… என்றான்…
ம்ஹும்… பாட மாட்டேன் என்று அடம் பிடித்தாள்…
நான் பாடட்டுமா என்றான்…
நீங்களா?… ஆச்சரியமாய் விழி விரித்தாள்…
ம்ம்… என்னோட சிட்ட நெனச்சு பாட தோணுதே…
சரி பாடுங்க…
கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி…..
கொஞ்சமாக பார்த்தா
மழைசாரல் வீசுதடி…..
நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடி….
அடி தொலைவில இருந்தாதானே
பெருங்காதல் கூடுதடி….
தூரமே தூரமாய் போகும் நேரம்….
மெலிதாய் சிரித்து, தலையாட்டிக் கொண்டே அவனது பாடல் வரிகளை கேட்டவள்…
நல்லா இருக்கு…
என்னோட குரல்ல கொஞ்சம் கொடுமையா தான் இருந்திருக்கும்…
நெஜமா நல்லா இருந்துச்சு… கிட்ட இருந்து இருந்தா கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்து இருப்பேன்… என்றாள்…
ம்… அதுக்குத்தான் கொடுப்பினை இல்லையே…. எல்லாத்தையும் மறக்காம நோட் பண்ணிவை நேரில் வந்து வாங்கிக்கிறேன்…
நான் பாடட்டுமா…
ம்ம்…. பாடு டி…
இப்படி முழுங்கற மாதிரி பாத்துகிட்டே இருந்தா எப்படி பாடுறது… கண்ண மூடுங்க அப்பதான் பாடுவேன்…
புன்னகையுடன் கண்ணை மூடினான்…
மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
பத்து தல பாம்பா வந்து
முத்தம் தர போற
நான் ஒத்தயில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும் தான்
உன்ன நான் சந்தித்தேன்
எப்போ வர போற
மச்சான் எப்போ வர போற
பத்தமடை பாயில்
வந்து சொக்கி விழ போற…
அவன் முகத்தை கண்ணிமைக்காமல் பார்த்தபடி… அவள் பாட…. பாட… முகம் சிவந்தது.
குரலின் மாற்றம் தெரிந்து கண்ணை திறந்து பார்த்தவனுக்கு இந்த முகச் சிவப்பு அழுகைக்காண ஆரம்பம் என்று தெரிந்தவன்… ஏதோ ஒன்று சொல்ல வர…
ஒரு கணம் அமைதிக்கு பின்… தலையணையில் முகத்தை மறுபக்கமாக திருப்பிக் கொண்டு, தழுதழுத்த குரலை சரி செய்து கொண்டு, பாடலை தொடர்ந்தாள்…
தூரமா போனது துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்….
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்,
அங்கு நீயும் இங்கு நானும்
என்ன வாழ்க்கையோ….
போதும் போதும் சொல்லாமல்
வந்து சேரும்…
என்று பாடி முடித்தவள்… போனை கட் செய்து விட்டாள்…
மீண்டும் அழைப்பான் என்று அறிந்து…
“தூக்கம் வருது, நாளைக்கு போன் பண்றேன்…”
ஆதிக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினாள்…
அவள் அழுகும் முகத்தை பார்க்க வேண்டாம் என்று போனை கட் செய்து விட்டாள் என்று அவனுக்கும் தெரியும்…
சிறிது நேரம் கழித்து… அவளிடம் இருந்து
Miss u ❤️ என்று அவனுக்கு மெசேஜ் வந்தது…
ஐ லவ் யூ வில் இருப்பதைவிட 100 மடங்கு அதிக காதலை சுமந்து கொண்டு வந்தது… அந்த ஒற்றை மிஸ் யூ. உண்மையில் அதை படித்து அவன் கண்களும் கலங்கின…
தனது மனைவி தன்னை அதிகம் தேடுகிறாள்… என்று அவனுக்கும் தெரியும்… அவனது அலுவலக அறையில் இருக்கும் சிசிடிவி யில் அவள் செய்யும் செயல்களை எல்லாம் அவன் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான்…
யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள் அழுத்தி வைத்து இருந்ததை இன்று பாடலின் மூலம் கொட்டி தீர்த்து விட்டுப் போய்விட்டாள்…
அவளின் வேதனை புரிந்தாலும்… கேட்டவுடன் கிளம்பி வரும் நிலையில் அவன் இல்லையே… அவள் வாசம் இல்லாமல் அவனுக்கு உறக்கமே இல்லை.. வாடிய முகத்தைக் கண்டு தொண்டைக் குழியில் உணவு அடைக்கிறது… என்பது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை… அவளுக்கு சளைத்தது அல்ல அவன் வலி..
அவள் நினைவு ஆட்டி வைக்கும் பொழுதெல்லாம்… மிஸ் யூ டி… என்று கூறி கையில் இருக்கும் மஞ்சள் கயிறை… ஆழ்ந்து சுவாசிப்பான்… அந்தக் கயிறில் இருந்த அவள் வாசம் எப்போதோ போயிருந்தது… ஆனால் அது அவன் நினைவில் ஆழமாய் பதிந்து இருந்தது, அவளின் நினைவிற்கு இழுத்துச் சென்றது… பள்ளிக்கால புத்தகத்தை எடுத்து நுகர்ந்து பார்க்கும் போது… பள்ளி பருவத்திற்கே இழுத்து செல்வது போல…
இருவரும் இரு பக்கமாய்… பிரிவின் துயரில் ஏங்கிக் கொண்டு இருந்தனர்.
*****
ஆதி பாரின்ல இருந்து திரும்ப வரும்போது… ஏதோ ஒன்னு ஆகி… அம்னீசியால மலர மறந்துட்டு வந்தா… எப்படி இருக்கும்… சும்மா ஒரு ட்விஸ்ட்க்கு கேட்டேன் பதில் சொல்லிட்டு போங்க கமெண்ட்ல…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️