இந்த 5 வருஷத்துலே விக்கி, அசோக்குக்கு என்னாச்சுன்னே பார்க்கலியே. அன்னிக்கு எல்லா உண்மையும் தெரிஞ்ச நாள்லே இருந்து, இப்போ வரைக்கும் பெரியவங்களுக்கு விக்கி செஞ்சதுலே ரொம்ப வருத்தம்தான். ஆனா அவங்க வயசுக் கோபத்தை வளர்த்துக்க விடலே. ஆனா சின்னவங்க நாலு பேருக்கும் பயங்கர கோபம். விதுரன் வெளியே தைரியமா காட்டிக்கிட்டாலும் ஏமாற்றம், கோபம், வருத்தம் எல்லாத்துலேயும் உள்ளூர தடுமாறித்தான் போனான். அவனால விக்கியையும் ரிதேஷையும் ஏத்துக்கவும் முடியலே அதே சமயம் இத்தனை நாள் நட்பு வெறுக்கவும் விடலை. நரக வேதனை அவனுக்கு அது. ஆனா உப்பும் காரமும் ஏற ஏற எல்லாமும் கடந்து போகும்-னு சொல்றா போல, அவனும் கடந்து வந்தான். அதுலேயும் குழந்தைப் பிறக்காம மதுரியா அனுபவிக்கற கஷ்டம் பார்த்து தன்னால அவங்க ரெண்டு பேர் மேலேயும் ஒதுக்கம் வந்துச்சு. தேவையான சமயம் தொழில் முறை தொடர்பைத் தவிர மொத்தமா விலகி அந்நியப் படுத்திக்கிட்டான்.
அந்த பழைய நட்பு இனி எப்பொவும் சாத்தியமில்லைன்னு புரிதலும் வந்துச்சு அவனுக்கு. அதனால விதுரனை பொறுத்த வரைக்கும் விக்கி-ரிதேஷோட பக்கம் அவன் லைஃப்லே அவ்வளோ தான்-னு முடிவுப் பண்ணிட்டான். விக்ரமோட நட்பு நல்லாவே தொடர்ந்துச்சு. விக்ரமும் அவங்கக் கிட்ட பழைய மாதிரி இல்லாம, என்னன்னா என்னங்கற அளவுலே நிறுத்திட்டான்.
ஆனா விக்கி-அசோக் வாழ்கை அப்படியிருக்கலே. உண்மை எல்லாம் தெரிஞ்ச நாளைக்கு அப்புறம், ரெண்டு நாள் இறுமாப்போடத் தான் சுத்தினாங்க. ரெண்டு நாளுக்கு அப்புறம் அவங்களை பெத்தவங்க, அவங்க கூடப் பேசினாங்க. டாக்டர் ப்ரேம்நாத்தும் அவர் மனைவியும், அசோக்கையும் நந்தினியையும் வரச் சொன்னாங்க. “நான் லைஃப்லே சக்சஸ்ஃபுல் கார்டியாலஜிஸ்ட் ஆனேன். ஓடி ஓடி உழைச்சு பணம் நிறைய சம்பாதிச்சேன். ஆனா என் பிள்ளையை ஒழுங்கா வளர்த்தலே. அவனுக்கு லைஃபோட வேல்யூஸ் சொல்லி குடுக்கலே”-னு வருத்தமா சொன்னார்.
அப்போ தான் அசோக் கவனிச்சான். அப்பாவும் அம்மாவும் அவன் முகத்தை பார்க்கவே இல்லை. “அதனாலே, நீ ஹாஸ்பிடல்லே இருந்து ரிசைன் பண்ணு. உன் பாடு நீ பார்த்துக்கோ.. க்ளினிக் வைச்சுப்பியோ மூட்டை தூக்குவியோ.. அது உன் வழி.. பெத்த கடனுக்கு சோறும் போடறேன். மத்தப்படி காசு வேணும்னா நீங்களே சம்பாதிச்சுக்கோங்க. இந்த வீட்டுலே விருப்பம் இருந்தா இருக்கலாம்”-னு முடிச்சார். “அப்படி இங்கே தான் இருக்கணும்-னு எனக்கு தலையெழுத்து இல்லே. நான் எங்க வீட்டுக்கு போறேன்”-னு குண்டைத் தூக்கிப் போட்டா நந்தினி. “என்ன ப்ளான் பண்ணி பண்றீங்களா?”-னு அசோக் அலர்றதைக் கேட்க யாருமேயில்லை. அவனால கேட்பாரில்லாம ஒரு வாரம் கூட அலைய முடியலே. அவங்கப்பா அவனுக்கு ஒண்ணும் பண்ணலே-னு சொன்னான். அப்படி இருக்கறதுன்னா என்னன்னு காட்டினார். அவர் நிழலை விட்டு வெளியே வந்ததுக்கப்புறம் தான் கஷ்டம்னா என்ன-னு புரிஞ்சுது. நந்தினி அவனை விட்டு விலகினது அவன் ஈகோவை மொத்தமா சிதறடிச்சுது. அவனுக்கும் அவ மேலே அபிமானம் இருக்கு-னு அப்போதான் உணர்ந்தான். அதனாலதான் திட்டம் போட்டு அவங்களை பிரிச்சோம்-னு தாமதமாத் தான் உணர்ந்தான். தன் மன உணர்வுகளை சொல்லக் கூட ஆளில்லை அவனுக்கு. ஒரே மாசத்துலே தாடியும் மீசையுமா பைத்தியக்காரன் போல ஆனான். அம்மா அப்பாவோட பாராமுகம் ரொம்ப வலிச்சுது. அவனுக்கு, அவன் பண்ண தப்பு உணர்ந்தானோ இல்லையோ, தன்னோட மோசமான நிலை மாறணும்னா தான் மாறணும்-னு புரிஞ்சுது.
ஏதோ ஒரு ஹாஸ்பிடல்லே ஜூனியரா சேர்ந்தான். நந்தினி கிட்ட மூணு மாசம் போராடி அவன் கூடக் கூட்டிட்டு வந்தான். அதோட பலன் அவ கட்டை விரலுக்குக் கீழே அவன் போனான். அவளுக்கு அவன் பேர்லே ஒரு ஒட்டுதலும் இருக்கலே. ஆனா வேறே வழியும் இல்லே-னு அவன் கூட வாழ்ந்தா. நாட்கள் ஓட ஓட இதோ இப்போவும் அசோக்கோட குடும்ப வாழ்க்கை அப்படியே தான் இருக்கு. ஒரே மாற்றம் என்னன்னா டாக்டர்.ப்ரேம்நாத் முகம் குடுத்துப் பேசறார். ஆனா அவர் மனைவிக்கு ஒரு பெண்ணா, சக மனுஷியா மகனும் மருமகளும் செஞ்சது ஏத்துக்கவே முடியலே. அதனால அவங்கப் பேசறதே இல்லை. இவ்வளவுக்கு அப்புறமும் அசோக், ப்ரதீப் கிட்டப் பேசவோ, மன்னிப்பு கேட்கவோ முயற்சி பண்ணவே இல்லை. எந்த நாள்லேயும் அவனுக்கு மனசுலே ப்ரதீப் மேலே உண்மையான நட்பு இருக்கலே. அதனால அவனுக்கு இப்போவும் அவன் ஈகோ தான் பெரிசு.
ஆனா விக்கிக்கு அப்படி இல்லே. முதல்லே சந்திச்ச சமயத்துல ரெண்டு பேருக்கு நடுவிலேயும் உண்மையான நட்பு இருந்துச்சு. நாளாக நாளாகத் தான் விக்கிக்கு நட்போட இடத்துலே பொறாமை ஆக்கிரமிச்சுது. அதுக் குடுத்த வன்மத்துல பின்விளைவிகளை யோசிக்காம நிறையாப் பண்ணிட்டான். அந்த நாள் வீட்டுக்கு வந்தப்புறம், விக்கியோட அப்பா ரூம்லே வைச்சு அடி நிமிர்த்திட்டார் விக்கிக்கும் வசுந்தராவுக்கும். அடி வெளுத்து முடிஞ்சதும் “நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும். என் கூட ஆபீஸ் வந்து பிசினஸ் பார். இனி உன் அக்கவுண்ட் எல்லாம் ஜாயிண்ட் அக்கவுண்ட் தான். என்ன கேட்காம ஒரு பைசா உனக்கு கிடையாது”-னு எச்சரிச்சுட்டுப் போனார். அன்னிக்குலேயிருந்து விக்கிக்கு அவங்க அப்பா கிட்ட கொத்தடிமை வேலைதான். அவன் கிட்ட வேலையை சக்கையாப் பிழிவார். அவனுக்கான நேரமே இருக்காது. அதே சமயம் காசு கையிலே பார்க்கறதுக்குள்ளே உயிரேப் போச்சு அவனுக்கு. ரிதேஷ் கூட இருக்கற வரைக்கும் இவன் உருப்படமாட்டான்-னு முடிவு பண்ணவர் அவனை வேலையை விட்டே அனுப்பிவிட்டார். விக்கி சொல்றதை கேட்கலேன்னா தனக்கு எந்த நிலைமை வந்துடும்-னு பயந்தானோ அதே நிலைமை அவன் சொன்னதைக் கேட்டும் வந்துடுச்சு. அவன் நிலைமை விக்ரமுக்கு பாவமா இருக்கவும் வேதமூர்த்திக் கிட்ட பேசி நித்தியம்லே வேலைக்கு சேர வைச்சான். ரிதேஷ் அவன் தப்பை உணர்ந்தாலும் அதனால அவனுக்கு பயனில்லாம போச்சு.
விக்கிக்கு ஒரே மாசத்துலே பைத்தியம் பிடிக்காதக் குறையா ஆச்சு. அவன் கிட்ட பேசவோ பகிர்ந்துக்கவோ யாருமே இல்லாம போனாங்க. ஒரு நாள் அழுத்தம் தாங்காம கை தன்னைப் போல நண்பர்களுக்கு ‘கான்ஃபரன்ஸ் கால்’ போட்டுச்சு. விதுரன் போனே எடுக்கலே. அவன் மதுரியா ப்ளாக் பண்ணதை எடுத்துவிடக் கூட இல்லை. ரிதேஷும் விக்ரமும் பட்டும் படாம பேசி கடுக்-னு வைச்சிட்டாங்க. விக்கிக்கு தான் என்ன இழந்தோம்-னு புரிய ஆரம்பிச்சுது.
இதுக்கிடையிலே தொழில்ரீதியா பார்ட்டியிலே க்ளப்லே எல்லாம் விதுரனை சந்திக்கும் போது அவன் கிட்ட தெரிஞ்ச புறக்கணிப்பு, அந்நியத்தன்மை விக்கிக்கு ரொம்ப வலிச்சுது. அது வரைக்கும் கோபம் குறைஞ்சா தானே வருவான்-னு நினைச்ச திமிர் இடிஞ்சுது. இனி எப்போவுமே தன்னை தேடி வரமாட்டான்-னு புரிஞ்சுது. விதுரன் கோபமா பேசித் திட்டினா கூட விக்கிக்கு ஏதாவது வழியிருக்கும். ஆனா விதுரனும் 100% அலுவல் ரீதியா பேசி, நமக்குள்ளே அதைத் தவிர வேறே ஏதும் இல்லே-னு சொல்லாம சொன்னான். அது ரொம்ப வலியை குடுத்துச்சு. ஒரு பாவம் செய்யாத, தன்னை எந்த விதத்துலேயும் பாதிக்காத மதுரியாவுக்கு விதுரன் கிட்டேயிருந்து எந்தப் புறக்கணிப்பையும் வலியையும் வர வைச்சானோ அதுக்குப் பல மடங்கு அதிகமா விக்கி இப்போ அனுபவிச்சான்.
விக்கி எப்படியாவது விதுரன் கிட்ட பேசணும்-னு முயற்சி பண்ணும் போது தான் ருத்ரமூர்த்தியா வீட்டுக்கு வந்தார் விக்கியோட அப்பா. விஷயம் என்னன்னா சுவாதி அன்னிக்கு அவங்க ஆபீசுக்கு வந்து விக்கியை மீட் பண்ண டிரை பண்ணியிருக்கா. வசுந்தராவுக்கு பையன் எங்கே அவளை கட்டிப்பானோ-னு பயம் வரவும், “இங்கே பாருங்க.. சீக்கிரமே என் தம்பிக் கிட்டேப் பேசி, அகல்யாவை இவனுக்கு கட்டி வைக்கணும்… இந்த பொண்ணை காசை குடுத்து வெட்டி விடுங்க. கண்டக் கழுதையை எல்லாம் நான் இந்த வீட்டு மருமகளா ஏத்துக்க முடியாது”-னு தாண்டவம் ஆடிட்டாங்க.
விக்கி அப்பாவுக்கும் அதுதான் சரின்னு தோணவே பாதி மிரட்டல், பாதி பணம்-னு ஒரு வேலையும் வாங்கிக் குடுத்து இனி திரும்ப வரவே கூடாது-னு சொல்லி சுவாதியை ஊரை விட்டு அனுப்பினார். அவர் மேலே உள்ள பயத்துலே கிடைச்ச வரை லாபம்-னு ஊரை விட்டுப் போனா அந்த மின்மினி பூச்சி. அதுக்கப்புறம் கல்யாண பேச்சு வேகமா முடிஞ்சுது. அது விக்கியே எதிர்பார்க்காதது. ஏன்னா அகல்யா மதுரியாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட்-னு தெரியுமே. அவனே அகல்யா கிட்ட பேசினப்போ திருந்தியிருக்கற அவனை புறக்கணிக்கறது தப்புன்னும் தான் அவனை நம்பறதாவும் சொன்னா. விக்கி திகைச்சுத் தான் போனான். அவனுக்கு அகல்யாவை ரொம்பப் பிடிச்சுது. முதல் தடவையா காதலிச்சான். காதலை உணர்ந்தான். அதுவே அவனை இன்னும் கொஞ்சம் மாற வைச்சுது.
மதுரியா, ரீனா கேட்டதுக்கும் இதே விளக்கம் சொன்னா அகல்யா. பேசிப் பார்த்தவங்க கடைசியிலே அவ சந்தோஷமாயிருந்தா சரி-னு விட்டாங்க. அவங்க கல்யாண அழைப்புக் குடுக்க முதல் தடவையா அந்த அஞ்சு மாசத்திலே விதுரனை பார்க்க வீட்டுக்கே வந்தான். ஆனா அன்னிக்கு எல்லாம் ரொம்ப முறையாப் பேசினான் விதுரன். விக்கியும் அவன் கல்யாணத்துக்கு வருவான்-னு ஆசையா எதிர்பார்க்கவும், வந்தது மதுரியா மட்டும் தான். அதுவும் அகல்யா ஃப்ரெண்டா வந்தா. அவ கிளம்பும் போது, “வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ், விதுரை கேட்டதா சொல்லுங்க”-னு தணிவா சொல்லவும், மதுரியா மண்டையை மட்டும் உருட்டிட்டு கிளம்பினா.
விக்கிக்கும் அகல்யா கிட்ட பேசவும், மதுரியாவும் ரீனாவும் கொஞ்சம் கரடு முரடுன்னாலும் ரொம்ப நல்லவங்க-னு புரிஞ்சுது. அகல்யா மூலமா மகன் கிட்ட தெரிஞ்ச மாற்றத்துலே அவனுக்கான விதிமுறைகளை தளர்த்த ஆரம்பிச்சார் விக்கியோட அப்பா. விக்கி – அகல்யாவோட வாழ்க்கை நிறைவா போச்சு. அவனுக்கு ஒரே குறை, நண்பர்கள் விலகிட்டாங்களே-னு தான். அவன் கல்யாணத்துக்கு மூணு பேரும் வரலே. ஆனா விக்கி நட்பை திருப்பி கொண்டு வர்ற முயற்சியை ஆரம்பிச்சான். அடுத்த வருஷமே அகல்யா வளைகாப்புக்கு அழைப்புக் குடுத்தான். குழந்தையோட பிறந்த நாளுக்குக் கூப்பிட்டான். எதுலேயும் வெற்றியடையவே இல்ல. மதுரியா குழந்தை இல்லே-னு கஷ்டப்படவும் இன்னும் இறுகிப் போனான் விதுரன்.
***************************************************************************************
“வாங்க மிஸ்டர் விக்னேஷ்.. உள்ளே வாங்க.. மிஸ்டர் ரிதேஷ் வாங்க வாங்க”-னு கூப்பிட்டான் விதுரன். “அப்பா, விக்கி அசோஸியேட்ஸ் டைரக்டர் விக்னேஷ் வந்திருக்கார்”-னு குரல் குடுத்தான். “ஹவ் ஆர் யூ விதுர்?”-னு கேட்டான் விக்கி. “ஓ… வெரி வெல்… தேங்க்ஸ் ஃபர் ஆஸ்கிங். நீங்க எதுவானாலும் அப்பாகிட்ட பேசுங்க.. கொஞ்சம் அவசர வேலை இருக்கு. மதும்மா.. போகலாம்டா… லேட் ஆச்சு”-னு நிக்காம, திரும்பியும் பார்க்காம மதுரியாவை கூட்டிட்டுப் போயிட்டான். விக்கி முகத்துலே ஒரு வருத்தமான சிரிப்பு. விதுரன் ரிதேஷ்-ன்னு ஒரு ஆள் இருந்ததாக் கூடக் காட்டிக்கலே. இப்போதைக்கு அவனால மட்டும்தான் விக்கியை ஓரளவாவது ஏத்துக்க முடிஞ்சுது. விக்ரமும், விதுரனும் அவங்க பிடிச்சப் பிடியிலேயே நின்னாங்க. “அங்கிள், என் ரெண்டாவது பையன் ஃபர்ஸ்ட் பர்த்டே இன்விடேஷன் குடுக்க வந்தேன்… கண்டிப்பா வரணும் எல்லாரும்”-னு வாய் நிறைய கூப்பிட்டான்.
எல்லாரும் ஒரு புன்னகையோடத் தலையாட்டினாலும் அது ஒரு தர்மசங்கடமான நிலைமை. பொறுக்க முடியாம ரிஷிநந்தன் தான், “விக்னேஷ், சொல்றேனேன்-னு தப்பா நினைக்காதீங்க. விதுரன் மனசு மாறுமானே தெரியாதப்போ, நீங்களாவே வந்து உங்களையும் கஷ்டப் படுத்திக்கிட்டு, அவனையும் கஷ்டப் படுத்தி… தேவைதானா இது?”-னு கேட்டான். “ரிஷியண்ணா, என் நட்பை நான் லேட்டாத் தான் உணர்ந்தேன்.. ரொம்ப தப்புப் பண்ணிட்டேன்.. அதுக்கு மன்னிப்பாவது கேட்கணும். அந்த அளவுக்காவது விதுர் இறங்கி வரணும். அது வரைக்கும் டிரை பண்றதை நிறுத்தமாட்டேன். நான் வரேன்”னு கிளம்பிப் போனான்.
அவனை பார்த்த விதுரனோட குடும்பத்துக்குக்குப் பரிதாபமா இருந்தாலும் இது இவனுக்கு தேவை தான்னும் தோணுச்சு. ஆனா யாருக்கும் விக்கியைப் பத்தி விதுரன் கிட்ட பேசற தைரியம் இருக்கலே. அதனால அதை அப்படியே விட்டுட்டாங்க. அதே நேரம் பலத்த யோசனையோடவே காரை ஒட்டினான் விதுரன். அதை கவனிச்ச மதுரியா அவன் தொடையிலே கை வச்சா. “என்னடா?”-னு விதுரன் கேட்கவும், “ஆர் யூ ஓகே?”-னு கனிவா கேட்டா மதுரியா. அவன் தொடை மேலே இருந்த கையை தூக்கி முத்தம் குடுத்து “100% நல்லா இருக்கேன்”-னு சிரிச்சான். “அப்போ சொல்றது தானே எங்கே போறோம்?”-னு மதுரியா கேட்கவும், “டென் மினிட்ஸ்… தானா தெரியும்”-னு இன்னும் அதிகமா சிரிக்கவும் முகத்தைத் திருப்பிட்டு உட்கார்ந்தா.
அவ இறங்க வேண்டிய இடம் வரவும் அவளுக்கு எதுவும் புரியலே. “இன்னிக்கு லீவு. எதுக்கு ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு வந்தீங்க?”-னு கேட்கவும், “வள வள-னு பேசாம இறங்கு”-னு விறு விறு-னு உள்ளே போனான். உள்ளே நுழையவும் அங்கே ரீனாவும் ப்ரதீப்பும் இருந்தாங்க. “என்னடா? ஆடி அசைஞ்சு வர்றீங்க? இன்னிக்கு அப்பாயிண்ட்மெண்ட் இல்லாம பார்க்கறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா?”-னு ப்ரதீப் அலுத்துக்கவும், “ப்ச்ச்ச்.. எதிர்ப்பாராத விருந்தாளிகள். அப்புறம் மேடம் வேறே கேள்வி மேலே கேள்வி கேட்கிறாங்க”-னு அவனும் அலுத்துக்கவும், “சரி விடுங்க விதுரன்… முதல்லே ஸ்கேனுக்கு போங்க. அப்புறம் ப்ளட் குடுத்துட்டு மேலே நம்ம ரெஸ்ட் ரூமுக்கு வாங்க.. தீபு நாம போகலாம்”-னு போனா ரீனா. “என்னதாண்டி நடக்குது இங்கே?”-னு மதுரியா எகிறவும், “நீ வா… பேச நேரம் இல்லே.. முடிச்சுட்டு சொல்றேன்”-னு தர தர-னு இழுத்துட்டுப் போய் ஸ்கேன் ரூமுக்குள்ளே நுழைஞ்சான். அவளை படுக்க வைச்சு பக்கத்திலே நின்னான். “திரும்ப டிரீட்மெண்டா? எனக்கு வேண்டாம்.. என்னால மறுபடியும் அந்த வலியை அனுபவிக்க முடியாது. என்னை கேட்டு இருக்கலாம்லே? நான் அப்போவே வேண்டாம்-னு சொல்லி இருப்பேன். இதுக்குத் தான் பரபர-னு இழுத்துட்டு வந்தீங்களா ஒண்ணும் சொல்லாம? எனக்கு வேண்டாம். நான் டாக்டர் கிட்ட இப்போவே பேசிக்கறேன். கடவுள் எப்போக் குடுக்கணுமோ அப்போக் குடுப்பார்”னு கோபத்துலே திட்ட ஆரம்பிச்சா.
விதுரன் அவளை கண்டுக்காம இருக்கறதை பார்த்தாள். ஒரு கட்டத்துலே அவனுக்கே ஆச்சர்யமாகவும் திகைப்பாகவும் இருக்கவும், அவன் பேசிட்டிருந்தவ முகத்தை மானிட்டர் பக்கம் திருப்பவும் அவ பேச்சும் பாதியிலேயே நின்னுச்சு. “இவ்வளோ கோபம் நல்லதில்லே டாக்டர்.மதுரியா… இங்கே பாருங்க.. இது ஃபீட்டஸ்… இது ஹார்ட்பீட்”-னு அந்த ரேடியாலஜிஸ்ட் சொல்லவும், மதுரியா கனவா நனவா-னு புரியாம மாறிப் போனா. விதுரனுக்கும் சந்தோஷத்துலே கண்ணு கலங்கிடுச்சு. “மதும்மா..”-னு இடம் பொருள் மறந்து அவ நெத்தியிலே முத்தம் குடுத்தான். ஆனா எதையும் உணர்ற நிலையிலே மதுரியா இருக்கலே. பே-னு கனவுலகத்துலே இருந்தா. அதுக்கப்புறம் டெஸ்ட் முடிஞ்சு போனதோ, அடுத்து லேப்-ல அவளுக்கு கையிலே குத்தி ரத்தம் எடுத்ததோ, அந்த வலியோ எதையுமே மதுரியா உணர்ற நிலையிலே இல்லை.
எப்போவும் நமக்குப் பல நாள் வேண்டுதல் திடீர்-னு ஒரு நாள் நடக்கும் போது மனசு அதை லேசுலே நம்பாது. நம்ம ஆழ்ந்த உறக்கத்துலே கனவு காண்றோமா-னு தான் பயப்படும். அதே மாதிரி தான் இருந்தா மதுரியா. விதுரன் முகத்தையும், சுத்தியும் மாறி மாறி பார்த்தா. “ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் கூட வந்துடுச்சு. டாக்டர் கௌரியை இன்னும் பத்து நிமிஷத்துலே பார்க்கலாம்-னு சொன்னாங்க”-னு ப்ரதீப் சொல்லவும், “ம்ம்ம்… அதுக்குள்ளே மேடத்துக்கு நடக்கறது கனவு இல்லே-னு சொல்லணும்”-னு விதுரன் சிரிச்சுட்டேச் சொன்னான். “அது தான் திருவிழாவுலே தொலைஞ்சு போனவ மாதிரி இருக்காளா?”-னு ரீனாவும் சிரிச்சுட்டே அவங்க அறையில ரெண்டுப் பேரையும் தனியா விட்டா.
“மதும்மா.. மது..”ன்னு உலுக்கவும் அவ கிட்ட அசைவே இல்லை. ஒரு சிரிப்போட, நிறைய காதலோட அவ உதடுகளை தன் உதடுகளால மூடவும், டக்-னு விழிப்பு வந்துச்சு மதுரியாவுக்கு. நடக்கறதெல்லாம் நிஜம்-னு புரியவும், பொல பொல-னு கண்ணுலே இருந்து கண்ணீர் அருவியாக் கொட்டுச்சு. தன்னோடச் சேர்த்து அணைச்சு அவ தலையை தடவிக் குடுத்தான் விதுரன். வார்த்தைகள் சொல்ல முடியாததை அது சொல்லிடுச்சு. “உண்மை தான்டீ தங்கம்! நம்பு. நடக்கிறதெல்லாம் சத்தியம். ஏமாற்றம் வராது”-னு அவ காதுக்குள்ளே சொல்லவும் நிமிராம சரி-னு தலையை மட்டும் ஆட்டினா. “ஹேய் லூசு.. எவ்வளோ நேரம் அழுவே? டாக்டர் கௌரி கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கிடையாது இன்னிக்கு. நானும் விதுரனும் அவங்களை கெஞ்சி கூத்தாடி வாங்கிருக்கோம். அப்புறம் அழுவியாம். இப்போ வா போகலாம்.. அவங்க போயிட போறாங்க”-னு அந்நேரம் உள்ள வந்து இந்தக் காட்சியை பார்த்துக் கலங்கின கண்ணை துடைச்சுட்டேக் கூப்பிட்டான் ப்ரதீப்.
அவன் குரல் கேட்கவும் அவசரமா விலகி முகத்தை அழுந்தத் துடைச்சா. ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு, தன்னை நிலைப் படுத்திக்கிட்டா. “செல்லம்ஸ்.. எப்போடா வந்தீங்க? சாரிடா.. அம்மாக்குத் தெரியலே.. உங்கப்பாவுக்குத் தெரிஞ்சும் அவரும் சொல்லலே.. பேட் அப்பா.. அவரை அப்புறம் கவனிச்சுக்கலாம். சரியா? இப்போப் போய் டாக்டர்.கௌரி ஆண்டியை பார்க்கலாம். வாங்க”-னு வயித்துலே கை வச்சு பேசிட்டே மத்த ரெண்டுப் பேரையும் முறைச்சுட்டே நடந்தா. “பிறக்காத குழந்தைக் கிட்ட எப்படி அப்பனை கோர்த்து விடறா பார்த்தியா?”-னு ப்ரதீப் சொல்லவும், விதுரன், “தப்பிச்சோம்-னு நினைக்காதே! மாமனையும் கோர்த்து விடுவா.. இப்போ வா போகலாம்”-னு சிரிச்சுட்டேச் சொன்னான்.
டாக்டர் ரூம்லே, “கங்கிராட்ஸ் மிஸஸ் அண்ட் மிஸ்டர் விதுரன். நான் தான் சொன்னேனே இயற்கையிலேயே ஏற்படும்-னு. எனிவெ ஆல் ஈஸ் வெல்”-னு சொன்னாங்க. டாக்டர், “இது அந்த மெடிசின்ஸ் டிரீட்மெண்ட்னால இல்லையா?”-னு மதுரியா கேட்கவும், “நிச்சயமா இல்லை ரியா. நம்ம டிரீட்மெண்டும் மெடிசின்ஸும் நிறுத்தி ஒன் இயர் ஆகுது. மெடிசின்ஸ்னால ஏதாவதுன்னா இது வேணும்னா இருக்கலாம்.. ஆனா அதுக் கூடக் குடும்பத்துல இருக்கணும்”-னு ரிப்போர்ட்லே அண்டர்லைன் பண்ணி இருந்ததை காமிச்சாங்க. மதுரியா வெட்கமா அழகா சிரிச்சா. “ஓகே.. ஸ்கேன் 50 நாள் காட்டுது.. எல்லாம் நார்மல். அடுத்த மாசம் செக்கப்புக்கு வாங்க. பீ ஹேப்பி அண்ட் கால்ம்… நோ ஸ்டிரெஸ்”-னு சொன்னாங்க டாக்டர் கௌரி. “அவளுக்கு ரெஸ்ட், தனியா கேர் ஏதாவது?”-னு விதுரன் கேட்கவும், டாக்டர் சிரிச்சுட்டு, “அவங்க பேஷண்ட் இல்லே மிஸ்டர் விதுரன். ஷீ ஈஸ் ஓகே…ஆல் தி பெஸ்ட்”-னு அனுப்பி வைக்கவும், ரெண்டுப் பேருக்கும் தரையிலே கால் பாவாத சந்தோஷம்.
அதே சந்தோஷத்தோட வீட்டுக்கும் வந்தாங்க. “பாட்டீஈஈ..”-னு ஓடி வந்து கீழே உட்கார்ந்து அவங்க மடியிலே படுத்தா. “ரொம்ப சந்தோஷம் ரியாம்மா”-னு அவ தலையை தடவினாங்க நீலவேணி. குடும்பத்துலே எல்லாருக்கும் சந்தோஷம். மதுரியா வீட்டுக்கும் போன் பண்ணி சொல்லவும் அவங்களும் வந்தாங்க. “பாட்டி இல்லையே..”-னு மதுரியா வருத்தப்படவும், “அவளே பிறப்பாளோ என்னமோ?”-னு சொன்னார் நித்தியானந்தம். “அவங்க மட்டும் இல்லே தாத்தா.. கூடவே அவங்க அண்ணனையும் கூட்டிட்டு வர்றாங்க போல”-னு விதுரன் சிரிச்சான். எல்லாருக்கும் ஆச்சர்யம். “நிஜமாவா விதுரன்?”-னு கேட்டா ஆனந்தியா. “ஆமா அக்கா! ட்வின்ஸ்-னு சொன்னாங்க”-னு முடிக்கவும் ஒரே சந்தோஷம், கொண்டாட்டம் தான். சங்கரி, சுபத்ரா சேர்ந்து சாப்பாடு தடபுடலா பண்ணிட்டாங்க. அப்புறம் அவங்க கிளம்பினதும் சங்கரி, கிருத்திகாவையும் மதுரியாவையும் கூட்டிட்டு கபாலீஸ்வரர் கோயில் போயிட்டு வந்தாங்க. ஏனோ இன்னிக்குக் குளக்கரையிலே உட்கார்ந்தப்போ நிச்சயதார்த்தம் முறிஞ்ச அன்னிக்கு வந்து அழுதது ஞாபகம் வந்துச்சு அவளுக்கு. “எவ்வளோ தூரம் கூட்டிட்டு வந்துட்டியேம்மா ஈஸ்வரி?”-னு தியானிச்சு அதே நிறைவோட வீட்டுக்கும் வந்தா.
அன்னிக்கு ராத்திரி அவங்களுக்கான நேரத்திலேயும் கொண்டாடித் தள்ளினாங்க ரெண்டுப் பேரும். எவ்வளோ சந்தோஷம்னாலும் அவளை பூப் போல கையாண்டான் விதுரன். “என்ன மேடம்? டபுள் சந்தோஷம் தானே? ஒண்ணே தாங்கலே.. இதுலே மூணு பேரா?”-னு கிண்டல் அடிக்கவும். தலையணையாலேயே அவனை சாத்தினா மதுரியா. “ஏய்… அடிக்காதேடி.. வலிக்குது”-னு இன்னும் சிரிக்கவும், “நல்லா வலிக்கட்டும். என்கிட்ட மறைச்சுட்டீங்க இல்லே? பாவம். என் செல்லக் குட்டிங்களை முரட்டுத்தனமா நடத்திட்டேன். ஒரு வாரத்துல எவ்வளோ சர்ஜரி தெரியுமா?”-னு கோபமும் வருத்தமுமா கேட்டா. “சிங்க குட்டிங்கடி ரெண்டும்.. நம்மளை மாதிரியே..”-னு வயித்துலே கை வைக்கவும், பட்னு தட்டி விட்டா. “முழு விவரமும் சொல்லாம எங்களை தொடாதீங்க”-னு சொன்னா. “அடிப்பாவி, என்னையும் கவனிடி”-னு சிரிச்சான் விதுரன். “ம்ம்… பார்க்கலாம்”-னு பிகு பண்ணிக்கிட்டா. அவளை தன் கைக்குள்ளே இழுத்திட்டு, “உன் மாற்றத்தை நான் ஒரு மாசமா கவனிக்கிறேன். உனக்கு தெரியவே இல்லை. மண்டு.. இதுலே என் மேலே கோபம் வேறே”-னு அவன் உலுக்கினான்.
மதுரியா, “என்ன மாற்றம் விது?”-னு புரியாம கேட்கவும், “நீ திடீர்-னு மார்னிங் சாப்பிடறதை விட்டுட்டே. பசிக்கலே, பிடிக்கலே-னு சொன்னே. சரி நிறைய வேலை-னு விட்டா.. ராத்திரி ரெண்டு மூணு மணிக்கு பிஸ்கட், சிப்ஸ்-னு நறுக் முறுக்-னு உள்ளே தள்ளறே. என்னடா செல்லக்குட்டி வேறே மாதிரி பண்ணுதே-னு யோசிச்சப்போ தான் உன் டேட்ஸை கவனிச்சா மேடம் குளிக்கவே இல்லை. சரி முன்னாடி சாப்பிட்ட மெடிசின்ஸ்-னு நினைச்சா சிம்ப்டம்ஸ் கூடிட்டேப் போச்சு. இது ரெண்டு கூட அலுப்பும், தூக்கமும் வேறே சேர்ந்துச்சு. அப்போ தான் ப்ரதீப் கிட்டப் பேசி உனக்கு தெரியாம ப்ளட் டெஸ்ட் எடுக்க வைச்சேன். ஒரு வேளை என் கெஸ் தப்புன்னா அது என்னோட போகட்டும்”-னு சொல்லவும், மதுரியா அவனை இறுக்கமா அணைச்சுக்கிட்டா. “ஓ.. அதுதான் மூணு வாரம் முன்னாடி ரத்தம் குடுக்க வேணும்-னு சொல்லி ப்ளட் எடுத்தாங்களா?”-னு கேட்டா. “ஆமா.. ப்ரெக்னன்ஸி கன்ஃபர்ம் ஆச்சு.. ஆனா உன் ஹார்மோன் லெவல் நார்மலை விட கம்மியா இருந்துச்சு. அதனால 15 நாள் கழிச்சு ஸ்கேன் பண்ணலாம். கொஞ்சம் வேயிட் பண்ணலாம்-னு டாக்டர் கௌரி சொல்லவும் அது வரைக்கும் சொல்ல வேண்டாம்-னு சர்ப்ரைஸ் ப்ளான் பண்ணோம்.. எப்படி??”-னு இல்லாத காலரை தூக்கவும் சிரிச்சுட்டே “சூப்பர்..”-னு சொன்னா மதுரியா.
ஒரு பெருமூச்சு விட்டு, “நம்ம பொண்ணையும் உன்னை மாதிரியே தைரியமும் தெளிவும் இருக்கறவளா வளர்க்கணும்”-னு அவ உச்சியிலே முத்தம் குடுத்தான். “ம்ம்ம்.. பையனா இருந்தா உங்களை மாதிரி வளர்க்கக் கூடாது.. இன்னோரு விதுரன் யாரு சமாளிக்கிறது”-னு குறும்பா சொல்லி சிரிச்சா மதுரியா. “கண்டிப்பா… என்னை மாதிரி லூசா அவங்க இருக்கக் கூடாது”-னு வருத்தமா சொன்னான் விதுரன். “விது… விக்கி, ரிதேஷ் மேலே இருக்கற வெறுப்பைக் கடந்துப் போங்கப் ப்ளீஸ்.. அஞ்சு வருஷத்துலே எல்லாம் எவ்வளவோ மாறிடுச்சு. நமக்கு-னு குழந்தைங்க வரப் போகுது. இன்னும் ஏன் இந்த கோபத்தை தூக்கிச் சுமக்கணும்? இறக்கி வைங்க”-னு சொன்னா மதுரியா. “என்னால அவங்களை திரும்ப ஏத்துக்கவோ பழையபடி இருக்கவோ முடியாது”-னு அழுத்தமா விதுரன் சொல்லவும், “தேவையில்லே விது… விக்கியோட மாற்றத்துக்கு ஒரு அங்கீகாரமா சகஜமா பேசுங்கப் போதும். முகத்தையும் திருப்ப வேண்டாம். நட்பும் பாராட்ட வேண்டாம். உங்க நல்லதுக்கும் நிம்மதிக்கும் தான் சொல்றேன்”-னு சொல்லவும் யோசிக்க ஆரம்பிச்சான் விதுரன்.
கொஞ்ச நேரம் கழிச்சு, “திடீர்-னு எப்படி.. நான் போயி..”-னு விதுரன் இழுக்கவும், “அவரோட ரெண்டாவதுப் பையனோட ஃபர்ஸ்ட் பர்த்டே இன்விடேஷன் குடுக்கத் தான் இன்னிக்குக் காலையிலே வந்தாராம்… நாம அதுக்கு போவோம்.. அதுலேயிருந்து தொடங்கட்டும். விக்ரம் அண்ணாவும் பேசட்டும்.. எல்லாம் ரெண்டுப் பிள்ளங்களை பெத்துட்டு ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி இருக்கீங்க”-னு ஆரம்பிச்சுக் கிண்டலா முடிச்சா மதுரியா. “உன்னை என்னடிப் பண்றது?… எந்த நேரத்துலே பேசினா காரியம் ஆகும்கிறதை நல்லா தெரிஞ்சக் கெட்டிக்காரி நீ. என் வீக்னெஸ் தெரிஞ்சு, என்னை பிடிச்சு ஆட்டி வைக்கிறே.. ஆனா உலகம் உன்னைத் தான் பாவம்-னு சொல்லுது”-னு சொல்லி உச்சியிலே முத்தம் குடுத்தான். மதுரியா உதட்டை சுழிச்சு, “அது தான் பாஸ் உண்மை.. உங்களை சமாளிக்கிறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா?”-ன்னு பதிலுக்குச் சிரிச்சுட்டேச் சொன்னா. ரெண்டுப் பேர் மனசுலேயும் நெருஞ்சியா உறுத்தின அவங்க அன்பு இப்போப் பூவா மலர்ந்துப் போச்சு. அது எப்போவும் வாசம் வீசட்டும்-னு சொல்லி நம்மளும் கிளம்பலாமா!
வாழ்க வளமுடன்!
வாழு!!
வாழவிடு!!!