அசுரன்  113

அசுரன்  113

இதை யாரு பண்ணி இருப்பாங்கன்னு நினைக்கிற ஆதி… என்று கேட்டான் விக்ரம்.

தெரியல என்னும் விதமாக தலையசைத்தான்….

ஒருவேளை ராகேஷ் ஆக இருப்பானோ…

அவன் இன்னும் நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கான்…

ஆதி ப்ரோ, அருணோட கார் பெங்களூர் தாண்டி போயிட்டு இருக்கு… என்று கூறினான் ராஜேஷ்..

அருண் ஓட போன் கூட ஆன்ல தான் இருக்கு ஆனா காலை பிக் பண்ண மாட்றான்…  சிக்னல் பெங்களூர் ஹைவே ல தான் காமிக்குது… மலரோட போன் இன்னும் நாட் ரீச்சபிள் தான்… என்று, தான் தெரிந்து கொண்ட விவரங்களை கூறினான் ராஜேஷ்…

 

நம்ம ஆளுங்கள அனுப்பி, அருண் காரை பாலோ பண்ண சொல்லலாமா என்றான் விக்ரம்…

 

பதில் ஏதும் சொல்லாமல் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருந்தான் ஆதி.

 

அமைதியா இருந்தா என்னடா அர்த்தம்… நைட்ல இருந்து ரெண்டு பேரையும் காணோம்… எங்க இருந்து ஸ்டார்ட் பண்றது… என்று அயர்வாய் விக்ரம் கேட்க…

 

போனவங்க போனவங்களாவே இருக்கட்டும் தேட வேண்டாம் விட்டுடு… என்று இறுக்கமான முகத்துடன் கூறிவிட்டு சென்றான் ஆதி.

 

மூவரும் நேராக ராகேஷ்சை கட்டி வைத்திருக்கும் குடோனுக்கு சென்றனர்.

 

ராகேஷ் முன் இருக்கையை இழுத்து போட்டு உட்கார்ந்தான் ஆதி…

 

ஆதியின் ஆணைக்கிணங்க ராகேஷின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு, அவனுக்கு உணவும் குளுக்கோசும் வழங்கப்பட்டது… சிறிது தெம்பாகி மயக்கம் தெளிந்து அமர்ந்தான்.

 

அவன் வந்த வேகத்தில் தூக்கி போட்டு நாலு மிதி மிதிப்பான் என்று விக்ரம் எண்ணி இருக்க இப்பொழுது அவனது செய்கைகளை பார்த்து, மலரின் பிரிவால் பைத்தியம் ஆகி விட்டானா என்று யோசிக்க தோன்றியது விக்ரமிற்கு…

 

அவன் எதிரில் கண்கள் சிவந்து தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான் ஆதி…

 

நீ கெளம்பு என்றான் ராகேசை பார்த்து,

 

ஆதியை  குழப்பமான மனநிலையோடு பார்த்தான் ராகேஷ்.

 

யார் ரெண்டு பேருக்காக உன் கூட நான் சண்டை போட்டேனோ… அவங்க ரெண்டு பேரும் இப்ப என் கூட இல்ல…  

 

என்ன சொல்ற ஆதி ஒன்னும் புரியல என்றான் திமிராக ராகேஷ்…

 

அருணும்… மலரும்..  மிஸ்ஸிங்… என்றான் நிர்மூலமான முகத்துடன்…

 

கையைத் தட்டி பலமாக சிரித்தவன்..  

ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசில உன் பொண்டாட்டி மேல கை வச்சுட்டானா… அதனாலதான் என் முன்னாடி ரொம்ப பவ்யமா ஒக்காந்து இருக்கியா… இப்போ தெரியுதாடா என்னோட வேதனை… உனக்கு இது தேவதாண்டா… நான் உனக்கு கொடுக்கணும் நெனச்ச தண்டனையை விட… உன் நண்பன் உனக்கு சிறப்பா கொடுத்திருக்கான்… இப்ப நீ என்னை கொன்னே போட்டாலும் எனக்கு சந்தோசம் டா… நம்ம ரொம்ப நம்புற ரெண்டு பேரும் நம்மளை ஏமாத்திட்டு போனா எப்படி இருக்கும்னு..  அதோட வலி உனக்கு ஆயுசு முழுக்க இருக்கும்…

 

அமைதியாய் தலை கவிழ்ந்து யோசனையில் மூழ்கி இருந்தவன், நிறுத்து எனும் விதமாக கைகளை காண்பித்து விட்டு…  இதுக்கு மேல

நீ எதுவும் பேசத் தேவையில்லை… என்று ஆதி கூறிவிட்டு… 

இவன கொண்டு போய் இவங்க வீட்ல விட்ருங்க என்று தனது ஆட்களுக்கு கட்டளை இட்டான்…

 

எப்பா… நிம்மதியா சந்தோஷமா நான் போறேன் டா… என்று தலைக்கு மேல் கையை தூக்கி கும்பிட்டு கிளம்பினான்… ராகேஷ்… கிளம்பியவன் திரும்பி, கை வைக்க  கூடாதா எடத்துல கை வச்சுட்ட அதுக்கான பலன நீ கண்டிப்பா அனுபவிப்ப…

 

ஏண்டா அவனை அவிழ்த்து விட்ட அவன அடிச்சு ஏதாவது உண்மையை வாங்கி இருக்கலாமே என்று விக்ரம் கேட்க…

 

அவனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி தெரியுதுடா போகட்டும் விடுங்க என்று கூறினான் ஆதி…

 

அறை முழுவதும் இருள் சூழ்ந்து இருந்தது… மயக்க நிலையில் இருந்து மெதுவாக கண்களை திறந்தாள் மலர்… ஆழ்ந்த இருட்டு எதுவும் கண்களுக்கு புழப்படவில்லை..  கைகள் இரண்டும் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்து கொண்டாள். 

மெதுவாக குரல் எழுப்ப ஆரம்பித்தாள்… யாராவது இருக்கீங்களா…  ஏதாவது சொல்லுங்க நான் எங்க இருக்கேன்… எதுக்காக கட்டி போட்டு இருக்கீங்க… உனக்கு என்ன வேணும்… ப்ளீஸ் யாராவது பதில் சொல்லுங்க…

 

எதுவும் பதில் வராததால், தான் இங்கு எப்படி வந்தேன் என்று நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்… 

 

மழையின்  நடுவே அருணின் காரில் வந்து கொண்டு இருக்க… எதிரே அதிக ஒலியுடன் கூடிய கனரக வாகனம் முன்னே வந்து நிற்க… எதிர்பாராமல் வந்த ஒளியால் நிலை தடுமாறி காரை திருப்ப முயற்சிக்க… அது ஏதோ ஒரு இடத்தில் மோதியது… சிறிது நேரத்தில் சுற்றிலும் புகையாய் பரவி இருக்க… ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டு… காரின் உள்ளே ஒரு திரவம் தெளிக்கப்பட… அங்கேயே மயங்கினாள்…

 

நிகழ்காலத்திற்கு வந்தவள்… அருகில் இருந்த அருண் என்ன ஆனான் என்று தெரியவில்லை… அருண் சார்.. அருண் சார்… என்று கத்த தொடங்கினாள்…

 

அவள் கத்தியதின் பயனாக… அந்த அறையில் ஒரு முனங்கல் சத்தம் கேட்டது… 

மீண்டும் சத்தமாக குரல் கொடுக்கத் தொடங்கினாள்… 

 

ம்ம்.. அஹ்… இது வலியில் கத்தியது போல் இருந்தது…. இங்கதான் இருக்கேன்… எதிர்ல இருட்டா இருக்கு… கை கால் கட்டி போட்டு இருக்காங்க… உடம்பெல்லாம் காயமா இருக்கும் போல ரொம்ப வலிக்குது… என்று வலியின் நிமித்தம் கொஞ்சம் சிரமப்பட்டு பேசினான் அருண்.

 

அவன் குரலைக் கேட்டதும் கொஞ்சம் நிம்மதி குடி கொண்டது மனதில்… நம்ம மட்டும் தனியா சிக்கலை கூட ஒரு ஜீவன் இருக்கு என்று ஒரு தைரியம்… மலருக்கு வந்தது. சிறிது ஆசுவாசமடைந்தாள்… தொடர்ந்து கத்த முடியவில்லை தொண்டை நீர் வற்றி அமைதியானாள்…

 

இவர்கள் இங்கு பேசுவது அனைத்தையும் அவர்கள் நிலையையும் ஒருவன் சிசிடிவி யில் பார்த்துக் கொண்டு இருந்தான்…

 

​”விக்ரம், ராகேஷை ஃபாலோ பண்ணிட்டு இருக்கல்ல?” – ஆதியின் குரல் இப்போது கணீர் என்று ஒலித்தது.

 

ஆமா ஆதி அவ நம்ம கார்ல போயி ஒரு பப்ளிக்கா ஒரு இடத்துல இறங்கிட்டு அங்க இருந்து யாருக்கோ போன் பண்ணா அவனை ஒரு கார் கூட்டிட்டு போகுது நான் பாலோ பண்ணிட்டு இருக்கேன்…

 

​”ஆமா ஆதி, நீ சொன்ன மாதிரியே அவன் ஷர்ட் ல ‘ஆடியோ பக்’ (Audio Bug) வச்சாச்சு. ஆனா, அவனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு நீயே சொல்லிட்டு ஏன் அவனை ஃபாலோ பண்ணனும்?” என்று புரியாமல் கேட்டான் விக்ரம்.

 

“அவனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைதான். ஆனா, மலரையும் அருணையும் கடத்துனவங்களுக்கு ராகேஷ் மேல ஒரு கண் இருக்கும். அவன் ரிலீஸ் ஆகி வெளியே போறான் அப்படின்னா, கண்டிப்பா அந்த ‘மூணாவது நபர்’ அவனைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பாங்க. அப்போ அவங்க யாருன்னு தெரிஞ்சுடும்,” என்றான்.

 

அப்போது ராஜேஷ் தனது லேப்டாப்புடன் ஓடி வந்தான். “ப்ரோ… நீங்க நினைச்சது சரிதான்! ராகேஷ் வீட்டுக்கு போகல. பெங்களூர் ஹைவேல ஒரு பழைய ‘கோல்ட் ஸ்டோரேஜ்’ (Cold Storage) கிட்ட கார் நிக்குது. ஆனா ஒரு ட்விஸ்ட்… அருணோட கார் சிக்னல் இன்னும் மூவ் ஆகிட்டே இருக்கு, ஆனா அது இப்போ ஒரு கன்டெய்னர் லாரிக்குள்ள இருக்கு!”

 

​ஆதி சட்டென்று நிமிர்ந்தான். “அப்போ கார்ல அவங்க இல்ல. அது வெறும் திசைதிருப்பல்! ராஜேஷ், அந்த கோல்ட் ஸ்டோரேஜ் லொகேஷனை எனக்கு அனுப்பு. நானும் விக்ரமும் முதல்ல போறோம் என்று கூறிவிட்டு ராஜேஷிற்கு சில வேலைகளையும் அவனுக்கான கட்டளைகளையும் தெரிவித்து விட்டு சென்றான்…

 

விக்ரம் சில ஆட்களுடன் சென்று முன்னே சென்ற காரில் இருந்த ராகேஷை அங்கேயே நிறுத்தி வைத்தான்… பின்னால் புயல் வேகத்தில் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான் ஆதி…

 

யார்ரா அவங்களை கடத்தி வச்சிருக்கா என்று ஆதி கேட்டதற்கு ராகேஷ் வாய் திறக்கவில்லை…

 

ராக்கேஷ பணயமாக வைத்து உள்ளே சென்றுவிடலாம் என அவர்கள் திட்டமிட்டார்கள்… நான் ராகேஷ் ஓட மெயின் கேட் வழியா உள்ள போறேன் நீயும் நம்ம ஆளுங்களும்… பின்பக்கமா வாங்க… என்று கூறிவிட்டு பிரிந்து சென்றனர்.  

 

ராகேஷின் தலையில் துப்பாக்கிய வைத்தபடி  கோல்ட் ஸ்டோரேஜ் உள்ளே அழைத்து சென்றான் ஆதி… மனதில் சில பல கேள்விகள் இருந்தாலும்… இந்த ஒட்டு மொத்த பழி வாங்கலுமே ராகேஷ் காகத்தான் என்று அவனுக்கு தெரியும்… ஆகையால் என்ன ஆனாலும் ராகேஷின் உயிருக்கு எதுவும் ஆக விட மாட்டார்கள் என்று அவன் யூகித்திருந்தான். 

 

​அங்கே, அந்த இருட்டு அறையில் மலரின் காதுகளுக்கு சூ அணிந்து நடந்து வரும் சத்தம் கேட்டது.

 

​”அருண் சார்… ஏதோ சத்தம் கேக்குது… எனக்கு பயமா இருக்கு,” என்று மலர் பயந்த குரலில் கூறினாள்.

 

​”பயப்படாத… ஆதிக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும். அவன் கண்டிப்பா வருவான்,” என்று அருண் அவளுக்கு தைரியம் சொல்ல முயன்றான். 

 

​திடீரென்று அந்த அறையின் கதவு திறக்கப்பட்டு வெளிச்சம் பாய்ந்தது. ஒரு உருவம் உள்ளே நுழைந்தது. கையில் ஒரு லேப்டாப் வைத்திருந்த அந்த நபர், அதை அவர்கள் முன்னால் திருப்பினான்.

 

​அதில் சிசிடிவி காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. ஆதி, விக்ரம் மற்றும் சிலர் அந்த கட்டிடத்திற்கு வெளியே மறைந்திருந்து உள்ளே நுழையத் தயாராவதை அவர்கள் பார்த்தனர்.

 

​”பார்த்தியா மலர்… உன் புருஷன் உன்னைத் தேடி வந்துட்டான். நீங்க ரெண்டு பேரும் ஓடிப் போயிட்டீங்க என்று நினைக்காம..  கண்டுபிடிச்சு வந்துட்டான்… அவ்ளோ நம்பிக்கை உங்க மேல “… வரட்டும் வரட்டும் உள்ள வர்றவன் உயிரோடு போக மாட்டான்… என்று அவன் சொல்லும் தோரணையிலேயே மலருக்கு தொண்டையில் நீர் வற்றியது… ஆதி உள்ளே வராமல் இருப்பதே நல்லது என்று அவளுக்கு தோன்றியது…

 

கடத்தல் காரனின் முகத்தை பார்த்த அருண்…

நீயா… நீ எப்படி இங்க… என்று குழம்பிப் போனான்… 

 

வாசலில் நின்றிருந்த ஆதி யாருடா அது அவங்கள கடத்திட்டு வந்தது… எவனா இருந்தாலும் நேர்ல வாடா… இப்ப நீ நேர்ல வரலைன்னா இவனோட தல சிதறும்… இவனுக்காக தானே இந்த கடத்தல் வேலை எல்லாம் பண்றீங்க… என்று ராகேஷின் தலையில் துப்பாக்கியை வைத்தபடி ஆதி கூறிக் கொண்டிருக்கையில்…

 

ராகேஷ் இன் நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்தது.. ஆதியின் பிடியில் இருந்தவன் அப்படியே பின்னால் சாய்ந்தான்… 

 

ஆதி இதை எதிர்பார்க்கவே இல்லை… அதிர்ச்சியாகி அவன் புறம் திரும்ப…

அடுத்த புல்லட்  ஆதியின்  சோல்டரில் பாய்ந்தது… 

 

எதிர்பாராத துப்பாக்கி தாக்குதலால் ஒரு அடி பின்னே சென்றவன்… சுவற்றில் மோதி நிக்கலானான்… கையில் இருந்த துப்பாக்கி கீழே விழுந்து நகர்ந்து சென்றது…

 

ஐயோ… தேவாஆ ஆ …

 

ஆதிஇஇ…

 

தோள்பட்டையில் ஏற்பட்ட கடும் வலியால் ஆதியின் பார்வை மங்கியது. ரத்தம் சொட்டச் சொட்ட, அவன் சுவற்றைப் பிடித்துக்கொண்டு நிலைதடுமாறினான். கீழே விழுந்த துப்பாக்கியை எடுக்க அவன் முயற்சிக்க, அதற்குள் கடத்தல்காரன்  இருட்டிலிருந்து வெளிப்பட்டு, துப்பாக்கியை ஆதியின் நெற்றியில் வைத்தான்.

 

மங்கிய பார்வையை தலையை இரண்டு முறை குலுக்கி சரி செய்தவன்… கடத்தல் காரனின் முகத்தை பார்க்க…. குழம்பிப் போனான்… தன் அருகில் இறந்து கிடந்தவனை ஒரு முறை பார்த்துவிட்டு… மீண்டும் தலையை குலுக்கி கடத்தல்காரனை பார்க்க…

 

ஹாஹா… எத்தனை தடவை பார்த்தாலும் நான் தான்டா தெரிவேன்… என்று சொல்லி அங்கே வில்லத்தனத்தின் மொத்த ரூபமாய் நின்று இருந்தான் ராகேஷ்.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top